All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி, ஃபில் சோல்ற்ரின் அதிரடியான 62 (40 பந்துகள்) ஓட்டங்களுடன் 9 விக்கெட்டுகளை இழந்து சுமாரான 146 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சிறிலங்கா அணியின் வீரர்கள் ஆடுதளத்தில் நிற்கமுடியாமல் வேகமாக ஆட்டமிழந்து திரும்பிக்கொண்டிருந்தனர். அணித்தலைவர் தசுன் ஷானக ஓரளவு நிலைத்தாடி 30 (24 பந்துகளின்) ஓட்டங்களை எடுத்தார். எனினும் விக்கெட்டுகள் தொடர்ச்சியாகக் சரிந்ததனால் 16.4 ஓவர்களில் 95 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. இந்த ஓட்ட எண்ணிக்கை இத் தொடரில் மிகக் குறைவான ஓட்ட எண்ணிக்கையாக இருக்க அதிக சாத்தியம் உள்ளது! முடிவு: இங்கிலாந்து அணி 51 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. இப்போட்டியில் விளையாடாத மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தெரிவு செய்த @வீரப் பையன்26 க்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, டேவிட் மில்லரின் அபாரமான 63 (35 பந்துகள்) ஓட்டங்களுடனும், டெவால்ட் பிறெவிஸின் புயல்வேக 45 (29 பந்துகள்) ஓட்டங்களுடனும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸின் மின்னல்வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 44 (24 பந்துகள்) ஓட்டங்களோடும் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, ஆரம்பத்தில் இருந்தே நட்சத்திர வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வேகமாக ஓட்டம் எடுக்கலாம் என அடித்தாடி வீரர்கள் விரைந்து வெளியேறினர். ஷிவம் டுபே மாத்திரம் 42 (37 பந்துகள்) ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் மிகவும் குறைவான ஓட்டங்களை எடுத்ததால், 18.5 ஓவர்களின் சகல விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 76 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல்வர் @கந்தப்பு தனது நாற்காலியை மேலும் பலப்படுத்தியுள்ளார்!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியாவின் பாரிய தோல்வி, அவர்களின் ஓட்ட விகிதத்தை பெரிதாகப் பாதிக்கும். அங்க இங்க மாறி, ஒரே புள்ளியோட மேற்கிந்தியா வந்துதென்டா, இந்தியா பாடு திண்டாட்டம். தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியா போட்டி, இந்தியாவுக்கு முக்கியமான போட்டி.
-
ஆடுகளம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சின்ன வீட்டைப் பார்க்க போறாரோ? பையா முடிவு சந்தோசமோ இல்லையோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்று நடந்த இரண்டு விளையாட்டு சிறு விறுவிறுப்பு கூட இல்லை ஏனோ தானோ என முடிந்து இருக்கு ஹா ஹா.......................
-
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்
கீழே விளக்கு ஏற்றப்படும்போது, மேலே உள்ள சுவரில் உருவாகும் நிழல் சிவபெருமான்.🙏
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
என்ன ஒரு 250 மைல் ஓடியிருப்பார். அவரின் முயற்சி ஆச்சரியப்பட வைக்குது.
-
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்
Paanch started following மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்
- இந்தோனீசியா வரை கடல் கடந்து வென்று ஆசியாவின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக உயர்ந்த 'ராஜேந்திர சோழன்'
ராஜேந்திர சோழன் கடல் கடந்து தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது படையெடுத்தது ஏன்? என்ன கிடைத்தது? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் மூத்த செய்தியாளர், பிபிசி தமிழ் 22 பிப்ரவரி 2026, 03:27 GMT வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் வர்த்தகத்திற்கு ஏற்பட்ட இடையூறுகளே சோழர்களின் கடல் கடந்த படையெடுப்புகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்கிறது சமீபத்திய ஆய்வுக் கட்டுரை ஒன்று. இந்தப் படையெடுப்புகளால் என்ன நடந்தது? வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது என்ன? ராஜேந்திர சோழன் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்று மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றதாக அவரது மெய் கீர்த்திகள் கூறுகின்றன. ஆனால், இந்தப் படையெடுப்புகள் ஏன் நடந்தன என்பது குறித்து வரலாற்று ஆசிரியர்களிடம் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. தென்னிந்திய பகுதிகளில் இருந்து தென்கிழக்கு ஆசியாவுடன் நடந்த வர்த்தகத்திற்கு ஏற்பட்ட இடையூறின் காரணமாகவே இந்தப் படையெடுப்புகள் நடந்திருக்கலாம் என்கிறது சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்று. சென்னையில் தமிழ்நாடு அரசின் மாநில தொல்லியல் துறை சமீபத்தில் நடத்திய தமிழ் கல்வெட்டியல் தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்களான வீ. செல்வகுமாரும் கார்த்திகேயனும் இணைந்து 'இடைக்காலத்தில் தமிழ்நாடு வணிகர்கள், வணிகக் குழுக்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள்' (Merchants, Merchant Guilds and Trade Activities in Medieval Tamil Nadu) என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தனர். அந்தக் கட்டுரை, சோழர்கள் காலத்தில் இருந்த வர்த்தகக் குழுக்கள் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களை அளிக்கிறது. "தென்னிந்திய நிலப்பகுதியை ஒட்டி அமைந்திருந்த இந்திய பெருங்கடலால் ஏற்பட்ட சாதகமான சூழலின் காரணமாக, வரலாற்றின் ஆரம்பக் காலத்தில் இருந்தே தென்னிந்தியாவின் வணிக சமூகத்தினர் கடல் கடந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தனர். சோழர்கள் காலத்தில் திசையாயிரத்து ஐந்நூற்றுவர், வளஞ்சியர், பதினெண்விஷயத்தார் போன்ற கடல் கடந்த வணிகக் குழுக்கள் இலங்கை, தென்கிழக்கு ஆசியா, கிழக்காசிய நாடுகளுக்குப் பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சோழர்களின் கடல்வழி விரிவாக்கத்திற்கும் ஆதரவாக நின்றனர்" என்கிறது அந்தக் கட்டுரை. இந்த நிலையில், சோழ அரசர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்றது ஏன்? இதற்குச் சில காரணங்களை முன்வைக்கிறார் செல்வகுமார். "ஸ்ரீவிஜயத்தின் மன்னர் நாகப்பட்டனத்தில் சைலேந்திர சூளாமணி வர்ம விகாரை என்ற புத்த விகாரையைக் கட்டினார். அந்தக் காலகட்டத்தில் இருந்த சோழ மன்னரான ராஜராஜ சோழனோடு ஸ்ரீவிஜயத்திற்கு நல்ல உறவு இருந்தது. ஸ்ரீவிஜய மன்னரின் முகவர்களும் இங்கே நன்றாகவே நடத்தப்பட்டனர். 1017-18 வரை எல்லாம் சுமூகமாகவே இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு அனைத்தும் மாறத் துவங்கின," என்கிறார் செல்வகுமார். ராஜேந்திர சோழனின் ஸ்ரீவிஜயம் மீதான படையெடுப்பு குறித்த செய்திகளை தஞ்சை பெரிய கோவிலில் காணப்படும் 1031 - 32ஆம் ஆண்டைச் சேர்ந்த "..அலைகடல் நடுவுட் பலகலஞ்செலுத்திச் சங்கிராம விசையோத்துங்க வந்மனாகிய கடாரத்தரசனை வாகயம் பொரு கடல் கும்பக் கரியோடு" என்று நீளும் மெய் கீர்த்தி கல்வெட்டு ஒன்று விரிவாக விவரிக்கிறது. சோழர் காலத்தைச் சேர்ந்த சில செப்பேடுகளும் இந்தப் படையெடுப்புகள் குறித்துப் பேசுகின்றன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சோழ மற்றும் கெமர் சாம்ராஜ்ஜியங்கள் இடையிலான ஒத்துழைப்பின் அடையாளமாக அங்கோர்வாட் கோவில் உள்ளது. ஹெர்மன் எழுதிய ஆசிய வரலாற்றில் சோழர்களின் கடல் பயணங்கள் கட்டுரை இந்தக் கல்வெட்டின் பொருளை விவரிக்கிறது. அதாவது, "அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை அனுப்பிய அவன்; கடாரத்து மன்னன் சங்கிரம விஜயதுங்க வர்மனையும், புகழ் வாய்ந்த அவனுடைய படையில் இருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டான். நேர்மையான வழியில் அந்த அரசன் சேர்த்து வைத்திருந்த செல்வக் குவியலையும் எடுத்துக் கொண்டான்; பரந்து விரிந்திருந்த அவனுடைய நகரமான ஸ்ரீவிஜயாவின் "போர் வாயிலில்" நின்றிருந்த வித்தியாதர தோரணம் என்ற வளைவை வெற்றி முழக்கத்துடன் கைப்பற்றினான். ஜொலிக்கும் ரத்தினங்கள் பதித்த சிறுவாயிலையும் பெரிய ரத்தினங்களால் ஆன வாயிலையும் சேர்த்துக் கொண்டான். தீர்த்த படித்துறைகளில் நீர் நிறைந்திருந்த பண்ணை; பாதுகாப்பு அரணாக வலிமையான மலையைப் பெற்றிருந்த மலையூர்; அகழிபோல ஆழ்கடலால் சூழப்பட்டிருந்த மயூரடிங்கம்; எத்தகைய போருக்கும் அஞ்சா இலங்கசோகர; ஆழ்கடலால் பாதுகாக்கப்பட்ட மாப்பாலம்; வலிமையான சுவரைப் பாதுகாப்பு அரணாகக் கொண்டிருந்த மேவிலிம்பங்கம்; வலைப்பந்தூரு என்ற விலப்பந்தூர்; அறிவியல் புலமை வாய்ந்தவர்களால் புகழப்பெற்ற தலைத்தக்கோலம்; மூர்க்கமான, பெரிய போர்களிலும் நிலைகுலையாத மாடமாலிங்கம்; போரினால் வலிமை கூடிய இளமுரிதேசம்; பூந்தோட்டங்களில் தேன் தேங்கி நின்ற மானக்கவரம்; அத்துடன் ஆழ்கடலால் பாதுகாக்கப்பட்டதும் மிகவும் சக்தி வாய்ந்ததுமான கடாரம்." என்கிறது இந்தக் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டை அடிப்படையாக வைத்து, எந்தெந்த நாடுகளின் மீது படையெடுத்து, என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்பதை 'இராஜேந்திர சோழன்' என்ற தனது நூலில் விவரிக்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன். கடாரத்து அரசனான சங்கிராம விஜயோதுங்க வர்மனின் அரண்மனையில் இருந்து, அதன் தோரண வாயில், நிலை வாயில், மணிகளை உடைய கதவுகள் போன்றவை கைப்பற்றப்பட்டன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தஞ்சை பெரிய கோவில் ஸ்ரீ விஜயப் பேரரசின் சக்ரவர்த்தியாக இருந்த சூளாமணிவர்மன், அவன் மகன் விஜயோதுங்க வர்மன் ஆகியோர் சோழ மன்னர்களுடன் நட்புணர்வுடன் இருந்தனர் என்றும் குலோத்துங்க சோழன் காலத்திலும் அது தொடர்ந்தது என்றும் குறிப்பிடும் குடவாயில் பாலசுப்ரமணியன், நடுவில் ராஜேந்திர சோழன் காலத்தில், அவனது ஆட்சியின் இடைப் பகுதியில் விஜய நாட்டின் மீது படையெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்கிறார். "இந்தப் படையெடுப்பின் நோக்கம் நாடுகளைப் பிடித்து அங்கு தனது ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதன்று. தனது படைபல வலிமை எத்தகையது என்பதை கீழ்த்திசை நாடுகளுக்கு காட்ட வேண்டிய கட்டாயம் ராஜேந்திர சோழனுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டு வணிகர்களின் செல்வாக்கும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் அங்கு வலுவுடன் திகழ வேண்டும் என ராஜேந்திர சோழன் கருதியிருக்க வேண்டும்" என்கிறார் பாலசுப்ரமணியன். ஆனால், இந்தப் படையெடுப்பிற்கான காரணம் தெளிவாக இல்லை என்கிறார் வரலாற்று ஆசிரியர் கனகலதா முகுந்த். அவர் எழுதிய 'தமிழக வணிகர்கள்: சர்வதேச வர்த்தகத்தின் முன்னோடிகள்' (Merchants of Tamilakam: Pioneers of International Trade) என்ற நூல் 'தமிழக வர்த்தகர்களின் நலனைப் பாதுகாக்க இந்த படையெடுப்பு நடத்தப்பட்டது என்பது பெரும்பான்மை கருத்து' என்று குறிப்பிடுகிறது. "ராஜேந்திர சோழன் கடாரத்தைத் தாக்க 1017-18இல் தனது கடற்படையை அனுப்பினார். பல வருடங்கள் நடந்த இந்தப் போர்களில் சோழர் படை கடாரத்தையும் மற்ற முக்கியத் துறைமுகங்களையும் கைப்பற்றி, ஏராளமான செல்வத்தையும் கையகப்படுத்தியது. இந்தப் படையெடுப்புக்கு சரியான காரணம் எதையும் வரலாற்று ஆசிரியர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சைலேந்திரர்கள் முக்கியமான இடங்களில் அவர்களுக்கு இருந்த துறைமுகங்களைக் கொண்டு கிழக்கு நாடுகளின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த முயன்றதால் அதை எதிர்த்து தமிழக வர்த்தகர்களின் நலனைப் பாதுகாக்கவே இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது என பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். ஆனால், சோழர்களின் கடற்படையெடுப்பு நீண்டகால நோக்கில் கடல்வழி வர்த்தகத்தை மாற்றி, தமிழக வணிகர்களுக்கு அனுகூலமாகத் திருப்பிவிட்டதா, தமிழர் வர்த்தகத்தின் அளவை அதிகரித்ததா என்பது கேள்விக்குறிதான்" என்கிறார் கனகலதா முகுந்த். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தோனீசியாவில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்பன்னன் கோவில் அப்படியானால், இந்தப் படையெடுப்புகளால் சோழப் பேரரசு அடைந்தது என்ன? "ஸ்ரீ விஜயத்தில் இருந்தும் இலங்கையில் இருந்தும் கொண்டு வரப்பட்ட அதிகளவு செல்வம், சோழப் பேரரசின் செல்வச் செழிப்பை உயர்த்தியது. அது அரச குடும்பமும் படைகளும் கோவில்களைக் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் உதவியது. தமிழ் வர்த்தகர்களின் நலன்களைப் பாதுகாப்பது இரண்டாவது முக்கியமான நோக்கமாக இருந்ததா என்பது தெரியவில்லை" என்கிறார் கனகலதா முகுந்த். ஆனால், இந்தப் படையெடுப்புகள் குறித்து வேறு சில கேள்விகளை எழுப்புகிறார் சோழ வரலாற்றில் நிபுணரும் மூத்த கல்வெட்டு ஆய்வாளருமான ஒய். சுப்பராயலு. "ராஜேந்திர சோழன் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றார் என அவருடைய மெய் கீர்த்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், சம்பந்தப்பட்ட நாடுகளில் இது தொடர்பான குறிப்புகள் ஏதும் இல்லை. இங்கிருந்து படையெடுத்துச் சென்றவர்கள் விட்டு வந்த ஆதாரங்களும் இல்லை. மெய் கீர்த்திகளில் பல நாடுகளின் பெயர்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், மெய் கீர்த்திகளில் குறிப்பிடப்படும் தகவல்களில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது," என்கிறார் ஒய். சுப்பராயலு. இருந்தபோதும், சோழ மன்னர்களிடம் ஒரு கடற்படை இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இருந்ததைத் தன்னுடைய 'சோழ நாட்டின் கடற்படையைப் பற்றிய குறிப்பு' என்ற கட்டுரையில் கூறுகிறார் ஒய். சுப்பராயலு. பட மூலாதாரம்,Universal Images Group via Getty Images படக்குறிப்பு,இலங்கையில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான பொலன்னறுவா, இலங்கை மற்றும் சோழப் பேரரசின் பழமையான அரச நகரம் "சீர்காழியில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி. 1187ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று அரையன் கடல்கோலமிட்டாந்தான் என்ற அமரகோன் பல்லவராயன் பற்றிக் கூறுகிறது. அவர் கரைப்படையிலாரைச் சேர்ந்த தண்டல்நாயகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கரைப்படையிலார் என்பது கடற்கரையை ஒட்டிய ராணுவத்தைக் குறிக்கும். அதனால் அதை கடற்படையாகக் கருதலாம். ராஜராஜன் கைப்பற்றிய பன்னிரண்டாயிரம் பழந்தீவுகள் தற்போது மாலத் தீவுகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்காக 800 முதல் 1000 கி.மீ. தூரம் வரை சோழர் படை பயணம் செய்திருக்க வேண்டும். ஆகவே 1026-ஆம் ஆண்டில் ராஜேந்திர சோழன் ஸ்ரீ விஜயத்திற்கு தன்னுடைய கடற்படையை அனுப்பியபோது வெகுதூரம் பயணம் செய்யும் ஆற்றல் சோழ கடற்படைக்கு ஏற்கெனவே இருந்தது. ஆனால், இத்தகைய யூகங்களைத் தவிர சோழ கடற்படையைப் பற்றிய விரிவான தகவல்கள் எங்கும் இல்லை." என்கிறார் அவர். தென்னிந்தியாவில் இருந்து வணிகர்கள் சென்றதற்கான ஆதாரங்கள் இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து போன்ற இடங்களில் கிடைக்கின்றன என்கிறார் அவர். "இங்கிருந்து வணிகர்கள் சென்றதற்கான ஆதாரங்கள், இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து போன்ற இடங்களில் கிடைக்கின்றன. தாய்லாந்தின் தென்முனையான தக்குவாபா என்ற இடத்தில் கி.பி. 900வது ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு கிடைத்திருக்கிறது. அதற்குப் பிறகு 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள், அதாவது குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இங்கிருந்து சென்ற வர்த்தகர்கள் சுமத்திராவின் மேற்குக் கரையில் உய்யக்கொண்ட சோழபட்டணம் என ஒரு குடியிருப்பையே உருவாக்கியிருந்தார்கள். அந்தத் தீவிலிருந்து கற்பூரம் போன்ற வாசனைப் பொருட்களை இறக்குமதி செய்தார்கள். அங்கு தங்கமும் கிடைத்தது. சீனாவை பொருத்தவரை, 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு சம்பந்தப் பெருமாள் என்பவர் திருக்கானீஸ்வரர் கோவில் என்ற ஒரு கோவிலைக் கட்டினார். அது, குப்ளாய்கான் பெயரில் கட்டப்பட்ட கோவில். ஆகவே, இதுபோல வர்த்தகர்கள் இங்கிருந்து சென்றதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன" என்கிறார் ஒய். சுப்பராயலு. நாகப்பட்டினம் முதல் சுவர்ணதீபம் வரை: தென்கிழக்கு ஆசியாவிற்கான சோழர்களின் கடற்படைப் பயணங்கள் பற்றிய பிரதிபலிப்புகள் (Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia) என்ற புத்தகத்தில் டான்சென் சென் எழுதிய 'சோழ - ஸ்ரீ விஜய - சீன முக்கோண உறவில் ராஜேந்திர சோழனின் ராணுவ முற்றுகைகள்' என்ற கட்டுரையும், "வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கத்திலேயே ஸ்ரீ விஜயம் மீது ராஜேந்திர சோழன் படையெடுத்துச் சென்றான்" எனக் குறிப்பிடுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crm8k9vn32yo- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் வஸ்சின்டன் சுந்தரின் ரசிகன் அவர் விளையாடின விளையாட்டில் இந்தியா தோத்தது சிறு கவலை தான் தென் ஆபிரிக்கா இதே போல விளையாடி கோப்பையை வென்றால் மகிழ்ச்சி...................- மகா சங்க மாநாடு இன்று!
பௌத்த மகா சங்கத்தின் முன்மொழிவுகள் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட மாட்டாது - அமைச்சர் சந்தன அபேரத்ன 22 Feb, 2026 | 05:00 PM (எம்.மனோசித்ரா) அகில இலங்கை பௌத்த மகா சங்கத்தினரால் நடத்தப்பட்ட சம்மேளனத்தில் நாம் எவ்வித தவறையும் காணவில்லை. அந்த வகையில் அந்த மாநாட்டையும் அதில் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் எந்த வகையிலும் அரசாங்கம் குறைமதிப்பிற்கு உட்படுத்தாது என பொதுநிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பௌத்த மதகுருமார்கள் உட்பட நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் ஒன்று கூடுவதற்கான உரிமை காணப்படுகிறது. பௌத்த மத குருமார்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் அல்லது நெருக்கடிகள் காணப்படுமாயின் அவை குறித்து அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டால் எம்மால் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். எவ்வாறிருப்பினும் பௌத்த தேரர்களால் சம்மேளனம் நடத்தப்படுவதில் எவ்வித தவறையும் நாம் காணவில்லை. வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சம்மேளனத்தில் முன்வைக்கப்பட்ட சாதகமான விடயங்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்துவோம். ஆரம்ப கால கட்டத்திலிருந்தே பௌத்த மதகுமார் பிரஜைகளுக்கும் அரசாங்கத்துக்கும் நல்வழி காண்பித்துள்ளனர். எனவே இந்த சம்மேளனத்தையும் அதில் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் நாம் ஒருபோதும் குறைமதிப்பிற்கு உட்படுத்த மாட்டோம். அவற்றிலுள்ள சாதகமான விடயங்களை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் கவனத்தில் கொள்வோம். பௌத்த மதகுமார் மாத்திரமின்றி எந்தவொரு பிரஜையாலும் நாட்டு நலனுக்காக முன்வைக்கப்படும் எந்தவொரு முன்மொழிவையும் எமது அரசாங்கம் நிராகரிக்காது என்றார். https://www.virakesari.lk/article/239317- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆரம்பத்தில் துடுப்பாடப் போனது தவறோ என நினைத்தேன். சரியாகவே ஆடியிருக்கிறார்கள். இந்திய மண்ணிலே இந்தியா தோற்றது இன்னம் சந்தோசம். ஞாயிறு என்றால் @கிருபன் னைப் பிடிப்பது ரொம்ப கஸ்டம். எத்தனை மணிக்கு வந்து புள்ளிகள் போடுவாரோ? அவருக்கு இரண்டு முட்டை என்று குவாட்டர் அடித்திட்டு படுக்கிறாரோ?- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
South Africa 187/7 India (18/20 ov, T:188) 105/8 India need 83 runs in 12 balls. Current RR: 5.83 • Required RR: 41.50 • Last 5 ov (RR): 24/3 (4.80) Win Probability IND 0.01% SA 99.99% South Africa 187/7 India (18.5/20 ov, T:188) 111/10 South Africa won by 76 runs- சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் ; ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை
சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் ; ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை 22 Feb, 2026 | 03:37 PM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், பாதிக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநாட்டுவதற்கும் நம்பத்தகுந்த சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவியினால் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 29 குழந்தைகள் உள்ளடங்கலாக வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையையும், அவர்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் அமைதிப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 9 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருப்பதை முன்னிட்டு உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறோம். 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதி இந்தக் கவனயீர்ப்புப் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களால் தொடர் போராட்டங்கள், ஆவணப்படுத்தல் முயற்சிகள் மற்றும் சர்வதேச பொறிமுறைகளுடனான தொடர்புகள் எனப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எமது இந்தப் போராட்டத்தின் ஊடாக எமக்குப் பதிலளிக்குமாறு கோரப்படுவதுடன் மாத்திரமன்றி, வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான சர்வதேச மனித உரிமைகள் நியமங்கள் மற்றும் கடப்பாடுகளைப் பின்பற்றிச் செயற்படுமாறும் வலியுறுத்தப்படுகிறது. எமது இந்தத் தொடர் போராட்டமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேசப் பொறிமுறைகளுடனான நிலையான தொடர்புகளும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் நியமங்களைப் பாதுகாப்பதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் நாம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. மறுபுறம் தொடர் வலியுறுத்தல்களின் பின்னரும் நம்பத்தகுந்ததும், பக்கச்சார்பற்றதும், செயற்திறன் மிக்கதுமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு உள்நாட்டு அரசாங்கங்கள் தவறியிருக்கின்றன. அதன்விளைவாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான உண்மை, நீதி மற்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைவான இழப்பீடு என்பன உறுதிசெய்யப்படவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், பாதிக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநாட்டுவதற்கும் நம்பத்தகுந்த சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். அதேபோன்று இறுதிக்கட்டப்போரின்போது எமது உறவுகள் சரணடைந்த மற்றும் நாமாகக் கையளித்த சோதனைச்சாவடிகளுக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தவும், அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்தோடு உள்ளகப்பொறிமுறைகள்மீது நம்பிக்கை இழந்து, அவற்றை நிராகரித்திருக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும். மேலும் தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஆதரவளிக்கவேண்டும் என அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/239307- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
88-8 நல்ல இலக்கங்கள்.- Today
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனக்கும்தான் பிடித்த வீரர். குழந்தைப்பிள்ளை முகம். ஆனால் அடிக்கத் தொடங்கினால் ராட்சசன். அவர் திரும்பி வந்தது தென்னாபிரிக்காவுக்கு ஒரு ஸ்திரத்தன்மையைக் கொண்டு வந்து விட்டது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Drinks 43rd Match, Super Eights, Group 1 (N), Ahmedabad, February 22, 2026, ICC Men's T20 World Cup South Africa 187/7 India (14/20 ov, T:188) 86/5 India need 102 runs in 36 balls. Current RR: 6.14 • Required RR: 17.00 • Last 5 ov (RR): 35/1 (7.00) Win Probability IND 0.63% SA 99.37%- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இருவருக்கும் இதுதான் கடினமான போட்டி. தென்னாபிரிக்கா அழுத்தாமாகக் காலைப் பதித்துவிட்டது. அடுத்த இரு போட்டியும், எதிர் ஸிம்பாப்வே - மேற்கிந்தியா, இருவருக்கும் இலகுவாகவே இருக்கும்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவரால் ஒன்றும் செய்ய முடியாது அண்ணா......................- சர்வதேச போர்க்கப்பல் அணிவகுப்பு: இந்திய கடற்படைத் தளபதியுடன் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்பு
சர்வதேச போர்க்கப்பல் அணிவகுப்பு: இந்திய கடற்படைத் தளபதியுடன் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்பு Published By: Digital Desk 1 22 Feb, 2026 | 03:04 PM இந்திய கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'MILAN - 26' பலதரப்பு கடற்படைப் பயிற்சி மற்றும் சர்வதேச போர்க்கப்பல் அணிவகுப்பு ஆகியவற்றில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். கடந்த 18ஆம் திகதி வங்காள விரிகுடாவின் கிழக்கு இந்தியக் கடற்கரைப் பகுதியில் இந்த பிரம்மாண்டமான சர்வதேச கடற்படை கண்காணிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதியின் விசேட அழைப்பின் பேரில் இலங்கை கடற்படைத் தளபதி இதில் பங்கேற்றார். அத்துடன், இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 'சாகர' மற்றும் 'நந்திமித்ர' ஆகிய போர்க்கப்பல்கள் இந்த சர்வதேச அணிவகுப்பில் இணைந்துகொண்டன. இந்தியக் குடியரசுத் தலைவர் முன்னிலையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில், பிராந்திய மற்றும் உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த பலதரப்பட்ட போர்க்கப்பல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இது பரஸ்பர புரிதலின் அடிப்படையில் பிற மாநிலங்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலம் கடல்சார் இலட்சியங்கள் மற்றும் சவால்களை முறியடிப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது. மேலும், இதுபோன்ற சர்வதேச கடல்சார் மற்றும் கடற்படைப் பயிற்சிகளில் பிரதிநிதித்துவம் செய்வது மற்ற கடல்சார் பங்குதாரர்களுடன் பரஸ்பர ஒத்துழைப்பையும், இயங்குதன்மையையும் மேம்படுத்தும். மேலும், கடல்சார் பாதுகாப்புக்கான கூட்டு அணுகுமுறையுடன் பணியாற்றுவதில் அவசியமான புதிய அறிவு, மூலோபாய அணுகுமுறைகள் மற்றும் கடல்சார் செயல்பாடுகள் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது போன்ற பல நன்மைகளைப் பெற இலங்கை கடற்படைக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த நிகழ்வில் பங்கேற்ற இலங்கை கடற்படைத் தளபதி, பிராந்திய மற்றும் உலகளாவிய நாடுகளின் இராஜதந்திர பிரதிநிதிகளுடன் இருதரப்பு சார்ந்த கலந்துரையாடல்களில் பங்கேற்றார், மேலும் இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து மூலோபாய அளவிலான கருத்துப் பரிமாற்றமும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239303- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் டி காக் ரசிகன் பாரப்பம் என்ன நடக்குது என்டு.- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
இரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த இலங்கை; சுப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திடம் படுதோல்வி Published By: Vishnu 22 Feb, 2026 | 07:30 PM (பல்லேகலையிலிருந்து நெவில் அன்தனி) இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 2 போட்டியில் மிக மோசமாக துடுப்பெடுத்தாடிய இலங்கை 51 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக 12ஆவது நேரடி தோல்வியை இலங்கை தழுவியது. அது மட்டுமல்லாமல் கடந்த ஒரு மாதத்திற்குள் இங்கிலாந்திடம் இதே மைதானத்தில் இலங்கை அடைந்த 4ஆவது நேரடி தோல்வி இதுவாகும். இந்தத் தோல்வியை அடுத்து ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்குச் செல்லும் இலங்கையின் வாய்ப்பு ஊசலாடத் தொடங்கியுள்ளது. அதேவேளை இங்கிலாந்து 2 வெற்றி புள்ளிகளைப் பெற்று குழு 2 இல் முதலாம் இடத்தை அடைந்து தனது அரை இறுதி வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது. இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 16.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. இந்த வருட உலகக் கிண்ணத்தில் இலங்கை பெற்ற 95 ஓட்டங்களே மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாகும். பவர்ப்ளே ஓவர்களுக்குள் 5 விக்கெட்களை இழந்த இலங்கை அதன் பின்னர் மீளவே இல்லை. மத்திய வரிசையில் அணித் தலைவர் தசுன் ஷானக்க மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட துனில் வெல்லாககே (10), கமிந்து மெண்டிஸ் (13) மஹீஷ் தீக்ஷன (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றனர். பந்துவீச்சில் வில் ஜெக்ஸ் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆதில் ராஷித் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லியாம் டோசன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீரர் பில் சோல்ட் மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட வில் ஜெக்ஸ் (21), ஹெரி ப்றூக் (14), சாம் கரன் (11), ஜெமி ஓவர்ட்டன் (11 ஆ.இ) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டில்ஷான் மதுஷன்க 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: வில் ஜெக்ஸ் https://www.virakesari.lk/article/239338- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓம்…இந்தியா அடுத்தடுத்த மாட்ட்சுக்கு சுதாகரிச்சுடக்கூடாது எண்டதுதான் எண்ட கவலை எல்லாம்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நல்ல தயாரிப்போட வந்திருக்கினம். பந்து வீச்சு சுழற்சியெல்லாம் வேலை செய்யுது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சரி இந்தியாவின் தோல்வியும் உறுதியாகிட்டு....................
Important Information
By using this site, you agree to our Terms of Use.