தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10246 topics in this forum
-
கருணாநிதியுடன் கோபமாக இருக்கும் குஷ்பு விரைவில் காங்கிரசிஸ் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹைதராபாத்தில் சிரஞ்சீவியை சந்தித்து பேசி உள்ளதாகவும், மார்ச் 15ம் தேதிக்குப் பின்னர் அவர் காங்கிரசிஸ் சேர வாய்ப்புள்ளது என்றும் குமுதம் ரிப்போர்ட்டரில் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமைக்கும் குஷ்புவிற்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போல கடந்த 5 வாரங்களாகவே தொடர்ந்து குஷ்புவைப் பற்றி தகவல்கள் வாரஇதழ்களில் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு ஆனந்த விகடனில் குஷ்பு பதில் சொன்னதால் திமுக வினர் கல்வீசி தாக்கினார்கள். இதனைத் தொடர்ந்து டுவிட்டரில் பதில் கொடுத்தார் குஷ்பு. இன்னொரு மணியம்மை என்று குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதவே அதற்கும் டுவிட்டரில…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஞானதேசிகனுக்கு எதிராக திருச்சியில் திரண்ட மாணவர்கள். பிரிவு: தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் திருச்சி, கரூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கலந்து கொள்ள இருந்தார். இதற்காக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர்களை திடீரென்று தனி ஈழத்திற்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் சேதப்படுத்தினர். ஞானதேசிகன் திருச்சியை விட்டு வெளியேற வேண்டும், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மாணவர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது காங்கிரஸ் கட்சியினர், பேனர்களை சேதப்படுத்தியவர்களை கைதுசெய்யக் கோரினர். இதில் இருதரப்புக்கும் வாக்க…
-
- 0 replies
- 636 views
-
-
ஜெ சமாதியில் அண்ணன் மகள் தீபா அஞ்சலி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா இன்று மாலை மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா காலமானார். ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உடலுக்கு பல்வேறு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஜெ.,வின் உடலுக்கு அருகே சசிகலா, இளவரசி ஆகியோரின் குடும்பத்தினர் அருகில் இருந்தனர். அதிமுக அமைச்சர்கள் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தனர். ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபா, ஜெயலலிதாவின் உடலுக்கு அருகே தென்படவில்லை. அதுமட்டுமின்றி போயஸ் கார்டனில் நடந்த சடங்கு சம்பிரதாயங்களில் கலந்து…
-
- 0 replies
- 511 views
-
-
தூங்காநகர நினைவுகள் - 1 | மதுரை... நகரமே வரலாறா... வரலாறே நகரமா?! அ.முத்துக்கிருஷ்ணன் தூங்காநகர நினைவுகள் - 1 | மதுரை... நகரமே வரலாறா... வரலாறே நகரமா?! தூங்காநகர நினைவுகள் ஒரு நகரமே வரலாற்றின் சாட்சியமாக விளங்க இயலுமா, ஒரு நகரத்தின் எல்லா மூலை முடுக்கிலும் வரலாறு தஞ்சம் புக இயலுமா என்கிற கேள்விகளுக்கு மதுரையின் ஒவ்வொரு சதுர அடி நிலமும் பதிலளித்தது. வரலாறு நாம் அனைவருமே பத்தாம் வகுப்பு வரை படித்த ஒரு பாடம். பள்ளிப் பருவத்தில் வரலாறு சிலருக்குப் பிடித்த பாடமாகவும் சிலருக்கு மனப்பாடம் செய்து எப்படியாவது ‘பாஸ்’ ஆனால் போதும் என்ற பாடமுமாகவே இருந்திருக்கும். என் பள்ளிப் பருவத்தில் எனக்கு வரலாற்று பாடம் என்றாலே பெரும் ப…
-
- 0 replies
- 768 views
-
-
‘ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களே உங்கள் ‘சின்னம்மா’ சபதத்தை நிறைவேற்றவா வாக்களித்தோம்?!’ தமிழச்சிகளின் கடிதம் #VikatanExclusive 'ஷேம்ஃபுல்' - நேற்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை ஒளிபரப்பியபோது, தேசிய சேனல்கள் பல தமிழ்நாட்டைக் குறிப்பிட்டுப் பேசிய வார்த்தை இது. இந்த வார்த்தையை எதற்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும், தமிழ்மக்களும் வாங்கிக்கொள்ள வேண்டும்? அதை நாங்கள் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குக் கொண்டுசேர்க்க விரும்புகிறோம். 'சட்டமன்றத்தில் நடந்த சம்பவங்களுக்கு 'சின்னம்மா' குடும்பத்தின் முதல்வர் நாற்காலித் திட்டம் முதல் தி.மு.க-வின் அவை நடவடிக்கைகள் வரை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, 122 பேரை விரல் சுட்டுவது ஏன்..?' என்று கேட்கலாம். ஏனெனில்,…
-
- 0 replies
- 268 views
-
-
ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை தமிழகத்தில் ஜூன் மாதம் 21-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரங்கள் இங்கே பார்க்கலாம்...! தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் திங்கள்கிழமை காலையுடன் நிறைவடையும் நிலையில், நேற்று முதலவர் மருத்துவக்குழுவினருடன், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தற்போது தளர்வுகளிடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கினை நீட்டித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த முழு ஊரடங்கு வரும் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடைகளின் நுழைவுவாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான் கட்டாயமாக வைக்கப்…
-
- 0 replies
- 239 views
-
-
இந்திய மீனவர்களின் வலையில் சிக்கிய மர்ம படகு : பொலிஸார் தீவிர விசாரணை நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விசைப்படகின் வலையில் சிக்கிய மர்ம படகு குறித்து இந்தியப் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 300 க்கும் குறைவான படகுகளில் மீனவர்கள் மின்பிடிக்கச் சென்றனர் தங்கச்சிமடத்தை சேர்ந்த ரொனால்ட் என்பவரது படகில் மின்பிடிக்கச் சென்ற முத்துராமலிங்கம், பாதாளம், சீனிவாசன், சேகர் முருகேசன் உள்ளிட்ட ஐந்து பேர் தனுஷ்கோடிக்கும் மன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது நள்ளிரவில் மீன்பிடி வலையில் ஏதோ ஒரு மர்மப்பொருள் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மீனவர்கள் …
-
- 0 replies
- 356 views
-
-
திமிங்கல வாந்தி: ரூ. 2 கோடி மதிப்புள்ள அம்பர்கிரிஸை பதுக்கியதாக நாகை மீனவர்கள் இருவர் கைது 18 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தமிழக காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அம்பர் கிரிஸ் நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் கண்டெடுத்த அரிய வகை அம்பர் திமிங்கலத்தின் அம்பர்கிரிஸை வனத்துறையிடம் ஒப்படைக்காமல் வீட்டிலேயே பதுக்கி வைத்த இரண்டு மீனவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேதாரண்யத்தை அடுத்துள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பாலகுரு, ஆனந்த் ஆகிய இருவரும் திமிங்கிலத்தின் அம்பர்கிரிஸ் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது. அதை விதிகளின்படி வனத்துறையினரிடம் ஒப்படைக்கா…
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
"ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார்" அப்பல்லோ வைத்தியசாலையின் தலைவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார் என்று அப்பல்லோ வைத்தியசாலையின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி மரணமடைந்தார். இதனையடுத்து, ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி தெரிவித்து வந்தது. அதிமுகவில் இருந்து பிரிந்து வந்து அதிமுக புரட்சி தலைவி அம்மா என்ற பெயரில் செயல்படும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியும் பல்வேறு சந்தேகங்களை …
-
- 0 replies
- 597 views
-
-
-
"கலகக் குரல்" எதிரொலி- மதுரை மாநகர் தி.மு.க. கூண்டோடு கலைப்பு! தற்காலிக பொறுப்புக் குழு அறிவிப்பு!! சென்னை: திமுக தலைமையை விமர்சிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டியதால் ஒட்டுமொத்த மதுரை மாநகர மாவட்ட தி.மு.க. அமைப்புக்கள் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்டத்துக்கு தற்காலிக பொறுப்புக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அண்மையில் "இனியொரு விதிசெய்வோம்' என்ற தலைப்பில் ஜனவரி 30-ந் தேதி திமுக பொதுக்குழு சென்னையில் நடைபெறும் என்று மதுரை திமுக நிர்வாகிகள் இருவர் ஒட்டிய போஸ்டர் அக்கட்சியில் பெரும் புயலை கிளப்பியது. இதைத் தொடர்ந்து திமுக மேலிடம் கடும் எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் கட்டுப்படாத மதுரை மாவட்ட திமுகவினர், மு.க…
-
- 0 replies
- 489 views
-
-
தமிழகத்தில் திருத்தப்பட்டு இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.44 கோடியாக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் என பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. 30 லட்சம் பேர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக மாநிலம் முழுவதும் …
-
- 0 replies
- 355 views
-
-
திருச்சி அருகே தா.பேட்டையில் ஒன்றிய, நகர திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், திருச்சியில் நடைபெற உள்ள திமுக மாநில மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்தி காட்ட வேண்டும், தேமுதிக கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளது, பாராளுமன்ற தேர்தலில் கலைஞர் தலைமை யில் பலமான கூட்டணி அமையும். பெரம்பலூர், திருச்சி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றார். http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=114598
-
- 0 replies
- 453 views
-
-
புதுவையில் திமுகவின் தொய்வு எப்படித் தொடங்கியது? மீண்டும் அது முன்னிலை பெறுமா ? கட்டுரை தகவல் எழுதியவர்,நடராஜன் சுந்தர் பதவி,பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MK STALIN / V. NARAYANASAMY FACEBOOK புதுச்சேரியில் பலமுறை ஆளும் கட்சியாகவும், காங்கிரசுக்கு பிரதான போட்டியாளராகவும் இருந்துவந்த திமுக சிறிது சிறிதாக புதுச்சேரியின் அதிகாரப் போட்டிக்கான உரையாடலில் இருந்து காணாமல் போயிருந்தது. புதுவை அரசியல் பரபரப்பான புதிய திசையில் போய்க் கொண்டிருக்கும் நிலையில் திமுக சோம்பல் முறித்துக்கொள்ளுமா? அதன் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்? …
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
எம்ஜிஆர் முதல் தேர்தலிலேயே வென்ற ரகசியம் தெரியுமா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 26 பிப்ரவரி 2021 புதுப்பிக்கப்பட்டது 24 டிசம்பர் 2022 பட மூலாதாரம்,MGR FAN CLUB 1977ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர். துவங்கிய அ.தி.மு.க, சந்தித்த முதல் தேர்தலிலேயே அபார வெற்றி பெற்றது. புதிதாக ஆரம்பித்த ஒரு கட்சி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது இந்தியா முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 1971ல் இருந்து 1977க்குள் தமிழ்நாட்டிலும் தேசிய அளவிலும் பல சம்பவங்கள் நடந்திருந்தன. அதன் விளைவுகள் மிகத் தீவிரமானதாக இருந்தன. 1977ல் எம்.ஜி.ஆரின் வெற்றி…
-
- 0 replies
- 349 views
- 1 follower
-
-
தஞ்சை: 'கார்த்தி சிதம்பரமே... கட்சியை விட்டு வெளியேறு!' என தஞ்சாவூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலின் தோல்விக்கு பிறகு கட்சியை பலப்படுத்தும் வேலையை தொடங்கியுள்ளது. கட்சி உறுப்பினர்கள் அடையாள அட்டையில் காமராஜர் படத்தையும், மூப்பனார் படத்தையும் நீக்க வேண்டும் என கட்சி தலைமை சொன்னதாக செய்தி வெளியானது. இதனால் கோபமடைந்த ஜி.கே.வாசன் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். இந்த சமயத்தில் "காமராஜரை தூக்கி ஓரமாக வையுங்கள், அவர் பெயரை சொல்லி கட்சியை இனிமேல் வளர்க்க முடியாது!" என கார்த்தி சிதம்பரம் கூறியதாக செய்திகள் வெளியானது. இதை அவர் மறுத்தாலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியிலும் கடும் சலசலப்பை ஏற…
-
- 0 replies
- 464 views
-
-
எஸ்.வி.சேகரை குற்றம் சாட்டியவர்கள் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக மகளிர் அணியின் மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை வழங்குவதற்கு பாஜக முனைப்பு காட்டி வருவதாக தெரிவித்தார். படத்தின் காப்புரிமை facebook Image caption எஸ்.வி. சேகர் "திமுக தலைவர் ஸ்டாலின் போன்றோர் தமிழகத்திற்கு பாஜக என்ன செய்தது என்று கேள்வி எழுப்புகின்றனர். ஐக்கிய முற்போக்…
-
- 0 replies
- 522 views
-
-
போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவு March 15, 2019 போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் 2009ஆம் ஆண்டு என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் போலி என்கவுன்டரில் தன் கணவரைக் கொன்றதாக சுந்தரமூர்த்தியின் மனைவி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையகத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அத்துடன் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஆணையக நீதிபதி கொல்லப்பட்டவரின் உடலை பரிசோத…
-
- 0 replies
- 369 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டுவரும் திட்டத்தின் கீழ் முதல் ரயில் இன்று சென்னை வந்தடைந்தது. இந்த ரயில் மூலம் ஒரு தடவைக்கு இரண்டரை லட்சம் தண்ணீர் கொண்டுவர முடியும். சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுவதால், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குக் குடிநீரை ரயில் மூலம் கொண்டுவர முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, ஜோலார்பேட்டை மேட்டு சக்கரக்குப்பம் நீரேற்று நிலையத்திலிருந்து ரயில்வே வேகன்களில் குடிநீர் நிரப்பப்பட்டு, அந்த ரயில் இன்று காலை ஜோலார்பேட்டையிலிருந்து 7.20 மணியளவில் புறப்பட்டது. இந்த ரயில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
உயிருடன் தான் இருக்கும்போதே... ஆவணத்தில் ஆளுநர் கையொப்பமிட வேண்டும்: அற்புதம்மாள் உருக்கம் உயிருடன் தான் இருக்கும் போதே ஏழு பேர் விடுதலை தொடர்பான ஆவணத்தில் ஆளுநர் கையொப்பமிட்டு ஒப்புதல் அளிக்க வேண்டுமென ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், இந்த தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் அமைதி காத்து வருகிறார். பேரறிவாளன், நளினி தரப்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி…
-
- 0 replies
- 469 views
-
-
நித்தி எங்கே இருக்கிறார்? தமிழக அரசு பதில்! Jan 31, 2025 நித்யானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா என்றாலே பிரச்சனையாக தான் இருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சர்ச்சை சாமியாரான நித்யானந்தா பாலியல் வழக்குகளில் சிக்கி தற்போது தலைமறைவாக உள்ளார். 2019 ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பி ஓடியவர் இன்றுவரை எங்கிருக்கிறார் என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் யூடியூப் சேனல்களில் தோன்றி உரையாற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கிருந்து வீடியோ வெளியிட்டு வருவதாக கூறப்படும் நிலையில், அதுவும் புரியாத புதிர்தான். க்ரீன் ஸ்கீரின் மூலம் வேறு எங்கேயோ இருந்து வீடியோ வெளியிடுகிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்…
-
- 0 replies
- 278 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 16 பிப்ரவரி 2025 "புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி" என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. "மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று பிளாக்மெயில் செய்வதை தமிழர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக, காங்கிரஸ், நாதக, தவெக உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற அரசியல் கட்சிகளும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை கண்டித்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு பாஜக என்ன சொல்கிறது? கல்வியாளர்களும், சட்ட நிபுணர்களும் கூறுவது என்ன? பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர தமிழ்நாடு…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
பாவனையற்ற ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றும் தமிழகம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பாவனைக்கு உதவாத ரயில் பெட்டிகளை பயன்படுத்த தமிழக அரசு தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் முதல்கட்டமாக 674 பழைய ரயில் பெட்டிகள்அடுத்த ஒரு வாரத்தில் தனி வார்டுகளாக மாற்றப்படவுள்ளது. இதன்மூலம் குறைந்த செலவில் சுமார் 1,300 படுக்கைகள் அமைக்க முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பழமையான ரயில் பெட்டிகளை தேர்வுசெய்து, கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான வார்டுகளாக மாற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென ரயில்வே வாரியம் அனைத்து மண்டல முகாமை…
-
- 0 replies
- 255 views
-
-
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, தமிழகத்தில் ரயில் பெட்டியில் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. அது குறித்த மேலதிக தகவல்களை இந்த காணொளியில் காணலாம்.
-
- 0 replies
- 391 views
-
-
சுவாதி கொலையாளி ராம்குமார் மிகவும் ஒழுக்கமானவன் என அவனது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இதயத்துல்லா என்ற நபர் கூறியதாவது, பொறியியல் படித்துள்ள அவனுக்கு சில பாடங்களில் அரியர் உள்ளதால், சென்னையில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தான். இதுவரை எந்த பிரச்சனையிலும் அவன் ஈடுபட்டதில்லை என கூறியுள்ளார். மற்றொரு நபரான கருத்தபாண்டி கூறுகையில், யாருடனும் முகம் பார்த்து கூட பேசமாட்டான், விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்தால் ஆடு மேய்க்கும் வேலையை செய்வான், இவ்வாறு ஒழுக்கமாக இருந்த ராம்குமார், ஒரு கொலையை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார். http://news.lankasri.com/india/03/105131
-
- 0 replies
- 618 views
-