செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7091 topics in this forum
-
-
-
- 3 replies
- 182 views
- 1 follower
-
-
“கைலாசா” நித்யானந்தா புதிய ஆண்டில் மக்களுக்குச் சொன்ன செய்தி! 02 Jan, 2026 | 03:43 PM அனைத்தையும் சாட்சியாகப் பார்க்கத் தொடங்கினால் இந்த புத்தாண்டு உங்களுக்கு ஒரு புதிய பிறவியாக அமையும் என்று சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியான நித்யானந்தா தெரிவித்துள்ளார். புத்தாண்டு செய்தியாக நித்தியானந்தா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். “இந்த 2026ஆம் ஆண்டில் நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். சாட்சி பாவம். அனைத்தையும் சாட்சியாகப் பார்க்கத் தொடங்கினால் இந்த புத்தாண்டு உங்களுக்கு ஒரு புதிய பிறவியாக அமையும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவின் முடிவில் “பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின்…
-
- 0 replies
- 391 views
- 1 follower
-
-
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்! நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன் நாய்கள் வெட்டப்பட்டு ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அம் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மைதானத்தில் உள்ள பனை மரம் ஒன்றில் நாய் ஒன்று கொல்லப்பட்டு கட்டி தொங்கவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளதுடன் மற்றுமொரு நாய் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது. மேலும் ரெஜிபோம் …
-
- 0 replies
- 151 views
-
-
அர்ச்சுனா எம்.பியுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த அரச ஊழியர்கள்! Dec 31, 2025 - 04:23 PM காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (30) காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் கலந்துகொண்டிருந்தார். கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தவேளை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் கருத்துக்களுக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இடையிடையே கைதட்டி ஆரவாரம் செய்த சம்பவம் இடம்பெற்றது. கூட்டம் முடிவடைந்த பின்னர் சில உத்தியோகத்தர்கள் முண்டியடித்தவாறு அர்ச்சுனாவுடன் செல்ஃபி மற்றும் புகைப்ப…
-
- 0 replies
- 73 views
- 1 follower
-
-
பழுதடைந்த அப்பிள் ஐபாட்டினை காட்டி இழப்பீட்டு காசு வாங்கினேன்! Dec 30, 2025 - 02:55 PM - 0 நான் பழைய அப்பிள் ஐபாட் ஒன்றினை காண்பித்து, தண்ணீர் போனதாக கூறி அரசாங்கத்திடமிருந்து 50,000 ரூபாவை வாங்கியேள்ளேன். நாங்களும் பொய் கூறி வாங்குகின்றோம், நீங்களும் பொய்யாவது கூறி வாங்குங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்று (30) காரைநகர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது டித்வா புயலால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அதற்கான நட்ட ஈடுகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்…
-
- 0 replies
- 83 views
- 1 follower
-
-
கிறிஸ்துமஸ் தினம் என்பது யேர்மனியில் மகிழ்ச்சியோடு, குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றாக கொண்டாடும் ஒரு முக்கியமான நாள். கிறிஸ்துமஸ் விடுமுறை பொதுவாக அமைதியானதாகத்தன் இருக்கும், ஆனால், இந்த அமைதியான நேரத்தில் Gelsenkirchen நகரத்தில் அசாதாரணமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. Gelsenkirchen நகரத்தில் உள்ள Sparkasse வங்கியில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கொள்ளையர்கள், வங்கியின் அடித்தளத்தில் உள்ள பார்க்கிங் கேரேஜ் வழியாக அங்குள்ள ஒரு அறையில் நுழைந்து, வங்கியின் சுவரில் ஒரு துளையை ஏற்படுத்தி, அதன் மூலம் காப்பக அறைக்கு சென்றிருக்கின்றனர். அந்த துளையை உருவாக்குவதற்காக சிறப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவோ, அதனுடைய சத்தம் வெளியே யாருக்கும் கேட்காமல் துளையிட்டிருக்கின்றார்கள்…
-
- 2 replies
- 219 views
-
-
பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்! கடுமையான வெப்பம் மற்றும் பரந்த பாலைவன நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற நாடான சவுதி அரேபியா அசாதாரண குளிர்கால அத்தியாயத்தை அனுபவித்து வருகின்றது. பனிப்பொழிவு, கனமழை மற்றும் கடுமையாக வீழ்ச்சியடைந்த வெப்பநிலை நாட்டின் பெரும்பகுதிகளை தற்சமயம் ஆக்கிரமித்து உள்ளது. இது குடியிருப்பாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது வேளையில் பாதுகாப்பு ஆலோசனைகளைத் தூண்டுவதற்கும் வழிவகுத்தது. இந்த அசாதாரண நிகழ்வு, காலநிலை மாற்றத்தைக் கையாளத் தயாராக இல்லாத பகுதிகளில் அசாதாரண வானிலையை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பனிப்பொழிவானது சவுதி அரேபியாவின் தபூக் மாகாணத்தில் உள்ள மலைத்தொடர்களின் தோற்றத்தை விய…
-
- 2 replies
- 216 views
-
-
இருளில் மூழ்கிய சான் பிரான்சிஸ்கோ ; நடு வீதியில் ஒளிர்ந்த கார்கள்! 22 Dec, 2025 | 04:59 PM அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் அப்பகுதியில் மின் விநியோகம் தடைப்பட்டது. இதனால் நகரின் வட பகுதி முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில், போக்குவரத்து ஒளி சமிக்ஞைகளும் இயங்கவில்லை. இதன் காரணமாக வீதியில் சென்றுகொண்டிருந்த தானியங்கி கார்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்றுவிட, அவ்வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருள் சூழ்ந்த வேளையில் வீதி நெடுகிலும் வரிசையில் நின்ற கார்களின் சமிக்ஞை விளக்குகள் மட்டும் ஒளிர்ந்த காட்சி கழுகுப் பார்வையாய் பிடிக்கப்பட்ட படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகர் முழுதும் க…
-
- 0 replies
- 83 views
- 1 follower
-
-
ஸ்விண்டனில் முன்னாள் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டில் கணவன் மீது 56 பாலியல் குற்றச்சாட்டு! தனது முன்னாள் மனைவிக்கு 13 ஆண்டுகளாக போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்தமைக்காக முன்னாள் டோரி கவுன்சிலர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் ஐந்து ஆண்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. வழக்கில் தற்போது லண்டன், என்ஃபீல்டில் வசித்து வரும் 49 வயதான பிலிப் யங் என்ற பிரதான சந்தேக நபர் மீது பாலியல் வன்புணர்வு உட்பட குறைந்தது 56 குற்றச்சாடுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வில்ட்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர். யங் முன்பு 2007 முதல் 2010 வரை ஸ்விண்டன் பெருநகர உள்ளூராட்சி அமைப்பின் கன்சர்வேடிவ் கவுன்சிலராக இருந்தார். அவர் 2010 ஆம் ஆண்டுக் காலப் பகு…
-
- 0 replies
- 117 views
-
-
டெல்லி விமான நிலையத்தில் பயணி மீது தாக்குதல்; விமானி பணி நீக்கம்! இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முனையம் 1 இல் ஏற்பட்ட தகராறில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி ஒருவர் தன்னை உடல் ரீதியாக தாக்கியதாக பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை விமான நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. விசாரணை நிலுவையில் உள்ளதால் குறித்த ஊழியர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், டெல்லி விமான நிலையத்தின் முனையம் 1 இல் அங்கித் திவான் என்ற பயணி, ஸைப்ஸ் ஜெட் விமானத்தில் ஏறுவதற்கு, தனது 7 வயது மகள், 4 மாத கைக்குழந்தை மற்றும் மனைவியுடன் பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஊழியர்க…
-
- 0 replies
- 89 views
-
-
Editorial / 2025 டிசெம்பர் 15 , பி.ப. 06:00 - 0 - 32 கனகராசா சரவணன் காலை உணவாக புட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை கத்தியால் கழுத்தை வெட்டியும் கோடாரியால் மண்டையை பிளந்து கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்த மனைவி கைது செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு வாகனேரியில் திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வாகனேரி விஷ்ணு கோவில் வீதியைச் சோந்த 46 வயதுடைய விவசாயியான 4 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து நவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இது பற்றி தெரியவருவதாவது குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் வழமைபோல வேளாண்மை காவலுக்காக ஞாயிற்றுக்கிழமை (14)இரவு வீட்டை விட்டு வெளியேறி வயலுக்கு திங்கட்கிழமை (15) காலையில் வீடு திரும்பியுள்ள…
-
-
- 20 replies
- 1.3k views
- 2 followers
-
-
பல கோடி பில்லியன் டாலர் கனிமவள தீவு இலங்கைக்கு கிட்டுமா? அமெரிக்காவின் அண்மைய நகர்வுகள் இதை நோக்கியா? அப்பாவி சுவிசை அமெரிக்கா களமிறக்கியுள்ளதா? இந்தியா என்ன செய்யப் போகிறது?
-
-
- 8 replies
- 490 views
- 1 follower
-
-
சோற்றுக்காக சபையில் சீறிப்பாய்ந்த அர்ச்சுனா! Dec 19, 2025 - 07:04 PM பாராளுமன்றில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் மதிய போசனத்திற்கு போதியளவான உணவு வகைகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடும் தொனியில் சபையில் இன்று குற்றஞ்சாட்டினார். மதிய போசனத்திற்காக தாம் சிற்றுண்டிச் சாலைக்கு சென்ற போது, அங்கு சிவப்பரிசியும், சொதியும் மாத்திரமே இருந்ததாக கவலைத் தெரிவித்தார். பாராளுமன்ற நிர்வாகக் குழுவின் மீது இதன்போது தமது அதிருப்தியையும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வௌிப்படுத்தினார். அவரது இந்த முறைப்பாட்டை சபாநாயகருக்கு தெரிவிப்பதாக அறிவிக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmjcwvot702xgo29nkgkwhgst
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
மதுவுக்காக இரண்டு மாதக் குழந்தையை விற்ற தாய் Published By: Digital Desk 2 18 Dec, 2025 | 04:37 PM மதுபானம் வாங்குவதற்காக தனது சொந்த மகனை தாய் ஒருவர் விற்ற சம்பவம் இந்தியாவின் தெலுங்கானாவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நிஜாமாபாத் எல்லம்மா குட்டா பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் - லெட்சுமி தம்பதிக்கு 2 மாத ஆண்குழந்தை உள்ளது. மதுப் பழக்கத்திற்கு அடிமையான குழந்தையின் தாயார் மது அருந்துவதற்கு பணம் இல்லாததால் தனது கணவருக்கு தெரியாமல் குழந்தையுடன் தலைமறைவானார். பிறந்து இரண்டு மாதமே ஆன குழந்தையை 2 பெண்களின் உதவியுடன் புனேயைச் சேர்ந்த எ ர் நிறுவன ஊழியருக்கு இந்திய மதிப்பில் ரூ.2.4 இலட்சத்திற்கு விற்றுள்ளார். எனினும் அந்த பெண்ணின் கணவர் அளித்த முறை…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
“ஆசையா கன்னத்தைக் கடிக்கத் தோணுதா?” – காதலில் வரும் ‘செல்லக் கடி’ பின்னால் இருக்கும் சயின்ஸ் இதுதான்! 18 Dec 2025, 6:30 AM காதலிக்கும்போதோ அல்லது மிகவும் பிடித்த ஒருவரைக் கொஞ்சும்போதோ, உங்களுக்கு விசித்திரமான ஒரு உணர்வு ஏற்பட்டதுண்டா? அவர்கள் கன்னத்தைப் பிடித்துப் பலமாகத் கிள்ள வேண்டும், கையை ஓங்கிக் கடிக்க வேண்டும் அல்லது எலும்பு உடையும் அளவுக்குக் கட்டிப்பிடிக்க வேண்டும் என்று தோன்றுமா? “ஐயோ… பாவம் வலிக்குமே” என்று நினைத்தாலும், அந்த ஆக்ரோஷமான ஆசையைக் கட்டுப்படுத்தவே முடியாது. இதை நினைத்து, “எனக்கு என்னாச்சு? நான் ஏன் இப்படி வன்முறையா நினைக்கிறேன்?” என்று பயப்பட வேண்டாம். இதற்குப் பெயர்தான் ‘கியூட் அக்ரஷன்’ (Cute Aggression). இது ஏன் ஏற்படுகிறது? (The Science Behind It…
-
-
- 1 reply
- 158 views
-
-
“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்! ‘பிரித்தானியா இன்னும் ஒரு கிறிஸ்தவ நாடு’ என்று ஒரு முஸ்லிம் மாணவரிடம் கூறியதற்காக, லண்டன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர், சிறுவர்களுக்கான கழிவறைகளில் உள்ள தொட்டிகளில் கால்களைக் கழுவியதற்காக மாணவர்களைக் கண்டித்து, இஸ்லாம் தொடர்பில் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டதைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் கூறப்படுகிறது. அவர் 6 ஆம் வகுப்பு மாணவர்களிடத்தில், இஸ்லாம் இங்கிலாந்தில் ஒரு சிறுபான்மை மதம் என்று கூறியுள்ளார். அத்துடன், ஒரு மைல் தொலைவில் ஒரு இஸ்லாமியப் பாடசாலை இருப்பதாகவும், நீங்கள் இங்கு கற்பதற்கு பதிலாக அங்கு சேர்ந…
-
-
- 23 replies
- 1.1k views
- 2 followers
-
-
இறக்கும் நிலைக்கு சென்ற யானை : காப்பாற்றிய அறக்கட்டளையினர்! 18 Dec, 2025 | 09:58 AM கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கென்யா நாட்டின் சாவோ தேசிய பூங்காவில், ஆண் யானை ஒன்று தனது தந்தத்தை தும்பிக்கையால் வருடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தந்தம் தும்பிக்கைக்குள் குத்திக் கொண்டது. இதனால் அந்த யானை, சுமார் மூன்று நாட்களாக அதே நிலையில் சிக்கி, இரை எடுக்கவும், நீர் அருந்தவும், முறையாக சுவாசிக்கவும் முடியாத நிலையில் இருந்தது. பசி மற்றும் தாகம் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையிலும் யானை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையை அவதானித்த ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை குழுவினர், கென்யா வனவிலங்கு சேவையுடன் இணைந்து மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். அதன்படி, யானைக்கு மயக்…
-
- 0 replies
- 63 views
- 1 follower
-
-
சகோதரி திருமணத்திற்காக வைரம் தேடிய இரு நண்பர்களுக்கு 20 நாளில் கிடைத்த அதிர்ஷ்டம் பட மூலாதாரம்,AMIT RATHAUR படக்குறிப்பு,சுரங்கத்தில் தோண்டியபோது கிடைத்த வைரங்களுடன் சஜித் முகமது (இடது) மற்றும் சதீஷ் காதிக். கட்டுரை தகவல் விஷ்ணுகாந்த் திவாரி பிபிசி செய்தியாளர் 16 டிசம்பர் 2025 தன் சகோதரிக்காக ஒரு சகோதரனால் என்ன செய்ய முடியும்? மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் வசிக்கும் இரண்டு நண்பர்களின் கதை இந்தக் கேள்வியுடன் தொடங்குகிறது. டிசம்பர் 9-ஆம் தேதி, குளிர்ச்சியான காலை நேரம். பன்னா வைர அலுவலகத்தின் வெளியே பெரிதாக எந்த நடமாட்டமும் இல்லை. ஆனால், பல அடுக்கு காகிதத்தில் சுற்றப்பட்ட ஒரு சிறிய பொட்டலத்தை கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்த சஜித் முகமது மற்றும் சதீஷ் காதிக் ஆக…
-
- 0 replies
- 317 views
- 1 follower
-
-
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும்கூட “சாபம்“ என்கிறவொன்றின்மீது ஏதோவொரு அச்சம் இருந்துகொண்டேதானிருக்கும். அப்படி இலங்கையின் வரலாற்றோடு சம்பந்தப்பட்ட ஓர் சாபம் அறிவியல் தாண்டியும் உண்மைதானோ என எண்ணும்வகையில், இன்றுவரையில் பலித்துக்கொண்டேதான் இருக்கின்றதென்றால் மிகையில்லை. ஆம், அது இலங்கையின் பூர்வகுடி பெண்ணான குவேனியின் சாபம்தான்! விஜயனின் வருகையோடு ஆரம்பிக்கும் இலங்கை வரலாற்றில் (கிமு 543 ) , அவனுக்கு அடைக்கலம் கொடுக்கும் பூர்வகுடி பெண்ணான குவேனிக்கும் விஜயனுக்கு ஏற்படும் காதலில் இரு குழந்தைகளும் பிறக்கின்றனர். எனினும் தாம் உருவாக்கியிருக்கும் புதிய நகரங்களுக்கு விஜயனை மன்னராகும்படி கோரும் அவனது எழுநூறு நண்பர்களினதும் கோரிக்கைக்கிணங்க, பாண்டிய இளவரசியை மணந்துகொள்ளும் வி…
-
-
- 8 replies
- 649 views
-
-
யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்..! 13 Dec, 2025 | 12:15 PM ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த அனாதை பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலம் பக்ஷர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கோலு யாதவ். இவர், அண்மையில் ரயில் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். பயணிகளில் சிலர் அவரை தவறான நோக்கத்துடன் பார்த்துள்ளனர். சிலர், ஆபாசமான முறையில் பேசியுள்ளனர். இதனால், யாசகம் பெற்ற அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாகி, கூனி குறுகியுள்ளார். இதைக் கண்ட கோலு யாதவ், அப்பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன், அவரை தனது வீட்டிற்கு அ…
-
- 1 reply
- 172 views
- 1 follower
-
-
உலகின் மிக அழகான பெண்களின் பட்டியல் 2025 ஆண்டுக்கான உலகின் மிக அழகான டாப் 10 பெண்கள் பட்டியலை IMDB தளம் வெளியிட்டுள்ளது. இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள நடிகைகள் யார் யார் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். உலகில் மிக அழகான பெண்களின் டாப் 10 பட்டியலில் ஹாலிவுட் நடிகை மார்கொட் ராபி முதலிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க நடிகை ஷைலீன் உட்லி இரண்டாவது இடத்தையும், சீன நடிகை தில்ரபா தில்முரத் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். நான்காம் இடத்தில கொரிய நடிகை நான்சி மெக்டோனி உள்ளார். அழகான பெண்கள் வரிசையில் இந்திய நடிகை க்ரீத்தி சனோன் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். இந்திய சினிமாவிலிருந்து இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே நடிகை இவர்தான் என்பது குறிப்பிடத…
-
-
- 5 replies
- 387 views
-
-
புற்றுநோய் உண்டாக்கும் மரபணு கொண்ட நபர் மூலம் பிறந்த சுமார் 200 குழந்தைகள் - என்ன நேர்ந்தது? பட மூலாதாரம்,Shutterstock படக்குறிப்பு,கோப்புப்படம் கட்டுரை தகவல் ஜேம்ஸ் கல்லாகர், சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர், நடாலி ட்ரஸ்வெல், புலனாய்வுத் தயாரிப்பாளர் 26 நிமிடங்களுக்கு முன்னர் உடலில் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் மரபணு குறைபாடு தனக்கு இருப்பது பற்றி தெரியாமல், உயிரணு தானம் மூலம் ஐரோப்பா முழுவதும் குறைந்தது 197 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ள நபர் குறித்து விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது இந்த தானதாரரிடமிருந்து பிறந்த சில குழந்தைகள் ஏற்கனவே மரணம் அடைந்துள்ளனர். இந்த மரபணு குறைபாட்டை பெற்ற குழந்தைகளில் வெகு சிலரே வாழ்க்கையில் புற்றுநோய் வராமல் தப்பிக்க வாய்ப…
-
- 0 replies
- 86 views
- 1 follower
-
-
கனடாவில் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை. கனடாவில் பெண் ஒருவரின் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வின்னிபெக் பொலிஸ் பிரிவில் 22 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு பொலிஸ் அதிகாரி, பணியில் இருந்தபோது இறந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்த சம்பவத்திற்குப் பிறகு தற்போது பணியில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்பு ஊதியமின்றி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த கன்ஸ்டபிள் எல்ஸ்டன் போஸ்டாக் தற்போது அதிகாரப்பூர்வமாக பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் பொறுப்பதிகாரி ஜீன் பவேர்ஸ் தெரிவித்துள்ளார். போஸ்டாக் கடந்த மாதம் பல குற்றச்சாட்டுகளுக்கு, குறிப்பாக மனித உடலின் மரியாதையை இழிவாக்கிய குற்றச்சாட்டை நீதிமன்றத்தில…
-
- 0 replies
- 59 views
-
-
சீனாவில் இலஞ்ச மோசடியில் ஈடுபட்டவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு, தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்த நிலையில் உயிர்போகும்வரை தூக்கில் இடப்பட்டதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. சீனா ஹூவாரோங் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் துணை நிறுவனமாக ‘சீனா ஹூவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் செயற்பட்டு வருகின்றது. இதன் முன்னாள் அதிகாரியான பாய் தியான்ஹய் கடந்த 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற அபவிருத்தி திட்டங்களின்போது, சுமார் 15.6 கோடி டெலர் மதிப்பிலான நிதியை இலஞ்சமாக பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழி…
-
- 0 replies
- 52 views
-
-
'கற்பனையை விஞ்சிய நிஜம்': இறுதிச்சடங்கு செய்த 12 ஆண்டுக்குப் பிறகு சுமார் 50 வயதில் உயிரோடு வந்த சகோதரன் பட மூலாதாரம்,Rohini Bhosale படக்குறிப்பு,மருத்துவமனை ஊழியர்களுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் 'சிவம்' கட்டுரை தகவல் துஷார் குல்கர்னி, பிபிசி மராத்தி, பிராச்சி குல்கர்னி, பிபிசி மராத்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் "உண்மை கற்பனையை விட வியப்பானது" என்ற சொற்றொடரை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், அதை நாமே அனுபவிக்கும் வரை அது வெறும் சொல்லாகத்தான் இருக்கும். ஆனால் சிவம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நடந்த சம்பவம், அதை விட வியப்பானது. தாங்களே இறுதிச்சடங்கு செய்த அந்த சகோதரனை, சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம் என்று அவர்கள் ஒருபோதும் நின…
-
- 0 replies
- 127 views
- 1 follower
-