தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10268 topics in this forum
-
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை.. மோடிக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதித்ததற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்கும் வகையில் மத்திய அரசு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.தமிழக அரசின் கோரிக்கையின்படி மத்திய குழு 5 இடங்களில் பார்வையிட்டது. தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களை பார்வையிட்டது. இப்போது மது…
-
- 1 reply
- 663 views
-
-
பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் பிணை வழங்கியது. பா.ஜனதா கட்சி பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக வெளியிட்டிருந்த கருத்து கடும் எதிர்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், எஸ்.வி. சேகர் மீது மத்திய ரயில் நிலையம் அருகில் உள்ள அல்லிகுளம் எழும்பூர் நீதிமன்றத்தி…
-
- 0 replies
- 790 views
-
-
சென்னை - சேலம் பசுமை வழிச் சாலையை எதிர்ப்பவர்களும் தமிழகத்தில் அரசின் திட்டங்களை எதிர்ப்பவர்களும் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுவருகின்றனர். சர்வாதிகார ஆட்சிபோல் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த சில நாட்களில் தமிழகத்தில் போராட்டங்களில் ஈடுபட்டுவந்த பல தலைவர்களும் செயல்பாட்டாளர்களும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரிப்பதற்காக தூத்துக்குடி சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடந்த மே மாதம் 26ஆம…
-
- 0 replies
- 558 views
-
-
தேர்தல் ஆணையத்தில் கமல் மனு! மக்கள் நீதி மய்யம் கட்சியைப் பதிவு செய்வதற்காக, இன்று டெல்லியிலுள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்றார் கமல்ஹாசன். கூடிய விரைவில் தங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்குமென்று, அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த பிப்ரவரி 21ஆம் தேதியன்று மக்கள் நீதி மய்யம் என்ற கட்சிப் பெயரையும் கொடியையும் மதுரையில் தொண்டர்கள் மத்தியில் அறிமுகம் செய்தார் நடிகர் கமல்ஹாசன். கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக, திமுக தலைவர் மு.கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் நல்லகண்ணு, நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட பல தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும…
-
- 0 replies
- 501 views
-
-
மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழச்சி! 2018ஆம் ஆண்டுக்கான இந்திய அழகி பட்டத்தைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனுகிரீத்தி வாஸ் பெற்றுள்ளார். 55ஆவது மிஸ் இந்தியா விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியத்தில் நேற்று (ஜூன் 19) இரவு நடைபெற்றது. ஃபெமினா மாத இதழ் நடத்திய இந்த நிகழ்ச்சியில் மாநில அளவில் சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 30 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்ட அனுகிரீத்தி சிறந்த இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற மானுஷி சில்லர் அவருக்கு கிரீடத்தை சூட்டி கௌரவப்படுத்தினார். இரண்டாம் இடத்தை ஹரியானாவைச் சேர்ந்த மீனாட்சி சௌத்ரியும் மூன்றாம் இடத்தை ஆந…
-
- 0 replies
- 695 views
-
-
ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 தொன் கந்தக அமிலம் அகற்றம் June 20, 2018 1 Min Read தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 தொன் கந்தக அமிலம் அகற்றப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22ம் திகதி நடந்த பேரணியின் போது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது. இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்படுவதாக முறைப்பாடுகள் வந்ததால் மாவட்ட உதவி கலெக்டர் தலைமையிலான குழுவினர் ஆலையில் ஆய்வு செய்தபோது ஸ்டெர்லைட் ஆலைய…
-
- 0 replies
- 471 views
-
-
இன்று ஆஜராகிறார் எஸ்.வி.சேகர்.. சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் விசாரணை. போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர் இன்று சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது பிரச்சனை ஆனது. இதில் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார்.இதனால் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. உடனே சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார்.ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கவில்லை. அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் கேட்டார். உச்ச நீதிமன…
-
- 0 replies
- 422 views
-
-
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ஏரியில் சாயக்கழிவுகள் மற்றும் செப்டிக் டேங்க் கழிவு நீர் கலந்து ஏரியில் பத்து நாட்களுக்கு மேலாக துர்நாற்றம் வீசுவதால் வாழ முடியவில்லை எனக் கூறி பொதுமக்கள் ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ளது கொட்டணத்தான் ஏரி. பனமரத்துப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெய்காரப்பட்டி பகுதியிலுள்ள கொட்டநத்தான் ஏரி சுமார் 390 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய ஏரியாகும். கொண்டாலாம்பட்டி, நெய்காரப்பட்டி, பூலாவரி, தம்மநாயக்கன்பட்டி, நிலவாரபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீரை பெருக்கும் முக்கிய ஏரியாக இந்த ஏரி உள்ளது…
-
- 0 replies
- 595 views
-
-
மீண்டும் ஆட்சியை பிடிக்க கருணாநிதியின் தந்திரத்தை பயன்படுத்துவோம் – மு.க.ஸ்டாலின் தமிழ்நிலாJune 17, 2018 கருணாநிதியின் தந்திரத்தை உரிய நேரத்தில் பயன்படுத்துவோம். தி.மு.க. ஆட்சி வெகு விரைவில் உதயம் ஆகும் என்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி யின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை அண்ணா நகரில் உள்ள எம்.ஜி.ஆர். காலனியில் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்துக்கு அண்ணாநகர் பகுதி செயலாளர் ச.பரமசிவம் தலைமை தாங்கினார். எம்.கே.மோகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்…
-
- 1 reply
- 693 views
-
-
திருமாவளவனை அவதூறாக விமர்சித்து வாட்ஸ் அப்பில் காணொலி வெளியிட்ட இளைஞர் கைது June 19, 2018 விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அவதூறாக விமர்சித்து வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட இளைஞரைக் கைது செய்த போலீஸார்அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை அடுத்த லிங்கனப்பட்டியைச் சேர்ந்தவர் மாதேஷ் (25). இவர் ஒரு அரசியல் கட்சியில் இருக்கிறார். இவர் கடந்த ஏப்ரம் மாதம் வாட்ஸ் அப்பில் காணொலி ஒன்றை வெளியிட்டார். அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் அவர் சார்ந்த சமுதாயத்தினரை அவதூறாக, ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்திருந்தார். அந்தக் காணொலியில் திருமாவளவனை விமர்…
-
- 1 reply
- 648 views
-
-
தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற துடிக்கும் தேசத் துரோகிகளின் சூழ்ச்சி
-
- 2 replies
- 725 views
- 1 follower
-
-
`வேதாந்தா குழுமம் பா.ஜ.க-வுக்கு கொடுத்த நன்கொடைப் பணத்துக்கான கைம்மாறுதான் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி வந்த மக்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் துப்பாக்கிச்சூடு. இந்தச் சம்பவத்துக்கு மோடி அரசுதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மோடி அரசுக்கு தமிழகத்தின் அ.தி.மு.க அரசும் துணை போகிறது” என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி சி.பி.எம் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சில கிராமங்களுக்குச் சென்ற…
-
- 0 replies
- 459 views
-
-
பொங்கி வரும் காவிரி.. ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் அதிகளவில் வருவதால் தருமபுரி ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் வயநாடு, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணை வேகமாக நிறைந்தது. நேற்று நீரின் அளவு 37,000 கனஅடியானது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. …
-
- 2 replies
- 848 views
-
-
ராஜீவ் கொலை – முக்கிய குற்றவாளி இத்தாலியில் – 7 தமிழர் விடுதலை மறுப்பு சுப்பர் வரவேற்பு…. June 15, 2018 ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக, 7 தமிழர் விடுதலை கோரிய மனு ஜனாதிபதியால் நிராகரிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், அதனை பாஜக சிரேஸ்ட்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பேரறிவாளன் உள்பட 7 பேர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலேயே இருப்பதால், அவர்களைக் கருணை அடிப்படையில், விடுதலை செய்ய வேண்டும் என, தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு இந்தக் கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. …
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
மு.பார்த்தசாரதி ``ஏப்பா, என்னப்பா நடக்குது? காலையிலிருந்தே புள்ளைகள் போன் போட்டு அறிவு விடுதலைக்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவிச்சுட்டாரு. இனிமே வெளியவர வாய்ப்பே இல்லைன்னு சொல்றாங்களே உண்மையா? மனசு கலங்குதுப்பா. தலை சுத்துது. தப்பா நெனச்சுக்காதே அம்மா கொஞ்ச நேரம் கழிச்சு திரும்பவும் கூப்பிடறேன்!'' 27 வருடங்களாக சிறையிலிருக்கும் தன் மகனின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் பாசத் தாயின் வேதனைக் குரல். …
-
- 5 replies
- 1.4k views
- 1 follower
-
-
தூத்துக்குடியில், தொடரும் கைது நடவடிக்கைகளை நிறுத்திட வலியுறுத்தியும் கைதுசெய்தவர்களை விடுவிக்கக்கோரியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு பல கட்சிகள், அமைப்புகள் எனப் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்களை விசாரணை செய்கிறோம் எனக் காரணம் கூறி, காவல்துறையினர் நள்ளிரவில் வீடுகளில் புகுந்து கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்ந்து நட…
-
- 0 replies
- 392 views
-
-
``நடிகர் கமல்ஹாசன் காவிரி நடுவர் மன்றம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். தெரிந்த வேலையைச் செய்தால்தான் நல்லது. தெரியாத வேலையைச் செய்யக் கூடாது" என்று கடுமையாக விமர்சித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன். சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். இதில் மத்திய அரசு கபட நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறது. ராகுல், சோனியா விடுதலை செய்யச் சொல்லியும் மனிதாபிமானம் அடிப்படையில் இன்னும் விடுதலை செய்யாமல் இருந்து…
-
- 0 replies
- 515 views
-
-
அ.தி.மு.க அணிகள் இணைந்தாலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையிலான மனக்கசப்புகள் மறையவில்லை என்றே தகவல்கள் வெளியாகின. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அடுத்த சில நாள்களில் அ.தி.மு.கவின் தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.கவின் சட்டமன்றக் குழுத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டு, முதலமைச்சராக விரைவில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சசிகலா தலைமையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் கலகக் குரல் எழுப்பினார். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தியானத்தி…
-
- 0 replies
- 425 views
-
-
தூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது! தூத்துக்குடியில் ஸ்டெட்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடும் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனது ஊர் ஆரியப்பட்டி. இந்த கிராமத்திற்கு அருகே உள்ள முண்டுவேலன்பட்டியில் தோழர் கோட்டை என்பவர் இரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். தற்போது பள்ளியில் படித்திக் கொண்டிருக்கும் அவரது 15 வயது மகனை கைது செய்து உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்திருக்கிறது. கேட்டால் தடுப்புக் காவல் – கைது என்கிறது. …
-
- 0 replies
- 430 views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார் கள். இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத…
-
- 2 replies
- 760 views
-
-
யார் நீங்க " என்று ரஜினியை இதற்காகத்தான் கேட்டேன்... காரணம் சொல்கிறார் தூத்துக்குடி இளைஞர் ஜெ.அன்பரசன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று, தூத்துக்குடி சென்றார். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர் ஒருவர், ``நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?" என ரஜினியைப் பார்த்துக் கேட்டார். இதையடுத்து இறுக்கமான முகத்துடன் நடிகர் ரஜினி, அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தூத்துக…
-
- 4 replies
- 990 views
- 1 follower
-
-
டிடிவி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்படவிருக்கிறது. படத்தின் காப்புரிமை Getty Images இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்பட்டுவந்தது. ஜனவரி 23ஆம் தேதியன்று வாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று பிற்பகல் சுமார் ஒன்றரை மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீ…
-
- 0 replies
- 516 views
-
-
Published : 14 Jun 2018 16:47 IST Updated : 14 Jun 2018 17:06 IST உதகையிலிருந்து குன்னூர் நோக்கி சென்ற அரசு பேருந்து 50 அடி பள்ளத்தில் உருண்டது. இதில் 2 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 26 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து இன்று (வியாழக்கிழமை) காலை சுமார் 11.30 மணிக்கு அரசு பேருந்து குன்னூர் நோக்கி சென்றது. இந்த பேருந்த ஓட்டுநர் ராஜ்குமார் (42) என்பவர் ஒட்டிச் சென்றார். பேருந்து மந்தாடா பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென சாலையோரத்திலிருந்து 50 அடி பள்ளத்தில் உருண்டது. இதில், பயணித்தவர்கள் படுகாய…
-
- 0 replies
- 533 views
-
-
ம.தி.மு.க பொதுச் செயலாளரான வைகோ, ஆயுர்வேதச் சிகிச்சைக்காகக் கேரளாவுக்குச் சென்றுள்ளார். புத்துணர்வு சிகிச்சைக்காகச் சென்றுள்ள அவருக்கு மூலிகை குளியல், ஆயில் மசாஜ், மூலிகை ஒத்தடம் எனப் பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக வெளி மாநிலங்களிலிருந்து மட்டும் அல்லாமல், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வருகை தருகிறார்கள். ம.தி.மு.க பொதுச் செயலாளரான வைகோ ஒவ்வொரு வருடமும் கேரளாவுக்குச் சென்று மூலிக…
-
- 0 replies
- 613 views
-
-
`பசுமை வழிச்சாலைக்காகக் கருத்துக் கேட்புக் கூட்டம் எனக் கூறிவிட்டு, நெடுகிலும் போலீஸாரை நிறுத்தி அச்சப்பட வைக்கிறார்கள். எங்களைக் கொன்று புதைத்துவிட்டு ரோடு போடட்டும்' எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கொதிக்கின்றனர் அப்பகுதி மக்கள். சேலம் டு சென்னை வரையிலான எட்டு வழிப் பசுமை சாலைத் திட்டம் குறித்து, பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்கும் கூட்டம் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதையொட்டி, சேலம் கலெக்டர் வளாகம் முழுவதும் காவல்துறை குவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வோர் அடிக்கும் ஒரு போலீஸ் நிறுத்திவைக்கப்பட்டிருந்தார். இரண்டு வஜ்ரா வாகனங்கள் தயார் நிலையில் …
-
- 0 replies
- 479 views
-