மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
957 topics in this forum
-
கடற்கரும்புலி கப்டன் சிவகாமி நெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி. அவள் ஒரு ஓட்ட வீராங்கனை. அவள் பங்குபற்றுகின்ற ஓட்டப்போட்டிகள் அனைத்திலுமே பரிசு வாங்காமல் வந்ததில்லை. எந்த நேரமும் கால்கள் நிலத்தில் படாதவாறு துறுதுறுத்தபடி பறந்து திரிவாள். சிவகாமி என்ற போராளி ‘மின்னல்’ என்ற சிறிலங்கா இராணுவ நடவடிக்கையில் மணலாற்றில் வீரச்சாவடைந்ததை நினைவு கூர்ந்து, செல்வி என்ற இவளுடைய இயற்பெயர் ‘சிவகாமி’ ஆனது. இவளும் மேஜர் மதுசாவும் நெருங்கிய தோழிகள். இயக்கத்துக்கு வந்தபின் சிவகாமி தன் போராட்ட வாழ்க்கையில் மதுசாவுடனேயே இருந்தாள். அந்த உறவு; மதுசா திருமலைக் கடலுக்குக் கரும்புலியாகச் சென்ற சமயம் தனக்கும், மதுசாவுக்கு…
-
- 2 replies
- 727 views
-
-
லெப். கேணல் சாந்தகுமாரி எமது விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் பணியாற்றிய லெப். கேணல் சாந்தகுமாரி. எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன. புயலுக்கு முந்திய அமைதியோடு புலிகள் இருந்த காலப்பகுதியது. எதிரியானவன் எமது மண்ணை வல்வளைக்கும் நோக்குடன் ஜெயசிக்குறு, ரணகோச, வோட்டஜெற் என பெயரிட்டபடி படை நடவடிக்கைகளை மாறி மாறி மேற்கொண்டு எமது வளங்களை அழிவுக்குள்ளாக்கியதுடன், எம்மக்களையும் பெரிதும் துன்பப்படுத்திக் கொண்டிருந்தான். எவரும் எதிர்பாராத பெரு…
-
- 3 replies
- 1.2k views
-
-
மேஜர் கலாநிதி ஆழியவளையிலிருந்து எழுந்த அலைமகள் கடற்புலி மேஜர் கலாநிதி; ஒரு போராளியின் புனிதப் பயணம். இமயம் முதல் குமரி வரையும், கங்கை தொடக்கம் கடாரம் வரையும் எட்டுத் திக்குகளிலும் வெற்றிக்கொடியைப் பரப்பி விட்டவன் தமிழன். ஆட்சியுரிமையோடு ஆசியாவில் வாழ்ந்து இந்துமாகடலின் ஆளுகையை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்து அதற்கு சொந்தம் கொண்டாடியவன் எமது முப்பாட்டன் சோழன். இதனால் உலகில் முதல் கப்பல் படையை நிறுவி கடலில் படை நடத்தியவனும் தமிழன் என்பது உண்மை வரலாறாகும். இவ்வாறு பெருமைகொண்ட தமிழினம் சொந்த நாடின்றி, சொந்த கடல்வளமின்றி, இருப்புக்கு இடமின்றி, நாதியற்று, நாடு நாடாக அலையும் நிலையில், தன்மானமிழந்து பணலாபம் கொண்டு வக்கற்ற வாழ்வில், திக்கற்ற இலக்கில் இன…
-
- 2 replies
- 571 views
-
-
தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த பன்னிரு வேங்கைகள். 1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா – இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது. இத்தோடு முடிந்துவிட்டது என்று மக்களின் மனத்தில் எண்ணங்கள் ஓட, தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 1987ம் ஆண்டு யூலை 29…
-
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழீழ வரலாற்றில் அழியா பெயர் லெப்.கேணல் புலேந்திரன்... லெப்.கேணல் புலேந்திரன்(திருமலை மாவட்ட தளபதியும் மத்தியகுழு உறுப்பினரும்) குணநாயகம் தருமராசா பாலையூற்று, திருகோணமலை. வீரப்பிறப்பு:07.06.1961 வீரச்சாவு:05.10.1987 நிகழ்வு:யாழ்ப்பாணம் பலாலி படை முகாமில் இந்திய – சிறிலங்கா கூட்டுச்சதியை அம்பலப்படுத்துவதற்காக சயனைட் உட்கொண்டு வீரச்சாவு அன்பின் புலேந்திரன், தமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தானே உத்தரவாதம் என்று எமது ஆயுதங்களைப் பெற்ற இந்தியா, நீ திருமலைக்குப் போவதற்குப் பாதுகாப்புக் கேட்டபோது இந்திய இராணுவத்திலுள்ள மேஜர் கருப்பசாமி உனக்குச் சொன்னார், “இன்றும் இல்லை, இனி எப்போதும் இல்லை” என்று. விடுதலைக்காகப் போரிடும் ஓரினம் தன்னைத் தான…
-
-
- 2 replies
- 1.1k views
-
-
குடாநாட்டைப் பாதுகாத்த புலோப்பளைச் சமர் குடாநாட்டைப் பாதுகாத்த புலோப்பளைச் சமர் 29.09.1993 அன்று நான்குமணி நேரத்தில் நடத்து முடிந்த மாபெரும் சமரைக்கொண்ட மறக்கமுடியாத நாள். மரபுவழிச் சண்டை முறையில், எமது போராட்ட வரலாற்றில், முக்கிய இடம் பெற்றுவிட்ட ஒரு சாதனை நாள். வெட்டவெளியூடாக நன்கு திட்டமிட்டு நகர்ந்த எதிரியின் கவச வாகனப்படையை, புலிகளின் கவச வாகனப்படையை, புலிகளின் மனிதக்கவசம் உடைத்தெறிந்து காவியம் படைத்த நாள். யாழ். குடாநாட்டுக்கு ஏற்படவிருந்த பேரழிவைத் தற்காலிகமாகத் தடுத்த இந்த இந்த வரலாற்றுச் சமரில், 125 படையினர் கொள்ளப்பட்டுள்ளனர்; 284 பேர் படுகாயமடைந்துள்ளனர் என, சிங்கள அரசே அறிவித்துள்ளது. அத்துடன் சிங்களப்படை இந்தச் சமரில் ரி-55…
-
- 1 reply
- 677 views
-
-
சமர்க் களங்களில் ‘கமரா’க்கள் சமர்க் களங்களில் ‘கமரா’க்கள். புலிகளின் வீரசாதனைகளை; சொல்லப்போகும் ‘போர் ஆவணங்கள்’ ‘ஓப்பறேசன் யாழ்தேவி’ குடாநாட்டின் குரல் வரளையை நெரிக்க சிங்களப் படை முனைப்போடு எத்தனித்த பெருமெடுப்பிலான படையெடுப்பு அது. ஆனையிறவிலிருந்து நகர்ந்தவர்களை, புலோப்பளையில் வைத்து எதிர்கொண்டு புலிகள் நடாத்திய வீரச்சமர் பிரசித்தி பெற்றது. அந்த வரலாற்றுச் சமரைத் தத்ரூபமாகப் படம்பிடித்த இரண்டு புலிவீரர்களை, அண்மையில் தலைவர் அவர்கள் பரிசளித்துப் பாராட்டினார். புலிப்படை வீரர்களின் ஆக்ரோசத் தாக்குதலில் சுருண்டு விழுகின்ற எதிரியின் படையாட்கள். தப்பினோம் பிழைத்தோமென சகாக்களையும் தளபாடங்களையும் கைவிட்டோடுகின்ற சிங்கள வீரர்கள். தகர்த்தழிக்கப்படுகின…
-
- 1 reply
- 640 views
-
-
லெப். கேணல் நரேஸ் தென்றலாக வீசிய புயல்: கிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் நரேஸ் / நாயகன். பூநகரிச் சமர்தான் புலிகள் இயக்கத்தின் பலத்தையும், அதன் போரிடும் சக்தியையும் எடுத்தியம்பியது. ஆனாலும், ‘புலிகளுக்கே உரித்தான சண்டை’ என்று, புலிகளின் போர்த் திறனைப் பறைசாற்றிய சண்டையென்று புலோப்பளைச் சமரைத்தான் சொல்ல வேண்டும். பட்டப்பகற் பொழுதில், கவசங்களற்ற வெட்டவெளிப் பிரதேசத்தில், மணலோடு மணலாகி மறைந்திருந்த புலிகள், கவசங்களுடனும் கனரக ஆயுதங்களுடனும் நகர்ந்த எதிரிகளுக்கு முன்னால், ஆக்ரோசமாக எழுந்த போது, உலகையே வியப்பிலாழ்த்திய அந்தச் சண்டை வெடித்தது. டாங்கிகளும், பீரங்கிகளும், நவீன போர்க்கலங்களும் மனஉறுதிக்கு முன்னால் மண்டியிட்ட…
-
- 1 reply
- 549 views
-
-
உருக்கினுள் உறைந்த பனிமலை உருக்கினுள் உறைந்த பனிமலை: கேணல் சங்கர் அவரோடு வித்தியாசமான மனிதர். எப்போதுமே சீரான நேர்த்தியான தோற்றத்துடனே தோன்றுவார். சீராக வகிடெடுத்து அழுந்த வாரப்பட்ட தலையும், பரந்த தெளிவாக காணப்படும் முகத்தில் நகைப்பும், வியப்பும், கூர்மையும் காண்பிக்கும் கண்களுக்கு இறுக கால்பதித்து நிலமதிர நடக்கும் கனத்த உருவமும் அசாதாரண மனிதரிவர் என்கிற பதிவை எவரிடத்திலும் ஏற்படுத்தும். எப்பொழுது சந்திக்க நேர்ந்தாலும் தோளை குலுக்கிக் குலுக்கி தலைசரித்து இலேசான செருமலுடன் கண்களை நேராக பார்த்து பயனுள்ள உரையாடலொன்றிற்கு அவர் ஆயத்தமாகும் தோற்றம் என்றும் எம் மனதில் நிலழாடும். எந்தவொரு விடயமானாலும் தனது உறுதியான றிலைப்பாடுடனும், மெலும் விபரங்…
-
- 0 replies
- 816 views
-
-
கிளிநொச்சி படைத்தளம் தாக்கியழிக்கப்பட்ட ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையில் காவியமான 293 மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது “ஓயாத அலைகள் 2” படை நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின்போது 2000 வரையான படையினர் கொல்லப்பட்டதுடன் பெருமளவானோர் படுகாயமடைந்தனர். பெருமளவான போர் ஆயுதங்கள், வெடிபொருட்கள், படை ஊர்திகள் என்பன விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.கிளிநொச்சிப் பகுதி சிறிலங்கா படைகளின் வல்வளைப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட “ஓயாத அலைகள் – 2” நடவடிக்கையின் வெற்றிக்காக 400 வரையான போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.இவ்வெற்றிச் சமரில் முக்கிய பங்கேற்று ஊடறுப்பு அணி ஒன்றின் தலைவியாகச் சென்று வீரச்சாவை…
-
- 0 replies
- 527 views
-
-
-
- 0 replies
- 863 views
-
-
லெப். கேணல் சுபன் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் சுபன் 1989 இன் இறுதிக் காலம், இந்தியப் படைகள் ஆக்கிரமித்த நின்ற இருண்ட நாட்கள். முள்ளிக்குளத்தில் முகாம் இட்டிருந்த ‘புளொட்’ கும்பல் மீது 20.05.1989 அன்று நடாத்தப்பட்ட வெற்றிகரமான தாக்கதலின்போது, அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதியாக இருந்த பானு அண்ணன் படுகாயமடைந்து சிகிச்சைக்காகச் சென்றதை அடுத்து, சுபன் அண்ணன் மன்னார் மாவட்டத் தளபதியாகப் பணியாற்ற நியமிக்கப்பட்டார். தளபதியாகப் பொறுப்பெடுத்து வந்த உடனேயே – இந்தியப் படைக்கு நல்லதொரு அடி கொடுக்க வேண்டும் என்று எண்ணங்கொண்ட சுபன் அண்ணன் அதற்காக மன்னார்த் தீவில் மருத்துவமனைக்கு அருகிலிருந்த இந்தியப் படைமுகாமைத் தேர்ந்தெடுத்தார். இத்தாக…
-
- 3 replies
- 2.3k views
-
-
கடற்கரும்புலி கப்டன் புலிமகள் பூக்களுள் எழுந்த புயல் கடற்கரும்புலி கப்டன் புலிமகள். அது 1998 நடுப்பகுதி. கிளிநொச்சியின் நகரப்பகுதி இராணுவத்திடமிருந்தது. டிப்போச் சந்தியடி எங்களிடமிருந்தது. தற்போது கிளிநொச்சி மாவட்ட தமிழீழ காவற்பணிமனை அமைந்திருக்கும் இடத்திற்கு அருகேயுள்ள தேவாலயம், கருணா நிலையம் எல்லாம் எமதும் சிறீலங்காப் படையினரதும் காவல் நிலைகளுக்கிடையிலான சூனியப் பகுதிக்குள் அமைந்திருந்தன. நேர்வீதி. எமது நடமாட்டத்தைப் படையினரும் அவர்களை நாமும் இலகுவாக அவதானித்து, பதுங்கிச் சூடுகளை தாராளமாக மேற்கொள்ள வசதியான நேர்வீதி. இரு பகுதியுமே தம்மைப் பாதுகாத்துக்கொள்ள மறைப்புப் படங்குகளை வீதிக்குக்குறுக்கே கட்டித் தொங்கவிடுவோம். ஒருவரின் படங்…
-
- 1 reply
- 827 views
-
-
லெப். கேணல் அருணா துயரம் நிறைந்த தமிழினத்தை துன்பக் கடலில் இருந்து மீட்டிடத் தோன்றிய ஆயிரம் ஆயிரம் மாவீரர் வரிசையில் அருணாவும் ஒருவன். வடமராட்சிப் பகுதியில் பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் வயல்வெளிகளையும், வானைத் தொடுவதற்குப் போட்டி போட்ட வண்ணமுள்ள மா, பலா, பனை, தென்னை போன்ற பயன்தரு மரங்களையும் தன் அணிகலனாக அணிந்திருந்தாள் துன்னாலை அன்னை. அருணா துள்ளி விளையாடிய பெருமைக்கும், கறுப்பு மலர் கரும்புலிகள் வரிசையில் தன் பெயரை முதலாவதாகப் பதித்த கப்டன் மில்லரை வளர்த்தெடுத்த பெருமைக்கும் உரியவள் இவளே. இராசேந்திரம் பூமணி தம்பதிகளின் அருந்தவப் புதல்வனாக சசிகரன், கண்ணன் என்னும் செல்லப் பெயருடன் 16.12.1973ல் அவதரித்தான். அன்னை அரவணைப்பிலும் தந்தையின் வழிகாட…
-
- 1 reply
- 884 views
-
-
கடற்கரும்புலி மேஜர் அன்பு கண்ணீரைக்கடந்து… ‘அம்மா…. இன்பருட்டி வானுக்க நிக்கிற சக்கை வண்டியில அண்ணா நிக்கிறானம்மா…..’ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேர்த்து விறுவிறுத்தபடி ஓடி வந்த அம்மாவின் சின்னமகன் சொன்னபோது, அம்மாவின் அடிவயிற்றில் தீமூண்டது. வீட்டில் நின்ற கோலத்தோடே செய்த வேலையைப் போட்டுவிட்டு அம்மா கடற்கரைக்கு ஓடினாள். கூடவே அன்புவின் அன்பு உறவுகளும்…… இன்பருட்டி ‘வான்” அன்புவின் உறவுகளால் முற்றுகை இடப்பட்டதோடு, ஒப்பாரியும், ஓலமுமாய் அந்த ‘வான்” அதிர்ந்து கொண்டிருந்தது. அன்புவின் அம்மாவையும், உறவுகளையும், கூட நின்ற போராளிகள் தேற்ற முயன்று தோற்றுப்போய் நின்றார்கள். நிலைமையைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு பொறுப்பாளரின் தலை…
-
- 1 reply
- 686 views
-
-
லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வன் அவன் நிறைய சாதிக்க வேண்டியவன். யாழ்ப்பாணத்து மண்ணில் முருகைக் கற்களினும் ஊற்றெடுப்பது தண்ணீர் மட்டுமல்ல வீரமும் தான். இல்லாதுவிடின் வந்தேறி ஆக்கிரமிக்கும் அன்னியருக்கு தண்ணீர் பாய்ச்சி குளிரவைத்து குந்தியிருக்க இடம் கொடுத்திருக்கும் அல்லவா? இல்லையே? விதையை உடைத்து மண்ணைப் பிளந்து யாழ்மண்ணில் பலத்தையெல்லாம் திரட்டி காற்றைக் கிழித்து சூரியனைத் தொட்டுவிடத் துடிக்கும் பனைமரத்துடன் லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வனையும் பார்க்கிறேன். 1990 யாழ்ப்பாணம் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளிலிருந்து மீண்டும் தமிழர் படையாம் புலிகளின் கட்டுப்பாட்டினுள் வந்திருந்த நேரம். மாவட்ட புலனாய்வுப் பொறுப்பாளருக்கு முகவர்களாக …
-
- 2 replies
- 781 views
-
-
வீரவேங்கை அப்பன் புதிய சகாப்தம்: முதல் எல்லைப்படை மாவீரர் வீரவேங்கை அப்பன். “உதெல்லாம் உங்கட கனவு. துயிலும் இல்லத்தில உங்களையோ?” “என் எல்லைப்படை எண்டாலும் சண்டைக்குதானே போறன். சண்டையில செத்தா துயிலுமில்லம்தான்?” உங்கட உந்த எல்லைப்படையை நம்பி சண்டையில் அதுவும் முன்பொயின்ரில விடுவாங்களே?” நீ என்ன வேணுமெண்டாலும் சொல்லு. போயிட்டு திரும்பி வருவன் அல்லது துயிலுமில்லத்தில புதைகிற மாதிரி மாவீரனா வருவான்.” “சரி சரி உந்தக் கதைகளை விடுவம். வெளிநாட்டுக்குப் போறதக்குக் தேவையான அலுவல்கள் இன்னமிருக்கு ஞாபமிருந்தா சரி” “நான் சுவிக்குப் போனாலும் சரி ஜேர்மனிக்குப் போனாலும் சரி, ஐஞ்சு வருசமோ ஆறுவருசமோ நிண்டு உழசை;சுக்கொண்டு வந்திடுவன். பிள்ளையளை விட்டி…
-
- 1 reply
- 846 views
-
-
லெப். கேணல் கஜேந்திரன் / தமிழ்மாறன் கள மருத்துவர் லெப். கேணல் கஜேந்திரன் / தமிழ்மாறன். அன்னலிங்கம் பகவதி தம்பதியினரின் இரண்டாவது புத்திரன் . ராஜ்கண்ணா என்ற இயற்பெயர் கொண்ட எங்கள் கஜேந்திரன். முல்லைதீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு சிவநகரில் சூரிய உதயத்தை முந்திக்கொண்டு அழகிய குழந்தையாய் பிறந்த பொழுது பெற்றோரும் அறிந்திருக்கவில்லை இவன் இந்த மண்ணின் மைந்தன் என்று. அக்காவுடன் அன்பு தம்பியுமாய் கலகலப்பான அழகிய குடும்பமாக மகிழ்ச்சியாக இருந்தாலும் தமிழர் நிலங்களில் நடைபெற்ற சிங்கள ஆக்கிரமிப்புக்களைக் கண்டு சிறுவதிலையே சீற்றம் கொண்டான். தானும் போரவேண்டும் என்று நினைத்து போராட்டத்திற்கு இணைவதற்கு சென்றவனை மீண்டும் வீட்டிற்கு அனுப்பி…
-
- 1 reply
- 1.5k views
-
-
எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம். மே.21.2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழீழ மக்களே! விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்துருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப்படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்றமுடியாத துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் இன்று மூழ்கிக்கிடக்கி…
-
- 1 reply
- 828 views
-
-
பண்டாரவன்னியனின் பொற்கால்கள் களையாற நடந்த கரையோரம் பண்டாரவன்னியன் பொற்கால்கள் களையாற நடந்த கரையோரக் கடலில் கரும்புலித் தாக்குதல் 03.09.1995 கடற்கரும்புலிகள் மேஜர் நகுலன், மேஜர் கண்ணாளன் பண்டாரவன்னியனின் பொற்கால்கள் களையாற நடந்த கரையோரம். கடல் தரையோடு கைகோர்க்கும் ஒரு நெய்தற் கிராமம். புரட்டாசி 3ம் நாளின் கருக்கல் பொழுது. நிலவற்ற வான் எதுவும் மின்னுதலற்ற ‘றாடார்‘ திரை. அலைகடல் கடந்து அரசாட்சி படர்ந்த சோழப் பேரரசனின் கொள்ளுப் பேரர்கள் நீலவரிப் படகுகளை நீருக்குள் இறக்கினர். சுடுநீர்ச் சுரப்பிகளை முடியில் தரித்து தேசத்திற்கு மகிமையளிக்கும் தலைநகர் கடந்து….. மீன்பாடுகின்ற ஒரு கரையோரக் கிராமத்தில் தரையேறும் பயணம். ‘கண்ணாளனின்’ தோள்களில் தட்டி ‘நகுலன…
-
- 2 replies
- 603 views
-
-
கப்டன் ரவி காலம் எழுதிய வரிகளில்…! இந்திய ராணுவம் ஈழமண்ணுக்குத் தந்து சென்ற வடுக்கள் எங்கள் மனங்களில் நூற்றாண்டுகள் போனாலும் கரையாத துயரங்கள்; அவை. ஓவ்வொரு ஊருக்குள்ளும் ஒரு குடும்பமேனும் இந்தியப் படைகளால் சிதைவுற்ற கதைகளைச் சுமந்து கிடக்கிறது வரலாறு. அந்தக் கொடிய நாட்களில் எங்கள் ஊர்களில் தலைமறைவு வாழ்வு வாழ்ந்த புலிவீரர்கள் பலரது கதைகளையும் காலம் மௌனமாகச் சுமந்து கொண்டு நகர்கிறது. 1989ம் ஆண்டின் ஓரிரவு எங்கள் வீடுகளில் அத்துமீறி நுளைந்து நிரந்தரமாய் எங்களோடு உறவாகி நினைவுள்ளவரை தங்கள் ஞாபகங்களைத் தந்து சென்றவர்களுள் கப்டன் றவியண்ணாவும் ஒருவர். ஊரில் உலாவிய போராளிகளுள் றவியண்ணா வித்தியாசமான போராளி. அமைதியென்றால் அது றவியண்ணாதான். அதி…
-
- 2 replies
- 941 views
-
-
கடற்கரும்புலி மேஜர் புகழரசன் கடலன்னையின் புதல்வர்கள் புவீந்திரன் / புகழரசன். புவீந்திரன்! அவன் ஒரு குழந்தை. வயது தான் பதினெட்டேயன்றி மனதால் அவன் பாலகன். மனித வாழ்வின் நெளிவு சுழிவுகள் அவனுக்குத் தெரியாது. சமூக அமைப்பின் ஏற்றத்தாழ்வுகள் அவனுக்குப் புரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் யாரோ – எவரோ – அடுத்தவர்களுக்காகப் பாடுபட வேண்டும். எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது மட்டும் தான். சின்ன வயதிலிருந்தே அவன் அப்படித்தான். இரக்க சிந்தனையும் – உதவும் குணமும் அவனது உயிரோடு ஒட்டிப்போயிருந்த இயல்புகள். பக்கத்து வீட்டு அம்மா வந்து “தம்பி, ஒருக்கா அந்தக் கடைக்குப் போட்டு வாறியா அப்பன்?” என்றால், சொந்த வீட்டு வேலையைப் பாதியிலேயே போட்டு…
-
- 6 replies
- 1k views
-
-
கடற்கரும்புலி கப்டன் மணியரசன் கடலன்னையின் புதல்வர்கள் மணியரசன். மணியரசன்! “பதினைந்தும் நிரம்பாத பாலக வயதில், தாயகத்துக்காய் தனையீந்த கரும்புலி; என் கருவில் விளைந்த பிள்ளை” என்று, தமிழீழத் தாயை தலை நிமிர்ந்து சொல்ல வைத்த அடலேறு அவன். அந்தத் துடியாட்டமும், துடுக்கான பேச்சுக்களும் எங்களது நெஞ்சுக் கூட்டுக்குள் அவனது நினைவுகளைப் புதைத்து விட்டுப் போய்விட்டன. இந்தச் சின்ன வயதிலும் – பிறைச்சந்திரன் போல ஒரு மெல்லிய மொட்டை, அகவைக்கு எற்ற அளவில் குழந்தை வளர்ச்சி, குறும்புச் சிரிப்போடு ஒர் உருண்டை முகம். நிமிர்ந்த – லாவகமான – திடகாத்திரமான உடல்வாகு. எங்கள் கண்ணெல்லாம் அந்த வண்ணக் கோலம். மணியரசன் குறுகுறுத்தவன். பஜரோவில் வருகின்றவர் …
-
- 1 reply
- 1.3k views
-
-
புலி வீரர்களின் வாழ்வுக்கு கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன் ஒரு பாடம். கடற்கரும்புலி மேஜர் புகழரசன் (புவீந்திரன்) சுப்பிரமணியம் நாதகீதன் அரியாலை, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:15.11.1975 வீரச்சாவு:29.08.1993 நிகழ்வு:யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் “சுப்பர்டோறா” அதிவேகபீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரச்சாவு அவன்ஒரு குழந்தை.வயதுதான் பதினெட்டேயன்றி மனத்தால் அவன் பாலகன். மனித வாழ்வின் நெளிவு சுழிவுகள் அவனுக்குத் தெரியாது சமூக அமைப்பின் ஏற்றத் தாழ்வுகள் அவனுக்குப் புரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் யாரோ, எவரோ, அடுத்தவர்களுக்காகப் பாடுபட வேண்டும் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது மட்டும்தான். சி…
-
- 1 reply
- 484 views
-
-
கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயூ அவர்கள் புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார்.ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுரியமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்து முட…
-
- 4 replies
- 954 views
-