All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய சூப்பர் ஹிட் சுற்றுப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, துடுப்பெடுத்தாடத் தொடங்கியது. ஆச்சரின் முதல் பந்து பரிமாற்றத்தில் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் மெதுவாக ஆரம்பித்த அவர்கள் துடுப்பாட்டம், மெதுவாக சூடு பிடித்த தொடங்கியது. பவர் பிளேயில் 54 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்கள். ஆனால், இங்கிலாந்தின் சுழல் பந்துவீச்சாளர்கள், அவர்களை கட்டுப்படுத்தினார்கள். விக்கெட்டை இளக்கத் தொடங்கி, தட்டுத் தடுமாறி, 159 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்கள். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியும், தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று, மெதுவாகவே தங்கள் ஆட்டத்தை ஆரம்பித்தார்கள். விக்கெட்டை பறிகொடுத்துக் கொண்டே இருந்தார்கள். 17வது பரிமாற்றத்தின் முடிவில் ஆறு விக்கட்டுகளை இழந்து, 117 ஓட்டங்களையே பெற்றிருந்தார்கள். 18 பந்துகளில் 43 ஓட்டங்கள் அடிக்க வேண்டிய நிலையில், பில் ஜாக்சுடன் இணைந்த ரெகான் அகமட், அடிக்கத் தொடங்கினார்கள். அடுத்த 13 பந்துகளில் 44 ஓட்டங்களை குவித்து, இங்கிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்கள்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
தோழர், எந்த ஊர் பெண் என்றாலும் அவர் நியாயம் சபை ஏற வேண்டும். இதிலே அவர் கூறி உள்ள குற்றசாட்டுகள் யூகேயில் domestic violence என்ற வரையறக்குள் வரும். வஞ்சிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தக்க நியாயம் கிடைக்கவேண்டும். அது விஜி அண்ணியாகிலும், சங்கீதா அண்ணியாகிலும். இதில் ஐஸ்வர்யா பெத்துராஜ் திருமணத்தை முன்னின்று நடத்திவர்களின் இராஜதந்திரத்தையும் மெச்சல் வேண்டும்.
-
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திலும் தான் எப்படி பட்ட ஒரு தத்தி என்பதை விஜை நிருபிக்கிறார். மணமுறிவு ஒண்டும் பஞ்சமா பாதகமில்லை. அதே போல் தமிழக அரசியல், சினிமா மட்டும் அல்ல, பொதுவான வாழ்வில் கூட, குறிப்பாக ஆண்கள் தனி மனித ஒழுக்கம் தவறுவது பெரிய மேட்டர் அல்ல. பெரியார், அண்ணா, காமராஜர், எம் ஜி ஆர், கருணாநிதி, உதய நிதி, போன்ற பெரிய அரசியல்வாதிகள் முதல், பெரிய கருப்பன், சீமான் போன்ற சின்ன அரசியல்வாதிகள் வரை அனைவரினதும் வாழ்க்கையும் பயில்வான் ரங்கநாதன் கதைக்கும் ரேஞ்ச்சுதான். ஆனாலும் அவர்கள் தலைவர்கள். ஆனால் இதை விஜை அழகாக கையாண்டு இருக்கலாம். இணைந்து வாழ முடியாது என தெரிந்ததும்… தனுஷ்-ஐஸ்வர்யா, ஜீவிபி- சைந்தவி ஜோடிகள் போல் இணக்கமாக பிரிந்திருக்கலாம். இப்படி கோர்ட் படியேறி… நடிகையுடன் உறவில் இருந்தார்… என்னை மனதளவில் டார்ச்சர் செய்தார்… புறக்கணித்தார்… நிதியை முடக்கினார்… என்றெல்லாம் குற்றம்சாட்ட படாமல். அதுவும் அரசியலுக்கு வரும் எண்ணம் இருந்தால்…இதை வரமுதலே வெட்டி முடித்திருக்க வேண்டும். வளர்ந்த பெண் பிள்ளை வேறு…. சரியான அடி முட்டாளாக இருக்கிறார். எஸ் ஏ சி மட்டும் இல்லை என்றால் - ஆளை எப்பவோ காக்கா தூக்கி போயிருக்கும் போல😂. 😂 என்ன மொட்டையா திரிசா… அப்படி கூப்பிட நீங்க என்ன விஜையா? புரட்சி தலைவி, இதயதெய்வம், அம்மா… அவ்வளவுதான். பெயர் எல்லாம் சொல்லப்படாது😂 போராட்டத்தை தலைமை ஏற்க வட்டுகோட்டை விரைகிறார் சுமந்திரன்!😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி கிளென் பிலிப்ஸின் வேகமான 39 (28 பந்துகள்), டிம் செய்ஃபேர்ட்டின் விரைவான 35 (25 பந்துகள்), பின் அலெனின் அதிரடியான 29 (19 ) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியை நோக்கி போயிருந்தபோதும் டொம் பண்டனின் வேகமான 33 (24 பந்துகள்), வில் ஜக்ஸ் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 32 (18 பந்துகள்), இறுதி ஓவர்களில் றெஹான் அஹ்மட் ஆட்டம் இழக்காமல் புயல்வேகத்தில் எடுத்த 19 (07 பந்துகள்) ஓட்டங்களுடன் 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. அத்தோடு சுப்பர் 8 சுற்றில் விளையாடாத ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடையாது!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நானும் ரெகான் இப்பிடி காளி ஆடுவான் என்று எதிர்பார்க்கவில்லை. இங்கிலாந்து வழமை போல் தாங்களே தங்கள் மேல் மண் அள்ளிப் போட்டார்கள் என்று நினைத்தேன். பில் ஜாக்ஸ் தொடர்ந்து அசத்திக் கொண்டே இருக்கிறார். அந்தக் கடைசி நாலை அடித்துவிட்டு தோளை உலுப்பினார். என்னங்டா என்று தன் அணி வீரர்களைப் பார்த்து கேட்டது போல் இருந்தது.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அவங்கள் சும்மாவே தூக்கி, தூக்கி அடிப்பாங்கள்… இரும்பு நல்லா இளகின வாகில சிக்கி இருக்கு😂
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
தோழர் என்ன இருந்தாலும் சங்கீதா ஈழத்து பெண் . உண்மையில் நீதி கோரி போராட்டத்தை ஆரம்பிக்கதான் வேணும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ரேடியோ வர்ணனையில் கேட்டு கொண்டே கார் பார்க்கிங் நோக்கி போனேன். போகும் போது இங்கிலாந்து எப்படியும் தோக்கும், முடிவை கேட்கதேவையில்லை, பார்க் பண்ணி விட்டு இறங்கி போவோம் என நினைத்தேன்: ரெஹான் ஆஹ்மெட் உள்ளே வர, அவர் அண்மையில் இங்கிலாந்து வீரர்கள் தமாசாக தமக்குள் நடத்திய range hitting இல் வென்றவர் எண்டார்கள்.. அட இதுவும் ஒரு ரேஞ் ஹிட்டிங் போட்டி போலத்தானே வந்து நிக்கிது என நினைத்தபடி, காரில் இருந்து கேட்க ஆரம்பித்தேன். சொன்ன படியே அடித்து துவம்சம் பண்ணி விட்டார்கள் ரெஹானும், வில்லும். ரெஹென் ஆமெட் இரெட்டை குடியுரிமை எடுத்தால் சாத்தியம்😂
- Today
-
தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!
நான் 48 பேரை சுட்டு கொலை செய்துள்ளேன் : அக்குரேகொட துப்பாக்கிதாரி அதிர்ச்சி வாக்குமூலம் அக்குரேகொடவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட இரட்டைக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கித்தாரி தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேகநபரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், தென் மாகாணம் உட்பட பல பகுதிகளில் சுமார் 48 பேரை சுட்டு கொலை செய்தது தான் என்றும் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கிடையில், மாலபே பகுதியில் ரூ. 200,000 பணத்தைப் பெற்றுக்கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அன்றைய தினம் மொனராகலைக்கு தப்பிச்சென்றதும் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் அவர் அதிவேக நெடுஞ்சாலை வழியாக மத்தளையை அடைந்ததாகவும் கூறியிருந்தார். மொனராகலையின் நக்கல பகுதிக்கு சென்ற பிறகு, அழைத்துச்செல்ல அங்கொட லொக்கா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் நண்பரான கெலும் என்ற மற்றொரு சந்தேகநபர் வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இதன்பின்னர், துபாயிலிருந்து ஒருவர் கெலுமை அழைத்து, "ஒருவர் வருகிறார்... அவரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்" என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். கரந்தெனிய சுத்தா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கொலைகள் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. "ஐயா... சுத்தா என் கடவுள்.. நான் சுத்தாவுக்காக எதையும் செய்வேன்.. நான் பணத்திற்காக இதைச் செய்யவில்லை..", என்று சந்தேகநபர் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடமிருந்து மேலும் வாக்குமூலங்கள் எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். Ceylon Focus News
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் இப்ப என்ன செய்யப் போகிறது. இலங்கையை ஒரு 120 க்க அமத்தி, ஒரு 12 பந்துப் பரிமாற்றத்தில துரத்திப் பிடிக்க வேணும். இது நடக்கும் என்டுறியல்????
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
யாழ். வட்டுக்கோட்டையில் விஜய்க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! இளைய தளபதி விஜயக்கு எதிராக எதிர்வரும் 2026.02.29 அன்று யாழ். வட்டுக்கோட்டையில் மாபெரும் கண்டன நிழல் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தான் கண்டுபிடித்த பிறகும் விஜய் அந்த உறவை கைவிடவில்லை என சங்கீதா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சங்கீதாவின் பிறந்த ஊரான யாழ். வட்டுக்கோட்டை பகுதி மக்கள் இணைந்து இந்த நிழல் ஆர்ப்பாட்டத்தை 2026.02.29 அன்று முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். இது விஜயின் அரசியலுக்கு மிகவும் பாதகமான ஒரு விடயமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. (யாவும் கற்பனையே😏) கஜி ரிப்போர்ட்
-
ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலினை சந்தித்த பின் திமுகவில் இணைவது பற்றி கூறியது என்ன?
- அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்...
இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு வழக்கில் முன்னாள் அரசு அதிகாரி கைது ஏன்? பட மூலாதாரம்,ITJP 27 பிப்ரவரி 2026, 11:23 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலே, 72 மணிநேரம் தடுத்து வைக்கப்படும் உத்தரவு மூலம் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் உதவி போலீஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார். அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பில், 72 மணிநேர விசாரணைக்கு பின்னர் எடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ''கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்யும் அதிகாரம் பொலிஸ் அத்தியட்சர் ஒருவருக்கு காணப்படுகின்றது, அதன்பின்னர் தேவையேற்படும் பட்சத்தில் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தும் நீதிமன்ற அதிமதியை பெற்று 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த முடியும். அப்படியில்லை என்றால், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவரை விடுவிக்க முடியும்'' என போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி இலங்கையின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அதிகளவில் நடமாடும் முன்னணி ஹோட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. 'தெளிவான சாட்சியத்தின் அடிப்படையில் சந்தேக நபர் கைது' அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் ஊடக சந்திப்பு கடந்த 25-ஆம் தேதி நடைபெற்றது. ''காலை 7.50 மணிக்கு பேலியகொடை போலீஸ் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் வைத்து அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைதுசெய்யப்பட்டார்'' என போலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார். ''ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் பெறுபேறுகளுக்கு அமைய வெளியான தெளிவான சாட்சியங்களின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்' எனவும் அவர் கூறுகின்றார். அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் சஞ்ஜீவ மெதவத்தவிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பியிருந்தார். அவர் கைது செய்யப்பட்டமைக்கான முழுமையான காரணத்தை வெளியிட முடியாது எனவும், விசாரணைகளின் பின்னரே அதனை கூறும் இயலுமை உள்ளது எனவும் சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் பதிலளித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2019 ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் நினைவாக 2022-ல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, மக்கள் பதாகைகளை ஏந்தி நின்றனர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியா? இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே பெயர் கூறப்பட்டுள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட்டமையானது ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாகவா என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பியிருந்தனர். ''இவரிடம் நடத்தப்படும் விசாரணைகளின் அடிப்படையிலேயே அவரா பிரதான சூத்திரதாரி அல்லது வேறு யாரும் இருக்கின்றார்களா என்பது வெளியாகும்'' என சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் சஞ்ஜீவ மெதவத்த தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சுரேஷ் சலே தடுத்து வைக்கப்படுவாரா? பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக சரத்துக்களுக்கு அமைய அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதாக பிரதி போலீஸ் மாஅதிபர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். ''சட்டப்படி கைது செய்யப்படும் பட்சத்தில் 3 நாட்கள் தடுத்து வைக்க முடியும். போலீஸ் அத்தியட்சகர் ஒருவரினாலேயே கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்'' ''இந்த காலப் பகுதியில் வெளியாகும் சாட்சியங்களின் அடிப்படையில் மேலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய தேவை ஏற்படுமாயின், சட்டத்திலுள்ள சரத்துக்களுக்கு அமைய தடுத்து வைத்து விசாரணை நடத்தும் உத்தரவை பெற்றுக்கொள்ள வேண்டும்'' என அவர் தெளிவுப்படுத்தினார். விசாரணைகள் தொடர்பில் பொதுமக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என பிரதி போலீஸ் மாஅதிபர் நம்பிக்கையை வெளியிட்டார். அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமைக்கான காரணம் மற்றும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து பல்வேறு வகையில் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பிய போதிலும் அவர் கைது செய்யப்பட்டமையை தவிர வேறு எந்தவித தகவல்களையும் உயர் போலீஸ் அதிகாரிகள் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடவில்லை. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 260 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 45 பேர் வெளிநாட்டவர்கள் என்பதுடன், தாக்குதலில் 500ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். சட்டத்தரணி அலி சப்ரி கண்டனம் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நடு வீதியில் வைத்து கைது செய்யப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக சட்டத்தரணி அலி சப்ரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 25ம் தேதி தெரிவித்துள்ளார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தான் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் முன்ஜாமீன் கோரி ராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவின் உறுப்பினரான கெலும் மத்துமகேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளின் போதே சட்டத்தரணி இதனைக் குறிப்பிட்டிருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ரோஹன்ன அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழாம் முன்னிலையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டன. அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பாரிய சேவையாற்றிய ஒருவர் எனவும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான தமிழ் செல்வத்தை அழிப்பதற்காக அவர் முன்னின்று செயற்பட்ட ஒருவர் எனவும் சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலி அமைப்பின் மற்றுமொரு தலைவரான குமரன் பத்மநாதனை மலேசியாவிற்கு சென்று இந்த நாட்டிற்கு அழைத்து வந்தது சுரேஷ் சலேதான் என கூறிய சட்டத்தரணி, தேசிய பாதுகாப்புடன் விளையாடுவது தகுதியற்றது எனவும் அவர் தெரிவித்தார். வவுணத்தீவு பகுதியில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை தவறான வழியில் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தனது தரப்பிற்கு எதிரான குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அவ்வாறான விசாரணைகள் நடத்துவதற்கு எந்தவித சாட்சியங்களும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் முன்னெடுக்கப்படும் இந்த விசாரணைகளின் ஊடாக தனது தரப்பிற்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் கூறுகின்றார். அசாத் மௌலானா என்ற அரசியல் புகலிட கோரிக்கையாளரினால் பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கப்பட்ட நேர்காணலை அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதனூடாக பிரதிவாதிகளுக்கு எந்தவித நியாயமும் கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவு மாத்திரமன்றி, இலங்கை புலனாய்வு பிரிவும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை தவிர்த்துக்கொள்ள போலீஸார் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தவறியதை அடுத்தே இந்த மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். சட்டத்தரணி அலி சப்ரியின் அன்றைய வாதங்கள் முடிவுற்ற நிலையில், மேலதிக வாதம் எதிர்வரும் மார்ச் மாதம் 24ம் தேதி வரை நீதிபதிகள் குழாமினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. செனல் 4 சர்ச்சைக்குள்ளான வீடியோ ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ''அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக 269 பேர் கொலை செய்யப்பட்டார்களா?'' என கேள்வி எழுப்பி 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் செனல் 4 தொலைக்காட்சியினால் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பில் செய்தி வெளியாகியிருந்தது. சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) முன்னாள் ஊடக செயலாளராக கடமையாற்றிய ஹன்சீர் அசாத் மௌலானா, இந்த வீடியோவின் பிரதான சாட்சியாளராக இருந்தார். இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் பயங்கரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னர் ராணுவ புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், தாக்குதலை நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாத குழுவுடன் ரகசிய சந்திப்பு இடம்பெற்றதா என இந்த வீடியோவில் கேள்வி எழுப்பப்பட்டது. இஸ்லாமிய அடிப்படைவாத குழுவிற்கும், சுரேஷ் சலேவிற்கும் இடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துக் கொடுக்குமாறு 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் விளக்கமறியலில் இருந்த பிள்ளையான் தனக்கு ஆலோசனை வழங்கியதாக அசாத் மௌலானா செனல் 4 தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டிருந்தார். ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் அப்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையானினால் தனக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் ஷைனி மௌலவி உள்ளிட்ட சிலருக்கு பிணை வழங்கப்பட்டதாகவும், அந்த குழுவிற்கும் சுரேஷ் சலேவிற்கும் இடையில் சந்திப்பொன்று ஏற்பாடு செய்துக்கொடுக்கப்பட்டதாகவும் அசாத் மௌலானா குறிப்பிட்டிருந்தார் புத்தளம் - கரடிபுவல் என்ற பிரதேசத்திற்கு அந்த குழுவை வருகைத் தருமாறு தான் அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தான் அந்த இடத்திற்கு செல்லும் சந்தர்ப்பத்தில் சுரேஷ் சலே வருகைத் தந்திருந்ததாகவும், அதன்பின்னர் வெள்ளை நிற வேனில் சயின் மௌலவி மற்றும் அவரது சகோதரரான சஹாரான் உள்ளிட்ட 6 பேர் வருகைத் தந்ததாகவும் அவர் கூறினார். இந்த கலந்துரையாடல் மிக நீண்ட நேரம் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். ''இலங்கையில் பாதுகாப்பற்ற நிலைமையொன்றை ஏற்படுத்தும் தேவை ராஜபக்ஷக்களுக்கு உள்ளது. அதுவே கோட்டாபயவிற்கு ஜனாதிபதியாகுவதற்கு உள்ள ஒரே வழியாகும்.'' என சுரேஷ் சலே கலந்துரையாடலின் பின்னர் தன்னிடம் கூறியதாகவும் செனல் 4 தொலைக்காட்சிக்கு அசாத் மௌலானா கூறினார். சுரேஷ் சலேவை வழிநடத்தியது கோட்டாபய ராஜபக்சதான் என இந்த வீடியோவில் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாத அரச அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கொழும்பு புனித அந்தோணியார் தேவாலயத்தில், ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, அதில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நினைவுப் பலகை அமைக்கப்பட்டுள்ளது குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் செனல் 4 வீடியோ தயாரிக்கப்பட்டு வெளியிடுவதற்கு முன்னர் அந்த தயாரிப்பு நிறுவனம் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி கடிதமொன்றின் ஊடாக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவிடம் 4 குற்றச்சாட்டுக்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக பதில் கோரியிருந்தனர். இந்த கடிதத்திற்கு பதில் வழங்கிய சுரேஷ் சலே, இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக கூறப்படும் காலப் பகுதியில் தான் நாட்டை விட்டு வெளியேறியிருந்ததாகவும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த காலப் பகுதியில் தான் மலேசியா உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றியதாகவும், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் இறுதி வரை தான் இந்தியாவின் பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சி செயலமர்வில் கலந்துக்கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் மலேசியா மற்றும் இந்தியா அதிகாரிகளிடம் ஆராய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் குண்டு வெடிப்பு 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி இலங்கையின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அதிகளவில் நடமாடும் முன்னணி ஹோட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 260 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 45 பேர் வெளிநாட்டவர்கள் என்பதுடன், தாக்குதலில் 500ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். சுரேஷ் சலே என்பவர் யார்? மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே 1987ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி இலங்கை ராணுவத்தில் இணைந்துக்கொண்டார். அதன்பின்னர் பல மொழி அறிவுகளை கற்றுக்கொண்டமையை அடுத்து, 1993ம் ஆண்டு ராணுவ புலனாய்வு பிரிவிற்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாரிஸ் நகரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் சுரேஷ் சலே 2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை முதல் செயலாளராக கடமையாற்றியிருந்தார். அவர் மீண்டும் நட்டை வந்தடைந்ததன் பின்னர் 2012ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்படும் வரை, பாதுகாப்பு அமைச்சின் வெளிநாட்டு புலனாய்வு தொடர்பாளராக கடமையாற்றியிருந்தார். அதன்பின்னர் 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மலேசியாவின் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் ஆலோசகரான கடமையாற்றியிருந்தார். 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நம்பர் மாதம் வரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் தேசிய பாதுகாப்பு பாடத்திட்டமொன்றை தொடர்ந்ததாக அவரின் சட்டத்தரணி பசுன் வீரசிங்க, செனல் 4 நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 2019ம் ஆணடு டிசம்பர் மாதம் முதல் அவர் இலங்கை அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார். 2024ம் ஆண்டு அவர் அரச புலனாய்வு பிரிவின் தலைமை பொறுப்பிலிருந்து விலகியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு வழக்கில் முன்னாள் அரசு அதிகாரி கைது ஏன்?- கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா
கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா: குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயணம் Published By: Vishnu 27 Feb, 2026 | 09:18 PM கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழாவிற்கு செல்வதற்காக, வெள்ளிக்கிழமை (27) குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 4200 மேற்பட்ட பக்தர்கள் கச்சதீவு நோக்கி பயணாமாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுடன், மொத்தமாக இலங்கையிலிருந்து 5000 மேற்பட்ட பக்தர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை இந்தியாவிலிருந்து 3992 பக்தர்கள் கச்சதீவுக்கு வந்தடைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், குறிகட்டுவான் இறங்குதுறையில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பக்தர்களுக்கான பயண ஒழுங்குகளை சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்து ஒருங்கிணைப்பினை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், வேலணை பிரதேச செயலாளர் த. அகிலன் மற்றும் மாவட்டச் செயலக மற்றும் வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கடற்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239755- பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்: 2026 இல் மேம்படுத்தப்பட்ட ‘‘Tell IGP’ சேவை!
பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்: 2026 இல் மேம்படுத்தப்பட்ட ‘‘Tell IGP’ சேவை! Published By: Digital Desk 1 27 Feb, 2026 | 04:13 PM நாட்டில் குற்றச்செயல்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பொலிஸ் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட “Tell IGP” (பொலிஸ் மா அதிபருக்குக் கூறுங்கள்) எனும் இணையவழி முறைப்பாட்டுச் சேவை 2026ஆம் ஆண்டிலும் புதிய மேம்படுத்தல்களுடன் செயற்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக, பொதுமக்கள் தமக்கு ஏற்படும் அசௌகரியங்கள் அல்லது அவசர சம்பவங்கள் குறித்து நேரடியாக பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முடியும். இச்சேவையின் ஊடாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம். இதனூடாக, திட்டமிடப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்கள், ஊழல் மோசடிகள், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள் குறித்துத் தெரிவிக்கலாம். இதன்மூலம் பதிவு செய்யப்படும் முறைப்பாடுகள் அந்தந்தப் பிரிவுகளுக்குப் பொறுப்பான அத்தியட்சகர்கள் ஊடாக உரிய பொலிஸ் நிலையங்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்படும். அத்துடன், இங்கு வழங்கப்பட்ட தீர்வுகளில் திருப்தி இல்லையெனில், மீண்டும் இணையவழியில் பொலிஸ் மா அதிபருக்குத் தெரியப்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், முறைப்பாடுகளை https://telligp.police.lk இணையத்தளத்தினுடாகவும் telligp@police.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவும், தெரிவிக்கமுடியும். ஊழலற்ற மற்றும் பாதுகாப்பான சமூகத்தைக் கட்டியெழுப்ப இந்தச் சேவையைப் பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/239728- பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை சித்திரை புத்தாண்டுக்குள் விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை ; தனியார் காணிக்குள் தற்காலிக பாதை அமைக்க இராணுவம் முயற்சி
வடக்கில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பழமையான அம்மன் கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு கோரிக்கை! 27 Feb, 2026 | 01:20 PM வடக்கில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்ட ஒரு கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு உள்ளூர் தமிழ் சைவர்கள் உரிய அதிகாரிகளிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம், வலிகாமம், ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இலங்கை இராணுவம், தமிழர்களின் தனியார் காணியை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கிலேயே மாற்றுப் பாதையை விரிவுபடுத்தும் பணியை ஆரம்பித்துள்ளதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர். தனியார் காணியின் ஊடாக ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்ல இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீதியை அகலப்படுத்தும் முயற்சி, உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பினையடுத்து இராணுவத்தால் கைவிடப்பட்டுள்ளது. இராஜேஸ்வரி அம்மன் கோயிலும் அதன் சுற்றுப்புறப் பகுதியும் ஜூன் 15, 1990 அன்று உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. மே 2002 முதல் விசேட அனுமதியின் பின்னர், ஒரு சிலருக்கு மாத்திரம் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. போர் தீவிரமடைந்ததால், ஜூன் 2006இல் அந்த அனுமதியும் நிறுத்தப்பட்டதோடு, நல்லாட்சி அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன், ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக உள்ளூர்வாசிகளுடன் கோயிலுக்குச் சென்றார். பெப்ரவரி 3, 2015, மகா சிவராத்திரி முதல் இராணுவ அனுமதி பெற்றவர்கள் மாத்திரமே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாக, ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய நிர்வாகக் குழு கூறுகிறது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், ஜூன் 24, 2023 அன்று வடக்கில் 234 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதை ஒட்டி, சைவர்கள் மீண்டும் ஆலயத்தில் வழிபட அனுமதிக்கப்பட்டனர். எனினும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என்ற நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட, விவசாய நிலங்கள் உட்பட தமிழ் மக்களின் தனியார் காணிகளில் ஆலயத்திற்குச் செல்வதற்கான தற்காலிக பாதை அமைக்கப்பட்டதாக பிரதேசத்தின் குடிமக்கள் சமூக அமைப்புப் பிரதிநிதிகள் வலியுறுத்துகின்றனர். கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையையும் அதைச் சுற்றியுள்ள பல ஏக்கர் நிலத்தையும் இராணுவம் இன்னும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், தமிழ் மக்களின் தனியார் நிலங்கள் வழியாக கோயிலுக்குச் செல்லும் தற்காலிக பாதையை நிரந்தர பாதையாக மாற்றும் நோக்கத்துடன் பெப்ரவரி 16ஆம் திகதி பணியை ஆரம்பித்த இராணுவம், உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பையடுத்து கைவிட்டதாக, வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவிக்கின்றார். இராணுவத்தின் முயற்சிகள் குறித்து தெல்லிப்பழை பிரதேச செயலகம் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதேச சபைத் தலைவர், கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதைக்கு அருகில் தற்போது இராணுவ முகாம் இல்லாவிட்டாலும், இராணுவ வாகன பழுதுபார்க்கும் நிலையம் ஒன்று இன்னும் அந்த இடத்தில் காணப்படுவதாகவும் வலியுறுத்துகிறார். வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தை உடனடியாக அகற்றுமாறும், இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பழைய வீதியை பக்தர்களுக்காகத் திறக்குமாறும், கோயிலுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குமாறும் பிரதேசத்தின் தமிழ் சைவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் மக்களின் விவசாய நிலங்கள் வழியாக இராணுவத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக வீதிக்கு பதிலாக, கோயிலுக்குச் செல்லும் பழைய வீதியை விடுவிக்கவேண்டும் என வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சுப்பிரமணியம் ரொசாந்த்குமார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "மக்களின் காணியில் பாதி இராணுவத்தின் கீழ் உள்ளது. அவர்கள் இந்த விவசாய காணிகள் வழியாக ஒரு வீதியை அமைத்து, மக்கள் அதை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கின்றனர். இது கோவிலுக்குச் செல்லும் பழைய வீதி விடுவிக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சியாகும். அவர்கள் வீதியை மாற்றுகிறார்கள். அவர்கள் இந்த தற்காலிக வீதியை அமைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், மக்கள் பழைய வீதியை கோருகின்றனர். பழைய வீதியை நிச்சயமாக விடுவிக்கவேண்டும்" என்றார். இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீதியால் சில தனியார் காணிகள் பிரிக்கப்பட்டுள்ளதாக பொது பிரதிநிதிகள் கூறுகின்றனர். மேலும், தற்காலிக வீதியை நிரந்தரமாக மாற்றினால், மக்கள் தமது காணி மீதான உரிமையை இழக்க நேரிடும் என அவர்கள் அஞ்சுகின்றனர். https://www.virakesari.lk/article/239717- ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !
'நேரடிப் போர்': ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் - நிலவரம் என்ன? பட மூலாதாரம்,Pakistani Security Forces handout via Reuters 27 பிப்ரவரி 2026, 04:27 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் ஆப்கன் தாலிபன்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் 'நேரடிப் போர்' பிரகடனம் செய்துள்ளார். "இனியும் பொறுக்க முடியாது, அடுத்து இது நேரடிப் போராக இருக்கும்" என்று, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆப்கன் தாலிபன்களை எச்சரித்துள்ளார். சமூக ஊடகத் தளமான எக்ஸ்-இல் வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஆப்கன் தாலிபன்கள் உலகம் முழுவதிலுமிருந்து பயங்கரவாதிகளை ஆப்கானிஸ்தானில் திரட்டுவதாக" அவர் குற்றம் சாட்டினார். மேலும் காபூலில் உள்ள இடைக்கால அரசாங்கம் "பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதாக" அவர் கூறியதாக பிபிசி உருது சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், கந்தஹார் மற்றும் ஹெல்மாண்டில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது தாங்கள் "பதிலடித் தாக்குதல்களை" நடத்தியதாக சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார். தற்போது ,ஜபிஹுல்லா முஜாஹித்தின் எக்ஸ் கணக்கிலிருந்து அந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஆப்கன் தாலிபன்கள் "தங்கள் மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகளையும், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கும் உரிமைகளையும் மறுப்பதாக" பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குற்றம் சாட்டினார். நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை என்றும், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்தார் என பிபிசி உருது செய்தி கூறியுள்ளது. பட மூலாதாரம்,Getty Images பிபிசி உருது சேவை செய்தியின்படி, தங்களது ராணுவ நடவடிக்கைகளில் இதுவரை 133 ஆப்கன் தாலிபன்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அதாவுல்லா தரார் தனது எக்ஸ் பதிவில், ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல், பக்திகா மற்றும் கந்தஹாரில் உள்ள ஆப்கன் தாலிபன் பாதுகாப்பு நிலைகளை பாகிஸ்தான் குறிவைத்துள்ளதாகத் தெரிவித்தார். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளில் இரண்டு கார்ப்ஸ் தலைமையகங்கள், இரண்டு ஆயுதக் கிடங்குகள், ஒரு தளவாடக் கிடங்கு, மூன்று பட்டாலியன் தலைமையகங்கள், இரண்டு செக்டார் தலைமையகங்கள், 80-க்கும் மேற்பட்ட டாங்கிகள் ஆகியவை அழிக்கப்பட்டதாக அவர் கூறினார். பிபிசியால் இந்தத் தகவல்களைச் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. படக்குறிப்பு,பாகிஸ்தான் ராணுவ பீரங்கி இருப்பினும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாக அமைச்சர் அதாவுல்லா தரார் கூறுகிறார். ஏஎஃப்பி (AFP) செய்தி முகமையின்படி, இன்று (பிப்ரவரி 27) அதிகாலையில் ஆப்கன் தலைநகர் காபூலில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. அதிகாலை 1:50 மணியளவில் நகரம் முழுவதும் போர் விமானங்களின் சத்தத்துடன் வெடிப்புச் சத்தங்களும் கேட்டதாகவும், அதிகாலை 2:30 மணி வரை மத்திய காபூலில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காபூல் மற்றும் கந்தஹார் மீதான இந்தத் தாக்குதல்கள், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே சில காலமாக நடந்து வரும் தொடர் மோதல்களின் சமீபத்திய பகுதியாகும். இரண்டு நாடுகளும் அக்டோபர் 2025-இல் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பின்னரும் இந்த நிலை நீடிக்கிறது. கடந்த வாரம், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் இரவு முழுவதும் நடத்திய பல வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாகத் தாலிபன்கள் தெரிவித்தனர். பாகிஸ்தானில் சமீபகாலமாக நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள ஏழு பயங்கரவாத முகாம்கள் மற்றும் மறைவிடங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான் கூறியிருந்தது. மறுபுறம், தாலிபன் நிர்வாகம் பொது மக்களின் வீடுகள் மற்றும் ஒரு மதப் பள்ளி (madrasa) இலக்கு வைக்கப்பட்டதாகவும், பலியானவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருப்பதாகவும் கூறியது. பட மூலாதாரம்,Getty Images இருதரப்பு குற்றச்சாட்டுகள் இரு தரப்பு ராணுவத்தினருக்கும் இடையிலான முந்தைய மோதல்களைப் போலவே, இந்த முறையும் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் முதலில் தாக்கியதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். "தூண்டுதல் இல்லாத ஆப்கன் தாக்குதல்களுக்கு" பதிலடியாக காபூல் மற்றும் கந்தஹார் உள்ளிட்ட நகரங்களில் "எதிர் தாக்குதல்களை" நடத்தியதாகப் பாகிஸ்தான் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். முன்னதாக, இந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பதிலடியாக "பெரிய அளவிலான" நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக ஆப்கன் தாலிபன்கள் தெரிவித்தனர். தாலிபன் ராணுவ செய்தித் தொடர்பாளர் வாஹிதுல்லா முகமதி, இந்த "எதிர் நடவடிக்கை" வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் தொடங்கப்பட்டதாகக் கூறினார். தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், இந்தத் தாக்குதலில் "பல" பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறினார் - ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தக் கூற்றை மறுத்துள்ளனர். பகிரப்பட்ட எல்லையில் ராணுவ நிலைகளுக்கு எதிராக ஆப்கன் தாலிபன்கள் நடவடிக்கை எடுத்ததில் வியாழக்கிழமை இரவு தங்களது வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது. முன்னதாக இந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பதிலடியாக "பெரிய அளவிலான" நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக ஆப்கான் தலிபான்கள் தெரிவித்தனர். பயங்கரவாத முகாம்கள் மற்றும் மறைவிடங்களை இலக்கு வைத்ததாக பாகிஸ்தான் கூறியது. புதிய மோதலின் தொடக்கம் முன்னாள் ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், காபூல், கந்தஹார் மற்றும் பக்திகாவில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்துள்ளார். "ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நிலத்தை முழு ஒற்றுமையுடன் பாதுகாப்பார்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்கு தைரியத்துடன் பதிலடி கொடுப்பார்கள்" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் தாலிபன்களுக்கு இடையிலான தற்போதைய மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் 7-8 தேதிகளில் தொடங்கியது. அப்போது ஒராக்சாயில் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் செயல்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியது. அக்டோபர் 8 அன்றே, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் நாடாளுமன்றத்தில் பேசுகையில், "அரசாங்கம் மற்றும் ராணுவத்தின் பொறுமை எல்லை கடந்துவிட்டது என்றும், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் இனி அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்றும் கூறினார். பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கத்திடம் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தானுக்கு (TTP) எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரி வருகிறது, மேலும் இந்த கோரிக்கை சமீபகாலமாக தீவிரமடைந்துள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இரு தரப்புக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது, இந்தப் பதற்றத்தைக் குறைக்க அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் நடத்தப்பட்ட போதிலும், மோதல் முடிவுக்கு வரவில்லை. துரந்த் கோடு உண்மையில், 133 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட துரந்த் கோடு தான் இன்னும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பதற்றத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. பிரிட்டிஷ் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளரான சர் ஹென்றி மோர்டிமர் துரந்த் மற்றும் ஆப்கானிஸ்தானின் அமீர் அப்துர் ரஹ்மான் கான் ஆகியோருக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டது. இந்த கோட்டின் மேற்கு முனை இரானிய எல்லையையும், கிழக்கு முனை சீன எல்லையையும் தொடுகிறது. ரஷ்யாவின் தெற்கு நோக்கிய முன்னேற்றத்தைத் தடுக்க, பிரிட்டன் 1839-இல் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது, அதில் பிரிட்டிஷ் படைகள் தோற்கடிக்கப்பட்டன. பின்னர் 1849-இல் பஞ்சாபை இணைத்த பிரிட்டன், சிந்து நதிக்கு மேற்கே உள்ள பகுதிகளை ஆக்கிரமித்தது. இந்தப் பகுதியில் ஏராளமான பஷ்தூன் (Pashtun) பழங்குடியினர் வாழ்ந்தனர். அவர்களின் நிர்வாகம் பிரிட்டிஷாருக்குப் பிரச்னையாக இருந்தது. ஒரு காலத்தில், 'துரந்த் கோடு' தொடர்பான ஒப்பந்தம் பல ஆப்கான் ஆட்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்டது. காலப்போக்கில், இந்த ஒப்பந்தம் சர்ச்சைக்குரியதாக மாறியது மற்றும் ஆப்கன் ஆட்சியாளர்கள் இதை பாகிஸ்தானுடனான எல்லையாக அங்கீகரிக்க மறுத்தனர். 1893-இல், வடமேற்குப் பகுதிகளின் மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்த, 2640 கிமீ நீளமுள்ள எல்லை ஒப்பந்தத்தை ஆப்கானிஸ்தானுடன் பிரிட்டிஷ் அரசு செய்துகொண்டது. ஒரு பக்கம் ஆப்கானிஸ்தானின் 12 மாகாணங்களும், மறுபக்கம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பலுசிஸ்தான் மற்றும் கில்கித்-பல்டிஸ்தான் பகுதிகளும் உள்ளன. இருபுறமும் உள்ள மக்கள் கலாசார ரீதியாகவும், மத ரீதியாகவும் மிகவும் நெருக்கமானவர்கள். ஆப்கானிஸ்தானில் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும் துரந்த் கோட்டைத் தனது பிராந்திய ஒருமைப்பாட்டில் தலையிடுவதாகக் கருதி, அதை அங்கீகரிக்க மறுக்கிறது. ஆனால், பாகிஸ்தான் தனது கூட்டாட்சி அமைப்பைக் குலைக்கக்கூடிய பஷ்தூன் தேசியவாதத்தை ஒடுக்கவும், பிரிவினையைத் தடுக்கவும் இக்கோட்டை அங்கீகரிக்கிறது. அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகள் இதை ஒரு நிஜமான (de-facto) எல்லையாக அங்கீகரிக்கின்றன. ஆப்கானிஸ்தான் ஆரம்பத்தில் அழுத்தத்தின் கீழ் இதை ஏற்றுக்கொண்டாலும், ஆப்கன் குடிமக்கள் இதைத் தங்களது பஷ்தூன் நிலத்தின் தன்னிச்சையான பிரிவினையாகக் கருதி இன்றும் போராடி வருகின்றனர். 1894 மற்றும் 1896-க்கு இடையில் இக்கோடு உருவாக்கப்பட்டது, ஆனால் பல கடினமான பகுதிகளில் இது இன்றும் தெளிவற்றதாகவே உள்ளது. பாகிஸ்தான் கூறியது என்ன? பட மூலாதாரம்,FAYEZ NURELDINE/AFP via Getty படக்குறிப்பு,இதுவரை 133 ஆப்கானிஸ்தான் தாலிபன் உறுப்பினர்கள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஷாபாஸ் ஷெரீப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார் (கோப்பு புகைப்படம்) பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் 27 ராணுவ நிலைகளை அழித்துள்ளதாகவும், ஒன்பதைக் கைப்பற்றியுள்ளதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் செய்தித் தொடர்பாளர் முஷாரப் ஜைதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் 80-க்கும் மேற்பட்ட டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை பாகிஸ்தான் ராணுவம் அழித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலை 3:45 மணி நிலவரப்படி முஷாரப் ஜைதி ஒரு புதிய தகவலை வழங்கினார். அவர் தனது எக்ஸ் தளத்தில், "ஆக்கிரமிப்புக்கு எதிராக பாகிஸ்தானின் உடனடி மற்றும் பயனுள்ள பதிலடி நடவடிக்கை நடைபெற்று வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுவரை ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் தரப்பில் 133 பேர் கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முஷாரப் ஜைதி கூறியுள்ளார். இதற்கிடையில், வியாழக்கிழமை இரவு 19 பாகிஸ்தான் ராணுவ நிலைகளையும் இரண்டு தளங்களையும் கைப்பற்றியதாக தாலிபன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த அமைச்சகத்தின்படி, மொத்தம் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த புள்ளிவிவரங்களைச் சுயாதீனமாக சரிபார்ப்பது கடினம். சமீபத்திய மோதல்களின் போது இரு தரப்பினருமே ஒருவருக்கொருவர் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறுகின்றனர். பதிவை நீக்கிய ஆப்கானிஸ்தான் தாலிபன் செய்தித் தொடர்பாளர் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,எக்ஸ் தள பதிவு ஜபிஹுல்லா முஜாஹித்தின் கணக்கிலிருந்து நீக்கப்பட்டது (கோப்பு படம்) ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், கந்தஹார் மற்றும் ஹெல்மாண்டில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது தாங்கள் "பதிலடித் தாக்குதல்களை" நடத்தியதாக சமூக ஊடகங்களில் தெரிவித்தார். தற்போது ,ஜபிஹுல்லா முஜாஹித்தின் எக்ஸ் கணக்கிலிருந்து அந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளது. பிபிசி உருது செய்தியின்படி, தாலிபன்களின் பாதுகாப்பு அமைச்சகம் முன்னதாகத் தங்களது தாக்குதல்கள் நள்ளிரவு 12:00 மணிக்கு நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தது. ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் இந்தப் புதிய தாக்குதல்கள் குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆப்கானிஸ்தான் தாலிபன்களுடனான பதற்றத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் பிரதமர் கூறியது என்ன? பட மூலாதாரம்,Sean Gallup/Getty படக்குறிப்பு,பாகிஸ்தான் ராணுவம் எந்தவொரு உள் மற்றும் வெளிப்புற சவாலையும் சமாளிக்கும் திறன் கொண்டது என்று ஷாபாஸ் ஷெரீப் கூறினார் (கோப்பு படம்) நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை என்றும், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்தார் என பிபிசி உருது செய்தி கூறியுள்ளது. "பாகிஸ்தான் எப்போதும் அமைதியையே ஊக்குவித்து வருகிறது, ஆனால் நாட்டின் ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யப்படாது. பாகிஸ்தான் ராணுவம் எந்தவொரு ஆக்கிரமிப்பையும் உறுதியாக எதிர்கொள்ளும்" என்று வியாழன்-வெள்ளி நள்ளிரவில் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , தனது அறிக்கையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களைக் கையாளும் திறன் பாகிஸ்தான் ராணுவத்திற்கு இருப்பதாக ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தாலிபன்களுக்கு இடையே எல்லை மோதல்கள் தொடர்கின்றன, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறுகின்றனர். இருப்பினும், இந்தக் கூற்றுக்களை சுயாதீனமாகச் சரிபார்ப்பது கடினம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp9m7x4l5n9o- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் - ஏப்ரல் 20 வழக்கு விசாரணை! 27 Feb, 2026 | 05:34 PM நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 24ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இந்த விவாகரத்து மனுவை ஏற்ற தமிழ்நாட்டின் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம், விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கினை குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றியது. இந்நிலையில், வருகிற ஏப்ரல் 20ஆம் திகதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்த வழக்கில் விஜய் நேரடியாக ஆஜராகவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த சங்கீதா விஜய்யை காதலித்து 1999ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். விஜய், சங்கீதா இருவருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சினிமாவில் வலம் வந்த விஜய் தற்போது அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து, தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பிரச்சார கூட்டங்களில் அதிகமாக பங்கேற்று வருகிறார். இந்த சூழலில் விஜய்யும் சங்கீதாவும் கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தற்போது சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239747- அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
சுரேஷ் சலேயின் கைது - அது வேறு! இது வேறு! அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயின் கடந்த கால சேவையை தற்போதைய கைதுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதுடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் முழுமையாக முடக்கப்பட்டன என்பதை நாம் அனைவரும் அறிவோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலும் கூட சி.ஐ.டி விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் மறைந்துள்ள உண்மைகளைக் கண்டறிந்து, குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே கத்தோலிக்க திருச்சபையின் நீண்டகாலக் கோரிக்கையாகும். தற்போது புதிய அரசு பதவியேற்ற பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த விசாரணைகள் சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் மீண்டும் ஒரு ஒழுங்குக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. சுமார் 16 மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த விரிவான விசாரணைகளின் ஒரு முடிவாகவே, தற்போது சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான போதுமான ஆதாரங்கள் அதிகாரிகளிடம் உள்ளதாக நாம் நம்புகிறோம். இந்தத் தாக்குதலுடன் அவருக்கு ஏதேனும் நேரடித் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விரிவாக விசாரணை செய்யப்பட வேண்டும். அவர் ஒரு இராணுவ அதிகாரி என்பதால் அவரைத் தொடக் கூடாது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் அவர் செய்த சேவைகள் எவையும் தற்போதைய குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவிக்காது. எனவே,சி.ஐ.டி சுயாதீனமாகச் செயல்பட நாம் இடமளிக்க வேண்டும். எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் இது ஒரு அரசியல் நாடகம் என்று கூறுகிறார்கள். ஆனால், மொட்டுக்கட்சி குறிப்பிட்டதா என நினைவில்லை மாறாக அனைத்து கட்சிகளும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்குவோம் என அவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்தனர்.ஆகவே அவர்கள் இப்போது அது நடக்கும்போது முட்டுக்கட்டை போடாமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஊடகங்கள் உண்மையை பக்கச்சார்பின்றி வழங்க வேண்டும்.நாம் விசாரணையின் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றோம் என நினைக்கின்றேன். இந்த விசாரணையின் முடிவைச் சிலர் தாங்கிக்கொள்ள முடியாமல் இருப்பதற்குக் காரணம், இதன் பின்னணியில் உள்ள அரசியல் கைகள் எங்கே அம்பலமாகிவிடுமோ என்ற அச்சமே ஆகும். சஹ்ரான் போன்றவர்களை வழிநடத்தியது யார்? விசாரணைகளை விடுதலை புலிகளின் பக்கம் திசைதிருப்ப முயன்றது யார்? போன்ற உண்மைகள் விரைவில் வெளிவரும். நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக இந்த உண்மைகள் கண்டறியப்படுவது மிக அவசியமாகும். இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் சுதந்திரமாக நடமாடுவது அச்சுறுத்தலை தோற்றுவிக்கும் விடயமாகும். என அவர் தெரிவித்தார். https://hirunews.lk/tm/449256/suresh-salehs-arrest-thats-different-this-is-different- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
6 பந்தில் 5 ஓட்டங்கள். ஏதாவது கடைசி நிமிட.... இதை எழுதி முடிக்க முதல் முடிச்சு விட்டாங்கள்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
England won. New Zealand 159/7 England (19.3/20 ov, T:160) 161/6- குப்பை கொட்ட நாயைப் பயன்படுத்திய உரிமையாளர் : இத்தாலியில் வினோதக் குற்றச்சாட்டு!
குப்பை கொட்ட நாயைப் பயன்படுத்திய உரிமையாளர் : இத்தாலியில் வினோதக் குற்றச்சாட்டு! Published By: Digital Desk 3 27 Feb, 2026 | 05:08 PM இத்தாலியின் சிசிலி மாகாணத்தில் உள்ள கட்டானியா நகரில், தனது வளர்ப்பு நாயைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக வீதியோரத்தில் குப்பைகளைக் கொட்டிய நபரொருவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கட்டானியாவின் சான் ஜோர்ஜியோ மாவட்டத்தில் உள்ள வீதி ஒன்றில், நாய் ஒன்று தனது வாயில் ஒரு குப்பை பையை கவ்விக்கொண்டு நிதானமாக நடந்து சென்று வீதியோரம் அந்தப் பையைப் போட்டுவிட்டுச் செல்வது அங்குள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. ஒரே நாய், தொடர்ந்து இரண்டு நாட்களாக இதேபோல் குப்பைகளைக் கொண்டு வந்து போடுவது காணொளியில் உறுதியாகியுள்ளது. குப்பை கொட்டுபவர்களைப் பிடிக்க கமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை அறிந்த அதன் உரிமையாளர், தான் சிக்காமல் இருக்க நாய்க்கு இதற்காகப் பிரத்யேகமாகப் பயிற்சி அளித்துள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர். "இந்தக் காட்சிகள் சந்தேகத்திற்கு இடமில்லாத ஆதாரங்களாக உள்ளன" என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாலியில் வீதிகளில் குப்பை கொட்டுவது சட்டப்படி குற்றமாகும். இந்தச் சம்பவம் குறித்து கட்டானியா நகராட்சி தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "புத்திசாலித்தனம் என்பது ஒருபோதும் நாகரீகமற்ற செயலுக்கு சாக்காகிவிட முடியாது. நகர்ப்புற ஒழுக்கத்தையும் சுற்றுப்புறச் சூழலையும் மதிப்பது அனைவரது கடமையாகும்" என பதிவிட்டுள்ளது. குப்பை கொட்ட நாயைப் பயன்படுத்திய உரிமையாளர் : இத்தாலியில் வினோதக் குற்றச்சாட்டு!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
12 பந்தில் 21. இது இப்பிடிவந்தமையும் என்று யார் நினைச்சா.- எப்ஸ்டீன் வழக்கில் ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை
எப்ஸ்டீன் வழக்கில் ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை Published By: Digital Desk 3 27 Feb, 2026 | 09:42 AM அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம், நேற்று வியாழக்கிழமை (26) நியூயோர்க்கின் சாப்பக்வாவில் உள்ள அரங்கம் ஒன்றில் வைத்து அமெரிக்க பாராளுமன்றக் குழுவினர் இரகசியமாக விசாரணை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 06 மணிநேரம் நீடித்த இந்த விசாரணையில், ஹிலாரி கிளிண்டன் தனக்கும் எப்ஸ்டீனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். "நான் அவரைச் சந்தித்ததே இல்லை; அவருடைய தீவுக்கோ, அலுவலகங்களுக்கோ அல்லது வீடுகளுக்கோ சென்றதில்லை" என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விசாரணை வெறும் "அரசியல் நாடகம்" எனவும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீன் இடையேயான நெருங்கிய தொடர்புகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே குடியரசுக் கட்சியினர் தன்னை விசாரணை செய்வதாக ஹிலாரி குற்றம் சாட்டியுள்ளார். விசாரணையின் போது, குடியரசுக் கட்சி எம்.பி. லாரன் போபர்ட் விதிமுறைகளை மீறி ஹிலாரி கிளிண்டனின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் கசியவிட்டதால் விசாரணை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. ஹிலாரியைத் தொடர்ந்து, அவரது கணவரும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளிண்டனிடம் இன்று வெள்ளிக்கிழமை (27) விசாரணை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்றக் குழுவினால் கட்டாயப்படுத்தி விசாரணைக்கு உட்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் இருந்தபோது 2019-ல் தற்கொலை செய்து கொண்டார். தற்போது 2026 இல் அமெரிக்க அரசு எப்ஸ்டீன் தொடர்பான மில்லியன் கணக்கான ஆவணங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பிலிருந்த முக்கியப் புள்ளிகளிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எப்ஸ்டீன் வழக்கில் ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை- இந்தியாவில் கைதான பொடி லெசி நாளை நாட்டுக்கு?
காலி குற்றத்தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்ட பொடி லெசி! Feb 27, 2026 - 11:54 AM இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க மேலதிக விசாரணைகளுக்காக காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இன்று காலை சந்தேக நபர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார். ரத்கம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மனோஜ் மெண்டிஸின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், கடந்த 2016 ஆம் ஆண்டு 'பொடி லெசி' முதன் முதலில் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் மனிதக் கொலைகள், துப்பாக்கிகளை தம் வசம் வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக்காவலிலும் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு பூசா சிறைச்சாலையில் இருந்தபோது, சிறைச்சாலை அதிகாரிகள் குழுவொன்றுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பாக இவருக்கு எதிராக காலி நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக 2018 ஆம் ஆண்டு இவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது. எனினும், கடந்த 2024 டிசம்பர் மாதம் வரை பிணை நிபந்தனைகளை நிறைவேற்றாததால் அவர் சிறையிலேயே இருந்தார். பின்னர், 2024 டிசம்பர் 9 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையான அவர், ஒரு இலட்சம் ரூபாய் பணப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளைச் செலுத்திவிட்டு வெளியேறினார். நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், பிணை நிபந்தனைகளை மீறி அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கடந்த 2025 ஜனவரி மாதம் மும்பையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு சட்ட உதவி வழங்குவதற்காக இலங்கையிலிருந்து இரு சட்டத்தரணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா சென்றிருந்தனர். இந்திய பாதுகாப்புப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், அவரை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்காக நேற்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரு அதிகாரிகள் இந்தியா சென்றிருந்ததுடன், அவர்களது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் இன்று அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார். https://adaderanatamil.lk/news/cmm4i57ml000b356pzyf51vm0 - அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்...
Important Information
By using this site, you agree to our Terms of Use.