Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 'பாய்ப் படகு' ஒரு நாகரிகம் அதனின் வர்த்தகம் மற்றும் வணிகத்தின் அடிப்படையில் தழைத்து ஓங்குகிறது. இதற்கு மெசொப்பொத்தேமியா விதி விலக்கல்ல. அவர்கள் தமக்கு அருகில் உள்ள நகரங்களுடனும் நாடுகளுடனும் வர்த்தக தொடர்புகள் ஏற்படுத்த விரும்பினார்கள். இது போக்கு வரத்துக்கான வீதி பாதைகள் அமைக்கப்பட முன்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே பொதுவாக நில பாதை மிகவும் கடினமாகவும் இடர்ப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்தன. இதனால் சுமேரியர்கள் வேறு ஒரு மாற்று போக்குவரத்து வசதியை பொருட்கள் மற்றும் மக்களை கொண்டு செல்ல கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. அது, அந்த மாற்று வழி, நீர் போக்கு வரத்தாக வடிவம் பெற்றது. அதாவது முதலாவது படகு சுமேரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஒரு மிக எளிமையான மரப் படகாக அமைந்தத…

  2. பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு,வழக்கத்துக்கு மாறாகச் செயல்படும் ஒரு விசை, விண்மீன் திரள்களை ஒன்றிடம் இருந்து ஒன்றைத் தள்ளிவிடுகின்றது. கட்டுரை தகவல் எழுதியவர், பல்லவ் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் இருண்ட ஆற்றல் (Dark Energy). இது மிகவும் மர்மமான ஆற்றல். இதுதான் இந்தப் பிரபஞ்சம் விரிவடையக் காரணமாக இருக்கிறது. விஞ்ஞானிகள் இதை டார்க் எனர்ஜி என்று அழைக்கின்றனர். நாம் இவ்வளவு ஆண்டுகளாக நேரம், விண்வெளி ஆகியவற்றின் மீது கொண்டிருந்த புரிதலின் கோணத்தையே இந்த ஆற்றல் மாற்ற வாய்ப்பு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வானியலாளர்கள் வானியலில் தாங்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தக் கூடிய கண்டுபிடிப்பை நெருங்கிக்கொண்டிருப்பதாக நினைக்கின்றனர். ஆனால், இ…

  3. கனடாவிற்கும் கிரீன்லாந்துக்கும் இடையே புதிய மைக்ரோ கண்டம் கண்டுபிடிப்பு! கனடாவிற்கும் கிரீன்லாந்துக்கும் இடையே புதிய மைக்ரோ கண்டமொன்று (Micro Continent) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவீடன் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்விலேயே கடலின் அடியில் புதைந்து கிடக்கும் Proto Microcontinent எனப்படும் இந்த புதிய நிலப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கிரீன்லாந்துக்கும் கனடாவின் பாபின் தீவிற்கும் இடையே உள்ள Davis Strait எனும் பகுதியில் இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலப்பகுதி சுமார் 19 முதல் 24 கிலோமீற்றர் வரை அகலமுள்ளதும், சாமான்ய நிலப்பரப்பை விட அடிக்கடி அடர்த்தியுடைய கொண்டதும…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், எல்லன் சாங் பதவி, பிபிசி உலக சேவை 18 ஏப்ரல் 2025, 01:12 GMT மாபெரும் மேதைகள்கூட சாதாரண மனிதர்கள்தான். சார்பியல் கோட்பாட்டின் தந்தையாக, ஈர்ப்பு விசை மற்றும் ஒளியை ஆராய்ந்து விளக்கிய இயற்பியலாளராக ஐன்ஸ்டீன் இருக்கலாம். ஆனால் மாமேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்கூட சில நேரங்களில் தனது சொந்தக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாமல் இருந்துள்ளார். தன் மீதான இந்த 'சுய சந்தேகம்', அவர் சில தவறுகளைச் செய்யவும் வழிவகுத்தது. 'மிகப் பெரிய தவறு' பொது சார்பியல் கோட்பாட்டு (General relativity) குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, ஈர்ப்பு சக்தி பிரபஞ்சத்தை சுருங்கச் செய்யும் அல்லது விரிவடையச் செய்யும் என ஐன்ஸ்டீனின் கணக்கீடுகள் சுட்டிக்காட்டின. ஆனால…

  5. 17 Apr, 2025 | 04:24 PM பூமியிலிருந்து தொலைதூரத்திலுள்ள நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கோளொன்றில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கே2-18பி (K2-18b) என அழைக்கப்படும் கோளோன்று தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்தும் கேம்பிரிஜ் பல்கலை கழக குழுவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. பூமியிலுள்ள உயிரினங்களால் மாத்திரம் உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறுகள் இந்த கோளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த முடிவுகளை உறுதிப்படுத்துவதற்கு மேலதிக தரவுகள் அவசியம் என ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் குழுவினரும் வானியல் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர். உயிரினங்கள் வாழும் சாத்தியங்களுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு | Virakesari.lk

  6. பட மூலாதாரம்,TWITTER/BLUE ORIGIN படக்குறிப்பு,நியூஷெப்பர்ட்-31 குழு கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 13 ஏப்ரல் 2025, 01:53 GMT பாப் பாடகி, பத்திரிகையாளர், விஞ்ஞானி, திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் அடங்கிய ஒரு குழு ஏப்ரல் 14ஆம் தேதி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளப் போகிறார்கள். முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே உள்ளடக்கிய இந்த குழு விண்வெளிக்குச் செல்லப் போகிறது. ஆறு பெண்கள் உள்ள இந்தக் குழுவை, ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்ட விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், அதன் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 1963ஆம் ஆண்டில் சோவியத் விண்வெளி வீராங்கனையான வாலன்டினா தெரெஷ்கோவ் தனியாக விண்வெளிக்குச் சென்…

  7. Published By: DIGITAL DESK 3 09 APR, 2025 | 03:40 PM சுமார் 12,500 ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் இருந்து அழிந்துபோன ஓநாய் இனத்திற்கு விஞ்ஞானிகள் உயிர் கொடுத்துள்ளனர். டையர் ஓநாய் உலகில் வாழ்ந்த வலிமையான வேட்டையாடும் திறன்கொண்ட விலங்குகளில் ஒன்று Aenocyon dirus எனப்படும் ஒரு வகை ஓநாயாகும். இது கடந்த 10,000 - 12,500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போனது. அதன் பிறகு இத்தனை ஆண்டுகளாக அப்படியொரு உயிரினமே பூமியில் இல்லாத சூழலே இருந்தது. ஆனால், அதிநவீன டிஎன்ஏ அனாலிசிஸ், குளோனிங் மற்றும் மரபணு திருத்தம் தொழில்நுட்பங்களை (cloning and gene-editing technology)பயன்படுத்தி அந்த ஓநாயை மீண்டும் விஞ்ஞானிகள் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். கோலஸ்ஸால் பயோசயின்சஸ் என்ற நிறுவனம் இந…

  8. 02 APR, 2025 | 11:13 AM ஏப்ரல் 5 முதல் 15 வரை நிழல் சிறிது நேரம் மறையும் அரிய நிகழ்வு நிகழவுள்ளதாக வானியலாளர் அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளார். வானியலாளர் அனுர சி.பெரேரா மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சூரியன் நம் நாட்டின் மேல் அதன் உச்சத்தில் இருக்கும். இந்த உச்சநிலை ஏப்ரல் 5 முதல் 15 வரை நீடிக்கும். கொழும்பில் சூரியன் உச்சம் பெறுவது ஏப்ரல் 7 ஆம் திகதி நிகழ்கிறது. அன்று மதியம் 12:12 மணிக்கு யாராவது வெளியே இருந்தால், அவர்களின் நிழல் ஒரு கணம் மறைந்துவிடும். அவர்களால் தங்கள் சொந்த நிழலைப் பார்க்க முடியாது. வேறு யாராவது அதைப் பார்க்கலாம். "இந்த நிலைமை 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நீடிக்கும்." "4 ஆம் திகதி சூர…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜாஷ் சிம்ஸ் பதவி, 31 மார்ச் 2025, 07:26 GMT ஒரு சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பணி சிக்கலில் உள்ள நிலையில், ஜாஷ் சிம்ஸ் நமக்கு மேலே உள்ள பல விண்வெளி பொருட்களின் அரிய தாதுக்களை பிரித்தெடுக்கும் முயற்சியில் நாம் உண்மையில் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்பதை விவரிக்கிறார். 2025 ஆம் ஆண்டுக்குள் உலகம் எப்படி இருக்கும் என்பது குறித்து 30 ஆண்டுகளுக்கு முன்பு பிபிசியின் அறிவியல் நிகழ்ச்சியான டுமாரோஸ் வேர்ல்ட் சில கணிப்புகளை வெளியிட்டது. தொழில்நுட்ப உலகின் எதிர்காலத்தை கணிப்பது எவ்வளவு கடினம் என்பதற்கு இது ஒரு சான்றாகும். நமது வீடுகளில் ஹாலோகிராஃபிக் உதவியாளர்களுடன் பேசுவோம், இணைய வசதி அணுகல் தொ…

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன் பதவி, பேராசிரியர், இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், மொஹாலி 3 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 12.9 நூறு கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கேலக்ஸி ஒன்றின் மையத்தில் 700 பத்து லட்சம் சூரியன் நிறையைக் கொண்ட ஒரு ராட்சத கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 'பிளேசர்' வகை ராட்சத கருந்துளை நெஞ்சை நோக்கி நேராகச் சுடுவது போலப் பூமியை நோக்கி ஆற்றல் வாய்ந்த கதிர்களை வீசுகிறது. இந்தக் கண்டுபிடிப்பின் தொடர்ச்சியாக வானியலாளர்கள் குழப்பமடைந்துள்ளனர். பிக் பாங் எனும் பிரபஞ்சம் தோன்றிய பின்னர் வெறும் 800 பத்து லட்சம் ஆண்டு இளம் வயதாக இருந்தபோதே VLASS J041009.05-013919.88 …

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 24 மார்ச் 2025, 05:44 GMT சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் 286 நாட்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் 19 ஆம் தேதி பூமிக்கு திரும்பினார். அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த போது, விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார். 'பிளான்ட் ஹேபிடட் -07' என்ற திட்டத்தின் கீழ், புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் அவர் 'ரோமெயின் லெட்யூஸ்' எனப்படும் ஒரு வகை கீரைச் செடியை வளர்த்தார். விண்வெளியில் தங்கும் வீரர்கள், தங்களுக்கான உணவை பூமியில் இருந்து எடுத்துச் செல்லும் போதிலும், விண்வெளியில் தாவரங்க…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 22 மார்ச் 2025, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் ஹிட்லரின் ராணுவத்திற்கு ராக்கெட் செய்து கொடுத்த விஞ்ஞானிதான், நிலவில் கால் பதித்த அமெரிக்காவின் சாதனைக்கு பின்னால் இருந்தவர். அவரின் பெயர் வார்னர் வான் ப்ரான். ஹிட்லரின் ஜெர்மனியில், ராக்கெட் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்தவராக இருந்த அவரின் ஆராய்ச்சியில்தான் வி2 என்ற ஏவுகணை உருவானது. இந்த ஏவுகணையை பயன்படுத்திய ஹிட்லரின் படை, இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கர்களையும் சோவியத் படைகளையும் கதி கலங்க செய்தது. இந்த விஞ்ஞானி போருக்கு பின் அமெரிக்காவில் தஞ்சமடைந்தார். அவரின் வாழ்க்கை பல வியத்தகு சாதனைகளை உள்ளடக்கியது. வார்னர் வான் ப்ரான…

  13. பட மூலாதாரம்,NASA கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களைக் கழித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பூமி வந்தடைந்தனர். அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் விண்கலத்தில் மொத்தம் 17 மணிநேரம் அவர்கள் பயணம் செய்துள்ளனர். ஆனால், ரஷ்யாவின் 'சோயுஸ்' விண்கலனால், அதே சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர்களை ஏற்றிக் கொண்டு மூன்று மணிநேரத்தில் பூமிக…

  14. போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்! இந்திய வம்சாவளியான அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 3 ஆவது முறையாக, உயர் ரக விண்கலமான “ஸ்டார்லைனரில்” விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, போயிங் நிறுவனத்தின், ‘ஸ்டார்லைனர்’ என்று பெயரிடப்பட்டுள்ள ரொக்கெட் நேற்று (05) வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. ‘அட்லஸ் 5’ விண்கலம் மூலம் விண்ணில் ஏவப்பட்ட போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், இன்றிரவு (ஜூன் 6) இரவு 9.45 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என நாசா தெரிவித்துள்ளது. இதில், 58 வயதுடைய இந்திய வம்சாவளியான சுனிதா வில்ல…

  15. அண்மையில் இத்தாலிய விஞ்ஞானிகள் ஒளியை “சூப்பர்சொலிட்” (Supersolid) எனப்படும் அதிசயமான திண்ம நிலையாக மாற்றியுள்ளனர்… இது குவாண்டம் இயற்பியலில் (Quantum Physics) ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது... இந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் பல தொழில்நுட்ப புரட்சிகளுக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது... மேலும், இது ஒளியின் நடத்தை பற்றிய புதிய புரிதல்களை வழங்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.. சரி இப்போ “சூப்பர்சொலிட்” என்றால் என்னவென்று பார்ப்போம்.. “சூப்பர்சொலிட்” என்பது ஒரு விநோதமான திண்ம நிலை… இது ஒரு பொருள் திண்மமாக (solid) இருக்கும் போதும், அதே நேரத்தில் திரவமாக (liquid) பாயும் தன்மை கொண்டிருக்கும்.. சூப்பர்சொலிடில் உள்ள அணுக்கள் (atoms) ஒழுங்காக (crystalline) ஒருங்கிண…

  16. 'வெறும் 30 நிமிடங்களில் சென்னை டூ பெங்களூரு' - விமானத்தை விட வேகமான 'ஹைப்பர்லூப்' எப்போது வரும்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர்,சிராஜ் பதவி,பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் 'வான்வழி தவிர்த்து, சென்னையிலிருந்து- பெங்களூருக்கு 30 நிமிடத்தில் அல்லது சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு மணிநேரத்தில் பயணிப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?' ஹைப்பர்லூப் எனும் தொழில்நுட்பத்தைக் குறித்து பேசும் போதெல்லாம், இத்தகைய உதாரணங்களே முன்வைக்கப்படும். ரயில் பயணத்திற்கு ஆகும் செலவை விட சற்று கூடுதலாக, அதேசமயம் விமானத்தை விட வேகமாக (சுமார் 1000 கிமீ வேகத்தில்) நிலத்தில் செல்லக்கூடிய ஒரு பயண அமைப்பாக ஹைப்பர்லூப் விவரிக்கப்படுகிறது. ஹைப்…

  17. 2024 YR4 என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய Asteroid பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விண்கல் பூமியைத் தாக்கக்கூடும் என்று Scientists ஆரம்பத்தில் கவலைப்பட்டனர். பின்னர் அவ்வாறு நடக்க வாய்ப்பு குறைவாக இருப்பதாக அறிவித்தனர். இந்த Asteroid பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 3.1 சதவீதம் உள்ளது என ஆரம்பத்தில் மதிப்பிட்ட விஞ்ஞானிகள், பின்னர் 2032ஆம் ஆண்டில் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 0.28 சதவீதம் மட்டுமே உள்ளது என்று கூறினர். ஆனால் இது Moon-ஐ தாக்க ஒரு சதவீதம் வாய்ப்பு இருப்பதாக NASA மதிப்பிட்டுள்ளது. #NASA #Earth #Space இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  18. கடந்த 20.02.2025 இலிருந்து இந்த coins சந்தைக்கு வந்திருக்கிறது. இது crypto உலகில் தூரநோக்கில் பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு இந்த ப்ரொஜெக்ட் தொடங்கப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே நான் இதில் இணைத்திருக்கிறேன். கடந்த 5 வருடங்களாக இந்த திட்டம் சோதனை முயற்சியில் இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் விரும்பியவர்கள் pi coinsஇனை கைத்தொலைபேசி மூலம் மைனிங் செய்துகொள்ளும் வாய்ப்பும் இருந்தது. இது ஒரு ஏமாற்று வேலை, snowball system என்றெல்லாம் கல்லெறிகள் விழுந்த போதும் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டு தான் இருந்தது. இப்பொழுது 55 மில்லியன் மக்கள் இணைந்து இதனை சந்தைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த 55 மில்லியன் மக்களும் தங்களின் தகவல்களை அரசபத்திரம் மூலம்…

  19. 6 மணி நேரங்களுக்கு முன்னர் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்ள புதிய லேண்டர் ஒன்று தரையிறங்கியுள்ளது. இதுவே நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் இரண்டாவது தனியார் லேண்டராகும். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (நாசா) தனியார் நிறுவனங்களுடன் மேற்கொள்ளும் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக ஃபயர்ஃப்ளை விண்வெளி நிறுவனத்தின் லேண்டர், நிலாவில் "sea of crises" எனப்படும் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்தப் பகுதி பூமியிலிருந்து தெரியும் நிலவில் உள்ள ஒரு பெரிய பள்ளமாகும். லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கும் தருணம் காணொளியில்... https://www.bbc.com/tamil/articles/cx2eqgn7w6lo

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனதன் ஓ'கலஹன் ஒரே நாளில் 7 கோள்களும் காட்சி தரும் அதிசய நிகழ்வு அரங்கேற உள்ளது. வருகின்ற பிப்ரவரி 28-ஆம் தேதி, இரவு வானில் ஏற்கனவே காட்சி தரும் 6 கோள்களுடன் புதன் கோளும் இணையும். ஏழு கிரகங்களின் அபூர்வ காட்சியை வானியல் ஆர்வலர்கள் அன்று கண்டுகளிக்கலாம். இது விஞ்ஞானிகளுக்கு ஏன் முக்கியமானது என்று பார்க்கலாம். இந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தெளிவான இரவு நேரத்தில் வானத்தை பார்த்தால் உங்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது. வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என ஆறு கோள்களும் தற்போது இரவு வானில் காட்சியளிக்கின்றன. பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் ஒரே ஒரு …

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி செய்தியாளர் 25 பிப்ரவரி 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த வாரம், 2024 YR4 என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய விண்கல் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விண்கல் பூமியைத் தாக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் கவலைப்பட்டனர், ஆனால் பின்னர் அது பாதுகாப்பானது என்று அறிவித்தனர். இந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 3.1 சதவீதம் என்று விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் மதிப்பிட்டனர். ஆனால், இந்த விண்கல் 2032ஆம் ஆண்டில் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 0.28 சதவீதம் மட்டுமே என்று சமீபத்தில் தெரிய வந்தது. அதே விண்கல் நிலவைத் தாக்க ஒரு சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆ…

  22. சீனாவின் Chinese space research teams அண்மையில் ஒரு புரட்சிகரமான ஒளிப்பட தொழில்நுட்ப சாதனையை அறிவித்துள்ளன… இக்கேமரா, விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி இயங்குவதால், பூமியில் உள்ள எந்த நபரின் முகம்மும் மிகத் தெளிவாகப் பதிவு செய்யக்கூடியது என்று கூறப்படுகிறது... இந்த கண்டுபிடிப்பு, விண்வெளி தொழில்நுட்பத்தில் ஒரு அற்புத முன்னேற்றமாகும் என்பதுடன், அதன் செயல்பாடு மற்றும் பயன்பாடுகள் பல துறைகளில் புரட்சியைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது… தொழில்நுட்ப முன்னேற்றம்! இந்த புதிய கேமராவை வடிவமைப்பதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் மிகவும் முன்னேற்றமடைந்தது… High Resolution: அதிநவீன ஒப்ரிக்கல் சென்சார்களைப் பயன்படுத்துதல், நுணுக்கமான மிரர் அமைப்பு மற்றும் கணினி ஆட்டிபிச…

  23. Published By: DIGITAL DESK 3 23 FEB, 2025 | 11:34 AM விண்வெளியில் இருந்து பூமியில் உள்ளோரின் முகங்களை அடையாளம் காணும் அதி திறன் கொண்ட உலகின் மிக சக்திவாய்ந்த உளவு கமராவை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய கண்காணிப்பு திறன்களை மறுவரையறை செய்யக்கூடிய சக்திவாய்ந்த லேசர் அமைப்புடன் சீன விஞ்ஞானிகள் ஆப்டிகல் இமேஜிங் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். மேம்பட்ட இந்த இமேஜிங் சாதனம் 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில் இருந்து மில்லிமீட்டர் அளவிலான விவரங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இது உளவுத்துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தும். https://www.virakesari.lk/article/207434

  24. இரவைப் பகலாக்கும் திட்டம்: ரஷ்யாவின் பிரமாண்ட விண்வெளி கண்ணாடி பூமிக்கு புது வெளிச்சம் பாய்ச்சியது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர், மைல்ஸ் பர்க் பதவி, பிபிசி நியூஸ் 19 பிப்ரவரி 2025 32 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு விண்வெளி கண்ணாடியைப் பயன்படுத்தி சைபீரியாவை ஒளிரூட்டுவதற்கான விளாடிமிர் சைரோமியட்னிகோவின் துணிச்சலான முயற்சி சர்வதேச கவனத்தை ஈர்த்தது. 1993, பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பரிசோதனை குறித்து 'பிபிசியின் டுமாரோஸ் வேர்ல்ட்' செய்தி வெளியிட்டது. ஒரு பிரமாண்ட கண்ணாடியை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தி சூரியனின் கதிர்களை கிரகித்து அதை பூமியிலுள்ள ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி திருப்புவது இத்திட்டத்தின் நோக்கம். இது ஏதோ ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வில்லன் கதாபாத்திரம் உ…

  25. பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் நமது சூரிய மண்டலம் உள்ள பால் வீதி போன்ற ஏராளமான நட்சத்திர மண்டலங்கள் சிறுசிறு குழுக்களாக தொகுக்கப்பட்டதும், அத்தகைய சிறு குழுக்களை ஒட்டுமொத்தமாக உள்ளடக்கியதுமான மிகப்பெரிய பொருள் (Superstructure) குய்பு. குய்பு 1,300 கோடி ஒளி ஆண்டுகள் நீளம் கொண்டது மற்றும் 200 குவாட்ரில்லியன் (200 பிளஸ் 24 பூஜ்ஜியங்கள்) நட்சத்திரங்களின் மொத்த நிறையை உடையது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த பிரபஞ்சத்தில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய பொருள் குய்பு என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கயிறுகளில் முடிச்சுகளைப் பயன்படுத்தி எண்களைக் கணக்கிடுவதற்கும் சேமிப்பதற்கும் பயன்படும் இன்கன் முறையைப் (பழங்கால முறையைப்) போன்றுள்ள இந்த மிகப்பெரிய விண்மீன் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.