தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
அ.தி.மு.க., துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட தினகரனுக்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில், நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகமாகி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால், பதவியை பிடிக்கும் எண்ணத்தில் உள்ள கட்சியின் கிளை கழக நிர்வாகிகள், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணிக்கு ஓட்டம் பிடித்து வருகின்ற னர். தங்களது கூடாரம் காலியாவதால், சசிகலா தரப்பு கலக்கத்தில் உள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்ப அரசியலை, மறைந்த முதல்வர்கள் எம்.ஜி. ஆர்., - ஜெயலலிதா ஆகியோர் எதிர்த்து போராடினர். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாரும், கட்சி பதவியில் நியமிக்கப்பட்டது கிடையாது. ஆனால், ஜெ., மறைவுக்குப் பின், அ.தி.மு.க., தற்காலிக பொதுச்ச…
-
- 0 replies
- 217 views
-
-
'ஸ்டாலின் புகார் எதிரொலி'!காங்.தலைவர் திருநாவுக்கரசர் மாற்றம்? தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குறித்து வலுவான புகார் அளித்துள்ளார்.இதனால் அவர் விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று அக்கட்சி வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். இது குறித்து சத்திய மூர்த்தி பவன் தரப்பினர் நம்மிடம் கூறுகையில்,"தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்ட நாள் முதலே அவரின் அ.தி.மு.க. சார்பு நிலை தெளிவாகத் தெரிந்தது.அப்போதே கட்சியின் முக்கிய தலைவர்கள் அவரின் அரசியல் நிலைப்பாடு குறித்து டெல்லி…
-
- 0 replies
- 467 views
-
-
முதல்வருக்கு எதிராக நீதிபதி போராட்டம்? புதுடில்லி:'தமிழகத்தில் அமைந்துள்ள, சிறையில் இருந்து நடத்தப்படும் பினாமி ஆட்சி நீக்கப்படும் வரை என் போராட்டம் தொடரும்' என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். 'தமிழன் என்று கூறிக் கொள்வதற்கு வெட்கப் படுகிறேன்' என, நேற்று முன்தினம், 'பேஸ்புக்' சமூகவளைதளத்தில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து, தன் கருத்தை வெளியிட்டி ருந்தார், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு. இந்த நிலையில், நேற்று பதிவிட்டுள்ள மற்றொரு செய்தியில், அவர் கூறியுள்ளதாவது: தமிழர் குறித்து நான்கூறியுள்ள கருத்துக்கு வந்துள்ள பதில்கள், …
-
- 0 replies
- 503 views
-
-
ஜெயலலிதா மரணம்: ஜனாதிபதியை சந்தித்து சிபிஐ விசாரணை கோர ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பி.க்கள் முடிவு ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து முறையிட ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர். நாமக்கல்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அதற்கு முன்பாக 75 நாட்கள் அவர் மருத்துவமனையில் சிக…
-
- 0 replies
- 316 views
-
-
எனது பிறந்த நாளில்... "பொன்னாடைக்கு" பதிலாக, புத்தகங்களை வழங்குங்கள்.. ஸ்டாலின் வேண்டுகோள். தனது பிறந்த நாள ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சால்வை, பொன்னாடைக்கு பதில் புத்தகங்களை வழங்குங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிறந்தநாள் விழாக்களை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாமென்றும், மக்களுக்குப் பயன் தரும் வகையில் ரத்ததானம், நலத்திட்ட உதவிகள், இயற்கையைப் போற்றும் விதத்தில் மரக்கன்று நடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று கழகத் தோழர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வேண்டுகோள் விடுத்து வருகிறேன். அத்துடன் பேனர்கள், கட்-அவுட்டுகள் போன்ற பொது மக்களுக்கு அதிருப்தி ஊட்டும் பிறந்…
-
- 1 reply
- 492 views
-
-
“எம்.எல்.ஏ-க்களை இழுக்க முடியாதா என்று கேட்கிறார்கள்!’’ – ஸ்டாலின் கலகல சட்டமன்றத்தில் தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் வெளியேற்றப் பட்டதைக் கண்டித்து, கடந்த 22-ம் தேதி தமிழகம் முழுவதும், தி.மு.க சார்பில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். சென்னையில் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் போராட்டத்தில் குதித்தார்கள். இந்தப் போராட்டத்துக்காக, முதல் நாள் இரவே திருச்சி வந்துவிட்ட ஸ்டாலின், உண்ணாவிரதப் பந்தலுக்கு காலை 8.40 மணிக்கு வந்தார். 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. தி.மு.க மாநிலங்களவை உறுப…
-
- 0 replies
- 1.3k views
-
-
சசிகலா குடும்பத்துக்குள் குத்துச்சண்டை! - தீபக் திடீர் புரட்சியின் பின்னணி “பன்னீர்செல்வம் திரும்பி வரவேண்டும்; அவர் வந்தால் ஏற்றுக் கொள்வோம்; அவர், தலைமைப் பொறுப்பைக் கேட்டால் விட்டுக்கொடுப்போம்; கட்சி உடையக்கூடாது என்பதற்காக எதையும் செய்வோம்; அதே நேரத்தில், அ.தி.மு.க-வின் துணைப்பொதுச்செயலாளராக இருப்பதற்கு டி.டி.வி.தினகரனுக்குத் தகுதி இல்லை” என்று ஸ்டேட்மென்ட்களை அடுக்கி அ.தி.மு.க-வை அதிர வைத்துள்ளார், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக். இன்றைய தேதிக்கு சசிகலா குடும்பத்துக்கு பரம எதிரிகளாகப் பார்க்கப்படும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தீபா அணிகளே சற்று அடங்கி இருக்கும் நிலையில், இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த தீபக் திடீரென வாய் திறந்திருப்பது டி.டி.…
-
- 0 replies
- 1.5k views
-
-
பதவி இருந்தவரை ஜெயலலிதா மரண மர்மம் பற்றி வாய்திறக்காத ஓ.பி.எஸ் திடீர் விசுவாச அரசியல் காட்டுவது ஏன்? - ஸ்டாலின் கேள்வி “பதவி இருந்தவரை ஜெயலலிதா மரண மர்மம் பற்றி வாய்திறக்காத ஓ.பி.எஸ் திடீர் விசுவாச அரசியல் காட்டுவது ஏன்?” என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: குற்றவாளி என்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, மரணமடைந்த காரணத்தினால் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அபராதத் தொகையான 100 கோடி ரூபாயைக் கட்டியாக வேண்டும் என்பதுதான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்தியாவின…
-
- 0 replies
- 225 views
-
-
பட்டுக்கூடு... ஸ்வீட் பாக்ஸ்... நடமாடும் தடுப்பரண்... வீரப்பன் வீழ்த்தப்பட்டதை விவரிக்கும் விஜயகுமார் சொதப்பிய கேமரா... உதவிய மஞ்சள் விளக்கு சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்று 12 ஆண்டுகள் கழித்து, அந்த வேட்டையை நடத்திய அதிரடிப்படைத் தலைவர் விஜயகுமார் புத்தகம் எழுதியிருக்கிறார். டெல்லியைச் சேர்ந்த ரூபா பப்ளிகேஷன்ஸ் சமீபத்தில் வெளியிட்ட, ‘Veerappan: Chasing the Brigand’ என்ற இந்த ஆங்கிலப் புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிரடிப்படையிலிருந்து எஸ்.ஐ. வெள்ளத்துரை, சரவணன் என இருவரை அனுப்பி, வீரப்பனை நம்பவைத்து, ஓர் ஆம்புலன்ஸில் அழைத்து வந்து வீழ்த்திய இறுதி நிமிடங்களை முதல்முறையாக விஜயகுமார் விவரித்திருக் கிறார். அந்தப் புத்தகத்திலிருந்து …
-
- 0 replies
- 2.3k views
-
-
சசி ஆதரவு திண்டுக்கல் சீனிவாசனுக்கு வந்த சோதனை.. வேட்டியை உருவிய மக்கள்! திண்டுக்கல்: சசிகலா ஆதரவு அமைச்சரும், எம்எல்ஏ-வுமான சீனிவாசனை தங்கள் தொகுதிக்குள் நுழைய விடாமல் மக்கள் விரட்டியடித்தனர். இந்த தள்ளுமுள்ளுவில் அவரது வேட்டி அவிழ்ந்தது. திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நிதி மற்றும் வனத்துறை அமைச்சராக உள்ள சீனிவாசன் சசிகலாவின் ஆதரவாளராவார். இதனால் அவரை ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார். இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் போர்க் கொடி உயர்த்தியதும், அவரை அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து சசி நீக்கினார். பின்னர் தனது ஆதரவாளரான சீனிவாசனை அப்பதவியில் அமர்த்தினார். கடும் எதிர்ப்பு இந்நிலையில் இத்தனை நாள்கள் கூவத…
-
- 0 replies
- 591 views
-
-
சசிகலா - ஓபிஎஸ் அணிகள் மோதலால் நெருக்கடி: உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை இருக்குமா? இடது: சசிகலா, வலது: ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படங்கள்: எம்.வேதன் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள் கட்சி பிரச்சினையால் உள்ளாட்சித் தேர்தலில் இரட்டை இலை சின்னம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராகவும், அக் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராகவும் சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தரப்பினர் மீது பல்வேறு குற்றச் சாட்டுகளை முன்வைத்தார். இதை யடுத்து, அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும்…
-
- 0 replies
- 282 views
-
-
பெங்களூரு சிறையில் இருந்தபடி கட்சியை சசிகலா நடத்த முடியுமா? - லாலு போல் செயல்பட முடியாது என பிஹார்வாசிகள் கருத்து சசிகலா | கோப்புப் படம்: பிடிஐ லாலு பிரசாத் யாதவ், சிறையில் இருந்தபடி கட்சியை நடத்தியது போல, தற்போது அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவால் செயல்பட முடியாது என பிஹார்வாசிகள் கூறுகின்றனர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு, பிஹார் முதல்வராக இருந்தபோது, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிக்கினார். இதில் கடந்த 1997, ஜூலையில் முதல்வர் பதவியை அவர் இழக்க நேரிட்டபோது, தனது மனைவி ராப்ரி தேவியை அப்பதவியில் அமர வைத்தார். ராப்ரி பெயரளவில் முதல்வராக…
-
- 0 replies
- 159 views
-
-
கருணாசின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் செருப்பு வீசியுள்ளனர். நடிகரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கருணாசின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் செருப்பை வீசியுள்ளனர். இன்று கருணாஸ் தனது தொகுதியான திருவாடனைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து திரும்பிய போது மறைந்திருந்த சில நபர்கள் அவரது கார் மீது செருப்புகளை வீசி எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் கருணாஸ் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். http://globaltamilnews.net/archives/19078
-
- 3 replies
- 396 views
-
-
“நம்ம குடும்பத்தில் ஒருவர் சி.எம் ஆகணும்! - தினகரனுக்கு சசிகலா அட்வைஸ் ‘‘தமிழக அரசின் ரிமோட் கன்ட்ரோல், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளது’’ என்று சசிகலாவை விமர்சித்து வருகிறார்கள். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அவரை, ‘சிறைக்கு வெளியில் இருக்கும் ரிமோட் கன்ட்ரோல்’ எனக் கருதப்படும் அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சந்தித்தபோது நடந்தது என்ன? கடந்த 20-ம் தேதி மாலை பரப்பன அக்ரஹாரா சிறைக்கு தினகரனும், டாக்டர் வெங்கடேஷும் வந்தனர். அவர்களை கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி அழைத்து வந்தார். சிறை வளாகத்துக்குள் காத்திருந்த இளவரசியின் மகன் விவேக், அவரின் மனைவி கீர்த்தனா மற்றும் உறவினர்களோடு இவர்கள் சிறைக்குள் ச…
-
- 1 reply
- 1k views
-
-
சசிகலாவின் கைப்பொம்மை முதல்வரா?' உயிரை விடுவேன்' என்கிறார் கட்ஜு புதுடில்லி, : 'சிறைப் பறவை சசிகலாவின் கைப் பொம்மையாக உள்ள,இடைப்பாடி பழனி சாமியை, தமிழக முதல்வராக ஏற்க முடியாது; அதற்கு பதில், நான் உயிரை மாய்த்துக் கொள் வேன்' என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், நீதிபதி மார்க் கண்டேய கட்ஜு வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:சிறைப்பறவை சசிகலா வின் கைப்பொம்மை, இடைப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வராக அமர்த்தப் பட்டுள்ளார். இதைப் பார்த்து, தமிழக மக்கள், எதுவும் செய்யாமல் மவுனம் சாதிக்கின்றனர். சோழர், பாண்டியர், சேரர் உள்ளிட்ட மாப…
-
- 0 replies
- 316 views
-
-
அ.தி.மு.க., சண்டைக்கு ஆர்.கே.நகர் முடிவு கட்டும்! தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு கட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சசிகலா ஆதரவு அணியும், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில்,மற்றொரு அணியும் ,கச்சை கட்டுகின்றன. இரு பிரிவினரும், தாங்கள் தான் உண்மையான, அ.தி.மு.க., என கூறி வருகின்றனர். சசிகலா தரப்பில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளனர். பன்னீர்செல்வம் தரப்பில், குறைந்த அளவிலான எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுடன், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள…
-
- 0 replies
- 442 views
-
-
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் 1972ல் நடந்தது மீண்டும் திரும்புமா? சபாநாயகர் தனபால் மீது, தி.மு.க., கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டால், சட்டசபையில், 1972ல் நடந்த சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளது. தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆர்., வெளி யேற்றப்பட்ட நேரத்தில், 1972 டிசம்பர், 2ல், சட்ட சபை கூட்டம் கூடியது. கருணாநிதி தலைமை யிலான அமைச்சரவை மீது, நம்பிக்கை யில்லா தீர்மானத்தை,எம்.ஜி.ஆர்., கொண்டு வந்தார். அவருக்கு ஆதரவாக, சபாநாயகர் மதியழகன் செயல்பட்டார். எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில், 'முதல்வர் பதவியை, கருணாநிதி ராஜினா…
-
- 0 replies
- 197 views
-
-
தேர்தல் கமிஷன் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில், அ.தி.மு.க.,வை கைப்பற்ற, பன்னீர்செல்வம் அணியினர், சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். சசிகலாவின் பொதுச்செயலர் பதவி பறிபோனால், பொதுக்குழுவை கூட்டவும் திட்டமிட்டுள்ளனர். பன்னீர்செல்வம், மார்ச் 1ல், புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என, அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். அ.தி.மு.க.,வினர், சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி என, இரண்டாக பிரிந்துள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைக்க, பன்னீர்செல்வம் முடிவு செய்தார். ஆனால், சசிகலா தரப்பினர், எம்.எல்.ஏ.,க் களுக்கு ஆசை வார்த்தை கூறி, தங்கள் விசுவாசியான இடைப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி, ஆட்சியை தங்கள் வசமாக்கிவிட்டனர்.…
-
- 0 replies
- 190 views
-
-
யார் அந்த கறுப்பு ஆடு? கட்சியில் தேடுகிறார் ஸ்டாலின் சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் செயல்பாடு குறித்த விபரங்களை, ஆளுங்கட்சி தரப்புக்கு, 'போட்டுக்' கொடுத்த, கறுப்பு ஆடு யாராக இருக்கும் என்ற விசாரணையை, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் துவக்கியுள்ளார். இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: சட்டசபையில், முதல்வர் இடைப்பாடி பழனி சாமி, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, பெரும் பான்மையை நிரூபிக்கும்படி, கவர்னர் வித்யா சாகர் ராவ் உத்தரவிட்டார். தி.மு.க., நிலைப் பாடு குறித்து ஆலோசிக்க, சென்னையில், அக் கட்சியின், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், பிப்., 17ல் நடந்தத…
-
- 0 replies
- 589 views
-
-
மிஸ்டர் கழுகு: 121 முதல்வர்கள்... 1 எம்.எல்.ஏ! ‘‘ஆறு மனமே ஆறு... அந்த ஆண்டவன் கட்டளை ஆறு...’’ என்ற பழைய சினிமா பாடலைப் பாடியபடியே அறைக்குள் நுழைந்தார் கழுகார். ‘‘புரிகிறது... எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ-க்களில், இடம் மாறத் துடிக்கும் அந்த ஆறு பேர்தானே?’’ ‘‘ஆமாம். ஆறு பேர் தாவினால், அ.தி.மு.க-வின் மெஜாரிட்டி போய்விடும். எடப்பாடியின் முதல்வர் நாற்காலி தடதடக்கும். அதனால், எடப்பாடியை ஆதரிக்கும் 121 எம்.எல்.ஏ-க்களின் காட்டில் அதிர்ஷ்ட மழை கொட்டுகிறது. இந்த சீசன், அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு பொற்காலம் என்றே சொல்லித் திரிகிறார்கள். எடப்பாடியின் மெஜாரிட்டி ‘வீக்னஸை’ நன்றாகவே புரிந்துவைத்திருக்கும் இந்த எம்.எல்.ஏ-க்கள், காலரைத் தூக்கிவிட்டபடி உலா வர ஆரம்…
-
- 0 replies
- 2.1k views
-
-
வெறிச்சோடிய ஜெயலலிதா சமாதி... ஜெயலலிதா பிறந்தநாளில் அ.தி.மு.க.வினர் எங்கே? ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் ஏற்பட்ட அமளிதுமளியானது அந்தக் கட்சியை மட்டுமல்லாமல், தமிழகத்தையே பெரும்பாடுபடுத்திவிட்டது. பின், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, ''இந்த வருடம் ஜெயலலிதாவின் பிறந்தநாளை வெகுவிமர்சிகையாக நடத்த வேண்டும்'' என்று அறிவித்திருந்தார். அதன்பின் சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அறிவித்ததுடன், பெங்களூரு சிறையிலும் அடைக்கப்பட்டார். இருப்பினும், 'அ.தி.மு.க சார்பாக ஜெயலலிதாவின் பிறந்தநாளை விமர்சியாகக் கொண்டாட வேண்டும்' என அந்தக் கட்சிக்குள் பேச்சு நடந்தது. ஆனால், ஜெயலலிதா பிறந்த நாளான இன்று (24-02-17) …
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜெ. மரணத்தில் நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும்! ஆர்.கே.நகரில் பன்னீர்செல்வம் சூளுரை ஜெயலலிதா மரணத்தில் நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும் என்று ஆர்.கே.நகரில் பன்னீர்செல்வம் ஆவேசமாக பேசினார். ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னை ஆர்.கே.நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. ஒன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்டதுதான் அ.தி.மு.க. ஆட்சியும், கட்சியும் நம்மிடத்தில் தந்து விட்டு ஜெயலலிதா மறைந்து இருக்கிறார். யாருடைய குடும்பத்தில் கட்சியும், ஆட்சியும் சென்று விடக்கூடாது என்று எண்ணி அவர்கள் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். அவர்களையெல்லாம் வீட்டை விட…
-
- 2 replies
- 699 views
-
-
டி.டி.வி.தினகரனை ஏற்க மாட்டோம்! அதிரடியை கிளப்பும் ஜெ.அண்ணன் மகன் தீபக் டி.டி.வி.தினகரன் தலைமையை நாங்கள் ஏற்க மாட்டோம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியிருப்பது அ.தி.மு.க தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தீபக் அளித்த பேட்டியில், ''ஜெயலலிதாவின் மரணத்தில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். விசாரணை கமிஷன் அமைத்தால் அனைத்தும் தெரியவரும். மருத்துவ சிகிச்சைகள் குறித்து பற்றி பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பவில்லை. ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என்றுதான் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை கடன் வாங்கி கட்டுவோம். போயஸ் கார்டன் இல்லத்துக்க…
-
- 3 replies
- 831 views
-
-
ஜெ.தீபா பேரவை தலைமை அலுவலகம் திறப்பு: கொடி, நிர்வாகிகள் இன்று மாலை அறிவிப்பு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது அரசியல் பிரவேசத்தின் முதல் கட்டமாக தீபா பேரவையின் தலைமை அலுவலகத்தை இன்று காலை திறந்து வைத்தார். இதையடுத்து, இப்பேரவையின் கொடி, நிர்வாகிகள் தொடர்பான அடுத்தக்கட்ட அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை: ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது அண்ணன் மகள் ஜெ.தீபாவை அரசியலுக்கு வரும்படி அ.தி.மு.க. தொண்டர்கள் வற்புறுத்தி வந்தனர். தினமும் நூற்றுக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் தியாகர…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஜெ. பிறந்தநாளில் ஆடல் பாடல்; நலத்திட்ட உதவிகளுடன் கலக்கும் பன்னீர்செல்வம் அணியினர்! ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் அணியைச் சேர்ந்த ஆதரவாளர்கள், சென்னையில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திவருகின்றனர். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சசிகலா, பன்னீர்செல்வம், தீபா ஆகியோர் தரப்பு ஆதரவாளர்கள், தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகின்றனர். பன்னீர்செல்வம் அணியினர் சார்பில் சென்னை தண்டையார்பேட்டை மணிக்கூண்டில், ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில், ஏழை எளிய மக்களுக்கு சைச்கிள், பைக் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைப் பன்னீர்செல்வம் வழங்க இருக்கிறார். …
-
- 0 replies
- 730 views
-