செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
அர்ச்சுனா எம்.பியுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த அரச ஊழியர்கள்! Dec 31, 2025 - 04:23 PM காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (30) காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் கலந்துகொண்டிருந்தார். கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தவேளை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் கருத்துக்களுக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இடையிடையே கைதட்டி ஆரவாரம் செய்த சம்பவம் இடம்பெற்றது. கூட்டம் முடிவடைந்த பின்னர் சில உத்தியோகத்தர்கள் முண்டியடித்தவாறு அர்ச்சுனாவுடன் செல்ஃபி மற்றும் புகைப்ப…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
ஆணுறைகள் தீர்ந்ததால் குளிர்கால ஒலிம்பிக் வீரர்கள் நெருக்கடியில் 14 February 2026 இத்தாலியில் நடைபெற்று வரும் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி சில நாட்களிலேயே, வீரர்களின் குடியிருப்பில் வழங்கப்பட்ட இலவச ஆணுறைகள் தீர்ந்துப்போனதால் எதிர்பாராத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போட்டிகள் ஆரம்பமான மூன்று நாட்களிலேயே ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பட்ட 10,000 பொதிகள் முழுமையாகத் தீர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தமக்குத் தேவையான விநியோகம் இல்லை என வீரர்கள் முறைப்பாடு அளிக்கத் தொடங்கியுள்ளனர். "மூன்றே நாட்களில் இருப்பு முடிந்துவிட்டது. மேலதிக கையிருப்புகள் வரும் என உறுதியளித்துள்ளனர், ஆனால் அது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது" என பெயர் குறிப்பிட விரும்பாத வீரர் ஒரு…
-
- 1 reply
- 131 views
-
-
கடனில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட சீனப்பெண் கடனில் இருந்து தப்பிப்பதற்காக சீனப் பெண் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்ட விபரம் சீன ஊடகங்களில் வௌியாகியுள்ளது. 59 வயது சீனப் பெண் ஜூ நாஜூவான், சீனாவின் வூஹான் நகரத்தில் வசித்து வந்தார். சொந்தக் காரணங்களுக்காக வங்கிகளிடம் இருந்து சுமார் 24.5 கோடி ரூபா கடன் பெற்றிருந்தார். உரிய காலத்தில் கடனை நாஜூவானால் கட்ட முடியாத நிலையில், அவர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என வூஹான் நகர நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் கடன் கட்டுவதில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, தன் முகத்தை மாற்றிக்கொண்டு தென்கிழக்கு சீன நகருக்குத் தப்பிச் சென்றார்…
-
- 0 replies
- 131 views
-
-
தீபாவளி பண்டிகையில் 26 இலட்ச அகல்விளக்குகள் ஏற்றி உலக சாதனை! உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கமாகும் இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் சுற்றுலாத்துறை, மாநில அரசு மற்றும் அயோத்தி மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து மகா தீபத்திருவிழாவை நடத்தியது. இதன்போது சரயு ஆற்றின் கரையில் 26,17,215 இலட்சம் அகல் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டது. திரளான மக்கள் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றினர். உத்தரப் பிரதேசத்தின் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், 26 இலட்சத்திற்கும் அதிகமான விளக்குகளை ஏற்றியமைக்கு கின்னஸ் உலக சாதனைக்கான சான்ற…
-
- 0 replies
- 130 views
-
-
யாழில் உழவு இயந்திரத்தின் டயரில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழப்பு! யாழ்ப்பாணம், சுன்னாகம், உடுவில் பகுதியில் நேற்று (03) நெல் அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற டிராக்டரின் டயரில் சிக்குண்டு 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணையில் சிறுவன், நெல் அறுவடை இயந்திரத்தில் ஏற முயன்று கீழே விழுந்ததாகவும், பின்னர் அவரது தந்தை ஓட்டி வந்த டிராக்டரின் பின் டயரில் சிக்கி பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/142393…
-
- 0 replies
- 130 views
-
-
எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து! எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று நானுஓயாவில் விபத்திற்குள்ளானது. கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கனரக வாகனத்தில் 2 தாங்கிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தினையடுத்து வீதியில் வழிந்தோடிய எரிபொருளை பொதுமக்கள் வாளிகள் மற்றும் போத்தல்களில் எடுத்துச்செல்வதைக் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431854
-
- 0 replies
- 129 views
-
-
கையடக்கத் தொலைபேசியால் வீடொன்றின் அறை தீக்கிரை Published By: Digital Desk 3 08 Feb, 2026 | 04:44 PM தம்புள்ளை பகுதியில் கையடக்கத் தொலைபேசியை மின்னேற்றிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீடொன்றின் அறை தீப்பிடித்து எரிந்ததில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாது, இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவி ஒருவர், தனது அறையில் கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து விட்டு மாணவியும் அவரது தாயாரும் அயல் வீடு ஒன்றுக்குச் சென்றுள்ளனர். இரவு சுமார் 10 மணியளவில் வீடு திரும்பிய போது, வீடு தீப்பற்றி எரிவதை அவர்கள் அவதானித்துள்ளனர். உடனடியாக பொது மக்கள், தம்புள்ளை மாநகர சபையின் தீ அணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் இண…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
அமெரிக்க டொலரில் டொனால்ட் ட்ரம்ப்பின் கையெழுத்து Published By: Digital Desk 3 27 Mar, 2026 | 09:01 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக, பதிவியிலிருக்கும் ஜனாதிபதி ஒருவரின் கையெழுத்து அந்நாட்டுப் நாணயத்தாள்களில் பதிவுசெய்யப்படவுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கையெழுத்து பொறிக்கப்பட்ட புதிய டொலர் நாணயத்தாள்கள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் புழக்கத்திற்கு வரும் என அமெரிக்கத் திறைசேரி திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 1861 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க நாணயத்தாள்களில் திறைசேரி செயலாளருடன் இணைந்து அமெரிக்கப் பொருளாளர் கையெழுத்திடும் பாரம்பரியமே நடைமுறையில் இருந்தது. தற்போது அந்தப் பாரம்பரியம் மாற்றப்பட்டு, பொருளாளரின் கையெழுத்துக்கு…
-
- 1 reply
- 128 views
- 1 follower
-
-
தேயிலை பக்கெட், ஷாம்பு போத்தலை திருடிய உப பொலிஸ் பரிசோதகர் கைது! பேராதனை, கிரிபத்கும்புர பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் 650 ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (23) கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பேராதனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது. பல்பொருள் அங்காடியில் பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்து வந்த சந்தேகநபர் தேயிலை பக்கெட், சிறிய ஷாம்பு போத்தல் ஆகியவற்றை திருடிச் சென்றமை அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தது. பல்பொருள் அங்காடியின் பாதுகாப்பு அதிகாரிகள் பொலிஸ் அதிகாரியை சோதனையிட்டனர், பின்னர் அவர் திருடப்பட்ட பொருட்களுடன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டா…
-
- 0 replies
- 128 views
-
-
நாகொடையில் பேனா வடிவிலான துப்பாக்கி மீட்பு! காலி, நாகொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக 23 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகொடை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து நேற்று (06) மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, பேனா வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தோட்டாவை மட்டுமே சுடும் திறன் கொண்டது. கைது செய்யப்பட்ட நேரத்தில் இரண்டு சுடப்படதாத தோட்டாக்கள், பயன்படுத்தப்படாத தோட்டங்கள் என்பவற்றை பொலிஸார் மீட்டனர். மாபலகமவைச் சேர்ந்த சந்தேக நபர், விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு …
-
- 0 replies
- 127 views
-
-
முல்லைத்தீவில் மாத்திரைகளை உட்கொண்ட குழந்தை உயிரிழப்பு! முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை தவறுதலாக உட்கொண்டதில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. சம்பவ தினமான நேற்று, குறித்த குழந்தை வீட்டில் இருந்த பாட்டியின் மாத்திரைகளை யாரும் கவனிக்காத வேளை உட்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அக் குழுந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அ…
-
- 0 replies
- 127 views
-
-
இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனை : 62 கோடி ரூபா தனி ஒரு நபருக்கு இலங்கை லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத் தொகை ஒன்று நேற்று(19.02.2026) வெல்லப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய லொத்தர் சபையின் கப்ருக லொத்தர் சீட்டிழுப்பில் 62 கோடி ரூபாய் பரிசுத் தொகை நேற்று வெல்லப்பட்டுள்ளது. 62 கோடி... இது இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனையாகும். இந்த சீட்டிழுப்பில் 62 கோடியே 98 இலட்சத்து 55 ஆயிரத்து 919 ரூபாய் வெல்லப்பட்டுள்ளது. வரலாற்றில் ஒரு தனிநபர் வென்ற மிகப்பெரிய பரிசுத் தொகை இதுவென தெரிவிக்கப்படுகின்றது. https://tamilwin.com/article/new-record-in-sri-lankan-lottery-history-62-crore-1771527359
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 29 Aug, 2025 | 01:39 PM கென்யாவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவர் யானையின் தும்பிக்கையில் பியரை ஊற்றி அருந்தக் கொடுக்கும் வீடியோகளை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இது தொடர்பில் சமூக ஊடகங்களில் சர்ச்சை வெடித்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சுற்றுலா பயணி வனவிலங்கு சரணாலயத்தில் பிரபலமான 'டஸ்கர்' (Tusker) பியரை குடித்துவிட்டு, மீதமுள்ளதை யானைக்குக் கொடுப்பது போல் படமாக்கப்பட்டு "தந்தம் உள்ள நண்பனுடன் ஒரு டஸ்கர் பியர்," என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதனை அவதானித்த கென்யர்கள் எதிர்ப்பை வெளியிட்டதை தொடர்ந்து அந்த பதிவு அவரது கணக்கிலிருந்து நீக்கப்பட்டது. பிபிசி இந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து, அதன் உண்மை தன்மையை …
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
பிலிப்பைன்ஸ்: `புதைக்கப்படாத சவப்பெட்டிகள்’ – 2,000 வருடங்களாகப் பின்பற்றப்படும் விநோத வழக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு பழக்குடி இனம் இறந்தவர்களைப் புதைக்காமல் அவர்களின் உடல்வைக்கப்பட்ட சவபெட்டியை மலைமுகடுகளில் தொங்கவிடும் நடைமுறையைப் பின்பற்றிவருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் சகடா பகுதியில் ராக்பேஸ், இகோரோட் எனும் பழங்குடி மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் கடந்த 2,000 ஆண்டுகளாக இறந்தவர்களைப் புதைப்பதில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களின் இனத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு செய்யவேண்டிய சடங்குகளைச் செய்து, அவரின் உடலைச் சவப்பெ…
-
- 0 replies
- 125 views
-
-
சிங்கத்துக்கு பதிலாக கண்காணிப்பவர் மீது செலுத்தப்பட்ட மயக்க ஊசி – என்ன நடந்தது? பட மூலாதாரம்,Hanif Khokhar/Getty 9 ஜனவரி 2026, 10:20 GMT புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர் குஜராத்தில் பெண் சிங்கம் ஒன்றைப் பிடிக்க முயன்றபோது 'டிராக்கர்' ஒருவர் உயிரிழந்தார். இந்தத் டிராக்கர் உயிரிழந்த விதம் மிகவும் அரிதானது என்றும், குஜராத் வனத்துறையின் வரலாற்றில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விஷயங்கள் மற்றும் தரவுகள் மூலம் விலங்குகளின் நடமாட்டம் மற்றும் நடத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் டிராக்கர்கள் என அழைக்கப்படுகின்றனர். பெண் சிங்கத்தை மயக்கமடையச் செய்வதற்காகச் செலுத்தப்பட்ட ஊசி, சிங்கத்தின் மீது செலுத்தப்படுவத…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
05 AUG, 2025 | 05:00 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தந்தைக்கும், சித்தப்பாவுக்கும் ஏற்றாட்போல் தீர்ப்பளிக்காத காரணத்தால் முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க சட்டவிரோதமான முறையில் பதவி நீக்கப்பட்டதை நாமல் ராஜபக்ஷ அறியாமல் இருப்பது வேடிக்கையாகவுள்ளது. தனியறையில் இருந்து சட்டக்கல்லூரி இறுதி பரீட்சையை எழுதிய நாமல் ராஜபக்ஷ முதலில் சட்ட ஏற்பாடுகளை தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டும் அதன் பின்னர் சட்ட ரீதியிலான தர்க்கங்களை முன்வைக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்ற பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வது …
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 10 JUN, 2024 | 04:11 PM அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகருக்கு தனது குடும்பத்தாரை பார்க்கச் சென்ற இலங்கையைச் சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் சதையை உண்ணும் அரியவகை கிருமியின் தாக்கத்திற்கு பாதிக்கப்பட்டு அவரது கையை இழந்துள்ளதாக அவுஸ்திரரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 74 வயதான கார்மெல் ரோட்ரிகோ என்ற வயோதிப பெண் இவ் வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலுள்ள மகளை பார்ப்பதற்குச் சென்றுள்ளார். இந்த வயோதிப பெண் அங்கு பல மாதங்கள் மகளுடன் தங்கியிருந்த நிலையில், கடந்த மாதம் அவருக்கு இடது கையில் துப்பாக்கியால் சுடப்பட்டது போல் வலி ஏற்பட்டுள்ளது. அவர் வலியால் கத்தியுள்ளார். அவர் …
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் இறந்தவர்களின் அஸ்திகளில் இடம்பெற்ற மோசடி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சுமார் 190 சடலங்களை பதுக்கி வைத்துவிட்டு, அவற்றை எரித்ததாக, போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றியவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலராடோ மாகாணத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உடல்கள் சிதைந்த நிலையில் இறுதிச் சடங்கு நடத்தும் நிலையத்தை நடத்தி வரும் ஜோன் ஹோல்போர்ட் என்பவருக்கு சொந்தமான ஒரு பாழடைந்த கட்டடத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள், கடந்த 2023இல் பொலிஸில் முறையிட்டிருந்தனர். இதையடுத்து பொலிஸார் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, சுமார் 190இறுதிச்சடங்குகளுக்கான உடல்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு சிதைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சிய…
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
வெலிகந்தை முன்னாள் OICஐ கைது செய்ய உத்தரவு! வெலிகந்தை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலன்னறுவை இலக்கம் 02 நீதிவான் பொலிஸாருக்கு நேற்று (18) உத்தரவிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெலிகந்தை பொலிஸார் இரு சந்தேக நபர்களை 20 பசுக்களுடன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கால்நடைகளை அரசாங்க பண்ணை ஒன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்ட போதும் கடத்தல்காரர்கள் இருவருக்கு விற்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ்மா அதிபருக்கும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகார…
-
- 0 replies
- 123 views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் 50 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (20) பாராளுமன்றத்துக்கு பிரத்தியேக பேருந்தில் வருகைத் தந்து தகவல்களை பதிவு செய்தனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (20) பத்தரமுல்லை பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த விசேட கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் கலந்துக் கொண்டனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய உறுப்பினர்களுக்கு இதன்போது பிரதமர் …
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
யாழில் 4 நாட்களில் ஏழரை இலட்சம் லீற்றர் பெற்றோல் விற்று தீர்ந்தது 04 Mar, 2026 | 04:36 PM யாழ்ப்பாணத்தில் கடந்த நான்கு நாட்களில் சுமார் ஏழரை இலட்சம் லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் பெற்றோலை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்து பெற்றோலை பெற்று சென்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நீண்ட வரிசைகளில் காத்திருந்து பெற்றோலை பெற்று கொள்ளும் இந்நிலைமை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் நீடித்து வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் 7 இலட்சத்து 45 ஆயிரம் லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில்…
-
- 2 replies
- 123 views
- 1 follower
-
-
பம்பலப்பிட்டியில் சொகுசு வீடொன்றில் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் திருட்டு! பம்பலப்பிட்டியில் உள்ள சொகுசு வீடொன்றில் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்தை நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த வீட்டின் உரிமையாளரின் பதிவு செய்யப்பட்ட துப்பாக்கியையும் சந்தேக நபர் எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் இரகசியமாக நுழைந்த நபர் ஒருவர் சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான பொருட்களை திருடியுள்ளார். சந்தேகநபர் 5000 ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு நாணயம், தங்கம் மற்றும் வர…
-
- 0 replies
- 122 views
-
-
பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த பெண் வைத்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! பெல்மதுல்லை பகுதியில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி தனியார் பேருந்து ஒன்றிலிருந்து தவறி வீழ்ந்த 32 வயதுடைய பெண் வைத்தியர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 14 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்தார். இறந்தவர் இரத்தினபுரியைச் சேர்ந்த வைத்தியர் பி. மதரா மதுஷானி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மட்டக்களப்பு-கொழும்பு பிரதான சாலையில் தனியார் பேருந்தில் அவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. பெல்மதுல்லை பொலிஸ் நிலையத்திற்கு அருகில், குறித்த பேருந்தின் சாரதி எதிர்பாராத விதமாக திடீரென பிரேக் பிடித்ததால் அவர் பேருந்தில் இருந்து கீழே வீழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் பல…
-
- 0 replies
- 122 views
-
-
07 Oct, 2024 | 06:52 PM தனியார் பேருந்தொன்றில் பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நடத்துநரை தனியார் பேருந்து உரிமையாளர் தென்னை மரத்தில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (7) களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஓந்தாச்சிமடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது களுவாஞ்சிக்குடி மகிளுர் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளரின் கல்முனை - மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்தில் நடத்துனராக அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கடமையாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அந்த பேருந்தில் இருந்து பணத்தை திருடியதாக நடத்த…
-
- 0 replies
- 122 views
-
-
Published:Today at 3 AMUpdated:Today at 3 AM பிரியங்கா - நிகில் டெல்லியில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் புதன்கிழமை 24 வயது பெண் ஒருவர் ரோலர் கோஸ்டரிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாணக்யபுரியைச் சேர்ந்த விற்பனை மேலாளரார் பிரியங்கா. கடந்த புதன்கிழமை மதியம் தனது வருங்கால கணவர் நிகிலுடன் கபாஷேராக்கு அருகிலுள்ள ஃபன் அண்ட் ஃபுட் வில்லேஜ் பொழுதுபோக்கு பூங்காவுக்குச் சென்றிருந்தார். அங்கு இருந்த நீர் விளையாட்டுகள் எனப் பல்வேறு விளையாட்டுகளில் பங்கெடுத்து மகிழ்ந்தனர். அதின் ஒருபகுதியாக, ரோலர்-கோஸ்டர் சவாரியை மேற்கொண்டனர். அது உச்சிக்கு சென்றபோது, அதன் ஸ்டாண்ட் உடைந்து, பிரியங்கா நேராக கீழே விழுந்தார். அதில் பிரியங்காவுக்கு பலத்த காயம் ஏற்ப…
-
- 0 replies
- 122 views
-