Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. “செங்காந்தள்” [அந்தாதிக் கவிதை] "செங்காந்தள் முகிழ்விடும் நம் தேசமே தேசம் எமக்கு ஈன்ற மாவீரர்களே மாவீரர்களே எங்கள் நிலத்தின் தெய்வமே தெய்வமே உங்களுக்கு தீபம் ஏற்றுகிறோம் ஏற்றிய சுடரில் உங்களைக் காண்கிறோம்! காண்கிறோம் நேர் உரிமைப் போராட்டத்தை போராட்டம் காட்டிய உங்கள் வீரத்தை வீரத்தில் நீங்கள் உரைத்த நீதியை நீதி நிலைநாட்டிடச் செய்த தியாகத்தை தியாகம் விதைத்த பூமியே செங்காந்தள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  2. ஜூன் 1, 2024 இன்று உலக பெற்றோர் தினம் போரில் வாழ்ந்த குழந்தைகள் போல் போருள் வாழ்ந்த பெற்றோரும் பரிதாபத்துக்குரியவர்களே குண்டுகள் மழை போலப் பொழியத் தொடங்கின இடியோசை மரண பயத்தைத் தந்தது குழந்தைகளின் பெறுமதியான நாட்கள் பதுங்குகுழிகளில் கழிந்தன இரைதேடும் பருந்திடம் இருந்து குஞ்சுகளைக் காப்பாற்ற பறவைகள் போராடின ஒருநாள் பெற்ற…

    • 0 replies
    • 290 views
  3. "நிலவுக்குள் நீயடி..!" "நிலவுக்குள் நீயடி நினைவில் நிறைந்தவளே நிம்மதி தேடி உன்னைத் தேடுகிறேன் முழுமதியே வருவாயோ அருகில்?" "கண்ணுக்குள் புதைந்த சித்திரமே மண்ணில் வாழும் இவனுக்கு பண்பு சொல்லாயோ காதல் பொழியாயோ?" "திங்கள் முகத்தில் திலகம் பதிக்க வரவா நான் தித்திக்கும் இளமை காதல் தேடுது கண்ணே மார்பைத் தழுவவா?" "நெஞ்சம் மகிழுதடி மஞ்சம் அழைக்குதடி வஞ்சகம் வேண்டாம் பெண்ணே கொஞ்சம் கருணை என்னிடம் காட்டினால் என்னடி?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  4. "வலைத் தளங்களில் மூழ்கும் சிறுவர்களே!" "வலைத் தளங்களில் மூழ்கும் சிறுவர்களே கலையும் பண்பாடும் கொஞ்சம் அறியுங்கள்! இலைமறை காய்போல் அது உங்களை விலையும் பேசும் மோசமும் செய்யுமே!" "மலையாக உடல் அசையா குழந்தைகளே! மாலை உடற் பயிற்சியும் அற்றுப்போக காலை படிப்பிலும் கவனம் சிதற நிலை தடுமாறி வாழ்வு கெடுமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  5. 'உன் நினைவுகளில் என்றும் நாம்' "எங்கள் வீட்டின் குலமகளாய் இணைந்து எல்லார் நெஞ்சையும் சிரிப்பால் இணைத்து எடுப்பாய் குடும்பத்தில் இரண்டற கலந்து எம்மோடு ஒருவளாக வாழ்ந்த திருமகளே!" "மனதை கவர்ந்து அன்புமழையில் நனைத்து மணக்கோலம் கொண்டு மணமகளாய் வந்து மகரிகை தொங்க வலதுகால் வைத்த மகிமை பொருந்திய எங்கள் கலைமகளே!!" "வந்தாரை மகிழ்வித்து மனமார வாழ்த்தி வஞ்சனை இன்றி வெளிப்பட கதைத்து வயிறு நிறைய உபசாரம் செய்து வணக்கம் கூறி வழியனுப்பும் மலைமகளே!" "கல்விஞானம் அத்தனையும் ஒருங்கே கொண்டு கண்ணாக குடும்பத்தை அணைத்து வாழ்ந்து கரு…

  6. "வாழ்ந்து பார்" வாழ்ந்து பார் நீங்க யாழில் தாழ்ந்து போன கதை புரியும்! ஆழ்ந்த சிந்தனை கொண்ட இவன் கீழ் மட்டம் தொட்டது தெரியும்! "வீழ்ந்த வரலாற்றை பாடமாகக் கற்று சூழ்ந்த வஞ்சகத்தை எடுத்து எறிந்து காழ்ப்பு களைந்து உண்மை அறிந்து மூழ்கிய ஒற்றுமையை மீட்டு எடுத்திடு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  7. "குறள் 1163" "இளமை பருவம் அழகு கூட்ட இச்சை கொண்டு மனது ஏங்க இளைஞன் ஒருவன் நட்பு வேண்ட இணக்கம் சொல்லி காதல் வளர்த்தேன்!" "இதலை அவன் கை வருட இயைந்து நானும் விட்டுக் கொடுக்க இன்பம் தூய்த்து இருவரும் மகிழ இதழ் கொஞ்சி மனையாள் என்றான்!" "இதயம் இரண்டும் ஒன்று சேர இமைகள் நான்கும் மூடாமல் இருக்க இரத்த உறவுகள் சம்மதம் தர இல்லத்து முன்றலில் தாலி கட்டினான்!" "இடம் தேடி பொருள் சேர்க்க இரவு பகலாய் தனிய விட்டு இரக்கம் அற்ற காமம் சூழ இரதம் ஏறி பிரிந்து விட்டான்!" "இமயவன் ஆலய காவடி போல இச்சை வெட்கம் இர…

  8. “நினைவு வணக்கமோ?" [படக்கவிதை] "கார்த்திகை தீபம் ஏற்றும் காந்தையே காலத்தின் கட்டாயம் இது என்றாயோ? காரணம் கேட்டு நீதிக்குப் போராடிய காணா உயிரின் நினைவு வணக்கமோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] காணா - காணாமல் போன

  9. "மூன்று கவிதைகள் / 14" 'புகைப்படக் கவிதை' தோற்றத்தில் பெரியவனே - தும்பிக்கை கொண்டவனே ஆற்றலில் பலமானவனே - நம்பிக்கைத் தோழனே மதம் பிடித்து - சிலவேளை அலைந்தாலும் மதம் [சமயம்] உன்னிடம் - ஒருவேளையும் இல்லையே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ------------------------------------------- 'மலைமுடியில் பனியழகு மனங்கவரும் இயற்கையழகு' மலைமுடியில் பனியழகு - மனங்கவரும் இயற்கையழகு மகளிர் வடிவத்தையும் - மகிமையிழக்கச் செய்து மடவரலின் அன்னநடையையும் - மறைத்து விடுமே! கொடுமுடியில் மஞ்சுபெய்ய - கொடிகளில் வெண்மைபடர கொடிச்சியின் எழிலையும் - கொன்று மங்கலாக்கி கொற்றவையின் கவினையும் - கொடுமையாய் மாற்றுமே! [கந்தையா தி…

  10. “செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!” செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே! பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே! விலங்குக்கும் சில பண்பாடு உண்டே விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே விளக்கம் இல்லாத மதபோதனை எனோ களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை! வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்க்கோ! [கந்தையா தில்லைவி…

  11. "களிப்பும் கடலானதே துளிப்பா காதலிலே" "களிப்பும் கடலானதே துளிப்பா காதலிலே ஒளிரும் அன்பிலே துள்ளுதே கவர்ச்சி எளிய நடையும் அன்னநடை ஆகுமே துளி துளியாய் கொட்டும் மழையிலே!" "கள்ளி இவளின் இடை அழகில் அள்ளி வீசுது கொள்ளை இன்பம் உள்ளம் நாடுது கட்டி அணைக்க வெள்ளம் போல பாசம் பொங்குதே!" "விழிகள் இரண்டும் எதோ பேசுது ஆழி முத்துக்களும் ஈர்ப்பு இழக்குது தோழியாக்க மனது எனோ துடிக்குது அழியாத உறவு இது ஒன்றே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  12. "வசந்தகால தொடக்கத்தில் எழுதிய வரிகள்" / "Lines Written in Early Spring" "தோப்பின் நிழலில் சாய்ந்து இருக்கையில் தோன்றின மனதில் ஆயிரம் எண்ணங்கள் தோரணமாய் தொங்கிய இன்ப சிந்தனையில் தோய்ந்து சில சோகத்தையும் தந்தன!" "இயற்கை மனித குலத்தின் ஆன்மாவுடன் இறுக்கமாக தொடர்பை பிணைக்கும் பொழுது இதயம்வருந்தி என்னை சிந்திக்க வைத்தது இவனேன் மனிதகுலத்துடன் பிணையவில்லை என்று?" "பசுமை வனப்பகுதியில் காட்டுச்செடிக் கூட்டத்தில் பஞ்சுச்செடி அழகிய மாலையை சூட்டிட பல்லாயிரம் மலரும் தாம்சுவாசிக்கும் காற்றை பரவசத்துடன் அனுபவித்து இன்பம் கண்டன!" "என்னைச…

  13. (யாயும் ஞாயும் யாராகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?யானும் நீயும் எவ்வழி அறிதும்?- சங்கப் பாடல்) * கானல் வரி. - ஜெயபாலன் . கருகும் முது மாலை. பூம்புகாரின் தொல்கரைகள் சிவக்க நுரைக்கும் திராட்சை மதுவாய் நெழிகிறது எழுவான் கடல். இது படுவான் கரையென்றால் மாலை செம்பொன்னாய்ச் சொரியுமே. எனினும் காதலில் சிறகுகள் உரச கூடு ஏகும் பறவைகளின் பாட்டில் கானல் வரி தொனிக்கிறது. . இந்த மதுவார்க்கும் மாலையில் தனித்த முது கவிஞன். நினைவு இடறி நான்கு தசாப்தங்கள் காலச்சரிவில் உருள்கின்றேன். எங்கோ ஒரு யப்பானியப் பாடல் தாபம் வளர்கிறது. . அது ஈழத்தின்கொடும் பகையை எதிர்த்து ஒவ்வொருவராய் நாங்கள் ப…

    • 0 replies
    • 273 views
  14. "மூன்று கவிதைகள் / 07" 'வண்டியில மாமன் பொண்ணு' வண்டியில மாமன் பொண்ணு வாரார் கெறங்குறேன்டி ஒன்னழகில் நான் இன்று? பட்டுச்சரிகை என் கண்ணைக் குத்துது பருவ எழில் உடலை வாட்டுது பக்கத்தில் வந்தால் குறைந்தா போகும் ? கவலகொண்ட நெஞ்சம் கொஞ்சம் இங்கே கண்மணியே எந்தனுக்கு ஆறுதல் தாராயோ? கால்கள் என்ன இளவாழைத் தண்டுகளா? காத்திருக்க முடியலையே இறங்கி வாராயோ? காலம் போகிறதே கழுத்திலே தாலியேறாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................. 'விளக்கேற்றி வைக்கிறேன் விடியவிடிய எரியட்டும்' விளக்கேற்றி வைக்கிறேன் விடியவிடிய எரியட்டும் களங்கமற்ற காதல் தடையின்றி மலரட்டும் இளநெஞ்சம் இரண்டும் மெதுவாகச் சேரட்டும் வளர்பிறையாக…

  15. "மூன்று கவிதைகள் / 15" 'நீல நயனங்களில் நீண்டதொரு கனவு' நீல நயனங்களில் நீண்டதொரு கனவு ஓலம் இடுகிறது மனதை வருத்துகிறது! காலம் கனிந்து கைகூடிய காதல் கோலம் மாறி கூத்து அடிக்கிறது உலக வரையறை காற்றில் பறக்கிறது! கண்ணோடு கண் கலந்த அன்பு மண்ணோடு மண்ணாய் போனது எனோ? விண்ணில் தோன்றிய கதிரவன் மாதிரி வண்ண ஒளி பரப்பிய அவன் பண்பு துறந்து ஏமாற்றியது எதற்கோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................ 'பாரதி' "அடிமை ஒழிக்கும் குரலோன் பாரதி விடிவை நோக்கி வரிகள் முழங்கும்! இடித்து உரைப்பான் காரணம் சொல்வான் அடித்துப் பொய்யை தூர விரட்டுவான்!!" "தமிழின் அரவணைப்பில் வரிகள் மலரும் பூமி எங்கும் பரந்து விரியும…

  16. "சந்தேகம்" "சந்தேகக் கோடு சந்தோஷக் கேடு சரித்திரம் சொல்லும் இவைகளின் கதைகளை சகோதரர்களை பிரித்தது சில வரலாறுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியது சில நிகழ்வுகள்" "எதிர்காலம் குறித்த சில சந்தேகங்கள் எல்லா உறவுகளில் எழும் ஐயப்பாடுகள் எதிர்பாராமல் விஸ்வரூபம் எடுக்கும் ஒருநாள் எல்லாம் மனநோயாக மனிதனை மாற்றிவிடும்" "சிலருக்கு ஏற்பட்ட சில பாதிப்புக்கள் சில தனி நபருடைய குணாதிசயங்கள் சிரசில் எடுத்த முன் எச்சரிக்கைகளை சிலவேளை சந்தேகமென அழைக்கச் சொல்லும்" "தவறாக சம்பவத்தை புரிந்து கொள்ளுதல் தகவல் சரிபார்க்காமல் சுயவிளக்கம் கொடுத்தல் தருண…

  17. 🌾 “நவம்பர் 27 — நினைவுத் தீபங்கள்” / 🌾 “November 27 — Lamps of Memory” / In English & Tamil அமைதியான வடக்கின் கரைகளிலும் காற்றுவீசும் கிழக்கின் சமவெளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தேதி வருகிறது அது புனிதமானது, நிலையானது அது மையால் எழுதப்படாத நாள் அது நவம்பர் இருபத்தியேழு! மறைந்து போக மறுத்த மக்களின் இரத்தம் கண்ணீராலும் சுவாசத்தாலும் எழுதப்பட்ட நாள்! பல்கலைக்கழகங்களைக் கனவு கண்ட மகன்கள் வகுப்பறைகளில் கவிதைகளைப் பேசும் மகள்கள் கதிரவனுடன் உதித்த விவசாயிகள் தாலாட்டுப் பாடல்கள் பாடும் தாய்மார்கள் பனைமர நிழலின் வயல்களில் சாய்ந்த தந்தைகள் வாழ, பேச, வாக்களிக்க, சமமான மனிதர்களாக மதிக்கப்பட சாதாரண உரிமைகளைக் கேட்கும் சாதாரண மனிதர்களே இவர்கள்! அவர்களின் அமைதியான நம்…

  18. "நேசம்வச்ச நெஞ்சில நெருப்பா ஓநெனப்பு... " "நேசம்வச்ச நெஞ்சில நெருப்பா ஓநெனப்பு வாசம்தாரும் மல்லிகையும் வாடிப்போகுது தேசம்சுற்றும் மாமா நெருங்கிநிண்ணு பேசாயோ பாசம்ஒன்றும் உன் இதயத்தில் இல்லையோ மோசம்இல்லா காதலை வீறாப்பின்றி சொல்லாயோ?" 'கஞ்சி குடிக்கையிலே நினைப்பெல்லாம் நீயய்யா கொஞ்சிக் குலாவ மனதெல்லாம் ஏங்குதய்யா வஞ்சகம் வேண்டாம் இறுமாப்பை நிறுத்தய்யா செஞ்சதையும் சென்சிபுட்டு விலகியது ஏனய்யா மஞ்சள் புடவையில் மணிக்கணக்காய் காத்திருக்கேனே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  19. "மூன்று கவிதைகள் / 04" 'யாரடி வந்தார் என்னடி சொன்னார் ?' யாரடி வந்தார் என்னடி சொன்னார் அரசடி நிழலில் பேசியது என்னவோ? பாரடி என்னை தனிமரமாய் தவிக்கிறேனே கூறடி பதிலை கூச்சத்தைவிட்டு எனக்கு? ஆறடி நிலமே சொந்தமாகும் உலகிலே ஏனடி உனக்கு இத்தனை ஆசைகள்? தேரடி வீதியில் யாருக்கு காத்திருக்கிறாய் சேரடி சொத்தை காதலை விற்றா? பூங்கொடி என்று பெயர்வைத்தது எனோ அங்காடி நாய்போல் அலைவது எனோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ................................................................ 'விதியின் விளையாட்டு' விதியின் விளையாட்டு உறவைப் பிரிக்குது மதியை இழந்து ஏதேதோ பேசுது ! நதியின் ஓட்டத்தில் அகப்பட்ட துரும்பாய் மோதிமோதி நானும் களைத்து விட்டேன் ! ஊடல் இதுவென முதல…

  20. வெட்கமற்றவையும் வெட்கமற்றவர்களும் ------------------------------------------------------------------ தேசங்கள் வெட்கம் அற்றவை மெலிந்த தேசங்களை கொளுத்தி குளிர் காய்ந்து சூறையாடும் எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவை ஏழைகளிடமும் ஏலாதவர்களிடமும் அடித்துப் பிடுங்கும் சக மனிதர்கள் போல அடித்து பிடுங்கி அழித்துக் கொண்டே தர்மம் போதிக்கும் தேசங்கள் வெட்கம் அற்றவை போலிச் சாமியார்கள் போல கலப்பட வியாபாரிகள் போல வெட்கம் அற்ற ஏமாற்றுக்கார தேசங்கள் நியாயவான் மனிதாபிமானி முகமூடிகளுடன் வந்து வந்த பின் முகமூடியை கழட்டி எறிந்து விட்டு குதறி குற்றுயிராக சுடுகாடாக விட்டுச் செல்லும் எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவை அயலவரை நேசிக்கின்றோம் என்று கொண்டே பயமுறுத்தும் ஆக்கிரமிக்கும் வெட்கமற்ற பெரு…

  21. "நேரிய பாதையில்" "நேரிய பாதையில் மனிதா நட நேர்மை கொண்ட தீர்மானம் எடு! நேசம் உள்ள நண்பர்களை அணைத்து நேரார் தரும் தொல்லைகளை அகற்று! ஆர்வம் வேண்டும் ஆராவாரம் வேண்டாம் ஆசை வைத்து செயலில் ஈடுபாடு! இன்பம் துன்பம் யாரும் தருவதில்லை இருப்பதை அறிந்து நடையைக் கட்டு! கொள்கை ஒன்றைத் தரமாக வகுத்து கொடுத்து எடுத்து சமாதானம் காணு! தெரிந்ததும் தெரியாததும் அறிந்து உணர்ந்தால் தெளிவான முடிவு தருமே வெற்றி!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  22. டிட்வா!துயர். **************** மண் சரிவு இது மற்றவர்களுக்கு ஒரு செய்தி. நாளை விடிந்தால் மகிழ்வான.. எத்தனை எண்ணங்கள் எத்தனை கனவுகள்.. எத்தனை குழந்தைகளின் மழலைப் பேச்சுக்கள் வேலை, பாடசாலை. திருமணங்கள்.காதல். கொ̀ண்டாட்டங்கள். அத்தனையும் ஒரு நொடியில் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்டு விட்டதே! இறைவா! அப்பா,அம்மா,அண்ணன்,தம்பி அக்கா,தங்கை நண்பர்களென வெளியில் நின்று தேடும் உறவுகளுக்குத் தான் தெரியும் மூடிய மலையைவிட பெரியது. இந்த இழப்புகளின் வலியென்பது. மண்சரிவு இது மற்றவர்களுக்கு ஒரு செய்தி. துயருடன் -பசுவூர்க்கோபி.

  23. “சிவப்புத் தீப நாளில்” / “On This Day of Red Flame” (நவம்பர் 27, 2025) “சிவப்புத் தீப நாளில்” (நவம்பர் 27, 2025) சிவப்புத் தீப நாளில் கல்லில் செதுக்காத பெயர்களையும் காற்று கிசுகிசுத்து செல்கிறது! சிதறிய தேசத்தின் நினைவுகளை நடுங்கும் எம் இதயங்களில் மீட்டுப் பார்க்கும் நாளிது! தோட்டாக்களுக்கு இடையில் புத்தகங்கள் ஏந்தி விடியலுக்குப் பதிலாக சாம்பல் ஆகிய குழந்தைகளை நாம் நினைவில் கொள்கிறோம்! கண்ணீரால் உலகையே இணைத்த தாய்மார்களின் தாலாட்டுப் பாடல்கள் புலம்பல்களாக மாறின வரலாற்றை நாம் நினைவில் கொள்கிறோம்! அநீதியின் புயல்களுக்கு எதிராக எழுந்து பனைமரம் போன்று உறுதியாக நின்ற தந்தையரை நாம் நினைவில் கொள்கிறோம்! வகுப்பறைகள் வயல்களில் எதிர்காலக் கனவுகண்டு சோதனைச்சாவடிகள…

  24. 'ஊன்றுகோல்' காத தூரத்தையும் நொடியில் கடந்து காற்றைக் கிழித்து ஓடிய கால்கள் காடு மேடு அளந்த பாதம் காலக் கொடுமையால் துணை தேடுது! பூண் சூட்டிய நுனியைப் பிடித்து கண்ணின் மங்கிய ஒளியில் பார்த்து மண்ணைத் தடவி மெல்ல நடக்கிறேன் வண்ணக் கொடியாளாக இன்று ஊன்றுகோல்!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 1933 ['ஊன்றுகோல்'] https://www.facebook.com/groups/978753388866632/posts/32731437279838163/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.