தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 13 ஆயிரம் வழக்குகள் பதிவு: 11 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் 2020-04-06@ 10:05:50 சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி ஒரே நாளில் தொற்று நோய் பரப்பும் வகையில் சுற்றியதாக ஒரே நாளில் 13 ஆயிரம் வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் மக்கள் பொருட்கள் வாங்க அடிக்கடி வெளியே சுற்றி வருகின்றனர். அவர்களை போலீசார் பிடித்து நூதன முறையில் தண்டனை வழங்கி வருகின்றனர். இருந்தாலும் மக்கள் வெளியில் சுற்றி தான் வருகின்றனர். அந்…
-
- 0 replies
- 269 views
-
-
குமரியில் ஆழ்கடலில் இருந்து கரைதிரும்பி வரும் 500 விசைப்படகுகள்; துறைமுக பகுதிகளிலேயே கரோனா வைரஸ் பரிசோதனை: மீன்களைப் பதப்படுத்தவும் வலியுறுத்தல் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பிய வண்ணம் உள்ளன. தங்கு மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு துறைமுகத்திலேயே கரோனா வைரஸ் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும், அவர்கள் பிடித்து வரும் மீன்களைப் பதப்படுத்தி விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், சின்னமுட்டம், தேங்காய்ப்பட்டணம், முட்டம் ஆகிய 4 மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. கரோனா பாதிப்பைத் தொடர்ந்த…
-
- 0 replies
- 316 views
-
-
தமிழகத்திலிருந்து டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட மேலும் 85 பேருக்கு கொரோனா! தமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 30ஆம் திகதி வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச்…
-
- 0 replies
- 402 views
-
-
முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை புதுதில்லி, ஏப்.5- கொரோனா பாதிப்பு எதிரொலியாக முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த மார்ச் 24 அன்று நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்த ரவு அன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14 வரை அம லில் இருக்கும். பொதுமக்கள் அளிக்கும் ஒத்து ழைப்புக்கு ஏற்ப பாதிப்பு மற்றும் பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு எச்சரிக்கை செய்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 75ல் இருந்து 79…
-
- 0 replies
- 329 views
-
-
மூன்றாவது கட்டத்துக்கு செல்கிறோமா?- பீலா ராஜேஷ் பேட்டி . தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று உள்ளவர்கள் 86 பேர் கண்டறியப்பட்டு மொத்த எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது. 86 பேரில் 85 பேர் டெல்லிச் சென்று திரும்பியவர்கள். ஒருவர் துபாயிலிருந்து வந்தவர். இதன் மூலம் தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை இன்று 571 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 86 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் 690 என்கிற எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள மஹாராஷ்டிராவை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது: “வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் 90824 பேர், 10818 பேர் 28 நாள் தனிமைப்…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிவகங்கை அருகே உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கவுன்சிலர் சிவகங்கை அருகே உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு அப்பகுதி ஒன்றியக் கவுன்சிலர் மகேஸ்வரி கண்ணன் உதவிகரம் நீட்டினார். சிவகங்கை அருகே ஒக்கூர் இலங்கை தமிழர் முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்கள் கூலித் தொழில் செய்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கால் இலங்கை தமிழர்கள் தங்கள் குடியிருப்புகளிலேயே முடங்கினர். மேலும் வேலைக்குச் செல்லாததால் உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்ச…
-
- 2 replies
- 495 views
-
-
ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு: கலெக்டர் கதிரவன் பேட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய நவீன கிருமிநாசினி தெளிப்பான் எந்திரத்தை பார்வையிட்ட கலெக்டர் கதிரவன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது:- ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திடம் இருந்து ஈரோடு கிழக்கு ,கோபி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3.50 லட்சம் மதிப்பில் நவீன கிருமிநாசினி தெளிப்பான் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற எந்திரம் தேவைப்பட்டால் எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்க தயாராக இருக்கிறார்கள் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு …
-
- 0 replies
- 289 views
-
-
தமிழகத்தில் சிக்கிய மலேசியர்களை அங்கு அனுப்பும் முயற்சியில் இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு அனுப்பப்படும் பயணிகளுடன் டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து தப்பி மலேசியாவுக்கு செல்ல முயன்ற 10 மலேசியர்கள் சிக்கினர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக நாடு முழுவதும் உள்நாடு மற்றும் சா்வதேச விமானசேவைகள் வரும் 14 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளன.இதனால் மலேசியா நாட்டவா்கள் பலா் இந்தியாவில் சிக்கிக்கொண்டனா்.குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக அளவு மலேசியா்கள் தவிக்கின்றனா். மலேசியா அரசு இந்திய அரசுடன் பேசி தங்கள் நாட்டவரை தனி சிறப்பு விமானங்களில் மலேசியா அழைத்து செல்ல அனுமதி கேட்டது.இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி அளித்தது. அதன்பேரில் கடந்த வெள்ளிக்…
-
- 1 reply
- 592 views
-
-
ஊரடங்கு உத்தரவால் சென்னையிலிருந்து மதுரை செல்ல போராடும் தொழிலாளர்கள்: லாரிகளில் லிப்ட் கேட்டும், நடந்தும் 275 கி.மீ கடந்தனர் பெரம்பலூர்: ஊரடங்கு உத்தரவால் சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லப் போராடும் தொழிலாளர்கள் நடந்தும், காய்கறி லாரிகளில் லிப்ட் கேட்டும் 275 கி.மீ கடந்தனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு நாடெங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 25ம்தேதி அதிகாலை தொடங்கி இதுவரை எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. இந்நிலையில் வடமாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு திரும்ப வாகன வசதியின்றி நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடந்து வருகின்றனர்.இதேபோல் நேற்று முன்தினம் சென்னை நுங்கம்பாக்கத்தில் டீக்கடை, ஹோட் டல்களில்…
-
- 0 replies
- 267 views
-
-
ஓட்டப்பிடாரம்: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள், மலர் சாகுபடி செய்து வருகின்றனர். நெல்லை, கோவில்பட்டி, தென்காசி, தூத்துக்குடி பூ மார்க்கெட்டுகளுக்கு தென்காசி, மானூர், சங்கரன்கோவில், கங்கைகொண்டான், நாலாட்டின்புத்தூர், காமநாயக்கன்பட்டி, தெய்வசெயல்புரம், செய்துங்கநல்லூர், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், குலசேகரநல்லூர், கொம்பாடி, கீழமுடிமண், ஆரைக்குளம், கப்பிகுளம், கீழமங்கலம், குப்பனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மல்லி, சம்பங்கி, கனகாம்பரம், கோழிக்கொண்டை, செவ்வந்தி, சாமந்தி போன்றவற்றை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். தற…
-
- 0 replies
- 380 views
-
-
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மும்பையில் இருந்து 1,000 கி.மீ. நடந்தே வந்த நாகை, திருவாரூர் பட்டதாரிகள் திருச்சியில் இருந்து வாகனத்தில் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மும்பையில் இருந்து சுமார் 1,000 கி.மீ. தூரம் நடந்தே வந்த பட்டதாரிகள். திருச்சி: நாகை மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 22 பேர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே சோலாப்பூரில் செயல்பட்டு வரும் வேளாண் உபகரணங்கள் மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் பி.எஸ்சி, எம்.எஸ்சி. வேளாண் பட்டதாரிகள் ஆவர். அனைவரும் சோலாப்பூரில் தங்கி வேலை …
-
- 0 replies
- 650 views
-
-
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சராசரி மனிதனுக்கு சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பதிவு: ஏப்ரல் 05, 2020 12:38 PM சென்னை இதய நோய் வந்துவிட்டாலே அடிக்கடி மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளை நினைத்தும் அதற்கு ஆகும் செலவை எண்ணியுமே பலரும் அதிகம் வருந்துவார்கள். வசதி குறைந்தவர்களாக இருந்தால் சரியான மருத்துவத்தைப் பார்க்க முடியாமல் தவிக்கிறார்கள். இந்த அளவிற்கு இதய நோய்க்கான பரிசோதனை மற்றும் மருத்துவம் ஆடம்பர பொருளாக இருந்தது சாதாரணமாக அடிப்படை பரிசோதனைகளை செய்வதற்கே அதிக செலவாகும். ஆனால் கொரோனா நோய் தொற்று வந்த பிறகு மாரடைப்பு மற்ரும் எய்ட்ஸ்போன்ற அதிக அபாயகரமான நோய்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது. …
-
- 0 replies
- 890 views
-
-
மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில்- இன்று முதல் சென்னையில் வீடுவீடாக சோதனை கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பணியாளர்களை பயன்படுத்தி சென்னையில் வீடுவீடாக சோதனை நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாக மாநில அரசாஙகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோன வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையிலேயே மாநில அரசாங்கம் இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது. பயிற்றுவிக்கப்பட்ட 16,00 சுகாதார தொழிலாளர்களை பயன்படுத்தி வீடுவீடாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உடைகளுடன் நடவடிக்கையில் இறங்கவுள்ள சுகாதார பணியாளர்கள் சென்னையை 24மணிநேர கண்காணிப்பின் கீழ் வைத்திருப்ப…
-
- 0 replies
- 205 views
-
-
சென்னை: கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சுரங்க வடிவில் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கும், சிகிச்சை மற்றும் மாத்திரை பெற வருபவர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக சுரங்க வடிவில் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் வைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்…
-
- 0 replies
- 225 views
-
-
சென்னை: எப்போதுமே எங்களுக்கு முக்கியத்துவம் தராமல் ஒதுக்கி வைக்கும் நிலையில் இப்போது மட்டும் எங்களை கொண்டாடுவது ஏன் என தூய்மைப்பணியாளர்கள் தங்கள் மனக்குமுறலை வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இயற்கை சீற்றங்கள், பேரிடர் காலங்கள் மற்றும் அன்றாட வாழ்வில் தூய்மைப்பணியாளர்கள் இல்லாமல் நமது வாழ்வு இல்லை. நாடு தூய்மையாக இருக்க மற்றவர்களின் கழிவுகளையும், குப்பைகளையும் அப்புறப்படுத்தினாலும் நாள்தோறும் அவர்கள் தங்கள் உடல், உடைகளில் அசுத்தங்களை சுமக்கிறார்கள். தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.கொரோனாவை கட்டுப்படுத்த ஏப்ரல் 14ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருக்க அறிவுறுத்தப…
-
- 0 replies
- 462 views
-
-
தமிழகம், விழுப்புரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இன்று ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி மாநாட்டில் இருந்து விழுப்புரம் திரும்பிய 9 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர் இன்று (சனிக்கிழமை) காலை இறந்தார். அவர் விழுப்புரம் வண்டிமேடு சிங்காரத்தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர் என்துடன் பாடசாலை ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். இதேவேளை, தமிழ்நாட்டில் மொத்தமாக 411 பேர் கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளம…
-
- 2 replies
- 442 views
-
-
அத்தியாவசிய பொருட்களை வாங்க, காலை 6.00 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவுவதை தவிர்க்க, மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனாவுக்கு மதச்சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும், பாதிக்கப்படுபவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் வெறுப்புணர்வுடன் பார்க்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் தனியார் மருத்துவமனைகள் திறக்கப்படுவதில்லை. மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து மருத்துவம…
-
- 0 replies
- 218 views
-
-
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, தமிழகத்தில் ரயில் பெட்டியில் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. அது குறித்த மேலதிக தகவல்களை இந்த காணொளியில் காணலாம்.
-
- 0 replies
- 392 views
-
-
‘மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை'' என்ற தந்தை பெரியாரின் உயர்கருத்துகளை உள்வாங்கிச் செயல்படுவீர்! சமூகத்தை - உலகத்தைக் காக்க உன்னதமான கடமையாற்ற வாரீர்! நம் அனைவர் வாழ்வின் முக்கிய நேரம் - நாமும் வாழ்ந்து, பிறரையும் வாழ வைக்கவேண்டிய கடமையின் உச்சம் இது. கட்டுப்பாடு காத்து, கருணை உள்ளத்தோடு ஒத்தறிவு கருதி, பெருந்தன்மையோடு சமூகத்தை - உலகத்தைக் காக்க உன்னதமான கடமையாற்ற வாரீர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு: …
-
- 0 replies
- 465 views
-
-
சென்னை: கொரோனா பரவல் வேகம் அதிகரித்து இருப்பதின் எதிரொலியாக சென்னையில் கொருக்குப்பேட்டை, புதுப்பேட்டை, வேளச்சேரி பிரபல வணிக வளாகம் என 9 முக்கிய இடங்களை தேர்வு செய்து அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற ேவண்டாம் என போலீசார் தடை வித்துள்ளனர். இந்த தடையை மீறினால் 2 ஆண்டு சிறை என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை நேற்று மாலை 411 ஆக அதிகரித்தது.சென்னையில் நேற்று முன்தினம் மாலை வரை மாநிலத்தில் அதிகமாக 45 …
-
- 0 replies
- 238 views
-
-
ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கின்ற பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 3) மாலை நிலவரப்படி தமிழக முழுக்க 411 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று இருக்கிறது என்பதன் பட்டியல் இதோ:…
-
- 0 replies
- 314 views
-
-
சென்னை: தமிழகம் முழுவதும் கரோனா பரவும் அபாயம் எழுந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், கரோனா பாதிப்பு இருப்பவா்கள், கரோனா தொற்றை மறைத்தால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதித்த 20 மாவட்டங்களிலும் சுகாதாரத் துறையினா் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனா். காய்ச்சல், சளி, சுவாசப் பாதிப்பு இருக்கும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுகின்றனா். இந்த நிலையில், சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை ஓா் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கரோனா அறிகுறிகள் இருப்பவா்கள் தாங…
-
- 0 replies
- 357 views
-
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 75 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது. பதிவு: ஏப்ரல் 03, 2020 05:30 AM சென்னை, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 75 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மராட்டியமும், 3-வது இடத்தில் கேரளாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 75…
-
- 2 replies
- 604 views
-
-
ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்துற்கு 500 கி.மீ. நடந்து வந்த வாலிபர் சொந்த ஊர் செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் நபர்கள் (கோப்பு படம்) ஐதராபாத்: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 2 ஆயிரத்து 69 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 156 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவத…
-
- 0 replies
- 602 views
-
-
ஈஷா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரிக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் குறித்தும் சிறப்பு கவனம்- முதல்வர் ஈஷா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரிக் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் அவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செயற்பட்டு வரும், அம்மா உணவகங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அவர், அங்கு விற்பனை செய்யப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், நலிவுற்ற மக்களுக்காக கொண்டுவரப்பட்ட அம்மா உணவகத் திட்டம் மூலம், நாளொன்றுக்கு நான்கரை இலட்சம் பேர் உணவு அருந்துகின்றனர் எனக் குறிப்பிட்டார்.…
-
- 0 replies
- 347 views
-