Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் Last updated: April 9, 2025 2:17 pm Published April 9, 2025 9.69 சதவீதம் வளர்ச்சி விகிதம்இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் சென்னை, ஏப். 9 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டங்களால் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது 9.69 சதவீதம் வளர்ச்சி விகிதம் 2024-2025-ஆம் ஆண்டில் தமிழ் நாடு 9.69 சதவீதம் உண்மை வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த மிக உய…

      • Like
      • Downvote
      • Thanks
      • Haha
    • 78 replies
    • 4k views
  2. Published By: DIGITAL DESK 2 17 MAY, 2025 | 10:58 AM வீதி விபத்தில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில் நான்கு நபர்கள் பயன் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, உறவினர் ஒருவருடன் கடந்த புதன்கிழமை (14) மோட்டார் சைக்கிளில் சென்றபோது, தனியார் பஸ் ஒன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. அருப்புக்கோட்டை அரசு வைத்தியசாலையிலும், பின்னர் வேலம்மாள் மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன், வெள்ளிக்கிழமை (16) மூளைச்சாவு அடைந்ததாக வைத்தியர்கள் உறுதி செய்தனர். இந்நிலையில், சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்தனர். அதற்காக, சிறுவனின் …

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 13 மே 2025, 02:46 GMT புதுப்பிக்கப்பட்டது 13 மே 2025, 02:50 GMT தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் தென் மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. சமீபத்திய SRS -Sample Registration Survey 2021 தரவுகள் படி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.5, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.6 ஆக உள்ளது. மக்கள் தொகை நிலையாக பராமரிக்க தேவையான 2.1 என்ற குழந்தைப் பிறப்பு விகிதத்தை விட இது குறைவாகும். இந்தியாவின் தேசிய குழந்தைப் பிறப்பு விகிதம் 2.0 ஆக உள்ள நிலையில், பிஹார் மாநிலத்தில் உச்சபட்சமாக இந்த விகிதம் 3.0 ஆக உள்ளது. அதற்கு அடுத்த இடத்த…

  4. பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் "மதுரையில் கிரானைட் வெட்டி எடுப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரிட்டாபட்டி போன்ற பகுதிகளைக் காப்பாற்றியிருக்கிறேன். இதற்கு அடிப்படையாக நான் சமர்ப்பித்த அறிக்கை உள்ளதால், என் மீது அவர்களுக்கு கோபம் இருக்கலாம்" என்று கூறுகிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய நபர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது தொடர்பாக சகாயம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் மறுத்த…

  5. பட மூலாதாரம்,VIGNESH கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 5 மே 2025 உரிய அறிவிப்புப் பலகை மற்றும் தடுப்புகள் வைக்காததால், தாராபுரம் அருகே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த 12 அடி குழியில், இரு சக்கர வாகனத்துடன் விழுந்த கணவன், மனைவி உயிரிழந்தனர். அவர்களின் 13 வயது மகள் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் மூவர் சென்றதும் குறிப்பிடத்தக்கது. இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிப்பது சட்ட விரோதமானதாகும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ப அதற்கு விதிக்கப்படும் அபராதம் மாறுபடுகிறது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் உதவிப் பொறியாளர் க…

  6. 24 இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்! இந்தியாவின் கிழக்கு கடற்பகுதியில் வைத்து, 24 இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து நாகப்பட்டினம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இலங்கையை சேர்ந்த சிலர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய மீனவர்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லைப்பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தாக்குதலில் காயமடைந்த மீனவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்த 17 மீனவர்கள் நாகை ஒரத்தூர் அரச மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் படுகாயமடைந்த மீனவர்கள் தாக்குதல் ந…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மிக இளவயதுள்ள சிறுமிகள் அதிகமான பாதிப்புக்கு உள்ளாவது இந்த வழக்குகளிலிருந்து தெரியவந்துள்ளது (சித்தரிப்புப்படம்) கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் 2 மே 2025 கோவையைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர், ஒன்றரை மாத கர்ப்பமாகியுள்ளார். இதுதொடர்பாக அந்த சிறுமியின் உறவுக்கார இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற பாதிப்புக்குள்ளாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இத்தகைய சிறுமிகளுக்கு, உடல், உளவியல் ரீதியான சிகிச்சையை தொடர்ந்து வழங்க வேண்டியது அவசியமென்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். கோவையைச் சேர்ந்த 12 வயது சிறுமி, தான் வசிக்கும் …

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் மே 3, சனிக்கிழமை அன்று தமிழ் நாளேடுகள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம். கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் நாளை (மே 4) தொடங்குகிறது என்று இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. "தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு - மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (மே 3) ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 8-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மே 6-ம் தேதி…

  9. தமிழகத்தில் இலங்கையர் உள்ளிட்ட வெளிநாட்டவர்களை வெளியேற்ற நடவடிக்கை! தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அவ்வாறு வெளியேறாதவர்களுக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், பாகிஸ்தானியர்கள் மட்டுமல்லாமல் நேப்பாளம், இலங்கை, பங்ளாதேஷ் உட்பட, சட்டவிரோதமாக தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டவர்களையும் வெளியேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வெளி நாட்டவர்களை வெ…

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் பல காரணங்களால் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரத் தாமதமாகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 1 மே 2025, 06:49 GMT அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் மாணவர்கள், விரைவில் தங்களுக்குப் பணி வாய்ப்புகளை வழங்க வேண்டுமெனக் கோருகிறார்கள். ஆனால், பணிநியமனம் செய்யாததற்கு நீதிமன்ற வழக்குகளை அரசு காரணம் காட்டுகிறது. திருப்பத்தூரைச் சேர்ந்த மு. கோகுல்நாத் ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டமுடையவர். பர்வதமலை அடிவாரத்தில் இருந்த ஆதி சிவலிங்காச்சாரியார் குரு சுவாமி பீடத்தில் மந்திரங்களைக் கற்றுக் கொண்டிருந்தார்.…

  11. பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவார்: ரஜினிகாந்த் நம்பிக்கை! ஜம்மு-காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவதில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியதுடன், மோடியின் தலைமையின் மீதும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மும்பையில் இன்று (01) ஆரம்பமாகியுள்ள வேவ்ஸ் எனப்படும் 2025 உலக ஆடியோ விஷூவல் பொழுது போக்கு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது 74 வயதான நடிகர் ரஜினிகாந்த், மோடியை ஒரு ‘போராளி’ என்று அழைத்தார். மேலும் தற்போதைய சூழ்நிலையை ‘கருணையுடன்’ கையாள பிரதமரை நம்புவதாகவும் பகிர்ந்து கொண்டார். “நமஸ்கார், மரியாதைக்குரிய பிரதமரே, மகாராஷ்டிராவின் முதலமைச்சர் அவர்களே. பஹல்காமில் நடந்த காட்டு…

  12. பெண்களின் பாதுகாப்புக் கருதி Red-Button Robotic COP சேவையை அறிமுகப்படுத்தும் தமிழக அரசு! தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ கோப் (Robotic COP) வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மாநகரின் 200 முக்கிய இடங்களில் ரெட் பட்டன்- ரோபோட்டிக் கோப் (Red-Button Robotic COP) என்ற புதிய பாதுகாப்பு சாதனம் விரைவில் பொருத்தப்படவுள்ளது. 24 மணிநேரமும் இயங்கக் கூடிய இந்த பாதுகாப்பு சாதனம் வீதியின் அனைத்து பகுதிகளையும் அலசி ஆராயும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சாதனத்தில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம் பொலிஸ் கட்டுபாட்டு அறையுடன் நேரடி தொடர்பு கொள்ளவும், உடனடியாக பொலிஸ் துறைக்கு அழைப்பினை ஏற்படுத்தவும், அருகில் ரோந்து …

  13. பட மூலாதாரம்,DMK/WWW.DMK.IN கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 27 ஏப்ரல் 2025, 10:07 GMT 'அமைச்சராக இல்லை என்பதால் தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவருக்கு ஜாமீன் வேண்டுமா... அமைச்சர் பதவி வேண்டுமா?' என, ஏப்ரல் 23 அன்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. செந்தில் பாலாஜியின் கருத்தை அறிவதற்கு ஏப்ரல் 28 வரை உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்தது. இந்த சூழ்நிலையில் செந்தில் பாலாஜி தமது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இவருடன் சேர்த்து பொன்முடியும் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. தி.மு.க அமைச்சர்களில் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி போலவே, மேலும் 6 அமைச்சர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. …

  14. எனக்கு தமிழில் மருத்துவக் கல்வியை வழங்க ஓரளவுக்கு நல்ல வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது. மருத்துவத்தில் ஆய்வு செய்வதை, தேர்வு எழுதுவதை சற்றே சுலபமாக்கும். கலைச்சொற்கள்? இப்போதைக்கு ஆங்கில கலைச்சொற்களைக் கலந்து பாடநூல்களை உருவாக்கலாம். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அனைத்து ஆங்கில நூல்களையும் நிமிடத்தில் தமிழாக்கலாம். புனைவுக்கு மட்டுமே செயற்கை நுண்ணறிவு மொழியாக்கம் சரிவராது, ஆனால் அபுனைவுக்கு, அதுவும் தகவல்சார்ந்த நேரடி மொழியாக்கத்துக்கு அது ஏற்றது. ஆனால் ஆசிரியர்கள் இதற்குப் பழகியிருக்க மாட்டார்கள் என்பதால் மெல்லமெல்ல கொண்டு வரலாம். எதிர்காலத்தில் வெருள வைக்கும் ஆங்கிலச் சொற்களைத் தவிர்த்து நேரடியாகத் தமிழில் படிப்பது மத்திய வர்க்க, கீழ்வர்க்க சிறுநகர மாணவர்களுக்கு உதவும்.…

  15. ஒவ்வொரு தேர்தலிலும், ஒரே நாடகத்தை நாம் பார்க்கிறோம். பாஜக அதிமுகவுடன் கைகோர்க்க வலியுறுத்துகிறது. அதிமுக நாங்கள் பிஜேபியுடன் கூட்டணி வைத்ததால் தான் தோற்றோம் என்றார்கள். எந்தக் காலத்தில் நடக்காது என்றார் தவழ்பாடி. வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் பொய். வெற்றி பெறத் தவறிய பிறகும் கூட, தமிழ்நாட்டு மக்கள் அவர்களை தெளிவாக நிராகரித்த பிறகும் கூட கூட்டணி ஏன்? பாஜக ஏன் இவ்வளவு அவசரமாக கூட்டணிக்காக துடித்தது? காரணம் என்ன தெரியுமா? இது தமிழ் நாட்டு மக்களின் நலனுக்கான தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் அமைந்த கூட்டணி அல்ல. இது ஒரு சதி வலை. பின்னுவது பிஜேபி. அடிமைக்கூட்டம் கைகட்டி மெய் வாய் மூடி தலையைக் கூட ஆட்டாமல் தமிழர்களைக் காவு கொடுக்க உதவி செய்கிறது. அதிமுகவை படிப்பட…

  16. வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான் 19 Apr 2025, 8:33 AM மே 18-ஆம் தேதி கோவையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழின பேரெழுச்சி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் விடுதியில் ஏப்ரல் 18-ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய சீமான், “2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் நான் சொல்பவர்கள் தான் வேட்பாளர்கள். நான் சொல்வதற்கு மாறாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால், விஜய் கட்சிக்கு சென்று விடுங்கள். நானே உங்களை சேர்த்து விடுகிறேன். நாம் தமிழர் கட்சியில் இருந்து சென்றால் ஸ…

  17. பட மூலாதாரம்,TNRAJBHAVAN 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பு, திராவிட இயக்கத்தினரின் போராட்டங்களுக்கு மத்தியில் உதகையில் இருநாள் துணைவேந்தர்கள் மாநாடு இன்று (ஏப். 25) ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் தொடங்கியது. மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் செயல்படும் மாநில அரசு பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் யாரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. "மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் வீட்டு கதவுகளை நள்ளிரவில் தட்டி போலீஸார் எச்சரித்ததாலேயே" அவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிற…

  18. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால் தடை விதிப்பதாக மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முட்டையின் வெள்ளைக் கருவுடன், வெஜிடபிள் ஆயில், வினிகர் சேர்த்து மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது. சைவ மற்றும் அசைவ உணவுகளைத் தொட்டு சாப்பிடுவதற்கு இந்த மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. சான்ட்விச், ஷவர்மா மற்றும் பர்கர் போன்ற உணவுப் பொருட்களில் மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் உணவுப் பொருளாக மயோனைஸ் இருந்து வருகிறது இந்நிலையில், மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள தடை உத்தரவில், சா…

  19. பட மூலாதாரம்,PALANIVEL THIAGA RAJAN/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தனது துறைக்கான அதிகாரங்கள் குறித்து அதிருப்தியை சட்டமன்றத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். வேறொரு விழாவில் இதற்கு பதிலளிப்பதைப் போல பேசியிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். என்ன நடக்கிறது? தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி கேள்வி நேரத்தின்போது கூடலூர் தொகுதியின் அ.தி.மு.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான பொன். ஜெயசீலன் கேள்வி ஒன்றை எழுப்பினார். அந்த கேள்வியில், "எனது தொகுதியா…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பள்ளிப்படிப்பையும் பாதியிலேயே நிறுத்திய அந்த பெண், தன் அம்மாவுடன் கூலி வேலைக்கு சென்றுள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 22 ஏப்ரல் 2025 எச்சரிக்கை: இந்த செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை அளிக்கக்கூடும் 2015-ஆம் ஆண்டில், 12 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி ஒருவர், 10 ஆண்டுகள் கழித்து இளம்பெண்ணாக, நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார். குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானமாக கருதி, 10 ஆண்டுகள் சொந்த குடும்பத்தில் இருந்து, வெளியேற்றப்பட்ட அந்த பெண் இந்த ஆண்டு ஜனவரி மாதம், சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்…

  21. நான்கு முனைப் போட்டி – “2026 தமிழக தேர்தல்“ யாருக்குச் சாதகம்? April 22, 2025 10:42 am 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என கிட்டத்தட்ட நான்குமுனைப் போட்டி உறுதியாகிவிட்டது. இதில் நாதக-வும் தவெக-வும் பிரிக்கும் வாக்குகள் யாருக்குச் சாதகமாகும் என்பதே இப்போதைய கேள்வி. தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி கணக்குகள் மாறினாலும், மூன்றாவது அல்லது நான்காவது அணிகள் எப்போதும், பிரதானமான திமுக, அதிமுக கூட்டணியின் வெற்றி தோல்விகளுக்கு காரணமாகி இருக்கின்றன. 2016 தேர்தலில் அதிமுக 40.88% வாக்குகளுடன் 136 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. திமுக கூட்டணி 39.85% வாக்குகளுடன் 98 தொகுதிகளில் வென்று ஆட்சியை இழந்தது. இரண்டு அணிகளுக்கு இடையிலான வாக்கு வ…

  22. விஜய் மீது இந்த மாதிரி குற்றச்சாட்டுக்களை வைக்காதீர்கள்” - சீமான் ரம்ஜான் பண்டிகையொட்டி, இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த மார்ச் 7ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் கலந்து இஸ்லாமியர்களோடு நோன்பு கஞ்சி அருந்தியதோடு தொழுகையிலும் ஈடுபட்டார். இந்த சூழ்நிலையில், தவெக தலைவர் விஜய்யிடம் இஸ்லாமியர்கள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ரஸ்வி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, ‘தமிழ்நாட்டிலிருந்து விஜய் என்ற ஒரு முக்கிய நபர் இருக்கிறார் அவர் தவெக என்ற கட்சியை உருவாக்கியுள்ளார். இப்போது, அவர் திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு மாற விரும்பு…

  23. நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை முடக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இரத்து! நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை முடக்குமாறு (சொத்து முடக்கம்) பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இரத்து செய்தது. சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் தனது ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ‘ஜகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரித்தார். இதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், இந்திய ரூபாய் மதிப்பில் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். குறித்த கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை முடக்குமாறு நீத…

  24. பட மூலாதாரம்,MALLAI C E SATHYA கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 'மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்' எனக் கூறி, அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அந்த தீர்மானத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுடன் மோதல் போக்கைத் தொடர்வதால் சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ம.தி.மு.க-வில் என்ன நடக்கிறது? கூட்டணி ஆட்சி என்ற கூற்றை மறுக்கும் அதிமுக - பாஜக உடனான உடன்படிக்கை என்ன? அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் என்ன? திடீரென இமயம…

  25. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 17 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 18 ஏப்ரல் 2025 தமிழ்நாடு முழுவதும் உள்ள சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவது எந்த அளவுக்குச் சாத்தியம்? தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள சாதி பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கத் தவறும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.