தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10268 topics in this forum
-
சென்னை: மூத்த அரசியல்வாதியும், திமுக பொதுச் செயலாளருமான அன்பழகன், சென்னை மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், 7 நாட்கள் திமுக துக்கம் அனுசரிக்கும் எனத் தெரிவித்தார் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி அன்பழகன் 97. இயற்பெயர் ராமையா. 1922 டிச.19ல் திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் பிறந்தார். அண்ணாமலை பல்கலை.,யில் தமிழ் படித்த இவர், திராவிட சிந்தனைகளில் ஆர்வம் கொண்டவர். இதனால், தனது பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டார். கல்லுாரியில் பணிபுரிந்தபோதும், இயக்கப்பணிகளை தொடர்ந்தார். இவரை அண்ணா 'பேராசிரியர் தம்பி' என அழைத்தார். திருவாரூரில் இளைஞர்கள் நடத்திய மாநாட்டில், கருணாநிதியை முதல் முறையாக சந்தித்தார். அப்போது இருவருக்கும…
-
- 11 replies
- 1.6k views
-
-
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பி.மீனாட்சிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை கொன்று புதைத்துள்ளனர் என வழக்கு பதிவாகியுள்ளது. வைரமுருகன்-செளமியா தம்பதிக்குப் பிறந்த இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால் கொன்று புதைத்ததுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட தம்பதி, குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, குழந்தை கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு (உதவி எண் 100) வந்த தொலைபேசி தகவலை அடுத்து பெற்றோரை விசாரிக்க காவல்துறையினர் சென்றபோது, அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டனர் என தெரியவந்தது. ஆனால் அவர…
-
- 1 reply
- 440 views
-
-
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் ஆகிய மும்மதத்தினரும் வழிபடும் வகையில் ஒரு கோவிலைக் கட்டவுள்ளதாக நடிகரும் இயக்குனருமான ராகவா லோரன்ஸ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில், நடிகராகவும் இயக்குனராகவும் தனி முத்திரை பதித்துள்ள ராகவா லோரன்ஸ் பல விதமான சமூக பணிகளிலும் ஈடுபட்டு அனைவரின் மனதிலும் நீங்கா நன்மதிப்பை பெற்றுள்ளார். மேலும், அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற குழந்தைகள் வசிக்க இல்லம் நடத்துகிறார். அவர்களுக்கு கல்வி உதவிகளும் வழங்குகிறார். ஏழைகளுக்கு வைத்திய சிகிச்சைக்காக நிதி உதவியும் அளிக்கிறார். திருநங்கைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளார். இந்த நிலையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை ஒன்றிணைக்கும் வகையில் புது முயற்சி…
-
- 11 replies
- 1.2k views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் இந்தியத் தொல்லியல்துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் தலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவிருப்பதாகவும் அதன்படி தமிழ்நாட்டில் உள்ள சுமார் 7,000 கோயில்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரப்போவதாகவும் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியிருப்பதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி பத்தாம் தேதியன்று மக்களவையில் பேசிய பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரஹலாத் சிங், இந்தியத் தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கையை மறுபரிசீலனை செய்யவிருப்பதாகத் தெரிவித்தார். தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் 3,691 நினைவுச் சின்னங்கள் உள்ளன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத…
-
- 0 replies
- 445 views
-
-
நீதிபதிக்கு வந்த சந்தேகம்! 'கைலாசா நாட்டின் ஜனாதிபதி நித்யானந்தாவை எவ்வாறு தொடர்பு கொள்வது?" என உயர்நீதிமன்ற நீதிபதி கிண்டலாகக் கேட்டார். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் குறித்து தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார் நித்யானந்தா. அப்போது அவதூறு கருத்துகளை தெரிவித்ததையடுத்து அவர் மீது கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ஜுன் சம்பத் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2011 ஆம் ஆண்டு கொடுத்த பேட்டிக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னர் தன் மீது அர்ஜுன் சம்பத் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்.இந்த அவதூறு வழக்கிற்காகவே கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந…
-
- 6 replies
- 1.6k views
-
-
2021 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க, திமுக- அதிமுக அல்லாத ரஜினி போன்ற ஒத்த கருத்துடையவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னோட்டமாக ரஜினி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை கமல்ஹாசன் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி...! கமல்....! அபூர்வ ராகங்களில் தொடங்கியது இந்த பந்தம்..! அடுத்தடுத்த படங்களில் கமல் நாயகனாகவும் ரஜினி வில்லனாகவும் நடித்தாலும், ரஜினியும் கமலும் தனித்தனி வெற்றி நாயகர்களாக கோலோச்சியது மட்டுமல்ல, எம்.ஜி.ஆர், சிவாஜி என்கிற இரு இமயங்களின் சிம்மாசனத்தை, ரஜினி - கமல் என்று 40 ஆண்டுகளாக தக்கவைத்ததும் ஒரு தலைமுறை சாதனைதான்..! ரஜினி, மக்கள் மன்றத்துடனும், கமல், மக்கள் நீதி மய்யத்துடனும் 2021 சட…
-
- 12 replies
- 985 views
-
-
இரசாயன குடோனில் தொடர்ந்தும் தீ பரவல் – தீயணைப்பு வீரர்கள் போராட்டம் மாதவரத்தில் உள்ள இரசாயன குடோனில் தொடர்ந்தும் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், தீயை முழுமையாக அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். மாதவரம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இரசாயன கிடங்கில் நேற்று மாலை 3 மணி அளவில் திடீரென தீ பிடித்தது எரிந்தது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த இரசாயன பேரல்கள் வெடித்து சிதறியது. அதில் இருந்து சிதறிய தீயால் அருகில் இருந்த மேலும் 2 கிடங்குகள் எரியத் தொடங்கின. இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்குன்றம், மணலி, மாதவரம், ஆவடி, அம்பத்தூர், பெரம்பூர், கொருக்குப்பேட்டை, சென்னை விமான நிலைய மற்றும் சி.பி.சி.எல். எண்ணெய் நிறுவன த…
-
- 1 reply
- 503 views
-
-
தமிழகத்தில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வெற்றிடம்! தமிழகத்தில் 2 சட்டமன்றத் தொகுதிகள் வெற்றிடமாக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு சட்டமன்ற செயலாளர் அறிவித்துள்ளார். திருவொற்றியூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி கடந்த 27ஆம் திகதியும், குடியாத்தம் தி.மு.க. உறுப்பினர் ஏ.காத்தவராயன் கடந்த 28ஆம் திகதியும் உடல் நலக்குறைவால் காலமாகிய நிலையில் இந்த 2 தொகுதிகளும் வெற்றிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு சத்யபிரதா சாஹூ எழுதியுள்ள கடிதத்தில், திருவெற்றியூர், குடியாத்தம் ஆகிய 2 தொகுதிகள் வெற்றிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணைய விதிப்படி, சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பின்னர் அந்த தொகுதி வெற்றிடமாக…
-
- 0 replies
- 366 views
-
-
தமிழகத்தின் பழமையான கோவில்கள் இனி தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்.. மத்திய அரசு புது திட்டம்.! சென்னை: தமிழகத்தில் பழமையான கோவில்கள் சிலவற்றை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது .இந்தியாவில் இருக்கும் பழைய கட்டிடங்கள், புராதான சின்னங்கள் ஆகியவற்றை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது வழக்கம். அந்த பகுதிகளை தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. தமிழகத்தில் இப்படி பல பகுதிகள் உள்ளது .தமிழகத்தில் மொத்தம் தொல்லியல் துறை வசம் 100+ இடங்கள் உள்ளது. நிறைய புராதன கட்டிடங்கள், பழங்கால ஆங்கிலேயர் கால இடங்கள் ஆகியன. நினைவுச் சின்னங்கள் இந்த…
-
- 1 reply
- 643 views
-
-
2 மார்ச் 2020 படத்தின் காப்புரிமை Getty Images விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் 8 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் பிள்ளைகள் முகாமிற்கு அருகே உள்ள முதலியார்குப்பம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் முகாமை சார்ந்த நான்காம் வகுப்பு படிக்கின்ற 8வயது சிறுமி ஒருவர் பள்ளியின் அருகே, கடந்த சனிக்கிழமை அன்று விளையாடிக் கொண்டிருந்தார். …
-
- 1 reply
- 931 views
-
-
இந்தியாவின் 94% மக்களுக்கும் எதிரானது இச்சட்டம்/ பெங்களூர் பாலன்
-
- 0 replies
- 510 views
-
-
38 நிமிடங்களுக்கு முன்னர் படத்தின் காப்புரிமை andriano_cz / GETTY IMAGES Image caption சித்தரிக்கும் படம் கோவையில் திருமணம் செய்து கொள்ள தாமதித்ததால் இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த வாலிபர் தற்கொலைக்கு முயன்றதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கீரணத்தம் பகுதிக்கு அருகே உள்ள கல்லுக்குழியை சேர்ந்த நந்தினி (வயது 21) அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வந்தார். இவரும், சங்கனூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (வயது 21) என்பவரும் பள்ளிக்காலம் முதல் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் என்று உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் கூறு…
-
- 0 replies
- 518 views
-
-
ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி புதிய மனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது அரசியலமைப்பு சட்ட விரோதம் என்று நளினி மனு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புகளை ஆளுநர் மீறி செயல்படுவதாக நளினி மனுவில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் இருந்ததாக சிறையில் ரோந்து சென்ற போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் கோர்ட்டில் ந…
-
- 0 replies
- 351 views
-
-
ஐ.நா. பிரேரணையில் இருந்து இலங்கை விலகியதற்கு இராமதாஸ் கடும் கண்டனம்! by : Krushnamoorthy Dushanthini போர்க் குற்றங்கள் குறித்த ஐ.நா. பிரேரணையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகியுள்ளமை தொடர்பாக பா.ம.க நிறுவனர் இராமதாஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் இடம்பெற்ற போரின்போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்த பன்னாட்டு விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அறிவித்திருக்கிறது. போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கதாகும். ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.…
-
- 0 replies
- 498 views
-
-
டெல்லியைப் போன்று சென்னையிலும் வன்முறை வெடிக்கலாம் – எச்.ராஜா! குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தூண்டிவிடுவதாக எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த எச்.ராஜா குடியுரிமை சட்டத்தினால் இந்தியாவில் வாழும் எவருக்குமே எவ்வித பாதிப்பும் இல்லை என பலமுறை கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். இருப்பினும் இதனை மீறியும் சிறுபான்மை இன மக்களைப் போராடுவதற்கு தி.மு.க. மற்றும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள் தூண்டி விடுகின்றன என அவர் குற்றம் சாட்டினார். சென்னை, வண்ணாரப் பேட்டையில் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில், டெல்லியைப் போன்று அங்கு வன்ம…
-
- 1 reply
- 483 views
-
-
இருமல் மருந்து குடித்து 9 குழந்தைகள் உயிரிழப்பு.. தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் திருப்பி அனுப்ப உத்தரவு சென்னை: இருமல் மருந்து குடித்த 9 குழந்தைகள் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதன் காரணமாக ஆரம்ப கட்ட விசாரணைக்கு பிறகு, சர்ச்சைக்குரிய இருமல் மருந்தான coldbest- pc மருந்தை தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் திருப்பி அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தில் விஷத்தன்மை இருந்ததாகவும், இதுபற்றி ஆரம்பத்திலேயே கண்டறியப்படாதது ஏன் என்பதும் பெரும் கேள்விகளை எழுப்பி உள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் டிஜிட்டல் விஷன் நிறுவனம் Coldbest - PC Syrup என்கிற பெயரில் இருமல் மருந்தை தயாரித்து வருகிறது. இந்த மருந்து இமாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட போதிலும் சென…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜெயலலிதா மரண விவகாரம்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீடிப்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் 7வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு, டிசம்பர் 5ஆம் திகதி காலமானார். அவரது மரணம் குறித்து சர்ச்சை எழுந்ததால் விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்துத் தமிழக அரசு கடந்த 2017ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இந்த ஆணையம், 3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு உத்த…
-
- 0 replies
- 471 views
-
-
மகஇகவில் இருந்து மருதையன் விலகல்! மின்னம்பலம் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், புதிய கலாச்சாரம் இதழின் ஆசிரியராகவும் இருந்த மருதையன் இயக்கம் சம்பந்தப்பட்ட தனது அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக இன்று (பிப்ரவரி 24) அறிவித்திருக்கிறார். கடந்த 35 ஆண்டுகளாக ம.க.இ.க வின் செயலராக தமிழகத்தின் அரசியல் சக்திகள், வாசகர்கள், ஊடகத்தினர் மற்றும் மக்களிடையே அறிமுகமாகியிருக்கின்ற மருதையனுடன், மாநில செயற்குழு உறுப்பினரான நாதனும் தனது விலகலை அறிவித்துள்ளார். 24.2.2020 தேதியன்று கூட்டப்பட்ட ம.க.இ.க. மாநில செயற்குழுவின் அவசரக்கூட்டத்தில் மருதையனும், நாதனும் தமது விலகலை முன் வைத்தார்கள். ஆனால்,மாநில செயற்குழு தோழர்கள் அதனை ஒருமனதாக நிர…
-
- 0 replies
- 1.1k views
-
-
வருமான வரி விவகாரம்: எங்க சசிகலாவுக்கு ஒரு நீதி? உங்க ரஜினிகாந்துக்கு ஒரு நீதியா?- சீமான் வருமான வரித்துறை விவகாரத்தில் சசிகலாவுக்கு ஒரு நீதி? ரஜினிகாந்துக்கு ஒரு நீதி ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக நேற்று ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: குடியுரிமை சான்றிதழ்களை நாம் தமிழர் கட்சியினர் எவரும் தர மாட்டோம். எங்களை முகாம்களில் அடைத்தாலும் அதை ஏற்போம். குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராடுகின்றனர். இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல; நாளை நம…
-
- 0 replies
- 411 views
-
-
பூணூல் போட்டால் மட்டுமே குடியுரிமை கிடைக்கும் | விளாசிய திருமுருகன் காந்தி
-
- 0 replies
- 484 views
-
-
யாரும் அறியாத விஜய்யின் அரசியல் நகர்வுகள் - ரவீந்திரன் துரைசாமி பேட்டி
-
- 0 replies
- 512 views
-
-
தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை ஆரம்பித்து இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டடுள்ளார். திருச்செந்தூர் அருகே வீரபாண்டிய பட்டணத்தில் சிவந்தி ஆதித்தனாருக்கு கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த முதலமைச்சர், அங்கு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலையில் 52 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடல் அரிப்புத் தடுப்புச் சுவர் கட்ட…
-
- 0 replies
- 370 views
-
-
பாத்ரூம் ஓட்டை வழியாக.. மாணவிகளை வீடியோ எடுத்த உதவி பேராசிரியர்.. சென்னை ஐஐடியில் கருமம்! பாத்ரூம் பைப் ஓட்டை வழியாக மாணவிகளை படம் பிடித்துள்ளர் உதவி பேராசிரியர்.. இந்தியாவிலேயே சிறந்த பல்கலை. என பெயர் வாங்கும் சென்னை ஐஐடியில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது! கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவி அவர்.. பிஎச்டி படித்து வருகிறார்... விண்வெளி பொறியியல் துறை தொடர்பான பயிற்சிக்காக சென்னை ஐஐடி-யில் சேர்ந்துள்ளார். இதே துறையில் சுபம் பேனர்ஜீ என்பவர் திட்ட அலுவலராக வேலை பார்க்கிறார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதியம் தனது டிபார்ட்மென்ட் அருகே உள்ள பாத்ரூமுக்கு சென்றார் மாணவி.பிறகு யதேச்சையாக அங்கிருந்த சுவற்றை பார்த்தார்.. அப்போதுதான் அதில் சின்ன ஓட்டை இருப்ப…
-
- 2 replies
- 992 views
-
-
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இயங்கிவரும் புதுப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்ததையடுத்து, தலைமை ஆசிரியை குமரேஸ்வரி செவ்வாய்கிழமை முதல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தும் சட்டரீதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கிறார் சிறுமியின் தாய் மகேஸ்வரி. நாங்கள் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். எனது கணவர் ஓர் மாற்றுத்திறனாளி. நான் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறேன். எனது மூத்த மகள் புதுப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சில நா…
-
- 1 reply
- 1.1k views
-
-
படத்தின் காப்புரிமை A Pavendhan காமன் டின்சில் (common tinsel) என்ற அரியவகை பட்டாம்பூச்சி முதல்முறையாக தமிழகத்தின் கிழக்கு தொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்டுள்ளது. யானை, புலி உள்ளிட்ட பெரிய விலங்குகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் போலவே, பட்டாம்பூச்சிகளுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக புதிதாக கண்டறியப்பட்ட பட்டாம்பூச்சி குறித்த விழிப்புணர்வை சேலம் மாவட்ட வனத்துறையோடு சேர்ந்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஏற்படுத்திவருகின்றனர். இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகள் மீது செலுத்தப்படும் கவனத்தில் பாதியளவு கூட கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மீது செலுத்தப்படுவதில்லை என்கிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள். ஒடிஷாவில் தொடங்கி, ஆந்திர பிரதேசம், தமிழக…
-
- 0 replies
- 503 views
-