Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தேர்தலுக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் பயன்படுத்துகிறார்- சீமான் குற்றச்சாட்டு சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தார். நாம் தமிழர் கட்சியை விட மக்கள் நீதி மய்யம் அதிக வாக்குகள் வாங்கியது குறித்த கேள்விக்கு சீமான் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: விழிப்புணர்வு இல்லாத சமூகத்தில் நடிப்பவர்களுக்கே முதலிடம் கிடைக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்துகிறார். மக்கள் பிரச்சனைக்கு பாஜக வராது. ஏனெனில் மக்களின் பிரச்சனையே பாஜகதான். இவ்வாறு அவர் கூறினார். https://www.maalaimalar.com/news/topnews/2020/11/02131443/2028712/Seeman-accusation-Kamal-Haasa…

  2. மொழிவழி மாநிலங்களே வளர்ச்சிக்கு அடிப்படை! நா.முத்துநிலவன் இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற ஒருசில ஆண்டுகளிலேயே, மொழிவழி மாநிலம் கேட்டு ஆங்காங்கே போராட்டங்கள் எழுந்தன. இது தொடர்ந்தால், பாகிஸ்தான் பிரிவினையைப் போலப் பல்வேறு சிறுசிறு நாடுகளாக இந்தியா சிதறிவிடும் என்று அஞ்சிய நேரு, நிலவழி மாநிலங்களை உருவாக்க நினைத்தார். இதற்கிடையில், பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்தது உள்ளிட்ட பெரும் போராட்டங்களின் காரணமாக, 1953-ல், அன்றைய மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் முதல் மொழிவழித் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. ஆனால், அப்போது மொத்த இந்திய நாட்டையும் கிழக்கு, மேற்கு, மத்திய, உத்தர, தெட்சிணப் பிரதேசங்களாகப் பிரிக்க எண்ணம் கொண்டிருந்தார்…

  3. தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார். நேற்று (சனிக்கிழமை) இரவு, 11.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 12ஆம் திகதி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர், முண்டியம்பாக்கத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது, அமைச்சர் துரைக்கண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. மேலும், …

  4. 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கான சட்ட மசோதா, கடந்த மாதம் கூடிய சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் கவர்னரின் ஒப்புதல் கிடைக்காததால் மூத்த அமைச்சர்கள் சிலர் சென்று கவர்னரை வலியுறுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதிலளித்திருந்தார். பல கோணங்களில் அந்த ம…

  5. தடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்பு கைது நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவனைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்புவை பொலிஸார் கைது செய்தனர். பெண்களுக்கு எதிராக திருமாவளவன் பேசியதாக பா.ஜ.க.வினர் மாநில அளவில் பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்றனர். அதற்கமைய கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனைக் கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு, சசிகலா புஷ்பா, ராகவன் உள்ளிட்ட பா.ஜ.க.வின் நிர்வாகிகள் கலந்துகொள்ளவிருந்தனர். எனினும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸ் தடை விதித…

  6. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பாடம் புகட்டுக: பா.ம.க வலியுறுத்தல் 78 Views தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்கு தமிழகத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. கடந்த 27ம் திகதி இராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்றுக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். அவர்கள் வழக்கம் போல கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து சென்ற இலங்கைக் கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், 50-க…

  7. முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து பல புதிய தகவல்களைக் கொண்டிருந்த அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதிலிருந்த தகவல்கள் சரியானவை எனக் கூறியிருக்கும் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது. கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை என பகிரப்பட்ட அறிக்கையில், ரஜினிகாந்தில் உடல்நலம் குறித்து முன்பு இடம்பெற்றிராத பல தகவல்கள் இருந்தன. இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியிலும் ஜூன், ஜூலை மாதங்களிலும் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2ஆம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெய…

  8. தமிழகத்திற்கு மஞ்சல் எச்சரிக்கை -சென்னையில் கனமழை! 27 Views தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் சென்னையில் அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதைத் தொடர்ந்து த…

  9. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன? சென்னை: சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளுமே தீவிரமாகி வருகின்றன. அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காண தயாராகி வருகின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் கூட்டணி கதவை திறந்து வைத்து மற்ற கட்சிகளுக்காக காத்திருக்கிறது. இப்படி கூட்டணி கட்சிகளின் துணையோடு களம் காண்பதற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம் வகுத்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் நிர்வாகிகளோடு தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். மக்க…

  10. தோழர் தமிழரசன் வீர வணக்கம்

  11. பாலசிங்கம் கொலைமுயற்சி வழக்கு: விகேடி பாலன் மனு தள்ளுபடி! மின்னம்பலம் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரான பாலசிங்கத்தை குண்டுவெடிப்பு நிகழ்த்தி கொல்ல முயன்றதாக வி.கே.டி.பாலன் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தை கொலை செய்யும் நோக்குடன், கடந்த 1985ஆம் ஆண்டு சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் எவரும் காயமடையவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கந்தசாமி, வி.கே.டி.பாலன், ரஞ்சன், மணவை தம்பி, பவானி, பிரேம்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது…

  12. இலங்கை கடற்படையின் தாக்குதலில் தமிழக மீனவர் படுகாயம் 30 Views எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கியுள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 580இற்கும் மேற்பட்ட விசைப் படகுகளில், 3000 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்றைய தினம்(26) மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். இதில் பூண்டிராஜன் என்பவரின் விசைப்படகில் 6பேர் சென்றிருந்தனர். இவர்கள் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டித்துக் கொண்டிருந்த சமயம் கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் படகிலிருந்த சுரேஷ் (38) என்பவர் காயமடைந்தார். அதன் பின்னர் அந்த மீனவர்கள் அவசரமாக கரை திரு…

  13. ‘விஜய் சேதுபதி அண்ணா மன்னித்து விடுங்கள்’: பாலியல் மிரட்டல் விடுத்த நபர்! மின்னம்பலம் நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் மன்னிப்பு கேட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் 800 என்ற தலைப்பில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். படம் குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதலே விஜய்சேதுபதிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பின. இந்நிலையில் முத்தையா முரளிதரன், படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிக் கொள்ளுமாறு அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து விஜய் சேதுபதி 800 படத்திலிருந்து விலகிக் கொண்டார். இந்த சூழலில் விஜய்சேதுபதி தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ரித்திக் என்ற ட்விட்டர் பக்க…

  14. சாத்தான்குளத்தில் தடையை மீறி கடையை திறந்ததாக கைது: சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் சாவு சாத்தான்குளத்தில் தடையை மீறி கடையை திறந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் திடீரென இறந்தனர். போலீசார் தாக்கியதில் இறந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பதிவு: ஜூன் 24, 2020 04:45 AM சாத்தான்குளம், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 55). இவருடைய மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்தனர்.சம்பவத்தன்று இரவு இவர்கள் வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த சாத்தான்…

  15. `அழுக்கா இருந்ததால யாரும் உதவலைன்றதுதான் வருத்தம்!' - தொழிலாளி உயிரைக் காப்பாற்றிய பெண் போலீஸ் ஆ.சாந்தி கணேஷ் முத்து கிருஷ்ணவேணி உதவிய போது ``மக்களோட வரிப்பணத்துல சாப்பிட்டுக்கிட்டிருக்கோம். அந்த மக்கள்ல ஒருத்தரோட உயிருக்கு ஆபத்துன்னா போலீஸ் வராம வேற யாரு வருவாங்க’’ என்பவரின் குரலில், அவருடைய வேலையின் மீதான பக்தி தெரிகிறது. காக்கிச்சட்டைக்குள் ஈர மனதுக்காரர்களைச் சந்திக்கும்போது மட்டும்தான், காவல்துறை, மக்களின் நண்பன்தான் என்பது உறுதி செய்யப்படும். நேற்றுமுன் தினம் (21.10.2020), கோயம்பேட்டில் மயங்கி விழுந்த கூலித் தொழிலாளி ஒருவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய பெண் காவலர் முத்து கிருஷ்ணவேணியும் அப்படிப்பட்ட ஈர மனதுக்காரர்…

  16. மருத்துவ துறையில் 2030ஆம் ஆண்டுக்கான இலக்கை தமிழகம் தற்போதே அடைந்துவிட்டது – முதலமைச்சர் by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/06/EPS.jpg மருத்துவ துறையில் 2030ஆம் ஆண்டுக்கான இலக்கை தமிழகம் தற்போதே அடைந்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மருத்துவ வசதிகளோடு, மனித வளம் மற்றும் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு சிறப்பாக செயற்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளைப்போல தனியார் மருத்துவமனைகளும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றன என்றும் மருத்துவம் ஒரு கலை, வணிகம் அல்ல…

    • 0 replies
    • 419 views
  17. ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு - இன்று தீர்ப்பு வழங்குகிறது சுப்ரீம் கோர்ட் மத்திய அரசின் தொகுப்பிற்கு தமிழகத்திலிருந்து ஒதுக்கப்படக் கூடிய மருத்துவ இடங்களில் 50 சதவீதம் ஓ.பி.சி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பிரதானமான கோரிக்கையாகும். இது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட் இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தலாம் என்ற கருத்தை சொல்லி இருந்தனர். இதற்கிடையே, இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டுமென கோரி தமிழக அரசு மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு…

  18. திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு மின்னம்பலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனுதர்மத்தை மேற்கோள் காட்டுவதாக கூறி அனைத்து பெண்களையும் இழிவுபடுத்தி விட்டதாக பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் பெரியார் வலைக்காட்சியின் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், "மனு தர்மத்தின் படி அனைத்து பெண்களும் கீழானவர்கள். அனைத்து பெண்களும் பரத்தையர் களாகவே படைக்கப்பட்டவர்கள். அவர்கள் பிராமண பெண்களாக இருந்தாலும் சரி கீழ்நிலை சாதிகளைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும் சரி, மனு தர்மத்தின் படி அனைத்து பெண்களும் விபச்சாரிகள் என்ற அளவிலேயே பார்க்கப்படுகிறார்கள்" என்று பேச…

  19. விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம் திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது; ஆபத்தானது. பெண்கள், குழந்தைகளை மிரட்டுவதுதான் கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். வக்கிர மிரட்டல் விடுத்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். https://www.maalaimalar.com/news/topnews/2020/10/20140105/1995848/DMK-MP-Kanimozhi-condemned-to-Actor-Vijay-Sethupathi.vpf

  20. மனுஸ்மிருதி நூலை தடை செய்யக் கோரி திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சமீபத்தில் பேசிய நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பதாக பாஜக கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த திருமாவளவன், தான் பேசியது திரித்து கூறப்பட்டிருப்பதாகவும், மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ளதையே தான் குறிப்பிட்டு பேசியதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “பிற்படுத்தப்பட்ட மக்களையும், பெண்களையும் இழிவுபடுத்துவதும் மனுஸ்மிருதி நூலைத் தடை செய்ய வேண்டும் என மைய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்சார்பில் சனிக்க…

  21. பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் சென்னை, விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியிலுள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு தாம் அதிர்ச்சி அடைந்ததாகவும…

  22. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழ்நாட்டில் அனைவருக்கும் அந்த மருந்து இலவசமாக வழங்கப்படும் என்று மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் அரசு நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிக விளைச்சல் காரணமாக இந்த ஆண்டு அனைத்து நெல் மூட்டைகளையும் அரசால் கொள்முதல் செய்ய முடியவில்லை என்று கூறினார். 2019ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 211 தொழில்களுக்கு ரூ. 303 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும் அவற்றில் ரூ. 184 கோடி மதிப்பிலான திட்டங்கள், ரூ. 197 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். …

  23. நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்ற செயல்பாடு குறித்து வெளியிட்ட கருத்துக்காக நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமை நீதிபதிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்த நிலையில், சூர்யாவுக்கு ஆதரவாக ஆறு முன்னாள் நீதிபதிகளும் எதிராக தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ். பிரபாகரனும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். மருத்துவ படிப்பில் சேருவதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள "நீட்" நுழைவுத் தேர்வை, கொரோனா காலத்தில் மாணவர்கள் எழுதவேண்டிய காட்டாயம் தொடர்பாக நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். Twitter பதிவை கடந்து செ…

  24. தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்றத் தொகுதிகள் அறிவிப்பு! by : Litharsan http://athavannews.com/wp-content/uploads/2020/10/Tamilnadu-Government.jpg தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்றத் தொகுதிகளை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது இதன்படி, தமிழகத்தின் புதிய ஒன்பது மாவட்டங்களிலும் 45 சட்டமன்றத் தொகுதிகளின் பெயர் இன்று (வியாழக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழு சட்டப்பேரவை தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. காஞ்சிபுரம் …

  25. சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு... பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ.வின் 10 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்த ஐகோர்ட்! சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது 15 வயது மகளை ராஜ்குமார் வீட்டுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வேலைக்காக அனுப்பி வைத்துள்ளார். மகளைப் பார்ப்பதற்காக வந்த அந்தத் தொழிலாளி, ராஜ்குமார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர், மருத்துவமனையில் சென்று பார்த்தபோது சிறுமி சுயநினைவில்லாமல் இரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.