தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10268 topics in this forum
-
தீபாவுக்கு எல்லாமே இவர்கள்தான்! அதிர்ச்சியில் சசிகலா தீபாவுக்கு மறைமுகமாக உதவும் அ.தி.மு.க எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் தயாராகி சசிகலாவின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கார்டன் வட்டாரங்கள் தெரிவித்தன. அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக செயல்படுபவர் சசிகலா புஷ்பா எம்.பி. சசிகலா, பொதுச் செயலாளராகக் கூடாது என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. அடுத்து ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் உள்துறை அமைச்சகத்திடம் புகார் கொடுத்துள்ளார். இவ்வாறு அ.தி.மு.க.வுக்கு எதிரணியில் இருந்து கொண்டு தன்னுடைய ஆதரவாளர்கள் மூலம் சசிகலாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார் சசிகலா பு…
-
- 0 replies
- 465 views
-
-
தீபாவிற்கு பெருகும் ஆதரவு ... சசிகலா உறவினர்கள் திக்... திக் தஞ்சாவூர், : - சசிகலாவின் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டங்களில், தீபாவிற்கு பெருகி வரும் ஆதரவால், சசிகலா உறவினர்களை பீதியடைய செய்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் உயர்மட்ட நிர்வாகிகள், பகீரத பிரயத்தனம் செய்து, சசிகலாவை பொதுச் செயலராக அமரச் செய்துவிட்டனர். சசிகலாவை ஏற்காத, அதிருப்தியாளர்கள், சசிகலாவிற்கு ஆதரவாக வைக்கப்படும், 'பிளக்ஸ்' பேனர்கள் மீது, சாணம் வீசி தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வந்தனர். மேலும், இதற்கு மாற்றாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு, ஆதரவுகள் தமிழகம் முழுவதும் தற்போத…
-
- 1 reply
- 788 views
-
-
ரஜினியை நம்பும் சசிகலா! கார்டனின் 'ஆல் இன் ஆல்' கார்டனில் ஆதிக்கம் செலுத்துவதில் நாகர்கோவிலைச் சேர்ந்த ரஜினி என்ற பெண் முக்கியமானவர் என்று சொல்லத் தொடங்கி இருக்கின்றனர் கட்சியினர். அவரை முழுமையாக நம்பிய சசிகலா, சில அமைச்சர்களை ரகசியமாக கண்காணிக்கும் பொறுப்பை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா, மறைந்து ஒரு மாதம் கடந்து விட்டது. அதற்குள் அ.தி.மு.க.வில் பல மாற்றங்கள். அ.தி.மு.க.வின் தலைமை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கையில் உள்ளது. அடுத்து சசிகலா, முதல்வராவார் என்ற எதிர்ப்பு நிலவுகிறது. ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா என்பது எல்லோருக்குத் தெரியும். தற்போது, சசிகலாவுக்கு உறுதுணையாக இருப்பவர்களில் முக்கியமானவராக நாகர்கோவிலைச்…
-
- 0 replies
- 479 views
-
-
நேற்றொரு தோற்றம்.. இன்றொரு மாற்றம்..: அடுத்த கட்டத்துக்கு தயாராகும் சசிகலா! அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றபோது. (கோப்புப் படம்: பிடிஐ) அரசியல் தலைவர்களின் திடீர் மறைவு, கட்சிக்குள் சலசலப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவது வழக்கம். ஜெயலலிதாவின் மறைவிலும் ஒருசில நாட்களுக்கு இந்த குழப்பங்களும் சலசலப்புகளும் காணப்பட்டன. ஆனாலும், மாற்றுக் கட்சியினரின் அரசியல்களுக்கு எந்தவிதத்திலும் வாய்ப்பு தந்துவிடாத வகையில், குறுகிய காலத்தில் குழப்பங்களில் இருந்து அதிமுக மீண்டிருப்பதாகவே தெரிகிறது. தலைவர் இருக்கும் காலத்திலேயே வாரிசு சுட்டப்படாத அதிமுக, இவ்வளவு விரைவில் சகஜ நிலைக்…
-
- 0 replies
- 450 views
-
-
பொங்கலுக்கு விடுமுறை இல்லை... பாஜக அரசின் அதிரடியால் அதிர்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்! டெல்லி: நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயம் அல்ல என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மேலும் கட்டாய விடுமுறை தினத்திலிருந்து பொங்கல் விடுமுறை நீக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டு முழுவதும் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் சூரியன், மழை, பனி உள்ளிட்ட இயற்கை சக்திகளுக்கும், கடவுளுக்கும் நன்றி செலுத்தும் பண்டிகையாக பொங்கலை முன்னோர்கள் கொண்டாடினர். பிற்காலத்தில் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தொடங்கினர்.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ம் தேதி பொங்கல் திருநாள் …
-
- 0 replies
- 515 views
-
-
முதல்வர் பேசும்போது வெளியேறிய சசிகலா கருத்தரங்கில் பங்கேற்றோர் அதிர்ச்சி கருத்தரங்கில், முதல்வர் பன்னீர்செல்வம் பேசும் போது, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா வெளியேறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'இந்தியா டுடே' குழுமம் சார்பில், இரண்டு நாள் கருத்தரங்கம், சென்னையில் நேற்று துவங்கியது. கருத்தரங்கை, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா துவக்கி வைத்தார்; ஜெயலலிதா உருவ படத்தையும் திறந்து வைத்தார். கருத்தரங்கில், முதல்வர் பன்னீர்செல்வம் பேசும் போதே, அரங்கில் இருந்து சசிகலா வெளியேறினார். மாநில முதல்வர் பேசும் போது, அவர் சார்ந்த கட்சி பொதுச்செயலர் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்த…
-
- 1 reply
- 603 views
-
-
சென்னை:ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்கள், விரைவில் அம்பலமாகும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பான விசாரணையின் போது, ஜெ.,வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் குறித்த அறிக்கையை, தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., தொண்டர் ஜோசப் தாக்கல் செய்த மனுவில், 'ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது; இந்த சந்தேகம், கட்சி தொண்டர்கள் மத்தியில் உள்ளது. எனவே, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூலம், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. 'ஜெயலலிதா மரணம் குறித்து, சி.பி.ஐ., மற்றும் மருத…
-
- 0 replies
- 573 views
-
-
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக 3 ஓய்வுபெற்ற நீதிபதிகளை உள்ளடக்கிய கமிஷனை வைத்து விசாரணை நடத்த வேண்டும் என தனது மனுவில் அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வில் வந்தபோது, அதனை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் அடங்கிய அமர்வு, ஜெயலலிதாவின் மரணம் குறித்து மத்திய…
-
- 0 replies
- 314 views
-
-
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநரின் நம்பிக்கை! - எம்.பிக்கள் கூட்டத்தில் உறைந்த சசிகலா பிரதமருக்குத் தொடர் கடிதம், அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திப்பு என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உற்சாகத்தோடு வலம் வரத் தொடங்கிவிட்டார். 'குடியரசு தினத்தில் ஓ.பி.எஸ் கொடியேற்றுவார் என ஆளுநர் அலுவலகம் கொடுத்த உத்தரவும் ஜெயலலிதா மரணம் குறித்து அளிக்கப்பட்ட மனுவை பணியாளர் நலத்துறைக்கு ஒப்படைத்ததையும் அதிர்ச்சியோடு கவனிக்கிறார் சசிகலா' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலா, 'ஜனவரி 2-ம் தேதி முதல்வராக பதவியேற்பார்' என நிர்வாகிகள் பேசி வந்தனர். அதன்பிறகு, 'ஜனவரி 12-ம் தேதி முதல்வர் ஆவார்' என்றனர். அதையொட்டி, அமைச்சர்கள் …
-
- 2 replies
- 687 views
-
-
ராம மோகன ராவின் மருத்துவனை ஒப்பந்த ஊழல்... அதிர வைக்கும் ஆதாரங்கள்?! அரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகளைத் தனியாருக்கு வழங்குவதில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் முறைகேடு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ அதிகாரிகளிடம் ஆதாரங்களை வழங்கி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகளை தனியார் நிறுவனங்கள் மூலம் செய்யப்படுகின்றன.தனியார் நிறுவனங்களைத் தேர்வு செய்ய டெண்டர்முறை பின்பற்றப்படுகின்றது.கடந்த 2013 - ம் ஆண்டு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ள பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டிஸ் (Padmavathi Hospitality And Facility Management Servi…
-
- 0 replies
- 448 views
-
-
'என் வழி... தனி வழி!'- சசிகலாவின் புது வியூகம் அ.தி.மு.க நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்த அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சசிகலா, முன்னாள் நிர்வாகிகளிடம் உணர்வுபூர்வமாக பேசி உள்ளார். அப்போது, 'அம்மாவின் கனவை நினைவாக்க வேண்டும். கட்சிக்காக உண்மையாக உழையுங்கள், உங்களுக்குரிய பலன் உங்களைத் தேடி வரும்' என்று கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவையொட்டி அவரது தோழி சசிகலா, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரானார். அடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளை கட்சி அலுவலகத்தில் சசிகலா சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு பல அதிரடி மாற்றங்கள் உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகிகளின் மனநிலையை அறிந்து கொள்ளவே இந்த ஆலோசனை நடத்தப்…
-
- 0 replies
- 505 views
-
-
மோடியின் அடுத்த ஆப்பு ரெடி ... டிஸ்கி : ஒணம் ..கூனம்... மகாவீர் ஜெயந்தி .. மயிறு ஜெயந்திகெல்லாம் விடுமுறை அளித்து அழகு பார்த்த தமிழனுக்கு இப்படி ஒரு கண்றாவியா ..? எல்லாம் பேசமா ஊரை காலி பண்ணிட்டு வேற ஊருக்கு கிளம்புங்கப்பா .. பாரத மாதாக்கி ஜே !!
-
- 0 replies
- 464 views
-
-
சசிகலா கட்சிப் பதவி ஏற்ற பிறகு தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக வளர்மதி அறிவிப்பு 2017-01-0800:04:59 சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்ட பிறகு, முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுக கட்சியின் இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார், என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, வளர்மதி தனது குடும்பத்தினருடன் நேற்று போயஸ் கார்டன் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். மறைந்த ஜெயலலிதா கடந்த முறை முதல்வராக இருந்தபோது …
-
- 6 replies
- 1.7k views
-
-
ஜெயலலிதா மரணத்தில் விசாரணை: சசிகலாபுஷ்பா கோரிக்கைக்கு கிடைத்த பலன்! மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம், தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், சசிகலா புஷ்பாவிடம் மனு அளித்திருந்தார். இதுதொடர்பாக தனிப்பட்ட மற்றும் பயிற்சி துறை (department of personal and training) நடவடிக்கை எடுத்து, சசிகலாபுஷ்பாவுக்கு, தெரிவிக்க உள்துறை அமைச்சம் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த தகவல் தொடர்பாக சசிகலாபுஷ்பா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். http://www.vikatan.com/news/india/77270-sasikalapushpas-petition-effect--home-ministry-ordered-dopt-to-take-action-in-jayalalithaas-demise.art
-
- 1 reply
- 520 views
-
-
தமிழகத்தில் விறுவிறு... சுப்ரீம் கோர்ட் சுறுசுறு... தொட்டுவிடும் தூரத்தில் வருகிறது தீர்ப்பு தேதி தமிழகத்தில் அரசியல் நிகழ்வுகள் வேகமாக மாறியபடி உள்ள நிலையில், தலைமை நீதிபதி மாற்றம், நீதிபதி விரைவில் ஓய்வு என, டில்லி யில் சுப்ரீம் கோர்ட்டும் சுறுசுறுப்பாவதால், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நெருங்கு கிறது என்ற பேச்சு அடிபடுகிறது. பெங்களூர் சிறப்பு கோர்ட்டில், 18 ஆண்டுகளாக நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. நீதிபதி குன்கா அளித்த தீர்ப்பால், முதல்வர் பதவியை இழந்து சிறைக்கு சென்றார் ஜெய லலிதா. ஆனா…
-
- 0 replies
- 351 views
-
-
மூன்று நிமிட பேச்சுக்கு 3 மணி நேரம் காத்திருக்கச் செய்வதா?* சசிகலா கூட்டத்தில் பங்கேற்ற, 'மாஜி'க்கள் கொதிப்பு சசிகலாவின் மூன்று நிமிட பேச்சை கேட்க, மூன்று மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால், 'மாஜி' அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். 'மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சந்திப்பு, கசப்பானதாக முடிந்து விட்டது' என்றும், கொதிப்புடன் கூறினர். அ.தி.மு.க., பொதுச் செயலராகியுள்ள சசிகலாவுக்கு, பல மட்டத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைச் சமாளிக்க, தலைமை அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகளை அவர் சந்தித்து வருகிறார். நேற்று காலை, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். மதியம், முன்னாள் அமைச்சர்கள்…
-
- 0 replies
- 418 views
-
-
எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் முடிவு * தீபா அறிவிப்பு ''எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில், என் முடிவை அறிவிப்பேன்,'' என, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்தார். அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டதற்கு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் எல்லாம், 'கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும்' என, ஜெ., அண்ணன் மகள் தீபாவை வலியுறுத்தி வருகின்றனர். தி.நகரில் உள்ள அவரது வீட்டின் முன், தினமும் ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று மாலை, தொண்டர்களிடம் தீபா பேசுகை யில், ''வரும், 17ல், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை, அனைவரும் கொண்டாட வேண்ட…
-
- 0 replies
- 530 views
-
-
தீபா ஆதரவாளர்கள், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என்ற பெயரில், புதிய கட்சியை, ஈரோட்டில் நேற்று துவங்கினர். கட்சிக்கு, கறுப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் கொடி உருவாக்கப்பட்டு உள்ளது. தீபாவுக்கு நாளுக்கு நாள் பெருகும் ஆதரவால், சசிகலா வட்டாரங்கள் கலக்கத்தில் உள்ளன. அ.தி.மு.க., பொதுச்செயலராக பொறுப்பேற் றுள்ள சசிகலாவை, அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. அதனால், 'ஜெ.,யின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வர வேண்டும்; ஜெ., விட்டு சென்ற பணிகளை தொடர வேண்டும்' என, வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, தமிழகம் முழுக்க பல இடங்களில், தீபா பெயரில் பேரவை துவங்கி, ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோ…
-
- 0 replies
- 367 views
-
-
எதிர்ப்புக்களைத் தாண்டி முதலமைச்சராவாரா சசிகலா? சசிகலா அ.தி.மு.க. வில் பொதுச்செயலாளராகியுள்ள நிலையில் அடுத்த கட்டமாக தமிழக முதலமைச்சராக வேண்டுமென்று கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் போன்றோர் குரல் கொடுத்து வருகின்றனர். இதன் உச்ச கட்டமாக அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், பாராளுமன்ற மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை 'கட்சி தலைமையும் ஆட்சியதிகாரமும் ஒருவரிடமே இருக்க வேண்டும். இரண்டும் தனித்தனியாக இருவரிடமும் இருப்பது ஏற்புடையதல்ல. அந்த வகையில் சசிகலா முதல்வராவது கட்சிக்கும், தமிழகத்துக்கும் இன்றியமையாதது' என்று அறிக்கை விடுத்திர…
-
- 1 reply
- 557 views
-
-
மக்கள் பணியாற்ற காத்திருக்கிறேன்: ஜெ. அண்ணன் மகள் தீபா பேச்சு தீபா | படங்கள்: எல்.சீனிவாசன் மக்கள் பணியாற்றக் காத்திருக்கிறேன். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன். அதுவரை தொண்டர்கள் காத்திருக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள செய்தியாளர்களை சந்தித்து தீபா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மக்களுக்காக விரைவில் பணியாற்றக் காத்திருக்கிறேன். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன். அதுவரை தொண்டர்கள் காத்திருக்க வேண்டும். நல்ல எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்யக் காத்திருக்கிறேன். அதற்கான விளக்கங்களை, தீர்க்கமான முடிவை விரைவில் அறிவிப்பேன். …
-
- 18 replies
- 2.4k views
-
-
நினைவு தவறிய கருணாநிதி... நிலை நிறுத்திய ஸ்டாலின்! டோனி பற்றிய பெட்டிச் செய்தியை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார் கழுகார். ‘‘உம்மிடமிருந்து இப்படி ஒரு செய்தியை எதிர்பார்க்கவில்லை’’ என்றோம். ‘‘அதில் ஒளிந்திருக்கும் அரசியலை ஜூ.வி வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்’’ என்று சொல்லி அமைதியானவரிடம் முதல் கேள்வியைப் போட்டோம். ‘‘செயல் தலைவர் ஆகிவிட்டாரே ஸ்டாலின்?” ‘‘அது என்ன செயல் தலைவர்? தலைவர் ஆகிவிட்டார் என்றே சொல்லும். ‘தலைவர் பதவி விலகினாலோ, நீண்ட நாட்களுக்குக் கழகப் பணியாற்ற முடியாதநிலை ஏற்பட்டாலோ கழகப் பொதுக்குழு, செயல் தலைவர் ஒருவரை நியமிக்கலாம். சட்ட திட்டங்களில் தலைவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்கள், பணிகளையும் செயல…
-
- 4 replies
- 828 views
-
-
அண்ணா... எம்.ஜி.ஆர்... ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்தது என்ன? நாற்காலியில் வெற்றிடம் விழுந்ததும், அதை வசப்படுத்த அசுர வேகத்தில் அரண்மனை சதி நிகழ்வதே வரலாறு நெடுக பாடங்களாக இருக்கின்றன. ஜனநாயக வெளிச்சத்திலும் இந்த வரலாறு மாறவில்லை. பதவி வெறி என்றால் என்ன? அதிகார போதை எப்படி இருக்கும்? அதை அடைய என்னவெல்லாம் செய்வார்கள்? அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்கள் மரணத்துக்குப் பிறகு அதற்கான அர்த்தங்களை விதைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இவர்களின் மரணத்துக்குப் பிறகு நடந்தவை என்ன? அவை சொல்லும் உண்மைகள் என்ன? இதோ ஓர் ஒப்பீடு: உடல்நலக் குறைவு! அண்ணா: 1968 செப்டம்பர் முதல் வாரம். சாப்பிட்டுக்கொண்டிருந்த அண்ணாவுக்குத் திடீரென தொண்டையில் வலி. மருத்…
-
- 0 replies
- 3k views
-
-
நெவர்! 'ஜெ., இடத்தில் சசிகலாவா... நெவர்!:' கொந்தளிக்கும் ஸ்ரீரங்கம் மக்கள் திருச்சி: 'ஜெயலலிதா இருந்த இடத்தில், சசிகலாவை நினைத்து கூட பார்க்க முடியாது; அவரை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்வோம்?' என, ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த, 2011ல், ஸ்ரீரங்கம் தொகுதியில், ஜெ., போட்டியிட்ட போது, 'ஸ்ரீரங்கம் என் பூர்வீகம்; என் முன்னோர் இங்கு வாழ்ந்துள்ளனர்' என, உருக்கமாக பிரசாரம் செய்தார். இதையடுத்து, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, 'நம்ம ஊர் பெண்' என, ஸ்ரீரங்கம் பகுதி மக்கள், அவரை வெற்றி பெற வைத்தனர். முதல்வரானதும், நன்ற…
-
- 0 replies
- 461 views
-
-
சசிகலா படம் மீது சாணம் வீச்சு சுத்தம் செய்த போலீசார் மயிலாடுதுறை:மயிலாடுதுறையில், அ.தி.மு.க.,வினர் வைத்த டிஜிட்டல் பேனரில், பொதுச் செயலர் சசிகலா உருவப்படம் மீது பூசப்பட்ட சாணத்தை, போலீசார் சுத்தப்படுத்தியது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறையில் பல இடங்களில், ஜெயலலிதா, சசிகலா படங்களுடன் பேனர்கள் வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, இரு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில், சசிகலா படத்தின் மீது சாணம் வீசப்பட்டது. அதை, அ.தி.மு.க., நிர்வாகிகளே கண்டுகொள்ளாத நிலையில், போலீசார் உடனடியாக ஆட்களை அழைத்து வந்து, பேனரிலிருந்த சாணத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். போலீசாரின் இச்செயல், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ச…
-
- 0 replies
- 667 views
-
-
பன்னீருக்கு எதிராக தம்பிதுரை பனிப்போர்: சசிகலா குடும்பம் 'ஷாக்' அ.தி.மு.க.,வில், முதல்வர் பன்னீர்செல்வத்திற் கும், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரைக் கும் இடையே பனிப்போர் நிகழ்வது, சசிகலா குடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா இருந்தவரை, அவரை எதிர்க்கும் துணிவு இல்லாததால், அனைவரும் அடக்கி வாசித்தனர். அனைத்து நிர்வாகிகளும், உளவுத் துறையினரால் கண்காணிக்கப்பட்டனர். நிர்வாகிகளில் யார் தவறு செய்தாலும், தயவு தாட்சண்யம் பார்க்காமல், ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வந்தார். இதன் காரணமாக, நிர்வாகிகள் பயத்துடன், ஜெ., கூறும் பணிகளை மட்டும் செய்து வந்த…
-
- 0 replies
- 494 views
-