கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
அந்தாதிக் கவிதை / "உயிரோடு இணைந்தவளே!" "உயிரோடு இணைந்தவளே உடலோடு கலந்தவளே! கலந்த காதலால் இதயத்தில் மலர்ந்தவளே! மலர்ந்து மயக்கி இன்பம் கொட்டியவளே! கொட்டிய தேளிலும் கொடுமை கூடியவளே! கூடி மகிழ்ந்து பரவசம் தருபவளே! தருவதும் எடுப்பதும் உனது உரிமையே! உரிமை கொண்டு நெஞ்சில் உயர்ந்தவளே! உயர்ந்த எண்ணங்களால் சிந்தனையைத் தூண்டியவளே! தூண்டிய உணர்வுகள் எல்லையைத் தாண்டியும் தாண்டாமல் பிரியாமல் இணைந்தாளே உயிரோடு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.4k views
-
-
'காதல் சிறகினிலே' காதல் சிறகினிலே ஒரு வெடிப்பு மோதல் தந்து தூர விலகுது! சாதல் கண்களில் அருகில் தெரியுது கூதல் காற்றும் நெஞ்சை வருடுது! காற்றின் கீதம் எனக்குப் புரியவில்லை வேற்று மொழியாக இதயத்தைத் தாக்குது! கூற்றவன் என்னைக் கட்டி அணைத்து கற்ற அறிவையும் மெல்ல அறுக்கிறான்! பிடிக்கும் என்று முத்தத்தால் கூறியவளே நடிக்கும் உன்னை நம்பியது எனோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 1926 ['காதல் சிறகினிலே'] https://www.facebook.com/groups/978753388866632/posts/32650780024570556/?
-
- 0 replies
- 137 views
-
-
"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்" "தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் !" "வில் புருவமும் கயல் கண்களும் விரிந்த இதழும் சங்குக் கழுத்தும் விந்தை காட்டும் உடல் எழிலும் வியந்து நான் வரிகளில் எழுதுகிறேன் !" "மினுங்காத வைரத்தை மினுங்க வைக்க மிருதுவான கையை கோர்த்து பிடிக்க மிதலை பொழியும் அழகில் மயங்கிட மிகுந்த ஆசையுடன் உன்னை நாடுகிறேன் !" "உன்னழகை ரசிக்க வரம் கேட்டு உன்னுடலை அணைக்க தவம் இருந்து உன்சுகம் நாடி நான் வந்து உன் முணு…
-
- 0 replies
- 155 views
-
-
அன்பாக பேசி அருகோடு இருப்பவர் போல் நடிப்பவர் எல்லாம் தங்கள் தேவை முடிந்தவுடன் உன்னை விட்டு விலகிவிடுவார்கள் உண்மைகளை மறைப்பதற்காக பல பொய்களை கூட சொல்லுவார்கள் இருந்தபோதும் பகைமைகளை வளர்த்துக்கொள்வதில் பயன் ஏதும் இல்லை வலிகளையும் துன்பங்களையும் பட்ட காயங்களையும் நினைத்து கொண்டு இருந்தால் வாழ்க்கை நகராது உண்மைகளை ஒரு நாள் இவர்கள் அறியும் பொழுது தாங்கள் கொட்டிய குப்பைகளை நினைத்து வருத்தப்படுவார்கள் பார்க்க வேண்டிய சந்தர்பங்களில் ஒரு புன்னகையோடு நகர்ந்து விடுங்கள் .
-
- 0 replies
- 1k views
-
-
"மனதைத் திருடியவளே" "மனதைத் திருடியவளே என்னை மயக்கியவளே மன்றாடிக் கேட்கிறேன் திருப்பித் தந்துவிடு! மகிழ்வைத் தந்து விலகிப் போனவளே மஞ்சள் நிலாவில் தனிமையில் வாடுகிறேனே!!" "மஞ்சத்தில் உறங்கையில் கனவு விரியுது மகர தோரணம் பந்தலில் ஆடுது! மங்கல அரிசி காத்து கிடக்குது மணமகள் நீயோ அங்கு இல்லையே!!" "மழையும் புயலும் பழகி விட்டது மது வாசனையில் என்னை மறக்கிறேன்! மரணம் என்னை நெருங்க முன் மவுனம் களைத்து மடியைத் தாராயோ!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 183 views
-
-
"உயிர்களையும் நேசித்து நம்பியவர்களையும் நேசிப்போம்!" "உயிர்களையும் நேசித்து நம்பியவர்களையும் நேசிப்போம்! பயிர்களையும் வளர்த்து பட்டினியையும் ஒழிப்போம் துயரங்களையும் போக்கி எல்லோரையும் மகிழ்விப்போம் புயலும் மழையும் எம்மைத் தாக்கினாலும் அயலவர் அவலங்களை துடைத்து எறிவோம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 339 views
-
-
"என் உயிரும் உனதடி...." அன்ன நடையில் இதயத்தை அதிர்வித்து அருகில் நெருங்கி காமத்தை தெளித்தவளே! அம்புலி நிலவில் மடியில் சாய்ந்து அமுத மொழியால் மயக்கம் தந்தவளே!" "கள்ளம் அற்ற காதல் பொழிபவளே கன்னக் குழியில் வீழ்த்தியது எனோ? கட்டு உடலால் என்னைக் கட்டியவளே கடைக் கண்ணால் சாடை எதற்கோ?" "தேடி உன்னைக் கண்டு பிடித்தேன் தேய்வு இல்லா அழகு கொண்டவளே! தேன் ஒழுகும் புன்னகை பூத்தவளே தேவதையே என் உயிரும் உனதடி!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 565 views
-
-
குறள்மொழி இன்பம் / ★யாம்◆ வேண்டும்◆ கௌவை★ / குறள் 1150 "வம்பு பேசும் என் ஊரே வசனம் அறிந்து அளவாய் பேசு வண்டுகள் மொய்க்கும் மலர் நானல்ல வசவி ஆக என்னை நினைக்காதே!" "வட்டம் போட்டு குந்தி இருந்து வஞ்சம் இன்றி கதை பரப்பி வதுகை ஆக என்னை மாற்ற வரிந்து கட்டிய அலருக்கு நன்றி!" "வயல் வெளியில் என்னை சந்திக்க வனப்பு மிக்க என் காதலன் வருவான் என்னை துணை ஆக்க வருந்த வேண்டாம் வாழ்த்துங்கள் அப்பொழுது!" "வளமான வாழ்வு எமக்கு அம…
-
- 0 replies
- 906 views
-
-
"விழியற்ற தராசு" "விழியற்ற தராசு நீதி தராது அழிவுற்ற சமூகத்துக்கு விடை கொடுக்காது! வலியற்ற வாழ்க்கை உண்மை அறியாது நலிவுற்ற மக்கள் கவலை புரியாது!" "உறவற்ற குடும்பம் நிம்மதி அடையாது இரவற்ற உலகம் தூக்கம் கொள்ளாது! திறனற்ற செயல் வெற்றி சூட்டாது உரமற்ற பயிர் பலன் தராது!" "ஈரமற்ற உள்ளம் கருணை காட்டாது தரமற்ற செயல் நன்மை ஈட்டாது! நிறைவற்ற நட்பு அன்பைக் கொட்டாது சிறகற்ற பறவை காற்றில் பறக்காது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 792 views
-
-
காதல்.......ஆனந்த கண்ணீரில்...ஆரம்பித்து.......ஆறுதல் கண்ணீரில்.....முடிகிறது..........!!!முகில்களுக்கிடையே....காதல் விரிசல்.......வானத்தின் கண்ணீர்......மழை..........................!!!நான்வெங்காயம் இல்லை....என்றாலும் உன்னை.....பார்த்தவுடன் கண்ணீர்....வருகிறது................!!!&கவிப்புயல் இனியவன்இறந்தும் துடிக்கும் இதயம்காதல் கஸல் (பதிவு 01)
-
- 0 replies
- 1.2k views
-
-
தோற்றுப் போனவர்களின் பாடல் - வ.ஐ.ச.ஜெயபாலன் எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல தோற்றுப் போன எங்களுக்கும் பாடல்கள் உள்ளன. உரு மறைந்த போராளிகள் போன்ற எங்கள் பாடல்களை வென்றவர்கள் ஒப்பாரி என்கிறார்களாம். காவிய பிரதிக்கிணைகள் பல புலம்பலில் இருந்தே ஆரம்பிக்கிறது. அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும்…
-
- 0 replies
- 2.9k views
-
-
TAMIL ORIGINALபாடா அஞ்சலிவ.ஐ.ச.ஜெயபாலன்..உதிர்கிற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? . சுனாமி எச்சரிக்கை கேட்டுமலைக் காடுகளால் இறங்கிகடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் கவிஞன் நான்.பிணக்காடான இந்த மணல் வெளியில் எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட..வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோஒரு முதுகாடாய் உதிர்க்கிறது. எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூடஎந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத... .இந்த உலகிலும் பெரிய இடுகாடெது?பல்லாயிரம் சாம்ராட்சியங்களைப் புதைத்துபுதிய கொடிகள் நாட்டப்படுகிற பெரிய அடக்கத் தலம் அது.நடுகற்களின் கீழ்அடிபட்ட பாம்புகளாய் கிழிந்த எங்களூர்ச் சிறுமிகளின் இறுதிச் சாபங்கள் அலைகிறதே.எந்த சாபத்துக்கு நான் கல்வெட்டுப் பாடுவேன்..…
-
- 0 replies
- 568 views
-
-
"காலம் மாறினால் காதல் மாறுமா?" "காலம் மாறினால் காதல் மாறுமா? கோலம் கலைந்தால் அன்பு போகுமா? ஓலம் எழுப்பினால் பிணம் எழும்புமா? நிலம் வறண்டால் பயிர் துளிர்க்குமா?" "கானல் நீராய் காதல் இருக்காது காமுறல் உடன் வாழ்வும் இருக்கும் காமம் மட்டும் மனதில் ஏற்றிய காதலர் மட்டும் பொய் ஆகலாம்?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கைக்கு சுதந்திரம் எனியாவது கிடைக்கட்டும்! *************************************************** கத்தும் கடல் நாற்திசையும் கரையமைத்து வேலிதந்து முத்தும்,மாணிக்கமும்,இரத்தினமும் மண்ணில் உள்ளடக்கி முல்லையும்,மருதமும்,நெய்தலும்,குறிஞ்சி பாலையென இயற்கையவள் எமக்களித்த எங்கள் தேசத்தை போத்துக்கேயன்,ஒல்லாந்தன்,பிரிட்டிஸ் ஆண்டுவிட்டு போகையிலே உம்மிடத்தில் எம் பொக்கிஷத்தை மலைகுடைந்து பாதை தந்து வருமான பயிர் நட்டு வீதி பல அமைத்து வீடுகட்டி கோட்டை தந்தான். நீங்களோ… முட்செடியும்,புதரும்,புற்றும்,கஞ்சாவும்,களவும்,போதையும் கொலையும்,கொள்ளையும்,இனத் துவேஷமும்-விஷமும் சுயநலமும்,மதமும்,மதச் சண்டையும்,இனக்…
-
- 0 replies
- 831 views
-
-
"மாற்றம் ஒன்றே மாறாதது" "காதல் ஏற்றிய விழியும் குருடாகும் காமம் வீசிய எழிலும் முதுமையாகும் காவலர்கள் கூட அநீதி இழைப்பர் காரணம் எதுவாகினும் மாற்றம் மாறாதது!" "உற்சாகம் தரும் அமுதமும் விடமாகும் அற்புதம் நிகழ்த்திய உடலும் கருகும் குற்றம் புரிந்தவனும் நீதிபதி ஆவான் மாற்றம் ஒன்றே மாறாதது என்றும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [விடம் - நஞ்சு]
-
- 0 replies
- 493 views
-
-
"உயிரே!" "அள்ளி அரவணைத்து அன்பு பொலிந்து அனு தினமும் அடைக்கலம் அளித்து அக்கறையாய் பேசி அமுதம் ஊட்டி அமைதி தந்து அறிவூட்டிய உயிரே !" "ஆதரவு கொடுத்து ஆர்வம் ஏற்படுத்தி ஆலோசனை தந்து ஆணவம் அகற்றி ஆரத் தழுவி ஆசை தூண்டி ஆறுதல் படுத்தி ஆணாக்கிய உயிரே !" "இடுப்பு வளைவு இன்பம் சேர்க்க இதயம் மகிழ்ந்து இதழை பதிக்க இளமை பருவம் இழுத்து அணைக்க இரக்கம் கொண்ட இனிய உயிரே!" "ஈரமான நெஞ்சம் ஈர்த்து பிணைக்க ஈவிரக்கத் துடன் ஈருடல் ஓருயிராக …
-
- 0 replies
- 345 views
-
-
"காதல் என்னும் நினைவினிலே" "காதல் என்னும் நினைவினிலே நான் சாதல் தேடி என்னை வருத்துகிறேனே முதல் அன்பு உணர்வுமட்டுமே என்றாலுமே மோதல் வேண்டாம் என்னிடம் வாராயோ!" "காத தூரம் விலகிப் போனாலும் காமம் துறந்து தனிமை தேடினாலும் காந்தை உன்னை மனதில் பதித்து காலம் கடந்தும் காத்து இருப்பேனே!" "காதலைத் தீண்டாமல் வாழ்வும் இல்லை காரிகையை எண்ணாமல் மனிதனும் இல்லையே காதணி ஆடும் அன்னநடை சிங்காரியே காலம் தாழ்த்தாமல் அருகில் அமராயோ!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 417 views
-
-
-
- 0 replies
- 607 views
-
-
"நீயில்லா நானும் நீலமில்லா வானம்" "நீயில்லா நானும் நீலமில்லா வானம் நீரில்லா ஆறு மீனில்லா ஓடை வேரில்லா மரம் பட்டு விழும் ஊரில்லா இடம் காடாய் மாறுமே!" "காதல் கொண்ட என் பெண்ணே மோதல் தவிர்த்து அருகில் வந்திடு சாதல் கூட இன்பம் தருமே கூதல் காய மடியைத் தந்தால்!" "ஊடல் ஒன்றும் புதுமை இல்லை கூடல் உன்னுடன் வரும் என்றால் தேடல் கொண்டு மனம் வாடுது விடலைப் பருவம் உன்னை நாடுது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 263 views
-
-
"பேராசை" "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும். ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன். நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நி…
-
- 0 replies
- 720 views
-
-
குறளோடு கவிபாடு / "குறள் 1175" "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கண்களும் பேசின காதலையும் தந்தன வண்ண உடலின் கவர்ச்சி ஈர்த்தன ஆண்மை கண்டு அவளும் நெருங்கினாள் கண்ட கோலம் காமம் கொடுத்தன!" "பெண்ணின் அழகில் மயங்கி நின்றவனோ எண்ணம் எல்லாம் அவளே என்றவனோ கண்ணீர் தந்து உறவு மறந்து அண்டம் எங்கோ பிரிந்து போனானே கண்ணனை நினைத்து துயிலும் மறந்தேனே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.1k views
-
-
"வண்ணங் கொண்ட வெண்ணிலவே" "வண்ணங் கொண்ட வெண்ணிலவே வாராயோ கண்கள் இரண்டும் காணத் துடிக்குதே! மண்ணின் வாசனை உடையில் தெரியுதே பண்பின் இருப்பிடமே வாழ்த்தி வணங்குகிறேன்!" "அன்ன நடையில் மனத்தைக் கவர்ந்தவளே சின்ன இடையில் கலக்கம் தந்தவளே! என்னை மறந்து உலகம் துறந்து உன்னை அடைய விரும்பியது எனோ?" "ஏராளம் பூவையரை நான் முகர்ந்தாலும் ஏமாற்றம் இல்லா நடத்தை கொண்டவளே! ஏற்றவள் எனக்கு நீயென நான் ஏதேதோ எண்ணி ஏங்குவது ஏன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 377 views
-
-
"படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" / "The corpse that oppose the 'Genocide' is asking" "வாருங்கள், வந்து கை கொடுங்கள்- இமைகள் மூடி பல நாளாச்சு மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்- வரிசையாய் வருங்கள் பல சடலங்கள் தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்- கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்- நங்கை இவள் உண்மை உரைத்ததால் முலையை சீவினான் கொடூர படையோன்- வஞ்சி இவள் காமம் சுரக்காததால் கண்களுக்குள் புதையாத இவர்களை தருகிறேன்- அப்பாவிகளை ஒன்று ஒன்றாய் புதைக்க வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்- இடையில்…
-
- 0 replies
- 515 views
-
-
-
- 0 replies
- 2k views
-
-
"திருக்குறள்" [அந்தாதிக் கவிதை] & "ஊடல்" [அந்தாதிக் கவிதை] "திருக்குறள் சொல்லாதது ஒன்றும் இல்லை இல்லை என்போருக்குப் 'பொருள்' கூறி கூறிய தொடர்ச்சியாக 'அறம்' உரைத்து உரைக்கும் தொனியில் 'இன்பம்' சேர்த்து சேர்த்து கோர்த்து 'ஈரடி'யாய் சிறப்பித்து சிறப்பித்து தமிழுக்குத் தந்தான் திருக்குறள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................................... "ஊடல்" [அந்தாதிக் கவிதை] "ஊடல் இருந்தால் வரும் கூடல் கூடல் வந்தால் சுரக்கும் இன்பம் இன்பம் எல்லை மீறினால் துன்பம் துன்பம் உனக்கு புகட்டுவது அறிவு!" "அறிவு கொண்டு சிறப்பித்தல்…
-
- 0 replies
- 385 views
-