Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மிஸ்டர் கழுகு: தினகரன் பேசிய ஐந்து போன்கால்கள்! ‘‘என்னவோ தெரியவில்லை... இந்த ஆண்டு பிறந்தநாளின்போது கருணாநிதியை எல்லோருக்கும் பிடித்திருந்தது. ட்விட்டரில் #HBDKalaignar94 என்ற ஹேஷ்டாக் அகில இந்திய அளவில் அன்று முழுக்க டிரெண்டிங். எல்லா மீடியாக்களிலும் வாழ்த்து மழைதான்” என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். ‘‘கருணாநிதியின் சட்டமன்றப் பணிகள் வைர விழாவில் அகில இந்திய எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து விட்டாரே ஸ்டாலின்?’’ என்றோம். ‘‘கருணாநிதியின் பிறந்தநாள் விழா, வைர விழாக் கொண்டாட்டங்களைத் திட்டமிட்டபடி நடத்திக் காட்டிவிட்டார் ஸ்டாலின். உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் சோனியா காந்தியும், லாலு பிரசாத் யாதவும் வரவில்லை. மற்ற தலைவர்கள் சொன்னபடியே ஆஜராகிவிட்டார்கள். எல…

  2. டிடிவி தினகரனுக்கு 27 எம்எல்ஏக்கள் ஆதரவு: 3-வது அணியால் அதிமுகவில் உச்சகட்ட குழப்பம் அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை என தகவல் அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு 27 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் முதல்வர் கே.பழனிசாமி அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்த அமைச்சர் ஜெயக்குமார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ தெரிவித்தார். தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டெல்லி காவல் துறையால் கைது செய்யப்பட்ட தினகரன், கடந்த 2-ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 3-ம…

  3. கொடநாடு காவலாளி கொலையில் முக்கிய நபர் கைது! கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி எனச் சந்தேகிக்கப்படும் சயானை, நீலகிரி போலீஸார் இன்று கைதுசெய்துள்ளனர். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது கொடநாடு கொலை. கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணிபுரிந்துவந்த வடமாநிலத்தைச் சேர்ந்த பகதூர். கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி, கொடநாடு பங்களாவின் 10ஆம் எண் நுழைவுவாயிலில் மர்ம நபர்களால் கொலைசெய்யப்பட்டார். ஆரம்பம் முதலே மர்மங்கள் சூழ்ந்த இந்த விவகாரத்தில் வெளியான தகவல்கள், ஏகப்பட்ட சந்தேக முடிச்சுகளைப் போட்டிருந்தது. பங்களாவில் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. இது, கொள்ளை முயற்சிதான். அறையின் கண்ணாடியை உடைத்த மர்…

  4. ஜெ மரணம்! விடை தெரியாத சில கேள்விகள்!!! | Socio Talk |

  5. பொறுப்பேற்ற 100 நாட்களுக்கு பிறகு அமைச்சர்களின் அறைகளில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலக அறைகளில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் தொங்கவிடப்பட்டுள்ளது அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. Image captionஅமைச்சர்களின் அறைகளில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் தமிழக அமைச்சர்களின் அலுவலக அறைகள், அரசாங்க அலுவலக கட்டிடங்கள் போன்ற பொது இடங்களில், தமிழக முதலமைச்சராக பொறுப்பு வகிப்பவரின் புகைப்படங்கள் வைக்கப்படுவது வழக்கமான நடைமுறை தான் என்றாலும், பொறுப்பேற்ற 100 நாட்களுக்கு பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பல்வ…

  6. தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவில் 3-வது அணி: முதல்வர் பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழக்கிறதா? சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்துவிட்டுத் திரும்பும் தினகரன். அதிமுகவில் தற்போது தினகரன் தலைமையில் மூன்றாவது அணி உருவாகியுள்ளது. இந்த அணிகளால் முதல்வர் கே.பழனிசாமியின் அரசு பெரும்பான்மை பலத்தை இழக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. முதல்வர் பதவிக்கு சசிகலா ஆசைப்பட்டதால், அவருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கி னார். இதனால் ஓபிஎஸ், சசிகலா தலைமை யில் இரு அணிகளாக அதிமுக பிரிந்தது. சசிகலா அணிக்கு எம்எல்ஏக்கள் …

  7. எடப்பாடி - 99, தி.மு.க. கூட்டணி - 98, தினகரன் - 25, ஓ.பி.எஸ்-12... தள்ளாடும் தமிழ்நாடு ! மீண்டும் ஒருமுறை பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்டத்துக்கு ஆளும் அ.தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், டி.டி.வி. தினகரனின் அரசியல் பிரவேச அறிவிப்பால் எடப்பாடி அரசு தள்ளாடத் தொடங்கியுள்ளது. டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து இதுவரையில் 25 எம்.எல்.ஏ.க்கள் அவர் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். ஆக, இந்த நிமிடக் கணக்குப்படி 97 எம்.எல்.ஏ.க்களை கொண்ட ஆட்சியாக எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு இருக்கிறது. அடுத்தடுத்த அரசியல் வானிலை மாற்றங்களைப் பொறுத்து 97-ல் கொஞ்சம் …

  8. ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் இப்போது என்ன நடக்கிறது..? #SpotReport #VikatanExclusive “ஆலத்தூர் கருங்குழி பள்ளம் அருகே அம்மா தோட்டம் என்று அழைக்கப்படும் சிறுதாவூர் பங்களாவை அடுத்துள்ள எங்களுடைய நிலத்தை சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் அபகரித்துக் கொண்டனர்" என்று ஒரு தம்பதியர் நமக்குப் புகார் தெரிவித்தனர். அபகரிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட அந்த நிலத்தைப் பற்றித்தெரிந்து கொள்ள அந்த இடத்துக்குப் பயணமானேன். திருப்போரூர் சென்றதும், அங்கிருந்து சிறுதாவூருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று அங்கிருந்த ஒரு கடையின் வாட்ச்மேனிடம் வழி கேட்டேன்." அரசு பேருந்து, டெம்போ போன்ற எல்லாமே அந்தவழியாப் போகும். ஆனா பஸ்ல போறதுதான் நல்லது" என்று அக்கறையுடன…

  9. ‘உனக்கு இந்தப் பதவியைக் கொடுத்தது யார்?’ - தினகரனைத் திட்டித் தீர்த்த சசிகலா #VikatanExclusive ‘அ.தி.மு.கவில் இருந்து தினகரனை ஒதுக்கி வைக்கும் முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்' என நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்ததை அதிர்ச்சியோடு கவனிக்கிறது சசிகலா அணி. ‘பெங்களூரு சிறையில் சசிகலாவின் கோபத்தை தினகரனால் எதிர்கொள்ள முடியவில்லை. ‘இரண்டு மாதம் அமைதியாக இரு' என்று அவர் கூறியதை, அணிகள் இணைவதற்கான அவகாசமாக மாற்றிக் கூறிவிட்டார் தினகரன்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், முன்ஜாமீன் பெற்ற கையோடு, ‘கட்சிப் பணிகளில் ஈடுபாடு காட்டப் போகிறேன்' என அறிவித்தார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். இதற்கு ஆதரவு…

  10. முன்னாள் எம்.பி இரா செழியன் காலமானார் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா செழியன் (95) உடல்நலக் குறைவால் வேலூரில் காலமானார். அரசியல்வாதி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், எழுத்தாளர் எனப் பல தகுதிகளைக் கொண்டவர். இவர் பிறந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரம். ஜனநாயக உரிமைகளைப் பேணிக் காப்பதிலும் ஊழலுக்கு எதிரான முயற்சிகளிலும் ஈடுபட்டவர். மறைந்த அமைச்சர் நெடுஞ்செழியனின் தம்பி ஆவார். சிறுகதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். மாணவர் காலத்திலேயே திராவிட இயக்கத்தில் சேர்ந்தார். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டபோது அண்ணாதுரையுடன் நெருக்கமாகப் பழகினார். அவரைத் தம் தலைவராகவும் வழிகாட்டியாகவும் கொண்டு அரசியல் வாழ்வை நடத்தினார். 1962, 1967 நாடாள…

  11. இடிபாடுகள் உரிமையில் சிக்கல்: சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி திடீர் நிறுத்தம் சென்னை தியாகராய நகரில் தீ விபத்தால் முற்றிலும் சேதமடைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெறுவதால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் இருந்து அகற்றப்படும் இடிபாடு களுக்கு இரு தரப்பினர் உரிமை கோரியதால் இடிக்கும் பணி நேற்று நிறுத்தப்பட்டது. சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் ‘தி சென்னை சில்க்ஸ்’ இயங்கி வந்தது. 7 மாடி கொண்ட இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை என்ற பெயரில் நகைக் கடை செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டிடத்தில் கடந்த 31-ம் தேதி அதிகாலை தீவிபத்து ஏற்…

  12. பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் டி.டி.வி.தினகரன்! பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேசினார். இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரனை டெல்லி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு மாத சிறைக்கு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் தினகரன். நேற்று முன்தினம் சென்னை வந்த தினகரனை அவரது ஆதரவாளர்கள் சென்னை விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து, சென்னை அடையாறில் உள்ளது தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட தினகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கட்சியில் இருந்து என்னை யாரும…

  13. ''தி.நகரில் மக்கள் நடமாட்டமே இல்லை...!'' -புலம்பும் சிறு வியாபாரிகள் தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில், 'தி சென்னை சில்க்ஸ்' ஜவுளிக்கடையில் கடந்த புதன் கிழமை (31-5-2017) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில், கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதில், தீயின் கோர நாக்குகள் ஜவுளிக்கடையின் அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து தீயை அணைக்கப் போராடினர். கட்டுக்கடங்காமல் எரிந்துகொண்டிருந்த தீயினால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால், தீயணைப்பு பணிகளில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும் தொடர்ந்து 36 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் தீ…

  14. பி.ஜே.பி-க்கு 'செக்': தமிழகத்தில் உதயமாகிறதா புதிய கூட்டணி? தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்றப் பணி வைரவிழா பொதுக்கூட்டம் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்திருப்பது பி.ஜே.பி-க்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.. சென்னையில் வெகுவிமரிசையாக நடைபெற்ற வைரவிழா பொதுக்கூட்டத்தில், இதுவரை இல்லாதவகையில் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக அணி திரண்டு, கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்கள். அத்துடன் அவர்கள், தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் திறமைகளை எடுத்துரைத்ததுடன், 'விரைவில் தமிழக முதல்வராக ஸ்டாலின் வருவார்' என்றும் குறிப்பிட்டனர். தமிழக அரசியல்களத்தைப் பொறுத்தவரை, டிசம்பர் 5-ம் தேதிக்குப் பிறகு, …

  15. பரோல் கோரி சசிகலா திடீர் மனு தாக்கல்! சொத்துக்குவிப்பு வழக்கில் நான் ஆண்டுகள் சிறைத் தண்டனைபெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் சசிகலா, பரோல் கேட்டு மனு தாக்கல்செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, பிப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மூவரும் பெங்களூரு சிறையில் தண்டனைபெற்றுவருகின்றனர். சசிகலா சிறைக்குச் சென்றதை அடுத்து, டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என…

  16. முதல்வர் பழனிசாமி இல்லாமலேயே அமைச்சர்கள் திடீர் ஆலோசனை! கலகலக்கும் தலைமைச்செயலகம் முதல்வர் பழனிசாமி இல்லாமலேயே சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிளவுபட்ட அ.தி.மு.க. மீண்டும் இணையும் வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகிறது. காரணம், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான இரு அணிகளுக்குள்ளும் மீண்டும் பனிப்போர் நடந்துவருகிறது. கட்சி இணைப்புகுறித்த பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. கட்சி நிர்வாகம், பதவி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் சிக்கல் நிலவிவருகிறது. அ.தி.மு.க மீண்டும் இணைய வேண்டுமென்றால், டி.டி.வி.…

  17. விபரீதம் ஏற்படும்! பெங்களூரில் பழனிசாமி அணியைக் கலங்கடித்த வெற்றிவேல் டி.டி.வி.தினகரனை ஒதுக்கிவைக்க எடப்பாடி பழனிசாமி அணிக்கு அருகதை இல்லை என்று எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த அவசர ஆலோசனையைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் ‘முன்னர் அறிவித்தபடி டி.டி.வி.தினகரனுக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சசிகலா, தினகரன் குடும்பத்துக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களைச் ச…

  18. தீ மட்டும் தான் தி.நகரில் பிரச்சினையா? சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் பக்கவாட்டில் ஸ்கைலிப்ட் வாகனம் மூலம் தீயை அணைக்கும் வீரர்கள். | படம்: க.ஸ்ரீபரத் நண்பன் பிரகாஷின் தந்தை திடீரென காலமானார். மேற்கு மாம்பலத்தில் 40 ஆண்டுகள் வசித்தவர்.அதிகாலையிலேயே உயிர் பிரிந்து விட்டது. எப்படியும் நல்லடக்கத்திற்கு உடலை எடுத்துச் செல்ல நேரம் ஆகும் என்று 10 மணிக்கு வீட்டுக்குச் சென்றேன். அதற்குள் உடலை கண்ணம்மாபேட்டைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். நண்பன் திரும்பி வந்த பின் ஆறுதல் கூறிவிட்டு ஏன்டா இவ்ளோ சீக்கிரம் எடுத்திட்டு போயிட்ட என்றேன். "இல்லடா எனக்கு கஷ்டமாதான் இருந்துச்சு, ஆனா 9 மணிக்கு மேல ஆயிடுச்சுன்னா ஏரியாவுல பயங…

  19. கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்: ராகுல் காந்தி மகிழ்ச்சி..! கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தி.மு.க தலைவர் கருணாநியின் 94-வது பிறந்தநாள் விழா நேற்று வைரவிழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு இந்திய அளவில் முக்கியமான அரசியல் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார். இன்று காலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடித்த பின்னர் சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதியை நேரில் சென்று சந்தித்தார். ராகுல் காந்தியை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாயிலில் சென…

    • 3 replies
    • 610 views
  20. கழகங்கள்... பாதை மாறிய பயணங்கள்! 2017-ம் ஆண்டு இரு திராவிடக் கட்சிகளுக்கும் முக்கியமான ஆண்டு. காங்கிரஸ் என்ற தேசியக் கட்சியை வீழ்த்தி தி.மு.க ஆட்சியைப் பிடித்த 50-ம் ஆண்டு, கருணாநிதி சட்டமன்றத்துக்குள் நுழைந்த 60-ம் ஆண்டு, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு என்ற மூன்று முக்கியத்துவங்கள் இந்த ஆண்டுக்கு உண்டு. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஜெயலலிதா உயிருடன் இல்லை. கருணாநிதியின் சட்டமன்ற வைர விழா மேடையில் அமரும் நிலையில் கருணாநிதி இல்லை. இப்படி ஒரு விழா நடைபெறுவதை உணரும் நிலையிலேயே அவர் இல்லை. காலம் விசித்திரமானதுதான்! கருணாநிதி தீவிரமாக அரசியல் செய்ய இயலாத இன்றைய நிலையில், தி.மு.க-வுக்கு என்று சில கடப்பாடுகள் உள்ளன. கருணாநிதி தன் அரசியல் வாழ்வில் பல…

  21. Started by நவீனன்,

    தமிழக அமைச்சர்கள் சிலரை மாற்றும்படி, முதல்வர் பழனிசாமிக்கு, தினகரன் தரப்பில் நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியை விட, கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என, அவர் கருதுவதால், தங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், சட்டசபையில், வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்து, ஆட்சியை கவிழ்ப்போம் என, மிரட்டல் விடுத்துள்ளதாக வும், தகவல் வெளியாகி உள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான தினகரன், டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்; 34 நாட் களுக்கு பின், ஜாமினில் வெளியே வந்துள்ளார். அவரை, அ.தி.மு.க., அம்மா அணியைச் சேர்ந்த, 10 எம்.எல்.ஏ.,க்கள், மூன்று எம்.பி.,க்கள், ஐந்து மாவட்ட செயலர்கள் வரவே…

  22. மே 17 இயக்கத் தலைவர், திருமுருகன் காந்தி.. குண்டர் சட்டத்தில் கைது. இலங்கையில் தனி ஈழம் கோரி போராடியதால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு தடையை மீறி சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மே 17 இயக்க தலைவர் திருமுருகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இலங்கையில் தனிஈழம் கோரி போராடி வந்த தமிழர்களை மீது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ராணுவம் கடந்த 2009-ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடத்தி கொத்து கொத்தாக கொன்று குவித்தது.தமிழர்கள் அதிகளவில் தஞ்சமடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவத்தால் நடத்தப்பட்ட அராஜகம், மிருகத்தனமான தாக்குதல்களை இன்றும் யாரும் மறந்துவிட முடியாது. பெண்களை மானப்பங்கப்படுத்தி, நிர்வாணப்படுத்தி கொன்றனர். சென்ன…

  23. பேசும் படங்கள்: கருணாநிதியை நேரில் சந்தித்த தேசிய தலைவர்கள் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா சென்னையில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய…

  24. மு.க.ஸ்டாலின் (இடது), தமிழிசை சவுந்தரராஜன் (வலது) | கோப்புப் படம். மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு நாடு தயாராகிவிட்டது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதற்கு, பதிலளித்துள்ள பாரதிய ஜனதா தமிழக தலைவர் தமிழிசை, திமுகவின் சவாலை ஏற்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தனி மனித உரிமையை பறித்த அவசர நிலை பிரகடனம் போன்ற நிலைமை இப்போது எங்கே இருக்கிறது, சாதாரண குடி மகனும் நாட்டின் பிரதமரையே விமர்சிக்க உரிமை இருக்கிறது. அன்று அவசர நிலை பிரகடனத்தால் பாதிக்கப்பட்ட ஸ்டாலின் அவர்களே அதை மறந்து பேசுவது வியப்பு, இதில் எங்கே சுதந்திர போராட்டம் வந்தது? அன்று நடந்த சுதந்திர போராட்டத்தில் திமுக வின் ப…

    • 0 replies
    • 314 views
  25. ஜெ-சசி நிறுவனங்களின் பின்னல் வலை விளக்கப்படம் ஜெ-சசி நிறுவனங்கள் பற்றிய முழு விவரங்கள் சென்னை தியாகராய நகரில் இருபுறமும் மரங்கள் வளர்ந்த, கவனத்தை ஈர்க்கும் எந்த அம்சமும் இல்லாத ஒரு வீதியின் அடுக்ககத்தில் ‘கியான்’ (GYAN) என்ற பெயர்ப் பலகை பளிச்சென்று கண்ணில் படுகிறது. ஓரிரண்டு காரணங்களைத் தவிர, அது ஒன்றும் கவனிக்கத்தக்க அடுக்ககம் அல்ல. கதவு எண் 12, கதவு எண் 16 என்ற இரு வீடுகள் மட்டும் சில தனியார் நிறுவனங்களின் பதிவுபெற்ற அலுவலகங்களாகத் திகழ்கின்றன. அந்நிறுவனங்கள், அஇஅதிமுக (அம்மா) கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, அவருடைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.