தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10244 topics in this forum
-
’நாங்கள் தமிழக மக்களை நம்புகிறோம்!’ - வேலூர் சிறையிலிருந்து நளினி! தமிழகத்தில், பெண் சிறைக்கைதிகளில் அதிக நாட்கள்... மிக அதிக நாட்கள்... சிறைக்குள் அடைக்கப்பட்டு இருப்பவர் நளினி. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, 1991-ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர், அதன்பிறகு மரண தண்டனைக் கைதியாக, ஆயுள் தண்டனைக் கைதியாக 24 ஆண்டுகளை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கழித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஆயுளில் பாதி கரைந்துவிட்டது. இந்த நிலையில், நளினி உள்பட ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் தமிழக அரசு கருணைகாட்டி விடுதலை செய்ய முன்வந்தது. ஆனால், மத்திய அரசு அதற்கு தடைகேட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிக…
-
- 0 replies
- 681 views
-
-
இப்படியும் ஒரு மனிதர்... சென்னையில் சாக்கடையில் இறங்கி குப்பையை அகற்றும் பெல்ஜியம் நாட்டுக்காரர்! சென்னை வெள்ளத்தில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பத்திரமாக மீட்ட பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் வெய்ன் கெய்ட் தலைமையிலான குழுவினர், தற்போது சென்னை நகரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 17 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த பீட்டர், பாலவாக்கத்தில் தற்போது வசித்து வருகிறார். ‘சிஸ்கோ’ நிறுவனத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி வரும் பீட்டருக்கு, இந்தியாவில் உள்ள மலை பிரதேசங்கள் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிரதிபலிப்பாக கடந்த 2008-ம் ஆண்டு ‘சென்னை டிரெக்கிங் கிளப்பை (மலையேறும் குழு) உருவாக்கினார். தற்போது இந்த குழுவில் தமிழ்நாடு…
-
- 1 reply
- 1.8k views
-
-
தமிழக வெள்ள நிவாரணத்திற்கு லைக்கா நிதி உதவி தமிழக வெள்ள நிவாரணத்திற்காக முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு லைக்கா நிறுவனம் சார்பாக 5 கோடி ரூபாய்க்கான காசோலை கையளிக்கப்பட்டது. அண்மையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர் ஆகிய பகுதிகள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைப்பதற்காகவும், மீட்பதற்காகவும் தமிழக முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு ஏராளமானவர்கள் தங்களால் இயன்ற பொருளுதவிகளை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக மக்களின் பாதிப்புகளை உணர்ந்த லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் லைக்கா நிறுவனத்தின் சார்பாக ஐந்து கோடி ரூபாய்க்கான காசோலையை, தமிழக அரசின் நிதித்துறை செயலர் நாயகம் சண்முகம் அவர்களிடம் கையளித…
-
- 1 reply
- 1.1k views
-
-
வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்காக விரைவில் 10,000 வீடுகள் கட்டித் தரப்படும் என்று மாநில நிதியமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சென்னையில் நடந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கலந்து கொண்டார். திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுத்துறை வங்கி சார்பில் தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கினார். இந்த விழாவில் மாநில நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அடையாறு கூவம் ஆற்றங்கரைய…
-
- 0 replies
- 532 views
-
-
வீதிக்கு வாருங்கள் முதல்வரே! வெள்ளம் ஓரளவு வடிந்துவிட்டது. ஆனால், அதன் சுவடுகள் அத்தனை எளிதில் மறைந்துவிடாது. சென்னையும் கடலூரும் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட நீண்ட நெடுங்காலம் ஆகும். ஆயிரமாயிரம் மனிதர்கள் உதவிப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால், இவை எல்லாம் நிவாரணம்தான். இந்த வரலாறு காணாத பேரழிவில் இருந்து மக்களை மீட்டெடுக்க, நிவாரணம் மட்டுமே போதாது. மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். குடிசையில் வசித்தோருக்கு வீடே இல்லை; வீட்டில் வசித்தோருக்கு வீட்டில் எந்தப் பொருளும் இல்லை. முதல் தலைமுறையாக நகரத்துக்கு வந்து, பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து வாழ்வைத…
-
- 0 replies
- 1k views
-
-
சென்னை பல்கலை. கருத்தரங்கில் மாணவர் மீது 'தாக்குதல்' சென்னைப் பல்கலைக்கழகம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த கருத்தரங்கு ஒன்றின்போது மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள இயற்கை ஆபத்து மற்றும் பேரிடர் ஆய்வு மையத்தின் சார்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில், பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கோபால்ஜி மாளவியா, மாநில தேர்தல் ஆணையத்தின் செயலரான ஜோதி நிர்மலா சாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இந்தக் கருத்தரங்கு நடந்துகொண்டிருந்தபோது, அதே பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானப் பிரிவு-சர்வதேச விவகாரங்கள் துறையி…
-
- 0 replies
- 800 views
-
-
'அடுத்த தேர்தலில் தி.மு.க.தான் ஜெயிக்கும்!' - அதிமுக ஏட்டில் வந்த கருத்துக்கணிப்பு! அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகை 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர்'. ஜெயலலிதாவின் அறிக்கைகள் மற்றும் அ.தி.மு.க.வின் செய்திகளை தாங்கி வருகிறது நமது எம்.ஜி.ஆர். இதில் வரும் கட்டுரைகள், கவிதைகள் அனைத்தும் ஜெயலலிதாவின் ஒப்புதல் இல்லாமல் வெளிவராது. இந்த பத்திரிகையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் நிறைய விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் கருத்துக் கணிப்பு. 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெரும்? என்ற கேள்வி எழுப்பி அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, மற்றவை என மூன்று ஆப்ஷன்களை கொடுத்திருந்தார்கள். விருப்பமானவர்களுக்கு வாக்களிக்க முடி…
-
- 0 replies
- 927 views
-
-
குடம் முதல் பக்கெட் வரை... எல்லாம் ஜெயலலிதா ஸ்டிக்கர்தான்! (படங்கள்) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் தேனி மாவட்டம் அதிமுக சார்பாக 13 லாரிகளில் வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திர நாத் குமார் கொடி அசைத்து அனுப்பிவைத்தார். வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேனி மாவட்ட அ.தி.மு.க சார்பாக வெள்ள நிவாரணப் பொருட்கள் முதல்வர் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டிய நிலையில் தயாரானது. தேனி மாவட்டம் பி.சி.பட்டியிலுள்ள சந்திர பாண்டியன் கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொருட்களை அமைச்சர் ஓ.…
-
- 0 replies
- 1.3k views
-
-
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்! தமிழ்ச் சினிமாவில் பல படங்களில் இந்தக் கதை அமைந்து இருக்கும்.ஏழைக் கதாநாயகன் அல்லது வில்லனால் ஏழையாக்கப்பட்ட கதாநாயகன், "நானும் உன்னைப் போல பணக்காரனாகி,உன்னையும் உன் திமிரையும் அடக்கலைன்னா நான் என் பேரை மாத்திக்கிறேன்!" என்று ஆக்ரோஷமாக கூறி சென்னைக்கு ரயிலேறுவார். ஒரு வழியாக சினிமா இலக்கணத்திற்கே உரியவாறு செல்வந்தரின் அபிமானத்தைப் பெற்று மிகப் பெரிய கோடீஸ்வரராகவும் மாறுவார். அப்புறம் கிராமத்திற்கு திரும்பி, தாம் சவால் விட்ட வில்லனை வாய் பிளக்க வைத்து, கூடவே தனது காதலியை-அநேகமா வில்லனின் மகள்- மணந்து கொள்வதுடன் படம் சுபமாக முடியும். இந்த வகையறா கதைகள் நம் சினிமாக்களில் அரதப்பழசாகிப் போனாலும், அது சென்னையை…
-
- 0 replies
- 944 views
-
-
'பீப்' பாடல்.. சிம்பு, அனிருத் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு 'பீப்' பாடல்... நடிகர் சிம்பு , இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது கோவை மாநகர காவல்துறை. பெண்களை மிக கேவலமாக சித்தரித்து பாடல் இயற்றி உள்ளதாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிராக கோவையில் காவல்துறையில் புகார் அளித்த மாதர் சங்கத்தினர், சிம்பு - அனிருத் புகைப்படங்களை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிம்புவின் குரலில், அனிருத் இசையமைத்ததாகச்சொல்லி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது ஒரு பாடல். பாடலின் ஆரம்ப கட்ட வார்த்தைகள் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு மிக மோசமான வார்த்தைகளுடன் துவங்குகிறது அந்த பாடல…
-
- 2 replies
- 1.5k views
-
-
சென்னை மழை வெள்ளம்: ரூ.200 கோடி இழப்பீடு கோரும் 8 விமான நிறுவனங்கள் சென்னை விமானநிலையத்தில் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள விமானம். சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 தனியார் கார்ப்பரேட் விமான நிறுவனங்கள், 200 கோடி ரூபாய் இழப்பீடுகளுக்கான விண்ணப்பங்களை ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளன. கல்யாண் ஜூவல்லர்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ், சன் டிவி, கருடா, ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஜாய் ஜெட் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள் வெள் ளத்தால் பாதிக்கப்பட்டன. கடந்த ஒரு மாதமாக வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தொழ…
-
- 0 replies
- 598 views
-
-
விடுதலை கோரி நளினி மனு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி அவரது கணவர் முருகன் மற்றும் சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ஆகியோருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நளினி ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார். அவர்களை விடுதலை செய்வது குறித்த அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை மத்திய அரசுக்குத்தான் உள்ளது என்று இந்திய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. இதனால் விடுதலையை எதிர்பார்த்திருந்த அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று அவரது வக்கீல்கள் ராதா கிருஷ்ணன், புகழேந்தி, ஆகியோர…
-
- 0 replies
- 1.5k views
-
-
வெள்ளத்தில் தப்பாத எம்.ஜி.ஆர் இல்லம்; வேதனையில் ரசிகர்கள் சென்னை; முன்னாள் முதல்வர், அமரர் எம்.ஜி.ஆர் வாழ்ந்து மறைந்த வீடு வெள்ளத்தில் சிக்கி, அவர் சேகரித்து வைத்திருந்த பரிசுப் பொருட்கள் பல வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தகவல் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும் தண்ணீரில் மூழ்கி மக்கள் தத்தளிப்பில் உள்ளனர். இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியிருக்கிறது. கனமழையால் பாதிக்காதவர் எவருமில்லை என்ற அளவில் மழையின் பாதிப்பு தமிழகத்தை ஆட்டிப் படைத்திருக்கிறது. சென்னையில் பெய்த பேய் மழை காரணமாக இன்னும் மக்களின் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்நிலையில் சென்னை ராமாவரத்தி…
-
- 1 reply
- 1.1k views
-
-
திருச்சி பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெயரில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணையதளம் திடீர் என்று முடக்கப்பட்டதன் எதிரொலியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோவில் இணையதளம் முடக்கம் பூலோக வைகுண்டம் என கூறப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வருகிற 21–ந் தேதி நடக்கிறது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சிறப்புகளையும், அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்கள் குறித்த தகவல்க…
-
- 0 replies
- 517 views
-
-
மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு! சென்னை மூழ்க என்ன காரணம்? ‘சென்னையை மூழ்கடித்தது கொட்டித் தீர்த்த பெருமழை அல்ல... திட்டமிடாமல் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் தண்ணீர் திறந்துவிட்டதுதான் காரணம். ஏரிகளின் நீர்மட்டத்தைக் கையாள்வதில் நிகழ்ந்த குளறுபடிகள் பேரழிவுக்குக் காரணமாகிவிட்டன’ எனப் பரவும் தகவல்கள் அதிர வைத்திருக்கின்றன. சென்னை குன்றத்தூர் அருகே 6,250 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு பகுதி விவசாயத்துக்கும் பயனளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்தான் சென்னை மக்களின் மீளாத் துயரத்துக்குக் காரணம். செம்பரம்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய முக்கிய குற்றவாளி தமிழகத்தில் கைது இலங்கை வழியாக கஞ்சா உள்ளிட்ட பொருட்களை கடத்திய முக்கிய சந்தேகநபர் ஒருவர் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இராமநாதபுரம் - பட்டணம்காத்தான் சோதனை சாவடி அருகில் பொலிஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட முயன்ற போது காரில் இருந்த இளைஞர் பொலிஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயற்சித்துள்ளார்.அவரை விரட்டிப் பிடித்த பொலிஸார் அவரிடம்விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது அவர் இராமேசுவரம் கிழக்கு கடைத்தெரு பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (வயது32) என்பது தெரியவந்தது. அவரின் காரில் இருந்து 5 கிலோ கஞ்சாவை பொலிஸார் கை…
-
- 0 replies
- 647 views
-
-
கூடங்குளம் முதல் அணு உலையில் மின்னுற்பத்தியை ஆரம்பிக்குமாறு கோரிக்கை [ Sunday,13 December 2015, 05:23:55 ] கூடங்குளம் முதலாவது அணு உலையில் நிறுத்தப்பட்ட மின்னுற்பத்தியை விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இடம்பெற்றுவரும் தென்மாநில முதலமைச்சர்களின் மாநாட்டில் ஜெயலலிதா சார்பில் நிதியமைச்சர் பன்னீர்ச்செல்வம் பங்கேற்று கருத்து தெரிவித்துள்ளார். டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் குறித்து தென் மாநிலங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பான தகவல் பரிமாற்ற செயற்…
-
- 0 replies
- 616 views
-
-
மழை வெள்ள பாதிப்புகள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள்! கொட்டித் தீர்த்து சென்னையை தனித் தீவாக்கி மிதக்கவிட்ட மழை வெள்ளம், நீதிமன்றங்களில் வழக்குகளையும் கொண்டு வந்து குவித்துக் கொண்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபதி ராஜிவ் ராய், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாயின என்று ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். அத்துடன், வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் இரண்டு வழக்குகளை மழை - வெள்ளம் தொடர்பாக தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "சென்னையில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 573 views
-
-
சென்னை வெள்ளத்தில் பலியானவர்கள் எத்தனை பேர்? சென்னையின் பல இடங்களில் வெள்ளத்தில் நனைந்த வீட்டுப்பொருட்கள் குப்பைகளாக குவிந்துள்ளன கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக சென்னை நகரின் பல பகுதிகளில் மழை பெய்யாத நிலையில், நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பப் போராடிவருகிறது. டிசம்பர் 2ஆம் தேதியன்று சென்னையைப் புரட்டிப்போட்ட வெள்ளத்தின் காரணமாக, தற்போதும் அடையாறு, கூவம் ஆறுகளை ஒட்டியுள்ள பகுதிகளும் தாம்பரம், முடிச்சூர், வடசென்னையின் பல பகுதிகளும் இன்னமும் பாதிப்பிலிருந்து மீளாமலேயே காட்சியளிக்கின்றன. பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து ஐந்து நாட்களுக்கு மேலான நிலையிலும் மின் விநியோகம் சீரடையவில்லை. அந்தப் பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரின் காரணமாகவே, தற்ப…
-
- 43 replies
- 3.7k views
- 1 follower
-
-
சென்னை வெள்ளத்தில் சிக்கிய 130 பேரையும், 50 செல்லப்பிராணிகளையும் காப்பாற்றிய பெல்ஜியம் நாட்டுக்காரர்! [Saturday 2015-12-12 09:00] சென்னை வெள்ளத்தில் சிக்கிய 130 பேரையும், 50 செல்லப்பிராணிகளையும் பத்திரமாக மீட்டுள்ளார் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் வெய்ன் கெய்ட் தலைமையிலான குழு. தற்போது இந்த குழு சென்னை நகரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளது.சென்னையில் கொட்டித்தீர்த்த மழை நகரத்தையே உலுக்கிப்போட்டது. வெள்ளத்தில் சிக்கிய லட்சக்கணக்கானவர்களை தீயணைப்பு படை வீரர்கள், ராணுவ வீரர்கள், கடலோர காவல் படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இதனிடையே, வெள்ளத்தில் சிக்கிய 130 பேரையும், 50 செல்லப் பிராணிகளையும் பத்திரமாக மீட்டுள்…
-
- 0 replies
- 723 views
-
-
சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்த ஏரி திறப்புக்கு யார் பொறுப்பு ? கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் சென்னையை மூழ்கடித்ததற்கு என்ன காரணம், யார் இதற்குப் பொறுப்பு என்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்தபடியே இருக்கின்றன. தமிழக அரசின் உயர் மட்டத்தில் ஏரியைத் திறப்பது குறித்து முடிவெடுப்பதில் ஏற்பட்ட தாமதமே, இந்த வெள்ளப்பெருக்கிற்குக் காரணம் என்பது போன்ற கருத்துக்கள் தொடர்ந்து தமிழக ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. இது குறித்து உண்மை நிலையை அறிய, தமிழக பொதுப் பணித்துறையின் செயலர் பழனியப்பனைச் சந்தித்து பதிலைப் பெற முயன்றபோது, அது இயலவில்லை. அவர் ஆய்வுப் பணிகளில் இருப்பதாகவே தகவல் வந்தது. பெருமளவு தண்…
-
- 0 replies
- 760 views
-
-
வெள்ள நிவாரணப் பணிகளில் அதிருப்தி: மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் ஆளில்லா விமான கேமரா பதிவில் கார்கி நகர் | படம்: தி இந்து மழை வெள்ள நிவாரண உதவிகளை மக்களிடம் சேர்ப்பதில் மத்திய, மாநில அரசுகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தாமாகவே முன் வந்து வழக்கு (சூ மோட்டோ) பதிந்துள்ள நீதிமன்றம், வெள்ள நிவாரண உதவிகள் தொடர்பாக வரும் 16-ம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு தவறிவிட்டதாக வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர் சென்ன…
-
- 0 replies
- 458 views
-
-
காரைக்கால் மீனவர்கள் 10 பேரை சிறை பிடித்தது இலங்கை கடற்படை! ராமேஸ்வரம்: காரைக்கால் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 10 மீனவர்களையும் ஒரு படகையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். சிறை பிடித்து செல்லப்பட்ட மீனவர்கள், காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். ஏற்கனவே தமிழக மீனவர்கள் 37 பேர் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காரைக்கால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது, அப்பகுதி மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளத…
-
- 0 replies
- 480 views
-
-
வெள்ளத்தில் போன புத்தகங்கள் - அரிய புத்தக சேமிப்பாளரின் துயரம் சென்னையில் ஏற்பட்ட மழை - வெள்ளத்தில், தான் பல ஆண்டுகளாக சேகரித்த 2000க்கும் மேற்பட்ட அரிய புத்தகங்களை இழந்து தவித்துவருகிறார் சென்னையைச் சேர்ந்த நூலகர் ஒருவர். வெள்ளத்தில் போன அரிய நூல்கள் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவத்தில் உதவி நூலகராகப் பணியாற்றிவரும் ரெங்கய்யா முருகன், தாம்பரத்தில் உள்ள முடிச்சூர் பகுதியில் வசித்துவருகிறார். மானுடவியல் தொடர்பாகவும் தமிழகத்தில் அமைந்துள்ள பிராமணர் அல்லாத மடங்கள் தொடர்பாகவும் 2000க்கும் மேற்பட்ட அரிய புத்தகங்களை தரைத்தளத்தில் அமைந்திருக்கும் தன் வீட்டில் சேமித்துவைத்திருந்தார் ரெங்கைய்யா முருகன். ஏற்கனவே வட இந்தியப் பழங்குடிகளைப் பற்றிய அ…
-
- 0 replies
- 616 views
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் கடிதம்! தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு, வணக்கம். தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, நிரந்தர முதல்வர் போன்ற அடைமொழிகள் இல்லாததைக் கண்டு முகம் சுளித்திருப்பீர்கள். அப்படி அழைப்பதற்கான நேரமோ விருப்பமோ இல்லை. முதல்வர் என்ற முறையில் ‘மாண்புமிகு’ என்று அழைத்திருக்கலாம். ஆனால் மக்களின் மீது கரிசனம் கொள்ளும் மாண்பு தங்களுக்கு இல்லை என்று கருதுவதால் அப்படி அழைக்கவும் மனம் வரவில்லை. உங்கள் கட்சிக்காரர்கள் உங்களை ‘அம்மா’ என்று அழைப்பதோடு தமிழகத்தையும் அப்படி அழைக்க வைத்துவிட்டார்கள். நீங்களும் எங்கள் வரிப்பணத்தில் அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என்று ஏராளமாக, தாராளமாக ‘அம்மா’ திட்டங்களைக் கொண்டுவந்துவிட்டீர்…
-
- 0 replies
- 887 views
-