Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 2018இல் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் 2023இல் மரணம் 2018இல் தாய்லாந்து குகையில் சிக்கி 18 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சிறுவன், 4 வருடங்களுக்குப் பிறகு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். 2018இல் ஆம் ஆண்டில் தாய்லாந்தில் நடந்த சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. சுமார் 10 கி.மீ. நீளமுடைய இந்த குகை ஆசியாவிலேயே மிகப் பெரிய குகையாகும். தாய்லாந்து – மியான்மர் எல்லையில் இந்தக் குகை அமைந்துள்ளது. சியாங்ராய் மாகாணத்தைச் சேர்ந்த வைல்டு போர் எனும் 11 வயது முதல் 16 வயது கொண்ட கால்பந்து அணியைச் சார்ந்த சிறுவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் திகதி இந்தக் குகைக்கு சென்றனர். …

  2. யாழில். பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞன் உயிரிழப்பு யாழில், பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்த வேளை , தவறி விழுந்து படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். புலோப்பளையை சேர்ந்த அன்ரனி அருள்தாஸ் நிதுராஜ் என்ற 26 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் கடந்த 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தின் மிதி பலகையில் நின்றவாறு பயணித்துள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக கரந்தாய் பகுதியில் வைத்து அவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அ…

  3. காணொளிக் குறிப்பு, அறுவை சிகிச்சை பிரசவத்தில் பிறந்த யானைக்குட்டி அறுவைச் சிகிச்சை பிரசவத்தில் பிறந்த யானைக்குட்டி 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த யானை நேபாளத்தில் உள்ள சித்வான் தேசிய பூங்காவில் மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிறந்தது. இந்த யானைக்கு பிஜயகஜ் என்று பெயரிட்டுள்ளனர். இயற்கை முறையில் யானையால் குட்டி ஈன முடியாததை அடுத்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். அறுவை சிகிச்சை செய்தாலும் குட்டி யானை உயிருடன் பிறக்குமா என மருத்துவர்களுக்கு சந்தேகம் இருந்த நிலையில், தற்போது வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். https://www…

  4. பிறந்த குழந்தைக்கு ஜேர்மன் சான்சலரின் பெயரை சூட்டிய அகதி தம்பதி ஜேர்மனியில் புகலிடம் அளித்ததற்காக பெற்றோர் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் பெயரை சூட்டி நன்றிக்கடனை செலுத்தியுள்ளனர். சிரியாவில் நிகழ்ந்து வரும் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு Asia Faray மற்றும் Khalid Muhammed என்ற தம்பதி இருவர் ஜேர்மனியில் புகலிடம் கோரி சென்றுள்ளனர். இத்தம்பதிக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளன, ஜேர்மனியில் உள்ள Munster நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வரும் இத்தம்பதிக்கு கடந்த ஆகஸ்ட் 16-ம் திகதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆதரவு தேடி வந்த தங்களுக்கு அடைக்கலம் வழங்கிய சான்சலரான ஏஞ்சலா மெ…

  5. துபாய் நோக்கி பறந்த எமிரேட்ஸ் விமானத்தில் மேலாடையை கழற்றிவிட்டு சிகரெட் பற்ற வைத்த பயணி; விமானத்துக்குள் இருப்பதை மறந்துவிட்டாராம் துபாய் நோக்கி பறந்­து­கொண்­டி­ருந்த விமா­ன­மொன்றில் பய­ணி­யொ­ருவர் தனது மேலா­டையை கழற்­றி­விட்டு, சிகரெட் ஒன்­றையும் பற்றவைத்த சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. மது போதையிலிருந்த அந் ­நபர், தான் விமா­னத்தில் இருப்­பதை மறந்­து­விட்­டாராம். ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸை தள­மாகக் கொண்ட எமிரேட்ஸ் நிறு­வ­னத்தின் விமா­ன­மொன்­றி­லேயே இச் ­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பிளைட் ஈகே 020 எனும் இவ்­ வி­மானம், கடந்த வெள்­ளிக்­கி­ழமை இங்­கி­…

  6. சிறுமியை அரசமரத்தின் கீழ் அழைத்துச்சென்று துஷ்பிரயோக முயற்சி:பிணையில் விடுவிக்கப்பட்ட விகாராதிபதி விகாரைக்கு சென்றபோது மக்கள் ஆர்ப்பாட்டத்தினால் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார் (கம்பளை நிருபர்) கம்பளை குறுந்து வத்தை பிரதேசத்தில் சமய வகுப்புக்குச் சென்ற சிறு­மியை பாலியல் வல்லு­றவுக்கு உட்படுத்த முயற்சித்த விகாராதிபதிக்கு எதிராக நேற்று குறுந்து வத்த நகரில் பிரதேச வாசிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் கம்பளை குறுந்துவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழுவல விகாரையின் விஹாராதிபதி சமய வகுப்புக்குச் சென்ற சிறுமி ஒருவரை அங்கு ஒதுக்குப்புறமாக அமைந்­திருந்த அரச மரத்துக்குப் பின்புறமாக அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவ…

  7. யாழ். பல்கலை மாணவிகள், தங்கியிருந்த வீட்டின் மீது... தாக்குதல்! யாழ்ப்பாணம் கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த தாக்குதக் சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 4 மோட்டார் சைக்களில் வந்த குழு வீட்டுக்குள் புகுந்து ஐன்னல்கள், கதவுகளை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை குறித்த வீட்டில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவிகள் வாடகைக்கு தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1282208

  8. சிவரஞ்சனி விடுதலை ஆ.ரமேஸ் நுவரெலியா மாநகர சபையில் பொதுஜன பெரமுன சார்பில் எதிர்கட்சி பெண் உறுப்பினராக செயல்பட்ட முன்னாள் உறுப்பினர் எஸ்.சிவரஞ்சனி மீது நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்டிருந்த வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் பெண் உறுப்பினராக இருந்தவர் எஸ்.சிவரஞ்சனி. இவர் நுவரெலியா மாநகர சபைக்கு பொதுஜன பெரமுனவின் ஊடாக பெண் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவர் மாநகர சபை உறுப்பினராக பதவியில் இருந்த கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதி நுவரெலியா நகரில் தனது வீட்டுக்கு அருகில் செல்லும் பிரதான வீதியில் உரிமையற்று கிடந்த 17 ஆயிரத்து 200 ரூபாய் ரொக்க பணத்தை கண்டெடுத்துள்ளார…

  9. பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல் தொடர்பாக இந்தியா சென்றுள்ள இலங்கை நாடாளுமன்றக் குழு கண்டன காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபொற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று கஜேந்திரகுமார் பென்னம்பலம் தற்போதைய அரசாங்கம் உப்பை மையமாகக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு யாழில் மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மக்கள் கருத்தறிவு நிகழ்வு

  10. ராகம பிரதேசத்தில் உள்ள விஹாரை ஒன்றில் வசிக்கும் 19 வயதுடைய பிக்கு ஒருவர், சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் பெரியவர்களுடன் உடலுறவு கொள்ளும் வீடியோக்களை ஆபாச இணையத்தளங்களில் வெளியிட்டு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் 7 மாதங்கள் முதல் 18 வயது வரையிலான சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததாகவும், அவர்களில் 80 சதவீதமானேர் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட போது, சந்தேக நபரிடமிருந்து மூன்று கணினிகள் மற்றும் 1,500 க்கும் மேற்பட்ட நிர்வாண வீடியோக்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களும் பொலிஸாரின…

  11. பைடன் மனைவியுடனான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து டிரம்ப் குசும்பு The photo’s caption reads, “A fragrance your enemies can’t resist!” அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப், தன் வாசனை திரவிய பொருட்களின் விளம்பரத்துக்காக தற்போதைய அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில்லுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப், அடுத்த மாதம் 20ல் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். தொழிலதிபரான டிரம்ப், தன் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை தன் சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது விளம்பரப்படுத்துவார். உயர் ரக கை கடிகாரங…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ப்ரியங்கா ஜக்தப் பிபிசி மராத்திக்காக 37 நிமிடங்களுக்கு முன்னர் *எச்சரிக்கை: இதில் இடம் பெறும் தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து பர்பானி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டதாக காவல் துறை வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. ஜூலை 15-ஆம் தேதி பத்ரி - செலு தேசிய நெடுஞ்சாலையில், தேவேந்திர ஷிவாரா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அக்குழந்தையை காவல்துறையினர் மீட்ட போது, அக்குழந்தையின் உடலில் உயிரில்லை. குழந்தையின் பெற்றோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? ஏன் பச்சிளம் குழந்தை பேர…

  13. வீடொன்றில் தங்கப் புதையல் தோண்டுவதற்கு முயன்ற ஏழு பேர் கைது ShanaJune 11, 2022 கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலையில் வீடொன்றில் தங்கம் புதைக்கப்பட்டிருப்பதாக தோண்ட முற்பட்ட 7 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டு உரிமையாளர் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த 6 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டின் வளாகத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத் தகடு புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை தோண்டி எடுக்கும் முயற்சியில் அவர்கள் எடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மின் பயன்பாடு அற்ற டெட்ட…

  14. Published By: SETHU 18 JUL, 2023 | 01:29 PM 3 வயது குழந்தையொன்றின் துப்பாக்கிப் பிரயோகத்தில் அக்குழந்தையின் சகோதரியான ஒரு வயதான குழந்தை உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சன் டியாகோ கவுன்ரியில் திங்கட்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை 3 வயதான குழந்தை எடுத்து, தற்செயலாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரியவந்துள்ளது. ஒரு வயதான குழந்தை தலைமையில் காயமடைந்த நிலையில், தீயணைப்புப் படையினர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அக்குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்ப…

  15. 13 Nov, 2025 | 05:08 PM இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் தெருநாய்கள் பிரச்சினையால் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து கோரியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வந்துள்ளார். இது தொடர்பில் கணவர், 'திருமணம் முடிந்த கொஞ்சநாளில் மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் தெருவில் சுற்றி திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்தார். தன் கணவருக்கு சமைக்கிறாரோ இல்லையோ. அந்த தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார். அத…

  16. உட­னடி விவாக­ரத்து பெறு­வ­தற்கு பெண் முயற்­சித்­ததால் 7 மணித்­தி­யா­லங்கள் தாமத­மடைந்த விமானப் பயணம் புறப்­ப­டு­வ­தற்குத் தயா­ரா­க­வி­ருந்த விமா­ன­மொன்றில் இருந்த பெண் ஒருவர், தனது கண­வ­ரி­ட­மி­ருந்து உட­ன­டி­யாக விவா­க­ரத்து பெறு­வ­தற்கு முற்­பட்­டதால் அவ்­வி­மானப் பயணம் 7 மணித்­தி­யா­லங்கள் தாம­த­ம­டைந்த சம்­பவம் ரஷ்­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. மொஸ்­கோ­வி­லி­ருந்து விளா­டி­வொஸ்டொக் நகரை நோக்கி புறப்­ப­ட­வி­ருந்த விமா­ன­மொன்­றி­லேயே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. “ரோஸியா எயார்” நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான பாரிய பய­ணிகள் விமா­ன­மொன்றில் நூற்­றுக்­க­ணக்­கான பய­ணிகள் இருந்­தனர். அவர்­களில் ஒரு­வ…

  17. யாழில்... 11 வயது மகளை, போதைப் பொருள் விற்பனையில்.. ஈடுபடுத்திய தாய்! தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது மகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். சிறுமி 4 மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கு செல்லாத நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் தாயாரின் பாதுகாப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். சிறுமி யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது…

  18. மும்பை, மராட்டிய மாநிலம் பேண்ட்ஸ்டாண்ட் என்ற பகுதியில் உள்ள கடற்கரையில் செல்பி எடுக்க ஆசைப்பட்டு கடலில் விழுந்த கல்லூரி மாணவியை காப்பாற்ற முயன்ற வாலிபரையும் அலை இழுத்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலம் பேண்ட்ஸ்டாண்ட் என்ற பகுதியில் கல்லூரி மாணவிகள் 3 பேர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது பாறையின் மீது ஏறி செல்பி எடுக்க பின்னால் சென்ற கோவந்தி என்ற மாணவி கால் தவறி கடலில் விழுந்தார். இதனை கண்டு மாணவியை காப்பாற்ற ரமேஷ் என்பவர் கடலில் குதித்துள்ளார்.அவரையும் கடல் அலை இழுத்து சென்றது, கடலில் விழுந்த இருவரையும் தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். http://www.dailythanthi.com/News/India/2016/01/09162713/Mumbai…

  19. உயிரிழந்த தன் சொந்த மகளின் உறைந்த கருமுட்டைகளை பயன்படுத்தி குழந்தையை பெற்றெடுப்பது தொடர்பான சட்ட போராட்டத்தில் 60 வயதான பிரிட்டன் பெண் வெற்றி பெற்றுள்ளார்.அவருடைய மகள் தன்னுடைய 23 வயதில் புற்று நோயால் பாதிக்கப்பட்டதால் தன் கருமுட்டைகளை உறைய வைத்திருந்தார்.ஐந்தாண்டுகளுக்கு பின் அவர் மரணம் அடைந்தார். உறையவைக்கப்பட்ட தனது கருமுட்டைகள் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் தாயாக தனது தாய் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், எழுத்துப் பூர்வமாக அவர் தனது விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, செயற்கைக் கருத்தரிப்பு முறையால் குழந்தை பெறும் முறையை ஒழுங்குபடுத்தும் அமைப்பு, அந்தக் கருமுட்டைகளை வெளியே எடுக்க அனுமதி மறுத்துவிட்டது. உயர்நீதிமன்றம…

  20. மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு பிணை! மலைப்பாம்புடன் நடனமாடும் காணொளி ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட பெண், பின்னர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் 500,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார். மார்ச் 20 அன்று கொழும்பில் நடைபெற்ற புத்தாண்டு தின அழகிப் போட்டியின்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், அதில் போட்டியாளர் ஒருவர் விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இனமான மலைப்பாம்பை பயன்படுத்தியதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். விசாரணையில் சந்தேக நபர் புத்தளத்தில் ஒருவரிடம் இருந்து 25,000 ரூபாவுக்கு குறித்த மலைப்பாம்பை வாடகைக்கு எடுத்து, சம்பவம் நடந்த உடனேயே அதை…

  21. சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார். சீனாவின் மகாவ் நகரில் 70 வயதுடைய ஒரு பெண்மணியை பயமுறுத்தியதாக கூறப்படும் மனித வடிவ ரோபோவை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தகவல்களின் படி, வீதியில் நடந்து கொண்டிருந்த பெண் தனது கைபேசியை பார்க்கும்போது, பின்னால் ரோபோ வந்ததை கவனித்தார். ரோபோ அருகில் நின்றிருப்பதைப் பார்த்ததும் பெண் அதிர்ச்சியடைந்தார். இந்த ரோபோ மகாவ் நகரில் உள்ள ஒரு கல்வி மையத்திற்கு சொந்தமானது. சம்பவத்திற்கு பிறகு ரோபோ அதன் 50 வயதான உரிமையாளரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. பொலிஸார் பொதுமக்கள் இருப்பிடங்களில் ரோபோக்களை அதிக எச்சரிக்கையுடன் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளனர். கல்வி மையத்தின் பிரதிநிதி டோவின் மேக், ரோபோ சம்பவத்திற்குப் பின்னர…

  22. 12 DEC, 2024 | 11:15 AM இத்தாலியின் கடற்பரப்பிற்கு அருகில் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள மீட்பு பணியினர் 11 சிறுமி உயிர் தப்பியுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர். படகு கவிழ்ந்ததில் அவர் ஒருவர் மாத்திரம் உயிர்பிழைத்திருக்கவேண்டும் 44 உயிரிழந்திருக்கவேண்டும் என கருதுகின்றோம் என கொம்பாஸ் கலெக்டிவ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. மத்தியதரை கடலில் புலம்பெயர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு இந்த அமைப்பு உதவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவின் டிரெட்டமார் 3 என்ற கப்பல் புதன்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் சிறுமியின் அபயக்குரலை செவிமடுத்தது என தெரிவித்துள்ள மீட்பு பணியாள…

  23. Published By: RAJEEBAN 09 NOV, 2023 | 06:02 AM யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தனது ஆளில்லா விமானமொன்றை சுட்டு வீழ்த்தியுள்ளனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எம்கியு9 ரீப்பர் ஆளில்லா விமானத்தையே ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் சுட்டுவீழ்த்தியுள்ளனர். யேமனின் கரையோர பகுதியில் இந்த ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது. ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதிஅரேபிய ஆதரவு குழுவிற்கு எதிராக 2015 முதல் போராட்டத்தி;ல் ஈடுபட்டுள்ளனர் - ஈரான் இவர்களுக்கு ஆதரவு வழங்குகின்றது. https://www.virakesari.lk/article/168860

  24. பார்வைக் குறைபாடுடைய பொலிஸாருக்கு நற்செய்தி! யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் பார்வை குறைபாடுடைய பொலிஸாருக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு நாளை மறுதினம் காலை 9மணிக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. லயன்ஸ் கிளப்பின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் 400 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கண்ணாடி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1356940

  25. ஜப்பானில் சிரித்திட வகைசெய்யும் வகையில் புதிய சட்டம்! ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறதுடம் அந்நாட்டின் பிரதமராக ஷிகெரு இஷிபா உள்ளார். இந்த நிலையில் உள்ளூர்வாசிகளின் உடல், மன நலனைக் காக்கும் பொருட்டு ஒருநாளுக்கு ஒருமுறையாவது அவர்கள் சிரித்திட வகைசெய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் எட்டாவது நாள், ‘சிரிப்பின் மூலம் ஆரோக்கியம் மேம்படும் நாள் எனக் கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமாகச் சிரிப்பவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வதாக பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டதுடன் மன இறுக்கத்தைச் சிரிப்புப் பயிற்சி குறைப்பதுடன் இதயப் பாதிப்பு உள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.