Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஜனாதிபதி கோட்டாபயவின்... ஜோதிடரான, ஞானக்காவின்... ஜோதிட நிலையத்தினை, முற்றுகையிட முயற்சி – விசேட பொலிஸ் பாதுகாப்பு! அநுராதபுரத்திலுள்ள பிரபல ஜோதிடர் ‘ஞானக்கா’வின் இல்லத்திற்கு அருகில் இன்று(சனிக்கிழமை) பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அனுராதபுரத்திலுள்ள ஞான அக்காவின் சோதிட நிலையத்திற்கு ஆதரவாளர்கள் குழுவுடன் சென்றுள்ளார். இதன்போது குறித்த குழுவினரை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஞானா அக்காவுக்கு எதன் அடிப்படையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, அவர் அரசியல்வாதியா என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் ஹிருணிகா இதன்போது கேள்வி எழுப்பியி…

  2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கோடீசுவரர் இளவரசர் துர்கி பின் அப்துல்லா. இவர் தங்க தகடுகளால ஆன காரில் வலம் வருகிறார். இவர் லண்டனில் தனது ஆடம்பரகார்களான பென்ட்லி, மெர்சிடஸ், லாம்கினி ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் தங்க தகடுகள் பொருத்தி வலம் வருகிறார். அவரது ஆடம்பர வாழ்க்கையை அவரது சமூக வலைதள பதிவுகளில் இடம் பெறும் புகைப்படங்கள், வீடியோக்கள் தெரிவித்து வருகின்றன. லண்டனில் உள்ள அவரது வீட்டில் மட்டும் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க கார்கள் இருப்பதாக இங்கிலாந்து செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/gold-car-saudi-arabia-rich-prince-turki-bin-abdullah-…

  3. வாகன விபத்தில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி 13 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிர்காக்கும் இயந்திரத்தின் ஆதரவில் இருந்த பத்து வயது மாணவன் திங்கட்கிழமை (10) உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 1047/02 பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்லவில் வசிக்கும் குமார வடுகே பசிந்து பதியா என்ற 10 வயது மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்தாண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி கொஸ்வத்தை தலங்கம வீதிக்கு அருகில் உள்ள மைதானத்தில் விளையாடிவிட்டு வீடு திரும்பும் போது குறித்த மாணவர் தனது உறவினர்கள் ஐவருடன் வீதியைக் கடக்கும்போது வேகமாக வந்த கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குழந்தையின் தந்தையும் அவரது சகோதரரும் வீதியின் மறுபக்கத்திலிரு…

  4. 31 வருடங்களுக்கு முன்னர் குழந்தையைக் கடத்தியவர் கைது! 31 வருடங்களுக்கு முன்னர் குழந்தையொன்றைக் கடத்தியவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர், பொலிஸ் படையினர் மீது பொது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது காவல் துறை மீது நம்பிக்கை கொண்டு தங்கள் குழந்தைகளை கடத்தியவர்களை பொலிஸார் கைது செய்வரென கடத்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்னர், ஜேர்மின் என்ற குழந்தையைக் கடத்திய நபர் அலன் மேன், கனடாவின் வேர்நோம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கனடா, கானா நாடுகளின் பிரஜையாவார். கடந்த 1987 ஆம் ஆண்டு ஜுன் 24 ஆம் ஆண்டு 21 மாதக்குழந்தையை ரொறன்ர…

  5. கனடா- மகனை இழந்த துக்கத்தில் இருந்த தாயாருக்கு மீண்டும் ஒரு முறை இதயத்தை நொருக்கும் சம்பவம் வன்கூவர் விமான நிலையத்தில் ஏற்பட்டது. தனது மகனின் சாம்பலை ஒரு பட்டு கேரியருக்குள் வைத்திருந்ததை வெளியே எடுக்குமாறு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தமையே காரணமாகும். மார்நி முட்ச் என்ற இவர் தனது மகன் றெஹெட்டின் அஸ்தியை ஒரு பெரிய அடைத்த கருப்புள்ளி வண்டிற்குள் வைத்திருந்ததுள்ளார். தனக்கு ஆறுதல் தேவைப்படும் போது அணைத்துக்கொள்ள அவ்வாறு வைத்திருக்கின்றார். கடந்த நவம்பர் மாதம் இவரது 20-வயது மகன் றெஹெட் வன்கூவர் பொலிசாரால் சுடப்பட்டு இறந்துள்ளார். இவரது மரணவிசாரனை நடந்து வருகின்றது. முட்ச் வன்கூவர் விமான நிலைய பாதுகாப்பு பகுதிக்கூடாக அந்த கருப்புள்ளி வண்டை கொண்டு வ…

  6. 300 ஆண்டுகளுக்கு பின் சிறுமியின் சடலம் திடீரென கண் விழித்ததால் பரபரப்பு ( வீடியோ இணைப்பு) மெக்ஸிகோ நாட்டில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த சிறுமியின் சடலம் ஒன்று திடீரென கண் விழித்து பார்த்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவில் உள்ள ஜலிஸ்கோ நகரில் கூதலஜாரா என்ற ஆலயத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தையினால் கொலைசெய்யப்பட்ட இனசென்சியா என்ற சிறுமியின் சடலம் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றது. 300 ஆண்டுகளுக்கு முன்னர் மெக்ஸிகோவில் இச்சிறுமி வாழ்ந்து வந்துள்ளார். அப்போது, இயேசுவின் மீது கொண்டுள்ள பக்தியால் அவரை பற்றி மக்களுக்கு போதனை செய்ய தனது தந்தையிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆ…

  7. ஹாலிவுட்டில் வரும் பேய்ப்படங்களை டிவியில் பார்த்துப்பார்த்து கெட்டுப் போன, ஜெஸ்சி, ஜீனா காதல் தம்பதிகளுடைய பொழுது போக்கு என்ன தெரியுமா? பேய்களை வைத்து ஒருவருக்கொருவர் பயமுறுத்தி, பயத்தில் ‘ஓ மை காட்’ என்று அலறுபவரைப் பார்த்து ‘ஹை… பயந்துட்டியா…’ என்று சிரிப்பதுதான். இப்படி கேர்ள் பிரண்ட் ஜீனாவிடம் அடிக்கடி பல்பு வாங்கியதால் கடுப்பான ஜெஸ்ஸி, தன் வீட்டிலேயே ரூம் போட்டு யோசித்து, ப்ரொஜக்டர், கண்ணுக்கு தெரியாத திரை(screen) என்று பல அதி நவீன தொழில்நுட்பக் கருவிகளை வைத்து ஜீனாவை அலறவைத்ததுதான் இந்த வார யூடியூப் வைரல். - See more at: http://www.canadamirror.com/canada/46343.html#sthash.FANhkYR7.dpuf

    • 0 replies
    • 277 views
  8. இறந்தவரின் கழுத்தில், கயிற்றைக் கட்டி... தரதரவென இழுத்துப் போன போலீஸ்! வைஷாலி, பீகார்: பீகார் மாநிலம் வைஷாலி நகரில் ஆற்றில் மூழ்கி இறந்தவரின் உடலை மீட்ட போலீஸார், அந்த நபரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தரையோடு தரையாக இழுத்துச் சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைஷாலி நகரில் உள்ள கங்கையாற்றில் மூழ்கி ஒருவர் இறந்து விட்டார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் போலீஸார் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். அதன் பின்னர் இறந்த நபரின் கழுத்தில் பெரிய கயிற்றைக் கட்டி கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரத்திற்கு உடலை இழுத்துச் சென்றனர். இதை அங்கு கூடியிருந்த மக்களும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். இத்தனைக்கும் ஆற்றில் அந்த நபர் விழுந்ததுமே போலீஸாருக்குத் தகவல் போனது…

  9. சீனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை விதிப்பு! மியன்மாரில் ஆள்கடத்தலில் ஈடுபட்ட 11 பேருக்கு சீன அரசாங்கம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. மியான்மரின் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களைக் கடத்திச் சென்று, அவர்களை அடிமைகளாக வைத்து இணைய மோசடிகளில் ஈடுபடுத்தி வந்த பிரபல குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களுக்குச் சீன அரசாங்கம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள கோகாங் பிராந்தியத்தில் குறித்த மோசடி மையங்கள் இயங்கி வந்தன. இந்தக் குடும்பம் அந்தப் பகுதியில் மிகச் செல்வாக்குமிக்க ஒரு மாஃபியா கும்பலாகச் செயல்பட்டு வந்தது. இவர்கள் சீன குடிமக்களைக் குறிவைத்து தொலைபேசி மற்றும் இணையம் ஊடாகப் பல கோடி ரூபாய் மோசடிகளைச் செய்துள்ளதாகக் …

  10. திருமணத்தை தொகுத்து வழங்கிய பாகிஸ்தானிய ஊடகவியலாளர் மணமகன்!!! பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தனது கல்யாண நிகழ்ச்சியை நேரலையாக தொகுத்து வழங்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஹனன் புஹாரி என்பவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த வாரம் திருமணம் நடந்தது. மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அவரது திருமணமானது தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டது. இதில் வித்தியாசமான செய்தி என்னவென்றால் புஹாரி தனது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்களை பேச வைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவர் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் பேட்டி எடுத்தார். இந்த…

    • 2 replies
    • 276 views
  11. இன்று 19/06/12 காலை சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தந்தி அனுப்பும் நிலையத்தில் , செங்கல்பட்டு ஈழ அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்க என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து பல நூறு மக்கள் தமிழக முதல்வருக்கு தந்தி அனுப்பினர். இந்த தந்தி அனுப்பும் போராட்டத்தில் மதிமுக மல்லை சத்தியா, விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னி அரசு, தமிழர் முன்னேற்ற கழகம் அதியமான், தோழர் தியாகு , சிபிஐ மகேந்திரன் , மே 17 திருமுருகன், இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், மனித நேய மக்கள் கட்சியினர் , மற்றும் பல அமைப்புகளும் அமைப்பு சாரா பொதுமக்களும் கலந்து கொண்டு முதல்வருக்கு தந்தி அனுப்பினர். கூட்டம் அதிமாகவே தந்தி நிலையத்தில் நெரிசல் கூடி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்த…

  12. இரட்டைக் குழந்தைகளுக்கு ‘குவாரண்டைன்’ மற்றும் ‘சானிட்டைசர்’ என பெயர் சூட்டிய பெற்றோர் கொரோனா வைரஸ் தாக்கம் உலகில் மனிதப் பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், சிலபல விசித்திர நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. மீரட்டில் ஒரு தாய் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கொரோனா காலத்தின் இணைபிரியாத தனிமைப்படுத்தல் மற்றும் கிருமிநாசினி துப்புரவு பொருள் ஆகியவற்றின் நினைவாக தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு அவர்கள் விநோத பெயர்களைச் சூட்டியுள்ளனர். அதற்கமைய ‘குவாரண்டைன்’ மற்றும் ‘சானிட்டைசர்’ என்ற பெயர்களை தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு முறையே பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர் பெற்றோர். இது தொடர்பாகக் கூறும்போது, ‘இந்த இரண்டு பெயர்கள், அதாவது குவாரண்டைன் மற்றும் சானிட்டைசர…

  13. கொரோனா சிகிச்சையில் "காயத்ரி மந்திரம்" பலனளிக்குமா.? - எய்ம்ஸ் மருத்துமனை ஆய்வு.! டெல்லி: ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி மையம், மிதமான அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகளுக்கு மருந்துகளுடன், காயத்ரி மந்திரம், மதப்பாடல், மூச்சு பயிற்சி (யோகாசனம்) ஆகியவற்றை செய்ய வைத்து விளைவை மதிப்பீடு செய்ய உள்ளது. மருந்துகளுடன் அளிக்கப்பட உள்ள இந்த துணை சிகிச்சை சோதனையில் நல்ல பலன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்), அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் இதற்கான (டிஎஸ்டி) நிதியுதவி அளித்துள்ளது, இதன்படி கொரோனா நோயாளிகளுக்கு மருந்துகளுடன், காயத்ரி மந்திரம், மதப் பாடல், மற்றும் யோகாசனம் ஆகியவற்றை செய…

  14. சென்னை அடுத்த ஆவடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மென்பொறியாளர், வருங்கால கணவனுடன் செல்ஃபி எடுக்க முயன்று விவசாயக் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த ஆவடி அருகே பட்டாபிராமைச் சேர்ந்த அப்பு என்பவருக்கும், மென்பொறியாளரான மெர்சிக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமணத்திற்கு இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில், இருவரும் வெளியில் ஜோடியாக சந்தித்துப் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். அந்த வகையில் ஆவடி அருகேயுள்ள செம்மஞ்சேரி சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு வயல்வெளியில் ஒன்றாக பேசி பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த இருவரும் அங்கிருந்த விவசாயக் கிணற்றின் உடைந்து போன சுற்றுசுவரின…

    • 0 replies
    • 276 views
  15. 124 வயதில் தனியே விமானத்தில் நீண்ட நேரம் பயணம் செய்த முதியவர் – வியப்பில் விமான நிறுவனம்! பல மணித்தியாலங்கள் ஒரே இருக்கையில் விமானப் பயணம் மேற்கொள்வது சாதாரண மனிதர்களுக்கும் சற்று கடினமான விடயம்தான். அத்துடன், விமான நிலையங்களில் கால் கடுக்க நிற்பதும் பலருக்கு கடுமையான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகின்றது. சில சமயங்களில் பெரிய விமான நிலையங்களில் எங்கு செல்வது என்பது கூட குழப்பமான விடயம்தான். இளைஞர்களுக்கே சிரமமாக தோன்றும் 16 மணிநேர விமானப் பயணத்தை எந்த உதவியும் இன்றி தனியே சென்றுள்ளார் 124 வயது சுவாமி சிவானந்த பாபா. எத்திஹாட் எயாவேஸ் (Etihad Airways) விமானத்தில் கொல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு அபுதாபி வழியாக அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். முதியவரின் உடல் …

  16. ஒடிசா மாநிலத்தின் கஞ்ஜாம் நகரில் உள்ள பாரதி வித்யா பீட பள்ளியில் மெட்ரிகுலேசன் தேர்வுகள் அண்மையில் நடந்தன. இதில், கணித தேர்வின்போது மாணவர் ஒருவர் 20 நிமிடம் தாமதமாக தேர்வு மையத்துக்கு வந்துள்ளார். தேர்வு மைய கண்காணிப்பாளர் அவரை தேர்வு எழுதுவதற்காக அனுமதிக்க சோதனையிட்டபோது அவர் செல்போன் வைத்திருந்தது தெரிய வந்தது. சிறிது நேரத்தில் அந்த மாணவரின் செல்போனுக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளும், மிஸ்டு கால்களும் வந்த வண்ணம் இருந்தன. குறுஞ்செய்திகளில் அன்றைய தேர்வுக்கான விடைகள் இருந்தன.இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவரின் செல்போனை பறிமுதல் செய்ததுடன் மாவட்ட கல்வி அதிகாரிக்கும் தகவல் தெரிவித்தார். பின்னர் இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்த…

  17. ஆப்பிளை வாங்குகிறது கூகுள்: போலி செய்தியால் பரபரப்பு! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLOIC VENANCE/AFP Image caption"ஆப்பிளின் ஆடம்பரமான தலைமையகத்துக்கு" கூகுள் நிறுவனம் இடம்பெயருமென்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. "$9 பில்லியனுக்கு ஆப்பிளை வாங்குகிறது கூகுள்" என்ற தலைப்புச்செய்தி டவ் ஜோன்ஸின் நிதிநிலை செய்திப்பிரிவின் இணையதளத்தில் செவ்வாய்க்கி…

  18. மாவனெல்ல சோகத்தில் துப்புக்கொடுத்த நாய் ! By கிருசாயிதன் (படம் பிரதீப் குமார தர்மரத்ன) நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற வானிலையை அடுத்து பெய்த அடைமழை, வௌ்ளம், மண்சரிவுகளில் சிக்குண்டு, இதுவரையிலும் 16 பேர் மரணமடைந்துள்ளனர். மூவர் காணாமற் போயுள்ளனர். இயற்கை அனர்த்தங்களால், இரண்டு இலட்சத்து 70 ஆயிரத்து 12 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரும், சடலங்கள் நேற்று (05) மீட்கப்பட்டனர்.வீடொன்றின் மீது மண்மேடு, சரிந்து விழுந்ததிலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை (வயது 57), தாய் (53 வயது), மகன் (வய…

  19. பிறக்க போகும் தனது குழந்தையை இளம் கர்ப்பிணி ஒருவர் 68 ஸ்ரேலிங்பவுனுக்கு விற்பனை செய்வதாக முகத்தளத்தில் விளம்பரம் செய்த சமப்வமொன்று சிலி நாட்டில் இடம்பெற்றுள்ளது. வெரோனிகா கரார சபாரோ என்ற 18 வயது பெண்ணே இத்தகைய செயற்பாட்டில் ஈடுப்பட்டுள்ளார். இவரையும் இவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மற்றும் சகோதரியையும் சிலி நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்துகொண்ட அப்பெண் அது குறித்து தனது காதலுனுக்கு அறிவித்துள்ளதுடன் அது தொடர்பில் யாரிடமும் தெரிவிக்க வேண்டாமென்று கூறியுள்ளார். ஆனால், அப்பெண்ணின் காதலன் அந்த இரகசியத்தை அப்பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிவித்துவிட்டார். இதனையடுத்து கருவை கலைத்துவிடும்படி அப்பெண்ணுக்கு தாய் அறிவுறுத்தியு…

  20. நமக்கு தேவையான பொருட்களெல்லாம் ஆட்டோல டெலிவரி ஆகிப் பாத்திருப்பீங்க, இல்ல கொரியர்ல டெலிவரி ஆகிப் பாத்திருப்பீங்க. வானம் வழியா டெலிவரி ஆகறதப் பாத்துருக்கீங்களா? இனிமேல் பார்ப்பீங்க. ஆம். அமெரிக்காவின் நெவாடாவில் ஆகாய வழியாக நீர், உணவு மற்றும் முதலுதவிப் பொருட்களை டெலிவரி செய்துள்ளது டுரோன் எனப்படும் பறக்கும் ரோபாட். டுரோன் என்பது வேறொன்றுமல்ல. நண்பன் திரைப்படத்தில் விஜய், ஒரு கருவியை பறக்கவிட்டு சத்யனின் அறையை கேமரா மூலம் பார்ப்பார் அல்லவா, அதுதான் டுரோன். முதலில் மீட்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த டுரோன்களை, பொருட்களை டெலிவரி செய்யப் பயன்படுத்த நினைத்தார்கள். அதன் வடிவமைப்பை சற்று மாற்றி, பொருட்களை கவனமாக தாங்கிச் செல்லும் வகைய…

  21. காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மாணவர்கள் மனு! [Wednesday, 2014-02-12 18:13:05] நாளை மறுநாள் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து மாணவர்கள் பொதுநல சங்க பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், 30–க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்று துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் இன்று ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:–பிப்ரவரி 14–ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. சென்னையிலும் இது தொடர்பான கொண்டாட்டங்கள் நாளை மறுநாள் நடைபெறும்.நாளை மறுநாள் பொது இடங்களில் சந்தித்துக் கொள்ளும் காதலர்களுக்கு காவல் துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். காதல் ஜோடிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.காதலர் …

  22. புலம்பெயர் இலங்கையரை இலக்கு வைத்து இலங்கை எங்கும் காணி, வீடு, கடைகள் என ஆதன மோசடிகள் பரவலாக நடை பெறுவதாக தெரிகிறது. சில இடங்களில் பொலீசாருக்கு அல்லது உள்ளூர் காடையர்களுக்கு பணமும் கொடுத்து பயமுறுத்தல்கள் நடந்துள்ளன. சில இடங்களில், உங்களுக்கு இதெல்லாம் பெரிய சொத்தா, எமது பிள்ளைக்கு சீதனமா கொடுங்களன், கரை சேர்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று எமோசனல் தாக்குதல் நடக்கிறது. இலண்டணில் ஒரு வைத்திய நிபுணர். பிள்ளைகள் இல்லை. மணைவியும் அவருமாக வெள்ளவத்தையில் பல ஆண்டுகளுக்கு முன் அடுக்குமாடி வீடு ஒன்றை வாங்கி அவ்வப்போது போய் தங்கி வருவார்கள். இந்நிலையில் வைத்தியர் கோவிட் காலத்தில் இறக்க, விதவை மணைவி போனவருடம் போயிருக்கிறார். வீட்டில் வேறு யாரோ... விசாரித்தால் வ…

  23. அரசியலை விட்டு ஓடிப் போக மாட்டேன்! அரசியலை மாற்றும் மந்திரம் என்னிடம் இருக்கிறது!- கருணா [ புதன்கிழமை, 22 யூலை 2015, 12:00.04 AM GMT ] சுசில் பிரேமஜயந்தவும், அனுர பிரியதர்ஷன யாப்பாவும் தேசியப் பட்டியலில் இடம் தருவதாக கூறி இறுதியில் என் காலை வாரினாலும் நான் அரசியலை விட்டு ஓடிப்போகப் போவதில்லை. இலங்கை அரசியலை மாற்றும் மந்திரம் என்னிடம் மட்டும்தான் இருக்கிறது என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) நேற்று தெரிவித்தார். பிரபாகரன் உயிரோடு இருக்கும் போதே அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தை திறந்தேன். கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கவச வாகன பாதுகாப்பில் அழைத்துச் சென்று கட்சி அலுவலகத்தை திறந்த…

    • 5 replies
    • 275 views
  24. சென்னையில் அரசு மருத்துவமனையில், மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இளைஞர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். தங்கள் தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, மருத்துவரை கத்தியால் குத்தியுள்ளனர். கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு, அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்தியால் குத்திய இளைஞர்கள்…

  25. டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் நடந்து வரும் சிறுநீரக மோசடி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்களின் வறுமையை பயன்படுத்தி சில லட்சங்களை விட்டெறிந்து சிறுநீரகங்களை பிடுங்கிக்கொள்ளும் கொடூரம் தெரியவந்துள்ளது. இக்குற்றச்சாட்டு தொடர்பாக அப்பல்லோவின் மூத்த சிறுநீரக பிரிவு மருத்துவர் ஒருவரின் உதவியாளர்கள் சைலேஷ் சக்சேனா, ஆதித்யா சிங் ஆகிய இருவர் மற்றும் மருத்துவமனையிலிருந்த மூன்று இடைத்தரகர்களான சிக்தர், மவுலிக், பிரகாஷ் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். சிறுநீரக பிரிவு மூத்த மருத்துவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக பத்திரிகைகள் கூறுகின்றன. இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள டெல்லி அரசு இதை விசாரிக்க 5 பேர் கொண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.