Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு நாட்களில் இறுதியாகும். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்தார். புதன்கிழமை மதியம் 2.50 மணிக்கு தேமுதிக துணை செயலாளர் சுதீஷுடன், பியூஷ் கோயல் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், மத்திய அமைச்சர்பியூஷ் கோயல் நேற்று இரவு தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அதன் பேரில் இன்று அவரை நேரில் சந்தித்து பேசியதாகவும் கூறினார். …

  2. 06 JUL, 2024 | 09:16 AM ராமேசுவரம்: இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு சென்ற 2 குழந்தைகள் மற்றும் அவரது தாய் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை மன்னார் மாவட்டம் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த யோகவள்ளி (34) அவரது குழந்தைகள் அனுஜா (08) மிஷால் (05) ஆகிய மூவர் இலங்கையில் உள்ள தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடற்பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சென்றுள்ளனர் இறங்கி உள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த மெரைன் போலீஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியிலிருந்து விசாரணைக்காக மூன்று பேரையும் மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில்இ யோகாவள்ளி விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோ…

  3. 21 வயதுக்கு குறைவானவர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாது – புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வயது 21 ஆக இருக்க வேண்டும் என்றும் அதற்கு குறைவான வயதுடையவர்கள் மாடுபிடிக்க அனுமதி இல்லை என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார். மேலும் பாலமேடு, அங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு உடல் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அறிக்கையில், “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்களுக்கு நாளை 10ஆம் திகதி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியிலும், பாலமேடு போட்டியில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு நாளை மற…

  4. நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேருக்கு 'குட் சர்டிபிகேட்'! சென்னை: நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேருக்கும் வேலூர் சிறை நிர்வாகம் நன்னடத்தை சான்று வழங்கி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட இருப்பதாகவும், முருகன் உள்ளிட்ட மீதமுள்ள 4 பேர் அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாகவும் நேற்று தகவல் வெளியானது. மேலும், நளினி, பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞரான புகழேந்திக்கு இது தொடர்பாக சிறை நிர்வாகத்திடம் இருந்து, ''நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை தொடர்பான ஃபார்மாலிட்டி ( சம்பிரதாய) நடவடிக்கைகளுக…

  5. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் சரிவு 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 2020இல் நடக்கும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 17 சதவீதம் சரிந்துள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 1,17,502 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 17 சதவீதம் குறைவாகும். 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போதுதான் குறைந்துள்ளது. தேசிய அளவில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர்கள் கூறுகையில், பலமுறை தேர்வு எழுதும் மாணவர்களே அதிகளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதாலும்…

  6. அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு -------------------------------------------------------------------------- தமிழ்நாட்டில் வரும் 16ஆம் தேதி, திங்கட்கிழமை சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தலை ஒத்திவைத்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மே 16ஆம் தேதிக்குப் பதிலாக, மே 23ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்குமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகளின் துவக்க நாட்களிலிருந்தே, அரவக்குறிச்சி தொகுதியில் பெருமளவில் பணவிநியோகமும் பரிசுப்பொருட்களின் விநியோகமும் நடந்ததாக தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையம் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 22ஆம் த…

  7. பட மூலாதாரம், Chilukuri Paramathama படக்குறிப்பு, கடந்த ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் எழுதிய படிக்க முடியாத மருந்துச் சீட்டு வைரலானது. கட்டுரை தகவல் கீதா பாண்டே பிபிசி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பெரும்பாலானவர்கள் கீபோர்டை பயன்படுத்தி எழுதி வரும் தற்கால சூழலில், கையெழுத்து தெளிவாக இருப்பது முக்கியமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், மருத்துவர் ஒருவர் எழுதுகிறார் என்றால், அவரது கையெழுத்து தெளிவாக இருப்பது அவசியம் என்று இந்திய நீதிமன்றங்கள் கூறுகின்றன. மருத்துவர்களின் மோசமான கையெழுத்தை, மருந்தாளர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் போன்ற நகைச்சுவைகள் உலகமெங்கும் பகிரப்படுகின்றன. ஆனால், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஓர் உத்தரவு வெளியிட்ட…

  8. ராணிப்பேட்டை: எம்.எல்.ஏ குடும்பத்தில் மல்லுக்கட்டு - வாரிசு அரசியலால் தடுமாறும் தி.மு.க! லோகேஸ்வரன்.கோச.வெங்கடேசன் ஸ்டாலினுடன் காந்தி, வினோத் `காந்தியின் இரு மகன்களும் ராணிப்பேட்டை தி.மு.க-வில் அதிகாரம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். வாரிசு அரசியலால் ஒதுங்கி நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது' என்கிறார்கள், தி.மு.க நிர்வாகிகள். ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளரும் அத்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான ஆர்.காந்தியும், அவரின் மூத்த மகன் வினோத்தும் பதவிக்காக மல்லுக்கட்டுகிறார்கள். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், துரைமுருகனுக்கு அடுத்த நிலையில் பவர்ஃபுல்லானவர் காந்தி. தி.மு.க ஆட்சிக்கட்டிலில் இருந்த சமயத்தில், காந்திக்கு அமைச்சர்…

  9. ' தீபா வருகையால் என்ன நடக்கும்?' -உளவுத்துறை அறிக்கையைக் கேட்ட ஓ.பி.எஸ். எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அரசியல் பிரவேசத்தை அறிவிக்க இருக்கிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. ' உளவுத்துறை அதிகாரிகள் மூலம் தீபாவின் செயல்பாடுகள் பற்றியும் அவரது வருகையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பதைப் பற்றியும் அறிக்கை கேட்டு வாங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்" என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்ற பிறகு, அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியானது. ஆனால், கடந்த சில நாட்களாக தீபாவை முன்னிலைப்படுத்துகின்றன ஊடகங்கள். அ.தி.மு.கவில் உள்ள நிர்வாகிகள் சசிகலா பின்னால் அணிவகுத்தாலும், தொண்டர்களின் மனநிலை வேறு …

  10. ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பிய சசிகலா, அடுத்தடுத்து மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் தயாராக இருப்பதாகவும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அந்த திட்டங்களில் ஒன்றுதான், தமிழகம் முழுவதும் சசிகலாவின் சுற்றுப்பயணம். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி வி.கே.சசிகலா விடுதலையானார். அதற்கு முன்னதாக கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படவே, பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஜனவரி 31 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும், அவ…

  11. திமுக- காங்கிரஸ் ஒப்பந்தம்: தனி விமானத்தில் புறப்பட்ட ஸ்டாலின் மின்னம்பலம் திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே இன்று (மார்ச் 7) திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் , காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு கையெழுத்தானது. நேற்று இரவு ஸ்டாலின் வீட்டுக்குச் சென்று மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.எஸ். அழகிரி ஆகியோர் ஸ்டாலினுடன் நடத்திய ஆலோசனையின்படியே இன்று காலை 10 மணிக்கு உடன்பாடு ஏற்பட்டது. காலை 9.50 மணியளவில் அறிவாலயம் வந்த காங்கிரஸ் கட்சியின் குழுவினரை கனிமொழி எம்பி வரவேற்று அழைத்துச் சென்றார். திமுக தலைவர் ஸ்டாலினும், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோரும் 25 இடங்களில் காங்…

  12. ரிசார்ட்டில் இருந்து மாயமான எம்.எல்.ஏ.க்கள்! வெலவெலத்த சசிகலா #VikatanExclusive #OPSvsSasikala ரிசார்ட்டில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் சசிகலா மற்றும் அவரது தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களை ரிசார்ட் முழுவதும் சசிகலாவின் ஆதரவாளர்கள் தேடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசலால் பொதுச் செயலாளர் சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருஅதிகார மையங்கள் உருவாகின. இதனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதன்பிறகு கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள், கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களிடம் சசிகலா, ஆலோசனையில் ஈடுபட்ட…

  13. ஸ்டெர்லைட் ஆலை திறப்பு : சிறப்பு அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு! தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. இதில் மாவட்ட கண்காணிப்பாளர்கள், மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஒக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1213624

  14. விஸ்வரூபம் - விஜயபாஸ்கர் வளர்ந்த கதை ஜூ.வி லென்ஸ் ‘‘டேய், மனுஷனா பொறந்தா லட்சியம் இருக்கணும்.’’ ‘‘குனிஞ்சு தேங்காய் பொறுக்கிறதால லட்சியம் இல்லைனு நினைச்சுடாதீங்க. பின்னால தெரியுதுல அரண்மனை...’’ ‘‘அதுல வேலைக்குச் சேர்த்துவிடவா?’’ ‘‘இல்லீங்க, அந்த அரண்மனையை ஒரு நாள் எனக்கு சொந்தமாக்கிடணும்.’’ ‘‘அடேங்கப்பா!” ‘‘காலையில ஒருவர் தேங்காய் உடைச்சாரு. அதை பொறுக்கிறதுல எனக்கும் நாய்க்கும் சரியான போட்டி.’’ ‘‘நாய் ஜெயிச்சுடுச்சா?’’ ‘‘இல்லை... நான்தான் ஜெயிச்சேன். நாயைக் கொன்னுட்டேன்!’’ ‘‘அடப்பாவி... நாயை பலி போட்டிருக்கான்.’’ ‘‘நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன... ஏறி மிதிச்சுட்டுப் போயிட்டே இருக்கணும்.’’ -‘…

  15. 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிச்சநல்லூரில் மீண்டும் ஆய்வு! மின்னம்பலம்2021-10-10 தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பகுதியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் அகழாய்வு பணி தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொல்லியல் துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன்முதலாக அகழாய்வு நடந்த இடம் ஆதிச்சநல்லூர். 1876 ஆம் ஆண்டுக்கு பிறகு 1903 - 1914 வரை அகழாய்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு 2004 முதல் 2005 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சத்தியமூர்த்தி குழுவினர் இங்கு ஆய்வு மேற்கொண்டனர். 600 சதுர மீட்டர் பரப்பளவில் நடந்த இந்த ஆய்வுப் பணியில் 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கல பொருட்கள…

  16. அ .தி .மு .க வால் மலருமா தாமரை? தேசிய கட்­சி­களை உள்ளே விடாமல் 20 வரு­டங்­க­ளுக்கு மேலாக கோலாட்சி நடத்­திய திரா­விட கட்­சி­களை உடைத்து தமி­ழ­கத்தில் தன் கால்­களை வேரூன்ற பெரும் பிர­யத்­த­னத்தை பா.ஜ.க. தற்­போது முன்­னெ­டுத்து வரு­கின்­றது. ஜெய­ல­லிதா மற்றும் கரு­ணா­நிதி என்ற இரு அரண்கள் இருக்கும் வரையில் தமி­ழ­கத்தில் எந்த தேசிய கட்­சி­யாலும் கால் ஊன்ற முடி­ய­வில்லை.. குறிப்­பாக பா.ஜ.க.வினால் முடி­ய­வில்லை.. இந்­நி­லையில் தற்­போது இந்­தி­யாவின் அனைத்து மாநி­லங்­க­ளிலும் வேறூன்ற துடிக்கும் பா.ஜ.க. தமி­ழ­கத்தில் தன் கால்­களை பதிக்க பகீ­ரத பிர­யத்­தனம் செய்­து­கொண்­டி­ருக்­கி­றது. கடந்­த ­கா­லங்­களில் தொடர்ச்­சி­யாக பல வரு­டங்கள் மத்தியில் காங்­கிர…

  17. மிஸ்டர் கழுகு: ஸ்லீப்பர் செல்களாக 10 அமைச்சர்கள் மன்னார்குடி முதல் தலைமைச் செயலகம் வரை ஒரு சுற்று வந்தபிறகு லேண்ட் ஆனார் கழுகார். ‘‘எல்லா குழப்பங்களும் சென்னையில் நடந்து கொண்டிருக்க... மன்னார்குடியில் உமக்கு என்ன வேலை?” எனக் கழுகாரைச் சீண்டினோம். ‘‘மன்னார்குடிதான் அனைத்துக்கும் அடித்தளம். அடிபட்ட பாம்பாகத் துடிக்கிறார் திவாகரன். தினகரனை விட ஆத்திரத்தின் உச்சத்தில் இருப்பது திவாகரன்தான். அவர்தான் ஆரம்பத்திலிருந்தே, அணிகளின் இணைப்புக்காக இரண்டு பக்கமும் பேசிக் கொண்டிருந்தவர். அவரோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பேசிக் கொண்டிருந்தார்; முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அப்போதெல்லாம் இணைப்பு நடக்கவில்லை. திவாகரனிடம்…

  18. ஆழியாறு - ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு ஏன்? தமிழ்நாடு - கேரளா நட்பு முறியுமா? மோகன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஆழியாறு - கோப்புப்படம் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் எடுத்துச் செல்லும் புதிய திட்டம் ஒன்று தயாராகிவந்தது. தற்போது அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பொள்ளாச்சி…

  19. 'கமல் பாணி வேறு; என்னுடைய பாணி வேறு' - ரஜினிகாந்த் சினிமாவைப் போல அரசியலிலும் என்னுடைய பாணி வேறு கமல்ஹாசனுடைய பாணி வேறு என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 21ம் தேதி அரசியல் சுற்றுப் பயணத்தை ராமநாதபுரத்தில் தொடங்க இருக்கிறார் கமல்ஹாசன். அன்றே மதுரையில் பொதுக்கூட்டத்தையும் நடத்த உள்ளார். அரசியல் பயணத்தை தொடங்க உள்ள நிலையில் தனக்கு பிடித்தமான மனிதர்களை சந்திக்கிறேன் என்று கூறி நேற்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்த கமல்ஹாசன் தொடர்ந்து, இன்று (18.2.2018) நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். சென்னை போயஸ் இல்லத்தில் உள்ள வீட்டில் நடைபெற்ற சந்திப்பில் மதுரைப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு…

  20. ஆளுநர் பதவி விலக வேண்டும்: திமுக கூட்டணி கட்சிகள்! Oct 30, 2022 11:34AM IST தமிழக ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக பேசுவதாக இருந்தால் அவர்‌ தனது பதவியை விட்டு விலகி கருத்துகளைச்‌ சொல்லட்டும்‌ என்று திமுக கூட்டணி கட்சிகள் இன்று (அக்டோபர் 30) அறிக்கை வெளியிட்டுள்ளனர். கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பேசினார். அப்போது இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என்றும், வழக்கு விசாரணை தாமதமாக என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளன. சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அ…

  21. தமிழ்நாடு அரசு அமைத்த மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தின் சிறப்பம்சங்கள் Play video, "மாற்றுத்திறனாளிகளுக்கான 'அனைத்தும் சாத்தியம்' அருங்காட்சியகம்: சிறப்பம்சங்கள் என்ன?", கால அளவு 4,02 04:02 காணொளிக் குறிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான 'அனைத்தும் சாத்தியம்' அருங்காட்சியகம்: சிறப்பம்சங்கள் என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தென்னிந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் 'அனைத்தும் சாத்தியம்' என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இந்த காணொளியில் காணுங்கள். தயாரிப்பு: ஹேமா ராகேஷ் …

  22. முருங்கை பூ தேன் உற்பத்தி மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் பெண்கள் சுய உதவிக்குழு கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் முதலூர் சுற்றுவட்டார பகுதியில் முருங்கை பூ தேன் உற்பத்தி மூலம் லட்சக் கணக்கில் வருமானம் ஈட்டுவதாக கூறுகிறார்கள் பெண்கள் சுய உதவிக் குழுவினர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து பெரியதாழை செல்லும் வழியில் உள்ளது முதலூர் கிராமம். இது வறட்சி மிகுந்த பகுதி என்பதால், இப்பகுதி விவசாயிகள் வறட்சியைத் தாங்கி நிற்கும் முருங்கை சாகுபடியில் ஈடுபட்டுவருகின்றனர்…

  23. Image caption மு.க.ஸ்டாலின் ஊழல் வழக்குகளைக் காட்டி அதிமுக-வை மிரட்டி அதனுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி வைத்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இந்தியாவில் பலமுறை மாநில அரசுகளைக் கலைத்த காங்கிரஸ், தமிழ்நாட்டில் திமுக அரசையும் கலைத்துள்ளது. ஆனால், திமுக காங்கிரசுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துள்ளது என்று புதன்கிழமை சென்னை அருகே நடந்த தேர்தல் கூட்டத்தில் பிரதமரும், பாஜக தலைவர்களில் ஒருவருமான நரேந்திர மோதி குற்றம்சாட்டினார். விருதுநகரில் நடந்துவரும் திமுக கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்ட…

  24. தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் – தினகரன் அதிர்ச்சி தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பது குறித்து அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் ஹைட்ரோகா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.