Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. லெப். கேணல் ஜஸ்ரின் எல்லையில் நின்று எதிரியை விரட்டியவன்: சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின். போர்முனைக்குச் சென்றவர்கள் வென்றதுண்டு வந்ததில்லை என்பார்கள். இதை ஜஸ்ரினும் படித்திருந்ததினாலோ என்னவோ இறுதியாக மணலாற்றுச் சண்டைக்குச் செல்வதற்கு முன்னர் தனது தாயை அவன் சந்தித்தபோது “அம்மா, நான் சண்டைக்குப் போறேன். ஆனால் நான் உயிரோடை திரும்பி வர மாட்டன்” என்று கூறிவிட்டுச் சென்றான். கண் தெரியாத அந்தத் தாயிடம் அதனைத் தெரிவித்துவிடவேண்டும் என்று அவனது உள்ளுணர்வு அவனைத் தூண்டியுள்ளது. தாக்கு மகனாகச் செய்ய வேண்டிய கடமையைவிட மண்ணின் மகனாக அவன் ஆற்றவேண்டிய கடமை அவனுக்குப் பெரிதாகத் தெரிந்தது. 1984ம் ஆண்டு காலத்திலிர…

  2. தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் முதலாம் நாள்…! AdminSeptember 15, 2021 செப்.15 – 1987 🔴தியாக பயணத்தின் முதலாவது நாள்! காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடை பெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வாக்கி டோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார். அவரது பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி. பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஜன், நான் வேறும் சிலர்.வாகனம் நல்லூர் கந்தசாமி கோவிலை நோக…

  3. அனைத்துலக ரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்ற 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு! AdminSeptember 12, 2021 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து, மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது அனைத்துலகத் தொடர்பகத்தின் மாவீரர் பணிமனையால் உறுதிப்படுத்தப்பட்ட வீரவேங்கை அஜந்தி, வீரவேங்கை அறிவு, வீரவேங்கை இதயன், வீரவேங்கை பிரியவதனா, வீரவேங்கை புலியரசன், வீரவேங்கை புதியவன், வீரவேங்கை தீப்பொறி, வீரவேங்கை அன்பரசன்/லோறன்ஸ், வீரவேங்கை கவியரசி/ அமலா, வீரவேங்கை முகிலன், வீரவேங்கை நிறையிசை, வீரவேங்கை கரிகாலன், வீரவேங்கை சுதாகரி, வீரவேங்கை இசைவாணன், வீரவேங்கை பல்லவன் உட்பட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு யேர்மனி…

    • 2 replies
    • 1.7k views
  4. 11.09.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் புதியதொரு வரலாற்றை படைத்துச் சென்ற ஆழக்கடலோடிகள் உலக வல்லரசுகள் இலங்கைக்கு வழங்கிய செய்மதித் தகவல்களின் அடிப்படையில். 10.09.2007அன்று இலங்கையிலிருந்து ஆயிரத்து ஐநூறு கடல்(1500NM )மைல்களுக்கப்பால் அதாவது சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் இரு வணிகக் கப்பல்களும் அவைகளுக்கு எரிபொருள் வழங்குவதற்காக வந்த எண்ணெய்க் கப்பலும் தமது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் கடற்படையின் கப்பல் வருவதை (எந்த நாட்டுக் கடற்படையென்று அவருக்குத் தெரியாது )அவதானித்த வணிகக் கப்பலொன்றின் தலைவரான எழில்வேந்தன் கப்பல்களை பிரிந்து வெவ்வேறு திசைகளில் செல்லப் பணித்ததுடன் …

  5. வவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல் வவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல் – (சிறிலங்கா இராணுவத்தின் வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதான கரும்புலிகள் தாக்குதல்) வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர். வவுனியாவில் நகரின் தென்பகுதியில் வன்னிப் பிராந்திய இராணுவத் தலைமையகம், விமானப்படைத் தளம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருந்த ஜோசெவ் படைத்தளத்தின் மீது புலிகள் நடத்திய மூன்று முனைத் தாக்குதல் படைத் தரப்புக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. …

  6. லெப்டினன்ட் அபிநயா துள்ளித் திரிந்த சின்னப்புலி லெப்டினன்ட் அபிநயா. அபிநயாவின் நெட்டையான, சற்றுக் குண்டான தோற்றம் அவ்வணியிலேயே அவளைத் தனியாக இனங்காட்டும. முகம் நிறையச் சிரிப்புடன் எந்நேரமும் துள்ளித்திரியும் இவள் பயிற்சியிலும் இதே ஆர்வத்துடன் செயற்படுவாள். அந்த அணியிலேயே சிறியவள் என்பதால் எல்லோருக்கும் விருப்பமுள்ளவளாக இருந்ததுடன், தனது குழந்தைத்தமான பேச்சினால் அனைவரையும் கவர்ந்து விடுவாள் 1998 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அபிநயா சிறுவயதிலேயே சிங்கள மொழியில் கதைக்கத் தெரிந்திருந்தாள். சிலவேளைகளில் தனக்குத் தெரிந்த சிங்களப் பாடல்களைப் பாடி எல்லோரையும் சிரிக்க வைப்பாள். இவளுக்குக் கோபம் வந்தால் சிங்களத்தில்தான் ஏசுவா…

  7. விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம் விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம் இந்தியர்களும், இந்தியக்கூலிகளும் அம்மாவின் வீட்டிற்குள் அடிக்கடி பாய்வார்கள் நெடுமாறனையும், அவன் சனோதரர்களையும் தேடி…… நெடுமாறன் அம்மாவின் ஏழாவது பிள்ளை; அவன் தான் கடைசி. “நெடுமாறன் இங்க வாறதில்லையா… நேற்று வந்து எங்கட ஒரு ஆளையும் போட்டிட்டான்……” “அம்மாவில் அன்பிருந்தா மோன் அடிக்கடி வீட்டை வருவான் தானே……” அம்மாவையும், அக்காவையும் அவர்கள் அடிக்கடி வந்து உறுக்கிப் பார்ப்பார்கள். அப்போதெல்லாம் அக்கா அவர்களுக்குச் சூடாகவே பதில் சொல்லி அனுப்புவாள். இது அம்மா கொடுத்து வளர்த்த உறுதி – துணிவு. ஆனால், அம்மா அமைதியானவள் – எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு பேசாமலி…

  8. எம் நினைவுகளின் என்றும் நின்றகலாத நேசத்துக்குரிய மருத்துவப்போராளி லெப்டினன்ட் கேணல் கமலினி, கேணல் லக்ஸ்மன் அண்ணனின் மனைவி. முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்திருந்த வைத்தியசாலையில் கடமையின் போது வீரமரணத்தை தழுவிக்கொண்டார். ->Credit: Facebook

  9. கட்டுநாயக்கா விமானப்படை தளம் மீதான தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலை புலிகளின் பயணத்தில், வெற்றி மகுடம் சூட்டிய நாள்.ஆம். கட்டுநாயகா வான்படை தளத்தை தகர்த்த நாள்! 1983 ஆம் ஆண்டு யூலை மாதம், தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத,இன்னல்கள், கொடிய துயரங்கள் நிறைந்த மாதம். கொடுங்கோலன் சிங்களவனால்,ஒரு மிகப்பெரிய யுத்தத்தை, தமிழர்களின் வாழ்வில் திணித்த நாள். ஆயிரக்கணக்கான தமிழர்களை, சிங்களன் கொன்றொழித்த நாள். லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள்,வீடுகளற்ற அகதிகளாக நடுத்தெருவில் நின்ற நாள். பல்லாயிரகணக்கான தமிழர்களின் வீடுகளையும், ,உடமைகளையும்,அவர்களின் வியாபார ஸ்தலங்களையும் அடித்து நொறுக்கிய நாள். தமிழர்களுக்கு பெருமளவில் பொருட்சேத…

  10. மரண தண்டனைக்கு எதிரான இறுதி உயிராக இருக்கட்டும் -தோழர் செங்கொடி.! வீரமங்கை தோழர் செங்கொடியின் நினைவு வணக்கநாள் இன்றாகும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்ற வேளை அம்மூவரின் உயிர் காக்க (மரண தண்டனைக்கு எதிராக) 28.08.2011 அன்று தமிழகத்தில் காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட “வீரத்தமிழிச்சி” தோழர் செங்கொடி ஆகிய வீரமங்கையின் 10ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும். தூக்குத் தண்டனையை இரத்துசெய்யக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன் (28.08.2011) ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்துத் தன் உயிரை ஆகுதியாக்கிய காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த …

  11. மேஜர் செல்வராசா மாஸ்டர் மேஜர் செல்வராசா மாஸ்டர் / அன்பு செல்வராசா மாஸ்டர்… எமதியக்கத்திலுள்ள கூடுதலான போராளிகளுக்குப் பரிச்சயமான ஒருவர். காரணம் பல்லாயிரக்கணக்கான போராளிகள் அவராலேயே உருவாக்கப்பட்டனர். அவரிடம் நான் பயிற்சி பெறவில்லையே என்தொரு ஏக்கம் அவரிடம் பயிற்சி பெறாதோருக்கு இருந்ததுண்டு. அவரிடம் பயிற்சி பெறாது விட்டாலும் பரவாயில்லை. சில மாதங்கள் அவருடன் கூட இருந்தாலே போதும் என்று கருதும் போராளிகளும் உண்டு. அவர்களில் நானும் ஒருவன். 1987ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இந்தியப் படைகளுடன் சண்டை ஆரம்பமாகி சுமார் இரண்டு மாதங்களின் பின்னர் வன்னியிலுள்ள விசுவமடுக் காட்டுக்குள் இருந்த முகாம் ஒன்றுக்குள் அவருடன் இருந்தேன். 1987ம் ஆண்டுக்கு ம…

  12. கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள் வரதன், மதன் கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள் மேஜர் வரதன் / நிலவன், கப்டன் மதன். ‘மகனைப் பார்த்து எவ்வளவு காலமாகிவிட்டது! இப்ப எப்படி இருப்பானோ?’ அம்மாவுக்கு ஏக்கம். மூன்றாண்டுகளுக்கு முன்பு திரும்பவும் சிங்களவர்கள் தாக்கத்துவங்கிய போது “புலிக்கு……” என்று புறப்பட்டுப் போனவன்தான். அதன் பிறகு அவர்கள் ஒருநாள்கூட காணவில்லை. இடையில் ஒரு நாள் சண்டை ஒன்றில் மைன்ஸ் வெடித்து பிள்ளைக்கு கால் போய் விட்டதாம் என்ற துயரச் செய்தி அம்மாவுக்கு எட்டியது. அம்மாவின் கண்களில் அருவி. வேதனையால் துடித்துக்கொண்டிருப்பானோ……? “அம்மா……!” என்று அழுவானோ……? அவள் மகனையே நினைத்துக்கொண்டிருப்பான். கொஞ்ச நாட்களா…

  13. தடைகள் பல தகர்த்த லெப் கேணல் ராஜசிங்கனின் நீரில் கரைந்த நிமிடங்கள் பிரதான கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை 10.2000 விடுதலைப் போர்களத்திற் புலிகள் இயக்கம் தீக்குளித்த நாட்களுள் அன்றைய நாளும் ஒன்று. ஆனையிறவை முற்றுகையிட்டிருந்த புலிகளின் இத்தாவிற் போர்க்களம் அது. அமைதியாகவே விடிந்திருந்த அந்தப் போர்க்களத்தைச் சிறிது நேரத்திலேயே பெரும் எரிமலைபோல் வெடிக்கச் செய்தான் எதிரி. புலிகளை மட்டுமல்ல, தமிழனின் வீரம்பேசி எழுந்துநின்ற அந்…

  14. தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் இறுதிக்களம் முள்ளிவாய்க்கால் சமர்க்களத்திலும் எமது தேசியத்தலைவருடனே களத்தில் நின்றவர் தலைவருக்கு எப்போதும் உண்மையாகவும் விசுவாசமாகவும் செயல்படவேண்டும் என்பதையே இலக்கணமாக கொண்டு வாழ்ந்தவர். அவர்தான் கேணல் சுயாகி 23வருடங்கள் இவரின் பணி வெளியில் அறியப்படாத, ஏன் போராளிகளுக்குக் கூட பெரியளவில் அறிமுகமில்லாதவன். ஆனால் எமது ஆயுதபோராட்டத்தை தாங்கி நிற்கும் ஆணிவேர் போன்றவர். எமது தலைவரால் பாராட்டப்பட்டவர் தமிழீழவிடுதலைப்புலிகளின் படைக்கல பாதுகாப்பு அணியின் பொறுப்பாளர் இவரே, ஆரம்ப காலத்தில் மணலாற்றுக் காடுகளில் எமது தேசியத்தலைவருடன் இருந்த காலந்தொட்டு இறுதி முள்ளிவாய்க்கால் வரை தலைவரோடு நின்று ஒரே பணியை செய்தவன். அண்ணனின் நம்பிக்கைக்குரி…

  15. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக நின்ற தளபதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக நின்ற தளபதி கேணல் ராயூ. ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுரியமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும். …

  16. 24.08.2006 கருணா குழுவின் துரோகத்தினால் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரமறவர்கள் நினைவில். கடற்புலி லெப். கேணல் குகன், கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன் வீரவணக்க நாள் இன்றாகும். 24.08.2006 அன்று விடுதலைக்கு வளம் சேர்க்கும் விநியோக நடவடிக்கையின் போது மட்டக்களப்பு மாவட்டம் மாங்கேணிப் பகுதியில் தேசவிரோதிகளால் (கருணா குழுவால்) கைதுசெய்யப்பட்டு மேற்கொண்ட தாக்குதலில் துரோகத்தின் வஞ்சனையால் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன், கடற்புலி தலைசிறந்த இயந்திரப் பொறியியலாளர் லெப். கேணல் குகன் / குன்றலினியன் ஆகிய மாவீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். விடுதலையின் கனவுகளுடன் கல்லறையி…

  17. வன்னி கிழக்கு விசுவமடுப் பகுதியிலே பூக்கள் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை மற்றும் மாக்கள் கனிந்து கொட்டும் மாஞ்சோலையுடன் கூடிய அழகிய தென்னஞ்சோலையும் இதமாக தெம்மாங்கு பாட அன்புடன் புன்னகைக்கும் கணக்காய்வுப் பகுதி ஆண் போராளிச் சகோதரர்களுடன் நடுநாயகமாக கம்பீரமாக வீற்றிருக்கும் எமது விசுவமடு #அன்பகம் எனும் கணக்காய்வுப்பகுதி நடுவப் பணியகம்.அங்கே அன்பு எனும் வானிலே ஒளிரும் துருவ நட்சத்திரமாக எங்கள் சேரலாதன் அண்ணாவைக் காணலாம்.கனிவு மற்றும் பண்பு கலந்த ஒரு நிமிர்வான ஆளுமையுடன் கூடிய பொறுமையான ஒரு போராளியாக அவர் காணப்பட்டார்.அந்த முகாமின் ஒழுங்கான நிர்வாக நடவடிக்கைகளுக்கும்,தூய்மைக்கும் அழகுக்கும் அவரே காரணம்.அங்கு பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையின் அழகில் அவரின் கைவண்ணம் தெரியும். …

  18. கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி கடலன்னையின் பெண் குழந்தை: முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி. உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள். அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது. “இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்” அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியான…

  19. தமிழீழ போரியல் வரலாற்றில் அதிகளவான கடற் சமர்களின் கதாநாயகனாக விளங்கிய லெப் கேணல். தியாகன் லெப் கேணல்.தியாகன் சந்திரசேகரம்பிள்ளை தசகுமாரன். வீரச்சாவு. 13.08.2007 சம்பவம்.திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான நேரடிச் சமரின் போது. 1991ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்புக்கள் இராணுவத் தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தியாகன்.கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமான மாவீரரான மேஜர் யப்பான் நினைவாக அவரது பெயரில் உருவான யப்பான் 02ல் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து . மேலதிக பயிற்சிக்காக கடற்புலிகளின் படைத்துறைப் …

  20. தமிழீழ தேசத்தையும், தேசியத்தலைவரையும் நேசித்த "நம்பர் வண்" கரும்புலி லெப். கேணல் பூட்டோ.! இந்தியப் படைகளும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து உணர்வாளர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பகுதியில் யூலியனின் தந்தை இந்தியப் படைகளால் கைது செய்யப்பட்டார். பள்ளிக்குள் புகுந்த படையினர் யூலியனைக் காட்டித்தரும் படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பள்ளிக்குச் செல்லாத யூலியன் தப்பித்துக்கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக் கடையொன்றில் தற்காலிகமாகப் பணிக்கு அமர்த்தப்படுகின்றான். முதல் நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் நாற்காலி அமர்…

  21. தென்தமிழீழம் பெற்ற மாவீரன் தளபதி அன்ரனி ! வசிட்டர் வாயால் பிரமரிஷி என்பதுபோல கிட்டு வாயால் சிறந்த தளபதி அன்ரனி ! "உலகெங்கிலும் கிடைக்காத மலிவான கூலி - எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள்" என அடையாளப் படுத்தப்பட்டவர்கள் தமிழர்கள். ஆனால் திருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் இவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள். இந்த ஆரம்பம் கல்முனை - துறைநீலாவணைப் பகுதியில் இடம்பெற்றது. பெரும் பாலானோருக்குத் தெரியாது. தம்மைத் தாக்க வந்த ஆயுத தாரிகளான சிங்களவர்களை ஓட ஓட விரட்டியவர்கள் கனகசூரியம் உள்ளடங்கிய குழுவினர். அம்பாறை பட்டிப்பளையில் அரசமரக் கிளையொன்றை நாட்டிய இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ் .சேனநாயக்கா, " இந்த மரக்கன்று பெரிய விருட்சமாகும் போது…

  22. மேஜர் ஜொனி அந்த நீண்ட சண்டை முடிந்த போது…… எங்கள் ஜொனி…… அவன் வரவில்லை; முதல்நாள் எம்மிடம் அவன் சொல்லிவிட்டுப் போனதைப் போல இன்றுவரை அவன் வரவேயில்லை… எங்களால் என்றுமே மறக்க முடியாத அந்த இருள் சூழ்ந்த நாட்கள். இங்கே “அமைதி தேடுகின்றோம்” என வந்து – அக்கிரமங்கள் புரிந்த இந்தியத் துப்பாக்கிகளின் ஆட்சிக்காலம். வன்னியில் கருப்பட்ட முறிப்பு என்ற சிற்றூர்ப் பொறுப்பாளனாக ஜொனி இருந்தான். ஒரு நாள் அப்போதைய எமது பிரதான போக்குவரத்துச் சாதனமாக இருந்த மிதி வண்டியில் போய்க்கொண்டிருக்கிறான். அவன் சென்றுகொண்டிருந்த பாதை யாழ்ப்பாணப் பிரதான வீதியில் சந்திக்கின்ற மூலை. மிதிவண்டி வளைவில் திரும்பவும் பதுங்கியிருந்த இந்தியப் படையினர் அவன் மீது பாயவும் சர…

  23. கப்டன் விக்னம் இயக்கப் பெயர்: கப்டன் விக்னம் இயற்பெயர்: கந்தையா தவராசா முகவரி: உடுத்துறை வடக்கு, தாளையடி, வடமராட்சிக் கிழக்கு, யாழ்ப்பாணம். ஈழமண்ணில்: 07.08.1968. ஈழவர் மனங்களில்: 05.08.1990. 1984ம்ஆண்டில் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்த மாணவர்களில் அவர் ஒரு முதன்மைமாணவன். கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்துவிளங்கிய அவர் அன்றையநாட்களில் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் தனக்கென ஒரு இடத்தைப்பதித்திருந்தார் என்றால் அது மிகையாகாது. தமிழீழ இலட்சியத்தை வரித்துக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் இராணுவரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் முனைப்புப்பெற்ற 1984-ம்ஆண்டு ஒக்டோபர்மாதத…

  24. கப்டன் திலகா சிட்டுக்குருவி கப்டன் திலகா குள்ளமான சிறிய உருவம். சிரிக்கும் முகம், அமைதியான் சுபாவம். எல்லோருடைய மனங்களையும் கவர்ந்து, பழகுவதற்கு இனிய போராளி. கற்பனை செய்து பாருங்கள். உங்கள் மனங்களில் ஒரு உருவம் தெரிகின்றதல்லவா? நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். அதோ, அந்த உருவம் ஓடுவதைப் பாருங்கள். பாதங்கள் தரையில் படாதது போல் தோன்றுகிறதல்லவா, உடற்பயிற்சி செய்வதைப் பாருங்கள், எப்படி இவ்வளவு வேகமாகவும் லாவகமாகவும் உடலை வளைக்க முடிகிறது என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவள் தான் திலகா. சிட்டுக்குருவி போல் துருதுருவென்ற இயல்புடன் எப்போதுமே உற்சாகமாகத்தான் ஓடித்திரிவாள். திலகாவிடம் பயிற்சி பெற்ற பெண் புலிகள் “திலகாக்கா மாத்திரம் எப்படி …

  25. லெப். கேணல் தட்சாயினி நெஞ்சை விட்டகலா நினைவுகளில் நீங்கள் என்றும்… கல்கியின் “பொன்னியின் செல்வனில்” வருவாரே ஒரு முதிய வீரர். பெரிய பழுவேட்டையார் என்று அவருக்குப் பெயர். உடலில் அறுபத்து நான்கு வீரத்தழும்புகள் இருக்கிறதாம் அந்த வீரக்கிழவருக்கு. எங்கள் தாட்சாயினியும் பெரிய பழுவேட்டையரைப் போலதான் என்றால் தாட்சாயினியின் தோழி ஒருத்தி சற்றுப் பெருமையாக, உண்மைதான். தாட்சாயினியின் உடலிலுள்ள வீரத்தழும்புகளை நின்று நிதானமாக எண்ணினால் அறுபத்துநான்குக்கும் அதிகமாகவே இருக்கும். தட்சாயினி! அந்த வயதுக்கேயுரிய முதிர்ச்சி. களங்களில் அவள் காட்டிய உக்கிரம், தன்னோடு நிற்கும் போராளிகளில் வைத்திருக்கும் அன்பு, பராமரிப்பு, அவளது வளர்ப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக தவற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.