தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
அ.தி.மு.க., துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட தினகரனுக்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில், நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகமாகி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால், பதவியை பிடிக்கும் எண்ணத்தில் உள்ள கட்சியின் கிளை கழக நிர்வாகிகள், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணிக்கு ஓட்டம் பிடித்து வருகின்ற னர். தங்களது கூடாரம் காலியாவதால், சசிகலா தரப்பு கலக்கத்தில் உள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்ப அரசியலை, மறைந்த முதல்வர்கள் எம்.ஜி. ஆர்., - ஜெயலலிதா ஆகியோர் எதிர்த்து போராடினர். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாரும், கட்சி பதவியில் நியமிக்கப்பட்டது கிடையாது. ஆனால், ஜெ., மறைவுக்குப் பின், அ.தி.மு.க., தற்காலிக பொதுச்ச…
-
- 0 replies
- 218 views
-
-
சசி குடும்பம் நாடகம்: இ.பி.எஸ்., தந்திரம்! இரட்டை இலை சின்னத்திற்கான ஏமாற்று வேலை இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற, இடைத் தரகர் மூலம் மேற்கொண்ட முயற்சி, தோல்வி அடைந்ததால், சசிகலா குடும்பம் கட்சியை விட்டு விலகுவது போல நடித்து, அ.தி.மு.க.,வினரையும், மக்களையும் ஏமாற்ற, இ.பி.எஸ்., தரப்பினர் போட்ட தந்திரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தேர்தல் அறிவிப்பு அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கக் கோரி, பன்னீர் அணி சார்பில், தேர்தல் கமிஷனில், மனு கொடுக்கப்பட்டது. இம்மனு மீதான விசாரணை துவங்கும் முன், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 912 views
-
-
மதராஸ் கபே திரைப்படம் முழுக்க முழுக்க தமிழர்களின் உணர்வை மேலும் கொச்சைப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது சுமார் நான்கு லட்சம் உயிர்களை இழந்து நிற்கும் எங்கள் தமிழனத்தின் வேதனை தீயில் மீண்டும் இவர்கள் இந்த திரைப்படம் மூலம் எண்ணையை ஊற்றிகிறார்கள் இதை தமிழகத்தில் வெளியிட்டால் தமிழகம் கொந்தளிக்கும் என்ற நோக்கிலும் மற்றும் சட்டம் , ஒழுக்கு , பிரச்சனை, உருவாக்கும் . முழுக்க முழுக்க இது காங்கிரசின் எண்ணமும் மற்றும் சதிவேலையும் இது வருகின்ற பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு போடப்பட்ட திட்டம்தான் , இந்த மெட்ராஸ் கபே திரைப்படம் , நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை கணக்கில் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் எங்கள் இனத்தின் விடுதலை வேரோடு திசைதிருப்ப காங்கிரசின் ஏற்படுத்த…
-
- 0 replies
- 389 views
-
-
மிஸ்டர் கழுகு: தோப்பு 2.0 ‘‘பேரையும் கேட்க வேண்டாம், ஊரையும் கேட்க வேண்டாம். கட்சியை மட்டும் சொல்கிறேன். அந்தப் பெண் பிரமுகர், பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர். சென்னையில் மட்டுமல்ல, டெல்லி வரை செல்வாக்கு உள்ளவர். அவரை மையப்படுத்தி எழும் குற்றச்சாட்டுகளைப் பார்த்து பி.ஜே.பி தலைமையே மலைத்துப் போயுள்ளதாம்” என்ற பீடிகை போட்டார் கழுகார். உள்ளே வந்ததும் புதிரோடு ஆரம்பிக்கிறாரே என்று அமைதியாக இருந்தோம்! ‘‘சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் எலெக்ட்ரானிக் நிறுவனத்தை அந்த வி.ஐ.பி-யின் தம்பி தலைமைப் பொறுப்பில் இருந்து நடத்தினார். அந்த நிறுவனம், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவில் 60.92 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டதாக சி.பி.ஐ-க்கு அந்த வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை: தமிழ் மான உணர்வுச் சுடர் அணைந்தது என்று மாலைமுரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை... தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் தலைமகன், மாலை முரசு ஏட்டின் அதிபர் இராமச்சந்திர ஆதித்தனார் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாய் தாக்கியது. அதிர்ச்சியால் மனம் கலங்குகிறேன். தன் தந்தையாரைப் போலவே தமிழ் இனமான உணர்வு கொண்டவராக தமிழ் ஈழ விடுதலை உணர்வாளராகவே வாழ்ந்தார். தமிழர்கள் உரிமைக்காக, தமிழ் ஈழ விடியலுக்காக தனது மாலைமுரசு ஏட்டையும், தான் நடத்திய கதிரவன் பத்திரிகையையும் அர்ப்பணித்தார்.பல ஆண்டுகளாக அவரது பரிவான நட்பைப் பெற்றிருந்தேன். நான் சந்திக்கும்போதெல்லாம் தமிழர் நலன், ஈழ வ…
-
- 0 replies
- 511 views
-
-
சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல இன்று முதல் தடை ஒமிக்ரோன் பரவல் காரணமாக சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் செல்வதற்கு தடை விதித்து மாநகராட்சி அறிவித்துள்ளது. நடைபயிற்சி செல்வோர் நடைபயிற்சி பாதையில் மட்டும் செல்வதற்கு அனுமதி உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணல்பரப்பில் செல்வதற்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பிரத்யேக நடைபாதையில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் ஒமிக்ரோன் தொற்று பரவி வருவதை தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்துவதற்கும் திருமணம் உள்ளிட்ட சமு…
-
- 0 replies
- 271 views
-
-
சிவகங்கை: மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பிரத்யங்கிராதேவி கோவிலில் சத்ய சத்குரு யாகம் நடத்தியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே சொக்கநாதபுரத்தில் பிரத்யங்கிராதேவி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சென்று வணங்கினால் இழந்த செல்வம், புகழ், பணம் போன்றவை கிடைக்கும் என்ற நம்பிக்கை காலங்காலமாக உள்ளது. மேலும், யாகம் வளர்த்தால் எதிரி அழிந்து போவார்கள் என்றும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக இந்த கோவிலுக்கு சாதாரண பக்தர்களை காட்டிலும், பிரபல அரசியல் தலைவர்கள் மிகவும் ரகசியமாக வந்து சாமி தரிசனம் செய்வதும், யாகம் வளர்ப்பதும் நடைபெற்று வருவது வழக்கம். இந்த நிலையில் அமாவாசை அன்று நடைபெறும் மிளகாய் வத்தல் யாகம் வழக்கத்திற்கு மாறாக ந…
-
- 0 replies
- 727 views
-
-
மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஓராண்டு ஆட்சி சாதனையா, சாதாரணமா? விரிவான அலசல் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 6 மே 2022 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி ஒட்டுமொத்தமாக 159 இடங்களையும் தி.மு.க. மட்டும் 133 இடங்களையும் கைப்பற்றின. மே 7ஆம் தேதியன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தி.மு.க. தலைவர…
-
- 0 replies
- 294 views
- 1 follower
-
-
சென்னையில வீடு வாங்குறது குதிரைக்கொம்பா மாறிட்டு வருது. அபார்ட்மென்ட் வீடுகளோட விலை எப்பவுமே ஏறுமுகமாத்தான் இருக்கு. இந்த வாரத்தில ஒவ்வொரு ஏரியாவிலேயும் அபார்ட்மென்ட், சதுர அடிக்கு எவ்வளவு விலை போகுதுங்கிற தகவல் இதோ... ஏரியா விலை (ஒரு சதுர அடிக்கு) பெசன்ட் நகர் Q.11450 Q.15900 ஜிஎஸ்டி சாலை Q.3100 Q.3600 கூடுவாஞ்சேரி Q.2800 Q.3250 ஹஸ்தினாபுரம் Q.3750 Q.4150 கீழ்க்கட்டளை Q.4400 Q.4950 நங்கநல்லூர் Q.5750 Q.6600 படூர் Q.3400 Q.4000 பம்மல் Q.3500 Q.4000 பெருங்களத்தூர் Q.3550 Q.4200 பொத்தேரி Q.3050 Q.3400 சேலையூர் Q.3400 Q.4200 செம்பா…
-
- 0 replies
- 704 views
-
-
சென்னை: மோடி பிரதமராக பதவியேற்க தயாராகும் நேரத்தில் கிட்டத்தட்ட அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் போல மாறிவிட்டார் திமுக பிரச்சார பீரங்கியான நடிகை குஷ்பு. மோடியின் கொ.பா.சேவாக 'மாறிய' குஷ்பு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக கூட்டணி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என தமிழகத்தில் ஐந்து முனை போட்டி நிலவியது. திமுகவின் பிரச்சார பீரங்கியான நடிகை குஷ்பு, பாஜகவையும், மோடியையும் விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், இப்போது குஷ்புவின் மோடி மீதான நிலைப்பாட்டில் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன. நரேந்திரமோடியின் டுவிட்டர்களை ரீடுவிட் செய்வதிலேயே குஷ்பு இன்று பெரும்பொழுதை கழித்தார் என்றால் அது மிகை கிடையாது. "நாட்டின் முன்னேற்றத்துக்கு பெண்கள் பங்களிப்பு அவசியம். வீ…
-
- 0 replies
- 642 views
-
-
மிஸ்டர் கழுகு: திவாகரன் - தினகரன் - விவேக்: முற்றுகிறது முக்கோண மோதல்! அதிகாலையிலேயே மப்ளர் சுற்றிக்கொண்டு வந்திறங்கினார் கழுகார். சூடாக லெமன் டீ கொடுத்து உற்சாகப்படுத்தினோம். ‘‘சென்னைக் குளிரைவிட பெங்களூரில் குளிர் மிக அதிகம்’’ என்றார். ‘‘பரப்பன அக்ரஹாரா சிறைப்பக்கம் போயிருந்தீரா?’’ என்றோம். ‘‘ஆமாம். சசிகலா குடும்பத்துக்குள் முக்கோண மோதல் முற்றியிருக்கிறது. அதன் சுவடுகள் எதுவும் தெரியாதபடி அமைதியாக இருக்கிறது அந்தச் சிறைச்சாலை.’’ ‘‘யார் யாருக்குள் மோதல்?’’ ‘‘தினகரன், விவேக், திவாகரன்... மூன்று பேருக்கும்தான் மோதல். சசிகலா சிறைக்குப் போன நாளிலிருந்தே, ‘குடும்பத்துக்குள் அதிகாரத்தை யார் வசப்படுத்துவது’ என்பதில் மோதல் நடந்துவருகிறது. அ…
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது: பிரதமருக்கு முதல்வர் கடிதம் Published By: RAJEEBAN 23 MAR, 2023 | 03:36 PM பாக் ஜலசந்தி பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பறிக்கும் வகையிலான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் இன்று (23-3-2023) 12 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது இரண்டு விசைப்படகுகளுடன் (IND-TN-08-MM-1802 மற்றும் IND-TN-08-MM-65) கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தினை இந்தி…
-
- 0 replies
- 447 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ச. பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஒரு சிறிய வீட்டில் ஜெபம் செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, கிறிஸ்தவ முன்னணி என்ற அமைப்பு பேசிய கருத்தைக் கண்டித்து, 10,000-க்கும் மேற்பட்டோர் இந்து முன்னணி தலைமையில் போராட்டம் நடத்தியிருந்தனர். இது தமிழக அளவில் பெரும் பேசுபொருளானது. இந்தச்சம்பவம் நடந்தது எப்படி என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு செய்தது. படக்குறிப்பு, ஜெபம் நடந்த வீடு அமைந்துள்ள கிராமம் சென்னிமலையில் என்ன நடந்தது? ஈரோட…
-
- 0 replies
- 651 views
- 1 follower
-
-
தமிழக அரசு மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1.64 லட்சம் பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார்.அதன்பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில்,தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கையில், வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்னரே, கன மழை பெய்யும் போது மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தேன். …
-
- 0 replies
- 196 views
-
-
பேரறிவாளனின் பரோல் மேலும் ஒருமாதம் நீட்டிப்பு! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோலில் வெளிவந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் பரோலை நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட பரோல் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் தமிழக அரசு பரோலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. https://www.vikatan.com/news/general-news/12th-december-2019-just-in-updates
-
- 0 replies
- 463 views
-
-
நாளை சூரிய கிரகணம்... சென்னையில் 26 நிமிடங்கள் பார்க்கலாம்! சென்னை: நாளை அதிகாலை நிகழும் சூரிய கிரகணத்தை, சென்னையில் 26 நிமிடம் பார்க்க முடியும். சூரிய கிரகணத்தை, வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என அறிவியலாளர்கள் எச்சரித்து உள்ளனர். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அமாவாசை தினத்தன்று தான் சூரிய கிரகணம் நிகழும். இதனால் சூரியன், முழுவதுமாகவோ அல்லது பகுதியோ மறைக்கப்படும். பொதுவாக ஓராண்டில் 2 முதல் ஐந்து சூரிய கிரகணங்கள் வரை நடப்பதுண்டு. சில ஆண்டுகளில் சூரிய கிரகணம் ஏற்படாமலும் போகலாம். இந்தியாவில் முழு சூரிய கிரகணம் கடந்த 2010–ம் ஆண்டு ஜனவரி மாதம் 15–ம் தேதி ஏற்பட்டது. நடப்பாண்டில் 2 சூரிய கிரகணங்கள் ஏற்பட உள்…
-
- 0 replies
- 518 views
-
-
வைகோ | கோப்புப் படம்: பிடிஐ 'சந்திரகுமார் செய்தது பச்சை துரோகம். இதைவிட விஜயகாந்துக்கு பாலில் விஷம் கொடுத்திருக்கலாம்' என்று மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று சென்னையில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: ''அதிமுகவும் இன்னொரு கட்சியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து அழைக்கிறது. அடுத்த முறை அதிமுகவில் எம்எல்ஏ சீட் கொடுத்து, அமைச்சராக்குவேன் என்று உறுதி தருகிறது. ஆசை வார்த்தை காட்டுவது, பணத்தைக் கொடுப்பது, கட்சியை விட்டு வா என்கிறது. திமுகவுடன் கூட்டணி வைத்தால் விஜயகாந்த் நல்லவர் என்று திமுக சொல்லும். வராததால் தேமுதிகவை…
-
- 0 replies
- 433 views
-
-
’45-வது ஆண்டில் அ.தி.மு.க.!’ வரலாற்றின் பரபர பக்கங்கள்...! 1960 களின் துவக்கத்தில் பத்திரிகையாளர் தமிழ்வாணன் தனது கல்கண்டு பத்திரிகையில் “ விரைவில் திமுக பிளவுறும். எம்.ஜி.ஆர் கட்சியை விட்டுவெளியேறுவார்” என்ற தலைப்பில் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். எழுதும்போது அவருக்கே சிரிப்பு வந்திருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் அதைப்படித்த யாரும் நிச்சயம் சிரித்திருப்பார்கள். ஏன் அண்ணா, எம்.ஜி.ஆர் கருணாநிதியே கூட அதைப்படித்து சிரித்திருக்கலாம். ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் அதுதான் நடந்தது. 44 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் தமிழகத்தில் அதிமுக என்ற கட்சி உதயமானது. தமிழ்த் திரைத்துறையில் நல்ல நண்பர்களாக திகழ்ந்த கருணாநிதி எம்.ஜி.ஆர் என்ற இரண்டு ஆளுமைகளிடையே எழு…
-
- 0 replies
- 577 views
-
-
சசிக்கு எதிராக கிளம்பிய கே.பி.முனுசாமிக்கு ஆதரவு ஊர் ஊராக போஸ்டர் ஒட்டி உற்சாக வரவேற்பு அ.தி.மு.க.,வில், சசிகலாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக குரல் கொடுத்த, முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமிக்கு ஆதரவு தெரிவித்து, அ.தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். அவரை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது போஸ்டர்களை, கட்சியினர் கிழித்து வருகின்றனர். எதிர்ப்பாளர்களுக்கு பதிலளிக்கும் வகையில், தஞ்சாவூரில் நடந்த பொங்கல் விழாவில், திவாகரன் பேசும் போது, 'அ.தி.மு.க.,வை துவக்கிய…
-
- 0 replies
- 351 views
-
-
எம்.எல்.ஏ.,க்களை கண்காணிக்க சசிகலா உறவினர்கள் ஏற்பாடு சசிகலா முதல்வராவதை விரும்பாத, அ.தி. மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் திசை மாறாமல் இருக்க, அவர்களை, சசிகலாவின் உறவினர் கள், ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். அ.தி.மு.க., பொதுச் செயலராக நியமனம் செய்யப்பட்ட சசிகலா, முதல்வராக முடிவு செய்தார். அதன்படி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள், சட்டசபை குழு தலைவராக, அவரை தேர்வு செய்தனர். பெரும்பாலானோர், விருப்ப மின்றி, சசிகலா உறவினர்களின் நெருக்கடியால் சம்மதித்துள்ளனர். சசிகலா மீது அதிருப்தியில் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர்பன்னீர்செல்வம் உட்பட முக்கிய…
-
- 0 replies
- 250 views
-
-
சசிகலா இல்லாத அ.தி.மு.க! - சீனியர்களை வளைக்கும் பன்னீர்செல்வம் #VikatanExclusive பெங்களூரு சிறையில் இருந்துகொண்டே தமிழக அரசியல் நிலவரங்களைக் கவனித்துவருகிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா. 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தீபாவுக்கு வெற்றி கிடைத்துவிட்டால், சசிகலாவின் அரசியல் வாழ்வு முடிவுக்குவந்துவிடும். அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகளை பன்னீர்செல்வம் அணியை நோக்கி இழுக்கும் முயற்சிகளும் வேகம் பெற்றுள்ளன' என்கின்றனர் சசிகலா எதிர்ப்பாளர்கள். 'ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவேன்' என்ற அறிவிப்பின் மூலம், கார்டன் வட்டாரத்தை கதிகலங்கவைத்திருக்கிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. 'அப்போலோவில் நடந்த சம்பவங்களுக்கு விசாரணைக் கமிஷன் தேவை' எனக் கூடு…
-
- 0 replies
- 467 views
-
-
சென்னை: அரசியலில் அதிகம் ஆர்வம் உள்ளதாகவும், நல்ல அரசியல் கட்சியில் சேர விரும்புவதாகவும் நடிகை நமீதா தெரிவித்துள்ளார். நடிகை நமீதா சமூக சேவையில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். கண்தானம், ரத்ததான முகாம் உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் அண்மையில் கண் தானம் செய்வதை வலியறுத்தி சென்னையில் நடந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டார். நமீதா இது போன்ற சமூக சேவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நமீதா ஒரு பைசா கூட வாங்குவதில்லை. இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நமீதாவை புகழந்து தள்ளுகிறார்கள். வெளிநாடுகளில் தெருவுக்கு தெரு பெண்கள் கழிப்பிடங்கள் இருப்பது போன்று நம் ஊரிலும் பெண்கள் கழிப்பிடங்கள் இருக்க வேண்டும் என்று நமீதா ஆசைப்படுகிறார். இதையடுத்து சென்னை ராய…
-
- 0 replies
- 462 views
-
-
ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை! ஆயுள் தண்டனைக் கைதிகள் 700 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சி.பி.ஐயின் விசாரணையில் உள்ளதாகவும், அதற்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்தார். அதேநேரம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணையை விரைந்து நடத்தி முடிப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். அதேவேளை கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை அரசு நடத்தும் எனத் தெரிவித்த அவர், குற்…
-
- 0 replies
- 318 views
-
-
“பல்வேறு தருணங்களில் இந்தியாவுக்கு துரோகம் செய்த இலங்கை அரசு, இம்முறையாவது இந்திய அரசின் கடனுதவி வசதியைப் பெற்றுக் கொண்டு ஆதரவாக இருக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்று என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “வரலாறு காணாத கடன் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உணவு மற்றும் எரிபொருள் வாங்குவதற்காக ரூ.18,090 கோடி கடன் வசதியை இந்திய அரசு வழங்கியிருக்கிறது. மத்திய அரசின் இம்முடிவு இராஜதந்திர நடவடிக்கை என்றாலும் கூட, இலங்கை அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வதற்கான சிறந்த வாய்ப்பாக இதை இந்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சீனா உள்ளிட்ட நாடுக…
-
- 0 replies
- 231 views
-
-
சசி சொத்து முடக்கம்: அரசு அடுத்த 'மூவ்' அடுத்த கட்டமாக, நீதிமன்றம் விதித்த, அபராத தொகைக்கு ஈடாக, சசிகலாவின் சொத்துகளை முடக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெ., முதல்வராக இருந்த போது, வருமானத் திற்கு அதிகமாக, சொத்து குவித்த வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம், அவருக்கு, 100 கோடி ரூபாய் அபராதமும், நான்கு ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, தலா, நான்கு ஆண்டு சிறை தண்டனையும்,10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஜெ., இறந்து விட்டதால்,அவருக்கு எதிரான வழக்கை, உச்ச நீதி மன்றம் கைவிட்டது.மற்ற மூவருக்குமான தண்டனையை உறுதிசெய்தது. அபராத தொகையை வசூலிக்கவும்…
-
- 0 replies
- 493 views
-