தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10246 topics in this forum
-
ஜெயலலிதா மரண விசாரணையில் புதிய திருப்பம்! மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் நேரடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்போவதில்லையென ஆறுமுகசாமி ஆணையம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி சசிகலா தனது தரப்பு வாக்குமூலத்தை வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்துள்ளார். சசிகலாவை பொறுத்தமட்டில் அவர் தரப்பு விளக்கங்களை அவ்வப்போது அவரது வழக்கறிஞர்கள் ஆணையத்துக்கு வழங்கி வருவதால், சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் நேரடியாக விசாரணைகளை மேற்கொள்ளத்தேவையில்லை என்ற முடிவுக்கு ஆணையம் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளத…
-
- 0 replies
- 991 views
-
-
தமிழர்கள் பொறுத்து பொறுத்து பார்த்து இப்போதுதான் வடநாட்டுக்காரனை அதட்ட தொடங்கி உள்ளனர். சிறு வணிகர்கள் மட்டுமல்ல பெரு வணிகர்களையும் வழிக்குக் கொண்டுவர வேண்டும்.
-
- 0 replies
- 907 views
-
-
‘கைலாசா’ நாடு பெயர் மாறியது- நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள நித்யானந்தா ‘கைலாசா’ என்ற பெயரில் சாமியார் நித்யானந்தா உருவாக்கியுள்ள நாட்டின் பெயரை ‘ஸ்ரீகைலாசா’ என மாற்றியுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நேரலையில் சத்சங்கம் மூலம் சீடர்களைத் தொடர்பு கொண்ட நித்யானாந்தா இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். அத்துடன் கைலாசா என்ற இணையத் தளத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 8 இலட்சம் பேர் என்ற நிலையில் அதன் சேர்வர் தடைப்பட்டதாகவும் இதனால் வேறு சேர்வர் மாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது வரை கைலாசா நாட்டின் குடியுரிமையைப் பெறுவதற்கு 12 இலட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கார்த்தி…
-
- 0 replies
- 470 views
-
-
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள்- இழுபறி முடிவுக்கு வந்தது! சென்னை: தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீண்ட பேச்சுவார்த்தை இழுபறிக்கு பின்னர் இன்று சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது. சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சந்திப்பில் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்று தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளின் தொகுதி பங்கீட்டு குழுக்கள் இன்று மாலை முதல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். http://www.vikatan.com/news/tamilnadu/61753-in-dmk-coalition-41-seats-allocated-for-con…
-
- 0 replies
- 451 views
-
-
கருணாநிதிக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்! -சொல்றது திருமாவளவன் கடலூர்: தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தொல்.திருமாவளவன் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன் அக்கூட்டணியில் இருந்து விலகியது. அதன்பின், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தே.மு.தி.க., த.மா.கா. இணைந்து கூட்டணியாக தேர்தலை சந்தித்தன. இந்த தேர்தலில் இக்கூட்டணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''தமிழக சட்டசபை தேர்தலில் பல்லாயிர கோ…
-
- 0 replies
- 672 views
-
-
ராஜீவ் கொலை வழக்கில் 7பேர் விடுதலை முடிவை எடுக்க அரசு கால தாமதம் – அற்புதம்மாள் குற்றச்சாட்டு ஏழுபேர் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றமே உறுதி செய்து 2 ஆண்டுகள் கடந்தும், தமிழக அரசு முடிவெடுக்காமல் தாமதிப்பதாக பேரறிவாளனின் தாயாரான அற்புதம்மாள் குற்றம் சாட்டியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலை தொடர்பாக அரசியலமைப்புச் சட்டம் 161இன்படி ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு நேற்று இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் குற்றம் சாட்டியுள்ளார். இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் முதல்வர் ஜ…
-
- 0 replies
- 628 views
-
-
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது நேற்று ஒரே நாளில் மூன்று இடங்களில் இலங்கை கடற்படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில், அதே பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 1ம் தேதி மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 5 நாட்களாக கடலில் தங்கி மீன்பிடித்து கொண்டு நேற்று முன்தினம் காரைக்காலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.10க்கு நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே வந்தபோது, இலங்கை கடற்படையினர் 10 பேர் ஒரு படகில் வந்தனர்.அவர்கள் துப்பாக்கியை காட்டி, படகில் இருக்கும் மீன்கள், மீன்பிடி உபகரணங்கள் அனைத்தையும் கடலில் போடுமாறு மிரட்டினர். மீனவ…
-
- 0 replies
- 784 views
-
-
"இலங்கை பிரச்னை தொடர்பாக, தமிழக மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம், கடும் விளைவுகளை ஏற்படுத்தும் முன், உருப்படியான பதிலை மத்திய அரசு தர வேண்டும்' என, ராஜ்யசபாவில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஐ.நா., மனித உரிமை கமிஷனில், அந்நாட்டுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாணவர்கள் போராட்ட பிரச்னையை, ராஜ்யசபாவில் நேற்று, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள் எழுப்பினர். தி.மு.க., - எம்.பி., சிவா பேசியதாவது: மாநிலம் முழுவதும், ஆங்காங்கே கல்லூ…
-
- 0 replies
- 524 views
-
-
இலங்கை தூதரை உடனடியாக கைது செய்ய வேண்டும்: வைகோ பிரிவு: தமிழ் நாடு இந்தியாவுக்கு உள்ளே இனபேதத்தைக் தூண்டும் சிங்களத் தூதர் பிரசாத் கரியவாஸத்தை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், "இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாஸம், தொடர்ந்து அத்துமீறிச் செயல்பட்டு வருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது, இந்தியாவுக்கு உள்ளே, தமிழர்களுக்கு எதிராக, இனபோதத்தைத் தூண்டும் வகையில், ஒரு கடிதத்தை எழுதி, மின் அஞ்சல் வழியாக, இந்திய ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளார். சிங்களர்கள், வட இந்தியர்களின் வழித் …
-
- 0 replies
- 966 views
-
-
'பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கும் வரை போராட்டம் ஓயாது' சசிகலா புஷ்பா ஆவேசம் ''அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பதவியி லிருந்து சசிகலாவை நீக்கும் வரை என் போராட்டம் ஓயாது,'' என, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி., ஆவேசமுற்றார். தினமலர் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி: *அ.தி.மு.க., பொது செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்றுள்ளாரே? அவர் பொது செயலாளராக பொறுப்பு ஏற்றது, கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வு களுக்கு எதிரானது. அவர் தற்காலிகமாக பொது செயலாளர் பொறுப்பு ஏற்றது சட்டப்படியான செயல்பாடு இல்லை. *எப்படி கூறுகிறீர்கள்? பொது செயலாளராக வர…
-
- 0 replies
- 428 views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேள்வி:- இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தன் மகனை மீட்க உதவி கோரி, அவருடைய தாயார் குசலகுமாரி என்பவர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்திருப்பதாகச் செய்தி ஒன்று வந்துள்ளதே? பதில்:- 2009ஆம் ஆண்டு இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்தபோது, தன் மகன் துஷ்யந்தனை (வயது 26) இந்தோனேசியாவிற்கு அவருடைய தாய் குசல குமாரி அனுப்பி வைத்திருக் கிறார். அங்கிருந்த அவருடைய மகன் பத்திரமாக இந்தோனேசியாவிற்கு வந்துவிட்டதாகவும், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் கூடவந்த ஒன்பது தமிழர்களுடன் செல்லவிருப்பதாகவும் தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார். அதற்குப் பிறகு நான்காண்டுகளாக எந்தச் செய்தியும் மகனிடமிருந்து கிடைக்கவி…
-
- 0 replies
- 398 views
-
-
ஜெயலலிதா சிகிச்சை விஷயத்தில் அப்போலோ சொன்னது உண்மையா? வெடிக்கும் சர்ச்சை! #Jayalalithaa #Apollo தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதத்தில் நடந்த பரபரப்பான நிகழ்வுகளைப் போன்று இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் நடந்தேயில்லை. இந்தியாவே மிரண்டு போகும் அளவுக்கு தமிழ்நாட்டில் எழுச்சிகளும், மர்மங்களும், அரசியல் சண்டைகளும் நடந்தேறி வருகின்றன. இவற்றில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சை என்பதுதான் மிகப்பெரிய மர்மமாக இன்றுவரை தொடர்கிறது. "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவ்வப்போது புகைப்படம் அல்லது வீடியோ வெளியிட்டு இருக்கலாமே" என்ற மக்களின் கேள்விக்கு, "அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட ஐ.சி.யு பிரிவில் சி.சி.டி.வி. கேமாரா இல்லை" என அப்போலோ ந…
-
- 0 replies
- 287 views
-
-
சசிகலாவுக்கு சிறப்பு வசதி இல்லை கர்நாடக சிறை துறை தகவல் பெங்களூரு:'பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறப்பு வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை' என, சிறைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர், கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந் நிலையில், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக, ஊடகங் களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, சிறையில…
-
- 0 replies
- 324 views
-
-
மீண்டும்... அரசியலுக்கு, வருகிறாரா சசிகலா! கடந்த சில நாட்களாக சசிகலா குறித்த செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன. ஊழல் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்த சசிகலா தற்போது விடுதலையாகி உள்ளார். நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் இவரின் ஆதிக்கம் இருக்கும் என்றே பல விமர்சனங்கள் எழுந்திருந்தன. பரபரப்பாக பேசப்பட்ட இந்த விடயங்களுக்கு அரசியலில் இருந்து விலகபோவதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியே மலர வேண்டும் எனவும் கூறி முற்றுப்புள்ளி வைத்தார். இதனையடுத்து அவரது அரசியல் வாழ்க்கை நிறைவுக்கு வந்ததாகவே கருதப்பட்டது. இருப்பினும் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க ஆட்சி தோல்வியை தழுவவே சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரபோகிறார் என்ற கருத்…
-
- 0 replies
- 408 views
-
-
வாய்ப்பில்லை? ஜூலையில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கு... அ.தி.மு.க.,வின் 3 அணிகள் மோதலால் குளறுபடி அ.தி.மு.க., அணிகளுக்குள் ஏற்பட்டுள்ள மோதலால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில், தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. அதனால், உள்ளாட்சி தேர்தல் பணிகளில் அக்கட்சியினர் ஆர்வமாக இல்லை. எனவே, ஜூலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த, வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகளில், 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான தேர்தல், 2016 அக்டோபரில்,…
-
- 0 replies
- 260 views
-
-
முதல்வருக்கு எதிராக எம்எல்ஏக்கள் போர்க்கொடி: சட்டப்பேரவை முடக்கப்படுகிறதா? முதல்வர் பழனிசாமிக்கு எதிராக எம்எல்ஏக்கள் போர்க்கொடி, ஆதரவு எம்எல்ஏக்களின் ஆட்சி கலைப்பு கோஷம் என தமிழக அரசில் சிக்கல்கள் உருவாகியுள்ளதால், சட்டப்பேரவையை முடக்கும் முடிவை ஆளுநர் எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதிமுகவில் கடந்த பிப்ரவரி மாதம் பிளவு ஏற்பட்டது. பிரிந்திருந்த முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் கடந்த 21-ம் தேதி இணைந்தன. அதைத் தொடர்ந்து துணை முதல்வராக ஓபிஎஸ் பொறுப்பேற்றார். அணிகள் இணைப்பு முடிந்ததும், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க பொதுக்குழு கூட…
-
- 0 replies
- 431 views
-
-
11, ஜனவரி 2014 திருச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆர்.சி.பாபு தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், கட்சியில் வட்டார மற்றும் வட்ட கமிட்டியை அமைக்க வேண்டும். கட்சிப் பற்றுள்ள இளைஞர்களுக்கு பிரதிநிதித்துவம் தர வேண்டும். இளைஞர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 23 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 70,000 வாக்காளர்கள் புதியவர்கள். அவர்கள் 18 முதல் 22 வயதுக்குள்பட்டவர்கள். காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட வரலாறும், பாரம்பரியமும் உண்டு. ஆனால் இதை இளைஞர்கள் தெரிந்திருக்…
-
- 0 replies
- 424 views
-
-
விசயகாந்த் எனும் திரைப்புலி.. ஜமாலன் திமுக கருணாநிதி பேரியக்கம் குடும்ப சூழலில் சிக்கிவிட்டது என்கிற ஆதங்கத்தில் பல கட்டுரைகள் எழுதப்பட்டு உள்ளன. சமஸ் என்பவர் தி ஹிந்து-வில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அவற்றிற்குள் ஒருவித திமுக அழிவை எதிர்பார்க்கும் ஆதங்க மனநிலைதான் உள்ளது. அதாவது திமுக சரிந்துவிட்டதான தோற்றத்தை உருவாக்க விரும்பும் மனநிலைதான். அழகிரி கட்சியில் இருந்தபோது கடுமையாக விமர்சித்தவர்கள், அவர் நீக்கப்பட்ட பின்னும் விமர்சிப்பதும் முழுவதுமாக புலம்பவதும், திமுக உறுதி பெறுவதையே காட்டுகிறது. திமுக-வில் அழகிரியின் வருகை என்பது அதன் தொடர் தோல்விக்கே வழிவகுத்து உள்ளது. இந்நடவடிக்கை அடிப்படை திமுக தொண்டனை பாதிப்பதாக தெரியவில்லை. திமுக ஆதரவாளர்களையும் இது பாதிப்பதாகத்…
-
- 0 replies
- 756 views
-
-
மிஸ்டர் கழுகு: குடைச்சல் கொடுக்கும் குட்கா விவகாரம்? ‘‘மீண்டும் ஒருமுறை குட்கா விவகாரம் தமிழக அரசுக்குத் தலைவலியைக் கொடுக்கிறது’’ என்றபடி வந்தார் கழுகார். ‘‘ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஜெயக்கொடி அதிரடியாக மாற்றப்பட்டுள் ளாரே... அதைச் சொல்கிறீரா?’’ என்றோம். ‘‘ஆமாம்! ‘இந்த டிரான்ஸ்ஃபரில் உள்நோக்கம் உள்ளது’ என்று தி.மு.க குற்றம் சாட்டுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்கு போடப்பட்டுள்ளது. குட்கா விவகாரம் தொடர்பான இரண்டு வழக்குகள் தமிழக ஆட்சியாளர்களுக்கு மீண்டும் குடைச்சலைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் தி.மு.க உள்ளது.’’ ‘‘விளக்கமாகச் சொல்லும்...’’ ‘‘பான் குட்கா விவகாரத்தில் அடிபடும் முக்கியத் தலைகள் யாரென்று உமக்…
-
- 0 replies
- 935 views
-
-
நித்தியானந்தா பக்தைகளின் உளவியல்... மருத்துவ ஆராய்ச்சி சொல்லும் காரணம்! நித்தியானந்தம். வணக்கம். "மாணவர் சரத்பிரபு மர்ம மரணம்." "போக்குவரத்து ஊழியர் போராட்டம்." "பேருந்துக் கட்டணம் 40% உயர்வு. அதாவது, கோயம்பேட்டிலிருந்து தாம்பரம் சென்று வர ஒரு நாளைக்கு 66 ரூபாய் ஆனது." "பா. வளர்மதிக்கு பெரியார் விருது." "போராளி வளர்மதிக்கு விகடன் விருது" "ஓகி புயலில் சிக்கிய மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. மீண்டவர்களுக்கான நிவாரணம் இன்னும் சென்றடையவில்லை." "பியூஷ் மானுஷ் மீது ஈஷா வழக்குப் பதிவு. ஜக்கியே நேரடியாக மனுதாரர்களில் ஒருவராக இருக்கிறார்." இந்தச் செய்திகள் எ…
-
- 0 replies
- 664 views
-
-
கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ள தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு அனுமதி மறுப்பு தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகள் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா பெப்ரவரி மாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழாவில் வருடாந்தம் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்கின்றமை வழமையாகும். கச்சத்தீவு செல்வதற்கு தமிழக பக்தர்கள் பொலிஸ் அனுமதி மற்றும் மத்திய அரசின் ஆதார் அட்டை ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு விதிமுறைகள் க…
-
- 0 replies
- 359 views
-
-
ஜெயலலிதாவின் கோரிக்கை நிராகரிப்பு: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு- கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 6 தனியார் நிறுவனங்கள் மனு தாக்கல் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 5-ம் தேதிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜெயலலிதா மீதான வழக்கின் மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்ததால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விடுப்பில் இருந்ததால், நீதிபதி ஹெச்.பில்லப்பா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகி வழக்கு விவரங்களை நீதிபதியிடம் தெரி…
-
- 0 replies
- 496 views
-
-
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய படை - மத்திய அரசு பரிசீலிக்க உத்தரவு! கேரளா மனு தள்ளுபடி! டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படையை நிறுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அணையில் 142 அடியாக உயர்த்தும் தீர்ப்புக்கு விளக்கம் கோரிய கேரளாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று முல்லை பெரியார் அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது. ஆனால் அப்படி உயர்த்த முடியாது என கேரளா அவசர சட்டம் நிறைவேற்றியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள தமி…
-
- 0 replies
- 266 views
-
-
போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் : January 11, 2019 புகையால் பாதிப்பு ஏற்படுவதால் போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் போகி பண்டிகை 14ம் திகதி கொண்டாடப்படவுள்ளநிலையில் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது போகி பண்டிகை அன்று பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. கடந்த ஆண்டு அதிக அளவு ஈரப்பதம், குறைந்த வெப்பநிலை மற்றும் குறைந்த அளவு காற்றின் வேகம் காரணமாக சென்னை மாநகராட்சி…
-
- 0 replies
- 679 views
-
-
ராஜீவ் காந்தி டில்லியில் தனது குண்டு துளைக்காத அங்கியை பிரபாகரனுக்குக் கொடுத்தார் - பண்ருட்டியின் நேர்காணலில் தகவல் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீச் காந்தி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம், அவரது இயக்கத்திற்கான 5 கோடி ரூபாவில் முதல் தவணையாக 50 இலட்சம் ரூபாவைக் கையளித்ததுடன், தனது குண்டு துளைக்காத அங்கியையும் வழங்கினார். அவ்வாறு வழங்கிவிட்டு, இலங்கை - இந்திய உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதை விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இவ்வாறு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரனுக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சரும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமான பண்ருட்டி எஸ்.இராமசந்திரன் 'நியூஸ…
-
- 0 replies
- 619 views
-