தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10249 topics in this forum
-
மே 17 வரை சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு…! சென்னையில் மே 17 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனிடையே தமிழத்தில் உள்ள பல்வேறு அம்மா உணவகங்களில் ஊரடங்கு அறிவித்த நாள் முதல் இலவச உணவு வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது ம…
-
- 0 replies
- 886 views
-
-
சூரிய ஒளியில் இயங்கும் டிராக்டரை கண்டுபிடித்து கோவில்பட்டி மாணவர் சாதனை! கோவில்பட்டியில் சூரிய ஒளியில் இயங்கும் டிராக்டரை கண்டுபிடித்து மாணவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ள மாணவர் ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெறவுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சிவசூர்யா என்ற மாணவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். விவசாயத்துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் விவசாயிகளுக்கு உதவும் புதுமையான படைப்பை உருவாக்க திட்டமிட்டார். இதற்காக நீண்ட நாட்கள் போராடி சூரிய ஒளியால் இயங்கக்கூடிய டிராக்டர் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த டிராக்டர் சிறு குறு விவசாயிகளுக்கு உதவும் வகைய…
-
- 0 replies
- 509 views
-
-
ஜார்ஜ், அமல்ராஜ், சைலேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்! ஜி.ராமகிருஷ்ணன் "சென்னையில் நடந்த வன்முறை சம்பவங்கள் அனைத்துக்கும் காரணமான போலீஸ் கமிஷனர்கள் ஜார்ஜ், அமல்ராஜ், சைலேஷ் குமார் ஆகியோரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்து, அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜல்லிக்கட்டு உரிமைக்காக ஒருவார காலம் தமிழகம் முழுவதும் அமைதியாகப் போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவர் மீதும் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் மூர்க்கத்தனமான வன்முறையைக் கட்டவிழ்த்து…
-
- 0 replies
- 497 views
-
-
"விவசாயிகளையே பிச்சை எடுக்க விட்டுட்டாங்க; எங்களையா கண்டுக்கப் போறாங்க?" ஈழ அகதிகள்! "தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இந்த 26 வருடங்களில் மூன்று வேளை சாப்பாட்டுக்காக மட்டுமே எங்களுடைய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது"- திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ் மக்கள் இவ்வாறு தெரிவிக்கின்றனர். தமிழக அரசு அண்மையில் தாக்கல்செய்த பட்ஜெட்டில், இலங்கை தமிழ் அகதிகளுக்காக 116 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை எத்தனை பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், அகதிகள் மறுவாழ்வு பதிவேடோ, சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கி இருப்பதாகவும், முகாம்களுக…
-
- 0 replies
- 348 views
-
-
பெங்களூரு சிறைக்கு தினகரன் வரவில்லை: பண்ணை வீட்டில் தங்கலா? டிடிவி தினகரன் | கோப்புப் படம்: க.ஸ்ரீபரத். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவை பார்க்க புறப்பட்டுச் சென்ற டிடிவி.தினகரன் திட்டமிட்டபடி சிறைக்கு வரவில்லை. இதனால், பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தினகரன் பெங்களூரு வந்துவிட்டார் ஆனால் சிறைக்கு வராமல் நட்சத்திர விடுதியிலோ அல்லது அவரது நண்பரின் பண்ணை வீட்டிலோ தங்கியிருக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பிரிந்து கிடக்கிறது. கட்சி சின்னமும் முடக்க…
-
- 0 replies
- 645 views
-
-
எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் கூட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் தலைமையில் நடந்த அ.தி.மு.க கூட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றபட்டது. பதிவு: ஜூன் 17, 2021 13:58 PM மாற்றம்: ஜூன் 17, 2021 16:20 PM சென்னை சசிகலா தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசும் வீடியோ அவ்வப்போது வெளியாகி அ.தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர் உள்பட 16 பேர் அ.தி.மு.க.வில் இருந்து திடீரென நீக்கப்பட்டனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். …
-
- 0 replies
- 264 views
-
-
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை! தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இலஞ்ச் ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி அவருக்கு சொந்தமான 43 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை இதற்கு முன் அதிமுக அமைச்சர்களான எம்.ஆர்.விஜய பாஸ்கர், எஸ்.பி வேலுமணி, வீரமணி ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1245505
-
- 0 replies
- 264 views
-
-
தமிழ்நாட்டுக்கு மூவேந்தர் கொடி: 'தி.மு.க அரசுக்கு நெருக்கடி உண்டாக்கும் திட்டம்' - சீமான் மீது வழக்கு ஏன்? ஆ விஜயானந்த் பிபிசி தமிழ் 27 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NAAMTAMILARKATCHIOFFL FACEBOOK PAGE நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. `தி.மு.க ஆட்சியை மத்திய அரசு கேள்வி கேட்க வேண்டும் என்பதை நோக்கமாக வைத்துச் சிலர் செயல்படுகிறார்கள். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே வழக்கு பதியப்பட்டது' என்கிறது தி.மு.க. என்ன நடந்தது? என்னென்ன பிரிவுகளில் வழக்கு? சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் …
-
- 0 replies
- 515 views
- 1 follower
-
-
தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா?! அரசுக்கு அடுத்த நெருக்கடி?! தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்குப் பதிலடி கொடுக்க, எதிர்க்கட்சியான தி.மு.க முடிவெடுத்து விட்டது. அவை உரிமைக்குழு கூட்டத்தில், குட்கா பிரச்னையைக் காரணம் காட்டி, தி.மு.க. உறுப்பினர்களை நீக்கம் செய்தால், ஒட்டுமொத்தமாக அனைத்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலையிலான அரசு அறுதிப் பெரும்பான்மையை இழந்து, 'மைனாரிட்டி' அரசாகி விட்டது என்று தி.மு.க குற்றம…
-
- 0 replies
- 266 views
-
-
சி.என்.அண்ணாதுரை நினைவு நாள்: இந்திய நாடாளுமன்றத்தில் திராவிட நாடு குறித்து முழங்கியவர் 15 செப்டெம்பர் 2018 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ARUNKUMARSUBASUNDARAM (செப்டம்பர் 15, 2018 அன்று பிபிசி தமிழில் வெளியான கட்டுரை அண்ணா நினைவு நாளான இன்று மறுபகிர்வு செய்ய்யப்படுகிறது.) தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை, மாநிலங்களவையில் 1962-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி தமது முதலாவது உரையை ஆற்றினார். அப்போது நடந்த குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது அண்ணாதுரை பேசிய உரையை அவரது நினைவு தினமான இன்று தொகுத்துவழங்குகிறோம். பெருமதிப்பிற்குரிய மன…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
எம்ஜிஆரை பாரதப் பிரதமர் ஆக்கிய தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் : மன்மோகன் சிங்கை பிரதமராக்கிய தமிழக முதலமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை பாரதப் பிரதமர் என்று வாய் தடுமாறி சொல்லி மீண்டும் சர்சையில் சிக்கியுள்ளார்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மாவட்டம்தோறும் கொண்டாடிவருகின்றது. திண்டுக்கல்லில் இன்று இடம்பெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்தார். இதன்போது பாரதப் பிரதமர் எம்ஜிஆர்..என்று பேசிவிட்டு பின்னர் பாரத ரத்னா எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது என்றார். எம்.ஜி. ஆரை பாரதப் பிரதமராக்கிப் பேசியதன…
-
- 0 replies
- 413 views
-
-
மிஸ்டர் கழுகு: ஆபரேஷன் ஆர்.கே.நகர் - அமைச்சர்களுக்கு 5000 டார்கெட்! ஆர்.கே. நகரைச் சுற்றிவிட்டு அலுவலகம் வந்தார் கழுகார். ‘‘ ‘குறைந்த வாக்கு வித்தியாசமாக இருந்தாலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும்’ என்பது அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி இட்டுள்ள கட்டளை’’ என்ற பீடிகையுடன் செய்திகளைச் சொல்லத் தொடங்கினார். ‘‘என்ன செய்கிறது அ.தி.மு.க?’’ ‘‘தினகரனை அ.தி.மு.க குறிவைத்துள்ளது. ‘தமிழக உளவுத்துறை ஐ.ஜி-யான சத்தியமூர்த்தி, மஃப்டி போலீஸை ஏவி, தினகரன் கோஷ்டியில் ஆக்டிவான பிரமுகர்களை இரவோடு இரவாகப் பிடித்துப் பொய் கேஸ் போடுகிறார்’ என்று சொல்கிறார்கள். ‘உளவுத்துறை ஐ.ஜி., சென்னை போலீஸ் கமிஷனர், இணை போலீஸ் கமிஷனர் ஆகிய மூவரையும் மாற்றவேண்டும்’ என்று தலைமைத் தேர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னை தினம்: மெட்ராஸ் நகரத்தின் உண்மையான வயது என்ன? - கல்வெட்டுகள் விவரிக்கும் வரலாறு பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 13 ஆகஸ்ட் 2017 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FOX PHOTOS/GETTY IMAGES படக்குறிப்பு, சுமார் 1950 ஆம் ஆண்டில் மெட்ராஸிலுள்ள சட்டமன்றப்பேரவை கட்டடம் (2017ஆம் ஆண்டு வெளியான கட்டுரையை மீண்டும் மீள்பகிர்வு செய்கிறோம்) ஆகஸ்ட் மாதம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சென்னையில் பழைய மெட்ராஸ் நகரத்தின் உதய தினத்தை கொண்டாடுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு நடைப் பயணம், சென்னை நகரத்தின் தொன்மை க…
-
- 0 replies
- 328 views
- 1 follower
-
-
தாயின் உடலை அடக்கம் செய்வதற்காக பிச்சையெடுத்த திண்டுக்கல் சிறுவர்கள்: இறந்துபோன தாயின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் சிறுவர்கள் பிச்சை எடுத்த சம்பவம் ஒன்று தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப் பகுதியில் வசித்த கணவனை இழந்த விஜயா என்பருக்கு மூன்று மகன்கள். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விஜயாவை அவர்களது மூன்று மகன்கள் மட்டுமே கவனித்து வந்து நிலையில் தமது தாயின் உடலை அட…
-
- 0 replies
- 372 views
-
-
`சிறை கையேடு 459-ன்படி சசிகலா மூன்றாம்வகை குற்றவாளி!' - சத்ய நாராயணராவ் வாக்குமூலத்தின் முழு விவரம் சசிகலாவுக்குச் சிறையில் செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் குறித்து வெளியாகும் தகவல்களால், சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. `அரசு விருந்தினர் மாளிகைக்கு என்னை அழைத்தார் முதல்வரின் உதவியாளர். அங்கு சென்றபோது, சசிகலாவுக்குச் சிறப்பு வசதிகள் செய்து தருமாறு கூறினார்' என வினய் குமார் கமிஷன் முன்பாக சிறைத்துறை டி.ஜி.பியாக இருந்த சத்யநாராயண ராவ் தெரிவித்த கருத்துகள் புயலைக் கிளப்பியுள்ளன. கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜியாகப் பொறுப்பேற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிரடி சோதனையை மேற்கொண…
-
- 0 replies
- 373 views
-
-
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோர தீர்மானித்தது எடப்பாடி தரப்பு! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி தேர்தல் ஆணையகத்தில் முறையிட எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எடப்பாடி தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அடுத்த வாரம் டெல்லி சென்று தேர்தல் ஆணையர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது இதுகுறித்து பேசப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://athavannews.com/2023/1320859
-
- 0 replies
- 272 views
-
-
45 நாட்கள் உணவின்றி தவித்த இலங்கை பெண்ணிடம் விசாரணை 45 நாட்கள் உணவின்றி தவித்த இலங்கை பெண்ணிடம் இராமநாதபுர மாவட்ட நீதிபதிகள் மண்டபம் அகதிகள் முகாமிற்க்குள் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2007 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உச்சகட்ட உள்நாட்டு போரின் போது இலங்கை தமிழர்கள் தமிழகத்திறக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்ட மண்டபம் அகதிகள் முகாமில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரிசி இலவசமாக ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. மேலும் சிறப்பு முகாம்களில் பொலிஸ் பாது…
-
- 0 replies
- 813 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்காக கூறி தமிழ்நாடு அரசு வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. நிலுவையில் வைத்துள்ள மசோதாக்களை உடனடியாக ஆளுநர் பரிசீலிக்கவேண்டும் என உத்தரவிடக்கோரி அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சர்ச்சையின் பின்னணி என்ன? ‘ஆளுநர் பதிலளிக்க காலவரம்பு வேண்டும்’ சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்குக் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் பதில் சொல்லவேண்டும் என்ற எந்த க…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
ஜெயலலிதா மரண விசாரணை: லண்டன் வைத்தியருக்கு அழைப்பாணை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக, லண்டன் வைத்தியர் ரிச்சர்ட் பீலேயை, ஆறுமுகசாமி விசாரணை ஆணையகத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணைக்கு எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி காணொளி காட்சி ஊடாக முன்னிலையாகுமாறு ரிச்சர்ட் பீலேவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 18ஆம் திகதி விசாரணைக்கு சமூகமளிக்காததால் ஜனவரி 7ஆம் திகதி முன்னிலையாகுமாறு அவருக்கு இரண்டாவது முறையாகவும் ஆணையகத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜனவரி 8 ஆம் …
-
- 0 replies
- 986 views
-
-
முருகன் 9வது நாளாகவும் தொடர் உண்ணாவிரதம்! முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் இன்று 9வது நாளாகவும் தொடர் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசின் சிபாசு குறித்து நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் காலம் கடத்தி வருகின்றார். இது தொடர்பாக முருகன் கடந்த 31ஆம் திகதி வேலூர் மத்தியசிறை அதிகாரிகள் மூலம் ஆளுநருக்கு கோரிக்கை மனு ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில், ‘ராஜீவ்காந்தி கொலைக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை,…
-
- 0 replies
- 627 views
-
-
'சாட்சிகளை கலைப்பார், தப்பி விடுவார்..!' - பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் வழங்க அரசு கடும் எதிர்ப்பு "முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில், பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார். அதனால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருப்பூரில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் பிரேமலதா மீது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். …
-
- 0 replies
- 376 views
-
-
வேலூர் மாவட்டம், அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த 22ம்தேதி மதியம் பள்ளி தொடங்கிய நிலையில் பிளஸ் 2 வகுப்பில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, பின் வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்கள் சிலர் தேவையில்லாத சந்தேகங்களை எழுப்பிக்கொண்டே இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஆசிரியர் அருகில் சென்று விசாரித்தபோது, அம்மாணவர்கள் போதையில் இருந்தது தெரிய வந்தது. இந்த தகவல் தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் விசாரித்துள்ளார். அதில் அந்த மாணவர்களில் ஒருவருக்கு அன்று பிறந்தநாள் என்பதும் இதையடுத்து அந்த குறிப்பிட்ட மாணவன், பள்ளி வளாகத்தில் பயனற்ற நிலையில் உள்ள கட்டிடத்தில் தன்னுடன் படிக்கும் 11 மாணவர்களை அ…
-
- 0 replies
- 676 views
-
-
ஆன்லைன்’ சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல் வீட்டில் இருந்தபடியே எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என இளைஞர்களை தூண்டுவதால், ஆன்லைன் சீட்டாட்டத்துக்கு தடை விதிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருக்கிறது. பதிவு: ஜூலை 25, 2020 05:30 AM மதுரை, நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிலுவை வெனன்ஸ். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 5-ந் தேதி இவர் உள்பட 5 பேரை, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூடங்குளம் போலீசார் பிடித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத…
-
- 0 replies
- 416 views
-
-
கடலூரில் பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிவிபத்து- எழுவர் உயிரிழப்பு! கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் குறித்த விபத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கண்ட துயர சம்பவத்தில் அகால மரணமடைந்த ஏழு நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன் மீட்புப் பணிகளை உட…
-
- 0 replies
- 375 views
-
-
பரிகாரம் தேடுவாரா, பழியைச் சுமப்பாரா... By பழ. நெடுமாறன் "செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே'' - என குலசேகர ஆழ்வார் பாடுகிறார். வேங்கடேசப் பெருமானிடம் ஏதேனும் ஒன்றைப் பெறவேண்டி முயன்றவர்களுக்கெல்லாம் எம்பெருமான் - ஏழை, ஏதலன், கீழ்மகன் என்னாது - இரங்கி அருள்புரிவான் என்பது அவனுக்கே உரிய பெருமையாகும் என்பர். திருப்பதி மலையில் வீற்றிருக்கும் திருமால், வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சனைக் கொன்று பூமாதேவியை தன் கொம்புகளால் மீட்டுக் கொண்டுவந்ததாகப் புராணம் கூறுகிறது. கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி வேங்கடேசப் பெருமான் திகைத்துத் திணறிப்போயிர…
-
- 0 replies
- 706 views
-