Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரபல செருப்பு நிறுவனத்தின் செருப்பில் கறுப்பினத்தவரின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளதால், சர்ச்சை எழுந்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணி புதுரோட்டை சேர்ந்தவர் ஏ.தெ.சுப்பையன். இவர் கவிஞர் மற்றும் சிறந்த எழுத்தாளர் என கூறப்படுகிறது.இவர் அதே பகுதியை சேர்ந்த செருப்பு கடையில் செருப்பு ஒன்று வாங்க சென்றுள்ளார். கேரளாவில் தயாரித்து, இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் பிரபல செருப்பு நிறுவனமான வி.கே.சி நிறுவனத்தின் செருப்பு ஒன்றை வாங்கியுள்ளார்.செருப்பை வாங்கி அதன் உள்பகுதியை கவனித்த போது, அதில் கறுப்பினத்தவரின் புகைப்படம் அச்சிடப்பட்டு, அதன் மேல் ஒரு ஆங்கில கவிதை ஒன்று இடம் பெற்றிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், செருப்பை வாங்கிய கடையில் தி…

  2. ' ராஜீவ் கொலை சதியோடு இந்தியா வரவில்லை என்பதை சொல்வீர்களா?' -சி.பி.ஐ அதிகாரிக்கு சாந்தனின் கண்ணீர் கோரிக்கை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சாந்தன். ' வெளிநாட்டு வேலைக்காத்தான் இந்தியா வந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதைப் பற்றி ஒருமுறையேனும் பகிரங்கமாக வெளியில் சொல்வீர்களா' என தன்னைக் கைது செய்த காவல்துறை உயர் அதிகாரிக்கு வேண்டுகோள் வைக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில், கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் படுகொலை செய்யப்பட்டார் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளன…

  3. “நானே கடவுள்” ஜக்கி பெண்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார்.! (காணொளி இணைப்பு ) ஜக்கி வாசு­தேவ்வின் மாய வலையில் சிக்­கி­யுள்ள எனது இரு மகள்­க­ளையும் மீட்டுத் தாருங்கள் என்று தமிழ்­நாடு வேளாண்மை பல்­க­லைக்­க­ழ­கத்தின் முன்னாள் பேரா­சி­ரி­ய­ரான முனைவர் காமராஜ் கோவை மாவட்ட ஆட்சித் தலை­வ­ரிடம் கோரிக்கை விடுத்­தி­ருக்­கிறார். கோயம்­புத்தூர் – செம்­மேடு, வெள்­ளி­யங்­கிரி மலை அடி­வா­ரத்தில் ஈஷா யோகா மையம் உள்­ளது. 150 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் விரிந்­துள்ள இந்த மைய­மா­னது, உள்­நிலை மாற்­றத்­திற்­கான சக்தி வாய்ந்த இடம் என்று சொல்­லப்­ப­டு­கி­றது. இங்கு தியா­ன­லிங்கத் திருக்­கோவில், ஸ்பந்தா ஹால், ஈஷா புத்­து­ணர்வு மையம், ஈஷா இ…

  4. சென்னையில் வேகமாகப் பரவும் அரேபிய உணவு கலாசாரம் (காணொளி) அரபு உணவுக்கூடங்கள் என்பது இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் முன்னதாகவே அறிமுகமான ஒன்றுதான். நூற்றுக்கணக்கான பிரத்யேக அரேபிய உணவுக்கூடங்கள் மாநிலம் முழுவதும் இயங்கி வந்திருக்கின்றன. ஆனாலும், தமிழகத் தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, கடந்த 10 ஆண்டு காலகட்டத்தில் அவற்றின் வளர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, ஷவர்மா என அழைக்கப்படும் உணவு வகைகள் விற்கப்படும் துரித உணவு கூடங்கள் சென்னையில் பெருகி வருகின்றன. துரித உணவு கலாச்சாரத்திற்கு மாறி வரும் இளைய தலைமுறையினர் பலர் தற்போது இந்த உணவை அதிகம…

    • 1 reply
    • 845 views
  5. தமிழ்நாட்டை சேர்ந்த ராமர்பிள்ளை என்பவருடைய கண்டுபிடிப்பான மூலிகை பெட்ரோலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 1996ஆம் ஆண்டு ராமர்பிள்ளை மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்து பரபரப்பை உண்டாக்கினார். ஆனால், பல்வேறு காரணங்களால் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சோதனைக்கு ஆளானார் ராமர்பிள்ளை. சரியான கல்வி அறிவு இல்லாத அவரால், இந்த பெட்ரோலை கண்டுபிடித்திருக்க வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அவர் கண்டுபிடித்துள்ள பெட்ரோலில் கலப்படம் இருப்பதாகவும் கூறப்பட்டது. அந்த எதிர்ப்புகளுக்கு பின்னால் கார்ப்பரேட் கம்பெனிகளும், அரசியல்வாதிகளும் இருந்ததாக அப…

    • 1 reply
    • 915 views
  6. இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரியும், நாடு திரும்ப விரும்புவோருக்கான தண்டப்பணத்தை குறைக்க கோரியும் இலங்கை தமிழ் அகதிகள் சென்னையில் அமைதிப் பேரணி ஒன்றை நேற்று நடத்தினர். சுமார் 600 இலங்கைத் தமிழ் அகதிகள் பங்கேற்றிருந்த இந்தப் பேரணியின் முடிவில், தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை முதலமைச்சர் பணியகத்தில் கையளித்தனர். அந்த மனுவில், தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், முகாம்களுக்கு வெளியே வசிக்கும் அகதிகள் நாடு திரும்பும் போது செலுத்த வேண்டிய தண்டப்பணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் பங்கேற்ற ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் செயலாளர் ஞானராஜ…

  7. தமிழனின் வீரத்தையும் மாண்பையும் உலகம் முழுவதும் பறைசாற்றிய மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு கங்கை கொண்ட சோழபுரத்தில் மணிமண்டபம் கட்டவேண்டும் என அரசியல் கட்சி அமைப்பினர் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த, மன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் மற்றும் அரியணை ஏறிய, ஆயிரத்து இரண்டாவது ஆண்டை முன்னிட்டு ஞாயிற்றுக் கிழமை (நேற்று) விழா நடைபெற்றது. இதையொட்டி கங்கை கொண்ட சோழபுரத்தில் எழுந்தருளியுள்ள பிரகதீஸ்வரருக்கு மகாபிஷேகம் நிகழ்ந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வால் ஜெயங்கொண்டம் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநக…

  8. அதிமுகவிலிருந்து சர்ச்சை எம்.பி., சசிகலா புஷ்பா நீக்கம்... ஜெயலலிதா அதிரடி! சென்னை: டெல்லி விமான நிலையத்தில், தி.மு.க எம்.பி திருச்சி சிவாவுடன் தகராறு செய்ததாக சர்ச்சைக்குள்ளாகிய அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை கட்சியிலிருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. டெல்லியிலிருந்து சென்னைக்கு திரும்ப, தி.மு.க எம்.பி திருச்சி சிவாவும், அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பாவும் நேற்று பிற்பகல் டெல்லி விமான நிலையத்துக்கு வந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒருவருக்கொருவர் அப்போது ஒருமையில் பேசிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்த…

  9. தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் காரில் சென்றபோது சென்னை கிண்டியில் கார் விபத்துக்குள்ளானது. வேகமாக வந்த கார் பழ.நெடுமாறன் சென்ற காரின் பின்புறம் மோதியதில் விபத்துக்குள்ளானது. கார் மோதியதில் லேசான காயங்களுடன் நெடுமாறன் தப்பினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=162638&category=IndianNews&language=tamil

    • 4 replies
    • 1.4k views
  10. சென்னை, மாயமான ராணுவ விமானம் விசாகப்பட்டினம் காட்டுப்பகுதியில் விழுந்ததாக கூறப்படுவதால் அங்கு விமானப்படையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 9-வது நாளாக தேடும் பணி சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு கடந்த 22-ந்தேதி காலை 8.30 மணிக்கு ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் பறந்தபோது அந்த விமானம் திடீரென மாயமானது. அது, வங்கக் கடலில் விழுந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் மாயமான விமானத்தை தேடும்பணியில் போர்க்கப்பல்கள், போர்விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு தேடுதல் பணி நடந்து வருகிறது. ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் விமானத்தை கண்டு பிடிக்க ம…

  11. நேபாளத்தில் சிக்கியுள்ள 10 தமிழர்களை ஹெலிகாப்டரில் மீட்பதற்காக தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 19 பேர் நேபாளத்தில் உள்ள முக்திநாத் கோயிலுக்கு ஜுலை 20-இல் பக்திச் சுற்றுலா சென்றனர். அங்கு அற்பட்ட கடும் மழை-நிலச்சரிவு காரணமாக, அவர்களில் 10 பேர் சிக்கி தவித்து வருகின்றனர்.இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமைந்தகரையைச் சேர்ந்த ப.கணேஷ் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதன்பேரில், அவர்களை உடனடியாக மீட்க தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தமிழக அரசு அதிகாரிகள் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசினர். இதன்படி, 10 பேரும் ஜா…

  12. திமுக எம்பி திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்த அதிமுக எம்பி: டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி சிவாவை அதிமுக எம்பி சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் வார விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துவிட்டு, மீண்டும் டெல்லி செல்வது வழக்கம். அதன்படி நேற்று சனிக்கிழமை என்பதால் திமுக எம்பி திருச்சி சிவாவும், அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவும் சொந்த ஊர் திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீ ரென வாய்தகராறு ஏற…

  13. ஈழத்தமிழ் அகதிகளின் கண்ணீர்க் கதை ஒரே மொழி, ஒரே இனம், இலங்கையில் இருந்து தமிழகத்தில் தஞ்சமடைந்ததால் அவர்கள் அகதிகள். இலங்கையில் யுத்தம் ஓய்ந்து விட்டது. காற்றில் கலந்த கந்தக வாசனை இப்போது இல்லை. முள்வேலிகள் இன்னும் திறக்கப்படவில்லை. சொந்த நாட்டில் சிறைப் பிடிக்கப்பட்ட கைதிகளைப் போல் ஒரு பரிதாப வாழ்க்கை. தமிழகத்திற்கு புலம் பெயர்ந்தவர்கள், உளவுப் பிரிவின் கண்காணிப்பு, கியூ பிராஞ்சின் கிடுக்குப் பிடி, ஈழத்தமிழர் முகாமை விட்டு வெளியே போகவர என எந்த நடமாட்டமும் பதிவேடுகளில் பதிவு, இரை தேடிப்போன பறவை கூட்டிற்கு வருவதுபோல சாயங்காலம் ஆறு மணிக்குள் கூட்டிற்கு திரும்பவேண்டிய இக்கட்டான ஒரு வாழ்க்கை. எந்த ஒரு தேவைக்கும் மற்றவர்களின் கையை எதிர்பார்த்து நிற்கும் நிலை…

  14. முக்கிய செய்திகள் : இந்தியா : நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நரேந்திர மோடி மறந்துவிட்டார்: மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு. தமிழகம் : சென்னை கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே மோதல்: மாணவரின் கழுத்து கத்தியால் கிழிக்கப்பட்டதால் அதிர்ச்சி. தமிழகம் : செங்கத்தில் காவல்துறையினரால் ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துடன் தாக்கப்பட்ட சம்பவம்: தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய அலுவலர்கள் நேரில் விசாரணை. …

    • 0 replies
    • 528 views
  15. வேலூர் மாவட்டம், அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த 22ம்தேதி மதியம் பள்ளி தொடங்கிய நிலையில் பிளஸ் 2 வகுப்பில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, பின் வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்கள் சிலர் தேவையில்லாத சந்தேகங்களை எழுப்பிக்கொண்டே இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஆசிரியர் அருகில் சென்று விசாரித்தபோது, அம்மாணவர்கள் போதையில் இருந்தது தெரிய வந்தது. இந்த தகவல் தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் விசாரித்துள்ளார். அதில் அந்த மாணவர்களில் ஒருவருக்கு அன்று பிறந்தநாள் என்பதும் இதையடுத்து அந்த குறிப்பிட்ட மாணவன், பள்ளி வளாகத்தில் பயனற்ற நிலையில் உள்ள கட்டிடத்தில் தன்னுடன் படிக்கும் 11 மாணவர்களை அ…

  16. தமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் காலமானார் ஞானக்கூத்தன் | கோப்புப் படம். தமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் புதன்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 77. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூரில் பிறந்தவர் ஞானக்கூத்தன். அரங்கநாதன் என்ற இயற்பெயரை, திருமந்திரம் நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் ஞானக்கூத்தன் என்று பெயர் மாற்றிக் கொண்டார். இராமகிருஷ்ணன், சா.கந்தசாமி, ந.கிருக்ஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ’கசடதபற’ இதழைத் துவக்கினார். ’ழ’, ’கவனம்’ ஆகிய இதழ்களிலும் பணியாற்றியுள்ளார். 'அன்று வேறு கிழமை', 'சூரியனுக்குப் பின் பக்கம்', 'கடற்கரையில் ஒரு ஆலமரம்' போன்றவை ஞானக்கூத்தன் கவிதைத் தொகுப்…

  17. தமிழகம் இந்தியா உலகம் அரசியல் விளையாட்டு சினிமா வணிகம் தொழில்நுட்பம் திறக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் அப்துல்கலாமின் சிலை அகற்றப்பட்டதால் பரபரப்பு …

    • 0 replies
    • 699 views
  18. தமிழர்கள் மூன்று பேருக்கு கத்தார் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.கத்தார் நாட்டில் பணி புரிந்து வந்த மூன்று தமிழர்கள் பெண் ஒருவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு,கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கத்தார் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர், சிறையில் அடைக்கப்பட்ட தமிழர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அழகப்பா சுப்பிரமணி, விருதுநகரைச் சேர்ந்த செல்லதுரை பெருமாள் மற்றும் சேலத்தைச் சேர்ந்த சிவக்குமார் அரசன் ஆகியோருக்கு 2015ம் ஆண்டு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. க…

  19. 'மத்திய அரசின் அனுமதி தேவையில்லை..!'- பேரறிவாளன் விடுதலை வழக்கில் தமிழக அரசு திடீர் மனு! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேர் 25 ஆண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. இதற்கு மத்திய அரசு அனுமதி தர மறுத்ததோடு, உச்ச நீத…

  20. ஆலந்தூர், சென்னை விமான நிலையத்தில் 65–வது முறையாக கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது. இதில் பெண் போலீஸ் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். உள்நாட்டு – பன்னாட்டு முனையங்கள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக புதிய முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த முனையங்களில் உள்ள மேற்கூரைகள், கண்ணாடி கதவுகள் உள்ளிட்டவை அடிக்கடி உடைந்து விழுகின்றன. இதுவரை 15 முறை மேற்கூரைகளும், 22 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 20 முறை தடுப்பு கண்ணாடிகளும், 5 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும், ஒரு முறை விளக்கு கண்ணாடி, ஒரு முறை பயண அறிவிப…

    • 6 replies
    • 606 views
  21. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சுவாதிக்கு ஆதரவாகவும், ராம்குமாருக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்கள் கூறி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சுவாதி பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும் இந்த வழக்கில் பலர் தங்கள் வசதிக்கேற்றவாறு விஷத்தகவலை பரப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தொல்.திருமாவளவனுக்கும், எச்.ராஜாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு உருவபொம்மை எரிப்பு எல்லாம் நடந்தேறியது. வாட்ஸ்அப் புகழ் யுவராஜ் வெளியிட்ட ஆடியோவில் சுப…

  22. இறந்து போன மாணவியின் பிளஸ் 2 மார்க்ஷீட்டை பயன்படுத்தி, தனியார் மருத்துவக்கல்லூரியில் முறைகேடாகச் சேர்ந்து டாக்டரானவரின் அங்கீகாரம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விஏஓ. இவரது மகள் அர்ச்சனா (26). எம்பிபிஎஸ் முடித்த இவர் சென்னை குரோம்பேட்டையில், தமிழரசி என்ற பெயரில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். இவரது கணவர், ‘எனது மனைவி பிளஸ் 2 கூட தேர்ச்சி பெறாதவர், இறந்துபோன தமிழரசி என்ற மாணவியின் பிளஸ் 2 மதிப்ெபண் சான்றிதழை பயன்படுத்தி, மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து டாக்டராகிவிட்டார். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் தெரிவித்திருந்தார். கவுன்சில் நடத்திய விசாரணையில், குற்றச்ச…

  23. 'மருத்துவ சிகிச்சையா.... அப்படின்னா?' -பேரறிவாளனை வதைக்கும் சிறைத்துறை தமிழக சிறைத்துறை அதிகாரிகளுடன் போராடிக் கொண்டிருக்கிறார் பேரறிவாளன். 'முன்பைவிட உடல்நிலை மோசமடைந்து வருகிறது. மருத்துவ சிகிச்சை எடுப்பதற்கு அதிகாரிகள் சிலர் தடையாக இருக்கின்றனர்' என வேதனைப்படுகிறார் அவர். ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன், கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேரின் விடுதலைக்காக, அண்மையில் பிரமாண்ட பேரணி ஒன்று சென்னையில் நடந்தது. திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று வேலூர் சிறையில் தன்னை சந்தித்த வழக்கறிஞர்களிடம் பேசிய பேரறிவாளன், " மன…

  24. பி.எ‌ஸ்‌ஸி ந‌ர்‌சி‌ங், பி.பார்ம்., போன்ற படிப்புகளில் சேர இன்றுமுதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 1000 மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட படிப்புகளை படிக்க முடியாமல், தங்களது கனவுகளை பொசுக்கிக்கொண்டு அகதிகள் முகாமில் அடைப்பட்டுக் கிடக்கிறார்கள், இலங்கை அகதி மாணவர்கள். பொறியியல் கனவை நனவாக்கிய கருணாநிதி! தமிழகம் முழுவதும் சுமார் 108 அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் உள்ள சிறார்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இதில் ஆண்டுதோறும் சுமார் 4000 மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்விக்கு தயாராகிறார்கள். 1000 த்தை தாண்டி இவர்கள் மதிப்பெண் பெற்றாலும், இவர்கள் தேர்ந்தெடுப்பது கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ படிப்புகளைதான்.…

  25. இலங்கை தமிழர்களின் வாகனங்கள் முகாமுக்கு வரவழைத்து சோதனை தமிழகத்தின் தாரமங்கல பிரதேசத்தில் நடக்கும் தங்கநகை பறிப்பு சம்பவங்களில், இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்கள் ஈடுபடுகின்றனரா என்ற சந்தேகத்தில், அவர்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்களை, தாரமங்கலம் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுசெய்தனர். தாரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இரு மாதங்களில், பத்துக்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் தங்கநகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன. அதில், ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. அதில், இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்கள் யாரேனும் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம், பொலிஸாருக்க ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, பவளத்தானூர், குருக்கப்பட்டி, அத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.