மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
கப்டன் மாயவன் செபஸ்ரியான்பிள்ளை சிவகுமார். பிறப்பு: 13.09.1975 வீரச்சாவு . 18.05.1995 சம்பவம். பலாலியிலிருந்து தொண்டமனாறு நோக்கி முன்னேறிய இலங்கைப் இராணுவத்துடனான நேரடிச் சமரின் போது.வீரச்சாவு . 1991ம் ஆண்டு பிற்பகுதியில் அமைப்பில் இணைந்த மாயவன் அடிப்படை இராணுவப் பயிற்சியை முடித்து யாழ்மாவட்டத் தாக்குதலனியில் இணைக்கப்படுகிறான்.அங்கு களப் பயிற்சிகளையும் களஅனுபவங்களையும் பெற்று தனது திறமைகளை வளர்த்துக்கொள்கிறான்.யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற அநேகமான சமர்களில் தனது திறமையைக்காட்டினான். சக போராளிகளிடத்தில் அன்பாக பழகுவதுடன் தனக்குத் தெரிந்தவைகளை சக போராளிகளுக்கு அவர்களுக்கு விளங்கும் வகையில் சொல்லிக்கொடுத்து அவர்களையும் முன்னேற்றியவன் . முகாமில் நடந்த கலைநிகழ…
-
- 0 replies
- 119 views
-
-
கிட்டண்ணை எண்ண ஓட்டங்களுக்கு ஈடு கொடுப்பது கடினம் இயக்கத்தின் எந்த ஒரு பணியானாலும் புதிய புதிய எண்ணங்களை வெளிப்படுத்துவார்.ஒவ்வொரு துறையும் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி நீண்டவிரிவுரை நிகழ்த்தும் அளவிற்கு ஒவ்வொன்றையும் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து வைத்திருந்தார். வெறுமனே சிந்தித்துவிட்டு, சொல்லிவிட்டு, எழுதிவிட்டு,அதனை மறந்துவிடும் அல்லது கைவிடும் சாதாரணமனிதர் அல்ல கிட்டண்ணை.அவரது எல்லா சிந்தனைகளும் செயல்வடிம் பெறவேண்டும் என்பதில் விடாபிடியானவர்.கிட்டண்ணையின் நிர்வாகத்திறன் வித்தியாசமானது தன்கீழ் பணியாற்றும் எல்லோரையும் தன் வசப்படுத்தும் தான்நினைத்ததைச் செய்ய வைக்கும் திறன் அவரதுதனித்துவமான வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தது. ஒவ்வொரு வேலைகளையும் தானே திட்டமிட்டு…
-
- 0 replies
- 626 views
-
-
1991ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த ஒஸ்காா் மணியந்தோட்டத்தில் லெப் கேணல் சாரா அவர்களின் தலைமையில் பயிற்சிபெற்றுக்கொண்டிருந்த வேளையில் (இவர் மன்னாா் மாவட்டத் தளபதியான லெப் கேணல் விக்ரர் அண்ணையின் தமையனது மகனென அறிந்த சரா அண்ணை விக்ரர் அண்ணையின் சங்கேதப் பெயரானா ஒஸ்காரை இவனுக்கு வைத்தார்.அத்தோடு விக்ரர் அண்ணையைப் பற்றி சில அறிவுரைகளையும் வழங்கினாா்.) 'ஆகாயக் கடல் வெளிச்' சமருக்கான பின்களப்பணிகளுக்கான சென்றாா். ஆகாய கடல் வெளி சமருக்குப் பின் கடற்புறாவாக இருந்த அணி கடற்புலிகளாக உருவாக்கப்பட்டபோது அங்கு சென்று ஐப்பான் 01 இல் பயிற்சிபெற்று கடற்புலியானான். 29.08.1993 ம் ஆண்டு பருத்தித்தித்துறைக் கடற்பரப்பில் கரும்புலித்தாக்குதலில் அழிக்கப்பட்ட டோறா பீரங்கிப் படகில் கைப்பற்றப்பட்ட …
-
- 0 replies
- 777 views
-
-
நிமிர்ந்த பனை சிலந்திவலைப்பின்னலாகிப் படர்ந்திருந்த இந்தியர்களின் கையில், தமிழீழம் சிக்கிப் போயிருந்தது ஒரு காலம். மறக்க முடியாத அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் நின்று பிடித்து புலிகளின் சுவடுகளைப் பேணிக்காத்து நிலைநிறுத்தி வைத்திருந்த வீரர்கள், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிலபேர்தான். அந்தச் சில பேருக்குள் நேற்றுவரையும் எஞ்சியிருந்தவன் தான் சூட். அவனை விளங்கிக்கொள்ள அந்த நேரத்து ‘இராணுவச்சூழ்நிலை’ யைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள வலிகாமத்தின் தரையமைப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழீழத்தில் வேறெங்கும் இல்லாதவிதமாக முற்றுமுழுதான நகரச்சூழலை பெரிய அளவில் கொண்ட புவியியல் அமைப்பையும், குறைந்தளவு நிலத்தில் கூடியளவ…
-
- 0 replies
- 717 views
-
-
1990 ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த கந்தையா பலாலிக்கான வேவு நடவடிக்கையில் முதன்மையானவராக செயற்பட்டவர் . அதாவது வடமராட்சியிலிருந்து பலாலி விமானப்படைத்தளத்திற்க்குச் சென்று அங்கு விமானங்கள் பற்றியும் இராணுவம் மற்றும் விமானப்படையின் நடவடிக்கைகள் பற்றிய வேவுத்தகவல்களை துல்லியமாகச் சொன்னவர்.அந்நடவடிக்கைகளில் ஒரு தடவை காவலரனை எட்டிப்பார்க்கும் பொழுது காவலரனில் உள்ள இராணுவத்தினன் சத்தம் கேட்டு ரோச் லயிற் அடிக்க இவன் அந்த லயிற்றை பறித்ததும் எதிரி ரவையால் பொழிந்து தள்ளினான்.இப்படியாக பல சம்பவங்கள் உண்டு. 1992.11.24 அன்றைய தினம் எம்மால் மேற்கொள்ளப்பட்ட தொண்டமானறு முதல் ஒட்டகப்புலம் வரையான சுமார் 150 காவலரன் மீதான தாக்குதலிற்கான வேவு நடவடிக்கையின் பிரதான பங்காளனான இவன் 11.11.…
-
- 0 replies
- 702 views
-
-
விந்தன் அண்ணாவுடனான அறிமுகம் கிடைத்தது எனது ஒன்றுவிட்ட அண்ணன்கள் மூலம்தான். அது 1983களின் பிற்பகுதி. ஆடிக்கலவரம் ஓரளவு ஓய்ந்திருந்தாலும் தமிழ் இளைஞர்களிடம் அது விட்டுச்சென்ற தாக்கம் அதிகம். இளைஞர்கள் எல்லோரும் ஏதேனுமொரு அமைப்புடன் தொடர்புகொண்டு தீவிரமாக இயங்கியகாலமது. அவ்வாறே விந்தன் அண்ணாவும் புலிகள் அமைப்புடன் இணைந்து தீவிரமாக இயங்கத்தொடங்கியிருந்தார். அண்ணன்களைப்போலவே அவரும் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் படித்துக்கொண்டு பகுதிநேரமாக வல்லையிலும் வெவ்வேறு இடங்களிலும் இரவில் சென்றிக்கு செல்வார். அக்காலத்தில் சென்றிக்கு செல்வோர் கொழித்தி எறியும் கிரனைட்டையே வைத்திருப்பார்கள். குமுழமுனையில் வாழ்ந்துவந்த மாமாவின் வீட்டிற்கு மட்டக்களப்பு சிறையுடைத்து வெளியேறிய புள…
-
- 0 replies
- 348 views
-
-
"யாழ்ப்பாணத்தை முற்று முழுதாகக் கைப்பற்றிவிட்டோம். யாழ் நகரில் இருந்த வடக்கு மாகணத்தின் மிகப் பெரிய வைத்தியசாலை தமிழர் நிழல் அரசு இழந்துவிட்டது." "எதிர் காலத்தில் தமிழர் சேனையில் பலர் இறந்துவிடுவர். களங்களில் காயமடையும் அவர்களுக்கு உரிய வைத்தியசாலைப் பராமரிப்பு கிடையாது" By வயவையூர் அறத்தலைவன் - 06/02/2019 1934 யாழ்ப்பாணத்தை முற்று முழுதாகக்கைப்பற்றிவிட்டோம். யாழ் நகரில் இருந்த வடக்கு மாகாணத்தின் மிகப் பெரிய வைத்தியசாலை தமிழர் நிழல் அரசு (De facto Government) இழந்துவிட்டது. எதிர் காலத்தில் தமிழர் சேனையில் பலர் இறந்துவிடுவர். களங்களில் காயமடையும் அவர்களுக்கு உரிய வைத்தியசால…
-
- 0 replies
- 315 views
-
-
24.08.2006 கருணா குழுவின் துரோகத்தினால் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரமறவர்கள் நினைவில். கடற்புலி லெப். கேணல் குகன், கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன் வீரவணக்க நாள் இன்றாகும். 24.08.2006 அன்று விடுதலைக்கு வளம் சேர்க்கும் விநியோக நடவடிக்கையின் போது மட்டக்களப்பு மாவட்டம் மாங்கேணிப் பகுதியில் தேசவிரோதிகளால் (கருணா குழுவால்) கைதுசெய்யப்பட்டு மேற்கொண்ட தாக்குதலில் துரோகத்தின் வஞ்சனையால் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன், கடற்புலி தலைசிறந்த இயந்திரப் பொறியியலாளர் லெப். கேணல் குகன் / குன்றலினியன் ஆகிய மாவீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். விடுதலையின் கனவுகளுடன் கல்லறையி…
-
- 0 replies
- 349 views
-
-
பிரமந்தனாறு படுகொலை ஈழ மண்ணில் இடம்பெற்ற படுகொலைகளில் பிரமந்தனாறு படுகொலை வேறுவிதமானது. இப்படுகொலையை பிரித்தானிய அல்லது இஸ்ரேல்காரர்கள் நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் சந்தேகம் கொள்கின்றனர். பொதுவாக வெள்ளைக்காரர்கள் நம் மீது நடத்திய படுகொலை என்றாலும், உலகமே சேர்ந்து தான் நம்மை அழித்திருக்கிறது என்பதற்கு எஞ்சியிருக்கும் ஒரேயொரு சாட்சிதான் இந்த அய்யா
-
- 0 replies
- 798 views
-
-
தமிழர் இதயங்களில் உறைந்திருக்கும் தமிழ்ச்செல்வன் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் இன்றும் தமிழ் மக்களின் மனங்களில் வீற்றிருக்கின்ற நித்தியப் புன்னகை அழகன். தமிழ்மக்களின் விடுதலைக் கனவைச் சுமந்து விடுதலைப் போரில் பயணித்த ஆயுத - அரசியல் போராளியான இவர் ஏழுவருட காலங்கள் வரையில் ஆயுதப் போராளியாகவும், இருபத்தியொரு வருட காலம் அரசியல் போராளியாகவும் உலகத் தமிழ்மக்கள் மத்தியில் வலம் வந்தவர். விடுதலைப் போராட்டத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தனக்கிட்ட பொறுப்பைத் தமிழினத்தின் கட்டளையாக ஏற்று புயலாகச் செயற்பட்டதோர் இராஜதந்திரப் போராளியான தினேஷ் என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்ச்செல்வன் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அதிகாலைவேளைப் பொழுதில் விமானப் படையினரின் குண்டு வீச்சுத் தாக…
-
- 0 replies
- 1.8k views
-
-
அமரர் சிவசாமி அவர்கள் எங்கள் போராட்ட வரலாற்றில் என்றும் நினைவு கூரப்படவேண்டியவர். பலாலியில் வந்திறங்கிய இந்திய இராணுவம் இராட்சத டாங்கிகள் சகிதம் பலாலியில் இருந்து யாழ் குடாநாட்டிற்குள் நுழைய முற்பட்ட வேளை அவர்களின் முயற்சியுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் நோக்கில் மக்களால் பாரிய வழிமறிப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. இந்தப்போராட்டத்தில் முன்னின்றவர்களில் அமரர் சிவசாமி அவர்கள் முதன்மையானவர்.💪 இந்த நடவடிக்கைக்கு எங்கள்ஊரைச் சேர்ந்த மற்றுமொரு இன உணர்வாளரும் முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார். இந்தப்போராட்டம் நடந்த இடம் சரியாக நினைவில்லை. நான் நினைக்கிறேன் வயாவிளான் அச்சுவேலி வீதியில் அன்பகம்/அமலிவனம் அருட்சகோதரிகளின் இல்லத்திற்கு முன்பாகவே இந்த போராட…
-
- 0 replies
- 465 views
-
-
கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி அவர்களின் 18ம் ஆண்டு நினைவு கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி சின்னப்பு நந்தினி செம்பியன்பற்று தெற்கு, யாழ்ப்பாணம் லெப்.கேணல் அமுதசுரபி தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில், அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள் எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று. "இந்த வாறன். இந்தா வாறன்" உயர் அலை வரிசைத்தாளத்தில் எங்களுக்கு நம்பிக்கையூட்டி, "விடாமல் அடியுங்கோ" என்று கட்டடையிட்டு எங்களின் படகுகளுக்கு தனது படகைக் கொண்டு வந்து காப்பிட்டு, பகைக் க…
-
- 0 replies
- 1.3k views
-
-
எதிரிக்குப் பேரிடி கொடுத்த லெப்.கேணல் நிர்மா .... லெப்.கேணல் நிர்மா ஞானாந்தன் மேரிசாந்தினி கனகபுரம், கிளிநொச்சி வீரப்பிறப்பு: 23.09.1973 வீரச்சாவு: 28.04.2001 கிளிநொச்சி பளை பகுதியில் படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு “இந்தக் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கின்றதோ அன்றுதான் எமக்கு விடிவு பிறக்கும்” லெப். கேணல் திலீபனின் உரையைச் சுமந்த காற்று கோட்டையிலே கம்பீரமாக பறந்து கொண்டிருந்த புலிக்கொடியைத் தழுவி வீசியது. மகிழ்ச்சி, பெருமிதம், இன்னும் இனம் புரியாத உணர்வுகள் எல்லாம் கலந்த ஒரு உணர்வில் தமிழர்கள் ஊறிப்போயினர். ‘ஜீவன்’ கானகப் பாசறை வெற்றியைக் கொண்டாடியது. லெப்.கேணல் மாதவி (பின்நாட்களில் கடற்புலிகள் மகளிர் படையண…
-
- 0 replies
- 412 views
-
-
இந்த இயந்திரத்தால் நகைச்சுவையுடன் போராளிகளின் மனதை நிறைத்து பொறுப்பாளரின் ( ஆசான் ) கண்டிப்பையும் பெற்ற போராளி சிறு குறிப்பு. இவ் இயந்திரம் சண்டைப்படகுகளிலும் , விநியோகப்படகுகளிலும் ( உள்ளிணைப்பு இயந்திரமாக ) பயன்படுத்தப்பட்டது. கடற்புலிகளில் பல பிரிவுகள் அதில் ” சதீஸ் இயந்திரவியல் ” ( டோறா ரிம் – டிசல் இயந்திரம் ) என சில ஆண் – பெண் போராளிகளுக்கு இயந்திர பயிற்சிகள் அளிக்கப்பட்டன. எம் பிரிவிற்கு லெப் கேணல் கடாபி அண்ணா பொறுப்பாளராக இருந்தார், நாளடைவில் கடலில் காவியமான ” தமிழ்முரசு ” அண்ணா தனியாக டிசல் பிரிவிற்கு பொறுப்பாளராக நியமிக்க்கப்பட்டார். சொல்லமுடியா சில பணிகள் தாயகத்தில் விரிந்தன சதீஸ் இயந்திரவியல் பட்டறையில்… கடாபி அண்ணா மேற்பார்வையாளரும் இ…
-
- 0 replies
- 232 views
-
-
விடுதலைக்கு உரம் சேர்த்த ஆயிரம் ஆயிரம் மான மாவீரர்களை எம் மண்ணின் மார்பைப் பிளந்து விதைக்கும் ஒவ்வொரு கணத்திலும் தமிழீழ மண், அப் பிள்ளைகளுக்காக விழிநீர் கசியத் தவறியதில்லை. இவ்வாறான காலம் ஒன்றில் தான் நாம் சிறுவர்களாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சுகத்தையும், சிங்களத்தின் இனவழிப்பு நடவடிக்கையின் துன்பியல் சம்பவங்களையும் தாங்கிக் கொண்டிருந்தோம். 1995 ம் வருடம் யாழ்ப்பாணத்தை முற்று முழுதாக கைப்பற்றி விடும் நோக்கோடு படையெடுத்து வந்த சிங்களதேசத்தின் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை எம்மை வன்னிப் பெருநிலப்பரப்பின் மல்லாவிக்கு இட்டுச் சென்ற போது, சொந்த நிலமிழந்து, உறவுகளை நாம் பிரிந்து புது தேசத்தில் எம் வாழ்வை நிலைநிறுத்தி நிமிர்ந்த போது மல்லாவியே எம் எல்லாமாகிப் போனது. 20…
-
- 0 replies
- 256 views
-
-
http://tamieelam.blogspot.com/2016/07/16.html சிறிலாங்க வான்படையால் மட்டு கரடியனாறு அரசியல்துறை செயலகம்(தேனகம்) மீது கடந்த யூலை 29, 2006 நடத்தப்பட்ட கிபீர் வான் தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் தமிழ்ச்செல்வன், மேஜர் கவி, மேஜர் அரிகரன், கப்டன் அனலி/செஞ்சுடர், கப்டன் ஊரவன், 2ம் லெப்.மதிசுதன், 2ம் லெப்.சுஜீவன், கிராமியப்படை வீரர் லோகிதன் ஆகிய எட்டுப் போராளிகளின் திருவுருவப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
-
- 0 replies
- 428 views
- 1 follower
-
-
மகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி 23 Views மேஜர் சோதியாவுடன் இறுதி நேரத்தில் பயணித்த முன்னாள் போராளி ஒருவர் அவரின் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். 11.01.2021 அன்று மேஜர் சோதியா அவர்களின் 31ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது. 1985ஆம் ஆண்டு ஓகஸ்ட் 18ஆம் நாளில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது மகளிர் பயிற்சி முகாமில் பயிற்சியினை முடித்து, சோதியா என்ற பெயருடன் வெளியேறுகிறார் மைக்கேல் வசந்தி. அந்தக் காலகட்டங்களில் போராட்டத்தில் இணைந்த பெண்கள், ‘சுதந்திரப் பறவைகள்’ என்னும் பெயரில் பல வேலைத் திட்டங்களை மேற்கொண்டிருந்தனர். தமிழீழத்தில் அதற்குப் பொறுப்பாக தியாகதீபம…
-
- 0 replies
- 474 views
-
-
"🕯️ நவம்பர் 27 தீபத் திருநாள்" “🕯️ நாம் ஏன் தீபம் ஏற்றுகிறோம்?“ ஒவ்வொரு நவம்பர் 27 ஆம் தேதியும் தமிழ் உலகம் நினைவுகூருகிறது போரை அல்ல, அரசியலை அல்ல — மக்களை, உயிர்களை, கனவுகளை! சம உரிமைகளுக்கான ..... கண்ணியத்திற்கான ..... தாயகத்திற்கான ..... குழந்தைகள் பயமின்றி வாழ்வதற்கான .... நவம்பர் 27 அழைப்பிற்கு செவிகொடுத்தது வெறுப்பின் தீயால் அல்ல நம்பிக்கையின் ஒளியால் — நாம் விளக்கை ஏற்றுகிறோம் — உலகம் தங்கள் ஒளியைத் தாங்கிக்கொள்ள மறுத்துவிட்டதால்! நீதி அவர்களைப் பேச மறுத்துவிட்டதால் - திரும்பி வராத மக்களின் பெயர்களைக் கிசுகிசுக்கிறோம்! நாம் துக்கப்படுகிறோம் — ஏனென்றால் நாம் மனிதர்கள் மேலும் அவர்களும் மனிதர்கள்! நாளையத் தலைமுறைக்கென்று கண்ணீரிலே விதைத்த மறக்க முடியாத கன…
-
- 0 replies
- 59 views
-
-
வாட்சப்பில் வந்த பதிவு. படலை இணையதளத்தில் எழுதபட்டிருக்கிறது. அதன் நடத்துனர் ஜேகேயின் ஆக்கம் என நினைக்கிறேன். பிகு: நிர்வாகத்துக்கு எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் அதியுட்ச ஈகத்தை செய்தவர்களை பற்றிய ஆக்கம் என்பதால் இங்கே பதிகிறேன். வேறு பகுதி பொருத்தம் என்றால் அங்கு மாற்றி விடுங்கள். ———— மன்னிப்பாயா ------------ காலையில் ரயில் ஏறியதும் கேட்க ஆரம்பித்த பாடல் இது. இன்னமும் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல். "இங்குவந்து பிறந்தபின்னே இருந்த இடம் தெரியும் நாளை சென்றுவீழும் தேதி சொல்ல இங்கெவரால் முடியும்? வாழ்க்கை என்னும் பயணம். இதை மாற்றிடவா முடியும்?" தொண்ணூறுகளில் இந்தப் பாடலை முணுமுணுக்காமல் எவரும் வல்வை வெளியையோ, ஆசைப்பிள…
-
- 0 replies
- 508 views
-
-
சிறு கதை - 190 / கார்த்திகை தீபம் – 27 நவம்பர் 2025 இன்று கார்த்திகை தீபம். ஆனால் இந்த நாள், தீபத்தின் ஒளி மட்டுமல்ல — மண்ணுக்குள் உறங்கும் நினைவுகளின் நெஞ்சைத் திறந்து வைக்கும் நாள் இது. இரவு வானம் கருந்துகிலும் அணிந்து, சோகமும் நம்பிக்கையும் கலந்த நட்சத்திரங்களால் நிரம்பிக் கிடந்தது. மெல்ல வீசும் காற்றில், எரியும் விளக்குகளின் புகையோடு கலந்த தூப வாசனை — அது எந்த ஆலயத்திலிருந்தும் அல்ல … அது ஒரு வரலாற்றின் உயிர்வாசனை. ஆதித்தன், கைப்பிடி அளவு எண்ணெய் விளக்கை தன் உள்ளங்கையில் தாங்கியவாறு, மெதுவாக அந்த நினைவுத் திடலுக்குள் நுழைந்தான். புல்லின் மேல் இன்னும் பனித்துளிகள். சின்னச் சின்ன மண் மேடுகளில் சிவப்பு – மஞ்சள் ரிப்பன் கட்டப்பட்ட குச்சிகள். ஒவ்வொரு தீபமும் ஒரு உயிர்.…
-
- 0 replies
- 99 views
-
-
Tuesday, June 02, 2020 புலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன் அவர்கள் சுகவீனம் காரணமாக கடந்த சனிக்கிழமை (30-05-2020) அன்று சாவடைந்தார். திரு.நடராஜா சுரேந்திரன் அவர்கள் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண வட்டவைக்கு உட்பட்ட பகுதிகளில் ''புலிகளின் குரல்'' என்று அழைக்கப்பட்டு பின்னர் ''உறுமல்'' என்று பெயர்மாற்றம் பெற்று யாழ்பாணத்தில் முக்கிய சந்திகளில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட கரும்பலைகைகளில், அன்றைய யுத்தகாலச் செய்திகளை எழுதும் பொறுப்பை ஏற்றுக் கடமையாற்றியவர். இ…
-
- 0 replies
- 230 views
-
-
ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன். யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. தமிழரின் இறைமை முற்றுமுழுதாகப் பறிபோனது பண்டாரவன்னியனின் வீழ்ச்சியோடுதான். முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் ‘பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்’ எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமா…
-
- 0 replies
- 868 views
-
-
-
கனகமக்கா போராட்டத்தில் இந்த தாய் யார்... கனகமக்கா என்றால் அந்த ஊரில் யாருக்கும் தெரியும். அவ்வூரின் எல்லா நன்மை தீமைகளிலும் பங்கேற்கும் ஒரு தாயாகவே அவள் மாறிவிட்டாள். தன்னுடைய கணவனுக்கு சிங்கள இராணுவம் இழைத்த கொடுமைச் சாவை அவளின் மனம் மறக்க முடியாதிருந்தது. அன்றைய நிலையிலிருந்து தன்னை ஒரு போராளியாகவே மாற்றி விட்டாள் கனகமக்கா. காலம் உருண்டோடியது. இந்திய இராணுவம் தமிழீழம் எங்கும் ஊடுருவியது. கனகமக்கா தன் மகனுக்காகவே தான் இன்னும் உயிரோடிருப்பதாகக் கூறுவாள். அவனோ தன்னை இயக்கத்துடன் இணைத்துக் கொண்டான். என்னதான் இருந்தாலும் கனகமக்கா தானும் ஒரு சாதாரண தாயாக இருந்துவிட விரும்பவில்லை. அவன் தன்னை இயக்கத்துடன் இணைத்துக்கொன்டத்தை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டாள். காடுக…
-
- 0 replies
- 433 views
-
-
இருவரும் பெண்கள். இருவரும் இலங்கையர்.ஒருவர் தமிழ் இனத்தைச் சேர்ந்த இசைப்பிரியாஇன்னொருவர் சிங்கள இனத்தைச் சேர்ந்த மன்னம்பெரி இருவரும் பயங்கரவாதிகள் என கூறப்பட்டு கொல்லப்பட்டனர். இருவரும் அரச படைகளால் பாலியல் வல்லறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். ஒருவர் 1971ல் வீட்டில் இருந்தபோது இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார். இன்னொருவர் 2009ல் சரணடைந்த பின்பு அரச படையால் கொல்லப்பட்டார். நிராயுதபாணியாக இருந்தவர்களை அதுவும் பெண்களை கொல்வது தவறு இல்லையா என்று கேட்டபோது ஆம். அவர்கள் பயங்கரவாதிகள் எனவே அவர்களை கொல்வது நியாயமே என்றார்கள். சரி. அதற்காக பாலியல் வல்லுறவு செய்து கொல்வது எப்படி நியாயமாகும் என்று கேட்டால் அது சில கட்டுப்பாடற்ற படையினரின் செயல். அதை விசாரித…
-
- 0 replies
- 873 views
-