தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
19 ஆண்டுகளாக ஜெயலலிதா வழக்கில் பணியாற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி சம்பந்தம் நாளை ஓய்வு: கடைசி வரை வழங்கப்படாத பதவி உயர்வு? ஜி.சம்பந்தம் கடந்த 19 ஆண்டுகளாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பணியாற்றி வரும் தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு துணை கண்காணிப்பாளர் ஜி.சம்பந்தம் நாளை ஓய்வு பெறுகிறார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜி. சம்பந்தம் கடந்த 27.9.1987 ம் ஆண்டு தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர…
-
- 0 replies
- 349 views
-
-
'அரசியல் உலகை விட்டுப் போகிறேன்':தமிழருவி மணியன் உருக்கம்! சென்னை: அரசியலில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைத் தொடர்ந்து,காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அரசியல் உலகைவிட்டும் பொதுவாழ்வை விட்டும் போகிறேன் என்றும் தெரிவித்து உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நட்சத்திரங்கள் இல்லாத இரவு நேரத்து வானம், சங்கீத மொழி பேசி சலசலத்து ஓடுவதற்குத் தண்ணீரின்றிக் காய்ந்து கிடக்கும் ஓடை, இலைகள் உதிர்ந்து கிளைகளோடு மட்டும் காட்சிதரும் ஒற்றை மரம் ஆகியவற்றைப் போன்றதுதான் என் அரசியல் வாழ்வும். உண்மை பேசினால் உயரமுடியாது என்று உணர்ந்த பின்பும், பொய்யை விலை பேசி விற்பவருக்குத் தான் பதவியும் …
-
- 0 replies
- 664 views
-
-
நளினி தொடர்ந்த வழக்கு... தமிழக அரசை பதிலளிக்க சொல்கிறது உயர் நீதிமன்றம்! சென்னை: முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில், வருகின்ற 27-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ''ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எனக்கு கீழ் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதன் பின்னர், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி தமிழக அரசு கடந்த 2000-ம் ஆண்டு உத்தரவிட்டது. நான் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை மன…
-
- 0 replies
- 346 views
-
-
கரூர் அருகே நடந்த சேவல் சண்டையில் விபரீதம்: சேவல் காலில் கட்டியிருந்த கத்தி குத்தி இளைஞர் உயிரிழப்பு நேற்று நடைபெற்ற சேவல்கட்டு கரூர் கரூர் அருகே நடந்த சேவல் சண்டையில் சேவல் காலில் கட்டியிருந்த கத்தி குத்தி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்.து க.பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருவதுடன் தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள பூலாம்வலசுவில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் சேவல்கட்டு மிக பிரசித்திமானது. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சேவல்கட்டில் சேவல் காலில் கட்டியிருந்த கத்தி குத்தி இருவர் உயிரிழந்ததையடுத்த 5 ஆண்டுகளுக்கு பூலாம்வலசு சேவல்கட்டுக்க…
-
- 0 replies
- 373 views
-
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 12 இடங்களில் அகழாய்வு நடத்த அனுமதி by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/1610526516134302-720x430.jpg தமிழகத்தில் ஒரே நேரத்தில் 12 இடங்களில் அகழாய்வும் 2 இடங்களில் கள ஆய்வும் நடைபெறவுள்ளதாக தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், தொல்லியல் துறையின் பொற்காலமாக இந்தாண்டு இருக்கும் என்றும் 12 இடங்களில் மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரே நேரத்தில் 12 இடங்களில்…
-
- 0 replies
- 574 views
-
-
போயஸ் கார்டனை இளவரசிக்கு எழுதி வைத்து விட்டார் ஜெ... திடீர் தகவலால் பரபரப்பு! போயஸ் கார்டன் இல்லத்தை இளவரசிக்கு ஜெயலலிதா எழுதி வைத்து விட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த, அவருக்குச் சொந்தமான போயஸ் கார்டன் வீட்டை, சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கு உயில் எழுதி வைத்து விட்டதாக அவரது தரப்பு கூறுவதாக நியூஸ் 18 தொலைக்காட்சியின் செய்தி தெரிவிக்கிறது. கோடானு கோடி அதிமுக தொண்டர்களை அதிர வைப்பதாக உள்ளது இந்த செய்தி. தமிழக மக்களுக்கும் பெரும் அதிர்ச்சி தருவதாக இந்த செய்தி வந்துள்ளது. VIDEO …
-
- 0 replies
- 435 views
-
-
''மூன்று முதல்வர்களுடன் பணியாற்றியிருக்கேன்...பழிவாங்கவும் பட்டிருக்கேன்''! - சாந்த ஷீலா நாயர் ஐ.ஏ.எஸ் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும், சர்ச்சைகள் இன்றி அமைதியுடனும் அடக்கத்துடனும் அரசு உயர் பொறுப்புகளில் பணியாற்றி, சமீபத்தில் ஓய்வுபெற்றவர் சாந்த ஷீலா நாயர் ஐஏஎஸ். மதிக்கத்தக்க பெண்மணியாக அரசுப் பொறுப்புக்கு வர நினைப்பவர்கள் பலருக்கும் இவர் முன்னுதாரணம். தன் 43 ஆண்டுகால ஐஏஎஸ் பணி அனுபவத்தையும், தான் எதிர்கொண்ட பல சவாலான தருணங்களையும் கனிவான குரலில் பணிவாகப் பேசுகிறார். "நான் பிறந்தது கேரளாவின் திருவனந்தபுரத்தில். அப்பா மிலிட்டரியில இருந்ததால, இந்தியாவின் பல ஊர்களில் படிச்சு வளர்ந்தேன். ஆனா, அதிகமா வசிச்சது சென்னையிலதான். இங்க குயின் மேரிஸ் கல்லூரியி…
-
- 0 replies
- 357 views
-
-
தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்! தமிழகத்தில் மே மாதம் முதலாம் திகதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே மாதம் முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில், மே மாதம் முதலாம் திகதி முதல் தடுப்பூசியை வழங்குவதற்காக இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. இதில் அனைத்து தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி, ஆசிரியர்கள் என அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/…
-
- 0 replies
- 503 views
-
-
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது! தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இதன்போது புதிதாக தெரிவு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க்கவுள்ளனர். இதற்காக தற்காலிக சபாநாயகராக தி.மு.கவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் பிச்சாண்டியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். காலை 10 மணி அளிவில் சட்டசபை கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், இதன்போது புதிதாக தெரிவு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் அகர வரிசைப்படி பதவிபிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகர், துணை சபாநாயகர்கள் நாளைய தினம் தெரிவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1214954
-
- 0 replies
- 383 views
-
-
30 நாட்கள் விடுப்பு வழங்கும்படி நளினி தமிழக முதல்வருக்கு மனு 106 Views ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தனக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரில் நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். சுமார் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் இவர்களை விடுதலை செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் குடியரசுத் தலை…
-
- 0 replies
- 426 views
-
-
சென்னை: சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அரசாணை எண் 92ன் படி கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது இந்திய மாணவர் கழக மாணவர்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி இன்று 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது, மாணவர்களை உள்ளே விட மறுத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், காவல்துறையினரிடம் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை தரதரவென இழுத்து சென்று போலீசார் வேனில் ஏற்றினர். அப்போது, காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து மாணவர்கள் கைது ச…
-
- 0 replies
- 367 views
-
-
டிடிவி தினகரனுக்கு 27 எம்எல்ஏக்கள் ஆதரவு: 3-வது அணியால் அதிமுகவில் உச்சகட்ட குழப்பம் அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை என தகவல் அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு 27 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் முதல்வர் கே.பழனிசாமி அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்த அமைச்சர் ஜெயக்குமார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ தெரிவித்தார். தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டெல்லி காவல் துறையால் கைது செய்யப்பட்ட தினகரன், கடந்த 2-ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 3-ம…
-
- 0 replies
- 199 views
-
-
தேர்தல் கமிஷனில், சசிகலா, தினகரன் பெயருடன், ஏற்கனவே தாக்கல் செய்த, அ.தி.மு.க.,வினரின் பிரமாண பத்திரங்களுக்கு மாற்றாக, இருவரின் பெயரும் இல்லாத, புதிய பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்வது குறித்து, முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர். இதன் மூலம், அரசுக்கு, மன்னார்குடி சொந்தங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தவிர்க்க, அமைச்சர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அத்துடன், பன்னீர் அணியுடனான இணைப்பு நிச்சயம் என்றும், முதல்வர் உறுதியாக தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.,வில், சசிகலா அணி மற்றும் பன்னீர் அணியினர், தாங்கள் தான் உண்மையான, அ.தி.மு.க., என்பதை நிரூபிக்க, லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களில், கட்சியினரிடம் கையெழுத்த…
-
- 0 replies
- 505 views
-
-
‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக் கொடுத்த எம்.எல்.ஏ-க்கள்!’ - ஆலோசனைக் கூட்ட களேபரம் #VikatanExclusive முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மனம்விட்டுப் பேசிய எம்.எல்.ஏ-க்களில் பலர், தங்களின் மனக் குமுறல்களைக் கொட்டித் தீர்த்துள்ளனர். மாவட்டத்தில் நடக்கும் உள்கட்சி விவகாரங்கள்குறித்துப் பேசியுள்ளனர். அதில் சில எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர் பதவி, வாரியம், கட்சிப்பதவி என தங்களின் கோரிக்கைகளை விடுத்ததாகவும் சசிகலாவுக்கு எதிராக எடுக்கும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களை இன்று சந்தித்தார். எம்.எல்.ஏ-க்களிடம் தனித்தனிய…
-
- 0 replies
- 610 views
-
-
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதிவியேற்கும் நிகழ்விற்கு சார்க் அமைப்பின் தலைவர்களை அழைப்பது என்ற போர்வையில், தமிழினத்தை திட்டமிட்டு அழித்தொழித்த சிங்கள பெளத்த இனவெறி இலங்கை அரசின் தலைவர் மகிந்த ராஜபக்சேவுக்கு இந்திய அயலுறவு அமைச்சகம் அழைப்பு விடுத்திருப்பது இந்திய நாட்டின் அங்கமாக இருக்கும் 9 கோடி தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தேர்தல் பரப்புரைக்காக முதன் முதலில் தமிழ்நாட்டிற்கு வந்த நரேந்திர மோடி, திருச்சியில் நடந்த பா.ஜ.க.வின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது, இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ்வதை பா.ஜ.க. அரசு உறுதி செ…
-
- 0 replies
- 510 views
-
-
மத்திய அரசு ஆசிரியர் தின பெயர் மாற்றத்தை திரும்ப பெற வேண்டும்-வைகோ வலியுறுத்தல்! ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, தனது கடும் உழைப்பாலும், முயற்சியாலும் கல்லூரி பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் திகழ்ந்து, தந்துவ மேதையாக உயர்ந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆவார். அவர் நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று அப்பதவிக்குப் பெருமை சேர்த்தார். செப்டம்பர் 5 ஆம் நாள் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. எதிர்கால இளம் தலைமுறையை பிஞ்சு பருவத்திலிருந்தே ஆற்றுப்படுத்தி, சமூகத்தில் உயர்ந்தவர்களாக ஏற்றம் பெற கல்விச் செல்வத்தை வாரி…
-
- 0 replies
- 421 views
-
-
வேலூரில் அரை நிர்வாண ராகிங்: சஸ்பெண்ட் ஆன ஏழு பேர் மீது போலீஸில் புகார் - முழு விவரம் பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு, கோப்புப்படம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி விடுதியில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களை, ஏற்கெனவே இருந்த மாணவர்கள் 'ராகிங்' செய்தபோது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ வைரலான நிலையில், ஏழு மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பாகாயத்தில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இயங்கிவருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் படித்துவருகின்றனர். இவர்களில் பலர் இங்குள்ள விடுதியில் …
-
- 0 replies
- 683 views
- 1 follower
-
-
ஒரு புறநானூற்றுத் தமிழன் எப்படி இருப்பான் என்பதை என் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய புறநானூறுப் பரப்பரையின் புதிய அத்தியாயத்தின் அந்த மாவீரன் யார் என்று சொன்னால் அது உலகில் மூலை முடக்கு எங்கும் இருக்கும் தமிழர்களின் நெஞ்சங்களில் இருக்கும் ஒரே தமிழன் பிரபாகரன். அவன் பிறந்த இந்நாள் அதுவே நன்நாள் என இயக்குநர் ரி.ராஜேந்தர் கூறியுள்ளார். தமிழீழத் தேசியத் தலைவரின் 60-ஆவது அகவை முன்னிட்டு அவர் வழங்கிய சிறப்பு வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://www.pathivu.com/news/35455/57//d,article_full.aspx
-
- 0 replies
- 417 views
-
-
இன்று தகுதி நீக்க தீர்ப்பு... தினகரனின் ஆரூடம் பலிக்குமா? தகுதிநீக்க தீர்ப்பு வெளியானால் அதிமுக ஆட்சி கவிழுமா அல்லது தப்புமா இல்லாவிட்டால் ஆட்களை இழுக்கும் வேலைகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று கூறி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். இதனிடையே கொறடா உத்தரவை மீறியதால் அவர்கள் 18 பேரும் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் 3 ஆவது நீதிபதி சத்தியநாராயணா இன்று தீர்ப்பளிக்கவுள்ளார்.தகுதி நீக்க வழக்கு செல்லாது என்று தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையுடன் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றால…
-
- 0 replies
- 359 views
-
-
மிஸ்டர் கழுகு : விரக்தியில் ஜெ. பதவியை குறிவைக்கும் அப்பீல் மனு ! ‘‘முதல்வர் ஜெயலலிதாவின் கவனம் எல்லாம் இப்போது டெல்லியை நோக்கித்தான் இருக்கிறது” என்றபடியே லேண்ட் ஆன கழுகார் மேலும் தொடர்ந்தார். ‘‘சொத்துக் குவிப்பு வழக்கின் சுழல் மீண்டும் தொடங்கிவிட்டதுதான் ஜெயலலிதாவின் பயத்துக்குக் காரணம். ஆச்சார்யா தாக்கல் செய்த மனு, முதல்வர் பதவியைக் குறி பார்ப்பதாக அமைந்திருக்கிறது. தீர்ப்பில் உள்ள குளறுபடிகள் பற்றி உமது நிருபர் எழுதி இருப்பார். அப்பீல் மனுவின் மையப்புள்ளியாகச் சொல்லப்பட்ட விஷயங்களை நான் சொல்கிறேன்!” ‘‘ம்!” ‘‘நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பைப் பற்றிய காரசாரமான விமர்சனங்கள் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுவில் இருக்கின்றன. ‘நீதிபதி குமாரசாமி, வழக்கின் …
-
- 0 replies
- 329 views
-
-
கருணை கொலையாவது செய்யுங்கள்!- இலங்கை தமிழர்கள் திருச்சி சிறையில் உண்ணாவிரத போராட்டம் எங்களை கருணை கொலையாவது செய்யுங்கள் என வலியுறுத்தி திருச்சி மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் நான்கு பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை தமிழர்களான பாஸ்கரன், ரமேஷ், அருளின்பதேவன் மற்றும் செல்வம் ஆகியோரே இவ்வாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கைதிகள் தெரிவித்துள்ளதாவது, “நாங்கள் எந்ததொரு குற்றங்களும் புரியவில்லை. ஆகையால் உடனடியாக தங்களது வழக்கை விசாரணைக்கு உட்படுத்தி விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிடின், கருணை கொலையாவது தங்களை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்ப…
-
- 0 replies
- 413 views
-
-
100 ஆண்டு பார்த்திராத சோகம்! நாட்டின் நான்காவது பெரிய நகரமான சென்னை, தன்னைவிட 3 பெரிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தாவைவிட பாதுகாப்பான நகரம் என பெயர் பெற்றிருந்தது. மும்பை, ஒடிசா, ஆந்திராவில் வெள்ளப் பாதிப்புகள் குறித்த செய்தி வரும்போதெல்லாம் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் என சென்னை மக்கள் பெருமிதப்பட்டனர். இந்த வட கிழக்குப் பருவமழை அந்தப் பெருமிதத்தைச் சிதைத்துவிட்டது. 100 ஆண்டு சாதனையை முறியடித்த மழை! கடந்த 100 ஆண்டுகளில் சென்னை சந்தித்திராத மழை என்கின்றன புள்ளிவிவரங்கள். ‘வரலாறு காணாத மழை’ என்ற வாக்கியத்தை உண்மையாக்கி உள்ளது சென்னையில் இந்த மாதத்தில் கொட்டிய மழை. கடந்த 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில…
-
- 0 replies
- 771 views
-
-
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு அரவக்குறிச்சி. | படம்: ஏ.முரளிதரன் தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அரவக்குறிச்சி தொகுதி பாமக வேட்பாளர் எம்.பாஸ்கரன், தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் எம்.எஸ்.ராமலிங்கம், திருச்சியைச் சேர்ந்த விவசாயி அய்யாகண்ணு, சுய ஆட்சி இயக்கத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், பாஜகவைச் சேர்ந்த தனசேகரன் ஆகியோர் தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். …
-
- 0 replies
- 241 views
-
-
எப்படி இருந்த தே.மு.தி.க....? விஜயகாந்த் சறுக்கியது இப்படித்தான் ! தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக பார்க்கப்பட்டவர் விஜயகாந்த். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாகவும் கருதப்பட்டவர். தேசிய கட்சியின் அகில இந்திய தலைவர்களையே தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு வரவழைத்து சந்திக்கும் ஜெயலலிதா, விஜயகாந்தையும் வீட்டுக்கு வரவழைத்து சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தவர். எதிர்கட்சி என்ற அந்தஸ்தை கூட இழந்து பரிதாபமாய் தி.மு.க. தோற்க காரணமாய் இருந்தவர். இப்படி தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக பார்க்கப்பட்ட கட்சி தே.மு.தி.க.வின் நிலை இப்போது பரிதாபமாய் காட்சியளிக்கிறது. அடுத்தடுத்த தோல்விகளுக்கு இடையேயும் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்துடன்…
-
- 0 replies
- 882 views
-
-
'பொதுச்செயலர் பதவியை ஏற்க வேண்டும்' என, சசிகலாவை, அ.தி.மு.க., நிர்வாகிகள் வலி யுறுத்தி வரும் நிலையில், முதல்வர் பன்னீர் செல்வத்தை ஓரங்கட்ட, மந்திரி உதயகுமார் மூலம், சசி சொந்தங்கள் பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். 'சசிகலா முதல்வராக வேண்டும்' என, ஜெ., பேரவை மூலம், முதல் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டு உள்ளது. இதன் மூலம், சசிகலா துதி பாடிகளின் கச்சேரி துவங்கி விட்டதாக, அ.தி.மு.க., தொண்டர்கள் கொதிப்படைந்து உள்ளனர். முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, ஏற்கனவே இரு முறை அந்த பதவியை வகித்த, பன்னீர்செல்வம் முதல்வராகி உள்ளார். அடுத்ததாக, 'ஜெ., வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியை, சசிகலா ஏற்க வேண்டும்' என, கட்சியின் முக்கிய நி…
-
- 0 replies
- 262 views
-