துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
மட்டக்களப்பில் தையல் நிலையம் ஆரம்பம். எம்மால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் தொழில் முயற்சியின் முதலாவது முதலீட்டாளராக நேசக்கரம் அமைப்பின் நீண்ட கால ஆதரவாளரான யேர்மனியில் வசித்து வரும் திரு.சபேசன் அவர்கள் இணைந்துள்ளார். ஏற்கனவே போரில் பெற்றோரை இழந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கு சபேசன் மாதாந்தம் உதவிக் கொண்டிருப்பதோடு அவசர உதவிகள் தொழில் முயற்சிகளுக்கும் உதவியுள்ளார். அத்தோடு தனது உறவினர்கள் நண்பர்களையும் நேசக்கரத்துடன் இணைத்து உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். அடுத்த கட்டமாக தையல் நிறுவனமொன்றை ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட உதவியையும் வழங்கியதோடு தையல் நிறுவனத்தை தொடர்ந்த வளர்ச்சியில் கொண்டு சென்று போரால் பாதிப்புற்றவர்களுக்கான ஆதரவை வழங்கும் நோக்கில் எம்முடன் இணைந்துள…
-
- 5 replies
- 992 views
-
-
நேசக்கரம் ஆதரவில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வு. மட்டக்களப்பு பட்டிருப்பு மகாவித்தியாலயம் கழுவாஞ்சிக்குடி தேசிய பாடசாலையின் 94வது பாடசாலை தினமும் கண்காட்சியும் மேமாதம் 29.05.2013 தொடக்கம் 3.05.2013 வரையான 3நாட்கள் நடைபெற்றது. கண்காட்சி நிகழ்வுக்கான வேறு உதவிகள் எதுவும் கிடைக்காத நிலமையில் இறுதித்தருணத்தில் இக்கண்காட்சியினை நடாத்தவதற்கான ஆதரவினை பட்டிருப்பு பாடசாலை அதிபர் எம்மிடம் கோரியிருந்தார். உடடியான முழுமையான ஆதரவினை எம்மால் வழங்க முடியாமையினால் 3நாட்களும் நடைபெற்ற கண்காட்சிக்கான ஆங்கில பாடத்துக்குரிய பொருட்களை வழங்கியதோடு ஆங்கில சொல்விளையாட்டு பாடத்துக்குரிய பரிசாக 2500பென்சில்களையும் , 50 மாணவர்களுக்குரிய வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கியிருந்தோம். எமது நேசம…
-
- 1 reply
- 854 views
-
-
அன்பார்ந்த நண்பர்களுக்கும் நவ்வாவ்இன் நலன் விரும்பிகளுக்கும், போரால் சீரழிந்த கிழக்குப் பிரதேசத்தில் சுய முயற்சிக் கமத்தொழில் பணிகளுக்கு நிதி வழங்கல் கிழக்கிலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இயல்பு வாழ்வுக்கு திரும்பவைப்பதில் நவ்வாவ் கடந்த ஒன்றரை வருட காலமாக முன்னெடுத்துவரும் செயல்பாடுகளைத் தாங்கள் நன்கறிவீர்கள் என்பதில் எமக்குச் சந்தேகம் இல்லை. கடந்த மார்ச் 2013 ல் அமெரிக்க வரியாணை செயலகம் எம்மை மார்ச் 2012 இலிருந்து பதிவு செய்யபட்ட அறக்கட்டளை நிலையமாக அதிவிரைவாக ஏற்றுக்கொண்டது, நாம் தனிய நின்று பொறுப்பெடுத்து நிதிவழங்கி பின்வரும் வரும் பணிகளை அவதானமாக திட்டமிட்டும், நுண்மையாக நிறைவேற்றி வைத்ததிலிருந்தும் ஊற்றெடுத்ததாகும் என்பதை நாம் பெருமையுடன் காட்டி…
-
- 3 replies
- 703 views
-
-
மருத்துவ தொழில்நுட்பத்துறைசார் 700 மாணவர்களுக்கான முன்னோடிப்பரீட்சை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில் உயர்தரம் கற்கும் மருத்துவத்துறை ,தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த 700 மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சைகளை நடாத்துவதற்கான உதவியினை நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பு புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியில் வழங்கியிருக்கிறது. மேற்படி மாவட்டங்களில் 3வலயங்களை உள்ளடக்கிய மாணவர்களில் தமிழ் மாணவர்களை உள்ளடக்கிய இரு வலயங்களைத் தெரிவு செய்து மருத்துவம் , தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் கற்கும் மாணவர்களின் பல்கலைக்கழக நுளைவை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 20வருடங்களாக EDUCATION INCENTIVE ASSOCIATION BATTICALO அமைப்பினரால் முன்னோடிப்பரீட்சைகள் நடாத்தப்பட்டு வருகிறது.…
-
- 0 replies
- 883 views
-
-
குசேலன்மலை குழந்தைகளுக்கு கல்வியுதவி செய்யுங்கள். மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியனாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு கரடியன்குளம் குசேலன்மலை எனப்படும் கிராமத்தில் 27குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர். இங்கு கல்வி கற்கும் வயதில் 62பிள்ளைகள் உள்ளனர். இப்பகுதியில் இதுவரையில் மின்சார வசதியோ அல்லது சரியான கல்விக்கான வசதிகளோ இல்லை. விவசாயத்துக்கு ஏற்ற வளமும் வசதியும் உள்ள இந்தக் கிராமம் இதுவரையில் எந்த அரசியல் தலைவர்களாலும் கவனிக்கப்படாதிருக்கிறது. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள கரடியன்குளம் குசேலன்மலை வாழ் மாணவர்களின் அடைவுமட்டம் குறைந்த நிலையில் இருக்கும் கல்விகற்கும் வயதில் உள்ள சிறுவர்களுக்கான முன்பள்ளிக் கற்பித்தலுக்கான வசதியும் மா…
-
- 1 reply
- 874 views
-
-
புலமைப்பரிசில் 3வது கையேடு வினாத்தாள் அச்சடிக்க உதவுங்கள் நேசக்கரம் பிறைட் பியூச்சர் நிறுவனத்தின் இலவச கல்வித்திட்டம் 2013 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மாதாந்த பயிற்சி வகுப்புகளையும் பிரத்தியேக தயார்படுத்தல் வகுப்புகளையும் நடாத்திவருகிறோம். 3வது வழிகாட்டி கையேடு தயாரிப்பிற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 12ஆயிரம் மாணவர்களுக்கான வழிகாட்டி ,விளாத்தாள்கள் அச்சடிப்பதற்கான கடதாசி , மை கொள்வனவு செய்வதற்கு 60ஆயிரம் ரூபா (அண்ணளவாக 375€) தேவைப்படுகிறது. ஆனிமாதம் 10ம் திகதிக்குள் அச்சடித்து வழங்க வேண்டும். ஆவணி மாதம் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் இறுதிபரீட்டசையை நடாத்தி முடிக்க கருணையாளர்களின் உதவியினை வேண்டுகிறோம். ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ Bank infom…
-
- 1 reply
- 2.6k views
-
-
ஈச்சலவக்கை மாணவர்களுக்கு யேர்மனி வூப்பெற்றால் நவதுர்க்கா ஆலயத்தின் உதவி யேர்மனி வூப்பெற்றால் நவதுர்க்கா ஆலயத்தினர் தந்துதவிய 163000.00ரூபா (ஒரு லட்சத்து ஆறுபத்து மூவாயிரம் ரூபா) நிதியுதவியில் மன்னார் மாவட்டம் மடுவலயம் ஈச்சலவக்கை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 118மாணவ மாணவியருக்கான அடிப்படைத் தேவைக்கான பொருட்கள் 10.05.2013 அன்று வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் ஈச்சலவக்கை அ.த.க.பாடசாலை அதிபர் திரு.பயஸ் , ஆசிரியர்கள் , எழுவான் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் , நேசக்கரம் பிறைட் பியூச்சர் விளையாட்டுப்பிரிவுப் பொறுப்பாளர் ஜோன்சன் , மற்றும் துணைத்தலைவர் சுதேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். போரால் பாதிக்கப்பட்டு மிகவும் பின் தங்கிய நிலமையில் கல்விக்கா…
-
- 1 reply
- 1.1k views
-
-
மூளைப்புற்றுநோயால் கண்பார்வையை இழந்து தவிக்கும் முன்னாள் போராளி. மட்டக்களப்பு மயிலம்பாவெளி , தன்னாமுனையைச் சேர்ந்த சுந்தரதாஸ் ஒரு முன்னாள் போராளி. இவர் 3பிள்ளைகள் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். இவருக்கு மூளைப்புற்றுநோய் கண்டறியப்படாமல் நீண்ட நாட்கள் நோயோடு போராடினார். நோய் கண்டுபிடிக்கப்பட்ட போது நோயின் தாக்கம் அதிகமாகியிருந்தது. இந்நிலையில் மருத்துவம் பெற்றார். மின்சாரம் பாய்ச்சல் சிகிச்சை செய்யப்பட்டது. அத்தோடு இவரது கண்கள் இரண்டும் பார்வையை இழந்துவிட்டது. நிரந்தர நோயாளியாகிவிட்ட கணவர் 3பிள்ளைகளோடும் குடும்ப வாழ்வாதாரத்தை இவரது மனைவியே சுமக்கிறார். வருமானம் எதுவுமற்ற நிலமையில் இக்குடும்பம் மிகவும் துன்பப்படுகிறது. இவர்கள் சிறு கடையொன்று போட்டு வியாபாரம் செய்…
-
- 1 reply
- 905 views
-
-
ஊனமுற்ற 2 குழந்தைகளுக்கான சக்கரநாற்காலி தேவை. ஏற்கனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து சொந்த வீடு நிலங்களை இழந்து அலைந்து மீண்டும் தமது ஊரில் குடியேறியுள்ள ராணமடு , மாதிரி கிராமம் , மண்டுரைச் சேர்ந்த சிவபாலன் தம்பதிகளின் பிள்ளைகளான பவாதாஸ் 12வயது , விருத்திகா 7வயது ஆகிய இருவரும் எவ்வித குறைபாடுகளும் இல்லாது உலவிக் கொண்டிருந்தனர். திடீரென இருபிள்ளைகளும் நடக்க முடியாது மனவளர்ச்சி குன்றியவர்களாகிவிட்டனர். கூலித்தொழில் செய்து குடும்பத்தைக் கவனிக்கும் சிவபாலன் அவர்களால் ஊனமுற்ற குழந்தைகள் இருவரையும் பராமரிக்கும் வசதியின்றி இருக்கிறார்கள். யுத்தத்தின் தாக்கத்திலிருந்து மீண்ட குடும்பத்தின் அன்றாடத் தேவைகளைச் சமாளிக்கவே மிகவும் அவதியுறுகின்றனர். பல அரச அரசசார்பற்…
-
- 2 replies
- 1.2k views
-
-
விவசாயம் செய்ய உதவி கோரும் போரால் பாதிக்கப்பட்ட தர்சினி போரால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கித்துள் பகுதியைச் சேர்ந்த தர்சினி போரில் தனது கணவனை இழந்துள்ளார். தர்சினி கழுத்தில் புற்றுநோய்க்கு ஆளாகி சத்திரசிகிச்சை செய்து மீண்டுள்ளார். இவரது குடும்ப முன்னேற்றம் கருதிய கருணையுள்ளங்கள் உதவுமாறு வேண்டுகிறோம். 2பெண் பிள்ளைகளுடன் மிகவும் வறுமையில் வாடுகின்றார்கள்.அடிப்படை பொருளாதார வசதிகளை இழந்துள்ள இக்குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த தர்சினி அவர்கள் தோட்டம் செய்வாற்கான உதவியினைக் கோரியுள்ளார். கிணறு அமைத்து தோட்டத்துக்கான வசதிகளை அமைக்க இலங்கைரூபா 51ஆயிரம் ரூபா (320€)தேவைப்படுகிறது. தர்சினி எமக்கு எழுதிய கடிதத்தை இணைக்கிறோம். உதவ விரும்புவோர் நேரடியாகவோ அல்லது நேசக…
-
- 1 reply
- 781 views
-
-
கனடா மறுவாழ்வு அமைப்பு MARUVAZHVU CANADA INC 1193A - UNIT 5 Brimley Road, Scarborough, ON M1P 3G5 அன்புடையீர் கனடா மறுவாழ்வு கனடா அமைப்பு கனடிய சட்டதிட்டத்தின் கீழ் இலாபநோக்கற்ற அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (பதிவு இல. 3512482) மறுவாழ்வு அமைப்பு மிகக் குறுகிய காலத்தில் வட - கிழக்கில் போரினால் வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களின் மறுவாழ்வுக்கு பல உதவிகளை வழங்கி வருகிறது. 2006 மே மாதம் 25 ஆம் நாள் காலை கொழும்பில் நடைபெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அன்று மாலை 5.15 மணி அளவில் மூதூர் கிழக்கைச் சேர்ந்த சம்பூர்,கூனித்தீவு, நவரத்தினபுரம், சூடைக்குடா, கடற்கரைச் சேனை ஆகிய கிராமங்கள் மீது கண்மூடித்தனமான எறிகணை, பல்குழல் பீரங்கி, விமானத் தாக்குதல்கள் இடைவி…
-
- 0 replies
- 539 views
-
-
ஆபிரிக்காவில் அவதியுறும் ஈழப்போராளியின் நன்றி ஈழவிடுதலைப் போரில் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த பல்லாயிரம் போராளிகளில் ஒரு தொகுதியினர் சொந்த நாட்டில் வாழமுடியாத நிலமையில் புலம்பெயர்ந்து ஐரோப்பிய ஆபிரிக்க , ஆசியநாடுகளில் அவதியுறுகின்றனர். இத்தகையதொரு போராளி குடும்பம் ஆபிரிக்க நாட்டில் அந்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். அன்றாட உணவிலிருந்து அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலமையில் வாழும் குறித்த குடும்பத்தினர் தமக்கான உதவியினைக் கோரியிருந்தனர். அவர்களுக்கான உதவியினை புலம்பெயர்ந்து வாழும் பல உறவுகள் முன்வந்து வழங்கியிருந்தனர். உதவியைப் பெற்றுக் கொண்ட போராளியும் அவரது குடும்பமும் எழுதிய நன்றிக் கடிதம். http://nesakkaram.org/ta/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E…
-
- 0 replies
- 581 views
-
-
அச்சியந்திரம் பெற்றுத் தந்த உறவுகளுக்கு நன்றிகள். நேசம் இலவச கல்வித்திட்டத்தில் மாணவர்களுக்கான வழிகாட்டி கையேடுகள் இ பரீட்சைகளுக்கான தயார்படுத்தல் முன்னோடி பரீட்சை வினாத்தாழ்கள் அச்சடித்து வழங்கி மாணவர்களின் அடைவுமட்டத்தினை அதிகரிப்பதற்கான பயிற்சி நெறிகளை வழங்கிவருகிறோம். கடந்தகாலங்களில் அச்சுப்பதிப்புக்காக அதிகளவு செலவை எதிர் கொண்டிருந்தோம். தொடர்ந்த எமது தேவைக்கு ஒரு அச்சியந்திரத்தை பெற்றுக் கொண்டால் செலவில் பாதியை குறைத்துக் கொள்ள முடியுமென்ற எமது விண்ணப்பத்தை புலம்பெயர் உறவுகளிடம் வெளிப்படுத்தியிருந்தோம். தமிழ் மாணவர்களின் உயர்வில் அக்கறை கொண்ட நல்லுள்ளங்கள் முன்வந்து வழங்கிய உதவியில் அச்சியந்திரமொன்றினைப் பெற்றுள்ளோம். இம்முயற்சிக்கு உதவியோர் :- 1…
-
- 0 replies
- 769 views
-
-
நேசக்கரம் ஆதரவில் எழுவான் அபிவிருத்திச் சங்கம் உருவாக்கம் மன்னாரில் போரால் பாதிப்புற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாக நேசக்கரம் பிறைட் பியூச்சர் உப அமைப்பான ‚'எழுவான்' அபிவிருத்திச் சங்கத்தின் முதலாவது ஒன்று கூடலும் முதலாவது தொழில் முயற்சிக்கான உதவி வழங்கலும் 23.03.2013 அன்று நடைபெற்றது. மன்னார் தேனுடையான் கிராமத்தில் உருவாக்கப்பட்ட 'எழுவான்' அபிவிருத்திச் சங்கமானது வடக்கின் அனைத்துப் பகுதிகளுக்கும் தனது சேவையை எதிர்காலத்தில் அதிகரித்து தமிழ் மக்களின் பொருளாதார கல்வி மேம்பாட்டை நோக்கிய பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும் நோக்கிலே உருவாக்கம் பெற்றுள்ளது. மன்னார் தேனுடையான் ஞானவைரவர் கோவில் தலைவர் வீ.தினேஸ்வரன் தலைமையில் 23.03.2013 அன்று முதலாவது ஒன்று கூடல் இடம…
-
- 0 replies
- 630 views
-
-
நேசக்கரம் கணணிப்பயிற்சி முன்னேற்றம் எவ்வாறுள்ளது ? நேசக்கரம் இலவச கணணிப்பயிற்சி நிலையமொன்றினை 15.12.2012நடராஜா ஆனந்தா வீதி நாவற்குடா கிழக்கு மட்டக்களப்பில் ஆரம்பித்திருந்தோம். நேசக்கரம் கணணிப்பயிற்சி நெறியினை நடாத்துவதற்கான கணணிகளுக்கான உதவியை அமெரிக்காவிலிருந்து தவேந்திரராஜா ஐயா அவர்கள் முன்வந்து வழங்கியிருந்தார். இம்மாதத்தோடு எமது கணணிப்பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகி 4மாதங்களாகின்றது. எமது இலவச கணணிப்பயிற்சியை யுத்தத்தாலும் சுனாமியாலும் பாதிப்புற்ற குடும்பங்களிலிருந்து 75 மாணவர்களும் வேலை வாய்ப்புத் தேடும் 40 இளைஞர் யுவதிகளும் , தொழில் செய்து கொண்டிருக்கும் பெரியவர்கள் 10 பேரும் பயிற்சியைப் பெற்று வருகின்றனர். நிலையத்திற்கான பராமரிப்பு , மின்கட்டணம் போன்றவற்ற…
-
- 0 replies
- 651 views
-
-
நேசக்கரம் கிராம அபிவிருத்தி பட்டப்படிப்பு உதவி. படித்த மாணவர்களை அவர்களின் கிராமங்களை மேம்படுத்தவும் உள்ளுர் வளங்களைப் பயன்படுத்தி தொழில்சார் துறைகளில் முன்னேற்றவும் Brightfuture Nesakkaram அமைப்பின் ஒன்றரை வருட கற்கைநெறியினை ஆரம்பிக்கவுள்ளோம்.போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் 19வயது தொடக்கம் 24வயதுக்கு உட்பட்டவர்கள் கிராம அபிவிருத்தி பட்டப்பட்டிப்பில் பங்கேற்க முடியும். கற்றலுக்குத் தேவையான தகைமை :- கல்விப்பொதுத்தராதரம் குறைந்தது 3பாடங்கள் சித்தியடைந்திருக்க வேண்டும். பாடத்திட்டம் :- 1) தகவல்தொழில்நுட்பம் 2) பொருளாதாரஅபிவிருத்தி 3) அனர்த்தமுகாமைத்துவம் 4) உளவியல் 5) சிறுவர்மேம்பாடு 6) கிராமிய வள முகாமைத்து…
-
- 4 replies
- 719 views
-
-
இலவச கல்வியை வழங்க ஒரு அச்சு இந்திரம் பெற்றுத் தாருங்கள் போரால் பாதிப்புற்ற வடகிழக்கு மாணவர்களின் அடைவு மட்டத்தினை உயர்த்தும் வகையில் நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் இலவச கல்வித்திட்டத்தை கடந்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தி வருகிறோம். தனியார் கல்வி நிலையங்கள் சென்று பிரத்தியேக வகுப்புக்களை பெற முடியாத 5ம் வகுப்பு புலமைப்பரிசில் மாணவர்கள் , கல்விப்பொதுத்தராதர சாதாரணதரம் , உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி முன்னோடி வினாத்தாள்களைத் தயாரித்து கற்பித்து வருகிறோம். 2012ம் ஆண்டு 2500புலமைப்பரிசில் மாணவர்களுக்கும், 2012 க.பொ.தா.சாதாரணதரமாணவர்கள் 10ஆயிரம் பேருக்குமான வழிகாட்டி கேள்விபதில் , மற்றும் தொலைபேசியிலான பாடநெறிகளையும் வழங்கியிருந்தோம…
-
- 4 replies
- 838 views
-
-
இரத்ததானம்: பொது நலமும் சுய நலமும் 80களில் (அப்பொழுது மட்டுமல்ல இன்றுவரை) குறிப்பாக வடக்கு கிழக்கில் பெரியளவிலும் தெற்கில் ஒரளவிலும் இரத்தம் மிகவும் தட்டுப்பாடாக இருந்த காலங்கள் அவை. ஏனெனில் அந்தளவிற்கு நாள்தோரும் செல் அடிகளும் குண்டு வெடிப்புகளும் துப்பாக்கி சுடுகளும் பொம்பர் அடிகளும் நடைபெற்ற நேரங்கள். இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கு இரத்தம் தேவைப்பட்டது. ஆகவே தமது உறவினர் யாருக்காவது இரத்தம் தேவை எனின் பிற உறவினர்கள் இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாக இருந்தது. அப்பொழுதுதான் குறிப்பிட்ட உறவினருக்கு இரத்தம் வழங்கி அவரைப் பாதுகாப்பார்கள். இல்லாவிட்டாலும் பாதுகாப்பார்கள். ஆனால் இரத்ததானம் வழங்குவதை ஊக்குவிப்பதற்கு அ…
-
- 0 replies
- 572 views
-
-
நேசக்கரம் பிறைட் பியூச்சர் புலமைப்பரிசில்2013 வழிகாட்டி வினாத்தாள் பகிர்வு நேசக்கரம் பிறைட் பியூச்சர் நிறுவனத்தின் இலவச கல்வித்திட்டம் 2013 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மாதாந்த பயிற்சி வகுப்புகளும் பிரத்தியேக தயார்படுத்தல் வினாத்தாள் பகிர்வும் 18.02.2013 ஆரம்பமாகியுள்ளது. 10ஆயிரம் மாணவர்களை உள்ளடக்கிய இத்திட்டத்தின் மார்ச் மாதத்துக்கான மாதாந்த இலவச வழிகாட்டி வினாத்தாள்கள் மட்டக்களப்பு , அம்பாறை , திருகோணமலை ,மன்னார் ஆகிய மாவட்டங்களில் போரால் பாதிப்புற்ற அடைவுமட்டம் குறைந்த பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. மாணவர்களின் அடைவு மட்டத்தினை உயர்த்தும் வகையில் எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் புலமைப்பரிசில் ஆவணி2013 பரீட்…
-
- 0 replies
- 699 views
-
-
அன்பான நண்பர்களுக்கும், கொடையாளிகளுக்கும், NOW-WOWன் நலன்விரும்பிகளுக்கும்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தங்கள் சேவைகளுக்கு பராட்டுக்களும், பற்றாத்தொகை உதவிக்கான கோரிக்கையும் சந்தேகத்திற்கிடமில்லாமல், அண்மையில் வடக்கு கிழக்கில் பெய்த கடும்மழையையும் அதனால் அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையும் பற்றி நீங்கள் தெரிய வந்திருப்பீர்கள். NOW-WOW, பிரதானமாக, கடுமையாக பாதிக்கப்ப்ட்ட கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தனி அக்கறை கொண்டுள்ளது. சிறியதும், புதியதுமான NOW-WOW, பெரிய மனது கொண்ட தங்கள் ஆதரவுடன், அவசர உதவியாக மருதங்கேணிக் கிராமத்திலிருக்கும் கைக்குழந்தைத் தாய்மார்களுக்கு 248 பால்மாப் பெட்டிகளை வழங்கியிருக்கிறது. மேலும் சித்தாண்டிக்கிராமத…
-
- 0 replies
- 459 views
-
-
திருகோணமலை சிங்களக் கல்வி வலயம் - பற்றாக்குறை வளத்துடன் தமிழ்ப் பாடசாலைகள் [ சனிக்கிழமை, 12 சனவரி 2013, 08:52 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] திருகோணமலை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட இரண்டாவது கல்வி வலயம் திருகோணமலை வடக்கு கல்வி வலயம் என்ற பெயரில் அமைந்துள்ளது. திருகோணமலைக்கு வடக்கே உள்ள சிங்களக்கிராமங்களான மொரவேவா, கோமரங்கடவல, மயிலவேவா, பதவிசிறிபுர, போன்ற சிங்கள கிhரமங்களை உள்ளடக்கியதாக சிங்கள வலயம் அமைந்துள்ளது. பன்குளம், நொச்சிக்குளம், ஒளவைநகர், முதலிக்குளம் ஆகிய தமிழ்க்கிராமங்களும் இக்கல்வி வலயத்தினுள் வருகின்றன. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இரண்டாவது சிங்களக் கல்வி வலயம் இதுவாகும். முதலாவது சிங்களக்கல்வி வலயம் கந்தளாயில் அமைந்துள்ளது. த…
-
- 0 replies
- 508 views
-
-
சம்பூர் அகதிக்குடும்பங்கள் அரசினால் புறக்கணிப்பு - த.தே.கூட்டமைப்பு [கனடா] மறுவாழ்வு மையம் உதவுகிறது [ வெள்ளிக்கிழமை, 11 சனவரி 2013, 18:00 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மறுவாழ்வு [கனடா] மையத்தின் ஆதரவுடன் மூதூர் கிழக்கு பிரதேசத்தில் சம்பூர் மற்றும் கிராமங்களிலிருந்து 2006 ஏப்ரல் மாதம் சிறிலங்கா இராணுவம் நடத்திய தாக்குதலில் இடம்பெயர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நான்கு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 1224 தமிழ் குடும்பங்களில் கட்டைப்பறிச்சான் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 400 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண உதவியாக உலர்உணவுப் பொதிகள் கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டன. கிழக்கு மாகாண சபையில் அங்கம்…
-
- 3 replies
- 698 views
-
-
தமிழீழத்தின் அன்பார்ந்த நண்பர்களுக்கும் நலன்விரும்பிகளுக்கும், இதோ, சோதனையான ஒரு காலகட்டத்தில் “போரினாற் காயமுற்றோர், விதவைகள், அனாதைகளுக்கான் புதிய சந்தர்ப்பங்கள்” அமைப்பின் சார்பில் தங்கள் உதவியை ஒரு முறை மீண்டும் ஒரு தடவை இங்கு நாடி நிற்பது சுபா சுந்தரலிங்கம். கடு மழையாலும், திடீர் வெள்ளத்தாலும் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள பேரழிவு பற்றிச் சிறிதளவேனும் தாங்கள் அறிந்திருப்பீர்களென்பதில் எமக்கு ஐயமேதுமில்லை. அங்குள்ள மக்கள் படும் அவதிகளோ வார்த்தைகளுக்கப்பாற்பட்டவை. உணவுப்பொருட்களின் பற்றாக்குறையும் அவற்றை வாங்குவதற்கான பணவுதவி யேதுமற்றிருப்பதும் அம்மக்களை ஒட்டு மொத்தமாகப் பட்டினியில் வாட்டும் நிலையையே அங்கு உருவாகியுள்ளது. வெள்ளம் தணிந்த பகு…
-
- 1 reply
- 617 views
-
-
சில நிறுவனத்தினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாயகத்தில் உதவி செய்து வருகின்றார்கள்....உங்களுக்கு தெரிந்த அல்லது அறிந்த தொண்டு ஸ்தாபனங்களின் உதவிகளை இங்கு பதிவிடுங்கள்.....
-
- 10 replies
- 1.3k views
-
-
அன்பார்ந்த தமிழீழ பிரஜைகளுக்கும், யாழ்க்கள உறவுகளுக்கும், சர்வதேசநாடுகளிலிருந்து அகதிகளுக்காக இலங்கை அரசிடம் அனுப்பிவைக்கப்படும் உதவிகள், தேவையானோர் பலருக்கு சில தடவைகள் செல்லத்தவறுவதைக் கண்டு நாம் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறோம். இதில் எதையாவாது நாம் நிவிர்த்தி செய்ய முடியாதா என நம்மில் பலரும் ஆதங்கப்பட்டதுண்டு. இந்த ஏக்கங்களின் பலனாக, நாம், நலிந்த அகதிகளுக்குள் நலிந்த சமூகமான, விதவைகளுக்கும், அனாதைச் சிறார்களுக்கும் உதவுமுகமாக, “காயப்பட்ட விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் புது சந்தர்ப்பம்” (NOWWOW -New opportunities for Widowed, Wounded, and Orphans of War - http://nowwow-us.org/) என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அறநிலையமாக ப…
-
- 15 replies
- 1.9k views
-