மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
957 topics in this forum
-
மரண தண்டனைக்கு எதிரான இறுதி உயிராக இருக்கட்டும் -தோழர் செங்கொடி.! வீரமங்கை தோழர் செங்கொடியின் நினைவு வணக்கநாள் இன்றாகும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்ற வேளை அம்மூவரின் உயிர் காக்க (மரண தண்டனைக்கு எதிராக) 28.08.2011 அன்று தமிழகத்தில் காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட “வீரத்தமிழிச்சி” தோழர் செங்கொடி ஆகிய வீரமங்கையின் 10ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும். தூக்குத் தண்டனையை இரத்துசெய்யக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன் (28.08.2011) ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்துத் தன் உயிரை ஆகுதியாக்கிய காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த …
-
- 0 replies
- 376 views
-
-
தடைகள் பல தகர்த்த லெப் கேணல் ராஜசிங்கனின் நீரில் கரைந்த நிமிடங்கள் பிரதான கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை 10.2000 விடுதலைப் போர்களத்திற் புலிகள் இயக்கம் தீக்குளித்த நாட்களுள் அன்றைய நாளும் ஒன்று. ஆனையிறவை முற்றுகையிட்டிருந்த புலிகளின் இத்தாவிற் போர்க்களம் அது. அமைதியாகவே விடிந்திருந்த அந்தப் போர்க்களத்தைச் சிறிது நேரத்திலேயே பெரும் எரிமலைபோல் வெடிக்கச் செய்தான் எதிரி. புலிகளை மட்டுமல்ல, தமிழனின் வீரம்பேசி எழுந்துநின்ற அந்…
-
- 0 replies
- 592 views
-
-
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் இறுதிக்களம் முள்ளிவாய்க்கால் சமர்க்களத்திலும் எமது தேசியத்தலைவருடனே களத்தில் நின்றவர் தலைவருக்கு எப்போதும் உண்மையாகவும் விசுவாசமாகவும் செயல்படவேண்டும் என்பதையே இலக்கணமாக கொண்டு வாழ்ந்தவர். அவர்தான் கேணல் சுயாகி 23வருடங்கள் இவரின் பணி வெளியில் அறியப்படாத, ஏன் போராளிகளுக்குக் கூட பெரியளவில் அறிமுகமில்லாதவன். ஆனால் எமது ஆயுதபோராட்டத்தை தாங்கி நிற்கும் ஆணிவேர் போன்றவர். எமது தலைவரால் பாராட்டப்பட்டவர் தமிழீழவிடுதலைப்புலிகளின் படைக்கல பாதுகாப்பு அணியின் பொறுப்பாளர் இவரே, ஆரம்ப காலத்தில் மணலாற்றுக் காடுகளில் எமது தேசியத்தலைவருடன் இருந்த காலந்தொட்டு இறுதி முள்ளிவாய்க்கால் வரை தலைவரோடு நின்று ஒரே பணியை செய்தவன். அண்ணனின் நம்பிக்கைக்குரி…
-
- 0 replies
- 715 views
-
-
24.08.2006 கருணா குழுவின் துரோகத்தினால் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரமறவர்கள் நினைவில். கடற்புலி லெப். கேணல் குகன், கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன் வீரவணக்க நாள் இன்றாகும். 24.08.2006 அன்று விடுதலைக்கு வளம் சேர்க்கும் விநியோக நடவடிக்கையின் போது மட்டக்களப்பு மாவட்டம் மாங்கேணிப் பகுதியில் தேசவிரோதிகளால் (கருணா குழுவால்) கைதுசெய்யப்பட்டு மேற்கொண்ட தாக்குதலில் துரோகத்தின் வஞ்சனையால் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன், கடற்புலி தலைசிறந்த இயந்திரப் பொறியியலாளர் லெப். கேணல் குகன் / குன்றலினியன் ஆகிய மாவீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். விடுதலையின் கனவுகளுடன் கல்லறையி…
-
- 0 replies
- 364 views
-
-
தமிழீழ போரியல் வரலாற்றில் அதிகளவான கடற் சமர்களின் கதாநாயகனாக விளங்கிய லெப் கேணல். தியாகன் லெப் கேணல்.தியாகன் சந்திரசேகரம்பிள்ளை தசகுமாரன். வீரச்சாவு. 13.08.2007 சம்பவம்.திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான நேரடிச் சமரின் போது. 1991ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்புக்கள் இராணுவத் தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தியாகன்.கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமான மாவீரரான மேஜர் யப்பான் நினைவாக அவரது பெயரில் உருவான யப்பான் 02ல் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து . மேலதிக பயிற்சிக்காக கடற்புலிகளின் படைத்துறைப் …
-
- 0 replies
- 368 views
-
-
தமிழீழ தேசத்தையும், தேசியத்தலைவரையும் நேசித்த "நம்பர் வண்" கரும்புலி லெப். கேணல் பூட்டோ.! இந்தியப் படைகளும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து உணர்வாளர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பகுதியில் யூலியனின் தந்தை இந்தியப் படைகளால் கைது செய்யப்பட்டார். பள்ளிக்குள் புகுந்த படையினர் யூலியனைக் காட்டித்தரும் படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பள்ளிக்குச் செல்லாத யூலியன் தப்பித்துக்கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக் கடையொன்றில் தற்காலிகமாகப் பணிக்கு அமர்த்தப்படுகின்றான். முதல் நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் நாற்காலி அமர்…
-
- 0 replies
- 522 views
-
-
பல வெற்றிகளுக்கு வேவுத்தகவல்களை மிகத் துல்லியமாக பெற்றுத்தந்தவர் மேஐர் அசோக். வேவுப்புலி மேஐர் சேரன் / அசோக் குணசிங்கம் குணராஐ் வீரச்சாவு 02.8.1994 1990 ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த அசோக் பயிற்சியின் பின் வலிகாமப் பகுதியில் நின்று பல்வேறு களம் கண்ட ஒரு வீரனாவான் கந்தையாவைப் போலவே இவனும் பலாலிக்கான ஒரு வேவுக்காரன்.ஆனால் இவனோ வலிகாமப் பகுதியிலிருந்து தனது வேவு நடவடிக்கையை ஆரம்பித்தான்.ஒவ்வொருமுறை வேவு நடவடிக்கையின் போதும் இவனது தூரம் அதிகரித்துக் கொண்டபோனது. அதிலும் ஒரு ஆனந்தம் ஏனெனில் தான் ஓடித்திரிந்து விளையாடிய தான் படித்த பாடசாலை இவைகளை சக போராளிகளுடன் பகிர்ந்து கொண்டதுடன் .குறைந்தளவு போராளிகளுடன் எதிரிக்கு பெரும் சேதத்தை ஏற்ப…
-
- 0 replies
- 965 views
-
-
எத்தடை வரினும் எம்படை நகரும் கப்டன் அன்பரசி படையணி எத்தடை வரினும் எம்படை நகரும் அன்பரசி படையணியின் வீரம்கண்டு எதிரி அதிர்ந்தான். 29.07.1995ம் ஆண்டு அம்பாறை மாவட்டம் 4 ஆம் முச்சந்தி சிறிலங்கா படை முகாம் தாக்குதலின்போது கப்டன் அன்பரசி வீரச்சாவடைந்தாள். அன்பரசி ஒரு சுறுசுறுப்பான விவேகமான போராளி. இவளது ஞாபகமாகவே மட்டு – அம்பாறை மகளிர் படையணிக்கு அன்பரசி படையணி என்று பெயர் சூட்டப்பட்டது. லெப். கேணல் மதனாவினது சுறுசுறுப்பையும், துணிவையும், புத்துணர்வையும், களங்களில் படைநடத்தும் திறமையையும் கண்ணுற்ற மட்டு அம்பாறை மாவட்ட சிறப்புத்தளபதி அவர்கள் படையணியின் முதல் சிறப்புத் தளபதியாக லெப். கேணல் மதனாவை அன்பரசி படையணியின் சிறப்புத்தளபதியாக நியமித்தார்.…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 348 views
-
-
இம்ரான் பாண்டியன் படையணியின் ஒரு பிரிவினைச் சேர்ந்த போராளி & மாவீரர் மதுரன் அவர்கள்
-
- 0 replies
- 283 views
-
-
கடற்கரும்புலி கப்டன் வினோத் கடற்கரும்புலி கப்டன் வினோத் வேலுப்பிள்ளை திலகராசா காட்டுவளவு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:19.08.1970 வீரச்சாவு:10.07.1990 நிகழ்வு:யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித்தாக்குதலின்போது வீரச்சாவு அடுத்தநாள் தான் தம்பி தெரிஞ்சது. அதில நான் பெத்த குஞ்சுவும் ஒண்டெண்டு அண்டைக்கு ஊரெல்லாம் ஒரே பரபரப்பாய் இருந்தது. அண்ணைமார் கடற்கரைக்கு வாறதும் போறதுமாய் இருந்தினம். “இன்றைக்குப் பெடியள் கரும்புலியாய்ப் போய் நேவிக் கப்பலை அடிக்கப்போறாங்களாம்.” என்று, ஜனங்கள் பரவலாய்க் கதைக்கினம். “அப்படியெண்டா நாளைக்குக் காலமை நேவி அடிப்…
-
- 1 reply
- 474 views
-
-
மறைந்தும் மறையாத வரலாற்றுக் காவியம்- ஈழத்துக் கொற்றவை ஈழத்துக் கொற்றவைகள் தெய்வங்களாகப் போற்றப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு துயிலுமில்லங்களில் நினைவுக் கற்களோ கல்லறைகளோ இருக்காது. இவர்கள் வீரச்சாவடைந்தால் நினைவுநாட்களில் பெயர்களோ அடையாளங்களோ தகவல்களோ வெளிப்படுத்தப்பட மாட்டாது. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் எந்தக் காலத்திலும் வெளிவராது. ஊரறியாமல் உறங்கும் உண்மைகள் இவர்கள். ஊமையாய் இருந்து ஒரு பெரும் சரித்திரத்தைப் படைத்துவிட்டுச் செல்வார்கள். கல்லாகிக் கிடக்கும் கடவுளர்களை மறந்துவிட்டு கல்லறை கூட இல்லாத எம்மின கொற்றவை தெய்வங்களை வணங்குவதே என்றும் போற்றுதற்குரியது. அவ்வாறாகப் போற்றப்பட வேண…
-
- 0 replies
- 749 views
-
-
உரிமைப் போரில் உணர்வுடன் கால்பதித்த, பொறியியல் பீட மாணவன் கப்டன் முத்துசாமி, மருத்துவ பீட மாணவன் லெப். சுதர்சன் உரிமைப் போரில் உணர்வுடன் கால்பதித்த, பொறியியல் பீட மாணவன் கப்டன் முத்துசாமி, மருத்துவ பீட மாணவன் லெப். சுதர்சன் தமிழ்த்தேசியஇனத்தின் இழந்த தாயக மீட்பிற்கான போராட்டத்தின் கண்ணுக்கெட்டிய கால இடைவெளியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உட்பட்ட எமது மக்களை இழந்திருக்கின்றோம். ஒவ்வொருவருடைய இழப்பும் எமக்குப் பேரிழப்பாகயிருந்தபோதும் விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியில், எமது இளைய தலைமுறையினர் வாழ்வும் வளமும் எதிர்காலத்தில் எமது இனத்தின் தனித்துவத்தோடு அமைந்ததாக இருக்குமென்ற எண்ணம் எமது மக்களையும் ,இளையோர்களையும் போராட்டத்தின்பால் முழு வீச்சாகப் பயணிக்க…
-
- 1 reply
- 873 views
-
-
“ரணகோச” நடவடிக்கை சமரின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவில்.... 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் ஐயன், லெப்.கேணல் தணிகைச்செல்வி உட்பட ஏனைய 75 மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். லெப்.கேணல் ஐயன் (சூரியகாந்தி உதயசூரியன் – யாழ்ப்பாணம்) லெப்.கேணல் தணிகைச்செல்வி (சுப்பிரமணியம் சத்தியதேவி – யாழ்ப்பாணம்) மேஜர் தேன்மொழி (டிலானி) (தில்லைநாயகம் யூடிஸ்ராதிலகம் – யாழ்ப்பாணம்) மேஜர் யாழிசை (பரராஜசிங்கம் மங்கையற்கரசி – யாழ்ப்பாணம்) மேஜர் கலைமகள் (இராமலிங்கம் பிருந்தா – யாழ்ப…
-
- 0 replies
- 448 views
-
-
எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் முகுந்தா.! 19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முகுந்தா அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.இம்மாவீரருக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம். எங்கள் விடுதலைக்கான பயணத்தில் அவளது இழப்பு எவராலும் ஈடுசெய்ய முடியாத ஒன்று. ஒரு தனி மனிதப்பிறவி. போராளி என்பதை மீறி, தன்னை அர்ப்பணித்து அவள் ஆற்றிய பணி அதிகம். எத்தனையோ போராளிகள் கூட்டிணைந்து நடத்தும் தாக்கு தல்களின் வெற்றிக்கு மூலவேர்களைத் தாங்கி நின்றவள் முகுந்தா. சாதாரண சம்பவங்களை அல்லாமல் தான் வாழ்ந்த கடைசி நிமிடம்வரை மறக்க முடியாத எத்தனையோ மெய்சிலிர்க்க வைக்கும…
-
- 0 replies
- 367 views
-
-
தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ, தலைசாய்ந்து தாய்மண்ணில் வீழ்ந்த மேஜர் டேவிட். ஒரு போராளியின் புனிதப்பயணம். தமிழர் வரலாற்றை நிலைநிறுத்தும் வரலாற்றுப்போரில், வரலாறாகிப்போன மேஜர் டேவிட், உண்மையில் ஓர் புரட்சி வீரன். தென்தமிழீழ எல்லையில், சிங்களத்தின் நிலப்பறிப்பில் 1963ம் ஆண்டு காலப்பகுதியில் உருவான அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் என்ற பழந்தமிழ் ஊரில் இன்ஸ்பெக்டர் ஏற்றம் என அடையாளப் படுத்தப்பட்ட இடத்தில் வாழ்ந்த தமிழ்க்குடும்பத்திலிருந்து எழுந்த விடுதலைப் போராளிபற்றிய நினைவுப்பதிவில் தொடக்கத்தின் முதல் அத்தியாயமாக நாம் கண்ட போராளிகளில் ஒருவராக டேவிட் அவர்களின் போராளி வாழ்க்கை அமைந்திருந்தது. அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாது எல்லைத் தமிழ் ஊர்களி…
-
- 0 replies
- 679 views
-
-
இது 'தமிழ்த் தந்தி' நாளிதழில் ஊடகவியலாளர் மின்னல் ரங்கா அவர்களால் மே 2018 அன்று எழுதப்பட்ட கட்டுரையாகும். மூலம்: Tamilnet ----------------------------------- தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். தலைவரின் போரியல் சிந்தனைக்கு அமைவாக, பல புதிய இராணுவத் தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, பல போரியல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை மேன்மைப்படுத்தியவ…
-
- 0 replies
- 2.2k views
- 1 follower
-
-
சர்வதேசக் கடற்பரப்பில் எம்.ரி சொய்சின் எண்ணைக் கப்பலில் காவியமான வீரமறவர்கள்! 14.06.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எம்.ரி சொய்சின் (M.T. CHOSHIN) எண்ணைக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்து தாக்கி மூழ்கடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிய கப்பல் கப்டன் நிர்மலன், சீவ் ஒவிசர் கதிர், 2ம் ஒவிசர் வீரமணி, 3ம் ஒவிசர் கன்னியநாடன், றேடியோ ஓவிசர் கஜேந்திரன், சீவ் எஞ்சினியர் அன்புக்குமரன், 2ம் எஞ்சினியர் கடற்கரும்புலி வள்ளுவன், 3ம் எஞ்சினியர் கடற்கரும்புலி நிமால், எலக்ரிக் எஞ்சினியர் வீரநாதன், போஸன் கடற்கரும்புலி மணியரசன், ஏபிள் சீமன் செழியன், நாட்டுப்பற்றாளர் மோகன் ஆகிய ஆழக் கடலோடிகளின் 18 ம் ஆண்டு வீரவணக்க நாள் .! எம்.ரி சொய்சின் கப்ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
நாகர்கோவில் பதுங்கித் தாக்குதலும்! – லெப்.கேணல் றெஜித்தனும்! லெப்.கேணல் றெஜித்தன் 2008 ஜூன் மாதம் 11ஆம் திகதி வன்னிச் சமரில் வீரச்சாவடைந்தார். எல்லோரும் பரபரப்பாக தொலைத்தொடர்புக் கருவிக்கு அருகில் காத்திருந்தோம். ‘எல்லாம்சரி, படுங்கோ’ என்றொரு செய்தி றெஜித்தன் அண்ணனிடம் இருந்து வரவேண்டும். நேரம் நள்ளிரவையும் தாண்டி நீண்டுகொண்டிருந்தது. எதிர்பார்த்த நேரத்துள் அந்தச் செய்தி வரவில்லையாதலால் ஏதாவது சிக்கலாகியிருக்க வேண்டுமென்று உள்மனம் சொல்லிக்கொண்டாலும், அப்படியேதும் இருக்கக்கூடாது என்று விரும்பினோம். சிலவேளை றெஜித்தன் அண்ணா எங்களை மறந்திருக்கலாமென்று ஒருவன் சொன்னான். ஆனால் அவர் அப்படிப்பட்டவரில்லை. செய்திக்காக நாம் காத்திருப்போமென்பது அவருக்கு நன்றாகத் தெ…
-
- 2 replies
- 987 views
-
-
தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்து விட்ட தென்றல். லெப். கேணல் டேவிட் கடலில் கலந்த கவிதை…… தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்து விட்ட தென்றல். விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன் காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில் ஒருவன். தமிழீழத்தின் விடுதலைப் போராட்டம், எல்லாக் காலங்களிலும், கடல் பிரயாணங்களை முதன்மைப்படுத்துவதாகவே அமைந்தது. எத்திசையும் கடலால் சூழப்பட்ட எம் தாயகத்தின், தாக்கமுள்ள நகர்வுகள் கடல் மூலமே மேற்கொள்ளப்பட்டன. எமது விடுதலைப் போராட்டத்தில், கடல் பயணங்கள் பிடித்திருந்த இடத்தின், அதே அளவு இடத்தை, எமது கடல் சரித்திரத்தில் டேவிட் பிடித்திருந்தான். அவனது இளமையிலேயே கடல் அவனை அழ…
-
-
- 3 replies
- 923 views
-
-
தமிழீழ விடுதலைப் போரில்... முதல் முதலாக, சயனைடு உட்கொண்டு.. சாவினை தழுவிய, வீரத் தமிழ்மகன் சிவகுமாருக்கு வீரவணக்கம்....🙏🙏
-
- 3 replies
- 570 views
-
-
இம்ரான் பாண்டியன் படையணியில் பயிற்சி ஆசிரியராகவும் உந்துருளி படையணியிலும் பின்பு தகரி(tank) இயக்குனராகவும் செயற்பட்ட மேஐர் மருதவாணன் அண்ணா
-
- 0 replies
- 419 views
-
-
ராதா வான்காப்புப் படையணியின் கட்டளையாளர்களில் ஒருவரும் அண்ணியின் மெய்க்காப்பாளர்களில் ஒருவருமான லெப்.கேணல் அர்ச்சுணன். இவருக்கு இரட்டைக் குழந்தைகள் உண்டு. --> FB
-
- 1 reply
- 798 views
-
-
26-06-2008 அன்று வவுனிகுளம் பகுதியில் எதிரியின் சுற்றிவளைப்பை தகர்க்க மேற்கொண்ட கடுஞ்சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல். வாணன் , மேஜர் ஜெயசீலன், மேஜர் தணிகைமாறன், கப்டன் உயிரவன் , கப்டன் கார்வண்ணன், கப்டன் அரசகீதன் , கப்டன் சீராளன் , கப்டன் பாமகன் , லெப். சின்னவன், லெப். மணிமாறன், லெப். அருண்மொழி, 2ம் லெப். இளங்கதிர் வீரவேங்கை வெள்ளைத்தேவன், வீரவேங்கை கலைச்செழியன், வீரவேங்கை அடலூரான், வீரவேங்கை கலைவடிவேல் , வீரவேங்கை ஆற்றலழகன் முதலான அனைத்து மாவீரர்களையும் நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்துகின்றோம் . --> திருவுருவப்படங்கள் video: https://eelam.…
-
- 2 replies
- 585 views
-
-
மண்ணின் மைந்தர்களான மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களை நான் போற்றுகின்றேன். உங்கள் குழந்தைகள் தமது தாய்நாட்டின் சுதந்திரத்தை நேசித்தவர்கள். இந்த உன்னதமானவர்களை ஒரு புனித இலட்சியத்திற்காக உவந்தளித்த பெற்றோராகிய நீங்கள் நிச்சயம் பெருமைகொள்ளவேண்டும். உங்கள் குழந்தைகள் சாகவில்லை சரித்திரமாகிவிட்டார்கள். என்ற தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உள்ளத்துச் சிந்தனைக்கு அமைவாக மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வின் நீட்சியாக யாழ்கள உறவுகளும் மாவீரர்களைப் பெற்றெடுத்த அந்தப் பெற்றவர்களை அறிந்து தெரிந்திருந்தால், அவர்கள் இருக்கும் போதே போற்றி மதிப்பளிப்பது போற்றுதற்குரியது. மொறிசம்மா என்று செல்லமாக அழைக்கப்படும் தியாகராசா…
-
- 0 replies
- 444 views
-