தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
ஓ.பி.எஸ்.,க்கு எதிராக உள்ளடி செய்த மந்திரிகள்! அலங்காநல்லூரில் அம்பலமான சதி முதல்வருக்கு எதிராக, அமைச்சர்கள் செயல்படுவது, அ.தி.மு.க.,விலும், அரசியல் வட்டாரத்திலும், பெரும் பரபரப்பை உள்ளது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, முதல்வ ராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஏற்கனவே, இரு முறை, முதல்வர் பதவியில் இருந்து, ஜெ., விலக நேரிட்ட போது, முதல்வ ராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதன் பின் மீண்டும், ஜெ., பதவியேற்கும் சூழல் ஏற்பட்ட போது, முதல்வர் பதவியை துறந்து, தன் விசுவாசத்தை நிரூபித்தார். எனவே, ஜெ., மறைவுக்கு பின், மீண்டும் அவர் முதல்வ ரானது, மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்த வில்லை. ம…
-
- 0 replies
- 395 views
-
-
'ஜெயலலிதா ஆக நினைத்து வளர்மதி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்!' சசிகலாவுக்கு தமிழக பெண்களின் சார்பாக ஒரு கடிதம்! ''தலைவரு இறந்தபோது... அம்மாவ என்ன பாடு படுத்துனாங்க? ஒரு விஷயம் முக்கியமா கவனிக்கணும். ஒரு பெண்ணு... பெண்ணு எப்படி கட்சியில வந்து வர்றது... அப்படீங்கிறத வந்து காமிச்சாங்க. இப்பயும் அதே தோரணதான். அன்னைக்கு எந்தக் கூட்டம் அம்மாவ எதிர்த்துச்சோ... அதே கூட்டம்தான் இன்னைக்கும் செய்யுது'' ஞாயிறு இரவு கூவத்தூரில் நீங்கள் பேசிய பேச்சு இது சசிகலா. பொட்டு, பிளவுஸில் தொடங்கி உங்கள் பேச்சு வரை அனைத்திலும் உங்களை நீங்கள் ஜெயலலிதாவுக்கான மாற்றாக நிறுவத் துடிக்கிறீர்கள். 30 ஆண்டுகளாக தமிழக அரசியலி…
-
- 0 replies
- 285 views
-
-
இயக்கப் பொறுப்பாளர் கைது: அரசியல் வன்மம் என கமல் குற்றச்சாட்டு கமல் | கோப்பு படம்: எல்.சீனிவாசன் தனது இயக்கப் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வன்மத்தைக் காட்டுகிறது என கமல் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழக அரசியலில் நிலவி வரும் சூழல் குறித்து உடனடியாக கருத்துகளைத் தெரிவித்து வருபவர் கமல். அரசியலில் நிலவிவுள்ள மாற்றத்துக்கு ஆளுநரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஆதங்கத்தை அனுப்புமாறு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் கமல். இதற்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதிமுக கட்சியினரை கடுமையாக சாடினார். இது தொடர்பாக,…
-
- 0 replies
- 355 views
-
-
நான்கு கட்சிகள் சேர்ந்து உருவான மக்கள் நலக் கூட்டணி உடைந்தது. ஓராண்டே ஒன்றாக இருந்த நிலையில், பல விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் டமாரானது. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது என, அடம் பிடித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி, தனித்து வேட்பாளரை அறிவித்ததால், இந்த நிலை உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது, மார்க்சிஸ்ட் கம்யூ., - இந்திய கம்யூ., - விடுதலை சிறுத்தைகள் - ம.தி.மு.க., ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கின; ஒருங்கிணைப் பாளராக, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ செயல் பட்டார்.இக்கூட்டணியில், தே.மு.தி.க., - த.மா.கா., ஆகிய கட்சிகள், பின்னர் இணைந்தன. ஆனால், தேர்தலில் இக்கூட்டணி படுதோல…
-
- 0 replies
- 250 views
-
-
'தீபா கணவன் மாதவன் வந்திருக்கேன்' கடைசிநாள் பிரசாரக் காட்சிகள் ! #SpotReport #VikatanExclusive சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு நடைபெறவிருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நேற்றிரவு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக, அரசியல்கட்சிகளின் நிர்வாகிகள், பிரமுகர்கள் என பகலிலும், இரவிலும் பாதுகாப்பற்ற சூழலில் இருந்த அந்தத் தொகுதி மக்களுக்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்துள்ளது. துணை ராணுவப்படையினர் எங்கும் காணப்படவில்லை, கட்சிக் கொடிகள் இல்லை; வேட்பாளர்களை வரவேற்க மேளச் சத்தம் இல்லை; கரைவேட்டி கட்டியவர்களின் நடமாட்டம் இல்லை; வெளிமாவட்ட பதிவெண் க…
-
- 0 replies
- 480 views
-
-
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை மேற்கூரை இடிந்து விழுந்ததில், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகள் இருவர் காயம் அடைந்துள்ளனர். ராமேஸ்வரம் ரயில்வேபீடர் ரோடு பகுதியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. வெளிநோயாளிகள், பரிசோதனை மற்றும் டாக்டர்கள் அறை புதிய கட்டிடங்களில் இயங்கி வருகிறது. ஆனால் உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வார்டுகள், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதில் ஆண் நோயாளிகள், பெண் நோயாளிகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்ட நோயாளிகளுக்கான வார்டுகள் என மூன்று பிரிவுகள் இயங்கி வருகிறது. இதில் ஆண் நோயாளிகள் வார்டில் 22 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடுமுழுவதிலும் இருந்து பக்தர…
-
- 0 replies
- 431 views
-
-
பந்தளம் அரண்மனை அடூர் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பந்தளம் எனும் சிறிய நகரத்தில், அச்சன்கோயில் ஆற்றங்கரையோரத்தில் அமைந்திருக்கிறது. Image source:commons.wikimedia.org இந்த அரண்மனையில் மதுரை பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களாக கருதப்படும் பந்தளம் அரச பரம்பரையினர் வாழ்ந்து வந்தனர். இதன் வரலாற்று பெருமையை பற்றி பேசும் அதேவேளையில் நாம் இதன் மதச் சிறப்பை பற்றியும் பேசியாக வேண்டும். பந்தளம் அரச பரம்பரையில் பிறந்தவராகவே சுவாமி ஐயப்பன் புராணங்களில் போற்றப்படுகிறார். அதோடு அச்சன்கோயில் நதியோரத்தில் ஐயப்பன் கோயில் ஒன்றும் உள்ளது. இந்த கோயிலுக்கு நீங்கள் வரும்பொழுது இதற்கும் சபரி மலை கோயிலுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமையை கண்டுணர்வீர்கள். இங்கு ஆண்டுதோற…
-
- 0 replies
- 800 views
-
-
மிஸ்டர் கழுகு: இடைத்தேர்தல் நடக்குமா? ‘‘டிசம்பர் 21-ம் தேதி 2ஜி வழக்கின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றுதான், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலும் நடக்கிறது. ஒரே நாளில் தி.மு.க-வுக்கு இரண்டு அக்னிப் பரீட்சைகள்’’ என்றபடி வேகமாக உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘பரீட்சையின் ரிசல்ட் எப்படி இருக்குமாம்?’’ என்று கேட்டோம். தன் கையோடு கொண்டுவந்திருந்த துண்டுச்சீட்டு குறிப்புகளை நம்மிடம் தந்த கழுகார், ‘‘ஆர்.கே. நகர் தேர்தலில் 10 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெறலாம் என்று டெல்லிக்கு மத்திய உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளது’’ என்றார். ‘‘இன்னொரு பக்கம் ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரத்தில், ப.சிதம்பரத்தை அமலாக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
"நான் யாருக்கும் அடிமையா இருக்கமுடியாது; எனக்கு அரசியல் வேண்டாம்!" - சத்யராஜ் ``எல்லாப் படங்கள்லேயும் என்னை வேற மாதிரியான சத்யராஜா மக்கள்கிட்ட காட்டணும். அதுமாதிரியான கதாபாத்திரங்கள்ல மட்டும்தான் நடிப்பேன். அதனாலதான், 'பாகுபலி' படத்துக்குப் பிறகு சில படங்களைத் தேர்வு செய்யலை'' - சினிமா சார்ந்த கேள்விகளில் ஆரம்பித்து அரசியல் சார்ந்த கேள்விகள் வரை அனைத்திற்கும் பதில் சொல்கிறார், சத்யராஜ். ``நாளுக்கு நாள் சத்யராஜ் எடுக்குற கதைக்களமே வித்தியாசமா இருக்கு, என்ன மாதிரியான கதைகள் உங்களைத் தேடி வருது?'' ``ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொரு கதை என்னைத் தேடி வரும். இப்போ வர்ற படங்கள்ல என்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்க…
-
- 0 replies
- 899 views
-
-
பட மூலாதாரம்,TNDIPR கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 6 ஜூலை 2023, 03:07 GMT தமிழக பல்கலைக்கழங்களில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் பல பல்கலைக்கழங்களுக்கு துணை வேந்தர்களும் பதிவாளர்களும் நியமிக்கப்படாமல் இருப்பதாகவும் ஆளுநர் ஆர்.வி. நடத்திய துணைவேந்தர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் நிலை உண்மையில் எப்படியிருக்கிறது? ஜூலை 4ஆம் தேதியன்று தமிழக பல்கலைக்கழகங்களில் உள்ள ஆட்சி மன்றக் குழு, கல்வி மன்றக் குழுவின் உறுப்பினர்களுடன், குறிப்பாக இந்தக் குழுக்களில் ஆளுநர்களால் நியமிக்கப்பட்டவர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்த…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் அரியலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த பட்டாசு வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 16 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பட்டாசுக்கடை உரிமையாளரும், பட்டாசு ஆலை உரிமம் உள்ள அவரது உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது இவ்விபத்தில்? படக்குறிப்பு, ஆலையின் பெட்டக அறையில் அமர்ந்து சில பணியாளர்கள் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கிருந்த பட்டாசுகள் திடீரென வெடிக்கத் துவங்கின காலை உண…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
டிபன் ரெடி.. ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம்... அமைச்சர் மணிகண்டன் அதிரடி. 2019 ஜனவரி மாதம் முதல் பள்ளிகளில் காலை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். 1954-ல் தமிழக முதல்வராக காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, மாணவர்கள் படிக்க வேண்டும் என்று மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதனால், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதே நேரம், பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகமானது. அதன் பின்னர் வந்த எம்ஜிஆர் உட்பட அனைத்து முதல்வர்களும் மதிய உணவு திட்டத்தை சிறப்பாக முன்னுக்கு கொண்டு சென்றனர்.இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அரசு பள்ளியில், இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி …
-
- 0 replies
- 408 views
-
-
சென்னையில் இந்த ஆண்டு போகிப் பண்டிகையன்று காற்றுமாசு குறைவு January 15, 2019 சென்னையில் போகிப் பண்டிகையன்று பழைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் மாசு கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் வெகுவாகக் குறைந்திருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. போகிப் பண்டிகையன்று பழைய பொருட்களை எரிப்பதால், கடந்த சில ஆண்டுகளாகவே காற்று மாசு பாடு அதிகரித்துவந்தது. மாசுபாட்டினால், ஓடுபாதை தெரியாத காரணத்தில் கடந்த சில ஆண்டுகளாக போகிப் பண்டிகை தினத்தன்று சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் புறப்படுவதிலும் வந்து சேர்வதிலும் பெரும் தாமதங்கள் ஏற்பட்டதுடன் சில விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. இந்தநிலையில் இந்த ஆண்டு கடந்த ஆண்டினை விட காற்றுமாறு குறைவாக இருந்தத…
-
- 0 replies
- 405 views
-
-
படத்தின் காப்புரிமை FACEBOOK / GOWSI SHANKAR ஆணவ படுகொலையால் பாதிக்கப்பட்ட உடுமலைப்பேட்டை கௌசல்யா பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக வெல்லிங்டன் கண்டோன்மெண்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ் வர்மா உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியராக இருப்பதை எவ்வாறு உணருகிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல தரப்பு மக்களிடம் பிபிசி கருத்து கேட்டு வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் பிபிசி தமிழுக்கு கௌசல்யா அளித்த பேட்டியில், "அம்ப…
-
- 0 replies
- 847 views
-
-
40 ஆண்டுகள் கடந்த பின்னரும் சிங்கள இனவெறியின் ஆதிக்கத்திலிருந்து விடுபடமுடியாத நிலையில் தமிழர்கள் - கறுப்பு ஜூலை குறித்த செய்தியில் சீமான் 24 JUL, 2024 | 10:33 AM இனப்படுகொலைக்கு உள்ளாகி 40 ஆண்டுகளைக் கடந்த பின்னும் இன்றளவும் சிங்கள இனவெறி ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாமல் அடிப்படை உரிமைக்காகப் போராட வேண்டிய அவலநிலையில் தமிழ் மக்கள் வாடுவது வரலாற்றுப் பெருந்துயரமாகும்!என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 1983 ஆம் ஆண்டு இலங்கை இனவாத அரசின் ஆதரவுடன் சிங்கள இனவெறியர்கள் தமிழர்களின் வீடுகளையும் கடைகளையும் எரித்து உடமைகளைக் கொள்ளையடித்து வீதி…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
பொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்- தமிழிசை தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி மற்றும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இடையிலான வார்த்தை மோதல் குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் தெரிவித்ததாவது, “தமிழகத்தைப் பொருத்தவரையில் வைகோவும், கே. எஸ். அழகிரி சண்டை போட ஆரம்பித்துள்ளனர். மாநிலங்களவை உறுப்பினராக தெரிவு செய்யப்படும் வரை எதையும் பேசாமல், தெரிவு செய்யப்பட்ட பிறகு காங்கிரசை குறை கூறுகிறார் வைகோ. அவர் கூறுவதிலும் சில கருத்துகள் இருக்கின்றன. அழகிரி சொல்வதிலும் சில கருத்துகள் உள்ளன. ஆக பொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்தார்கள். இ…
-
- 0 replies
- 597 views
-
-
எம்.ஏ. பரணிதரன் பிபிசி தமிழ் அயோத்தி விவகாரம், தமிழக முதல்வர் எடப்பாடி ப…
-
- 0 replies
- 854 views
-
-
பட மூலாதாரம்,IRCDS படக்குறிப்பு,ஷிபா மாலிக் மற்றும் அவரின் குடும்பத்தினர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை உள்பட 7 பேரை, ஜூன் 17 அன்று வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 35 ஆயிரம் ரூபாய் முன்பணத்துக்காக ஆறு மாதங்களாக செங்கல் சூளை உரிமையாளரால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானதாக ஒடிசாவை சேர்ந்த ஷிபா மாலிக் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அரசின் அனுமதியின்றி சூளை செயல்பட்டதால், அதன் உரிமையாளர் எஸ். துளசி மீது கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுக…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
சென்னை: தமிழகம் முழுவதும் கரோனா பரவும் அபாயம் எழுந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், கரோனா பாதிப்பு இருப்பவா்கள், கரோனா தொற்றை மறைத்தால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதித்த 20 மாவட்டங்களிலும் சுகாதாரத் துறையினா் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனா். காய்ச்சல், சளி, சுவாசப் பாதிப்பு இருக்கும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுகின்றனா். இந்த நிலையில், சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை ஓா் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கரோனா அறிகுறிகள் இருப்பவா்கள் தாங…
-
- 0 replies
- 357 views
-
-
எழுவர் விடுதலை; 30 ஆண்டு சிறைக்கொடுமை போதாதா? 1,007 நாட்கள் ஆகியும் ஆளுநர் காலதாமதம் செய்வது நியாயமல்ல: ராமதாஸ் ராமதாஸ்: கோப்புப்படம் சென்னை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூன் 11) வெளியிட்ட அறிக்கை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், அந்த வழக்கில் விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டு இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்து 30-வது ஆண்டு தொடங்குகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றமே ஆணையிட்டும், அந்த விஷயத்தில் தமிழக ஆளுநர் முடிவ…
-
- 0 replies
- 469 views
-
-
தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வுகள், தடைகள்; முழு விவரம் சென்னை மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: 'இந்தியா முழுவதும், கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத…
-
- 0 replies
- 741 views
-
-
விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 62வது பிறந்த நாள் தமிழகத்தில் நேற்று பரவலாக கொண்டாடப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இலங்கைத் தமிழர்களுக்காக அந்த நாட்டு அரசை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்திய இவர், இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிரபாகரனின் 62வது பிறந்தநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை இன்னும் தொடர்ந்த போதிலும், பிரபாகரன் பிறந்த நாளை பல்வேறு அரசியல் கட்சிகளும் கொண்டாடின. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்த நூல் வெளியிட்டு விழ…
-
- 0 replies
- 555 views
-
-
‘ராமமோகன ராவ் ஊழல் பற்றி சசிகலாவுக்குத் தெரியாதா?' - கொதிக்கும் சீமான் வருமான வரித்துறையின் வளையத்தில் இருக்கிறார் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ். 'ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் துணையோடுதான் இத்தனை ஆயிரம் கோடிகளை சேர்த்திருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறது' எனக் கொந்தளிக்கிறார் சீமான். தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோக ராவ் வீட்டிலும் அலுவலகத்திலும் நடத்தப்பட்ட ரெய்டால், அவருடைய ஆதரவு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். 'எப்போது வேண்டுமானாலும் ஐ.ஏ.எஸ்கள் வீட்டில் ரெய்டு நடக்கலாம்' என்பதால், கோட்டைக்குள் பதற்றத்துடன் கால் வைக்கிறார்கள். அதே அளவுக்கு சீனியர் அமைச்சர்கள் மத்திய…
-
- 0 replies
- 468 views
-
-
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் எம்.எஸ். பந்தாரா தசநாயகே, மேஜர் சி.எஸ்.ஹரிஷ் சந்திரா ஹெட்டி யாராச்சிகே ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை இலங்கை அரசு நிறுத்தும் வரையும், தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்தும் வரையும் இலங்கையை சேர்ந்த அதிகாரிகளுக்கு இங்கு எவ்வித பயிற்சியும் அளிக்கக் கூடாது என்றும் அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மதிமுக, விடுதலை சிறுத்தைகள், பெரியார் தி.க., பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த 18ம் தேதி முற்றுகை போராட்டம் நடந்தது. வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் இ…
-
- 0 replies
- 402 views
-
-
தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற, ஓ.பி.எஸ்., - இடைப்பாடி அணியினர் இடையே, இன்று சட்டசபையில் பலப்பரீட்சை நடைபெறுகிறது. அதனால், 1988ல் நடந்த வன்முறை காட்சிகள் மீண்டும் அரங்கேறுமோ என, பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையில், கடைசி நேரத்தில், 16 எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளதால், பரபரப்பு அதிகரித்துள்ளது. ஜெ., மறைவை தொடர்ந்து, முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டார். கட்சியை கைப்பற்றியதோடு, ஆட்சியையும் கைப்பற்ற முடிவு செய்தார்.முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை, வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்தார். அ.தி.மு.க., சட்டசபை கட்சித் தலைவராகி, முதல்வராக முயற்சித்தார். …
-
- 0 replies
- 276 views
-