செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 …
-
- 0 replies
- 205 views
-
-
ஆன்மீக ஆலோசனை வழங்கிய பெண்ணை 3ஆவது முறையாக திருமணம் முடித்தார் இம்ரான் கான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் "தெஹ்ரீக் ஈ இன்சாப்" கட்சி தலைவரான இம்ரான் கான் 3ஆவது முறையாக திருமணம் செய்து கொண்டார். அணியின் கப்டனாக இம்ரான் கான் இருந்த போது கடந்த 1992ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தன் வசப்படுத்திக் கொண்டது. கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின் பாகிஸ்தான் "தெஹ்ரீக் ஈ இன்சாப்" என்ற தனி கட்சியை தொடங்கி வழிநடத்தி வருகிறார் கான். இங்கிலாந்து நாட்டு கோடீஸ்வரரின் மகளான ஜெமிமா கோல்ட்ஸ்மித் மற்றும் இம்ரான் கான் திருமணம் 1995ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 9 வருட திருமண வாழ்க்கைக…
-
- 0 replies
- 205 views
-
-
15 வயது சிறுமி விற்பனை – 4 இணையத்தளங்களுக்கு தடை! கல்கிசை பகுதியில் 15 வயதான சிறுமியொருவரை பாலியல் செயற்பாடுகளுக்காக இணையத்தளத்தின் ஊடாக விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வௌியிட்ட 4 இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மகளிர் மற்றும் சிறுவர் பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் https://athavannews.com/2021/1233947
-
- 0 replies
- 205 views
-
-
சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் பருத்தித்துறையில் இருவர் கைது! 15 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று(வியாழக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயதுச் சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்துப் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை கற்கோவளம் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்றுமுன்தினம் இரவு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, இருவேறு நேரங்களில் 2 இளைஞர்களினால் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ…
-
- 0 replies
- 204 views
-
-
யாழ்.மாநகர சபை உறுப்பினர்களின்.... மோட்டார் சைக்கிளில் இருந்து, பெட்ரோல் திருட்டு! யாழ். நகர் பகுதியில் யாழ். மாநகர சபை பெண் உறுப்பினர் உள்ளிட்ட இருவரின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஒழுங்கமைப்பில் உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களுக்கான செயலமர்வு நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. அதில் பங்கேற்க சென்ற பெண் உறுப்பினர்களின் மோட்டார் சைக்கிளில் இருந்தே பெட்ரோல் திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளருக்கு முறைப்பாடு அளிக்கப்ட்ட நிலையில், பாதுகாப்பு கமராக்களின் உதவிகளுடன் விசாரணைகளை முன்னெடுப்பதாக முகாமையாளர் உறுதி அளித்துள்ளார். …
-
- 1 reply
- 204 views
-
-
நவராத்திரி விழாவுக்கு பாடசாலை மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட ரூ. 64 ஆயிரம் ரூபாவை அப்படியே ஆட்டையை போட்ட பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர், பூசாரியிடம் முட்டையொன்றை மந்திரித்து பாடசாலை மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவரிடமும் சத்தியம் வாங்கிய சம்பவமொன்று அம்பலமாகியுள்ளது. நவராத்திரி விழாவினை முன்னிட்டு ஒரு மாணவரிடம் 150 ரூபாய் அடிப்படையில் 64,000ம் ரூபாய் பணம் குறித்த பாடசாலையின் அதிபரினால் வசூல்செய்யப்பட்டது. இவ்வளவு பணம் வசூல் செய்யப்பட்டு இரண்டு தினங்களில் பாடசாலையின் அதிபரினால் களவாடப்பட்டதாக மாணவர்களும் ஆசிரியர்களும் விசனம் தெரிவிக்கின்றனர். அதனை மூடி மறைப்பதற்கே முட்டையை வைத்து நாடகமாடுகின்றார் என்றும் தெரிவிக்கின்றனர். இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டைம…
-
- 0 replies
- 204 views
-
-
பெண்களுக்கு “ஹலோ” கூறிய பிக்குகளை நையப்புடைத்த இளைஞர்கள் பெண்களுக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்திய விவகாரம் சூடுபிடித்ததை அடுத்து பிக்குகள் இருவரை பிரதேச இளைஞர்கள் ஒன்றுதிரண்டு நையப்புடைத்த சம்பவம் பொலன்னறுவையில் இடம்பெற்றுள்ளது. பொலன்னறுவை – தமன கெமுனுபுர ஸ்ரீ நிக்ரோதாராமவாசி விகாரையைச் சேர்ந்த பிக்குகள் இருவர் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி பொலன்னறுவை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகிய இரண்டு பிக்குகளும், 15 மற்றும் 14 வயதுடையவர்கள் என்று பொலன்னறுவை பொலிஸார் குறிப்பிட்டனர். விகாரையை அண்மித்த வீடுகளிலுள்ள பெண்களுக்கு குறித்த பிக்குகளால் தொலைபேசி அழைப்புக…
-
- 0 replies
- 203 views
-
-
16 JUL, 2023 | 10:01 AM மத்தியபிரதேசத்தில் ஒரு கறியில் கூடுதலாக 2 தக்காளிகளை கணவன் பயன்படுத்தியதால் ஆத்திரமடைந்த மனைவி கணவனை விட்டுப் பிரிந்தார். அவரை சமாதானப்படுத்திய போலீஸார் நேற்று கணவனுடன் சேர்த்து வைத்தனர். நாட்டில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஓட்டல் மற்றும் கடைகளில் தக்காளி இல்லாமல் சமையல் செய்ய முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் தக்காளி விலை உயர்வால் தம்பதிகள் பிரிந்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் நடந்தது. இம்மாநிலத்தின் ஷாதோல் மாவட்டம் தான்புரியை சேர்ந்தவர் சஞ்சீவ் வர்மா. இவரது மனைவி ஆர்த்தி. கணவன் – மனைவி இருவரும் அப்பகுதியில் சிறு ஓட்டல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்இ கடந்த…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
புதிதாக பிறந்த சிங்கக் குட்டிகளுக்கு பெயர் வைக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு! ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவில் புதிதாகப் பிறந்த ஆறு சிங்கக் குட்டிகளுக்கு பெயர் வைக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பூங்கா நிர்வாகத்தின் கூற்றுப்படி, டோரா மற்றும் லாரா ஆகிய சிங்கங்கள் கடந்த மாதம் தலா மூன்று சிங்கக் குட்டிகளைப் பெற்றெடுத்தன. சிங்கம் டோராவுக்கு 3 பெண் குட்டிகளும், லாராவுக்கு இரண்டு பெண் குட்டிகளும் ஒரு ஆண் குட்டியும் பிறந்தன. ஏறக்குறைய மூன்று மாதங்களே ஆன சிங்கக்குட்டிகள் பெப்ரவரி மாதம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தயாராகி வருகிறது. இந்நிலையில், ரிதியகம சபாரி பூங்கா நிர்வாகம், சிங்கக் குட்டிகளுக்கு பெயர் வைக்க பொதுமக்களுக்கு வாய்ப்பினை ஏற்படு…
-
-
- 2 replies
- 203 views
-
-
82 வயதில் சிறையில் இருந்தபடியே, 12ம் வகுப்பு `பாஸ்` செய்தார் சௌதாலா ஹரியானா மாநிலத்தில் நான்கு முறை முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சௌதாலா தனது 82ம் வயதில் பனிரெண்டாம் வகுப்பு பரீட்சையில் தேர்வு பெற்றுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇளமையில் இழந்த கல்வியை , முதுமையில், சிறைவாசத்தில் பெற்றார் சௌதாலா டெல்லியில் உள்ள திஹார் சிறையில் இருக்கும் தனது தந்தை சிறை தண்டனை காலத்தை அர்த்தமுள்ளதாக பயன்படுத்த முடிவெடுத்துள்ளார் என்று ஓம் பிரகாஷ் சௌதாலாவின் மகன் அபெய் சௌத்தாலா தெரிவித்தார். ஆசிரியர்களை பணியமர்த்துவதில் தவறு இழைத்ததற்காக 2013ல் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்ட…
-
- 0 replies
- 203 views
-
-
மிருசுவிலில் தாயும் 7 மாத குழந்தையும் கிணறொன்றில் இருந்து சடலமாக கண்டெடுப்பு! யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கபட்டுள்ளனர். மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே சடலமாக கண்டெடுக்கபட்டுள்ளனர். கணவன் மனைவிக்கு இடையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் , அதன் பின்னர் அதிகாலை 2 மணியளவில் மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என கணவன் தேடிய நிலையில் காலை இருவரும் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ…
-
- 0 replies
- 203 views
-
-
Published By: DIGITAL DESK 3 28 JUN, 2024 | 11:13 AM யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸரில் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டமை தொடர்பில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், மிக்ஸரை விற்பனை செய்த நபருக்கு 15ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு, ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர், ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது, அதனுள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்லியுடன் காணப்பட்ட…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகள் : பெண்களை பாதுகாக்க புதிய கருவி கண்டுப்பிடிப்பு! உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ‘ஆண்டி ரேப் கன்’ என்ற பணப்பையை உருவாக்கியுள்ளார். வாரணாசியைச் சேர்ந்த ஷியாம் சவுராசியா என்பவரே குறித்த கருவியை கண்டுப்பிடித்துள்ளார். இந்த பிரத்யேக மணி பர்ஸுக்குள் புளூடூத் பொருத்தப்பட்டிருப்பதால் ஆபத்து நேரத்தில் இதில் இருக்கும் பொத்தானை அழுத்தி காவல் நிலையத்தின் உதவியை பெறமுடியும் என அவர் தெரிவித்துள்ளார். ஆபத்து தீவிரமாக இருந்தால், சிக்கலில் இருப்பவர்கள் பணப்பையில் பொருத்தப்பட்ட ட்ரிகரை அழுத்தினால் அதிலிருந்து வெளியேறும் பயங்கர சத்தம் அருகில் உள்ளவர்ளுக்கு சம்பவம் குறித்து கவனிக்கச் செய்ய…
-
- 0 replies
- 203 views
-
-
கனகராசா சரவணன் பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு (ஐ லவ் யூ) தெரிவித்த அதே வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவனை அதிபர் பிரம்பால் கண்டித்ததையடுத்து மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக அந்த பிரதேச பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது; ஆண், பெண் பிள்ளைகள் கற்றுவரும் கலவன் பாடசாலையில் சம்பவதினமான நேற்று குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவரை பார்த்து அதே வகுப்பில் கல்விகற்று வரும் மாணவன் (ஐ லவ் யூ) என தெரிவித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனையடுத்…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
வெளிநாட்டில் தமது பிள்ளைகளுடன் 70 வது பிறந்த தினத்தை கொண்டாடிய பின் இலங்கை திரும்பவிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, நாடு திரும்பாமல் கனடாவிற்கு அவசர பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் தேர்தல் களம் மிகவும் சூடு பிடித்துள்ள நிலையில், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாடு திரும்பியதும் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை விடுக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. எனினும் அவர், அவசரமாக கனடா சென்றதாகவும், அங்கு அவர் ஒருவார காலம் தங்கியிருக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்யும் திட்டங்களை கனடாவில…
-
- 0 replies
- 202 views
-
-
பிள்ளையாரை திருடியவர், சி.சி.டி.வி.யில் வசமாக மாட்டிக்கொண்டார் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கொட்டகலை கொமர்சல் பகுதியில் வீடு ஒன்றில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து பிள்ளையார் சிலை ஒன்று கார் ஒன்றில் வந்த இளைஞரால் திருடப்பட்டு மூன்று நிமிடத்தில் மீண்டும் கொண்டு வந்து அங்கு வைக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் முன்புறம் இருந்த பிள்ளையார் சிலையினை காலையில் பார்க்கும் போது, அது இருந்த இடத்திலிருந்து வேறொரு இடத்தில் இருப்பதனை கண்டு வீட்டு உரிமையாளர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.யினை பரிசோதித்துள்ளார். இதன் போது நபரொருவர் சொகுசு கார் ஒன்றில் நேற்று அதிகாலை 5.27 மணியளவில் வந்து …
-
- 0 replies
- 202 views
-
-
சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு மனிதன், ஐந்து பெண்களை ஒரே நேரத்தில் ஏமாற்றி பணத்தை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தை சேர்ந்த சியாஜுன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தன்னை பணக்காரன் என்று கூறி, 5 பெண்களை ஏமாற்றியுள்ளார். சியாஜுன் பணக்கார பின்புலத்தில் பிறந்திருக்கவில்லை. அவரது தந்தை கட்டுமானத் துறையில் பணிபுரிந்து வந்தார். மேலும் அவரது தாயார் குளியல் இல்லத்தில் உதவியாளராக இருந்து வருகிறார். ஏழ்மையின் காரணமாக படிப்பை விட்டுவிட நேர்ந்தாலும் தன்னை பணக்காரனாக காட்டிக் கொண்டு, ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திக்கொண்டார். அவரிடம் பெரும் பணக்காரன் போல நடித்து, விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும் கொடுத்து வந்தார். …
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
அன்னதானத்தை நம்பியிருந்த ஆதரவற்ற சிறுவன் ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய கதை கட்டுரை தகவல் எழுதியவர்,ஆசிப் அலி பதவி,பிபிசி செய்தியாளர் 5 ஜனவரி 2023, 05:34 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ASIF ALI புத்தகங்களை நண்பர்களாகக் கொண்டிருக்க வேண்டிய வயதில், துரதிர்ஷ்டவசமாக, உத்தராகண்டின் 'பிரான் காலியார் ஷெரீப்' என்ற இடத்தில் இருக்கும் தர்காவில் ஆதரவற்று வாழ்ந்து கொண்டிருந்தான் ஷாஜேப். ஆனால் நிலைமை மாறியது. தர்காவில் அன்ன தானத்தில் உணவருந்திக்கொண்டிருந்த ஓர் அனாதைச் சிறுவனான ஷாஜேப் லட்சக்கணக்கான செல்வத்திற்கு வாரிசாகிய…
-
- 1 reply
- 202 views
- 1 follower
-
-
3 கோடி பெறுமதியான... தங்க நகைகளை கொள்டையிட்ட கும்பல், 6 மாதங்களுக்குப் பின்னர் கைது! நோர்வூட் நகரிலுள்ள தங்க நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றை உடைத்து, சுமார் 3 கோடி 15 இலட்சம் பெறுமதியுடைய 177 பவுண்களை கொள்ளையிட்ட நான்கு சந்தேக நபர்கள், சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்களுக்கு பின்னர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வூட் நகர பகுதியில் வாழும் மூன்று ஆண்களும், பெண்ணொருவருமே ஹட்டன் பொலிஸின், ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 2021 டிசம்பர் 9 ஆம் திகதியன்றே கடை உடைக்கப்பட்டு கொள்ளை, தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த கடையில் சுமார் 10 வருடங்களாக வ…
-
- 0 replies
- 202 views
-
-
-
கிளிநொச்சியில் தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் உயிரிழப்பு! தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சகோதரர்களிற்கிடையில் தொலை பேசியால் ஏற்பட்ட முரண்பாட்டினால், அண்ணனை தம்பி கத்தியால் குத்தியுள்ளார். குறித்த சம்பவத்தில் அண்ணன் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 37 வயதுடைய தருமராசா தவசீலன் எனும் 3 பிள்ளைகளின் தந்தையை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கா…
-
- 0 replies
- 201 views
-
-
Published By: DIGITAL DESK 3 30 JUN, 2025 | 12:45 PM உலகின் வறண்ட பாலைவனங்களில் ஒன்றாக திகழும் வடக்கு சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் வியாழக்கிழமை பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. "நம்பமுடியாத நிகழ்வு! உலகின் மிகவும் வறண்ட அட்டகாமா பாலைவனம் பனியால் சூழப்பட்டுள்ளது," என கடல் மட்டத்திலிருந்து 2,900 மீட்டர் (9,500 அடி) உயரத்தில் அமைந்துள்ள ALMA ஆய்வகம், X தளத்தில் வீடியோ காட்சிகளுடன் பதிவிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டதில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது வெண்ணிற போர்வை போர்த்தியது போல பனி படர்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த பனிப்பொழிவு காலநிலை மாற்றத்தின் மற்றொரு வினோதமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. …
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
ஒரே விரலில் 129 கிலோ எடையை தூக்கி உலக சாதனை மின்னம்பலம்2022-06-11 உங்களால் அதிகமாக எவ்வளவு எடை தூக்க முடியும்? நம்மில் பலருக்கு வீட்டில் இருக்கும் சிலிண்டர்களை தூக்குவது கடினமாக உள்ள நிலையில் ஒருவர் ஒரு விரலில் 129 கிலோ எடையை தூக்கி உள்ளார். இதன் மூலம் இவர் புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். மேலும் 10 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலக சாதனையை நிகழ்த்தியவர் 48 வயதான ஸ்டீவ் கீலர். இவர் தனது 18 வயதில் இருந்தே கராத்தே பயிற்சி செய்து வருகிறார். அப்பொழுது ஒரு நாள் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது தனது நடுவிரலால் மட்டும் ஒரு சேட் எடையை முழுமையாக தூக்கி உள்ளார். அதற்குப் பின்னர்தான் கின்னஸ் உலக சாதனையை முறியடிக்…
-
- 0 replies
- 201 views
-
-
வியட்நாம் போரில் தப்பி பிழைக்க, காட்டுக்குள் ஓடி, எலியை தின்று மரப்பட்டைகளை உடுத்தி, 40 ஆண்டுகள் அங்கு வாழ்ந்த ஒரு தந்தையும் மகனும் மீண்டும் அவர்களின் ஊருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கதைகளிலும் சினிமாவிலும் மட்டுமே அறிந்து வந்த டார்ஸான் வாழ்க்கை, வியட்நாமில் ஹோ வன் லங்கின் நிஜ வாழ்க்கையாகி இருக்கிறது. ஹோ வன் லங் (44), மற்றும் அவருடைய தந்தை ஹோ வன் தான் (85) இருவரும் வியட்நாமில் க்வாங் காய் மாவட்டத்தில் காணப்படும் டா ட்ரா காட்டில் 41 ஆண்டுகள் தனித்து வாழ்ந்துள்ளது. எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வியட்நாமில் போர் நடந்து கொண்டிருந்தபோது, அங்கு ட்ரா கெம் பகுதியில் வசித்த ஹோ வன் தான் என்பவர் தனது 2 வயது மகன் ஹோ வன் லங்கை, தூ…
-
- 0 replies
- 201 views
-
-
ஜெருசலேமில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்தில் இருக்கும் ஏணி ஒன்று 2 நூற்றண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் இருக்கிறது. அதன் இடத்தில் இருந்து இன்று வரை யாரும் அதனை நகர்த்தவில்லை. கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களின் புனித தலமாக கருதப்படும் ஜெருசலேம், உலகப் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலமும் கூட. ஜெருசலேமிற்கு புனித யாத்திரை வரும் மக்கள் இந்த ஏணியையும் தவறாமல் பார்த்துவிட்டு செல்கின்றனர், அவ்வளவு முக்கிய காட்சிப்பொருளாகிவிட்டது! ஏன் இந்த ஏணி 266 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருக்கிறது? …
-
- 1 reply
- 201 views
- 1 follower
-