வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
பயங்கரவாதமும் இலங்கை பொருளாதாரமும் - அனுதினன் சுதந்திரநாதன் இலங்கை வரலாற்றில், கடந்துவந்தப் பாதையை மீண்டும் நினைவுபடுத்துவதாக அல்லது கடந்துவந்த பாதையிலேயே, மீண்டும் பயணிக்க வைப்பதாக, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் அமைந்துள்ளது. உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்பு, அபிவிருத்தி பாதையை நோக்கி, மெல்ல மெல்ல பயணித்துக் கொண்டிருந்த இலங்கையின் பொருளாதாரம், மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கே வந்திருக்கிறது. உள்நாட்டுப் போரைக் கையாண்ட அரசாங்கம், இப்போது உள்நாட்டின் ஒத்துழைப்புடன், சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான, அறிவிக்கப்படாதப் போரை நிகழ்த்தும் நிலைக்கு வந்துவிட்டது. இவையனைத்துமே, இலங்கைப் பொருளாதாரத்தையும் அபிவிருத்தியையும் …
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கையில் உள்ள மக்கள் முதலீடுகளை எதில் செய்யலாம்? - அனுதினன் சுதந்திரநாதன் இலங்கையின் பொருளாதார தளம்பல்நிலை, வருமானங்கள் மீதான வரி, அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவீனம் என்பவற்றின் வாயிலாக, சேமிப்பென்பது மக்களுக்கு குதிரைக் கொம்பாகியுள்ளது. இந்த நிலையில், சிறுகச் சிறுகச் சேமிக்கும் வருமானத்தையும் முதலீடுகளாக மாற்றுவதில் மக்களுக்கு ஜெயமான நிலையேயுள்ளது. ஆனாலும், சேமிப்புகளை மற்றுமொரு முதலீடாக மாற்றாதவிடத்து, நீங்கள் உங்களது மற்றுமொரு வருமான வழியை இழக்கவே நேரிடும். பெரும்பாலானவர்கள், வங்கிகள் தரும் மாத, நிலையான சேமிப்பு வட்டி வீதங்களுடன் தமது மேலதிக வருமானத்தை நிறுத்திக் கொள்ளுகிறார்கள். இதன் காரணமாக, அவர்களது வருமானமும் ஒருவித எல்லையுடன் நின்றே போகிறது…
-
- 1 reply
- 386 views
-
-
பங்கு சந்தையும் முதலீடும் முதலாவது நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் பெறுமதியை அடைந்தது - 1901 ஆம் ஆண்டில். பெயர் : யு எஸ் ஸ்டீல் நான்கு நிறுவனங்கள் இந்த வருடம் ஒரு த்ரிலியன் டாலர் பெறுமதியை அடையவுள்ளன : அமாசோன் ($AMZN) ; மைக்ரோ சொப்ட் ($MSFT) ; ஆப்பிள் ($AAPL) மற்றும் கூகிள் எனப்படும் அல்பபாட் ($GOOGL) ! இவை அனைத்தும் தொழில்நுட்பம் சார்ந்தவை என்பது கவனிக்கத்தக்கது. ஊபர் : வரும் நாட்களில் 'கிக்' பொருளாதாரம் என்ற சுய தொழில் முறையை வாகனம் மூலம் முன்னெடுத்த ஊபர் பங்கு சந்தைக்கு வர உள்ளது. இதன் பெறுமதி 85 பில்லியன்கள் அமெரிக்க டாலர்கள் என மதிக்கப்படுள்ளது. ஏற்கனவே லிப்ட் ($LYFT) ஒரு பொது நிறுவனமாக சித்திரை மாதம் பங்கு சந்தைக்கு வந்துள்ளது.
-
- 0 replies
- 432 views
-
-
கடந்த சில தினங்களாக இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்துக்கு, ஆயிரம் மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்கள் காரணமாக, நாட்டின் சுற்றுலாத்துறை, மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, நாட்டு மக்களிடம் விசேட உரையொன்றை ஆற்றி, பிரதமர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/தாக்குதல்களால்-ஆயிரம்-மில்லியன்-அமெ-டொலர்-நட்டம்/175-232465 உல்லாசத்துறை ஒரு முக்கிய வருமான துறையாக உள்ளது இதை நம்பி பலரும் முதலீடு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 9000 உல்லாசவிடுதி அறைகள் இலங்கையில் உள்ளன. தொடர்ந்தும் பலரும் தமது உல்லாச பிராயாணங்களை இரத்து செய்து வரு…
-
- 1 reply
- 710 views
-
-
பன்னாட்டு தூதுவர்களுடான சந்திப்பில் a) பிரித்தானிய தூதுவர்: பிரெக்சிட் மூலம் ஜி.எஸ்,பி.+, பாதிக்கப்படாது ; திறந்த வர்த்தகம் தொடரும்; பொதுநலவாய அமைப்பு தொடரும்; பல பிரித்தானிய கல்வி நிறுவனங்கள் உள்நாட்டு அமைப்புக்களுடன் இணைந்து கல்வி வழங்குகின்றன; உல்லாசத்துறையில் வன மற்றும் விலங்குகளை பாதுகாப்பதன் மூலம் அதிகளவில் உல்லாச துறையை ஊக்குவிக்கலாம். b) கனேடிய தூதுவர்: உயர் கல்வி கற்க முன்னணியில் நிற்கும் நாடு ; இலங்கையில் கல்வி கற்ற பல பெண்கள் அதி உயர் தொழில்முறைகளில் உள்ளனர் அதை உள்ளூரில் உள்ள பெண்களுக்கும் கிடைக்க வழி செய்யவேண்டும் c) ஸ்விஸ் தூதுவர்: ஒரு காலத்தில் உள்நாட்டு சண்டையை பார்த்த நாடு இன்று உலகின் பணக்கார நாடாகி உள்ளது d) சீன உறுப்பினர் : கொழு…
-
- 0 replies
- 542 views
-
-
அமெரிக்க வரலாற்றிலே மிகப்பெரிய காப்புறுதி மோசடி – 24 பேரிடம் தீவிர விசாரணை அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் மருத்துவ காப்புறுதித் துறையில் மோசடி நடந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் நூற்றுக்கணக்கான நோயாளிகளை ஏமாற்றி 100 கோடி டொலர் மோசடி செய்த சதி அம்பலத்திற்கு வந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட 24 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க நீதித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “’மருத்துவ பொதுக் காப்பீடு காப்புறுதித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முதியவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு மணிக்கட்டு, முழங்கால் மூட்டு மற்றும் பாதிக…
-
- 0 replies
- 420 views
-
-
மன்னாரில் பனை உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்த முடியாமல் அழிந்து போகும் நிலையில் December 11, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாவட்டத்தில் பனை உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் அழிந்து போகும் நிலையில் உள்ளது என பனை கைத்தொழில் உற்பத்தி ஆசிரியை சொலமோன் சுபாஜினி தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் பழமையான கைத்தெழில்களில் பல அழிந்து வரும் நிலையில் நானாட்டான் பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தில் வசிக்கும் ஆசிரியை சொலமோன் சுபாஜினி என்பவர் பல சிரமங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பனை உற்பத்தி பொருட்களை சிறு கைத்தொழிலாக செய்து கொண்டு வருகின்றார். தமிழரின் பாரம்பரிய தொழில்…
-
- 2 replies
- 1.2k views
-
-
வெளிநாட்டு வேலை பெருமையா? கொடுமையா? இன்றைய காலகட்டத்தில் நம் இளைஞர்கள் சம்பாதிப்பு என்ற பெயரில் வெளிநாட்டிற்குச் சென்று தனக்குத் தானே தீங்கை விளைவித்துக் கொள்கின்றனர். அவ்வாறு அயல் நாட்டிற்குச் சென்று தன் வாழ்க்கையைத் வருடந்தோறும் கரைத்து கொண்டிருக்கும் இளைய சமூகத்தைப் பற்றிய கட்டுரையே இதுவாகும். பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்ததும் உடனே தேடுவது ஒரு நல்ல வேலை...! கல்லூரியை விட்டு வெளியில் வந்ததும் அரசாங்கமோ, பெரிய தனியார் நிறுவனமோ 'இந்தா அப்பாயின்மென்ட் ஆர்டர்' என்று தூக்கி கொடுத்து விடாது. எனவே இளைஞர்கள் கட்டாயமாக வேலைக்கான தகுதியை வளர்த்து கொள்வதுடன், தனக்கு தகுந்த வேலையை தேடுவதும் அவசியம். ஆனால் வெளியிடங்களில் வேலை தேடியே சோர்ந்து போ…
-
- 30 replies
- 5.3k views
-
-
பாகிஸ்தானுடன் போர் பதற்றம்.. இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தது.. பங்குச் சந்தையில் வீழ்ச்சி பாகிஸ்தான் எல்லைக்குள் விமானப்படை நுழைந்து தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இந்திய பங்குச்சந்தைகளில் பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இரு நாடுகளிடையே போர் பதட்டம் உருவாகியுள்ள நிலையில் இயல்பாகவே இவ்வாறு ரூபாய் மதிப்பு சரிவடைந்து வழக்கம்தான். அதுதான் இன்றும் நடந்துள்ளது.அதேபோல பங்குசந்தையில் பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. முதலீட்டாளர்கள் நடுவே ஏற்பட்டுள்ள பதட்டத்தின் காரணமாக இவ்வாறு பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள். இந்திய ரூபாயின் மதிப்பு 0.5% குறைந்துள்ளது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு,…
-
- 0 replies
- 674 views
-
-
500 ரூபாய் முதல் 500 கோடி வரை... உலகின் ஆறாவது பணக்காரர் அனில் அம்பானி சாம்ராஜ்யம் சரிந்த கதைகாலம் ஒரு மனிதனை உச்சத்தில் கொண்டு போய் வைக்கும் அதே காலம்தான் படுபாதாளத்திற்கும் தள்ளி விடும். ஒரு காலத்தில் இந்திய பங்குச் சந்தையை தினசரி நிர்ணயம் செய்யும் சக்தியாக இருந்த அனில் அம்பானி குழுமத்தின் நிறுவன பங்குகள் தற்போது படு பாதாளத்தில் விழுந்துள்ளது பங்குச் சந்தை வல்லுநர்களை வருத்தமடையச் செய்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு உலகின் பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த அனில் அம்பானியின் சாம்ராஜ்யம் சரிவடைய என்ன காரணம் என்று அலசலாம். எரிக்சன் நிறுவனத்திற்கு தரவேண்டிய கடன் தொகையை இன்னும் 4 வாரங்களுக்குள் தராவிட்டால் 3 மாத சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்று உச்ச …
-
- 0 replies
- 397 views
-
-
ஹொண்டா தொழிற்சாலை மூடப்படுவதற்கு பிரெக்ஸிற் காரணமில்லை: தெரேசா மே ஹொண்டா தொழிற்சாலை 2021 ஆம் ஆண்டில் மூடப்படுவது தொடர்பான அறிவிப்பு ஏமாற்றமளிப்பதாகவும் அனால் அதற்கு பிரெக்ஸிற் காரணமில்லையெனவும் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். ஜப்பானிய கார் தயாரிப்பாளரான ஹொண்டா நிறுவனம் ஐரோப்பாவில் அமைந்துள்ள தனது ஒரே கார் தயாரிப்பு தொழிற்சாலையான ஸ்விண்டன் ஆலையை மூடவுள்ளதாக நேற்றையதினம் அறிவித்தது. ஹொண்டா நிறுவனம் தொழிற்சாலையை மூடுவதற்கு பிரெக்ஸிற்றே காரணமென பலரும் கருத்து தெரிவித்திருந்த நிலையில் ஹொண்டா நிறுவனம் இக்கருத்துக்கு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் ஹொண்டா நிறுவனம் மூடப்படுவதற்கு பிரெக்ஸிற் காரணமில்லை எனவும் உலகளாவிய கார் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே க…
-
- 0 replies
- 373 views
-
-
இலகுவாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் இலகுவாக வர்த்தகம் செய்யக் கூடிய நாடுகளின் தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த முறை வெளியான பட்டியலில் இலங்கை 111 ஆவது இடத்தில் இருந்து இம்முறை 11 இடங்களால் முன்னேறி 100 ஆவது இடத்தை அடைந்துள்ளது என அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டீ சில்வா தெரிவித்தார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் . கொழும்பு மாநகர சபை, பதிவாளர் நாயக திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவை ஒன்றிணைந்து வியாபார பதிவு நடைமுறைகளை இலகுவாக்கியுள்ளன. இதன் காரணமாக பதிவு நடைமுறைகளுக்கு எடுக்கும் காலம் க…
-
- 1 reply
- 300 views
-
-
10ஆவது யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நிறைவு Editorial / 2019 ஜனவரி 29 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:05 Comments - 0 வடக்குக்கான நுழைவாயிலாக, யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, தொடர்ச்சியாக 10ஆவது வருடமாகவும் ஜனவரி 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை, யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது. தொழில் வழிகாட்டல் சேவைகள், விசேட உணவு வகைகள், குடிபானங்கள், வீட்டுக்குத் தேவையான அனைத்து உபகரணங்கள், கட்டட நிர்மாண பொருட்கள், சாதனங்கள், அழகுச் சாதன, அழகுக்கலை சேவைகள், சிறுவர்களுக்கான விசேட நிகழ்வுகள், கல்வி ஆலோசனைகள், மருத்துவப் பரிசோதனைகள் என்பன இக்கண்காட்சியில் இடம்பெற்றன. பல்வேறு உற்பத்திகளை கொண்டிருந்த இந்நிகழ்வு, வட பகுதிக்கு தமது வ…
-
- 0 replies
- 949 views
-
-
யாழ்.சர்வதேச வர்த்தக் கண்காட்சி ஆரம்பம் எம். றொசாந்த் / 2019 ஜனவரி 25 வெள்ளிக்கிழமை, பி.ப. 01:42 Comments - 0 வடக்கின் நுழைவாயில் எனும் தொனிப்பொருளில் வருடாந்தம் நடைபெற்று வரும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக் கண்காட்சி இம்முறை 10 ஆவது தடவையாக யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. யாழ்.மாநகர சபை மைதானத்தில் இன்று (25) முதல் நாளை மறுதினம் (27)ஆம் திகதி வரை மூன்று நாட்கள் இக்கண்காட்சி நடைபெறவுள்ளது. இக் கண்காட்சி கூடங்களை இன்று (25) யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் திறந்து வைத்தார். 10 ஆவது வருடமாக நடைபெறும் இக் கண்காட்சியில் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குபற்றி தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தவுள்ளனர். அத்துடன் தொழில் வழிகாட்டல்கள், …
-
- 0 replies
- 403 views
-
-
ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 10% சரிவு AFP சீனாவில் ஆப்பிள் அலைபேசிகளின் விற்பனை குறைந்ததே நிறுவனத்தின் வருவாய் வீழ்ச்சிக்கு காரணமென்று அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி டிம் குக் தெரிவித்ததையடுத்து வியாழக்கிழமை அன்று ஆப்பிளின் பங்குகள் சுமார் 10 சவீத வீழ்ச்சியை கண்டுள்ளன. கடந்த வருடத்தின் கடைசி மூன்று மாதங்களில் ஆப்பிளின் வருவாய் 86 பில்லியன் டாலர்களாக இருக்குமென்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதைவிட ஐந்து பில்லியன் டாலர்கள் குறைவான வருவாய் கிடைத்துள்ளதாக கடந்த புதன்கிழமையன்று அந்நிறுவனத்தின் தரப்பில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக, சீன சந்தைகளை அதிகளவு சார்ந்து செயல்படும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பர்பெர்ரி, எல்விஎம்எச், ஹெர்மஸ் ஆகிய நிறுவனங்க…
-
- 0 replies
- 616 views
-
-
தென்மராட்சியில் மாம்பழச் செய்கையை ஊக்குவிக்க சிறப்பு வேலைத்திட்டம் மாம்பழங்களை உற்பத்தி செய்து அவற்றை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சந்தைப்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் நோக்கில் தென்மராட்சியில் ஏற்றுமதிக்காக மாம்பழச் செய்கையை ஊக்குவிப்பதற்குச் சிறப்பான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக தென்மராட்சியில் ஏற்றுமதிக்கான மாம்பழச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்துக்காக பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குத் தற்போது மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.இதற்காக மாம்பழ உற்பத்தியாளர் சங்கமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தச் சங்கத்தில் அங்கத்துவம் பெறுவதன் ஊடாக உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் வாய்ப்புக்களை ஏற்ப…
-
- 0 replies
- 974 views
-
-
இந்தியா - இணையம் மூலமான வர்த்தகத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் December 28, 2018 இணையம் மூலமான வர்த்தகத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை இந்திய மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சு விதித்துள்ளது. பிளிப்கார்ட் , அமேசன் போன்ற இணைய வர்த்தக நிறுவனங்களுக்கே இவ்வாறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது இணையம் மூலம் விற்கப்படும் சில பொருட்களுக்கு அதிகமான தள்ளுபடி வழங்கப்படுவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக உள்ளூர் வர்த்தகர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்தே இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இணைய வர்த்தக நிறுவனங்கள் பங்குதாரராக உள்ள கம்பெனிகளின் தயாரிப்புகளை விற்பதற்கும் சில உற்பத்தி பொருட்களை இயைத்தில் மட்டுமே விற்பனை செய்வ…
-
- 0 replies
- 393 views
-
-
இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி! அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாயின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.17 ரூபாயாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.17 ரூபாய், கொள்வனவு பெறுமதி 179.2039 ரூபாயாகும். ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 234.0748 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 226.6411 ரூபாயாகும். யூரோ ஒன்றின் விற்பனை விலை 210.4330 ரூபாயாகவும், கொள்வனவு பெற…
-
- 0 replies
- 503 views
-
-
ஒருவேளை உணவுக்கே திண்டாடிய பெண் 300 ரூபாய் முதலீட்டில் சாதனை நாயகியான கதை சரண்யா நாகராஜன் பிபிசி தமிழ் Facebook செளபர்ணிகா வாழ்க்கையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் சறுக்கி விழுந்தார் செளபர்ணிகா. சமூகம் அவரை ஏளனமாகப் பார்த்தது. ஆனால், விழுந்த ஒவ்வொரு அடியையும் தனக்கு சாதகமாக மாற்றும் மன உறுதியைப் பெற்றார். இப்போது, நவீன ஆடை வடிவமைப்பாளராக வாழ்க்கையில் உயர்ந்து நிற்கிறார். அது எப்படி சாத்தியமானது? பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் செளபர்ணிகா. "சிறு வயதாக இருக்கும்போது எங்களது குடும்பம் மிகவும் செல்வச் செழிப்பாக இருந்தது. கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது (1998) நடந்த கலவரத்தில் எனது அப்பாவின் தங்கப்பட்டறை சூறையாடப்பட்டதை தொடர்ந்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் இளம் சுற்றுலா தூதுவர்கள் Editorial / 2018 டிசெம்பர் 20 வியாழக்கிழமை, பி.ப. 06:41 Comments - 0 இளம் சுற்றுலாத்துறை தூதுவர் முயற்சியின் யாழ் நிகழ்ச்சித்திட்டம், அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரமைப்பின் (USAID) நிதியுதவியுடன் செயற்படுத்தப்பட்டு வரும் YouLead இன் ஆதரவுடனும், ஜெட்விங்கின் கைகோர்ப்புடனும் தனியார் துறை சுற்றுலா திறன்கள் குழுவினால் நடத்தப்பட்ட இந்த முதன்மை நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக சமையற்கலை முதற்கொண்டு கழிவு முகாமைத்துவம் வரை அனைத்து விடயங்கள் குறித்தும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 15 இளம் ஆண்கள், பெண்களுக்கு கற்பிக்கப்பட்டிருந்தனர். சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க மு…
-
- 0 replies
- 405 views
-
-
உலக வர்த்தக பதற்றநிலையைத் தணித்த ஜி - 20 உச்சிமகாநாடு சர்வதேச நிதித்துறையில் உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு அவசியமான கொள்கைகளை ஆராயும் நோக்குடன் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் தாபிக்கப்பட்ட 20 நாடுகள் குழு என்ற ( ஜி- 20) அமைப்பின் வருடாந்த உச்சிமகாநாடு கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் தென் அமெரிக்க நாடான ஆர்ஜன்டீனாவின் தலைநகர் புவனஸ் அயர்ஸில் நடைபெற்றது. உலகளாவிய வர்த்தக சீர்குலைவுநிலையொன்று ஏற்படுவதைத் தடுக்கக்கூடிய அணுகுமுறையொன்று கடைப்பிடிக்கப்பட்டமையை இந்த மகாநாட்டின் முக்கியமான உடனடி விளைபயன் என்று கூறமுடியும்.இதன் விளைவாக உலகளாவிய பொருளாதாரச் சீர்குலைவும் தற்போதைக்கு தவிர்க்கப்படக்கூடிய சாத்தியப்பாடுகள் தோன்றியிருக்கின்றன. யதார்த்தநில…
-
- 0 replies
- 370 views
-
-
ஜி20 மாநாட்டை உன்னிப்பாக கவனிக்கும் நிதியியல் மற்றும் மூலப் பொருட் சந்தைகள்! பிரித்தானிய பிரதமர் தெரேசா மே – ஜீ 20 மாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் ஆஜன்டீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நேற்றைய தினம் (வியாழக்கிழமை) பிரித்தானிய பிரதமர் உட்பட விசேட தூதுக்குழுவினர் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர். சர்வதேச பொருளாதார நெருக்கடிகளின் பிடிக்குள் இருந்த உலகை பாதுகாப்பது எவ்வாறு என்பது குறித்து கடந்த 2008 ஆம் ஆண்டு உலகத் தலைவர்கள் ஒன்று கூடி ஆராய்ந்தமைக்கு அமைவாக இந்த வருடம் அதன் அவசியப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளனர். நிதியியல் மற்றும் மூலப் பொருட் சந்தைகள் இந்த மாநாட்டின் பிரதிபலன்கள் குறித்து மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருகின்றன. முக்கியமாக அ…
-
- 0 replies
- 362 views
-
-
சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு ஐந்து வருட வரி விலக்கு சிறிய மற்றும் நடுத்தர வர்க்க முயற்சியாளர்களுக்கு ஐந்து வருட வரி விலக்கு வழங்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, 28 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக வரி வீதம் குறைக்கப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. இதன்போது, ஏற்றுமதிக்கான பொருட்கள், உள்ளூர் உணவு தேவைக்கான விவசாய உற்பத்திகள் மற்றும் தொழிற்சாலை மூலப் பொருட்களாக பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்ட இரண்டு குறிக்கோள்களை அடையும் வகையில் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, தேயிலை, பலசரக்கு, தெங…
-
- 0 replies
- 369 views
-
-
இலங்கையிலிருந்து நிறுவனங்கள் வெளியேற்றம் Editorial / 2018 நவம்பர் 21 புதன்கிழமை, பி.ப. 09:34 Comments - 0 நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆடை உற்பத்தி துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் தலைமையகங்களை சிங்கப்பூருக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெருமளவு வரி விதிப்பு மற்றும் நாட்டில் தற்போது பொதுவாக காணப்படும் வியாபாரச் சூழல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானங்களை இந்நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாரிய மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமொன்றின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், இந்த மாத இறுதியில் தமது நி…
-
- 1 reply
- 582 views
-
-
சிறப்புக் கட்டுரை: கிரெடிட் / டெபிட் கார்டு பயனர்களே உஷார்! முத்துப்பாண்டி யோகானந்த் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக டிஜிட்டல் உலகிற்குள் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட வணிக நிறுவனங்களும் தங்களின் விற்பனையை டிஜிட்டலுக்கு மாற்றிவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் பலசரக்குக் கடைகளில் தொடங்கி ஹோட்டல்கள் வரை பெரும்பாலான இடங்களில் ஸ்வைப்பிங் மெஷின் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையைக் கையாளத் தொடங்கிவிட்டனர். மக்களாகிய நாமும் கிரெடிட் / டெபிட் கார்டு இருக்கும் தைரியத்தில் கையில் அதிக பணம் வைத்திருப்பதை விரும்புவதில்லை. தேவையானவற்றை வாங்கிக்கொண்டு கிரெடிட் / டெபிட் கார்டை எடுத்து ஸ்வைப…
-
- 0 replies
- 562 views
-