வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
படத்தின் காப்புரிமை marutisuzuki.com வட இந்திய மாநிலமான ஹரியானாவில் உள்ள குருகிராம் மற்றும் மானேசர் ஆகிய இடங்களில் இருக்கும் தங்கள் தொழிற்சாலைகளை இரண்டு நாட்கள் மூட இருப்பதாக இந்தியாவின் மிக பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆறு மாதங்களாக விற்பனையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டுள்ளதால், தனது இரண்டு தொழிற்சாலைகளை செப்டம்பர் 7 மற்றும் 9ம் தேதிகளில் மூடிவிட மாருதி சுசுக்கி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த இரு நாட்களும் உற்பத்தி இல்லாத நாட்களாக அந்த நிறுவனத்தால் அனுசரிக்கப்படும். …
-
- 0 replies
- 248 views
-
-
எமர்ஜென்ஸி ஃபண்டு நிதியை, ஒரே நாளில் உருவாக்குவது என்பது கஷ்டமான காரியம். ஆனால், குறிப்பிட்ட ஆண்டுகளில் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்தால் சேமிக்க முடியும். இன்றைய சூழலில், வேலையிழப்பு பிரச்னைதான் முதன்மையான பேச்சாக இருக்கிறது. ஏனெனில், நம் நாட்டின் பொருளாதார மந்த நிலையால் யாருக்கு எப்போது வேலை போகும் என்றே சொல்ல முடியாத சூழ்நிலை. சம்பளத்தை மட்டுமே நம்பி பல லட்சம் குடும்பங்கள் இங்கே இயங்கிக்கொண்டிருக்கும்போது, திடீர் வேலையிழப்பு அந்தக் குடும்பங்களைத் திக்குமுக்காடச் செய்துவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதுமட்டுமில்லாமல், உடல்நலம் சரியில்லாமல் போவது, விபத்தில் சிக்கி சில மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்படுவது போன்ற அவசரச் செலவுகள்…
-
- 0 replies
- 284 views
-
-
'2024-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே இந்தியாவின் முதன்மை இலக்கு' - பிரதமர் மோடியும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மீண்டும் மீண்டும் சொல்லும் வார்த்தைகள் இவை. விரிவான கட்டுரைக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2rJM70x ஒரு டிரில்லியன் என்றால் ஒரு லட்சம் கோடி. அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு என்ன என்பதையும் 5 டிரில்லியன் டாலருக்கு எத்தனை பூஜ்யம் என்பதையும் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். "நடப்பு 2019-20-ம் நிதி ஆண்டில் 7 சதவிகித அளவுக்கு மட்டுமே ஜி.டி.பி வளர்ச்சி உயர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். என்றாலும், இந்த ஆண்டில் நமது பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாக உயரும் என்று சொல்லியிருக்கிறார் நிர்மலா …
-
- 0 replies
- 493 views
-
-
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தை அடைந்துள்ளது. தினந்தோறும் 12 மில்லியன் பேரல் உற்பத்தியால் உலகில் பல்வேறு மாறுதல்கள் நிகழ்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்கா இந்த வளர்ச்சியை அடைந்துவிட்டது. தினமும் 9 மில்லியன் பேரல் எண்ணெய் அமெரிக்காவில் இருந்து அதன் நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாட்டு உற்பத்தியின் தேவையே இல்லாத நிலை அமெரிக்காவில் உருவாகியுள்ளது. 200க்கும் மேற்பட்ட சிறிய நடுத்தர எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் கடன்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தை எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பதால் அமெரிக்காவின் வளர்ச்சியில் விரிசல்கள் தோன்ற ஆரம்பித்து விட்டன. https://www.poli…
-
- 0 replies
- 340 views
-
-
உயர் கல்வி மாணவர்கள் உருவாக்கிய விமானம் ஆபிரிக்காவை கடக்கிறது! தென்னாபிரிக்காவில் உயர்கல்வி மாணவர்கள் 20 பேர் இணைந்து, விமானத்தின் உதிரி பாகங்களை கொண்டு சிறிய ரக விமானம் ஒன்றை தமது இருப்பிடத்திலேயே தயாரித்துள்ளனர். ஆயிரக்கணக்கான உதிரி பாகங்களை கொண்டு 4 பேர் அமரக்கூடிய சிறிய விமானத்தை மூன்றே வாரங்களில் அவர்கள் கட்டமைத்துள்ளனர். மாணவர்கள் தயாரித்த இந்த விமானம் தென்னாபிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் இருந்து எகிப்தின் கெய்ரோ நகரம் வரையிலான தன் முதல் பயணத்தை அண்மையில் ஆரம்பித்தது. சுமார் 12,000 கிலோமீட்டர் தொலைவுடைய இந்த பயணத்தை நிறைவு செய்ய சுமார் ஆறு வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை 17 வயதான மேகன் வெர்னர் என்கிற உயர்கல்வி மாணவி …
-
- 0 replies
- 267 views
-
-
இலங்கையின் பொருளாதார நிலைப்பாடும் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் தேவையும் அனுதினன் சுதந்திரநாதன் / 2019 ஓகஸ்ட் 12 திங்கட்கிழமை, மு.ப. 01:4 கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி, இலங்கையில் இடம்பெற்ற அசம்பாவித நிகழ்வுகளுக்குப் பின்னர், இலங்கையின் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சி நிலையொன்று ஏற்பட்டதை, யாரும் மறுக்க முடியாது. மூன்றுக்கு மேற்பட்ட மாதங்களை நாம் கடந்துள்ள போதிலும் குறித்த நிகழ்வால் ஏற்பட்ட பொருளாதார அதிர்வுநிலையில் பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை. இலங்கையின் பொருளாதாரச் செயற்பாடுகள், இந்நிகழ்வுகளுக்கு முன்னதாகவே, மிகப்பெரும் நெருக்கடியிலிருந்ததுடன், அதைத் தீர்ப்பதற்கு, சுற்றுலாத்துறை, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டே, நாட்டின் அபிவிருத்தி இலக்குகள்…
-
- 0 replies
- 861 views
-
-
பலருக்கு சோறு தண்ணி இல்ல.! ஆனா இவங்க சொத்து மட்டும் பில்லியன் கணக்குல எகிறுதே.! எப்படி.? கொரோனா பற்றி அதிகம் விளக்கத் தேவை இல்லை. பல குடும்பங்கள் நாள் ஒன்றுக்கு ஒருவேளை உணவு இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.இருப்பினும், உலகில் சில பில்லியனர்களின் சொத்து மதிப்பு, இந்த கொரோனா காலத்தில் கூட சில பல பில்லியன் டாலருக்கு மேல் எகிறி இருக்கிறதாம். எப்படி இவர்களின் சொத்து மட்டும் எகிறி இருக்கிறது? என்ன ஆச்சு என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம். அறிக்கை Institute for Policy Studies என்கிற அமைப்பு பில்லியனர்களின் சொத்து மதிப்பு தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் அமெரிக்காவின் ஜெஃப் பிசாஸ் மற்றும் எலான் மஸ்கின் சொத்த…
-
- 0 replies
- 484 views
-
-
2014 க்கு பின்னர் 100 அமெரிக்க டொலர்களை கடந்த மசகு எண்ணெய் ரஷ்யா - உக்ரேன் பதற்றங்களுக்கு மத்தியில் 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன் முறையாக ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி 20 க்கு முன்னர் 50 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலையானது வியாழனன்று 101.51 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. எண்ணெய் விநியோகம் ஏற்கனவே மிகவும் இறுக்கமான நிலையில் உள்ளது. உலகின் இரண்டாவது இடத்திலுள்ள எண்ணெய் உற்பத்தியாளரான ரஷ்யாவில் இருந்து எண்ணெய் பாய்ச்சலில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால், அது விலையை மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். https://www.vir…
-
- 0 replies
- 309 views
-
-
காந்தி மற்றும் லீயிடம் கற்க வேண்டிய பாடம் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் சொந்த மாநிலத்திலேயே வேலைகளை உண்டாக்க விரும்புகிறார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். அப்படியானால், அவருக்குச் சிறந்ததொரு திட்டம் தேவை. நவீன சிங்கப்பூரின் நிறுவனத் தந்தையான லீ குவான் யூ, இந்திய தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி இரண்டு பேரிடமிருந்தும் சில பாடங்களை அவர் கற்பது அப்படியொரு திட்டத்தை உருவாக்க உதவும். ஆசியாவின் முதல் முன்னேறிய நாடாக சிங்கப்பூர் ஆகும் என்று லீ, 1965-ல் அந்நாடு உருவானபோது அறிவித்தார். மிக மேம்பட்ட பொருளாதார வல்லரசு நாடுகளினுடைய குடிமக்களின் தனிநபர் வருவாய்க்கு ஈடாக சிங்கப்பூர் குடிமக்களின் தனிநபர் வருவாயைப் பெருக்குவதுதான் அவரது மேம…
-
- 0 replies
- 364 views
-
-
பிரித்தானியாவில் வீட்டின் விலை அதிகரிப்பு: நேஷன்வையிட் தகவல்! பிரித்தானியாவில் வீட்டின் விலை அதிகரித்துள்ளதாக நேஷன்வையிட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. சராசரி மதிப்பு 231,068 பவுண்டுகளை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த விலையை விட 6.9 சதவீத உயர்வை கண்டுள்ளது. இது ஜனவரி மாதத்தில் 6.4 சதவீதமாக இருந்தது. ‘இந்த அதிகரிப்பு ஒரு ஆச்சரியம்’ என்று நேஷன்வைட்டின் ரோபர்ட் கார்ட்னர் கூறினார். ஏனெனில் முத்திரை வரி விடுமுறை முடிவடைவதற்கு முன்பே விலை வளர்ச்சி குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த விடுமுறை மார்ச் 31ஆம் திகதி முடிவடைய உள்ளது, இருப்பினும் அது நீடிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்தன. முத்திரை வரி விட…
-
- 0 replies
- 405 views
-
-
வேகமாக வளர்ந்து வந்த இந்தியப் பொருளாதாரம், மெதுவாக சரியத் தொடங்குகிறதா? - ஓர் ஆய்வு Getty Images ஜூலை மற்றும் செப்டம்பருக்கு இடையில், இந்தியாவின் பொருளாதாரம் 5.4% என்ற அளவிற்கு சரிந்துள்ளது சௌதிக் பிஸ்வாஸ் இந்திய நிருபர் இந்தியாவின் சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புகள் மோசமான அளவில் சரிவை சந்தித்துள்ளன. ஜூலை மற்றும் செப்டம்பருக்கு இடையில், இந்தியாவின் பொருளாதாரம் 5.4% என்ற அளவிற்கு சரிந்துள்ளது. கடந்த ஏழு காலாண்டுகளின் மதிப்பிலேயே இதுதான் குறைவான மதிப்பாகும். மேலும், இது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கணித்த 7 சதவீதத்தை விட மிகக் குறைவு. மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்ப…
-
- 0 replies
- 443 views
-
-
ஜேர்மனியை சேர்ந்த BMW நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்! ஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ (BMW) நிறுவனம் புத்தம் புதிய X7 SUV வாகன மாதிரியின் ஔிப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டுள்ளது. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் பிரம்மாண்ட 7 இருக்கைகள் கொண்ட மாதிரியாக வௌிவரவிருக்கும் இந்த பிரம்மாண்ட எஸ்யூவி வாகனம் மெர்சிடிஸ் பென்ஸ், வோல்வோ, அவுடி கார் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் இந்த புதிய மாதிரி வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ஹெட்லைட் வடிவமைப்புகள், LED DRL கள் மற்றும் நவீன மேன்சிங் கிரில்களை கொண்டுள்ளது. இந்த எஸ்.யூ.வி.களில் குரோம் சுற்றப்பட்டு உள்ளது. பின்பாகத்தில் மெல்லிய எச்சர…
-
- 0 replies
- 577 views
-
-
மின்சார கார் சந்தையில், அடியெடுத்து வைக்கும் புகழ்பெற்ற கார் நிறுவனம் – அதிர வைக்கும் அதிவேகம்! பெட்ரோல், டீசல் எரிபொருள்களின் பாற்றாக்குறை, எரிபொருள்களின் பயன்பாடுகள் அதிகரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பாதுகாப்பான எதிர்காலத்தினை உருவாக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பெரிய நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன. புகழ்பெற்ற போர்ஷே நிறுவனம் அடுத்த வருடத்தில் தன்னுடைய முதல் மின்சார காரை வெளியிடவுள்ளது. டெஸ்லா, லோட்டஸ் போன்ற ஜாம்பவான்களுக்கு சவால் விடும் வகையில் போர்ஷே நிறுவனம் தன்னுடைய முதல் மின்சார காரான டய்கனை (Taycan) வெளியிட உள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகவிழா செப்டம்பர் மாதம் 4ம் திகதி நடைபெற உ…
-
- 0 replies
- 1k views
-
-
Business Today-இன் முதல் 30 தரப்படுத்தலில் முதலிடத்துக்குத் மீளத்திரும்பியது கொமர்ஷல் வங்கி நாட்டில் 2019-20 காலப்பகுதியில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய நிறுவனங்களுக்கான தரப்படுத்தலான ´Business Today Top 30" இல் கொமர்ஷல் வங்கி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலமாக இலங்கையிலுள்ள முக்கியமான கூட்டாண்மை நிறுவனங்களிடத்தில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக கொமர்ஷல் வங்கி காணப்படுகிறது. இத்தரப்படுத்தலில் முதலிடத்துக்கு கொமர்ஷல் வங்கி மீளத் திரும்பியமையானது, முதல் ஐந்து இடங்களுக்குள் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் தரப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது. இந்த 12 ஆண்டுகளில் அநேகமான தடவைகள், இரண்டாவது நிலையை வங்கி பெற்றிருந்தது. பிஸ்னஸ் டுடேயினால் நவம்பர் …
-
- 0 replies
- 514 views
-
-
சீனாவின் பங்குச் சந்தைகள் தடுமாற்றம்? சீனாவின் வர்த்தக புள்ளிவிவரங்கள் ஏமாற்றம் அளித்ததால் ஹொங்கொங் மற்றும் சீனா ஆகியவற்றின் பங்குச்சந்தைகளில் ஏப்ரல் மாதத்தில் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. சீனாவின் இறக்குமதிகள் ஏப்ரல் மாதத்தில் 7.9சதவீதமாக குறைவடைந்துள்ளது, அதேநேரத்தில் ஏற்றுமதி 5.8சதவீதம் மெதுவான வேகத்தில் உயர்ந்துள்ளது. அதேநேரம் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதிகள் 14 சதவீதத்திற்கும் மேலாக குறைடைவந்தள்ளன. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் இருந்த அந்நாட்டின் இறக்குமதியும் இக்காலகட்டத்தில் 2 சதவீதம் குறைந்துள்ளது. சீனாவின் பல முக்கிய வர்த்தக பங்காளிகள் ‘மந்தநிலை அபாயங்கள்’ அதிகரித்து வருவதை அ…
-
- 0 replies
- 365 views
-
-
இலங்கை வர்த்தகத் தடையை முறியடித்தால் தெற்காசியப் பிராந்திய ஏற்றுமதியை இரு மடங்கிற்கு மேலாக அதிகரிக்கலாம் - உலகவங்கி இலங்கை வர்த்தகத் தடையை முறியடித்தால் தெற்காசியப் பிராந்திய ஏற்றுமதியை இரு மடங்கிற்கு மேலாக அதிகரிக்கலாம் - உலகவங்கி வர்த்தக தடைகளை வெற்றிகரமாகத் தாண்ட முடியுமாயின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான ஏற்றுமதிகளை இரண்டு மடங்கிற்கு மேலாக அதிகரிப்பதற்கான சாத்தியம் இலங்கைக்கு உண்டென உலகவங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மேலும் வர்த்தக தடைகளை வெற்றிகரமாகத் தாண்ட முடியுமாயின் தெற்காசிய பிராந்தியத்திற்குள்ளான வர்த்தகத்தை 23 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 67 பில்லியன்…
-
- 0 replies
- 453 views
-
-
யாழ்.சர்வதேச வர்த்தக் கண்காட்சி ஆரம்பம் எம். றொசாந்த் / 2019 ஜனவரி 25 வெள்ளிக்கிழமை, பி.ப. 01:42 Comments - 0 வடக்கின் நுழைவாயில் எனும் தொனிப்பொருளில் வருடாந்தம் நடைபெற்று வரும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக் கண்காட்சி இம்முறை 10 ஆவது தடவையாக யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. யாழ்.மாநகர சபை மைதானத்தில் இன்று (25) முதல் நாளை மறுதினம் (27)ஆம் திகதி வரை மூன்று நாட்கள் இக்கண்காட்சி நடைபெறவுள்ளது. இக் கண்காட்சி கூடங்களை இன்று (25) யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் திறந்து வைத்தார். 10 ஆவது வருடமாக நடைபெறும் இக் கண்காட்சியில் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குபற்றி தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தவுள்ளனர். அத்துடன் தொழில் வழிகாட்டல்கள், …
-
- 0 replies
- 404 views
-
-
உலகத்தில் எல்லோருக்கும் பணம் என்றால் என்ன என்று தெரியும். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்கிறார்கள் எமது முன்னோர்கள். அதிகமான மக்கள் அதிக பணம் இருந்தால் சுகமாக, ஆரோக்கியமாக மற்றும் மனத்திற்கு விரும்பியதை செய்து வாழலாம் என நம்புகிறாரக்ள். பெற்றோர்கள் பிள்ளைகள் கை நிறை பணம் சம்பாதித்து வாழவேண்டும் என விரும்புகிறார்கள். அதற்காக தாம் கடுமையாக உழைக்கின்றார்கள். இந்த பணம் என்பதுடன் வங்கிகள் பின்னிப் பிணைந்துள்ளன. அரசு ஒன்று மத்திய வங்கியை கொண்டிருக்கும். அதை சார்ந்து தனியார் வங்கிகள் இருக்கும். இவை மக்களுக்கு பலவேறு கடன்களை கொடுத்து கோடி கோடியாக சம்பாதிக்கும். அப்பொழுது அதில் நட்டம் வந்தால் அரசுகள் மக்கள் வரிப்பணத்தில் அந்த வங்கிகளை காப்பாற்றுவதும் உண்டு. வங…
-
- 0 replies
- 360 views
-
-
ஏன் ரூபாயின் மதிப்பு உயர்கிறது ச.சேகர் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டின் பிற்பகுதியிலிருந்து படிப்படியாக உயர்வடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. நவம்பர் மாதம் 30ஆம் திகதி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ. 329 ஆகும். இந்தப் பெறுமதி மார்ச் 22ஆம் திகதி ரூ. 298 ஆக உயர்ந்திருந்தது. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதன் பின்னர் இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடையும் இரண்டாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. திறந்த பொருளாதாரமுறைமை இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி படிப்படியாக வளர்ச்சி கண்டிருந்த போதிலும், 2022 மார்ச் மாதம் முதல் 2022 மே மாதம் வரையான பொ…
-
- 0 replies
- 524 views
-
-
சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கு துளியும் ஆர்வம் இல்லை: ட்ரம்ப் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கு துளியும் ஆர்வம் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரவித்துள்ளார். இந்தநிலையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ‘சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறீர்களா? என ட்ரம்ப்பிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இல்லை. எனக்கு அந்த எண்ணமே இல்லை. அதில் எனக்கு துளியும் ஆர்வம் இல்லை. கையெழுத்திட்ட வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஏற்ப அவர…
-
- 0 replies
- 730 views
-