All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சொன்னான் எல்லே எல்லாமும் 2,3ம் தடவையில்தான் சரி வரும். டிசைன் அப்படி😂
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மன்னிக்கவும் பிராமணர் அல்லாத தமிழர் என எழுதி இருக்க வேண்டும். ரெட்டி, பதானி தமிழ்நாட்டுக்கு விளையாடிவர்கள். பாலாஜி, வாஷிங்டன் பிராமணர் என நினைக்கிறேன். நட்டு தமிழ் ஆனால் டெஸ்ட் விளையாடினாரா? இனத்தூய்மைவாதம் பேசவில்லை, ஆனால் தமிழ் நாட்டு கிரிகெட் சபையில் பிராமணர் ஆதிக்கம் மிக அதிகம். அதை அரிதாக தெலுங்கர் உடைப்பார்கள். ஏனையோருக்கு சான்ஸ் இல்லை. 2ம் உலக யுத்தகாலத்தில் எனது உறவினர் குடும்பம் ஒண்டு பர்மாவில் இருந்து கால் நடையாக இந்தியா வந்து பின் இலங்கை வந்தார்கள். ரங்கூனில் குதிரை அது இது எண்டு வசதியாய் இருந்த ஆட்களை கொண்டு வந்து யாழில் விட்டு விட்டார்கள். அப்போ அவர்கள் பாடுவார்களாம்…. வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே… நாடி நிற்குதே அநேக தீமையே… சோப்பும் இல்லை சீப்பும் இல்லை யாழ்ப்பாணத்திலே😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
படிக்கல்ல, படிக்கல்ல என்று 100 எடுத்து விட்டார் அவர்....................🤣.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
நியாயமான கேள்வி. ஆனால், இந்தியாவுக்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையே போர்கள் இவ்விரு நாடுகளும் அணுவாயுதத்தினை வைத்திருக்கின்றன என்று தெரிந்தபின்னரும் ஆரம்பிக்கப்படவில்லையா? ரஸ்ஸியா இரண்டாவது மிகப்பெரிய அணுவாயுத வல்லரசு என்று தெரிந்த பின்னரும் பனிப்போரோ அல்லது நேரடியான போர்களை அந்நாடு முகங்கொடுக்கவில்லையா? இரு அணுவாயுத வல்லரசுகளான இந்தியாவும் சீனாவும் எல்லைகளில் இன்றுவரை மோதியே வருகின்றன. அணுவாயுதம் வைத்திருக்கும் நாடொன்றின்மீது தாக்குதல் நடத்துமுன்னர் ஒன்றிற்கு இருமுறை சிந்திப்பது அவசியம்தான். ஆனால் அதுவே போரினைத் தடுக்குமா என்பது கேள்விக்குறியே.
-
தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
சுமந்திரன் மைண்ட் வாய்ஸ்... சிற்றுவேஷன் சாங்க். என்னை மதுரையில கேட்டாக… மன்னார்குடியிலும் கேட்டாக… அந்த மாயவரத்தில கேட்டாக.... அனுரா மாத்தையாவும் கேட்டாக.....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கோசான் எல்லோ உங்கள விட மேல போட்டார். அதுதான்......😁
-
தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
சுத்துமாத்து சுமந்திரனுக்கு.... தேர்தலில் வென்று பாராளுமன்ற உறுப்பினராகக் கூட முடியவில்லை. இதற்குள் நீதி அமைச்சர் ஆகின்ற ஆசையும்... எட்டிப் பார்க்குது. 😂 பேசாமல்... ஜனாதிபதி கதிரையில் போய் உட்க்கார வேண்டியதுதான். அப்பதான்... இந்த நோய், குணமாகும். 🤣 கேட்கிறவன் கேனையன் என்றால்.... எருமை, ஏரோப்பிளேன் ஓட்டுமாம். 😂 🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கந்தப்புவ பிடிக்கேலாது என்று நினைத்தேன். அப்பிடியே மேல வந்திட்டியல்.
-
ஈரானுக்கு எதிராக ஓரணியில் உலக நாடுகள்!
இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலில் பிரித்தானியா இணையவில்லை Mar 2, 2026 - 09:43 PM - அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புத் தாக்குதல்களில் பிரித்தானியா இணையவில்லை என பிரித்தானிய பிரதமர் கீயர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். ஈரானின் அதி உயர் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டமையானது, அந்தப் பிராந்தியத்தில் உள்ள இராணுவ மற்றும் பொருளாதார இலக்குகள் மீது ஈரான் மிகவும் துணிகரமான முறையில் தாக்குதல்களை நடத்த வழிவகுத்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றில் இன்று (2) உரையாற்றிய ஸ்டார்மர் இது குறித்து மேலும் கூறியுள்ளதாவது, கமேனியின் மரணம் இவ்வாறான தாக்குதல்களை நடத்துவதிலிருந்து ஈரானை நிறுத்தாது என குறிப்பிட்டுள்ளார். உண்மையில், அவர்களின் அணுகுமுறை முன்னரை விட மிகவும் துணிகரமானதாகவும், பொதுமக்களுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகவும் மாறி வருகின்றது எனவும் பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலில் பிரித்தானியா இணையவில்லை
-
ஜனாதிபதி வெறும் கண்காட்சியை விடுத்து செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் - மனோகணேசன்
ஜனாதிபதி வெறும் கண்காட்சியை விடுத்து செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் - மனோகணேசன் 02 Mar, 2026 | 06:50 PM (நா.தனுஜா) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்ற ஒற்றைச் சில்லை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடுகிறது. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்கிறார். அங்கு நடைப்பயிற்சி செய்கிறார். மலையகத்துக்குச்சென்று பெருந்தோட்டத்தொழிலாளர்களின் கைகளைப்பிடித்துப் பார்க்கிறார். ஆனால் பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம், அரசியல்கைதிகள் விடுதலை, மலையக மக்களுக்கான காணி உரித்து என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. எனவே ஜனாதிபதி வெறும் 'கண்காட்சியை' விடுத்து, ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் என தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் லண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (1) கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே மனோகணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது : ஊடகத்துறையில் எனது நல்ல நண்பரான பாரதியும் நானும் இணைந்து எவ்வளவோ விடயங்களைச் செய்திருக்கிறோம். அவரது மிகப்பெரிய பலம் அவரது மௌனம் தான். நாமனைவரும் இணைந்து பேசிக்கொண்டிருக்கும்போது, பாரதி மாத்திரம் மௌனமாக இருப்பார். ஆனால் பேசி முடித்த பின்னர் தான், நாம் பேசிய சகல விடயங்கள் தொடர்பிலும் முகத்திலேயே பாவனைகளை வெளிப்படுத்தி அவர் தான் அதிகம் பேசியிருக்கிறார் என்று எண்ணத்தோன்றும். தமிழ்த்தேசியக்கட்சிகளின் ஒற்றுமை என்பது பாரதிக்கு எப்போதுமே இருந்த கனவாகும். அவர் எத்தகைய கனவு, நம்பிக்கை மற்றும் இலக்கில் விடாப்பிடியாக இருந்தார் என்று நினைத்துப்பார்க்கையில், இன்று வட, கிழக்கு தமிழ்த்தேசியக்கட்சிகள் மத்தியில் நிலவும் முரண்பாடுகள் கவலையளிக்கின்றன. மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று கட்சிகளை உள்ளடக்கிப் பதிவுசெய்து சுமார் 12 வருடங்களாக தமிழ் முற்போக்குக்கூட்டணியாக இயங்கிவரும் நாம் இந்த ஒற்றுமை விடயத்தில் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறோம். அந்த ஐக்கியம் வட, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படும் கட்சிகள் மத்தியிலும் ஏற்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. மறுபுறம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்ற ஒற்றைச் சில்லை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடுகிறது. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்கிறார். அங்கு நடைப்பயிற்சி செய்கிறார். மலையகத்துக்குச்சென்று பெருந்தோட்டத்தொழிலாளர்களின் கைகளைப்பிடித்துப் பார்க்கிறார். ஆனால் பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம், காணி விடுவிப்பு, அரசியல்கைதிகள் விடுதலை, மலையக மக்களுக்கான காணி உரித்து என்பன உள்ளடங்கலாக தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. எனவே இப்போது வெறுமனே காண்பிக்கப்படும் கண்காட்சியை விடுத்து, ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் காண்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார். ஜனாதிபதி வெறும் கண்காட்சியை விடுத்து செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் - மனோகணேசன்
-
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பிறந்த வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டோம் போல...................🤣. 'வீடு நோக்கி ஓடி வந்த என்னையே நாடி நிற்குதே அநேக நன்மையே..........................'
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஈரான் மசூதியில் பறக்கும் சிவப்புக் கொடி!; காரணம் என்ன? 02 Mar, 2026 | 06:17 PM ஈரானின் காம் நகரில் உள்ள ஜம்கரன் மசூதியின் உச்சிப் பகுதியில் சிவப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை திருப்பியுள்ளது. ஈரானின் முக்கியமான மத வழிபாட்டுத் தளமான இந்த மசூதியில் சிவப்பு நிறக் கொடி பறக்கவிடப்பட்டதற்கு ஒரு காரணமும் உண்டென கூறப்படுகிறது. மசூதியில் ஏற்றப்பட்ட சிவப்புக் கொடியானது கோபம், பழி தீர்க்கும் நோக்கத்தை குறிக்கிறது என்கின்றனர். அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் ஈரான் முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு, ஈரான் மீதான தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன. ஈரானின் உயர் தலைவரின் கொலைக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றும் தாக்குதலுக்கு உரிய தரப்பினர் பதில் சொல்லவேண்டும் என்பதை கோபத்துடன் ஈரான் வலியுறுத்துவதையும் பழிவாங்கத் துடிப்பதையும் வெளிப்படுத்தும் விதமாகவே இந்த சிவப்புக் கொடி மசூதியில் பறக்கவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (1) ஈரான் உயர் தலைவர் உயிரிழந்த செய்தியை அந்நாட்டு அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலி காமேனியின் இறப்பை அறிவித்து தமது வெற்றிக்களிப்பை வெளிப்படுத்தினர். இவ்வாறான போர்ச்சூழலில் அலி காமேனியின் ஆதரவாளர்களின் கோபத்தையும் பழிவாங்கும் உணர்வையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த சிவப்பு நிறக் கொடி மசூதியின் உச்சியில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஈரான் தாக்கப்பட்டதையடுத்து, அமெரிக்காவின் இராணுவ தளங்கள் காணப்படும் இடங்களிலும் அமெரிக்க ஆதரவு மத்திய கிழக்கு நாடுகளிலும் ஈரான் ட்ரோன், ஏவுகணை மூலம் பதில் தாக்குதல் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239990
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
குவைத்தில் மூன்று F-15 அமெரிக்க போர் விமானங்களை வீழ்த்தியது யார்? நேரலை பட மூலாதாரம்,Fatemeh BahramiAnadolu via Getty Images 2 மார்ச் 2026, 01:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் சௌதி அரேபியா உட்பட மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் இரானின் புதிய தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ தற்போது "கட்டுப்பாட்டுக்குள்" கொண்டுவரப்பட்டுள்ளது. இரானின் "பாகுபாடற்ற மற்றும் பொறுப்பற்ற ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை" வளைகுடா நாடுகளும் அமெரிக்காவும் ஒரு கூட்டு அறிக்கையின் மூலம் கண்டித்துள்ளன. சனிக்கிழமையன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் இரான் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போது இரான் மீது கூடுதல் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. போராட்டம் நடத்துவதற்காக மக்கள் வீதிக்கு வர வேண்டாம் என்று இரான் அதிகாரிகள் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக பிபிசி பாரசீக செய்தியாளர் தெரிவிக்கிறார். அதேசமயம், குவைத்தில் பல அமெரிக்கப் போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன. இது குறித்து அமெரிக்க ராணுவம் ஓர் அறிக்கையில், "அமெரிக்க விமானப்படை போர் விமானங்கள் குவைத் வான் பாதுகாப்பு அமைப்பால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டன" என்று கூறியது. சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய கடல் வழியான ஹோர்முஸ் நீரிணையை மூடிவிட்டதாக கூறியுள்ள இரான், அமெரிக்கா, பிரிட்டனுக்குச் சொந்தமான 3 எண்ணெய் கப்பல்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பட மூலாதாரம்,Majid SaeediGetty Images குவைத்தில் அமெரிக்க போர் விமானங்கள் விழுந்து நொறுங்கின "பல" அமெரிக்கப் போர் விமானங்கள் குவைத்தில் விழுந்து நொறுங்கியுள்ளதாகவும், இச்சம்பவத்திற்கான சூழல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் குவைத் ராணுவம் தெரிவித்திருந்தது. தற்போது அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இரானுக்கு எதிரான அமெரிக்காவின் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' நடவடிக்கைக்கு ஆதரவாகப் பறந்து கொண்டிருந்த மூன்று F-15 போர் விமானங்கள், "தவறுதலாக குவைத் வான் பாதுகாப்பு அமைப்பால் வீழ்த்தப்பட்டது'' விமானங்களில் இருந்த ஆறு வீரர்களும் பாதுகாப்பாக வெளியேறிய நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுந்து நொறுங்கிய போர் விமானம் எப்படிப்பட்டது? கிறிஸ் பார்ட்ரிட்ஜ், பிபிசி ஒரு F-15E ஸ்டிரைக் ஈகிள் அல்லது அதன் ஒரு வகை போர் விமானம் எனத் தோற்றமளிக்கும் ஒரு வீடியோ காட்சியில், அந்த விமானம் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பக் கோளாறுக்குப் பிறகு, கட்டுப்பாட்டை இழந்து சுழன்று கொண்டு கீழே விழுவது தெரிகிறது. இதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இப்பகுதியில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் (US Central Command) இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், இரான் நடத்திய தீவிரத் தாக்குதலின் போது, குவைத்தில் பல அமெரிக்கப் போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியதாகவும், அந்த விமானங்களில் இருந்த வீரர்கள் பாராசூட் மூலம் குதித்து தப்பியதாகவும் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. F-15E ஸ்டிரைக் ஈகிள் ரக விமானங்கள், வான் தாக்குதல் மற்றும் தரைவழித் தாக்குதல் ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்படும் பன்முகத்தன்மை கொண்ட போர் விமானங்களாகும். இந்த மோதலில் அவை தற்போது எந்த மாதிரியான பணிகளில் ஈடுபட்டுள்ளன என்பது சரியாகத் தெரியவில்லை. இருப்பினும், இரானிய ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வழிமறித்து அழிக்கும் தற்காப்பு நடவடிக்கைகளில் இவை ஈடுபடுத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். இப்பணிக்காக இவை விமானத்தில் உள்ள வெப்பத்தை உணர்ந்து இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள் (heat-seeking missiles), நீண்ட தூர ஏவுகணைகள் அல்லது இலக்கிற்கு மிக அருகில் இருந்தால் விமானத்திலுள்ள துப்பாக்கிகளைக் கூடப் பயன்படுத்தலாம். இவை தவிர லேசர் மூலம் வழிநடத்தப்படும் ராக்கெட்டுகள் போன்ற பிற ஆயுதங்களும் இவற்றில் உள்ளன. முதல் 24 மணி நேரத்தில் 1,000 இலக்குகள் மீது தாக்குதல் - அமெரிக்கா ஆபரேஷன் எபிக் ஃப்யூரியின் முதல் 24 மணி நேரத்தில் 1,000 க்கும் மேற்பட்ட இரானிய இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட குண்டுவீச்சு விமானம், டிரோன்கள், போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அது பட்டியலிட்டிருந்தது. கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தளங்கள் மற்றும் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கூட்டுத் தலைமையகம் உள்ளிட்ட தாக்குதலுக்குள்ளான இரானிய இலக்குகளையும் இது பட்டியலிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் (IDF) கருத்துகளை இது எதிரொலிக்கிறது, நடவடிக்கையின் முதல் நாள் "மிகவும் குறிப்பிடத்தக்க சாதனைகளை" செய்ததாக இஸ்ரேல் ராணுவம் முன்னதாக கூறியிருந்தது. பட மூலாதாரம்,ATTA KENARE AFP via Getty Images 'நோக்கம் நிறைவேறும் வரை தாக்குதல் தொடரும்' டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், "போர் நடவடிக்கைகள் முழு பலத்துடன் தொடரும். எங்கள் அனைத்து நோக்கங்களும் அடையப்படும் வரை தொடரும்." என்று கூறியுள்ளார். "துரதிர்ஷ்டவசமாக இன்னும் அதிகமான அமெரிக்க உயிரிழப்புகள் இருக்கும். அதை தவிர்க்க இயலாது. அவர்களின் மரணத்திற்கு அமெரிக்கா பழிவாங்கும். நாகரிகத்திற்கு எதிராகப் போரை நடத்திய பயங்கரவாதிகளுக்கு மிகவும் தண்டனைக்குரிய அடியை வழங்கும்" என்று அவர் தெரிவித்தார். "இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினர், போலீசார் ஆயுதங்களை கீழே போட்டால் உயிர் தப்பலாம் அல்லது நிச்சயம் மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். அது நிச்சய மரணம்" என்றார் அவர். "அணு ஆயுதங்களுடன் கூடிய இரத்தவெறி கொண்ட பயங்கரவாத ஆட்சியை" ஒழிக்க இரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் "சரியானவை" மற்றும் "அவசியமானவை" என்று அவர் குறிப்பிட்டார். "இந்த சகிக்க முடியாத அச்சுறுத்தல்கள் இனி தொடராது" என்று டிரம்ப் தெரிவித்தார். "சுதந்திரத்திற்காக ஏங்கும் அனைத்து இரானிய தேசபக்தர்களும் இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், தைரியமாக இருக்கவும் நான் அழைப்பு விடுக்கிறேன்," என்று டிரம்ப் கூறினார். "தைரியமாக இருங்கள், வீரத்துடன் இருங்கள், உங்கள் நாட்டைத் திரும்பப் பெறுங்கள். அமெரிக்கா உங்களுடன் உள்ளது." என்று அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,Donald Trump/Truth Social 'எங்கள் இராணுவத் திறனில் எதுவும் மாறவில்லை' ஏபிசி நியூஸிடம் பேசிய இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இரான் "சில தளபதிகளை இழந்திருந்தாலும்... எங்கள் இராணுவத் திறனில் எதுவும் மாறவில்லை" என்று கூறியுள்ளார். "கடந்த முறை இதுதான் நடந்தது," என்று அவர் கூறுகிறார், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க தாக்குதல்களை அவர் குறிப்பிடுகிறார். "எங்கள் உயர் தளபதிகளில் சிலரை அவர்கள் கொன்றனர், ஆனால் அவர்கள் மிக விரைவில் மாற்றப்பட்டனர். அடுத்த 12 மணி நேரத்திற்குள், எங்களால் பதிலடி கொடுக்கத் தொடங்க முடிந்தது," என்றார் அவர். "இந்த முறை, அது இன்னும் வேகமாக இருந்தது." அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மூலம் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது இன்னும் சாத்தியமா என்று கேட்கப்பட்டது. "நீங்கள் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவும்." என்று கூறிவிட்டு தொடர்ந்த அராக்சி, கடந்த வியாழக்கிழமை இரானிய மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் "ஜெனீவாவில் மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகளை" மேற்கொண்டனர், பின்னர் திங்களன்று வியன்னாவில் மீண்டும் ஒரு சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் "சமாதானத்தை எதிர்ப்பவர்கள் அதைக் கெடுக்க முடிவு செய்தனர்" என்றார். பட மூலாதாரம்,Getty Images மூன்று எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக இரான் தகவல் அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் "ஏவுகணைகளால் தாக்கப்பட்டு எரிந்து கொண்டிருக்கின்றன" என்று இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கூறியதாக இரான் அரசு ஊடகமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் பிரிட்டனும் இதனை உறுதிப்படுத்தவில்லை. UK கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தனது தினசரி அறிவிக்கையில், அந்தப் பகுதியில் "பல கடல்சார் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன" என்று கூறுகிறது. இரண்டு கப்பல்கள் "எறிகணைகளால்" தாக்கப்பட்டதாக அது கூறுகிறது, இதனால் தீ விபத்து ஏற்பட்டது. இந்தக் கப்பல்கள் எங்கிருந்து வந்தன அல்லது அவை எங்கு பதிவு செய்யப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை. வளைகுடா மற்றும் தற்போது மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன. இந்த நீரிணை உலகின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தக பாதைகளில் ஒன்றாகவும், எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய வழியாகவும் பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு பட மூலாதாரம்,Getty Images வார இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆசியாவில் திங்கள்கிழமை காலை எரிசக்தி சந்தைகள் திறந்தபோது பிரெண்ட் கச்சா எண்ணெய் மற்றும் நைமெக்ஸ் லைட் ஸ்வீட் எண்ணெய் இரண்டும் 10% க்கும் அதிகமாக உயர்ந்தன. ஒரு கட்டத்தில், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 9% உயர்ந்து $79.30 ஆக இருந்தது, அதே நேரத்தில் நைமெக்ஸ் சுமார் 8.5% அதிகரித்து $72.70 ஆக இருந்தது. இரானுக்கு வளைகுடா கவுன்சில் எச்சரிக்கை பட மூலாதாரம்,StringerAnadolu via Getty Images படக்குறிப்பு,இரான் தாக்குதலுக்கு இலக்கான பஹ்ரைனின் மனாமாவில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது பிரிவு தலைமையகம். இரானிய தாக்குதல்களால் ஏற்பட்ட பெரும் சேதம் குறித்து விவாதிக்க வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சௌதி அரேபியா, ஓமன், கத்தார் மற்றும் குவைத் ஆகியவற்றைக் கொண்ட இந்த அமைப்பு இரானின் தாக்குதல்களைக் கண்டித்தது. தங்கள் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தை இரான் மீறுவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாக்குதல்களை நிறுத்துமாறு இரானை கேட்டுக் கொண்டுள்ள அந்த அமைப்பு, பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த "தேவையான அனைத்து நடவடிக்கைகளும்" எடுக்கப்படும் என்றும் இரானை வளைகுடா கவுன்சில் எச்சரித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குவைத்தில் மூன்று F-15 அமெரிக்க போர் விமானங்களை வீழ்த்தியது யார்?- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நன்றி @கிருபன் தற்காலிக நாற்காலிதான் இறுதி முடிவுகள் எல்லாவற்றையும் மாற்றலாம். நன்றி @ஈழப்பிரியன் அண்ணா- சர்வதேச சந்தையில் 10% இனால் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!
மத்திய கிழக்கில் போர் பதற்றம் : மசகு எண்ணெய் விலை 10 சதவீதம் உயர்வு 02 Mar, 2026 | 01:21 PM அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களின் விளைவாக ஞாயிற்றுக்கிழமை (1) ‘ஓவர் தி கவுண்டர்’ (OTC) வர்த்தகத்தில் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 10 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாயின் விலை சுமார் 80 அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாக எண்ணெய் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போர் நிலைமை தொடர்ந்தால் மசகு எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலர் வரை உயரக்கூடும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை (27) நிலைவரப்படி, உலகளாவிய மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73 அமெரிக்க டொலர்களாக பாதிவாகின. இது ஜூலை மாதத்துக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த விலையாகும். சனிக்கிழமை (28) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (1) ஆகிய தினங்கள் அதிகாரப்பூர்வ சந்தை விடுமுறை என்பதால் வார இறுதியில் இந்த விலை உயர்வு காணப்பட்டது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவை, ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகின்றன. கப்பல்கள் இந்த நீர்வழிப்பாதையை பயன்படுத்தவேண்டாம் என ஈரான் எச்சரித்ததையடுத்து, பெரும்பாலான எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் கப்பல் உரிமையாளர்கள் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். சவூதி அரேபியா மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளின் மாற்றுப்பாதைகளை பயன்படுத்தினாலும், ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் ஒரு நாளைக்கு 8 மில்லியன் முதல் 10 மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பான OPEC+, ஏப்ரல் மாதம் முதல் ஒரு நாளைக்கு 206,000 பீப்பாய்கள் உற்பத்தியை உயர்த்துவதற்கு ஞாயிற்றுக்கிழமை (01) ஒப்புக்கொண்டது. இருப்பினும், இது உலகளாவிய தேவையில் 0.2 சதவீதத்திற்கு குறைவான மிகச் சிறிய அளவே ஆகும். இந்த நெருக்கடியால் ஆசிய நாடுகள் மாற்று வழிகளையும் எண்ணெய் கையிருப்பையும் ஆய்வு செய்து வருகின்றன. மத்திய கிழக்கிலிருந்து விநியோகம் தடைப்பட்டால், இந்தியா தனது தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்யாவிடம் அதிக எண்ணெய்யை வாங்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மத்திய கிழக்கில் போர் பதற்றம் : மசகு எண்ணெய் விலை 10 சதவீதம் உயர்வு சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் கடும் உயர்வு! Mar 2, 2026 - 06:22 PM மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்ந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதற்கு ஈரான் நேற்று (1) நடவடிக்கை எடுத்திருந்தது. இதனால் குறித்த வழியூடான கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்ட தடங்கலாலும் ஏனைய பிற காரணிகளாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உலக இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை கட்டார் கொண்டுள்ளது. இதில் பெரும்பாலானவை ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கடல் மார்க்கமாகப் போக்குவரத்து செய்யப்படுகின்றன. கத்தாரின் முக்கிய வாடிக்கையாளர்கள் ஆசியாவில் இருந்தபோதிலும், அங்கு ஏற்படும் விநியோகத் தடை உலக சந்தையில் பெரும் போட்டியை உருவாக்கி விலையை உயர்த்தியுள்ளது. அத்துடன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இஸ்ரேலில் சில எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டிருப்பது இந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஐரோப்பாவில் குளிர்காலம் முடிவுக்கு வருவதால் எரிவாயு பயன்பாடு குறைந்தாலும், அங்குள்ள இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. எதிர்வரும் கோடை காலத்தில் இந்த இருப்பை மீண்டும் நிரப்ப வேண்டியுள்ளதால், தற்போதைய விலை உயர்வு ஐரோப்பாவுக்கும் பெரும் சவாலாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் கடும் உயர்வு!- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஆயத்துல்லா அலி கமேனியின் மனைவி மன்சூரா கோஜஸ்தே பாகர்சாதே உயிரிழப்பு – ஈரான் அரசு ஊடகங்கள் Published By: Vishnu 02 Mar, 2026 | 08:26 PM கடந்த 28ஆம் திகதி சனிக்கிழமை அன்று அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் ஈரானின் உயரிய தலைவர் ஆயத்துல்லா அலி அவர்களின் மனைவி மன்சூரா கோஜஸ்தே பாகர்சாதே, காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 2ஆம் திகதி திங்கட்கிழமை உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க நடவடிக்கையுடன் தொடர்புடைய இந்த சம்பவம் குறித்து மேலதிக விவரங்கள் வெளியாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆயத்துல்லா அலி கமேனியின் மனைவி மன்சூரா கோஜஸ்தே பாகர்சாதே உயிரிழப்பு – ஈரான் அரசு ஊடகங்கள்- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
வணக்கம் எப்போதும் தமிழன், நீங்கள் கேட்டுக்கொண்டதால் இதனை எழுதுகிறேன். இந்தியா தனது அணுவாயுதத்தினை தானாகவே உள்நாட்டில் உருவாக்கிக்கொண்டது. இதற்கு ரஸ்ஸியாவோ அல்லது வேறு எவருமோ உதவவில்லை. 1940 களின் இறுதிப்பகுதிகளிலேயே தனக்கான அணுவாயுத உருவாக்கத்தை இந்தியா ஆரம்பித்துவிட்டது. போரிற்கல்லாமல், சக்தித் தேவைகளுக்காக அணுச்சக்தியைப் பாவிப்பது பற்றிய அறிவை இந்தியா, கனடா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் பெற்றிருக்கலாம், ஆனால் எந்தவொரு அணுஆயுத வல்லரசும் இந்தியாவுக்கு உதவவில்லை. 1974 ஆம் ஆண்டு இந்திய அணுவாயுதத்தை முற்றாக்கிவிட்டது என்று வெளித்தெரிய ஆரம்பித்தவுடன் அதுவரை இந்தியாவிற்கு சக்தித் தேவைக்கான அணுவாலைகளில் உதவிய நாடுகள் தமது பங்களிப்பை நிறுத்தி விட்டன. ஆனால் பாக்கிஸ்த்தான் அப்படியல்ல. வெளிநாட்டு அணுமின் நிலைகள், ஆராய்ச்சி மையங்களில் பணியாற்றிய பாக்கிஸ்த்தான் விஞ்ஞானிகள் தாம் நாடு திரும்பும்போது தம்மோடு திருடிக்கொண்டு வந்த தகவல்க் கொத்துக்களை அடிப்படையாக வைத்தே தமது அணுவாயுதத்தை உருவாக்கிக் கொண்டது. வெளிநாடுகளில் இருந்து திருடப்பட்ட கோப்புக்களுக்கு மேலதிகமாக, இந்தியாவின் பரம வைரியான சீனா அணுவாயுத உலைகளின் கட்டுமானத்தில் பாக்கிஸ்த்தானுக்கு உதவியது. சீனா அணுவாயுத பரவல்த் தடுப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டபோதும் கூட பாக்கிஸ்த்தானின் அணுவாயுத உற்பத்திக்கு உதவியது என்பது உண்மையே. ஆனால் இஸ்ரேலின் அணுவாயுத உற்பத்தியின் கதை வித்தியாசமானது. சுற்றிவரவும் தம்மை ஆக்கிரமிக்கக் காத்திருக்கும் அரபு நாடுகளில் இருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள அணுவாயுதம் தன்னிடம் இருப்பது அவசியம் என்று இஸ்ரேல் கருதியது. இதனால் 1950 களிலேயே இதுதொடர்பான முயற்சிகளில் அது இறங்கிவிட்டது. ஆரம்பத்தில் இஸ்ரேலின் அணுவாயுத ஆராய்ச்சியில் பிரான்ஸ் உதவியிருந்தபோதும், இஸ்ரேலிய விஞ்ஞானிகளே தமக்கு உகந்தவகையில் அணுவாயுதத்தை உருவாக்கிக் கொண்டார்கள். இறுதியாக, அணுவாயுதப் பரவலைத் தடுக்கும் ஒப்பந்தம் 1970 ஆம் ஆண்டிலேயே அமுலுக்கு வந்தது. பாக்கிஸ்த்தானைத் தவிர ஏனைய நாடுகள் எல்லாமே அப்பொழுது அணுவாயுதத்தை வைத்திருந்தபோதிலும் எல்லா நாடுகளும் அதில் கைச்சாத்திடவில்லை, வெறும் நான்கு நாடுகளைத் தவிர.- ஈரானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவிப்பு
ஈரானின் இறையாண்மைக்கு சீனாவின் முழு ஆதரவு – சீன வெளியுறவு அமைச்சர் உறுதி Published By: Vishnu 02 Mar, 2026 | 08:53 PM ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க பெய்ஜிங் ஆட்சி முழு ஆதரவை வழங்கும் என்று சீன வெளியுறவு அமைச்சர் ஈரானிய வெளியுறவு அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் திங்கட்கிழமை (02) செய்தி வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாக சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/239997- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
அமெரிக்கா - இரான் மோதலில் எந்த நாடு யார் பக்கம்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இஸ்ரேலும் அமெரிக்காவும் சனிக்கிழமை அன்று இரான் மீது தாக்குதல் நடத்தின. 2 மார்ச் 2026, 08:20 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, உலகம் இரண்டு முகாம்களாகப் பிரிந்திருப்பது போல் தோன்றுகிறது. பல நாடுகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஆதரித்துள்ள நிலையில், சில நாடுகள் இரானுக்கு ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. பல நாடுகள் மிகவும் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை எடுத்து நடுநிலையாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. இஸ்ரேலும் அமெரிக்காவும் சனிக்கிழமை இரான் மீது தாக்குதல் நடத்தின. இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உட்பட பல முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை இரான் குறிவைக்கத் தொடங்கியது. இந்தியா இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினார். இரு தலைவர்களும் தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதித்தனர். சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பிரதமர் மோதி எழுதிய பதிவில், சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இந்தியாவின் கவலையை வெளிப்படுத்தியதாகவும், குடிமக்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மோதலை விரைவில் நிறுத்துவது முக்கியம் என்பதையும் பிரதமர் மோதி மீண்டும் வலியுறுத்தினார். முன்னதாக, பிரதமர் ஞாயிற்றுக்கிழமை இரவு ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடனும் பேசினார். ஐக்கிய அரபு அமீரகம் மீதான தாக்குதல்களைப் பிரதமர் மோதி கண்டித்ததுடன், அங்கு வசிக்கும் இந்தியச் சமூகத்தினரைப் பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்வதற்காக ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு நன்றி தெரிவித்தார். இதற்கிடையில், வளைகுடா பிராந்தியத்தின் நிலைமை குறித்து கவலை தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் பிப்ரவரி 28, சனிக்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. "இரான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்"என்று வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது . "பதற்றத்தைக் குறைக்கவும், சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கவும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய வழிகளைப் பின்பற்ற வேண்டும். அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது. அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்ற பிரிட்டன் பட மூலாதாரம்,X / Keir Starmer படக்குறிப்பு,பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் ஒரு காணொளி அறிக்கையை வெளியிட்டார். இரானிய ஏவுகணைத் தளங்கள் மீதான "தற்காப்பு" தாக்குதல்களுக்குப் பிரிட்டிஷ் ராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்காவின் கோரிக்கைக்குப் பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தகவலைப் பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் வழங்கினார். இருப்பினும், பிரிட்டன் "இராக் தவறுகளில்" இருந்து பாடம் கற்றுக்கொண்டதாகவும், இரான் மீதான ஆரம்பக்கட்டத் தாக்குதலில் அது ஈடுபடவில்லை என்றும், "இனி வரும் எந்தத் தாக்குதல்களிலும் ஈடுபடாது" என்றும் அவர் கூறினார். அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்கும் முடிவு, கூட்டாளிகளின் "கூட்டுத் தற்காப்புக்காகவும்", பிரிட்டிஷ் உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவும் எடுக்கப்பட்டது என்று ஸ்டார்மர் கூறினார். மத்திய கிழக்கு நாடுகள் மீது இரான் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை விமர்சித்து பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மனி அதிபர் ஃபிரடெரிக் மெர்ஸ் ஆகியோர் மத்திய கிழக்கில் தங்களது நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். ஐரோப்பிய நாடுகள் யாருக்கு சார்பாக உள்ளன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (கோப்புப் படம்) இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மற்றும் இரானின் பதிலடி நடவடிக்கைக்குப் பிறகு, ஐரோப்பிய தலைவர்களின் எதிர்வினைகள் வெளிவந்துள்ளன. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இரானின் "கொலைவெறி ஆட்சிக்கு" எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விரிவான தடைகளை விதித்துள்ளதை நினைவுபடுத்தினார். "அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும், சர்வதேச சட்டத்தை முழுமையாக மதிக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் கூறினார். இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் அலுவலகம், இரான் மக்களுடன் இணைந்து நிற்பதாக கூறியுள்ளது. அவரது அறிக்கையில், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை மதிப்பதற்கான கோரிக்கை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பதற்றத்தைக் குறைக்கும் முயற்சியாக மெலோனி தனது கூட்டாளிகள் மற்றும் பிராந்தியத் தலைவர்களுடன் பேசுவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகையில், தனது நாடு "இரானிய மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் போது அவர்களுடன் நிற்கிறது" என்றும், இரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். இரானுக்கு வளைகுடா நாடுகள் எச்சரிக்கை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானை எச்சரிக்கும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் மீது இரான் நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விவாதிக்க, அதன் உறுப்பு நாடுகள் ஞாயிற்றுக்கிழமை கூடின. மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் இலக்கு வைக்கப்பட்டதாக ஜி.சி.சி கூறுகிறது. ஜி.சி.சி அமைப்பில் ஐக்கிய அரபு அமீரகம் , பஹ்ரைன், சௌதி அரேபியா, ஓமன், கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் இரானின் தாக்குதல்களைக் கண்டித்ததுடன், இரான் தங்களது இறையாண்மையையும் சர்வதேச சட்டத்தையும் மீறுவதாகக் குற்றம் சாட்டின. ஒரு செய்திக் குறிப்பில், தாக்குதல்களை நிறுத்துமாறு இரானை வலியுறுத்தியதுடன், பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தையும் ஜி.சி.சி வலியுறுத்தியது. இருப்பினும், தங்களை தற்காத்துக் கொள்ள "தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்" எடுப்போம் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. இதற்கிடையில், அண்டை நாடுகளை இலக்கு வைத்ததாக கூறப்படுவதை இரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி மறுத்துள்ளார். "நாங்கள் பாரசீக வளைகுடா நாடுகளில் உள்ள எங்களது அண்டை நாடுகளைத் தாக்கவில்லை, அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ இருப்பையே நாங்கள் இலக்கு வைக்கிறோம். அண்டை நாடுகள் தங்கள் குறைகளை இந்தப் போரைத் தீர்மானித்தவர்களிடம் தெரிவிக்க வேண்டும்," என்று அவர் அல் ஜசீராவிடம் தெரிவித்தார். பாகிஸ்தான் இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மறைவுக்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தத் துயரமான நேரத்தில் பாகிஸ்தான் அரசாங்கமும் மக்களும் இரான் மக்களுடன் நிற்பதாக அவர் கூறினார். "இந்தத் துயரமான நேரத்தில் (பாகிஸ்தான்) அரசாங்கமும் மக்களும் இரானிய மக்களுடன் நிற்கிறோம். காமனெயியின் 'தியாகத்திற்கு' எங்களது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "சர்வதேசச் சட்டத்தை மீறுவது குறித்து பாகிஸ்தான் கவலை தெரிவிக்கிறது. எந்தவொரு நாட்டின் தலைவரையும் இலக்கு வைக்கக் கூடாது என்பது நீண்ட காலமாகப் பின்பற்றப்படும் மரபு" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிபிசி உருது செய்தியின் படி, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பும் இரான் மீதான சமீபத்திய தாக்குதல்களுக்கு "ஆழ்ந்த வருத்தத்தை" தெரிவித்ததுடன், அவை "மிகவும் வருந்தத்தக்கவை" என்றும் கூறியுள்ளார். "பாகிஸ்தான் இரானுக்கு அனைத்து வகையிலும் ராஜ்ஜீய மற்றும் தார்மீக ஆதரவை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இரான் மீதான தாக்குதலைப் பாகிஸ்தான் தெளிவாகக் கண்டித்துள்ளது" என்று கவாஜா ஆசிப் கூறியுள்ளார். சீனா இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் உச்ச தலைவர் காமனெயி மறைவு குறித்து சீனா ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை "ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிரானது" என்று சீனா அதில் குறிப்பிட்டுள்ளது. "இரானின் உச்ச தலைவர் மீதான தாக்குதல் மற்றும் படுகொலை என்பது இரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கடுமையாக மீறும் செயலாகும். இந்த நடவடிக்கை ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கும், சர்வதேச உறவுகளின் அடிப்படை நெறிமுறைகளுக்கும் எதிரானது. சீனா இதனை வன்மையாக எதிர்ப்பதுடன் கண்டிக்கிறது" என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைதியைப் பேணுமாறும் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. "ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும், பதற்றமான சூழலை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்றும், மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணுமாறும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்," என்றும் என்று சீனா தெரிவித்துள்ளது. ரஷ்யா இரான் உச்ச தலைவர் காமனெயி மறைவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் செய்தியின்படி, "அலி காமனெயி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மரணம் 'மனித விழுமியங்கள் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு எதிரான கொலை'" என்று புதின் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனிடம் கூறினார். "அரசியல் மற்றும் ராஜ்ஜீய தீர்வை நோக்கிய பாதைக்கு உடனடியாகத் திரும்ப வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்" என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தனது டெலிகிராம் சேனலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தப் பிராந்தியத்தை "மானுடவியல், பொருளாதார மற்றும் கதிரியக்கப் பேரழிவை நோக்கித் தள்ளுவதாக" ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு அமெரிக்கா - இரான் மோதலில் எந்த நாடு யார் பக்கம்?- தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன் ; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன் 02 Mar, 2026 | 06:48 PM (நா.தனுஜா) அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் எனக்கு நீதியமைச்சர் பதவியை வழங்குவதாகக் கூறினார். நாங்கள் சுயதேவைகளைப் பூர்த்திசெய்ய விரும்புபவர்களாக இருந்திருந்தால், நான் அந்த அமைச்சுப்பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமக்கென ஒரு சுயாட்சி அவசியம் என்ற தமிழ்மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்வது ஒன்றே எமது இலக்காக இருப்பதன் காரணமாகவே நான் அதனை நிராகரித்தேன் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் லண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (1) கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: நானறிந்தவரை பாரதி மிகப்பண்பானவர். யாருடைய மனமும் நோகாதபடி நடந்துகொள்ளக்கூடியவர். நான் கூறியதாக ஏதேனும் செய்திகள் வரும்போது எல்லாம், என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'இப்படி ஒரு செய்தியைப் பார்த்தேன். நீங்கள் இவ்வாறு கூறினீர்களா?' எனக் கேட்பார். அவ்வாறு அவர் கேட்ட பல சந்தர்ப்பங்களில் எனது பதில் 'இல்லை' என்பதாகவே இருந்திருக்கிறது. எனவே ஒரு செய்தியைப் பிரசுரிப்பதற்கு முன்னர் அதன் உண்மைத்தன்மை பற்றி உரிய நபரிடமே கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளும் பண்பு அவரிடம் இருந்தது. அடுத்தது பொதுவாக அஞ்சலிக் கூட்டங்களில் நான் அரசியல் பேசுவதற்கு விரும்புவதில்லை. ஆனால் இங்கு எம்மை நோக்கி சில மோசமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமையினால், அவற்றுக்குப் பதிலளிக்கவேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது. அதாவது மலையக அரசியல் கட்சிகளும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக செயற்படுவதாகக்கூறி அவர்களுக்கு வெள்ளை அடிக்கப்பட்டதுடன் மாத்திரமன்றி, தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தமது சுயதேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்காக அரசாங்கத்துடன் இணைந்தும் இணையாமலும் செயற்படுவதாக மிக அபாண்டமான குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கும் மனோகணேசன் முன்னைய அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். ரவூப் ஹக்கீம் பல்வேறு அரசாங்கங்களில் அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளான நாங்கள் எந்தவொரு அரசாங்கத்திலும் அமைச்சர்களாகப் பதவி வகித்ததில்லை. மாறாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமக்கென ஒரு சுயாட்சி இருக்கவேண்டும் என்ற தமிழ்மக்களின் அபிலாசையில் நாம் எப்போதும் உறுதியாக நின்றிருக்கிறோம். தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே இருக்கிறோம். நாம் கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணியினருடன் சுமுகமான அறிமுகத்தைப் பேணியிருந்தாலும் அவர்களுக்கும் எமக்கும் இடையில் கொள்கை ரீதியிலான வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக ஆரம்பத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் விடுதலை முன்னணி இருந்தது. ஆனால் 1989 ஆம் ஆண்டு கட்சிக்குள் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின் ஊடாக தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை இல்லை என மக்கள் விடுதலை முன்னணி தமது நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக மாற்றிக்கொண்டது. அதனைத்தொடர்ந்து அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையையும் கடுமையாக எதிர்த்தது. இன்று அக்கொள்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் தான் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். உண்மையைக் கூறவேண்டுமானால், அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் எனக்கு நீதியமைச்சர் பதவியை வழங்குவதாகக் கூறினார். நாங்கள் சுயதேவைகளைப் பூர்த்திசெய்ய விரும்புபவர்களாக இருந்திருந்தால், நான் அந்த அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் தமிழ்மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்வது ஒன்றே எமது இலக்காக இருந்திருக்கிறது என்றார். தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்- தெற்கு ஈரானில் ஆரம்பப் பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 மாணவிகள் பலி – பலர் காயம்
ஈரான் சிறுவர் பாடசாலை மீது நடாத்தப்பட்ட குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை நூற்றுக்கு மேல் என சி.என்.என், பி.பி.சி யில் உள்ளது.- ஈரானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவிப்பு
சும்மா கிளுகிளுப்பு சூடேற்றலுக்கு எழுதப்பட்ட செய்தி போல் உள்ளதே. இப்படியான ஒரு தகவல் இதுவரை மேற்கத்தைய ஊடகங்களில் வெளியானதாக தெரியவில்லை.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
எனக்கு அறிமுகம் இல்லாத 86 வயது தாத்தா ஒருவர் ஈரானில் கொல்லப்பட்டு உள்ளார். தாத்தாவின் இறப்பை கொண்டாடுவது உங்கள் பிரச்சனை. இதற்கு ஒப்பாரி வைக்கும் அளவிற்கு நான் வெட்டியாக இல்லை.- ஈரானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவிப்பு
ஈரானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவிப்பு Mar 2, 2026 - 07:47 PM மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில். ஈரானுக்கு ஆதரவாக சீனா கருத்து வௌியிட்டுள்ளது. ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சருடனான உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் போது, சீன வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண நிலைமைகளுக்கு மத்தியில் ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகளை நிராகரிப்பதாகவும், ஈரானின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் இராஜதந்திர ரீதியில் சீனா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இந்தப் பேச்சுவார்த்தையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஈரானுடன் நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ள சீனா, தற்போதைய நெருக்கடியான கட்டத்தில் ஈரானுக்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளமை சர்வதேச மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகர்வாகப் பார்க்கப்படுகிறது. ஈரானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவிப்பு - ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.