Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஒபாமாவிற்கே சவால் விட்ட மகிந்தவின் வட்டச் செயலாளர்…. July 19, 20159:22 am சில தினங்களின் முன்னர் அநுராதபுரத்தில் ஆரம்பித்த மகிந்தவ ஆதரவு அணியின் முதலாவது பிரசார கூட்டத்தில் உள்ளூரில் உள்ள எதிரணியினர் தொடக்கம் அமெரிக்காவிலுள்ள பராக் ஒபாமா வரை அனைவரிற்கும் சாவல் விடுத்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. மகிந்தவின் வெற்றியை ரணில் மட்டுமல்ல ஒபாமா கூட தடுக்க முடியாதென கூறி கிச்சுகிச்சு மூட்டியுள்ளார் உதய கம்மன்பில. அங்கு உரையாற்றிய கம்மன்பில – ‘ஜனாதிபதியின் உடலில் பச்சை இரத்தம்தான் ஓடுகிறதென்ற சந்தேகம் கடந்த ஜனவரியிலேயே எனக்கு ஏற்பட்டு விட்டது. அது அண்மைய உரையின் மூலம் உறுதியாகிவிட்டது. ஜனாதிபதியின் உரையுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பினர் ஓரணிக்கு வந்துவிட்டனர். எம்ம…

  2. தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய வேண்டும், இணையாவிட்டால் ஜனாதிபதியின் வீட்டை சுற்றவளைப்போம்.- இராணுவ அமைப்பு எச்சரிக்கை சனிக்கிழமை, 18 யூலை 2015 பொது தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பச்சை நிற உடை அணிந்து ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய வேண்டும், அவ்வாறு இணையாவிட்டால் இராணுவத்தினர் மற்றும் பொது மக்களை இணைத்துக்கொண்டு ஜனாதிபதியின் வீட்டை சுற்றவளைப்போம் என தாய் நாட்டிற்கான இராணுவ அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவ் அமைப்பின் ஏற்பாட்டாளர் தென் மாகாண சபை உறுப்பினர் மேஜர், அஜித் பிரசன்ன கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கூட்டணியினால் வெற்றி பெற முடியாதென ஜனாதிபதி …

    • 0 replies
    • 323 views
  3. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எல்லோருமே புகைப்படம் எடுக்கிறோம்- ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால், பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்லூரி மாணவி ஒருவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட புகைப்படம் இணையத்தின் மனசாட்சியையே உலுக்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தின் நாயகனான ஏழை சிறுவனை, ஊக்கத்தின் அடையாளம் என மனதார பாராட்டுகிறது. அதைவிட முக்கியமாக அந்த சிறுவனுக்கு உதவிகள் குவிந்து ,அவனது வாழ்க்கையையே மாற்றி இருக்கிறது. எல்லாம் அந்த ஒரு புகைப்படத்தால் நிகழ்ந்த மாற்றம்! அந்த புகைப்படத்தை பார்த்தால் நீங்களும் கூட உருகித்தான் போவீர்கள்! ஒரு சிறுவன், டெஸ்க் முன் அமர்ந்து மங்கிய விளக்கொளியில் வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் புகைப்படம்தான் அது. சாதாரணமாக பார்த்தாலே கூட …

    • 0 replies
    • 242 views
  4. கீரிமலை கடலில் அதிசயமா…?? தானாக தோன்றிய பிள்ளையார்….. July 18, 201511:11 pm யாழ்ப்பாணம் கீரிமலை கடற்பரப்பில் தென்படும் பிள்ளையார் சிலை பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. கடந்த சில தினங்களின் முன்னர் திடீரென இந்த கடற்பரப்பில் பிள்ளையார் சிலை தென்பட்டது. இது கடலில் மிதந்து வந்ததென பரவலாக பேசப்படுகிறது. எனினும், அது உட்கார்ந்திருக்கும் நிலை மற்றும் எடை என்பனதான் பலரையும் சிந்திக்க வைத்து, ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த சிலை ஒரு அதிசயம், கடவுள் செயல் என சொல்பவர்களும் உள்ளனர். இந்த சிலை விவகாரம் யாழில் வைரலாக பரவி பலரும் சிலையை பார்க்க பக்தி சிரத்தையுடன் படையெடுக்கிறார்கள். http://www.jvpnews.com/srilanka/117113.html நல்ல காலம் புத்தர் தோன்றவில்லை

    • 2 replies
    • 262 views
  5. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஆல்பேனி மருத்துவ மையத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென மெலடீஸ் என்ற சிறப்பு மையம் உள்ளது. அங்கே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆபி என்கிற நான்கு வயது சிறுமிக்கும், அவளுக்கு மிகவும் பிடித்த ஆண் செவிலியரான மேட் ஹிக்கிலிங்குக்கும் திருமணம் நடந்தது. லூக்கேமியா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆபி, தனது தாயிடம் ஆண் செவிலியரான மேட்டைத் திருமணம் செய்ய விரும்பியதாக கூறினார். இதனையடுத்து வெறும் 12 மணி நேரத்தில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமணம் நடந்த இடம் முழுக்க ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருமணம் முடிந்தபின் தம்பதிகள் செல்ல ‘ஜஸ்ட் மேரிட்’ என எழுதப்பட்ட பொம்மைக் காரும் வைக்கப்பட்டிருந்தது. ‘இந்த ந…

    • 0 replies
    • 564 views
  6. சிரியாவில் ராணுவ வீரரின் தலையை சிறுவன் ஒருவன் துண்டிக்கும் வீடியோவை வெளியிட்டு ஐ.எஸ் அமைப்பினர் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. தனி நாடு அமைப்பதற்காக இவர்கள் பல நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.எஸ் அமைப்பினர் சமீப காலமாக பல்வேறு படுகொலை சம்பவங்களை சிறுவர்கள் மூலம் அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில் சிரியா ராணுவ வீரர் ஒருவரின் தலையை பத்து வயதுகூட நிரம்பாத சிறுவன் ஒருவன் துண்டிக்கும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அதில் முகமூடி அணியாத சிறுவன் ஒருவன் ராணுவ வீரரின் தலையை துண்டித்து பின்னர் இறந்தபோன ராணுவ வீரரின் முதுகில் வைப்பது போல் உள்ளது. மேலும் அந்த வீடியோவின் …

    • 0 replies
    • 191 views
  7. இங்கிலாந்தில் ஓடும் காரில் தனக்குத் தானே பிரசவம் பார்த்த இளம் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக தனது கணவருடன் காரில் ஹூஸ்டனை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருக்கும் அந்த பெண் பிரசவ வலியால் அவதிப்படுகிறார். அடிவயிற்றில் சீட் பெல்ட்டை மாட்டி குழந்தை பிறப்பதை தள்ளிப்போட முயற்சிக்கும் அந்த பெண், அது முடியாமல் போகவே, இறுதியில் தனது குழந்தையை தானே பிரசவிக்கிறார். எந்த பரபரப்பும் இன்றி குழந்தையை கையில் தூக்கிய அவர், குழந்தையை தடவிக்கொடுத்து சீராக மூச்சுவிடச் செய்தார். இவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தாய்மையின் மேன்மையை உணர்த்துவதுடன், சிக்கலான சூழ்நிலையில் எவ்வாறு சாமர்த்திய…

    • 0 replies
    • 597 views
  8. ஹாலிவுட்டில் வரும் பேய்ப்படங்களை டிவியில் பார்த்துப்பார்த்து கெட்டுப் போன, ஜெஸ்சி, ஜீனா காதல் தம்பதிகளுடைய பொழுது போக்கு என்ன தெரியுமா? பேய்களை வைத்து ஒருவருக்கொருவர் பயமுறுத்தி, பயத்தில் ‘ஓ மை காட்’ என்று அலறுபவரைப் பார்த்து ‘ஹை… பயந்துட்டியா…’ என்று சிரிப்பதுதான். இப்படி கேர்ள் பிரண்ட் ஜீனாவிடம் அடிக்கடி பல்பு வாங்கியதால் கடுப்பான ஜெஸ்ஸி, தன் வீட்டிலேயே ரூம் போட்டு யோசித்து, ப்ரொஜக்டர், கண்ணுக்கு தெரியாத திரை(screen) என்று பல அதி நவீன தொழில்நுட்பக் கருவிகளை வைத்து ஜீனாவை அலறவைத்ததுதான் இந்த வார யூடியூப் வைரல். - See more at: http://www.canadamirror.com/canada/46343.html#sthash.FANhkYR7.dpuf

    • 0 replies
    • 277 views
  9. சென்னையை கலக்கிய முல்லைத்தீவு யுவதி…. July 17, 20157:45 am ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் சென்னை பஷன் வீக் இந்தவருடம், இம்மாதம் 11, 12 ம் திகதிகளில் சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்றைய நாகரீக உலகில் நாளுக்கு நாள் பல புதிய ஆடை வடிவமைப்பை அறிமுகப்படுத்தும் பிரபல வடிவமைப்பாளர்கள் உலகின் பல பாகங்களில் இருந்து கலந்து கொண்டனர். சென்னையில் நடைபெற்ற இன் நிகழ்வில் 8 டிசைனர்ஸ் கலந்துகொண்டுள்ளனர். விஜய் டிவி தொகுப்பாளினி டி.டி, நடிகை சோனியா அகர்வால் போன்ற நட்சத்திரங்கள் கலந்து சிறப்பித்துள்ளனர். இந்தியாவில் முன்னணி டிசைனரில் ஒருவரான ரிதிகுமாரின் ஆடை வடிவமைப்பும் இதில் இடம்பெற்றது. இதில் இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவைப் பிறப்பிடமாக கொண்ட மதுசா …

  10. வீடு வீடாக பிச்சை கேட்டு வரும் சாமியார்கள், கோயில்களுக்கு முன்பு அமர்ந்திருக்கும் சாமியார்களை பார்த்திருப்போம். அவர்களின் கைகளில் கருப்பு நிறத்தில் காய்ந்த தேங்காயை நேர்வாக்கில் பாதியாக வெட்டி கொடுத்தது போன்று ஒரு பாத்திரம் இருக்கும். அரிசியோ, பணமோ அதில்தான் வாங்கிக் கொள்வார்கள். அதை திருவோடு, அட்சய பாத்திரம், கபாலம் என்ற பெயர்களில் அழைப்பார்கள்.இந்து மத துறவிகள் உடுப்புக்கு அடுத்து கொடுக்கும் முக்கியத்துவம் திருவோட்டுக்கே. சரி... இந்த திருவோடு எந்த மரத்திலிருந்து கிடைக்கிறது? எந்த நாட்டைச் சேர்ந்தது என்று தெரியுமா? அதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம். இந்த மரம் ‘மெக்ஸிகன் காலாபேஷ்’ என்று அழைக்கப்படுகிறது. ‘பிக்கோனியசேஸி’ என்ற வாகை மலர் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மரத்தி…

    • 0 replies
    • 1.5k views
  11. அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் டேவிட் கேனல்ஸ் என்பவரால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பறவைகளில் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் கழுகு, ஒரு கூட்டுக்குள் இருந்த கடல் காகத்தை கொத்தி தூக்கிக் கொண்டு வருகிறது. இதைப் பார்த்து ஆவேசமடைந்த மற்றொரு கடற்காகம் கழுகைக் காயப்படுத்தி அதன் காலில் மாட்டியுள்ள பறவையை விடுவிக்க முயற்சிக்கிறது. ஆனால் அதனால் கழுகின் சிறகை காயப்படுத்த முடியவில்லை. சோகத்துடன் பறந்து போய்விடுகிறது. இந்த புகைப்படத்தையும் செய்தியையும் தனது பேஸ்புக் பக்கத்தில் அமெரிக்க உள்துறை(U.S. Department of the Interior) பதிவேற்றியுள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/46320.html#sthash.xJjzcEwy.dpuf

    • 0 replies
    • 303 views
  12. இலங்கையில் “சிறுநீரக” விற்பனை..! பலர் அறியாத இருண்ட உலகம். July 17, 20158:36 am தமிழ் திரைப்படமொன்றில் இடம்பெற்ற நகைச் சுவை நடிகர் வடிவேலுவின் ‘ கிட்னி’ , அதாவது சிறுநீரகம் தொடர்பான நகைச்சுவை காட்சியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டார்கள். அதில், சிறுவனொருவனை வடிவேலு துரத்துவதும் , அவன் லாவகமாக நோயாளர் காவி வண்டியொன்றுக்குள் புகுந்துகொள்வதும் ,அங்கிருக்கும் கும்பல் வடிவேலுவின் சிறுநீரகத்தை சத்திரசிகிச்சை மூலம் எடுப்பதுமே அந்நகைச் சுவைக் காட்சியாகும். அண்மையில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படமும் இதேபோன்ற மனித உறுப்புத் திருட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இதை மேலோட்டமாக திரைப்படம் என்ற ரீதியில் பார்க்கும் போது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக தோன்ற…

    • 0 replies
    • 611 views
  13. ரங்கா- இ.தொ.கா தொடர்பும் மின்னல் அரசியல் நாடகமும் அம்பலம்: விசேட காணொளி July 17, 201511:29 am ராஜா மகேந்திரனின் மகாராஜா கூட்டு நிறுவன சக்தி தொலைக்காட்சி மின்னல் நிகழ்ச்சியில் ஜெஶ்ரீரங்கா செய்யும் அரசியல் கள்ள நாடகம் தற்போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளது. ஜூலை 4ம் திகதி இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியில் விருந்தினராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல் கலந்து கொண்டார். இதன்போது இப்தார் நிகழ்ச்சிக்கான இடைவெளியில் ரங்கா, சக்திவேல் மூலம் திகாம்பரத்தை திட்டச் சொல்லும் விதமும் அதற்கு அவர் சக்திவேலுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் மற்றும் காணொளி அடங்கிய வீடியோ ஒன்று எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் ரங்காவின் கள்ள அரசியல…

    • 2 replies
    • 1.3k views
  14. மகிந்தவின் ஒரு முக்கிய பெண்ணின் குடியும் – கூத்தும் அம்பலம். July 16, 201510:54 pm Malsha Kumaranatunge மேல் மகாண சபை பெண் உறுப்பினர் ஆவார் விஜய குமாரதுங்கவின் மகளான இவருக்கு நாகரீகம் தெரியுமா அல்லது சிங்கள மக்களின் மகிமை தான் தெரியுமா இரண்டும் தெரியாமல் இலங்கைத் திரு நாட்டை அசிங்கப் படுத்திய இவரை அரசியலில் விட்டால் சிங்கள மக்களின் நிலை என்னவாகும்……. இன்று பாராளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியம் என பலமான குரல்கள் எழும் நிலையில் இப்படியான அசிங்கங்கள் பாராளுமன்றம் சென்றால் என்ன நடக்கும் பாருங்கள் மக்களே…….. பலரும் நல்லாட்சி என சென்ற வேளை மகிந்தவுடன் சென்ற அனைவரும் அரையும் குறையும் அதற்கு இது நல்ல ஆதாரம்……. http://www.jvpnews.com/srilanka/116798.html

    • 0 replies
    • 438 views
  15. நேருக்கு நேராக வந்த விமானங்கள்: கண் இமைக்கும் நேரத்தில் பெரும் விபத்திலிருந்து தப்பிய பயணிகள் விமானம்[ வியாழக்கிழமை, 16 யூலை 2015, 02:18.45 பி.ப GMT ] சுவிட்சர்லாந்து விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று அவ்வழியாக எதிர்பாராமல் வந்த சிறிய ரக விமானம் மீது மோத இருக்கும் பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டுள்ளது.சுவிஸின் சூரிச் விமான நிலையத்திலிருந்து பயணிகளுடன் Swiss Jumbo Linos என்ற விமானம் நேற்று புறப்பட்டுள்ளது. ஓடுத்தளத்திலிருந்து மேலே கிளம்பிய சில நிமிடங்களில் விமான சென்ற பாதையில் எதிர்பாராமல் சிறிய ரக விமானம் ஒன்று குறுக்கிட்டுள்ளது. சிறிய ரக விமானத்தில் வந்த விமானிகள் பயணிகள் விமானத்தை கவனிக்க தவறியுள்ளனர். ஆனால், ஆபத்தை உணர்ந்த பயணிகள் வி…

    • 0 replies
    • 273 views
  16. பிரித்தானியாவில் இலங்கை உள்ளிட்ட அகதிகளுக்கான சலுகைப்பணம் குறைப்பு [ வெள்ளிக்கிழமை, 17 யூலை 2015, 11:13.23 AM GMT ] பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் வெளிநாட்டவர்களுக்கான சலுகைப்பணம் குறைக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய நடைமுறையின் கீழ் இலங்கையர்கள் உள்ளிட்ட அகதி அந்தஸ்த்து கோரும் அகதிகள் பாதிப்படையவுள்ளனர். இது தொடர்பான தகவலை பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இரண்டு பிள்ளைகளைக் கொண்ட அகதி குடும்பம் ஒன்றின் பெற்றோருக்கு இதுவரையில் 149.86 பவுட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. எனினும் இனிவரும் காலங்களில் 110.85 பவுண்களாக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அகதிகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் அகதிச் …

    • 0 replies
    • 156 views
  17. Chelvadurai Shanmugabaskaran கூகிள்(கோகுல்), மைக்ரோசாப்ட், முகநூல் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் நிரம்பிய இடமாகும். கையளவு மட்டுமல்ல கடவுளுக்கே கடன் கொடுக்கக்கூடிய வசதி படைத்தவர்கள் வாழும் இடம். அதிகாலையில் எழுந்து பழக்கப்பட்டதால் அன்றும் அதிகாலை ஐந்தரை மணியளவில் எழுந்து நகரின் நடுப்புறத்தில் அமைந்துள்ள கடைகள் அமைந்துள்ள தெருக்கள் ஓரமாக நடந்து கொண்டிருந்தேன். உயர்ந்த கட்டடங்கள், உயர்ந்த “பாம்” மரங்கள் அழகாக இருந்தன. காப்பிக் கடையை தேடியவாறு நடந்துகொண்டிருந்த என் கண்களில் சில காட்சிகள் தென்படவே சற்று அதிர்ச்சியுற்று அங்கேயே நின்றுவிட்டேன். அந்த நகரத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டடங்களிலும், தெரு ஓரமாகவும், பூங்காக்களிலும் பல வசதியற்ற பலர் படுத்திருந்தனர். அவர்கள் வீடற்றவர்க…

    • 0 replies
    • 259 views
  18. மஹிந்தவின் வெற்றிக்கு இந்திய றோ தீவிரம்…? July 16, 201510:43 am முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக இந்திய புலனாய்வு சேவையான றோ செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இதனடிப்படையில், பல்வேறு காரணங்களை கூறி இலங்கை வந்துள்ள இந்திய புலனாய்வு சேவையின் உறுப்பினர்கள் பல மாவட்டங்களில் நிலை கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்சவின் வெற்றி என்பது இந்தியாவின் தேவை என்பதுடன் தேர்தல் பிரசாரங்களின் போது இலங்கை அரசாங்கத்தின் தலையீடுகளால், மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களில் தொய்வுகள் ஏற்பட்டால், அது குறித்து இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்து அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு றோ அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக…

  19. ஜெர்மனியில் விநோதச் 'சம்பவம்' - இளம்பெண்ணைப் பின்தொடர்ந்த அணிலுக்கு 'சிறை' 'சிறை' பிடிக்கப்பட்ட அணில். ஜெர்மனியில் இளம்பெண்ணை பின்தொடர்ந்ததாக அணில் ஒன்றை அந்நாட்டு போலீஸார் 'கைது' செய்து சிறைபிடித்தனர். நார்த் ரைன் வெஸ்ட்ஃபேலியாவில் உள்ள Bottrop பகுதியில் போலீஸுக்கு வழக்கத்துக்கு மாறான புகார் வந்தடைந்தது. தன்னை ஒரு அணில் பின்தொடர்வதாகவும், உடனடியாக காப்பாற்றும்படியும் அந்த இளம்பெண் கேட்டுக் கொண்டார். புகாரைத்தொடர்ந்து அங்கு விரைந்த போலீஸார், அணிலை 'கைது' செய்தனர். அப்போது அந்த அணில் மிக சோர்வான நிலையில் இருப்பதை போலீசார் உணர்ந்தனர். உடனடியாக அணிலுக்கு தேனை ஊட்டி, அதற்கு தெம்பூட்டினர். அணில் கைது செய்யப்பட்டது மற்றும் அதற்கு தேன் கொடுக்கும் காட்சியை அவர்கள் சமூக வலைத…

    • 16 replies
    • 671 views
  20. நாயின்... காலைப் பிடித்து, தலைகீழாக சுற்றி தூக்கி வீசிய.... இளைஞர் கைது. டெல்லி: டெல்லியில் 21 வயது இளைஞர் ஒருவர் நாயை அடித்துத் துன்புறுத்துவதை வீடியோவாக எடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். அந்த நபரின் பெயர் ராகுல் குமார். 21 வயதாகும் அவர் விவேக் விகார் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவைப் போட்டிருந்தார். அதில் ஒரு தெரு நாயைப் பார்த்து அதை முதலில் அருகே போய் அதைத் தட்டிக் கொடுத்து கட்டித் தழுவுகிறார். பின்னர் அந்த நாயை சித்திரவதை செய்ய ஆரம்பிக்கிறார். அதை அடிப்பதோடு, ஒரு காலைப் பிடித்துத் தூக்கி சுற்றுகிறார். பின்னர் படு வேகமாக அந்த நாயை தூக்கி ஒரு கார் மீது வீசுகிறார். அந்த நாய் வீறிட்டுக் கத்து…

    • 4 replies
    • 333 views
  21. சுவையான "பர்கர்" பரிமாறிய ஒபாமா: சந்தோஷத்தில் மூழ்கிய சிறுமி[ புதன்கிழமை, 15 யூலை 2015, 08:22.59 மு.ப GMT ] வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 9 வயது சிறுமிக்கு பர்கர் பரிமாறியுள்ளார்.சமீபத்தில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிகாகோவை சேர்ந்த 9 வயது அமெரிக்க வாழ் இந்திய சிறுமி ஸ்ரேயா படேல் தனது தாயார் பிரீதி படேலுடன் கலந்து கொண்டார். விருந்தில் பல்சுவையான உணவுகள் பரிமாறப்பட்டன, அப்போது விருந்து நடைபெற்ற இடத்துக்கு திடீரென வருகை தந்த ஒபாமா, விருந்தில் உணவு பரிமாறுவதை பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல், சிறுமி ஸ்ரேயா படேலுக்கு ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல்லும் அவளுக்கு ‘கரம் மசாலா பர்கர்’…

    • 0 replies
    • 315 views
  22. சிறையிலிருந்து போதை பொருள் கடத்தல் மன்னன் தப்பியது எப்படி: வெளியான வீடியோ ஆதாரம் (வீடியோ இணைப்பு)[ புதன்கிழமை, 15 யூலை 2015, 10:27.46 மு.ப GMT ] மெக்சிகோ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல்காரன் Joaquin Guzman, 2வது முறையாக சிறையிலிருந்து தப்பியது அந்த சிறையில் இருந்த கமெராவில் பதிவாகியுள்ளது.சர்வதேச நாடுகளுக்கு பில்லியன் மதிப்பில் போதை பொருட்களை கடத்தி வந்த Joaquin Guzman என்ற குற்றவாளி கடந்த சனிக்கிழமை அன்று Altiplano சிறையிலிருந்து இரண்டாவது முறையாக தப்பியுள்ளான். சிறை அறையின் தளத்தை தோண்டி, பூமிக்குள் குகைப்போல சுமார் 1.5 கி.மீ தூரமுள்ள வழித்தடத்தை உருவாக்கி குற்றவாளி தப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளி சிறையிலிருந்து தப்பியது குறி…

    • 0 replies
    • 342 views
  23. உலக புகழ் பெற்ற பாப் இசை உலகின் அரசனாக விளங்கியவர் மறைந்த மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009ம் ஆண்டில் மரணம் அடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை மர்மம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. அவரது மரணத்திற்கு புரபனால் என்ற மருந்தை அதிக அளவில் கொடுத்த குற்றத்திற்காக டாக்டர் கன்ராடு முர்ரே என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். எனினும் ஜாக்சனின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கூறப்படுகின்றன. இந்நிலையில், அமெரிக்க அரசின் முன்னாள் ஏஜெண்டு ஒருவர் மைக்கேல் ஜாக்சனை கொலை செய்ய தீட்டப்பட்ட திட்டத்தில் தனக்கும் ஒரு பங்கு உள்ளது என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் ரகசிய மன கட்டுப்பாட்டு திட்டம் எம்.கே. அல்ட்ரா. இந்த திட்டம் தன…

    • 0 replies
    • 340 views
  24. டக்ளஸ் பெரிய கோடீஸ்வரர்! போட்டு உடைத்தார் ஈ.பி.டி.பி பிரமுகர்! [ புதன்கிழமை, 15 யூலை 2015, 10:20.29 AM GMT ] டக்ளஸ் தேவானந்தா ஒரு கோடீஸ்வரர்தான். இவர் வைத்திருக்கின்ற கோடீஸ்வர செல்வம் மக்களாகிய நீங்களே. என எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற சமூக சேவையாளர் சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் தெரிவித்தார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் நடத்தப்படுகின்ற மகேஸ்வரி பவுண்டேசன் நிறுவனம் உண்மையில் மக்கள் சேவை நிலையமே ஆகும், மாறாக மணல் கொள்ளை நிறுவனம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். இவர் வட்டுக்கோட்டையில் துணவி கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோதே இவ்வாறு கூறினார். இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு- யாழ். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.