Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வால்ட் டிஸ்னி (walt disney) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ராபர்ட் இகர் (Robert Iger) தற்போது அந்த பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். இந்த நிறுவனத்தின் 7வது தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2005ம் ஆண்டு அவர் பொறுப்பேற்றார். பிக்சர் அனிமேஷன் ஸ்டூடியோவை டிஸ்னியுடன் இணைத்தது, மார்வெல், லூக்காஸ், 21 செஞ்சுரி பாக்ஸ் (MARVEL, LUCAS, 21 CENTURY FOX) ஆகிய தயாரிப்பு நிறுவனங்களை வாங்கியது என டிஸ்னியின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை அவர் செய்துள்ளார். சமீபத்தில் ஓ.டி.டி பிளாட்பார்ம் மூலம் டிஸ்னி ப்ளஸ் (DISNEY PLUS) ஸ்டிரீமிங் தளத்தை அறிமுகப்படுத்திய சில மாதங்களிலே 28 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டு வந்ததில் இவரது பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. h…

    • 0 replies
    • 234 views
  2. உலகின் 4 ஆவது பெரிய பணக்காரரான வாரன் பப்பெட், தற்போதுதான் ஸ்மார்ட் போன் பயன்படுத்தவே தொடங்கியுள்ளார் எனும் ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரரும் பெர்க்சைர் ஹாத்வே நிறுவனத்தின் சி.இ.ஓவுமான வாரன் பப்பெட், ஆப்பிள் நிறுவன பங்குகளிலும் பங்குதாரராக உள்ளார். இருந்தபோதும், சாம்சங் நிறுவனத்தின் பழைய பிளிப் மாடல் செல்போனையே அவர் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் ஸ்மார்ட் போன் பயன்பாட்டுக்குத் திரும்பியுள்ள அவர், ஆப்பிள் ஐ போன் 11 மாடலை தற்போது பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். கால் செய்வதற்கு மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வரும் வாரன் பப்பெட், பங்குச் சந்தை நிலவரம் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள தனியாக ஐபேட் ஒன்றை பயன்படுத்தி வருவதாகவும…

  3. தேயிலை ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டில் கூடுதலான வருமானம் ஈட்டப்பட்டதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் சஞ்சய ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி மூலமாக வருமானம் 240.6 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. இது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.9 சதவீத அதிகரிப்பாகும். https://www.virakesari.lk/article/75860

  4. தொழிற் சட்டங்களும் தொழிலாளர்கள் நிலையும் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 பெப்ரவரி 24 இறுதியாக உள்ள தரவுகளின் பிரகாரம், 2013ஆம் ஆண்டில் மொத்த ஊழியப்படையின் வேதனத்தில், 56 சதவீதமான 2.6 மில்லியன் வேதனமானது, நிரந்தரத் தொழிலைக் கொண்டிராதத் தொழிலாளிகள் மூலமே பெறப்பட்டுள்ளது. இது, இலங்கையில் எத்தகையச் சட்டத் திட்டங்கள் உள்ளபோதிலும் தொழில்தருனரும் தொழிலாளியும், குறுகிய வருமானப் பெறுகைக்கானச் சட்டங்களுக்குப் புறம்பான தொழில் முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்குவதை எடுத்து காட்டுகிறது. இதன்காரணமாக, இறுதியில் மோசமாகப் பாதிக்கப்படுபவர்களாக தொழிலாளிகள் உள்ளபோதிலும் அவர்களது அறியாமையும் வறுமையும், இைதயே தொடரச் செய்வதுதான், இன்றைய சாபக்கேடாக உள்ளது. அதுமட்டுமல்லாது, நிர…

  5. இந்தியாவின் ட்ரோன் விஞ்ஞானியாக அறியப்படும் பிரதாப், இதுவரை 600 ட்ரோன்களை உருவாக்கியுள்ளார். மிகவும் குறைந்த விலையில் ட்ரோன்களைத் தயாரித்து அதை இந்தியப் பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு வழங்க வேண்டும் என்பதை தன் லட்சியமாகக் கொண்டு உழைத்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறிய அவருக்கு இறுதியில் ஜப்பான் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த நேரத்தில் மீண்டும் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். பணம்தான் பிரதாப் தன் வாழ்வில் சந்தித்த பெரும் சவாலாக இருந்துள்ளது. இந்த முறையும் ஜப்பான் செல்வதற்கு ஆகும் பயணச் செலவுகளை யார் செய்வது? எப்படிச் சமாளிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து, பிரதாப்பின் தாய் தன்னிடம் இருந்த அனைத்து தங்க நகைகளையும் விற…

    • 0 replies
    • 313 views
  6. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தூய தங்கத்தின் விலை 80 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் தங்கத்தின் விலையை பொருத்து இலங்கையில் தங்கத்தின் விலை மாற்றத்துக்கு உள்ளாகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் முழுவதும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துள்ள நிலையில், பெப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை கனிசமான அளவு அதிகரிப்பதும் அடுத்த நாள் சிறியளவில் விழ்ச்சியை காட்டுவதுமாக நீடித்தது வந்துள்ளது. இந்நிலையில் இன்று(22.02.2020) தங்கத்தின் விலை ஆயிரத்து 100 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதனையடுத்து நேற்றைய தினம்(21.02.2020) 72 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆபரணத் தங்கம் (22 கரட்) இன்று பவுன…

    • 0 replies
    • 218 views
  7. நல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம் கடனாகக் கொண்டிருந்தது. எனினும் கடந்த நான்கரை வருடங்களில் 500பில்லியனை அந்த அரசாங்கம் கடனாகப் பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எமது அரசாங்கம் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் என பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கம் மஹாபொல, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, கல்வி, நிதியமைச்சு, மின்சார சபை என அனைத்துத் துறைகளிலும் கொமிசன் பெற்றுக்கொண்டதை காணமுடிகிறது எனவும் குறிப்பிட்டார். நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் விமான கொள்வனவு மோசடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போத…

    • 0 replies
    • 435 views
  8. கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டு விற்கப்படாத போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களின் எரிபொருள் தொட்டியில் கழிவுப்பொருள்கள் காணப்பட்டதாக போயிங் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு நடந்ததாக கூறப்படும் இரண்டு விபத்துக்களில் 346 பேர் கொல்லப்பட்டதை அடுத்து கடந்த மார்ச் முதல் போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இது குறித்த அமெரிக்க விமானப்போக்குவரத்து துறை மற்றும் நாடாளுமன்ற குழு நடத்தும் விசாரணை முடிந்து ஏப்ரல் மாத வாக்கில் மீண்டும் பறப்பதற்கான அனுமதி கிடைக்கும் என போயிங் எதிர்பார்க்கிறது. அதே சமயம் சியாட்டில் (Seattle) நகருக்கு அருகே உள்ள உற்பத்தி ஆலையில் உருவாக்கப்பட்ட போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் தொழில்நுட்பக் குறைபாடு ஏதும் இல்லை என்று விசாரணைக் குழு…

    • 4 replies
    • 711 views
  9. முதலீட்டுக்கு மிகப் பொருத்தமான நாடாக இலங்கையை மாற்றுவதே தனது இலக்காகுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். சுற்றாடலை பாதுகாத்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான பொறிமுறையொன்றுக்கு சட்ட ரீதியான பின்புலத்தை உருவாக்க வேண்டுமெனவும் சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள், ஒழுங்குவிதிகளில் நடைமுறைக்கேற்றவாறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றினைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். சுற்றாடலை பாதுகாப்பதோடு மக்களுக்கு பயனளிக்கக்கூடிய முறைமைகள…

    • 0 replies
    • 289 views
  10. உலகளாகவிய ரீதியில் சந்தைப்படுத்தப்டும்&nbsp; ஐ போனின் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. சீனாவில் தற்போது தீவிரடைந்து காணப்படும் கொரோனா வைரஸின் தாக்கம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்கள்<strong> ( i phone )</strong> உற்பத்தியிலும் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. அத்தோடு ஐ போனின் ( i phone ) உற்பத்திக்கு சீனாவின் பங்களிப்பு அதிகளவில் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில வாரகாலமாக சீனாவில் ஐ போனின் கிளை அலுவலகங்கள் மூடப்பட்டன. ஆனாலும் நாட்கள் கடந்த நிலையில் அனைத்து நிறுவனங்களும் வெகுவாக திறக்கப்பட்டன. இவ்வாறு ஆப்பிள் நிறுவனத்தின் கிளைகள் சீனாவில் திறக்கப்பட்டதால் ஐ போன்களின் …

    • 0 replies
    • 313 views
  11. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி 2020 இல் பாதிக்கப்படலாம் என சர்வதேச நாணயநிதியம் எச்சரித்துள்ளது. வைரஸ் காரணமாக 0.1 முதல் 0.2 வரையான வீழ்ச்சியை எதிர்பார்க்கின்றோம் என சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜ்கிவா தெரிவித்துள்ளார். எவ்வளவு வேகமாக வைரசினை கட்டுப்படுத்துகின்றோம் என்பதை பொறுத்தே தாக்கத்தின் அளவு காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார். முன்கூட்டிய முடிவுகளிற்கு வரவேண்டாம் என நான் அனைவருக்கும் ஆலோசனை வழங்குகின்றேன் என குறிப்பிட்டுள்ள அவர் இன்னமும் பெருமளவு நிச்சயமற்ற நிலை காணப்படுகின்றது,பலவகையான சூழல்களிற்கு மத்தியில் நாங்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனவைரசினால் ஏற…

  12. வணிகங்களின் எழுதப்படாத முடிவுநிலை? அனுதினன் சுதந்திரநாதன் / 2020 பெப்ரவரி 17 இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையும் பொருளாதார நிலையும் வணிகங்களைக் கொண்டு நடத்த மிகப்பெரும் தடையாக அமைந்துள்ளன. அதிகரித்துச் செல்லும் பணவீக்கம், வரிகள், கடனுக்கான வட்டி வீதங்கள், உலகளாவிய ரீதியிலான மாற்றங்களென அனைத்துமே, உள்ளூர் வணிகம் முதல் சர்வதேச அளவில் வணிகத்தை மேற்கொள்ளும் அனைவருக்குமே மிகப்பெரும் சிக்கலாக அமைந்திருக்கிறது. ஒருசாரார், இவை அனைத்தையும் மீறி சமூகத்தில் நிலைத்து நிற்பதே வணிகமென்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு, போட்டித் தன்மைமிக்கதும், சவால்மிக்கதுமான வணிகச்சூழலில் வெற்றி பெறுகின்ற வணிகங்களை விரல்விட்டு எண்ணக்கூடியதாகவே இருக்கின்றது. ஆனால், பெரும…

  13. நிதியியல் அறிவு அவசியமா? அனுதினன் சுதந்திரநாதன் / 2020 பெப்ரவரி 11 உண்மையில், நமது கல்வியறிவு விகிதமானது, நமது நிதியியல் சார்ந்த விடயங்களைச் சார்ந்தோ நிதிசார் தேவைகளை முழுமைபெறச் செய்வதாகவோ அமைந்திருக்க வேண்டியதில்லை. ஆனாலும், அதிகரித்த கல்வியறிவு விகிதமானது, நாளாந்த நமது நிதியியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவோ அல்லது அடிப்படையான நிதியியல்சார் விடயங்களைப் பூர்த்தி செய்துகொள்ள உதவுவதாகவோ அமைந்திருக்க வேண்டியது அவசியமாகும். உதாரணமாக, கல்வியறிவு அதிகம் கொண்ட நம்மில் பலருக்கே, காசோலைகளை எப்படி நிரப்புவது, அதனை எப்படி வங்கியில் வைப்பிலிடுவது, பண வைப்பு மற்றும் பணம் மீளப்பெறல் இயந்திரங்களை எப்படி இயக்குவது, வங்கிக் கூற்றுகளை எவ்வாறு ஆய்வுசெய்வது, நிதிச் செயற்பாடுகளை…

    • 2 replies
    • 391 views
  14. அதிபர் டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு இடையிலும் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் 2019ம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2019ல் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் 165.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 231.7 பில்லியன் யூரோக்கள் அளவுக்கு இறக்குமதியும், அதைவிட அதிகமாக 384.4 யூரோக்கள் அளவுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. 2018ம் ஆண்டைக் காட்டிலும் இது 11 சதவீதம் அதிகமாகும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் தங்களை மிகவும் மோசமாக நடத்தி வருவதாகவும், அந்நாட்டுடனான வர்த்தக பேச்சுவார்த்தை குறித்து இவ்வாரத்தில் மீண்டும் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். …

  15. எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தை அடைந்துள்ளது. தினந்தோறும் 12 மில்லியன் பேரல் உற்பத்தியால் உலகில் பல்வேறு மாறுதல்கள் நிகழ்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்கா இந்த வளர்ச்சியை அடைந்துவிட்டது. தினமும் 9 மில்லியன் பேரல் எண்ணெய் அமெரிக்காவில் இருந்து அதன் நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாட்டு உற்பத்தியின் தேவையே இல்லாத நிலை அமெரிக்காவில் உருவாகியுள்ளது. 200க்கும் மேற்பட்ட சிறிய நடுத்தர எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் கடன்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தை எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பதால் அமெரிக்காவின் வளர்ச்சியில் விரிசல்கள் தோன்ற ஆரம்பித்து விட்டன. https://www.poli…

    • 0 replies
    • 340 views
  16. கொரோனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியாக சீனாவின் பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் தேவை நடப்பு 3 மாதங்களில் வெகுவாக குறையும் என்று சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக கச்சா எண்ணெயின் தேவை குறைந்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் கச்சா எண்ணெயின் தேவை தினசரி 3 லட்சத்து 65 ஆயிரம் பேரல்களாக குறையும் என்று தெரிவித்துள்ள சர்வதேச எரிசக்தி முகமை, கடந்த மாதம் கணிக்கப்பட்டதில் இருந்து இது 30 சதவிகிதம் குறைவு என்றும் கூறியுள்ளது. இதனிடையே கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. Brent கச்சா எண்ணெயின் விலை 1 புள்ளி 3 சதவிகிதம் குறைந்து, பேரலுக்கு 55 …

  17. 2032 இல் பெற்றோல், டீசல் கார்களுக்குத் தடைவிதிக்கப்படும் : கிரான்ற் ஷப்ஸ் பெற்றோல், டீசல் மற்றும் ஹைபிறிற் கார்களின் விற்பனைக்கான தடை இன்னும் 12 ஆண்டுகளில் தொடங்கப்படலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் கிரான்ற் ஷப்ஸ் (Grant Shapps) தெரிவித்துள்ளார். 2035 முதல் 2040 வரையிலான காலப் பகுதிக்குள் கார்பன் உமிழ்வு அற்ற இலக்குகளை எட்டும் முயற்சி குறித்து அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. இது குறித்து பிபிசி வானொலி 5 நிகழ்ச்சியில் அமைச்சர் கிரான்ற் ஷப்ஸ் தெரிவிக்கையில்; 2035 க்குள் அல்லது 2032 இல் கூட நடைமுறைக்கு வரும் என்று கூறினார். நொவெம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டிற்கு முன்னதாக அரசாங்கம் தனது திட்டங்களை வகுத்து வருகிறது. …

  18. 4000 கோடி ரூபாய் முதலீட்டு திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைக்கப்பட்டுள்ள சியட் நிறுவனத்தின் டயர் தொழிற்சாலையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை துவக்கி வைக்கிறார். தமிழக அரசின் தொழில் துறைக்கும் சியட் நிறுவனத்திற்கும் இடையே கடந்த 2018 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மதுரமங்கலம் கிராமத்தில், சியட் நிறுவனம், டயர் மற்றும் டயர் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்துள்ளது. 10 ஆண்டு காலத்திற்குள் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்து 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் தொழிற்சாலையை அமைத்துள்ளது. இந்த தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழ…

    • 0 replies
    • 276 views
  19. அமெரிக்க ராணுவத்திற்கு, JEDI எனப்படும் Joint Enterprise Defense Infrastructure Cloud அமைப்பை ஏற்படுத்துவதில், தங்களைப் புறக்கணித்து விட்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆதரவாக அதிபர் டிரம்ப், செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டை சுமத்தி உள்ள அமேசான் நிறுவனம், அதற்காக அவரையும் பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பெரையும் (Mark Esper) நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளது. 10 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை மைக்ரோசாப்டுக்கு ஒதுக்குவதில் டிரம்ப் தனிப்பட்ட முறையில் அதிகாரம் செலுத்தியதாகவும் அமேசான் தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளது. ஒப்பந்தம் முடிவு செய்யப்படும் நேரத்தில், அமேசானை ஒழித்துக் கட்டுமாறு டிரம்ப் உத்தரவிட்டார் என்பதை கண்டுபிடித்துள…

    • 0 replies
    • 520 views
  20. Johnson & Johnson பேபி பவுடரால் கேன்சர் ஏற்பட்டதாக கூறி அமெரிக்காவில் 4 பேர் தொடர்ந்த நஷ்ட ஈட்டு வழக்கில், அந்த நிறுவனத்திற்கு நியூ ஜெர்சி நீதிமன்றம் 5 ஆயிரத்து 334 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. எனினும் அங்கு மாநிலங்களுக்கு மாநிலம் சட்டவிதிகள் மாறுபடுவதால் இது சுமார் ஆயிரத்து 316 கோடியாக குறையும் என்று கூறப்படுகிறது. Johnson & Johnsonபேபி பவுடரில் கேன்சரை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாசின் அம்சங்கள் இருப்பதாகவும், அது குறித்து வாடிக்கையாளர்களிடம் அந்த நிறுவனம் எந்த அறிவிப்பையும் செய்யவில்லை என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் மீது 16 ஆயிரத்திற்கும் அதிகமான சிவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் கிரிமினல் குற்ற விசாரணையும் ந…

    • 0 replies
    • 256 views
  21. சுமார் 5 லட்சத்து முப்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது, நீண்ட காலமாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போர் நிலவிய நிலையில் அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரிகளை சீனா விதித்து வந்தது. இந்த நிலையில் வர்த்தகப்போர் முடிவுக்கு வந்து கடந்த மாதம் அது தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. அதன் முதல் கட்டமாக கடந்த செப்டம்பரில் முடிவு செய்யப்பட்ட ஆயிரத்து 700 க்கும் அதிகமான அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பை சீனா திரும்பப் பெற்றுள்ளது. வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் இந்த வரிக் குறைப்பு அமல்படுத்தப்படும் எனவும் சீனா தெரிவித்…

    • 0 replies
    • 428 views
  22. 15சதவீத பண மீளளிப்பு சலுகை வெற்றியாளர் கார்கில்ஸ் ஃபூட் சிட்டியில் இந்த ஊக்குவிப்பு இடம்பெற்ற 2018 ஆகஸ்ட் முதல் 2019 டிசம்பர் வரையான காலப்பகுதியில் கார்கில்ஸ் வங்கியால் முன்னெடுக்கப்பட்ட 15சதவீத பண மீளளிப்பு சலுகையை சிறப்பாகப் பயன்படுத்தி, அதிகூடிய சேமிப்பை அனுபவித்த ஐந்து முன்னணி வாடிக்கையாளர்களை கார்கில்ஸ் வங்கி தெரிவு செய்துள்ளது. கார்கில்ஸ் ஃபூட் சிட்டியில் இடம்பெற்ற 15சதவீத பண மீளளிப்பு சலுகையானது வாடிக்கையாளர்கள் தமது கார்கில்ஸ் வங்கி கடனட்டையை உபயோகித்து கார்கில்ஸ் ஃபூட் சிட்டியில் பொருட் கொள்வனவை மேற்கொள்ளும் போது மாதந்தோறும் ரூப…

    • 0 replies
    • 267 views
  23. உலகின் 132 நாடுகளில் வாழ்க்கைச் செலவை ஒப்பிட்டு வாழ்கைச்செலவு அதிகமான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ;CEOWORLD' எனப்படும் உலகின் முன்னணி வணிக இதழ் ஒன்று இதனை தரப்படுத்தியுள்ளது. உணவு, உடை, இருப்பிடம், போக்குவரத்து, இணையச்செலவு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இவ் வாழ்க்கைச்செலவு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இவ் பட்டியலின்படி உலகின் வாழ்க்கைச்செலவு அதிகமான நாடாக சுவிற்சர்லாந்து தெரிவாகியுள்ளது. நோர்வே இரண்டாவது இடத்தையும், ஐஸ்லாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இவற்றின் வாழ்க்கைச் செலவு சுட்டெண் முறையே 122.04, 101.04, 100.48 ஆக கணிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஏழு இடங்களை ஜப்பான், டென்மார்க், பஹாமாஸ், லக்சம்பேர்க், இஸ்ரேல், சிங்…

    • 0 replies
    • 286 views
  24. ஆசியாவின் லாஸ் வேகாஸ் என்று அழைக்கப்படும் சீனாவின் நிர்வாகத்தில் உள்ள மக்காவ், கொரோனா தாக்கத்தால் வெறிச்சோடி காணப்படுகிறது. சூதாட்டங்களுக்கு பெயர் போன மக்காவ் இப்போது கொரோனாவின் ஆட்டத்தால் கதிகலங்கி உள்ளது. பெரும்பாலான கேளிக்கை விடுதிகளும், வீதிகளும் வெறிச்சோடிப் போய் உள்ள நிலையில், அரிதாக அவ்வப்போது மாஸ்க் அணிந்து வரும் சுற்றுலாப்பயணிகள் தெர்மல் கேமராக்களின் சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு 4 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்த மக்காவ் நகரில் கொரோனா தாக்குதலுக்குப் பிறகு அவர்களின் வருகை 87 சதவிகிதம் குறைந்து விட்டது. பாதுகாப்பு ஆடை அணிந்த சுகாதாரப் பணியாளர்களும், சைரன்களுடன் சுற்றும் ஆம்புலன்சுகளும் மட்டுமே இப்போது மக்காவ் நகரின் அடையாளங்களா…

    • 0 replies
    • 587 views
  25. -எஸ்.குகன் பருவ கால மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில், கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால், தொண்டமனாறு, மண்டான், ஆவரங்கால், உப்பாறு ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில், 10 இலட்சத்து 60 ஆயிரம் இறால் குஞ்சுகள், நேற்று (02) விடப்பட்டன. இவ்வாறு விடப்பட்ட இறால் குஞ்சுகள், இன்னும் மூன்று மாதங்களில், சராசரியாக ஓர் இறால் 40 கிராம் எடை வரையில் வளர்ந்து, இந்தப் பிரதேசத்தில் உள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட மக்களுக்கு, ஏறத்தாழ 200 மில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டிக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/10-இலட்சம்-இறால்-குஞ்சுகள்-விடப்பட்டன/71-244918

    • 0 replies
    • 413 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.