அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் ஐன்ஸ்டீன் தனது புகழ் பெற்ற பொது சார்பியல் கோட்பாட்டில் முன்வைத்த கருதுகோளான ஈர்ப்பு அலைகள் தற்போது கண்டறியப்பட்டு துல்லியமாக அளவிடப் பட்டுள்ளது. ஆப்பிள் கீழே விழுவதைப் பார்த்து நியூட்டன் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்று நாம் இயற்பியல் பாடத்தில் படித்திருக்கிறோம். எனில் ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன? ஈர்ப்பு அலைகளை புரிந்து கொள்வதற்கு நாம் நியூட்டனிடம் இருந்து துவங்குவோம். நியூட்டன் 1687-ம் ஆண்டு நியூட்டன் தனது புகழ் மிக்க இயற்கை தத்துவத்தின் கணிதக் கோட்பாடுகள் (பிரின்ஸ்சிபியா) புத்தகத்தைவெளியிட்டார். பிரின்ஸ்சிபியாவில் வெளியான நியூட்டனின் மூன்று இயக்க விதிகள் மற்றும் பிரபஞ்ச ஈர்ப்பு விசையின் விதிகள் அக்கால அறிவியலி…
-
- 0 replies
- 437 views
-
-
நெட் பிரியர்களுக்கு ஒரு அரிய விருந்து! தற்போது பயன்படுத்தும் "wi-fi"ஐ விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் இன்டர்நெட் டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் "li-fi" ஆகும். இதன் சிறப்பு, ஒரு நொடிக்கு 1ஜிகாபைட் டேட்டாக்களை அனுப்பக்கூடியது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த வேகத்தை பயன்படுத்தி மிகப்பெரிய ஆல்பம், அதிக டெஃபனிஷன் கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்களை கண்ணிமைக்கும் நொடியில் டவுன்லோடு செய்யலாம். இந்த வேகத்ற்கு காரணம் இந்த டெக்னாலஜியில் LED லைட்டுகளை பயன்படுத்தப்படுவதே. இதற்காக கண்ணால் காணக்கூடிய ஒளி யை தகவல் தொடர்புக்காக பயன்படுத்துகிறது. இந்த நெட்வர்க் மிகவும் பாதுகாப்பானதும் கூட. இதனை மிகவும் சிறிய சிப் பில் வடிவம…
-
- 3 replies
- 798 views
-
-
ஃபேஸ்புக்கின் புது அப்டேட் - ப்ரொஃபைல் வீடியோ மணிக்கு ஒருமுறை ஃபேஸ்புக்கில் டிபி மாற்றும் தலைமுறையை அடுத்த கட்டத்திற்கு ஃபேஸ்புக் கொண்டு சென்றுள்ளது. அதன் துவக்கம்தான் ஃபேஸ்புக் ப்ரொஃபைல் வீடியோ! நீண்ட நாட்களாக விரைவில் வெளியாகும் என கூறிவந்த ஃபேஸ்புக், தற்போது ப்ரொஃபைல் வீடியோவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன்களில் இருந்து ஃபேஸ்புக் ஆப் மூலம் நேரடியாக வீடியோவை அப்லோட் செய்ய முடியும். மேலும் நம் கேலரியில் உள்ள வீடியோவையும் ப்ரொஃபைல் பிக்சராக்க முடியும் என்கிறது ஃபேஸ்புக். ஃபேஸ்புக்கின் புதிய இந்த ப்ரொஃபைல் வீடியோ வசதி, இளைஞர்களை பெரிதும் கவரும் விதமாக அமையும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை போகும் இடங்களில் எல்லாம் செல்ஃபி எடுத்து போ…
-
- 0 replies
- 363 views
-
-
சுமார் 300 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த கணித சமன்பாட்டுக்கு இங்கிலாந்து பேராசிரியர் ஒருவர் தீர்வு கண்டுபிடித்துள்ளார். இதற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.1637ம் ஆண்டு பிரெஞ்சு கணிதவியலாளர் பெய்ரி டி ஃபெர்மட் உருவாக்கிய சமன்பாட்டுக்கு தீர்வு கண்டுபிடிக்க ஏராளமானோர் முயற்சித்தனர்.கடந்த மூன்று நூற்றாண்டுகளாக கணிதவியலாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வந்த இந்த சமன்பாட்டிற்கு 62 வயதாகும் ஆண்ட்ரூ வில்ஸ் என்னும் கணித பேராசிரியர் தீர்வை கண்டுபிடித்துள்ளார். There are no whole number solutions to the equation xn + yn = zn when n is greater than 2 என்னும் இந்த சமன்பாட்டை தான் ஃபெர்மட் நிறுவினார். இதனை ஃபெர்மட் தேற்றம் என்றும் அழைக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 291 views
-
-
லண்டன் நகரில் உள்ள மாசு அளவை புறா மூலம் கண்காணிப்பதற்கான நூதன முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. பிரித்தானியாவின் லண்டன் நகரில் காற்றில் உள்ள மாசுவின் அளவு அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காற்று மாசுவுக்கான அளவையும் அந்நகரம் கடந்துள்ளது. அடுத்த 5 வருடங்களில் லண்டன் உள்ளிட்ட மற்ற நகரங்களில் நைட்ரோஜன் டை ஆக்சைடின் அளவு கணிசமாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லண்டன் நகரின் மாசு அளவை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக புறாக்களின் உடலில் நுண்ணிய கருவிகள் பொருத்தி அதன் மூலம் மாசுவின் அளவை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருவிகள் காற்றில் உள்ள நைட்ரோஜன் டை ஆக…
-
- 0 replies
- 431 views
-
-
இனி நீங்கள் விரலால் கிறுக்குவதும் பாஸ்வேர்டாகும் கையடக்கத் தொலைபேசியில், கைவிரல்களால் இஷ்டம்போல், கிறுக்குவதையே, ´பாஸ்வேர்டு´ ஆக பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எழுத்து அல்லது எண்களை பாஸ்வேர்டாக பயன்படுத்தும் வசதி, தற்போதைய கைபேசிகளில் உள்ளது. அதிக விலையுள்ள போன்களில், கைரேகையை பாஸ்வேர்டாக பயன்படுத்திக் கொள்ளலாம். அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலை ஆராய்ச்சியாளர்கள், பாஸ்வேர்டு முறையை மேலும் எளிமைப்படுத்தி உள்ளனர். எண், எழுத்துக்களை பாஸ்வேர்டாக பயன்படுத்தும்போது, அவற்றை மறக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கு தீர்வாக, கையடக்கத் தொலைபேசியில், கைவிரல்களால் இஷ்டம்போல், கிறுக்குவதையே, ´பாஸ்வேர்டு´ ஆக பயன்படுத்தும் தொழில்…
-
- 9 replies
- 791 views
- 1 follower
-
-
அல்பர்ட் ஜன்ஸ்டீனின் 137 ஆவது பிறந்த தினம் - சா .சுமித்திரை 20 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற இயற்பியல் மாமேதையான அல்பர்ட் ஜன்ஸ்டீனின் 137 ஆவது பிறந்தநாள் இன்று. 1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் திகதி பிறந்த இவர் சார்புக் கோட்பாட்டை முன் வைத்ததுடன் குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை, அண்டவியல் என்பவற்றில் பாரிய பங்களிப்பை செய்து அறிவியல் உலகிற்கு சேவையாற்றியுள்ளார். ஒளிமின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியதுடன், சார்புக் கோட்பாட்டுக் கொள்கையையும் முன் வைத்தமையால் ஜன்ஸ்டீன் என்ற பெயர் இன்றைய காலத்திலும் பேசப்படுகிறது. அதேவேளை 1999 இல் பத்தாயிரமாம் ஆண்டு குறித்து ரைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட சிறப்பிதழில் ஜன்ஸ்டீனுக்கு இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர் என்னும்…
-
- 1 reply
- 491 views
-
-
செவ்வாய் கிரகத்தை ஆராய புதிய செயற்கைக்கோளுடன் புறப்பட்டது ராக்கெட் செவ்வாய்க் கிரகத்தை ஆராயும் செயற்கைக் கோளுடன் ராக்கெட் ஒன்று கஜகஸ்தானின் பைகானூர் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது. கஜகஸ்தானின் பைகானூர் ஏவுதளத்திலிருந்து புறப்படுகிறது ராக்கெட். ஐரோப்பா - ரஷ்யா கூட்டு முயற்சியில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. எக்ஸோமார்ஸ் ட்ரேஸ் கேஸ் ஆர்பிட்டர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோள், செவ்வாயில் உள்ள மீத்தேன் எங்கிருந்து வருகிறது என்பதை ஆராயும். ராக்கெட்டிலிருந்து பிரிந்த பிறகு பல மாதங்கள் பயணம் செய்து எக்ஸோமார்ஸ் செயற்கைக்கோள் செவ்வாயை நெருங்கும். இந்த முயற்சி வெற்றியடைந்தால், பிரிட்டனில் தயாரிக்கப்ப…
-
- 0 replies
- 266 views
-
-
இனி உங்கள் மூளையை பென் ட்ரைவில் பேக் அப் எடுக்கலாம்! (வீடியோ) உங்கள் மூளையில், ஒரு மொழியை பதிவேற்றினால் வெறும் ஒரு நிமிடத்தில் உங்களால் உலகின் எந்த மொழியையும் கற்றுக்கொள்ள முடியும். எந்தக்கலையில் வேண்டுமானாலும் எக்ஸ்பெர்ட் ஆக முடியும். ஒரு நூலகத்தில் இருக்கும் எல்லா புத்தகங்களையும் தரவுகளாக மாற்றி உங்கள் மூளையில் பதிவேற்றினால், எல்லா தகவல்களும் உங்கள் மூளையில் பதிவாகிவிடும். உங்கள் மூளையில் இருக்கும் எல்லா நினைவுகளையும், தகவல்களையும் டவுன்லோட் செய்து அதனை சேமித்து வைக்கவும் முடியும். இதையெல்லாம் கேட்கவே வியப்பாகவும், நம்ப முடியாததாகவும் இருக்கிறதா? ஆனால், இவையனைத்தும் சாத்தியமாகும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பது அமெ…
-
- 0 replies
- 321 views
-
-
வணக்கம். இன்று நம்மில் பலரும் அன்றாடம் பேசும் தமிழில் பிறமொழிகள் பலவும் கலந்திருக்கின்றன. இவற்றில் உண்மையிலேயே எது தமிழ், எது பிறமொழி என்ற ஐயம் பலருக்கும் ஏற்படலாம். தூய தமிழை வழக்கில் கொண்டு வருவதற்காக சிலர் முயற்சி செய்யக்கூடும். அவர்களுக்காகவும், தூய தமிழ்ச்சொற்கள் எவை என்பதை நாம் அறிந்து கொள்ளவும், நல்ல தமிழ்ச் சொற்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியில் இடம்பெற்றுள்ள சொற்கள் தமிழிய அறிஞர்களின் நூல்களிலிருந்தும் பல்வேறு வலைப்பூக்கள், தமிழ் இணையக் குழுமங்கள்; தளங்களிலிருந்தும் தொகுத்து இச்சேவயை வழங்க உதவிய அனைவருக்கும் நன்றி. இத் தூயதமிழ் செயலியின் நோக்கம் தமிழில் நீண்டகாலமாகக் கலந்துநிற்கும் வடமொழிச் சொற்களை…
-
- 0 replies
- 529 views
-
-
ஆனந்தக் கோலங்கள் – நம்மவரின் அற்புத கணிதப் பயணங்கள் வெங்கட்ராமன் கோபாலன் எண்ணற்ற புள்ளிக் கோலங்களை வரைய ஓர் எளிய வழி கணிதம் இயற்கையின் தாய்மொழி என்று சொல்லப்படுகிறது- அண்டத்தில் நிகழும் அத்தனை நிகழ்வுகளையும் நெறிப்படுத்தும் அறிவியல் விதிகளை விவரிக்கும் ஆற்றல் கொண்ட மொழி. கலை உலகுக்கும் அது போன்ற ஒரு உலகமொழி உண்டா? பல்வகைப்பட்ட கலை வடிவங்களையும் ஒற்றைச் சரட்டில் பின்னும் இயற்கை விதிகள் உண்டா? இந்தக் கேள்விக்கு விடை காண்பது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில், கலைத்தன்மை என்று சொல்லப்படுவதில் பெரும்பாலானவை மனித புலன் அனுபவ எல்லைகளுக்கு உட்பட்டது. மாற்றவே முடியாத உலகப் பொதுத்தன்மை கொண்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டவை என்று சொல்ல முடியாது. இது இப்படி இருந்தாலும்கூ…
-
- 0 replies
- 2.6k views
-
-
ஆண்ட்ராய்டு போனில் அழகாக படம் எடுக்க அசத்தல் டிப்ஸ்! இன்றைய ஸ்மார்ட்போன்களில் அத்தியாவசிய அம்சங்களில் முதன்மையாக இருப்பது கேமராதான். ஸ்மார்ட்போன் வாங்கும் பலரும் முதலில் கேட்பது, "போனில் கேமரா எத்தனை மெகாபிக்ஸல்?" என்ற கேள்வியையே. அவ்வாறு நீங்களும் அதிக மெகாபிக்ஸல் கொண்ட நல்ல ஸ்மார்ட்போனை வாங்கி விட்டீர்களா? அதிக எம்பி கொண்ட கேமரா இருந்த போதும் அழகாக புகைப்படம் எடுக்க தெரியவில்லையா? கவலை வேண்டாம். ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை அழகாக எடுக்க சில டிப்ஸ் உங்களுக்காக... 1.டிஜிட்டல் ஜூம்மை தவிர்க்கவும்: டிஜிட்டல் ஜூம் செய்வதால் போட்டோவை பெரிதுபடுத்த முடியுமே தவிர துல்லியமான படத்தை எடுக்க முடியாது. இப்படி டிஜிட்டல் ஜூம் ( Digital zoom) செய்வதால் புகைப்படம் …
-
- 0 replies
- 740 views
-
-
விண்வெளியில் கேட்ட அபூர்வ இசை... நாசா வெளியிட்ட வீடியோ! அப்போலோ- 10 விண்கலத்தின் மூலம் விண்வெளியில் பயணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்களான ஜான் யங், யூகேன் கெர்னன் ஆகியோர் பூமியில் இருந்து சுமார் இரண்டு லட்சம் மைல்கள் தொலைவில் சந்திரனின் மறுபக்கம் இந்த அபூர்வ இசையை கேட்டனர். அதுதொடர்பாக பேசிக் கொண்ட தகவல்களை நாசா பதிவு செய்து வைத்துள்ளது. இதுநாள்வரை இந்த அபூர்வ இசை தொடர்பான செய்திகள் வெளியாகாதது ஏன்? என்பது குறித்து நாசா தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. எனினும், விண்வெளி ஆராய்ச்சிகளில் முட்டுக்கட்டை ஏற்படாத வகையில் தங்களது விண்வெளிப் பயணத்தின்போது ஆய்வாளர்கள் சந்திக்கும் விபரீதமான, விசித்திரமான அனுபவங்களை பகிரங்கமாக வெளியிட அவர்களுக்கு…
-
- 0 replies
- 370 views
-
-
அவ்வப்போது ஏதேனும் புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தந்து வருகிறது கூகுள் நிறுவனம். அதன் தொடர்ச்சியாக மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கிடில் எனப்படும் புதிய இணையதள சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. http://www.kiddle.co/ என்ற இணைய தளம் தான் அது. மிகவும் வண்ணமயமாக வேற்றுகிரகத்தின் பகுதியை போல், குழந்தைகள் ரசிக்குபடி அதன் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம், சிறுவர்கள், தாங்கள் தேடி அறிய விரும்பும் தளங்களைப் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பெற முடியும். மேலும், இணையதளத்தில் தேடுகையில், சிறுவர்கள்…
-
- 3 replies
- 341 views
-
-
ஹைதராபாத்தில் காய்க்கப்போகும் ஆப்பிள்! உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், தனது ‘மேப் டெவெலப்மென்ட்’ பிரிவை ஹைதராபாத்தில் நிறுவ உள்ளது. தனது ‘மேப்’ பிரிவு மொத்தத்தையுமே இந்தியாவிற்கு இடம்மாற்ற ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் உலக தொழில்நுட்ப அரங்கில் இந்தியாவின் மதிப்பு வெகுவாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செல்போன் தயாரிப்பின் காட்ஃபாதரான ஆப்பிள் நிறுவனத்தில் செல்போன், டேப்லட், கம்ப்யூட்டர், மேப்ஸ் என்று பல பிரிவுகள் உண்டு. உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கையும், சந்து பொந்துகளையும் துல்லியமாகக் காட்டும் ஆப்பிள் மேப் பிரிவு, தற்போது அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது. பயணத்தின் போது பாதைகள் செல்லவும், எந்த இடத்தையும் …
-
- 0 replies
- 536 views
-
-
Jump media player Media player help ஈர்ப்பு சக்தி அலைகள் ஏன் முக்கியமானவை?- ஐந்து காரணங்கள் Out of media player. Press enter to return or tab to continue. பேரண்டத்தில் ஏதாவது ஒரு பெரும் சம்பவம் நிகழும்போது இந்த ஈர்ப்புசக்தி அலைகள் உருவாக்கப்படுகின்றன- உதாரணமாக, நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும்போதோ அல்லது கருந்துளைகள் மோதிக்கொள்ளும்போது போன்ற நிகழ்வுகள். அவ்வாறு நிகழும்போது, அவை அண்டவெளியில் மெலிதான அலைகளை உருவாக்கி , அந்த அலைகள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்போது , காலத்தையும் இடத்தையும் இழுத்துக்கொண்டும், அழுத்திக்கொண்டும் பயணிக்கின்றன. இவை ஏன் முக்கியமானவை என்பதற்…
-
- 2 replies
- 882 views
-
-
வாட்ஸ்அப் 256: இனி போட்டியையும் குழுச் சண்டையையும் அதிகரிக்கும்! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற சொல், எதுக்கு பொருந்துகிறதோ இல்லையோ... 'கட்செவி அஞ்சல்' எனப்படும் 'வாட்ஸ்அப்புக்கு நன்றாகவே பொருந்தும். நவீன தகவல் தொடர்பு சேவைகளை தரும் அப்ளிகேஷன்களில் வாட்ஸ்ஆப் முன்னிலையில் இருக்கிறது. கடந்த இரண்டாம் தேதி நிலவரப்படி, உலகில் 100 கோடி பயனாளர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர் என அதன் உரிமையாளரும், ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவருமான மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்திருக்கிறார். உலகில் 7ல் ஒருவர் கையில் வாட்ஸ்அப் அதாவது உலகில் 7 பேரில் ஒருவர் வாட்ஸ் அப் பயன்படுத்துகிறார். இந்தியாவில் வைபர், ஹைக், லைன் என கடும் போட்டியை தரும் ‘ஆப்கள்’ இருந்தாலும், 'வா…
-
- 0 replies
- 490 views
-
-
Whats App-பை மாதமொன்றுக்கு ஒரு பில்லியன் பேர் பயன்படுத்துவதாக தகவல் [ Tuesday,2 February 2016, 07:02:00 ] கையடக்க தொலைபேசி தகவல் சேவையான வட்ஸ் அப்பை ஒவ்வொரு மாதமும் ஒரு பில்லியன் பேர் பயன்படுத்துவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. பேஸ்புக் வலையமைப்புக்கு சொந்தமான மெசஞ்ஜர் கையடக்க தொலைபேசி அப்-பை விட வட்ஸ் அப்-பை அதிகளவிலானவர்கள் பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் மெசஞ்ஜர் அப்-பை மாதமொன்றுக்கு 800 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். நாளாந்தம் வட்ஸ் அப்-பின் ஊடாக 42 பில்லியன் தகவல்களும் 250 மில்லியன் காணொளிகளும் அனுப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. எவ்வாறாயினும் போட்டிமிக்க உள்ளூர் சந்தைகளி…
-
- 0 replies
- 800 views
-
-
செவ்வாய் கிரகத்தில் செல்பி: 57 புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது கியூரியாசிட்டி அமெரிக்காவின் கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் செல்பி புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. அவற்றை நாசா விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. படம்: நாசா அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 2011 நவம்பர் 26-ம் தேதி கார் வடிவிலான கியூரியாசிட்டி விண்கலத்தை செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பியது. இந்த விண்கலம் 2012 ஆகஸ்ட் 6-ம் தேதி செவ்வாயில் தரையிறங்கியது. அன்று முதல் செவ்வாய் கிரகம் குறித்து கியூரியாசிட்டி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் செவ்வாயின் …
-
- 0 replies
- 290 views
-
-
தற்போது வட்ஸ்அப் இலவசம் கடந்த சில வருடங்களாக, முதல் பன்னிரண்டு மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும் வட்ஸ்அப்பானது, அதற்குப் பின்னர், சேவையைப் பெறுவதற்கு, வருடாந்தம் சந்தா செலுத்த வேண்டும் என இருந்தது. இந்நிலையிலேயே, மேற்படி வருடாந்த சந்தாக் கட்டணம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நீக்கப்பட்டுள்ளதாக வட்ஸ்அப் தெரிவித்துள்ளது. தற்போது வரை, முதல் பன்னிரண்டு மாதங்களுக்குப் பின்னர், வருடத்துக்கு, 0.69 அமெரிக்க டொலர் அறவிடப்படுகையில், நீங்கள், மேற்படிக் கட்டணத்தை ஏற்கெனவே செலுத்தியிருந்தால், அதைத் திரும்பிப் பெறமுடியாது. மேற்படி, வருடாந்த சந்தாக் கட்டணமானது, நீக்கப்பட்டபோதிலும், வருமானமீட்டக்கூடிய வகையில் தாம் இருப்பதாக தெரிவித்துள்ளபோதிலும், இத…
-
- 0 replies
- 552 views
-
-
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்...! - பகுதி - 1 பொறுப்புத் தவிர்த்தல் (அதான்பா disclaimer!): எனது முதல் தகுதி மாட்டு வைத்தியராகவும் மேலதிக தகுதி கல/மூலக்கூற்று உயிரியலாளராகவும் இருப்பதால் இந்தக் கட்டுரைத் தொடரை மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று வாசகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். உயிரியல் சார்ந்த துறைகளில் நான் இன்னும் தேடுதல் செய்யும் மாணவனாக மட்டுமே இந்தத் தகவல்களை சக வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். மாரடைப்பு: உலகின் முன்னேறிய நாடுகளில் பெரும்பாலும் மரணங்களை ஏற்படுத்தும் முதற் காரணமாக இருக்கும் ஒரு நோய் நிலைமை! நோயியல் பாசையில் மாரடைப்பு என்பது இதயத்திற்கான இரத்த ஓட்டம் சில நிமிட நேரங்களுக்குத் தடைப்படுவதால் (ischemia) இதயத்தின் சில குறிப்ப…
-
- 3 replies
- 912 views
-
-
எதிர்காலத்தின் நடுங்கும் குரல் நம் எல்லோர் மீதும் பெரும் குற்றச்சாட்டுக்களை அந்தச் சிறுமி சுமத்தி இருக்கிறாள். புவிப் பாதுகாப்பு குறித்து பெரும் விவாதங்களும், வினைகளும் எழும்பியிருக்கும் இந்த நேரத்தில், இந்தக் குரலை நாம் மறந்துவிட முடியாது. 1992ல் நடந்த முதல் புவிப் பாதுகாப்பு மாநாட்டில் கனடாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி செரன் சுசுகி அனுமதி வாங்கி பேசிய வார்த்தைகள் இவை. இங்கு ஒலிப்பது ஒரு குழந்தையின் குரல் . எதிர்காலத்தின் நடுங்கும் குரல். முழுமையாகவும், பொறுமையாகவும் உற்றுக் கேளுங்கள். —————————————————— “ஹலோ…. நான் செரன் …சுசுகி… இ.சி.ஓ.. அதாவது சிறுவர்களுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான என்வைரோன்மெண்டல் சில்ரன்ஸ்…
-
- 0 replies
- 445 views
-
-
ஆபத்தில் கைகொடுக்கும் அசத்தல் 'ஆப்ஸ்'! மிளகாய்ப்பொடியில் தொடங்கி பெப்பர் ஸ்பிரே வரை, பெண்களின் பாதுகாப்புக்கான தற்காப்புப் பொருட்கள் காலத்துக்கு ஏற்ப நவீனமாகிக்கொண்டே வருகின்றன. இந்த ஸ்மார்ட்போன் யுகத்தில், பெண்களின் பாதுகாப்புக்கான `ஆப்ஸ்’களும் பெருகியுள்ளன. புது இடத்திலோ, இரவு நேரத்திலோ, தனியாக சிக்கிக்கொள்ளும் சூழலிலிலோ... பெரிதும் கைகொடுக்கவல்ல `ஆப்ஸ்’களின் அறிமுகம் இங்கே... சேஃப்டிபின் (safetypin) ஒரு புதிய இடத்துக்குக் குடிபெயரும்போது அந்த இடத்தின் பாதுகாப்பு அம்சங்கள், அருகிலுள்ள காவல் நிலையங்கள், அவசரத் தொடர்பு எண்கள், மேலும் அந்த இடத்தின் சூழலுக்கு ஏற்ப மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஆகியவற்றை இந்த ஆப் வழங்குகிறத…
-
- 0 replies
- 498 views
-
-
பூமியை விட 10 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு! (வீடியோ) சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் ஒன்றான புளூட்டோ மொத்தம் உள்ள 9 கிரகங்களிலும் மிகச்சிறியது. புளூட்டோ சூரியனிலிருந்து 4.6 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. புளூட்டோதான் சூரியக் குடும்பத்தில் கடைசி என கூறி வருகிறோம். ஆனால் இப்போது அதையும் தாண்டி ஒரு புதிய கிரகம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போதைய புதிய கிரகமானது சூரியனிலிருந்து 20 பில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அது பூமியை விட 10 மடங்கு பெரிதானது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இது சூரியனை ஒருமுறை சுற்றி வரவே குறைந்தது 10,000 முதல் அதிகபட்சம் 20,000 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று நம்பப்படுகிறது. அந…
-
- 0 replies
- 314 views
-
-
இப்பிடியும் ஒரு ரெஸ்ரிங்..... நமக்கு வைச்சா முதுகுக்காலை புகை வருமெண்டு ஒரு தம்பி சொல்லுராரு.... அது வேறை ஆருமில்லை எங்கடை முனி....... தொடரும்
-
- 1 reply
- 771 views
-