வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
உங்களை ஏமாற்றுபவர்கள் இவர்களா? அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஜூலை 26 நம் அன்றாட வாழ்வில், அரசியல் முதல் நம் வருமானச் சேமிப்புவரை ஒவ்வொன்றையுமே விமர்சனம் செய்ய நாம் தயங்குவதில்லை. நமக்கு பிடித்த அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, பிடிக்காதவராக இருந்தாலும், சரி நாம் விமர்சனம் செய்வோம். நமது சேமிப்புகளை என்ன செய்வது என்பது தொடர்பிலும் பல கலந்துரையாடல்கள், விமர்சனங்களுக்குப் பின்னே ஒரு முடிவுக்கு வருவோம். ஆனால், நமது வருமானங்களை முதலீடு செய்ய யாரேனும் அறிவுரை வழங்குகின்ற போது, அவர்களின் தகுதிநிலையை மாத்திரம் கருத்திற்கொண்டு விமர்சனங்களுக்கு அப்பால் முதலீடுகளைச் செய்கின்ற ஒரு மனநிலை அல்லது வழக்கம் நம்மிடையே காணப்படுகிறது. ஒருவேளை, அவர்கள் தருகின்ற முதலீட்ட…
-
- 0 replies
- 560 views
-
-
கொவிட் - 19 காரணமாக ரூ. 30 பில்லியன் வருமானம் இழப்பு.! கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் வருமானம், நடப்பு நிதியாண்டின் நிறைவில் 30 பில்லியன் ரூபாயை இழக்கும் என, ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், இது 7 சதவீத வீழ்ச்சியெனவும் தெரிவித்துள்ளது. நாட்டின் மாபெரும் இரு தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களையும் இந்த நிறுவனப்பட்டியலிலிருந்து நீக்கும் பட்சத்தில், இந்த வருமான இழப்பு ரூ. 40 பில்லியனை விட அதிகமாகப் பதிவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களைத் தெரிவு செய்து இந்த ஆய்வை மேற்கொண்டு …
-
- 0 replies
- 665 views
-
-
கொரோனா தாக்கமும் தொடக்கநிலை வணிகங்களும் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஜூலை 21 இலங்கை போன்றதொரு நாட்டில், தொடக்கநிலை வணிகங்களின் ஆரம்பமானது, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து வரவேற்கத்தக்க வகையிலும் பிரமிப்பைத் தரக்கூடியதாகவும் அமைந்திருக்கிறது. அமெரிக்காவின் சிலிக்கன்வெளியை ஒத்தவகையில், இந்து சமூத்திரத்தில் இலங்கை தொடக்கநிலை வணிகங்களுக்கு ஒரு சாதகமான இடமாக உருப்பெற்று வந்துகொண்டிருக்கிறது. உண்மையில், கொரோனா தாக்கம் பல்வேறு வணிகங்களுக்கும், வணிகர்களுக்கும் பெரும் இடையூறாக மாறியிருக்கின்ற நிலையில், இந்த இடர்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டுகூட நிறைய தொடக்கநிலை வணிகங்கள், இலங்கையில் உருப்பெற்றதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். ஆனால், அவ்வாறு குறுங்காலத்தில் உ…
-
- 0 replies
- 535 views
-
-
கடன் சுமையில் சிக்கிக் கொள்ளாதீர்கள் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஜூலை 14 கொரோனா வைரஸ் காலத்தில், இலங்கை அரசாங்கம், தொடர்ச்சியாக நிதியியல் ரீதியான பல்வேறு சலுகை களைத் தனிநபர்க ளுக்கும் நிறுவனங் களுக்கும் வழங்கி வருகிறது. மறுபுறம், அந்தச் சலுகைகள், தகுதியான வர்களைப் போய் சேருகின்றதா என்கிற விவாதங்களும் நடந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு நடுவே, நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், நிதி ரீதியான சிக்கல்களிலும், நுண்கடன் ரீதியான பிரச்சினைகளிலும் சிக்கிக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. எனவே, இந்தக் காலப்பகுதியில் கடன் பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருப்பவர்கள், கடனொன்றைப் பெற்றுக்கொண்டு, அதை மீளச்செலுத்துவதில் பிரச்சினை இருப்பவர்களென, அனைவருமே இந…
-
- 1 reply
- 1k views
-
-
தொற்று கிருமி அனுப்பிய பீஜிங்குடன் இனி வர்த்தகம் இல்லை - ட்ரம்ப் வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பீஜிங்குடன் இரண்டாவது கட்ட வர்த்தக தொடர்பு குறித்து பேசப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போட்டி நிலவி வரும் நிலையில் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் சீன அதிபருடன் தற்போது பேசப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சீனாவுடன் இரண்டாவது கட்ட வர்த்தக பேச்சுவார்த்தை குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த ட்ரம்ப், ''பீஜிங்குடன் கடந்த ஜனவரி மாதம் முதல் கட்ட…
-
- 2 replies
- 518 views
-
-
இந்தியாவில் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய கூகுள் நிறுவனம் முடிவு இந்தியா டிஜிட்டல்மயமாக்க நிதியத்தை அறிவித்த கூகுள் நிறுவனம் இதன் மூலம் இந்தியாவில் அடுத்த 5-7 ஆண்டுகளில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது தோராயமாக ரூ.75,000 கோடி முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. கூகுள் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே நடைபெற்ற பேச்சுகளுக்குப் பிறகு இந்த முடிவை கூகுள் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கூகுள் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை கூறியதாவது, “இந்த முதலீட்டை ஈக்விட்டி முதலீடுகள், கூட்டுறவுகள், உள்கட்டமைப்பு, சூழலிய அமைப்பு முதலீடுகள் என்ற வழியில் கூகுள் செய்யவுள்ளது. இந்தியாவின் எதிர்காலம் மற்றும் அதன் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மீதான…
-
- 0 replies
- 457 views
-
-
உலக அளவில் கார்ப்பரேட்டுகளின் புதிய கடன் அதிகரிக்கலாம்.. உலகமே இன்று கொரோனா வைரஸினால் ஸ்தம்பித்து போயுள்ள நிலையில், சர்வதேச அளவிலான கார்ப்பரேட் நிறுவனங்களும் பெருத்த அடி வாங்கியுள்ளன. சொல்லப்போனால் அமெரிக்காவில் பல நிறுவனங்கள் திவால் ஆகியுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஒரு அறிக்கை ஒன்று கூறியது. இப்படி இருக்கும் பட்சத்தில் பல நிறுவனங்களிலும் உற்பத்தி பாதிப்பு, விற்பனை முடக்கம், ஏற்றுமதி செய்ய இயலாமை என பல காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நிறுவனங்களின் கடன் அளவும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மணிகன்ட்ரோல் செய்தி ஒன்றில், நடப்பு ஆண்டில் உலகெங்கிலும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் புதிய கடன் அளவு 1 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும் என்…
-
- 0 replies
- 389 views
-
-
மின் வணிகத்தின் அடிப்படைகள் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஜூலை 06 கடந்த சில வருடங்களுக்குள், அதீத முக்கியத்துவம் வாய்ந்த துறையாக மின் வணிகம் வளர்ச்சியடைந்து வருகிறது. குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவுகை காலப்பகுதி, மின் வணிக வாய்ப்புகளுக்கு, எப்போதுமில்லாத சந்தை வாய்ப்புகளைத் திறந்து விட்டதுடன், ஏராளமான புதிய வாடிக்கையாளர்களையும் மின் வணிகத்துக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தது. இதுவரை காலமும், மின்வணிகத்தின் மீது சந்தேகக் கண்ணோடிருந்தவர்கள் கூட, தவிர்க்க முடியாமல் மின்வணிகத்தின் செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டு, தற்போது அதன் ஓர் அங்கமாக மாறிப்போயிருக்கிறார்கள். ஆடம்பரப் பொருள்களிலிருந்து, அத்தியாவசிய பொருள்கள் வரை அனைத்துமே மின்வணிகத்தில் கிட…
-
- 0 replies
- 530 views
-
-
இலங்கையில் தங்கத்தின் விலை இலட்சமானது! உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக இலங்கையில் வரலாறு காணாத வகையில தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு இலட்சம் (100000) ரூபா என்பதுடன், 22 கரட் தங்கத்தின் பெறுமதி 88,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது https://newuthayan.com/தங்கத்தின்-விலை-திடீரென/
-
- 0 replies
- 459 views
-
-
வட்டி வீதங்களில் மாற்றங்கள்: மத்திய வங்கி நடவடிக்கை! கொள்கை வட்டி வீதங்களில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (09) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையில் நேற்று (08) இடம்பெற்ற நாணயக் கொள்கை மீளாய்வு கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, துணைநில் வைப்பு வசதி வீதம் 4 தசம் 5 வீதமாகவும், துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் 5 தசம் 5 வீதமாகவும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் ஆகியன தலா 100 அடிப்படைப் புள்ள…
-
- 0 replies
- 508 views
-
-
கொரோனா வைரஸ் தாக்கமும் தொழிற்றுறைகளுக்கு மூடுவிழாவும் அனுதினன் சுதந்திரநாதன் கொரோனா வைரஸின் தாக்க அளவானது, இலங்கையில் குறைவாக உள்ளநிலையில், இறுக்கமான கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, முழுமையாக இயங்குவதற்கான செயற்பாடுகளை, இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. மார்ச் மாதம் 15ஆம் திகதி முழுமையாக முடக்கப்பட்ட இலங்கையின் தொழிற்றுறையானது, ஜூன் 15ஆம் திகதி முதல், முழுமையாகச் செயற்பட ஆரம்பித்து இருக்கிறது. ஆனால், கடந்த வாரங்களில் வீதிகளில் பயணிக்கின்ற நீங்கள் வீதிக்கொரு கடை மூடப்பட்டு இருப்பதையும் அவை மீளத் திறக்கப்பட வாய்ப்பில்லை என்பதையும் அறிந்திருப்பீர்கள். நீங்கள் வாங்குகின்ற பொருள்களில், சில வர்த்தகக் குறியீடு கொண்ட பொருள்கள், காணாமல் போயிருப்பதை அவதானித்து …
-
- 0 replies
- 488 views
-
-
இலங்கை மத்திய வங்கி மக்களுக்காகவா? அரசியல்வாதிகளுக்காகவா? அனுதினன் சுதந்திரநாதன் இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கின்ற, வெளியிடுகின்ற ஒரு ஸ்தாபனாக இருக்கக்கூடிய மத்திய வங்கி, 15ஆம் திகதி தங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தை எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். நாட்டின் முதன்மை மனிதனாக அறியப்படுகின்ற ஜனாதியால், “என்னுடைய பொருளாதார கொள்கைகளை முன்கொண்டு செல்வதற்கு, நீங்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறீர்கள்” எனச் சொல்லும் அளவுக்கு, எங்கள் மத்திய வங்கியின் நிலை இருக்கிறதா? என்கிற கேள்வியை எல்லோரிடத்திலும் எழுப்பி இருக்கிறது. உண்மையில், இலங்கையின் மத்திய வங்கி வினைத்திறனற்று இருக்கிறதா? கொரோனா காலத்தில் நாட்டின் நலன்கருதி எதனையும் செய்யாமல் இருந்…
-
- 0 replies
- 532 views
-
-
ஆன்லைன் பிசினஸ்தான் எதிர்காலம்!’- வெற்றி ரகசியம் சொல்லும் `BigBasket’ ஹரிமேனன் BigBasket: கோவிட்-19 சிக்கல் தொடங்கியபோது ஆர்டர்களின் எண்ணிக்கை சரிந்தது. பிறகு, படிப்படியாக உயர்ந்து தினமும் 3.5 லட்சம் அளவுக்கு ஆர்டர்கள் குவிந்தன. நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சிக்குத் தேவையான நிதியைச் திரட்டுவது அவ்வப்போது நடந்துவருவதுதான். அந்த வகையில் தனது நிறுவனத்துக்குத் தேவையான நிதியைத் திரட்ட முடிவெடுத்திருந்தது பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிக்பாஸ்கெட் நிறுவனம். ஆனால், கோவிட்-19 நோய்த் தொற்று வந்தபிறகு, நிதி திரட்டும் முடிவைக் கைவிட்டு நிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டே நடத்த முடிவெடுத்திருக்கிறது பிக்பாஸ்கெட் நிறுவனம். …
-
- 0 replies
- 347 views
-
-
Share Market பற்றிய முழு அறிவு | பங்கு சந்தையில் லாபம் எப்படி ?
-
- 0 replies
- 453 views
-
-
1991-க்குப் பிறகு வரலாறு காணா வீழ்ச்சி கண்ட கச்சா எண்ணெய் உற்பத்தி! Organization of Petroleum Exporting Countries என்று அழைக்கப்படும் OPEC நாடுகள், உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் அளவு பயங்கரமாக குறைந்து இருக்கிறதாம். 1991-ம் ஆண்டு கால கட்டத்தில், உலக நாடுகளை எல்லாம் உலுக்கி எடுத்த வளைகுடா போர் நடந்தது. அந்த கால கட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு கணிசமாக குறைந்தது. அதன் பின், இப்போது தான் கச்சா எண்ணெய் உற்பத்தி வரலாறு காணாத அளவுக்கு சரிந்து இருக்கிறதாம். கடந்த ஜூன் 2020-ல், ஒபெக் குழுவில் இருக்கும் நாடுகள் வழக்கமாக நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் அளவை விட 1.93 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை குறைவாகத் தயாரித்து இருக்கிறார்களாம். …
-
- 0 replies
- 451 views
-
-
-
- 0 replies
- 471 views
-
-
திட்டம் போட்டு செயல்படும் சீனா: இந்தியாவில் முதலீடு கடந்த 4 ஆண்டுகளில் 12 மடங்கு உயர்வு இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களில் சீனாவின் முதலீடு கடந்த 4 ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்துள்ளது என குளோபல் டேட்டா கூறி உள்ளது. பதிவு: ஜூன் 27, 2020 14:53 PM புதுடெல்லி இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களில் சீனாவின் முதலீடு கடந்த 4 ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்துள்ளது. 2016ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்களில் சீனாவின் முதலீடு இரண்டாயிரத்து 881 கோடி ரூபாயாக இருந்தது. இதையடுத்து ஆண்டுக்கு ஆண்டு சீன முதலீடு அதிகரித்துக்கொண்டே வந்தது. 2019ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் 34 ஆயிரத்து 788 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குளோபல் ட…
-
- 0 replies
- 321 views
-
-
கொரோனா வைரஸ் தாக்கமும் தொழிற்துறைகளின் மூடுவிழாவும் அனுதினன் சுதந்திரநாதன் கொரோனா வைரஸின் தாக்க அளவானது, இலங்கையில் குறைவாகவுள்ள நிலையில், இறுக்கமான கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, முழுமையாக இயங்குவதற்கான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. மார்ச் 15இல் முழுமையாக முடக்கப்பட்ட இலங்கையின் தொழிற்றுறையானது, இன்று (ஜூன் 15) முதல், முழுமையாகச் செயற்பட ஆரம்பிக்க இருக்கிறது. ஆனால், கடந்த வாரங்களில் வீதிகளி…
-
- 0 replies
- 399 views
-
-
சீனப் பொருட்கள் புறக்கணிப்பு கோஷம் எந்த அளவுக்கு யதார்த்தத்தில் சாத்தியம்? இந்தியா-சீனாவுக்கு இடை யேயான எல்லைப் பிரச்சினையைத் தொடர்ந்து சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்கிற கோஷம் உரக்க ஒலிக்கிறது. இந்தக் குரல் உச்சஸ்தாயி நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போதுதான், ‘ஒன்பிளஸ்’ என்கிற சீன செல்பேசி நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம் இந்தியாவுக்குள் நுழைந்த சில மணி நேரங்களுக்கெல்லாம் விற்றுத் தீர்ந்திருக்கிறது. அதாவது, அரசியல் கோஷங்கள் ஒன்றாகவும், நடைமுறை அதற்கு நேர்மாறாகவும் இருக்கிறது. உண்மையிலேயே, இந்தியாவால் சீனாவின் தயவின்றிச் செயல்பட முடியுமா? முடியலாம்; ஆனால், அதற்குப் பயணிக்க வேண்டிய தொலைவு சாதாரணமானது அல்ல. உலகமயமாக்கல் கொள்கையை ஏற்று இந்தியாவும…
-
- 2 replies
- 983 views
-
-
3 மாதங்களின் பின் ASPI இன்று 5000 புள்ளிகளை கடந்தது கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 3 மாதங்களுக்கு பின்னர் 5000 புள்ளிகளை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் தொடர்ந்து குறைவடைந்து வந்திருந்தது. இந்நிலையில் கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 3.34% வீதமாக இன்று (22) பதிவாகியுள்ளது. மேலும் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 5061.50 புள்ளியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=130049
-
- 0 replies
- 538 views
-
-
உலக வங்கியின் நிதி உதவி இலங்கையின் ஆரம்ப சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு உலக வங்கி மேலும் ஒரு கோடியே 50 லட்சம் அமெரிக்க டொலர் நிதி உதவியினை வழங்க முன் வந்துள்ளது. சுகாதார அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற முன்னேற்ற மறு ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக திட்டம் தொடர்பான சிரேஷ்ட தொடர்பாடல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், உலக வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இது வரை மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டம் திருப்தி அளித்துள்ளதனை அடுத்தே இந்த அடுத்த கட்ட நிதி உதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு முன்னர் உலக வங்கியின் உயர் மட்ட அதிகாரிகள் நாட்டின் பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்து உலக வங்கிய…
-
- 0 replies
- 354 views
-
-
6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம் அறிவிப்பு! உலகின் மிக பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ஜேர்மனியின் பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம், கொவிட்-19 முடக்கநிலையால் போதிய விற்பனை இல்லாத காரணத்தால் 6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய கார்களுக்கான குறைந்த தேவையால், ஆட்டம் கண்டுள்ள பி.எம்.டபிள்யூ நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் ஆட்குறைப்பு செய்யப்படுமென கூறியுள்ளது. பணிநீக்கம், முன்கூட்டியே ஓய்வு பெறுதல், தற்காலிக ஒப்பந்தங்களை புதுப்பிக்காதது மற்றும் காலியிடங்களை நிரப்பாதது ஆகியவற்றின் மூலம் ஆட்குறைப்பு அடையப்படும் என பி.எம்.டபிள்யூ நிர்வாகமும் அதன் பணிக்குழுவும் உறுதிசெய்துள்ளது. இதுகுறித்து பி.எம்.டபி…
-
- 0 replies
- 364 views
-
-
மலிவான தரமற்ற சீன இறக்குமதிகளுக்கு விரைவில் விதிகள் அறிவிக்கப்படும்.! கடந்த சில தினங்களாகவே, இந்தியா சீனா எல்லை பிரச்சனை தொடர்பான செய்திகள் ஒரு வித பதற்றத்தை நோக்கி தள்ளிக் கொண்டு இருக்கிறது.அது ஒரு பக்கம் இருக்க, இந்திய ராணுவ வீரர்கள் பலர் வீர மரணம் அடைந்து இருப்பதாக வெளி வரும் செய்திகள் கோவப்படச் செய்கின்றன. இந்த கோபத்தின் வெளிப்பாடாக பலரும், சீன பொருட்களை புறக்கணிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இப்போது மத்திய அரசும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்கிறது. சீனாவில் இருந்து இறக்குமதி சீனாவின் ஏற்றுமதி வியாபாரத்தில் ஒரு கணிசமான பங்கு, இந்தியாவுக்கும் உண்டு. 2017 - 18 நிதி ஆண்டில் சீனா, இந்தியாவுக்கு சுமாராக 76.38 பில்லியன் …
-
- 0 replies
- 426 views
-
-
காந்தி மற்றும் லீயிடம் கற்க வேண்டிய பாடம் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் சொந்த மாநிலத்திலேயே வேலைகளை உண்டாக்க விரும்புகிறார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். அப்படியானால், அவருக்குச் சிறந்ததொரு திட்டம் தேவை. நவீன சிங்கப்பூரின் நிறுவனத் தந்தையான லீ குவான் யூ, இந்திய தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி இரண்டு பேரிடமிருந்தும் சில பாடங்களை அவர் கற்பது அப்படியொரு திட்டத்தை உருவாக்க உதவும். ஆசியாவின் முதல் முன்னேறிய நாடாக சிங்கப்பூர் ஆகும் என்று லீ, 1965-ல் அந்நாடு உருவானபோது அறிவித்தார். மிக மேம்பட்ட பொருளாதார வல்லரசு நாடுகளினுடைய குடிமக்களின் தனிநபர் வருவாய்க்கு ஈடாக சிங்கப்பூர் குடிமக்களின் தனிநபர் வருவாயைப் பெருக்குவதுதான் அவரது மேம…
-
- 0 replies
- 364 views
-
-
வியாபாரங்களுக்காக குறைந்த வட்டியுடன் கடன் சிறு வியாபாரங்களுக்காக குறைந்த வட்டியுடன் கடன் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை (17) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், 2 இலட்சம் ரூபாவுக்கு 4 வீத சலுகை வட்டியின் கீழ் வர்த்தகர்களுக்கு கடன் வழங்கப்படவுள்ளது.சனச, கிராமிய வங்கி, கூட்டுறவு வங்கி ஊடாக கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் வீழ்ச்சியடைந்துள்ள சிறு வர்த்தகங்களை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்காக …
-
- 0 replies
- 325 views
-