மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
957 topics in this forum
-
‘சமர்க்கள நாயகன்’ பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு May 21, 2025 தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். தலைவரின் போரியல் சிந்தனைக்கு அமைவாக, பல புதிய இராணுவத் தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, பல போரியல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை மேன்மைப்படுத்தியவர்களில் பிரதானமானவர். எல்லாவற்றுக்கும் மேலாக, “விடுதலைப்புலிகள் அமைப்பின் இமாலய வெற்றிகள் பலவற்றிற்கு நடு…
-
- 2 replies
- 476 views
-
-
தமிழீழ தேசிய இன விடுதலை போராட்டத்தின் தேசிய தலைவரின் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் பின்னால் ஒரு வரலாறு உண்டு. அதே போன்று தான் இந்த புகைப்படத்திற்கும் பெரிய வரலாறு உண்டு. இந்த புகைப்படமானது 1987 ஜனவரி 6 ஆம் தியதி தொண்டமானாறு கெருடாவில் உள்ள விடுதலைப் புலிகளின் பேஸ் ஒன் எனும் முகாமில் 1987 ஜனவரி அன்று இரவு எடுக்கப்பட்டது. இதற்கு முன்பாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தேசியத் தலைவர் தமிழகத்தில் இருந்து வந்த நிலையில், கடைசியாக இந்தியாவில் இருந்து 1987 ஜனவரி 5ஆம் தியதி அன்று தான் புறப்பட்டு மாதகல் வழியாக யாழ்ப்பாணம் வந்தது குறிப்பிடத்தக்கது. தாயகம் திரும்பிய அன்றைய மறு தினமே இந்த முகாமிற்கு தலைவர் வருகை தந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் தளபதி கிட்டு தலைமையில் யாழ்குடா நாடு அன…
-
- 0 replies
- 273 views
-
-
நம்மெல்லோரைப் போலவே அவனுக்குமொரு குடும்பம் இருந்தது. அதுவும், மதிவதனி என்றால், மதி(நிலவு) போல வதனம்(முகம்) உடையவள் என்று பொருள். அப்பேர்ப்பட்டவளை ஆசையாசையாய் காதலித்துக் கரம்பிடித்து, அவள் அமைத்துக்கொடுத்த அழகான குடும்பம் அது. ஆஸ்திக்கொன்று. ஆசைக்கொன்று. இரண்டும் கலந்தவொன்று என மூன்று மொட்டுகளால் மலர்ந்த குடும்பம் அது. அவன் நினைத்திருந்தால், தானுண்டு தன் குடும்பமுண்டு என்றிருந்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், தன் காதல் மனைவியை ஒரு மஹாராணி போல் வாழ வைத்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், உள்ளூரிலேயே விலைபோய் தன் குடும்பத்தோடு சுகவாசியாய் இருந்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், குடும்பத்தோடு புலம்பெயர்ந்து ராஜாவைப்போல் வாழ்ந்திருக்க முடியும். அவன் ந…
-
- 0 replies
- 217 views
-
-
நானும் ஆனந்தபுரமும்..... 04/04/2009. அப்போது அந்த வைத்தியர் யார் என்று எனக்கு தெரியாது அவருக்கு உதவியாக அவருடைய மாமா அங்கு இருந்தார் அவருடைய குடும்பமும் அதே வைத்தியசாலையில் இருந்தது என்று தெரியும். ஆனந்தபுர கோர தாண்டவத்தின் இறுதி நாள் வித்துடல்கள் கிடந்த கிடங்கிற்குள் மயக்க நிலையில் நான் இருந்தது தெரியாமல் வீரச்சாவு என்று நினைத்து என்னையும் போட்டு விட்டு சென்று விட்டனர். மயக்கம் தெளிந்து நான் அலம்பிக்கொண்டு கிடந்தேன் ஒருவர் எனது கைகளை பிடிக்க மற்றையவர் எனது இரு கால்களையும் பிடித்து தூக்கி கொண்டு வாகனத்தில் போட்டார்கள். பின் வைத்தியசாலையில் நான் பெரிய சத்தமாக கத்தினேன் நான் சாக போறன் சாகப்போறன் என கத்தினேன் அதற்கு முதல் தேசிக்காய் தண்ணி தாங்க என்று கத்த அங்கு இருந்த வைத்தி…
-
- 3 replies
- 682 views
-
-
விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் - அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் அவருடைய காதல் மனைவி வினிதா சமரசிங்க குணசேகர பற்றி நிசங்க கட்டுகம்பொல (Nissanka Katugampola) என்ற சிங்கள நண்பர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதிக்கு அண்மித்த நாளொன்றில் நடேசன் படுகொலை செய்யப்பட்டபோது வினிதா, நடேசன் மீது கொண்ட காதலுக்காகத் தன்னைத் தியாகம் செய்தாள் என்ற தொனியில் அவருடைய பதிவு அமைந்துள்ளது. இவர்களுடைய சிறந்த காதல் கதையை எதிர்காலச் சந்ததிக்கு எழுதி வைக்க வேண்டாமா என்று மற்றொரு சிங்கள நண்பரிடம் இவர் கேள்வி தொடுத்துள்ளார். தமிழ் மொழி பெயர்ப்பு வருமாறு... அற்புதமான, அன்பான இந்த காதல் ஜோடியை நாங்கள் முதன் முதலில் 1993 ஆம் ஆண்டு ஒக்டோபர்…
-
- 0 replies
- 302 views
-
-
“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மருமகனுக்கு சொல்லி விட்டு தன் மூச்சை நிறுத்திவிட்டார் அந்த உயரமான பருமனான உடலமைப்புக் கொண்ட அந்த விடுதலை விரும்பி. அவரை கோமகன் என்று அறிந்தவர்களை விட சிங்கண்ண என்று அறிமுகம் கண்டவர்கள் தான் அதிகம். சாதாரண போராளிகள் முதல் மூத்த தளபதிகள் வரை சிங்கண்ண என்றால் அறிமுகம் அற்றவர்கள் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் அவ்வாறான புனிதமான பணியில் இருந்தார். மாவீரர்கள் தமிழ்த் தேசத்துக்காக தமது இன்னுயிர்களை ஆகுதி ஆக்கி விசுவமடு துயிலும் இல்லம் வரும்போது இந்த மனிதனை சந்திக்காமல் குழிக்குள் போவதில்லை. விசுவமடு துயிலும் இல்லத்தில் தனது இறுதிக்கால பணியைச்…
-
- 7 replies
- 698 views
-
-
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சுழன்ற கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை. யாழ்.மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் தேசியத்தலைவர் வந்துதித்த வல்வை மண்ணுக்கு அண்டியதாக அமையப்பெற்ற செல்வச்செழிப்புமிக்க நெய்தல் நிலமான பொலிகண்டி மண் பெற்றெடுத்த வீரத்தளபதி பிரிகேடியர் சூசை. திரு திருமதி தில்லையம்பலம் தம்பதியினருக்கு 1963-ம்ஆண்டு ஒக்டோபர்மாதம் இரண்டாவது மகனாகப்பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவநேசன். ஏற்கனவே ஒரு அண்ணனை மட்டும் சகோதரனாகக் கொண்ட சிவநேசனை எல்லோரும் செல்லமாக காந்தி என்றுதான் அழைத்தனர். இளமைப்பராயத்தில் பள்ளிப்படிப்புக்களில் சிறப்பாகத் தேர்ச்சிபெற்ற காந்தி உயர் வகுப்புக் கல்விகளை வடமராட்சி வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் முன…
-
-
- 5 replies
- 804 views
-
-
90இற்கு முன்னர் நடுவண் கிழக்கு நாடான குவைத்தில் வசித்து வந்த இவர், 1990 இல் ஈராக் குவைத்தை வல்வளைப்பு செய்தபோது அங்கிருந்து வெளியேறி தமிழீழம் வந்தார். பின்னர் 1995இல் வருவாய்த்துறையில் சேர்ந்து பணியாளராக சம்பளத்திற்கு வேலை செய்த இவர், 1999இல் தமிழீழ வருவாய்த்துறைப் பொறுப்பாளரால் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினராக்கப்பட்டார். பின்னர் இவரது திறமையைக் கணித்த பொறுப்பாளர் 2000 இல் வருவாய்த்துறையின் புலனாய்வுப்பிரிவின் பொறுப்பாளராக பணியமர்த்தினார். புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக பணியேற்ற பின் பெயர் குறிப்பிடவியலா வகுப்பிக்கப்பட்ட பல செயல்களில் ஈடுபட்டார். இட்ட பணியை நேர்மையுடனும் கண்ணியத்துடனும் தாய்நாட்டிற்கான சேவையென கருதி செய்த இவருக்கு 2008 இறுதியில் சோதனைக் காலம் ஒன்று வ…
-
- 2 replies
- 680 views
- 1 follower
-
-
விடுதலைக்கு உரம் சேர்த்த ஆயிரம் ஆயிரம் மான மாவீரர்களை எம் மண்ணின் மார்பைப் பிளந்து விதைக்கும் ஒவ்வொரு கணத்திலும் தமிழீழ மண், அப் பிள்ளைகளுக்காக விழிநீர் கசியத் தவறியதில்லை. இவ்வாறான காலம் ஒன்றில் தான் நாம் சிறுவர்களாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சுகத்தையும், சிங்களத்தின் இனவழிப்பு நடவடிக்கையின் துன்பியல் சம்பவங்களையும் தாங்கிக் கொண்டிருந்தோம். 1995 ம் வருடம் யாழ்ப்பாணத்தை முற்று முழுதாக கைப்பற்றி விடும் நோக்கோடு படையெடுத்து வந்த சிங்களதேசத்தின் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை எம்மை வன்னிப் பெருநிலப்பரப்பின் மல்லாவிக்கு இட்டுச் சென்ற போது, சொந்த நிலமிழந்து, உறவுகளை நாம் பிரிந்து புது தேசத்தில் எம் வாழ்வை நிலைநிறுத்தி நிமிர்ந்த போது மல்லாவியே எம் எல்லாமாகிப் போனது. 20…
-
- 0 replies
- 274 views
-
-
இந்த இயந்திரத்தால் நகைச்சுவையுடன் போராளிகளின் மனதை நிறைத்து பொறுப்பாளரின் ( ஆசான் ) கண்டிப்பையும் பெற்ற போராளி சிறு குறிப்பு. இவ் இயந்திரம் சண்டைப்படகுகளிலும் , விநியோகப்படகுகளிலும் ( உள்ளிணைப்பு இயந்திரமாக ) பயன்படுத்தப்பட்டது. கடற்புலிகளில் பல பிரிவுகள் அதில் ” சதீஸ் இயந்திரவியல் ” ( டோறா ரிம் – டிசல் இயந்திரம் ) என சில ஆண் – பெண் போராளிகளுக்கு இயந்திர பயிற்சிகள் அளிக்கப்பட்டன. எம் பிரிவிற்கு லெப் கேணல் கடாபி அண்ணா பொறுப்பாளராக இருந்தார், நாளடைவில் கடலில் காவியமான ” தமிழ்முரசு ” அண்ணா தனியாக டிசல் பிரிவிற்கு பொறுப்பாளராக நியமிக்க்கப்பட்டார். சொல்லமுடியா சில பணிகள் தாயகத்தில் விரிந்தன சதீஸ் இயந்திரவியல் பட்டறையில்… கடாபி அண்ணா மேற்பார்வையாளரும் இ…
-
- 0 replies
- 246 views
-
-
அமரர் சிவசாமி அவர்கள் எங்கள் போராட்ட வரலாற்றில் என்றும் நினைவு கூரப்படவேண்டியவர். பலாலியில் வந்திறங்கிய இந்திய இராணுவம் இராட்சத டாங்கிகள் சகிதம் பலாலியில் இருந்து யாழ் குடாநாட்டிற்குள் நுழைய முற்பட்ட வேளை அவர்களின் முயற்சியுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் நோக்கில் மக்களால் பாரிய வழிமறிப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. இந்தப்போராட்டத்தில் முன்னின்றவர்களில் அமரர் சிவசாமி அவர்கள் முதன்மையானவர்.💪 இந்த நடவடிக்கைக்கு எங்கள்ஊரைச் சேர்ந்த மற்றுமொரு இன உணர்வாளரும் முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார். இந்தப்போராட்டம் நடந்த இடம் சரியாக நினைவில்லை. நான் நினைக்கிறேன் வயாவிளான் அச்சுவேலி வீதியில் அன்பகம்/அமலிவனம் அருட்சகோதரிகளின் இல்லத்திற்கு முன்பாகவே இந்த போராட…
-
- 0 replies
- 476 views
-
-
"யாழ்ப்பாணத்தை முற்று முழுதாகக் கைப்பற்றிவிட்டோம். யாழ் நகரில் இருந்த வடக்கு மாகணத்தின் மிகப் பெரிய வைத்தியசாலை தமிழர் நிழல் அரசு இழந்துவிட்டது." "எதிர் காலத்தில் தமிழர் சேனையில் பலர் இறந்துவிடுவர். களங்களில் காயமடையும் அவர்களுக்கு உரிய வைத்தியசாலைப் பராமரிப்பு கிடையாது" By வயவையூர் அறத்தலைவன் - 06/02/2019 1934 யாழ்ப்பாணத்தை முற்று முழுதாகக்கைப்பற்றிவிட்டோம். யாழ் நகரில் இருந்த வடக்கு மாகாணத்தின் மிகப் பெரிய வைத்தியசாலை தமிழர் நிழல் அரசு (De facto Government) இழந்துவிட்டது. எதிர் காலத்தில் தமிழர் சேனையில் பலர் இறந்துவிடுவர். களங்களில் காயமடையும் அவர்களுக்கு உரிய வைத்தியசால…
-
- 0 replies
- 355 views
-
-
AN ANOTHER SAMARITAN OF OUR SOIL! “பிழை ஒன்றும் செய்யாத அப்பாவி மக்கள்” கொன்று குவிக்கப்பட்ட கொடிய நாட்களில் உயிர்காக்கும் உன்னதமான பணியாம் மருத்துவப்பணி வார்த்தைகளால் வடிக்கமுடியாத துயர்களையும், சவால்களையும் சுமந்திருந்தது. சர்வதேச ஒழுங்கையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மிக மோசமான மருத்துத்தடை, பொருளாதாரத்தடைகள் மூலம் தமிழர்களை பணிய வைக்க சிங்கள அரசு மூர்க்கத்துடன் செயற்பட்டது. விண்ணும் மண்ணும் அதிரும் வெடிச்சத்தங்களும், இரசாயனக் குண்டுகளின் மூக்கை அரிக்கும் மணமும் , பசியால் துடித்தழும் பாலகர்களின் அழுகுரல்களும் எங்களின் தேசிய ஆன்மாவை உலுக்கிச் சோர்வடையச் செய்து கொண்டிருந்த பொழுதுகளிலெல்லாம்… அஞ்சாத நெஞ்சுரத்துடன் துஞ்சாத துயில் கொள்ளா…
-
- 1 reply
- 335 views
-
-
(01)விவேகம், (02)வேகம், (03)சுறுசுறுப்பு, (04)நகைச்சுவை உணர்வு ஆகிய நற்பண்புகள் நிரம்பவே பெற்ற எங்கள் நண்பன் யாழ்வேள் உதவி மருத்துவர் கற்கை நெறிக்காக (Assistsnt Medical Practitioner) முதன் முதலில் தமிழீழ மருத்துவக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டான். யாழ் இடப்பெயர்வு நடைபெற்று தமிழீழ விடுதலைப் போராட்டம் நெருக்கடிகளை அதிகம் எதிர்கொண்ட அல்லது தமிழ்மக்கள் மருத்துவ சுகாதார வசதியீனங்களால் அல்லலுற்ற நேரத்தில் தன்னையும் ஓர் விடுதலைப்புலி உறுப்பினராக இணைத்துக்கொண்டு முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பயிற்சிப் பாசறையில் அரசியல், ஆயுதப் பயிற்சி பெற்று ஓர் உன்னதமான புலிவீரனாக வெளியேறினான்! அதன் பின்னரான காலப்பகுதியில் இவனது திறமைகளைக் கண்ட அன்றிருந்த மூத்த மருத்துவர்கள…
-
- 1 reply
- 300 views
-
-
தமிழீழ மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவமானி சத்திர சிகிச்சைமானி கற்கை நெறியினை நிறைவு செய்தவர். யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசான் துரைராஜா அவர்கள் பணியாற்றிய காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பணிப்புக்கு இணங்க யாழ் மருத்துவபீடத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களினால் தமிழீழ மருத்துவக் கல்லூரி நீர்வேலியில் ஆரம்பிக்கப்பட்டது. சத்திரசிகிச்சைமானி மருத்துவமானி (Bachelor of Medicine & Bachelor of Surgery) மற்றும் உதவி மருத்துவர்களிற்கான (Assistant Medical Practitioner)கற்கை நெறிகள் என இரண்டு கற்கை நெறிகள் இங்கே பலரும் அறியாத வகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதில் கிருபா அவர்கள் சத்திரசிகிச்சைமானி மருத்துவமானி(MBBS) கற்கையைத் தொடர்ந்தார். …
-
- 0 replies
- 192 views
-
-
“நான் வயதானவன்,என்னால இந்தச் சமூகத்துக்கு இனி பலன் ஏதும் இல்லை.” என்னை விட்டிட்டு சின்னப் பிள்ளைகளைக் காப்பாத்துங்கோ” 26/01/2009 அன்று காயமடைந்து உடையார்கட்டு இடப்பெயர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது திருமிகு வே.பாலகுமார் அவர்களின் திருவாய் உதிர்த்த வசனங்கள் இவை! கையிலும் பழுவிலும் அவருக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. கையில் என்பு முறிவினால் ( compound fracture of forearm bone) ஏற்பட்ட கடுமையான வேதனையையும் தாண்டி தெளிவாக கதைத்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதர். அவர் அப்படிச் சொல்லிவிட்டார் என்பதற்காக விட்டுவிடமுடியுமா? குன்றாத விடுதலை வேட்கை கொண்ட பெருமதிப்புக்குரியவரை Dr.குயின்ரஷ் ஜீவன் இமானுவேல், Dr.வாமன் தருமரட்ணம் ஆகியோர…
-
- 0 replies
- 279 views
-
-
1987 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டிருந்த காலத்தில்இ இவன் யாழ்ப்பாணம் வந்திருந்தான். அதுதான் யாழ்ப்பாணத்திற்கான இறுதிப் பயணம் என்று உணர்ந்திருந்தானோ என்னவோ? உறவினர்கள்இ நண்பர்கள் என்று ஒருவரது வீட்டினையும் தவறவிடவில்லை இவன். அப்போது, பொதுவாக எல்லாத் தாய்மாருக்கும் இருக்கும் எதிர் பார்ப்பே இருந்தது, இவனது அன்னைக்கும். எனக்கு கொள்ளி வைக்கிற கடமை இருக்கடா உனக்கு' என்றார். இவன் அமைதியாகச் சிரித்தான். 'ஏன் வேறை ஆரும் கொள்ளி வைச்சா இந்தக் கட்டை எரியாதோ'? பயணமாகிவிட்டான் மட்டக்களப்புக்கு. ஏனெனில் இந்தியப் படையுடன் போர்தொடங்கிவிட்டது. இனி யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்க முடியாது. மட்டக்களப்பு இவனை எதிர்பார்க்கிறது. அங்கு இவன் சென்ற நாளிலிருந்து, வீரச்சாவெய்திய நாளிற்கு …
-
- 0 replies
- 253 views
-
-
இதுக்குள்ளை இருக்குது கேளுங்கோ! வீரச்சாவு : 1999 https://eelam.tv/watch/border-force-first-woman-maaveerar-ம-தல-வத-எல-ல-ப-பட-ம-வ-ரர-ரத-அவர-கள-ன-வரல-ற_BronIRZ7v31JVGZ.html
-
-
- 4 replies
- 765 views
-
-
-
- 0 replies
- 721 views
-
-
இந்தியா இராணுவகாலத்தின் போது வரலாற்று சமரான நெடுங்கேணி பாடசாலை தாக்குதலை நேரடியாக வழிநடத்தி பெரும் வெற்றியை பெற்று முல்லை மண்ணிக்கும் தேசத்திற்கும் பெருமை சேர்த்து அனைத்து போராளிகளிடமும் அன்பாக பழகி பல போராளிகளை சண்டைகாறராக வளர்த்த பெரு வீரன். பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் மேற்பார்வையில் பல சமர்களை வென்றவர். மணலாற்றில் தலைவர் தங்கியிருந்த போது விசேடமாக அழைக்கப்பட்டு முன்னணி முகாமான கையிலமலை முகாமின் பெறுப்பாளாராக தலைவரால் நியமிக்கப்பட்டார். எல்விற்ரனை தாண்டிதான் இந்திய இராணுவம் உள்ளே வரமுடியும் என தலைவர் சொன்னாராம். பின் இலங்கை அரசுடன் 1990களில் சண்டை தொடங்கிய போது பலாலி வசாவிளான் முன்னரங்க பகுதியில் முன்னேற முற்பட்ட இராணுவத்தை முன்னேற விடாது தடுத்தார். …
-
- 2 replies
- 856 views
-
-
டேவிட் ஐயா பற்றிய சில நினைவுகள்..... டேவிட் ஐயா கிளிநொச்சியில் காலமானார் என்ற செய்தியைக்கேட்டபோது அவரது பெருமைமிகு வாழ்வையெண்ணி மனது அசை போட்டது. தன் சொந்த நாட்டில் அவர் ,மறைந்தது ஒருவித நிறைவினைத்தந்தது. ஒரு காலத்தில் சர்வதேசரீதியாகப்புகழ்பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கியவர் டேவிட் ஐயா என அன்பாக அழைக்கப்பட்ட எஸ்.ஏ.டேவிட் (சொலமன் அருளானந்தம் டேவிட் ) அவர்கள். அவர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சமயம் அவர் தங்கியிருந்த கொழும்பு Y.M.C.A கட்டடம் அவரால் வடிவமைக்கப்பட்ட கட்டடங்களிலொன்று என்பதால், அதன் காரணமாக அந்த நிறுவனத்தால் அவர் இருக்கும் வரையி…
-
-
- 1 reply
- 369 views
-
-
தூரத்தே கேட்ட சத்தம் வரவர அதிகரித்துக் கொண்டிருந்தது, அமைதியான அன்றைய சூழலை இடை விடாத அந்த இரைச்சல் ஓசை பயங்கரமானதாக மாற்றியது. அவர்களுக்கு அது வழமையானதுதான். எனினும், அன்று ஏதோ ஓர் அசாதாரணமான சூழல் இருப்பதாக அவர்களுக்குப்பட்டது. எதிரி விளக்குவைத்தகுளம்வரை முன்னேறிவிட்டான். அது வன்னியின் ஒரு காட்டுக்கிராமம். வவுனியா விலிருந்து வடக்காகக் கண்டிப் பிரதான வீதியிலிருந்தது. முன்னேறும் இராணுவத்தைப் புளியங்குளம் வரை கட்டம் கட்டமாகத் தடுத்துத் தாமதப்படுத்துவதே திட்டம். முன்னேறும் இராணுவத்தைத் தாக்கித் தடுத்துத் தேவையானபோது நகரவிட்டு, மீண்டும் தாக்கி, புளியங்குளத்தில் அமைக்கப்பட்ட ‘கொலைப் பொறி’ வரை கவர்வதற்காகத் தாக்குதல்கள் தொடர்ந்தன. 06.06.1997, விளக்குவைத்தகுளம் முன்னர…
-
- 0 replies
- 602 views
-
-
சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எமது கப்பல்களில் ஒன்றை 10.03.1999 அன்று காலை இந்தியக் கடற்படை பின் தொடர்ந்தது. இதனை கப்பலிருந்தவர்கள் அவதானித்து இத்தகவலை தமிழீழத்திற்க்கும் சர்வதேசத்தில் இருந்த சர்வதேசப் பொறுப்பாளருக்கும் தெரியப்படுத்தினர். அவர்களும் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தனர். இந்திய கடற்படையோ சரணடையும்படி தொலைத்தொடர்புக்கருவியூடாக அச்சுறித்துக் கொண்டேயிருந்தது மட்டுமில்லாமல் இடைக்கிடையே துப்பாக்கிச்சூடும் கப்பலுக்கு அண்மையாக நடாத்திக்கொணடிருந்தனர். சரணடைவது விடுதலைப் புலிகளின் மரபல்ல அதுமட்டுமன்றி இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் போராளிகள் தரையிலும் கடலிலும் எதிரிசரணடையச் சொன்னபோது எப்படிச் செய…
-
- 0 replies
- 188 views
-
-
"சங்ககால மாவீரர்கள், நடுகல் & அன்னி மிஞிலி" ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிடம் ஒருவன் தோற்பதும் புதியது அன்று; அது இவ்வுலகத்து இயற்கை என்கின்றது புறநானூறு. இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது என்னும் உண்மையை, "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை" என புறநானுறு 70 கூறும். மேலும் சங்ககால வீரர்கள் என்றும் போர் வேட்கை உடையவர்களாய் இருந்தனர் என, "போரெனிற் புகலும் புனைகழல் மறவர்" என்று புறநானுறு 31 உணர்த்துகின்றது. போரிடுதலே புதல்வன் கடமை என்பதை, வாளைக் கையிலேந்திச் சென்று தடுத்தற்கரிய போரைச் ச…
-
-
- 1 reply
- 489 views
-
-
"வேர்கள் வெளியில் தெரிவதில்லை - சில வேங்கைகள் முகவரி அறிவதில்லை!" சிறுகக்கட்டிப் பெருகவாழும் வீடுகளில் விருந்தோம்பி வரவிருந்து காத்திருக்கும் பண்பாடுமாறாத மனித உள்ளங்கள். தமிழீழ சுதந்திரப்போருக்காயப் பிள்ளைகளை அனுப்பி வைத்த வெற்றிக்காய்க் காத்திருக்கும் வீரமிகுதாய்க்குலம். இவையெல்லாம் தமிழனின் இருப்பு இன்னும் அழிந்துவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டும். மண்ணை நம்பி வாழ்ந்திருக்கும் இந்தமக்கள் தங்கள் மண்ணை சிங்கள ஆக்கிரமிப்பில் பறிகொடுத்துவிட விருப்பில்லை மண்ணை மாத்திரமல்லாது தங்கள் வாழ்வின் அடித்தளமாய் விளங்கும் பண்பாட்டையும் இழந்துவிடத்தயாரில்லை. ஆனால் இவ்விரண்டையும் அழித்து ஆக்கிரமித்துவிட சிங்கள பேரினவாதம் கங்கணம் கட்டிநின்றது. வகைதொகையின்றி கொடூரமாக இவர்களை…
-
- 1 reply
- 341 views
-