கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
793 topics in this forum
-
-
"மூன்று கவிதைகள் / 34" 'கையோடு கைசேர்க்கும் காலங்களே!' கையோடு கைசேர்க்கும் காலங்களே நீங்கள் தையோடு பொங்கல் விழாவையும் சேர்த்து மையோடு கண்களால் பேசும் தையலை ஐயமின்றி மணக்கவே அருள்செய்வீர் இன்று! பொன்னிறப் பூக்கள் புன்னகை பூக்கட்டும் மங்கல நாணது கழுத்தில் தொங்கட்டும் ஈருயிர் ஓருயிராகும் இனிய தருணமிதில் இன்பம் பெருகிட இருவரும் இணைவோம்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம். ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 'மின்னலாய் ஒரு பின்னல்' [வெற்றி, தோல்வி, வெறுப்பு, நட்பு] வெற்றி தானாய் குதித்து வராது தோல்வி கண்டு கலங்காதே! வெறுப்பு மனிதனை சிதைக்கும் நட்பு கொண்டு வாழப் பழகு! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம். .......…
-
- 0 replies
- 112 views
-
-
"மூன்று கவிதைகள் / 33" 'மின்னலாய் ஒரு பின்னல்' அன்பு பெருகும் இல்லம் நலமாக அழகு மிளிரும் வாழ்வும் அறிவு வளர்க்கும் கல்வியும் ஆதரவு தந்து துணை புரியட்டும்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம். ....................................................... 'காகித ஓடம் கடலலை மேலே' காகித ஓடம் கடலலை மேலே காற்று மோத கவிழ்ந்தது போல காலம் செய்த கொடுமை இதுவோ? ஆழம் அறியா பெண்ணின் மனதில் ஆசை வைத்து அழிந்தது அழகோ? ஆதரவு அற்று அலைவது மெய்யோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ................................................... 'காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே' காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே பூத்திருந்த புன்னகை வாடியது ஏனோ? மௌன மொழியில்…
-
- 0 replies
- 126 views
-
-
"மூன்று கவிதைகள் / 32" "மானல்லவோ கண்கள் தந்தது" மானல்லவோ கண்கள் தந்தது அன்று தேனல்லவோ இதழ்கள் தந்தது இன்று மையலில் மயங்கி நின்றேன் மெல்ல கையினைத் தந்து அருகே அழைத்தாய்! சித்திரப் பெண்ணே காதல் கொண்டேன் நித்தமும் உன்னையே எண்ணி வாழ்வேன் மென்மை அழகில் மெய்மறந்து நின்றேன் உண்மை அன்பில் முழுதும் நனைந்தேன் வாழும் காலம் உன்னுடன் இணைய சாட்சி சொன்னது இயற்கை அன்னை! கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம். ........................................................ 'ஏடு துவக்கல்' [புகைப்படக் கவிதை] அம்மாமா அண்ணன் வாழ்த்துக் கூறவே செம்மாந்த தாத்தா ஏடு துவக்கினார்! அம்மாவின் அருளாசி விண்ணில் ஒலிக்கவே செம்மையாய் மகளும் மருத்துவர் ஆனாரே! கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்த…
-
- 0 replies
- 150 views
-
-
"மூன்று கவிதைகள் / 31" "எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே" எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே சிந்தையில் ஆடும் செழுந்தமிழ் ஓவியமே விண்ணுலக பண்ணிசைக்கும் கவின்மிகு யாழே கண்களில் சிறைபிடித்து சரணடைந்தேன் அணங்கே! இன்பத் தேனூறும் இனியவள் சொல்லே துன்பம் துடைக்கும் தூயவள் அன்பே அன்பின் வழிதந்து ஆளுகின்ற அரசியே உன்னுடன் வாழ்வதே உன்னதப் பேறே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................................. 'மின்னலாய் ஒரு பின்னல்' [அரவணைப்பு,அகங்காரம்,பரிதாபம் & பங்களிப்பு] அன்பின் அரவணைப்பு அகிலத்தைப் போற்றும் அழிக்கும் அகங்காரம் தீயாகும்! தவிர்ப்போம் பரிதாபம் தனையே பண்பான பங்களிப்பு பாரினை உயர்த்தும்! [கந்தையா த…
-
- 0 replies
- 136 views
-
-
"மூன்று கவிதைகள் / 30" 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' அன்பு இதயத்தின் திறந்த வாசல் பண்பு காட்டும் உயரிய நேசம் தாழ் இன்றி தழுவும் பாசம் வாழ்வு செழிக்க ஊட்டும் நேயம் கண்ணீர் துளியும் கதவு திறக்கும் மண்ணில் அன்பே என்றும் நிலைக்கும் [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] ......................................................... 'பக்கத்து வீட்டு பருவ நிலா' பக்கத்து வீட்டு பருவ நிலா வெட்கத்தை விட்டு ஆடிப் பாடுது தூக்கத்தை கலைத்து துடிப்பைத் தந்து ஏக்கத்தை கூட்டி மனதை வாட்டுது ஊக்கத்தை கெடுத்து கனவில் கிடத்துது! கேட்காத இனிமை காதில் ஒலித்தது வாட்டாத நிலவு வானத்தில் ஒளிர்ந்தது மொட்டு விரிந்து வாசனை தந்தது ஒட்டி உடையில் அழகு காட்டி எட்டிப் பார்த்து இன்பம் …
-
- 0 replies
- 124 views
-
-
"மூன்று கவிதைகள் / 29" 'புகைப்படக் கவிதை' பார் போற்றும் பழம்பெரும் மொழி வேர் ஊன்றிப் பரவிய இனம் சீர் கொண்ட செம்மொழித் தமிழ் நேர் நின்று உலகை ஆளும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] [10வது உலகத் தமிழ் மாநாடு, சிகாகோ/ ஜூலை 4 முதல் 6, 2019 இல் நான் ] ............................................................ 'பெண் என்னும் பெருஞ்சக்தி' காலம் கடந்தும் நிலைக்கும் பேரறிவே ஞாலம் போற்றும் நற்பண்பின் பிறப்பிடமே ஆயிரம் தடைகள் உடைக்கும் அலைகடலே ஆற்றல் மிக்க வரலாற்றின் ஆணிவேரே அன்பால் உலகை ஆளும் அன்னையே அறிவால் திசைகள் மாற்றும் ஆளுமையே உயிரைத் தாங்கும் ஒப்பற்ற உயர்மணியே பெண் என்னும் பெருஞ்சக்தி நீமட்டுமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்…
-
- 0 replies
- 175 views
-
-
"மூன்று கவிதைகள் / 28" 'மின்னலாய் ஒரு பின்னல்' [சாந்தம், புயல், வசந்தம் & கானம்] சாந்தம் பூத்த மனது இன்று புயல் மோதித் தடுமாறி வசந்தம் என எண்ணி கானம் இசைத்துக் கரைந்து போனது கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ................................................... ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது! திண்ணிய நெஞ்சில் தன்னம்பிக்கை நிலைக்க மண்ணில் புகழும் மங்காது நிலைபெற நண்ணிய வாழ்வு பொன்னாய் மிளிர்கிறது! தெளிவான பாதை எனக்குக் காட்டிட துளிதுளி இன்பம் மனதில் பூக்க ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்பாணம் ............................................................ 'இன்பமான இரவிதுவே இனிமைப…
-
- 0 replies
- 163 views
-
-
"மூன்று கவிதைகள் / 27" 'முகந்திருப்பிப் போறவளே முழுமனதைத் தாராயோ?' முகந்திருப்பிப் போறவளே முழுமனதைத் தாராயோ விழிநீரைத் துடைத்து பேரின்பம் பொழியாயோ தனிமையின் துயரம் போக்கிட வாராயோ கனவினில் ஏனோ கவலைகள் தந்தாயோ பிரிவினில் வாடும் நெஞ்சினைப் பாராயோ அருகினில் வந்து ஆறுதல் சொல்லாயோ இதயத்தின் கதவைத் திறந்து காட்டாயோ காதலின் மொழியை கனிவுடன் சொல்லாயோ வாழ்நாள் முழுதும் என்னுடன் வாழாயோ நிழலெனத் தொடர்ந்து துணையாய் இருப்பாயோ கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................................. 'புகைப்படக் கவிதை' கீழடி சொல்லுதடி தமிழரின் இருப்பை கேளடி வரலாற்றின் ஆழத்தின் தொன்மையை மீட்டிடு பழம்பெருமை மண்ணின் மாண்பினை …
-
- 0 replies
- 199 views
-
-
மூன்று கவிதைகள் / 26" புகைப்படக் கவிதை' பனி பொழியும் மாலை வேளையிலே பணி முடித்து எட்டிப் பார்க்கிறேன்! பகலோன் கதிரும் ஓய்ந்து விட்டது பஞ்சுபஞ்சாய் வான் கொட்டித் தீர்க்குது!! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ........................................................... "மின்னலாய் ஒரு பின்னல்" [வண்ணம், புன்னகை, கன்னம் & கண்ணீர்] வண்ணம் கொண்ட அழகு ஆடையிலே புன்னகை பொழியும் அணங்கே! கன்னம் சிவந்தது யாராலோ? கண்ணீர் ததும்பும் ஆனந்தம் இதுவோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................ 'நீயின்றி நானில்லை கண்ணே' நீயின்றி நானில்லை கண்ணே- உன் நிழலின்றி வாழ்வு ஏது மண்ணில்? மூ…
-
- 0 replies
- 158 views
-
-
"மூன்று கவிதைகள் / 25" "மின்னலாய் ஒரு பின்னல்" [கனவு, நனவு, விழிப்பு, சோம்பல்] கனவு கண்டது போதும் தமிழா நனவு மனம் வேண்டாமோ? விழிப்புக் கொண்டு எழுந்து சோம்பல் அறுத்து வினை செய்யாயோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ................................................................................... "உழைக்கும் கைகளே உருவாக்குவது நீங்களே" ஏழை பணக்காரன் முடிச்சு போடாமல் பிழைகள் தேடி நேரத்தை வீணாக்காமல் மழை வெயிலென சாட்டுச் சொல்லாமல் ... உழைத்து வாழ ஆர்வம் இருந்தால் உள்ளம் மகிழும் உயர்ச்சி உண்டு உழைக்கும் கைகளே உருவாக்குவது நீங்களே கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................ …
-
- 0 replies
- 200 views
-
-
"மூன்று கவிதைகள் / 24" 'ஏறு தழுவல்' ஏறு தழுவல் தமிழன் விளையாட்டு வீரம் கொண்ட காளை அடக்கி அடங்கா எதிரிக்கும் அச்சம் கொடுப்பான்! வியர்வையில் வீரம் ஒளிரும் போது மண்ணின் மணம் மார்பில் உறையும் தாயின் மரபு இரத்தத்தில் பேசும்! கோபமல்ல—கட்டுப்பாடே அவன் பலம் அடக்கமல்ல—அறிவே அவன் ஆயுதம்! உயிரை மதித்து காளையை அணைப்பவன் தமிழன்—வீரத்தின் மனித முகம்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ................................................................ 'கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா' கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா கலந்து பேசி முடிவு எடுக்கலாமா? மனங்கள் இணைந்தால் அதுவே பொருத்தம் மறந்து என்றும் விண்மீனைக் கேட்காதே? நேரம் தீர்மானிக்குமா ஒருவரின் வாழ்வை இதயம் சொ…
-
- 0 replies
- 184 views
-
-
"மூன்று கவிதைகள் / 23" 'பொங்குக பொங்கல்' கற்ற அறிஞர்கள் வரலாறு பாட கற்புக் கன்னிகள் கோலம் போட உற்றார் உறவினர் கதிரவனை வணங்க ஏற்றுக உலையே! ஆக்குக சோறே! மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் புதுக் கலத்தில் வளர்த்த செந்தீயில் பொது வெளியில் தோரணம் ஆட பதுமை கூடி பொங்குக பொங்கல்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ........................................................................... "மின்னலாய் ஒரு பின்னல்" [ஏழ்மை, உழைப்பு, செல்வம் & தானம்] ஏழ்மை இருந்தாலும் கல்வியை விடாதே உழைப்பு கட்டாயம் நிறைவேற்றும்! செல்வம் பூட்டி வைப்பதல்ல தானம் கொடுத்து மகிழ்வு காண்பதே! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ...........................…
-
- 0 replies
- 162 views
-
-
"மூன்று கவிதைகள் / 22" மின்னலாய் ஒரு பின்னல் [சாந்தம்/ கோபம்/ பொறுமை/ மகிழ்ச்சி] சாந்தம் நிறைந்த விழிகள் எனோ கோபம் கொண்டு பார்க்குதே பொறுமை தொலைத்து ஏங்குதே மகிழ்ச்சி தேடி என்னை அழைக்குதே [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................. 'காதல் கோட்டைகள்' காதல் கோட்டைகள் அன்பில் கட்டியது காதலன் காதலி சேர்ந்து அமைத்தது காலம் முழுவதும் நினைவில் நிற்குதே! ஆசையும் பாசமும் நிறுவிய அரண்மனை ஆரவாரம் இல்லா உறவின் கனவு ஆழ்ந்த நட்பின் நிரந்தர அடையாளமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................ புகைப்படக் கவிதை பாலைவனம் எம்மை ஒட்டகத்…
-
- 0 replies
- 229 views
-
-
-
- 0 replies
- 321 views
-
-
"மூன்று கவிதைகள் / 21" 'பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே' அன்ன நடையாள் தூளியிலே ஆடி இன்முகம் காட்டி அருகில் அழைத்து இன்பம் கொட்டும் நிலா ஒளியில் மின்னும் விளக்கில் இருவரும் சேர பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே ? சின்ன இடையாள் அழகு காட்டி தேன் சிந்தும் இதழ்கள் பதித்து கன்னம் இரண்டிலும் முத்தம் கொடுத்து அன்பு மழையால் உள்ளம் நனைக்க இன்னாள் என்றும் கிடைக்குமா மீண்டும் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................................. 'புகைப்படக் கவிதை' அம்மம்மாவின் வடிவிலேயே, எமக்கு வந்தவளே அவளின் பெயரையே, தனக்கும் எடுத்தவளே அழகான மழலையே, எங்கள் பேத்தியே அன்போடு அணைத்து, அகம் மகிழ்கிறேன்! [க…
-
- 0 replies
- 223 views
-
-
"மூன்று கவிதைகள் / 20" 'பட்டாம்பூச்சியின் காதல் ... ' பட்டாம்பூச்சியின் காதல் நிரந்தரம் அல்ல பருவம் கொடுத்த அழகின் ஈர்ப்பு! தொட்டால் குலுங்கும் ஒரு உணர்வு பட்டால் தெரியும் அதன் மாயை! திடீரென பிறக்கும் இதயத்தின் துடிப்பு திட்டம் இல்லா மனிதனின் ஆசை! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................. 'புத்தருக்கும் ஆசை வருமா' புத்தருக்கும் ஆசை வருமா? இலங்கைத் தமிழரைக் கேட்டுப் பார்— சிலை வடிவில் ஊடுருவும் பேராசையை! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................................................. 'வெள்ளை மழை இங்கு பொழிகிறது' வெள்ளை…
-
- 0 replies
- 299 views
-
-
வெட்கமற்றவையும் வெட்கமற்றவர்களும் ------------------------------------------------------------------ தேசங்கள் வெட்கம் அற்றவை மெலிந்த தேசங்களை கொளுத்தி குளிர் காய்ந்து சூறையாடும் எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவை ஏழைகளிடமும் ஏலாதவர்களிடமும் அடித்துப் பிடுங்கும் சக மனிதர்கள் போல அடித்து பிடுங்கி அழித்துக் கொண்டே தர்மம் போதிக்கும் தேசங்கள் வெட்கம் அற்றவை போலிச் சாமியார்கள் போல கலப்பட வியாபாரிகள் போல வெட்கம் அற்ற ஏமாற்றுக்கார தேசங்கள் நியாயவான் மனிதாபிமானி முகமூடிகளுடன் வந்து வந்த பின் முகமூடியை கழட்டி எறிந்து விட்டு குதறி குற்றுயிராக சுடுகாடாக விட்டுச் செல்லும் எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவை அயலவரை நேசிக்கின்றோம் என்று கொண்டே பயமுறுத்தும் ஆக்கிரமிக்கும் வெட்கமற்ற பெரு…
-
- 0 replies
- 275 views
-
-
"மூன்று கவிதைகள் / 19" 'தூது செல்லாயோ' தூது செல்லாயோ கண்மணியை அழைக்காயோ தூய்மை அன்பில் நட்பை வளர்த்து தூரிகை எடுத்து காதல் வரைந்தவள் தூர விலகிப் போனது ஏனோ? ஓரமாய்த் தள்ளி ஓடியது எதற்கோ? ஈர உள்ளம் உனக்கு இல்லையோ? கால் சலங்கை இசை எழுப்பக் காதணி இரண்டும் சேர்ந்து ஆடக் காமன் வலையில் என்னை வீழ்த்தி காதோரம் கெஞ்சிய வார்த்தை எங்கே? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................. புகைப்படக் கவிதை மழலையின் மொழி கேட்டு நான் குழல் ஊதும் கண்ணனை மறந்தேன்! குழவியின் கெஞ்சிக் கொஞ்சிக் குலாவுதலில் அழகு மங்கையின் தழுவலைத் துறந்தேன்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ...............…
-
- 0 replies
- 287 views
-
-
"மூன்று கவிதைகள் / 18" 'மின்னலாய் ஒரு பின்னல்' [நம்பிக்கை, துரோகம், சத்தியம், சோதனை] நம்பிக்கை கொடுத்து கண்களை மறைத்து துரோகம் செய்யும் மனிதர்களை அறியாயோ? சத்தியம் வெல்ல களத்தில் இறங்கினால் சோதனை வந்து வேதனை கொடுக்குதே! அல்லது நம்பிக்கை கொடுத்து கண்களை மறைத்து/ துரோகம் செய்யும் மனிதர்களே/ சத்தியம் வெல்லும் நாளில்/ சோதனை வரும் உங்கள் வாழ்வுக்கு! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................. 'மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறான்' விண்ணில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை உண்மை ஒன்றை உலகிற்குப் பகிர ஆண்டவன் வருகையை ஞானிகள் அறிய மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறான்! கண்கள் எல்லாம் அன்பு பொழிய க…
-
- 0 replies
- 216 views
-
-
"மூன்று கவிதைகள் / 17" 'புகைப்படக் கவிதை' குறள் தந்த வள்ளுவருடன் நான் குரல் அடக்க எரித்த நூலகத்தில்! குமிழி வாழ்வின் விளிம்பில் இவன் குமுறும் தமிழனின் தாய் நிலத்தில்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................................... மின்னலாய் ஒரு பின்னல் [படைத்தல், காத்தல், அழித்தல் & அருளல்] படைத்தல் தொழில் கடினம் என்றாலும் காத்தல் அதனிலும் மேல்! அழித்தல் செய்தவன் ஒருநாள் அருளல் புரிந்து அணைத்தாலும் ஏற்காதே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .......................................................................... 'மகளா மருமகளா' மகளா மருமகளா கேட்பவன் யாரடா குலப்பெருமை காக்க மணாட…
-
- 0 replies
- 277 views
-
-
"மூன்று கவிதைகள் / 16" 'புகைப்படக் கவிதை' அருகம் விரிகுடா எம்மை அழைத்தது அருகில் பேத்தி சறுக்கி விளையாடுகிறாள்! பருவக் காற்று முகத்தைத் தடவுது புருவம் உயர்த்தி அழகை அனுபவிக்கிறேன்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................................... 'காவலாய் நிற்கும் மரங்கள்' காவலாய் நிற்கும் மரங்கள் எங்கே காற்றாய் மறைந்து போனது ஏனோ? காடுகள் அழித்து நகரம் வந்ததோ கால மாற்றத்தால் வெள்ளம் புகுந்ததோ? கோலம் மாறும் மனித சமூகம் ஆல மரத்தின் நிழல் அறியாதோ? உலகம் தேடும் வானிலை மாற்றம் நலமாக இனி எமக்கு அமையாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ......................................…
-
- 0 replies
- 250 views
-
-
நில உயிர்கள் -------------------- ஒரு பக்கமாக சாய்ந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் யுத்தங்களால் இழப்பன்றி வேறு எதுவும் இல்லை சமாதானம் சமாதானம் என்றனர் நாடு நகரம் குடும்பம் குழந்தை எதிர்காலத்துடன் இப்படியே போனால் உன்னைக் கூட இழக்கப் போகின்றாய் என்றனர் எத்தனை நாளைக்குத்தான் முடியும் மூன்று வாரங்கள் கூட தாங்க மாட்டாய் என்றனர் மூன்று வாரங்கள் தாண்டி மூன்று வருடங்களும் வந்து போனது ஒரு மலையை உளியால் பிளப்பது போல என் வீட்டுக்குள் வரும் பலசாலியை என்னால் முடிந்த வரை நிறுத்தப் போராடுகின்றேன் அவர்களின் கணக்கு சரியே நான் இழந்து கொண்டேயிருக்கின்றேன் என் குலமும் நிலமும் வளமும் அழிந்து கொண்டிருக்கின்றன இழந்து இழந்து எதற்காகப் போராடுகின்றாய் இப்போது கூட நீ அடங்கினால்…
-
-
- 3 replies
- 477 views
-
-
"மூன்று கவிதைகள் / 15" 'நீல நயனங்களில் நீண்டதொரு கனவு' நீல நயனங்களில் நீண்டதொரு கனவு ஓலம் இடுகிறது மனதை வருத்துகிறது! காலம் கனிந்து கைகூடிய காதல் கோலம் மாறி கூத்து அடிக்கிறது உலக வரையறை காற்றில் பறக்கிறது! கண்ணோடு கண் கலந்த அன்பு மண்ணோடு மண்ணாய் போனது எனோ? விண்ணில் தோன்றிய கதிரவன் மாதிரி வண்ண ஒளி பரப்பிய அவன் பண்பு துறந்து ஏமாற்றியது எதற்கோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................ 'பாரதி' "அடிமை ஒழிக்கும் குரலோன் பாரதி விடிவை நோக்கி வரிகள் முழங்கும்! இடித்து உரைப்பான் காரணம் சொல்வான் அடித்துப் பொய்யை தூர விரட்டுவான்!!" "தமிழின் அரவணைப்பில் வரிகள் மலரும் பூமி எங்கும் பரந்து விரியும…
-
- 0 replies
- 335 views
-
-
"மூன்று கவிதைகள் / 14" 'புகைப்படக் கவிதை' தோற்றத்தில் பெரியவனே - தும்பிக்கை கொண்டவனே ஆற்றலில் பலமானவனே - நம்பிக்கைத் தோழனே மதம் பிடித்து - சிலவேளை அலைந்தாலும் மதம் [சமயம்] உன்னிடம் - ஒருவேளையும் இல்லையே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ------------------------------------------- 'மலைமுடியில் பனியழகு மனங்கவரும் இயற்கையழகு' மலைமுடியில் பனியழகு - மனங்கவரும் இயற்கையழகு மகளிர் வடிவத்தையும் - மகிமையிழக்கச் செய்து மடவரலின் அன்னநடையையும் - மறைத்து விடுமே! கொடுமுடியில் மஞ்சுபெய்ய - கொடிகளில் வெண்மைபடர கொடிச்சியின் எழிலையும் - கொன்று மங்கலாக்கி கொற்றவையின் கவினையும் - கொடுமையாய் மாற்றுமே! [கந்தையா தி…
-
- 0 replies
- 317 views
-