கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
774 topics in this forum
-
கொடிய கிருமி.!கொரோனாவா? என்னைவிட யாருமுண்டோ இங்கு மண்ணில் உயர்ந்த ஜாதி நானே மற்றவர் எல்லோரும் கீழ்ஜாதி தானே எண்ணத்திலூறிய வெறியர்கள் ஒருபால் கறுப்பு வெள்ளைத் தோலினை பிரித்து கசக்கி பூவினை எறிவதைப்போலே உலகநாடுகள் சிலவற்றில் அடிமையாய் உழைப்பை உறுஞ்சும் கூட்டமும் ஒருபால் ஏழை எளியோர் வாழ்வைச்சுறண்டியே ஏப்பம் விடுகின்ற முதளாளிக்கூட்டம் பணத்தை சேர்த்தே கோடீஸ்வரனாய் படைத்தவன்போலே நினைப்பவன் ஒருபால் மதங்கள் சொல்லும் அறிவுரை மறந்து மதம் பிடித்து மாக்களாய் அலைந்து-தன் மதம் ஒன்றே உலகில் பெரிதென… பிரபஞ்சம் மறந்து பிதற்றுவோர் ஒருபால் அணுவுலை நிறுவி ஆயுதம் குவித்து …
-
- 0 replies
- 497 views
-
-
போலி ஜனநாயகவாதிகள் மத தீவிரவாதமும் ஏகாதிபத்திய நல சுரண்டல்களும் இன படுகொலைகளும் இருக்கும் வரைக்கும் இரத்தக்களரியை எந்த ஒர் தனி அரசாலும் நிறுத்தமுடியாது அணு குண்டோடும் ஆயுத விற்பனையோடும் மனிதர்கள் இருப்பதால் யாருக்கு தான் இருக்கப்போகிறது அன்பும் கருணையும் போலி ஜனநாயகத்தின் பெயரால் வந்து ஒரு பூவை வைத்து விட்டு போங்கள் எங்கள் இரத்தத்தின் நடுவில் . பா .உதயகுமார்
-
- 0 replies
- 931 views
-
-
"தந்தை எனும் தாய்" [உண்மைக் கதை] தாயுமானவர் பாடல்கள் எளிமையாக இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைவது அவர் கையாளும் உவமைகளும், அதிலும் குறிப்பாக தாய் சேய் உறவுநிலை அவரது பாடல்களில் பேரிடம் வகிப்பதும் ஆகும். உதாரணமாக, “அன்னை இலாச் சேய்போல் அலக்கண் உற்றேன் கண்ணார என் அகத்தில் தாய்போல இருக்கும் பராபரமே“ “எத்தன்மைக் குற்றம் இயற்றிடினும் தாய் பொறுக்கும் அத்தன்மை நின் அருளும் அன்றோ பராபரமே“ மனக்கண்ணில் தாயின் இருப்பு தெரியினும் [தந்தையில் தாய் இருப்பினும்] அன்றாடச் சிக்கல்கள் அவரைத் [பிள்ளைகளை] தாயற்ற குழந்தை போலத் துன்புற வைத்த சூழலை தவிர்க்க, குழந்தை செய்யும் குற்றம் எத்தன்மைத்தாயினும் பெற்றவள் பொறுத்துக் கொள்வாள். அவளைப் போலவே இறைவனும் [ந…
-
- 0 replies
- 432 views
-
-
"வசந்தகால தொடக்கத்தில் எழுதிய வரிகள்" / "Lines Written in Early Spring" "தோப்பின் நிழலில் சாய்ந்து இருக்கையில் தோன்றின மனதில் ஆயிரம் எண்ணங்கள் தோரணமாய் தொங்கிய இன்ப சிந்தனையில் தோய்ந்து சில சோகத்தையும் தந்தன!" "இயற்கை மனித குலத்தின் ஆன்மாவுடன் இறுக்கமாக தொடர்பை பிணைக்கும் பொழுது இதயம்வருந்தி என்னை சிந்திக்க வைத்தது இவனேன் மனிதகுலத்துடன் பிணையவில்லை என்று?" "பசுமை வனப்பகுதியில் காட்டுச்செடிக் கூட்டத்தில் பஞ்சுச்செடி அழகிய மாலையை சூட்டிட பல்லாயிரம் மலரும் தாம்சுவாசிக்கும் காற்றை பரவசத்துடன் அனுபவித்து இன்பம் கண்டன!" "என்னைச…
-
- 0 replies
- 256 views
-
-
புதுக் கவிதை / நவீன கவிதை: "பெருவெடிப்புச் சித்திரம்" "பெருவெடிப்பு ஒன்று சிதறிப் பாய சிதறிய ஒவ்வொன்றும் ஒரு உலகமாக உலகம் எல்லாம் வெவ்வேறு அழகு தர காட்சிகள் மனதைக் கொள்ளை கொள்ள மகிழ்ச்சி தந்த உத்வேகத்தில் தூரிகை எடுத்து வரையத் தொடங்கினேன்!" "மாலைக் காற்று மெதுவாய் வீச பாடும் குயில்கள் பறந்து செல்ல வானவில் ஜாலங்கள் புரிய மனதை நெருடி மகிழ்ச்சி தர நாணம் கொண்ட என்னவளை நினைத்து என் எண்ணத்தின் பெரு வெடிப்பில் சிதறிய அவள் அழகுத் துகள்களை பொறுக்கி எடுத்து ஒன்று சேர்த்து ஓவியம் ஆக்கினேன்!" "அகன்ற மார்பும் சிறுத்த இடையும் …
-
- 0 replies
- 450 views
-
-
உயிர்த்த தினம் அன்று சிலுவையில் சிதறி கிடந்த சிவப்பு இரத்தத்தில் எதுகுமே தெரியவில்லை எவன் முஸ்லீம் எவன் கிறிஸ்தவன் எவன் இந்து எவன் கறுப்பு எவன் வெள்ளை என்று எல்லாமே ஒரே நிறமாக இருந்தது . பா .உதயகுமார் .
-
- 0 replies
- 1.1k views
-
-
சரித்திரம் மீண்டும் சுழர்கிறது உலக வரை படத்தில் ஒரு சிறு துளி போல் இலங்கை என்று ஒரு தீவு ஓடிக்கொண்டே இருக்கிறது இரத்தம் சிங்கள பெரும் தேசியமும் மதவாதமும் இனவாதவும் வளர்ந்து விட்ட சிறு தீவில் சரித்திரம் மீண்டும் மீண்டும் சுழல்கிறது யாருக்குமே அமைதி இல்லாத தேசமாகிப்போனது விஷம் விதைத்தவர்கள் எல்லாம் வினையை அறுபடை செய்துகொண்டு இருக்கிறார்கள் அமைதியாகவே இருக்கிறார் புத்தர் மட்டும் அந்த ஆலமரத்தடியில் யாரும் அவர் வழியை பின்பற்ரவில்லை என்ற கவலையோடு . B.Uthayakumar
-
- 0 replies
- 808 views
-
-
"மூன்று கவிதைகள் / 11" தீரா அலைகளின் ஓயா ஓசையினால் தீண்டித் தீண்டிச் செல்லும் அலைகளால் குளிர்ந்து நடுங்கி சிலிர்த்து நடக்கிறான் வெள்ளை மணலில் கோட்டை கட்டுகிறான்! நிமிர்ந்து எழும் கடலலை அருகே பிரிய மனமின்றி கடலில் நீந்துகிறாள் சிப்பிகள் சோகிகள் தேடி எடுத்து மாலை ஒன்று செய்து மகிழ்கிறாள்! ........................................... அலை சறுக்கு ஆனந்தம் ஆனந்தமே கடலில் பறக்கும் பறவை அதுவோ மேகத்தின் மேல் மிதப்பது போல பூரிப்பு ஒன்று ஆட்கொள்கிறது தாயே! இன்ப ஊற்று உள்ளத்தில் பாய சக்தி பாய்ந்து ஆன்மாவை நனைக்க உப்புச் சுவை நாவில் கரைய ஆழி சொர்க்கம் இன்பம் இன்பமே! ......................................................... மரக் கம்பம் விடிவெள்ளி நமக்கு விரி …
-
- 0 replies
- 127 views
-
-
"தோழனாய் நீயிருக்கத் துன்பமேது...!" "தோழனாய் நீயிருக்கத் துன்பமேது அன்பே ஆழமான உன்இதயத்தில் நானே இருப்பேனே! அழகான என்னுடலும் உனக்கே தருவேனே அழலாக பாசம் நெஞ்சில் சுடர்விடுகிறதே ஈழம் தந்த வீரனே வாழ்கவாழ்கவே!" "காதலர் தினம் ஆண்டுக்கு ஒன்றல்ல காலம் முழுவதும் அன்பின் நாளே! காமம் ஒருபக்கம் நட்பு மறுபக்கம் காத்திருப்பேன் என்றென்றும் எந்தன் பாதிக்கு கார்த்திகை தீபத்தின் நாயகன் நீயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 378 views
-
-
நான் உன்னைத் தொலைத்து நீ தேட நீ என்னைத் தொலைத்து நான் தேட இருவரும் தேடினோம் எங்கெங்கோ இதுவரை கிடைக்கவில்லை நாமெங்கோ உணர்வுக்குள் சென்று உயிருக்குள் நனைந்து உறவாடி மகிழ்ந்த நாமெங்கே என்னை அழைத்து அளாவிப் பேசிய ஆருயிர் அன்பே நீயெங்கே உன்னை அணைத்து உள்ளம் நனைத்த உன்னுயிர் அன்பே நானெங்கே நம்மை இணைத்த நல்மனம் எங்கே நன்றி சொல்வோம் தினம் இங்கே அல்லும் பகலும் உன் நினைவு அழுது துடிக்குதே என் உணர்வு சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 640 views
-
-
"நட்பு" "தேர்ந்தெடுக்கும் நிறம் குணம் காட்டும். தேர்ந்தெடுக்கும் நட்போ உன்னையே காட்டும் தேய்ந்துபோகும் காதலும் நட்பு இன்றேல் தேயாமல் வாழும் நட்பு ஒன்றே !" "இருகண்கள் அழுதால் கைத்துண்டு துடைக்கும் இருதயம் அழுதால் நட்பு துடைக்கும் இன்பமாய் உலகின் அதிபதியாய் இருப்பினும் இருளாகும் நண்பர் ஒருவர் இல்லாவிடில் !" "இளமை காலத்தில் காதல் வரும் இன்பமாக சில வேளை திருமணமாகும் இளையோர் பலருக்கு நட்பு மலரும் இறுக்கமாக பல வேளை நிரந்தரமாகும்!" "உன்முகம் பார்த்து நட்பு பழகுவதல்ல உயர்தகுதி பார்த்து நட்பு பழகுவதல்ல உதடு கொட்டும் பேச்சுக்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
'அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?' பெண் நிலவு உன்னைப் பார்த்து வெண் நிலவும் பொறாமை கொள்ளுதோ கண்ணழகி உன்னைப் பார்த்த நானும் வண்ண ஒளி கந்தனை மறந்தேனோ? அலைகடலென திரண்ட அடியார் கூட்டத்தில் அலைமோதுதே என்மனம் உன் விழிகளில் அறியாத உணர்வுகளின் வரிகள் எல்லாம் அழகாக உன்னுதட்டினில் புதைத்து எனோ? வாழ்க்கை ஓடத்தில் நீயும் நானும் வாடாத மலராய் இருக்க மாட்டோமா வாலிபம் தந்த காதல் மோகம் வாசனை வீசி எம்மை அணைக்காதா? மொழியும் உணர்வும் பின்னிய பந்தம் விழியில் பேசிய அன்புச் சொந்தம் வழியொன்றில் மலர்ந்த காதல் சந்தம் அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 'அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?' https://www.facebook.com/groups…
-
- 0 replies
- 159 views
-
-
-
"மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா?" "என்னை மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா பெண்ணே? விண்ணில் மறைந்த வெண்ணிலாப் போல கண்ணில் படாமல் ஒழித்தது எனோ?" "இரக்கம் அற்று பிரிந்து போனவளே உருக்கமாக உன்னைக் நான் கேட்கிறேன்? மயக்கும் நளினத்தால் கொள்ளை அடித்தவளே தயக்கம் இல்லையோ மற்றவன் கைப்பிடிக்க ?" "தேடி வந்தாய் தேனாய் கதைத்தாயே தேவை முடிந்தது தள்ளி விட்டாயே? தேவதையே ஒருதரம் திரும்பி பார்க்காயோ தேய்ந்து இவன் படும்பாட்டை காணாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 336 views
-
-
“நினைவு வணக்கமோ?" [படக்கவிதை] "கார்த்திகை தீபம் ஏற்றும் காந்தையே காலத்தின் கட்டாயம் இது என்றாயோ? காரணம் கேட்டு நீதிக்குப் போராடிய காணா உயிரின் நினைவு வணக்கமோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] காணா - காணாமல் போன
-
- 0 replies
- 265 views
-
-
“பூநகரி மாடு கட்டிப் பூவரசங்குளம் ஏரு பூட்டி..” “பூநகரி மாடு கட்டிப் பூவரசங்குளம் ஏரு பூட்டி இளந்தாரி வயலைக் கிளற ஆடிப்பட்டம் தேடி விதைக்க காணி ஏங்கும் பயிர்கள் முளைக்க கூடிக் குலாவி மகிழ்வாக இருக்க பூத்து குலுங்கும் வாழ்வு தந்தானே!" "பத்தாது காணாது இனி இல்லையே மெய்யாச் சொல்லுகிறேன் கேளடா கதிரையில் காய்பவன் நாமல்ல கடுதாசியில் திட்டம்போடும் சோம்பேறி வேண்டாம் பெட்டை பெடியன் வெளிக்கிட்டு வெள்ளாமைசெய்ய கெதியாய் பூக்கும் வன்னி மண்ணே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 739 views
-
-
நெடுந்தீவு ஆச்சிக்கு கவிதை எனது முன்னோரின் மண்ணான நெடுந்தீவு படைகளின் கட்டுபாட்டில் இருந்த போது 1985ல் எழுதியது. குமுதத்தில் வெளிவந்தது. . நெடுந்தீவு ஆச்சிக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன் . அலைகளின்மீது பனைக்கரம் உயர எப்போதும் இருக்கிற என்னுடைய ஆச்சி காலம் காலமாய் உன்னைப் பிடித்த பிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின போத்துக்கீசரின் எலும்புகள் மீதும் தென்னம் தோப்பு நானும் என் தோழரும் செவ்விளநீர் திருடிய தென்னந் தோப்பு. தருணங்களை யார் வென்றாலும் அவர்களுடைய புதை குழிகளின்மேல் காலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி. என்ன இது ஆச்சி மீண்டும் உன் கரைகளில் நாங்கள் என்றோ விரட்டி அடித்த போத்துக்கீசரா ? தோல் நிறம் பற்றியும் …
-
- 0 replies
- 1.9k views
-
-
கலைந்த ஆடையை உடுத்திக் கொள்ள மறுக்கிறது அப்பால்... சற்று தாமதமாக வந்தால் பொங்கி வழிகிறது முழு ஆடை... தெரியாதுபோல் சில நேரம் தெரிந்ததே தெரியாமல் போகிறது பலநேரம். .. சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 1.1k views
-
-
"முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!" "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!" "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!" "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!…
-
- 0 replies
- 288 views
-
-
"சித்திரம் பேசுதடி" "சித்திரம் பேசுதடி சின்ன பெண்ணே சிறிதளவும் உனக்கு இதயம் இல்லையோ? கோத்திரம் கேட்கிறாய் காதலித்த பின்பு கோலம் ஒன்றை நீரில் போட்டேனோ? பாத்திரம் அறியாமல் காதலை ஏற்றேனோ பாவியாய் இன்று அலைய விட்டாயோ?" "சாத்திரம் பார்க்கும் அழகு மாதே சாந்தமாய் கதைத்து கவர்ந்தது ஏனோ? ஆத்திரம் வருகுதடி ஏமாந்து போனேனே ஆசையை வார்த்து மோசம் செய்தாயோ? காத்திரமான உறவு என்று நான் காலத்தை வீணாக்கி உன்னை நம்பினேனோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 310 views
-
-
"நண்பர்கள்" [தன்முனைக் கவிதை] & "முத்துக் குளிப்போம்" "நண்பர்கள்" [தன்முனைக் கவிதை] "புரிந்துணர்வு மலர நண்பர்கள் தழைத்து ஓங்கும்! பொறாமை சூழ எதிரிகள் வளர்ந்து பெருகும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................. "முத்துக் குளிப்போம்" "ஆழத்தில் மலரும் முத்து சிற்பிகள் அழகு கோலத்தில் வண்ணக் கற்கள்! ஈழ நாட்டின் சிலாபத் துறையில் அலைகளுக்கு அடியில் பலபல இரகசியம்!" "ஓடுகளின் அரவணைப்பில் ஆழமாக கிடக்குது வண்ணவண்ண நிறத்தில் கண்களைக் கவருது! தூங்கும் புதையலை வெளியே எடுக்க வாருங்கள் நாம் முத்துக் குளிப்போம்!" [கந்தையா தில்லைவிநா…
-
- 0 replies
- 378 views
-
-
"அள்ளக் குறையாமல் அன்பிருக்கு அத்தானே" "அள்ளக் குறையாமல் அன்பிருக்கு அத்தானே வெள்ளம் போல பாசம் அழைக்குதே குள்ள நரிகளும் பின்னால் தொடருதே வெள்ள மச்சான் துணைக்கு வாராயா?" "கிள்ள கிள்ள குறையாத அன்பே துள்ள துள்ள இன்பம் பெருகுதே பள்ளிப் பருவத்தில் பின்னால் அலைந்தவனே உள்ளம் துடிக்குதே காதல் மெய்யே?" "இளந்தாரிப் பெடியனே கட்டிளம் காளையே இளவட்டப் பொண்ணு காத்திருப்பது தெரியாதா மேளம் கச்சேரி வைப்பமா கல்யாணத்துக்கு தாளம் தப்பாமல் முத்தம் போடுவோமா?" "பொய் பறையாதே கண்டு கனகாலம் பொருத்தம் இருவருக்கும் அயத்துப் போனாயா பொம்பிளை இங்கே காத்து நிக்குதே பொறுத்தது போதும் சங்கதி சொல்லையா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்…
-
- 0 replies
- 268 views
-
-
இந்திய குடிஉரிமைச்சட்டம் Indian Citizenship (Amendment) Act இத்தால் அறியத்தருவது என்னவெனில் இந்துத்துவா மண்ணை விட்டு வந்தேறியள் குடியேறிகள் அகதிகள் அனாதைகள் இந்துக்கள் இல்லாதவர்கள் இலங்கைத்தமிழர்கள் வேண்டப்படாதவர் வெளியேறுங்கள் பயமாக இருக்கிறது எம்மை தேடி அவர்கள் வந்தால் எங்கே ஒளிப்பதென்று தெரியவில்லை காந்தியும் இல்லை ஜின்னாவும் இல்லை காப்பாற்ற யாரும் இல்லை. B.Uthayan l believe l have a truth you believe you have a truth I will respect you truth please respect my truth Swami Vivekananda
-
- 0 replies
- 484 views
-
-
மகிந்த மாமா வீட்டு மைத்திரி அங்கிள்… ஜனவரி 28, 2015 · Filed under ஈழத் துயர், ஈழம், கவிதை, கவிதைகள், சமூகம், தமிழீழம் அலரி மாளிகை மாடி வீட்டு மகிந்த அங்கிள் வர்ணக் கிளி வளர்க்க குறுனி தூவி… ஏசி றூமில் நாய் வளர்க்க நாய்க்கு ஒரு நாலு பெயர் வைச்சு அழகு பார்த்த மைத்திரி அங்கிள்… கொடூர சுறா வளர்த்து குஞ்சு மீனை தீனியாக்கி அது துடிச்சுச் சாக துள்ளிக் குதித்து குரூரமாய் ரசித்து மகிழ்ந்த கோத்தா எனும் கொடூரன் குருவி சுடுவது போல் தமிழனை சுட்டு தள்ள கைக்கட்டி வேடிக்கை பார்த்த மைத்திரி அங்கிள்… செம்மணி…
-
- 0 replies
- 894 views
-
-
"மூன்று கவிதைகள் / 06" 'இன்று நமதுள்ளமே பொங்கு பெருவெள்ளமே' இன்று நமதுள்ளமே பொங்கு பெருவெள்ளமே நன்று உணர்ந்து காதல் தேடாயோ ? அன்று படித்த சங்கஇலக்கிய கவிதையே நின்று எனக்கு அறிவுரை தாராயோ ? கூடல் இல்லாத வாழ்வு தொலையட்டுமே ஆடல் பாடல் இணைந்து மலரட்டுமே! அன்பு கொண்ட மங்கை கண்டு துன்பம் போக்கும் அணைப்பு அடையாயோ ? இன்பம் கொட்டும் அழகு வியந்து உன்னுடன் அவளை இரண்டறக் கலக்காயோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................. வெள்ளிப்பூக்கள்' வெள்ளிப்பூக்கள் அந்தி வானில் ஒளிர கள்ளம் இல்லாக் காதலர் தழுவ கொள்ளை இன்பம் ஆறாய் பாய்ந்ததே! அல்லிப்பூ நிலா ஒளியில் மலர ஒல்லி இடையாள் அருகில் நெ…
-
- 0 replies
- 152 views
-