Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ம.தி.மு.க., தலைவர் வைகோ, கடவுள் மறுப்பு கொள்கையை கொண்டவர். அதன் அடையாளமாக, கருப்பு துண்டை, தன் தோளில் எப்போதும், அவர் அணிந்திருப்பது வழக்கம். மத வழிபாடுகளிலும் அவர் கலந்து கொள்வதில்லை. பல ஆண்டுகளாக இதை கடைபிடித்து வரும் வைகோ, கடந்த 18ம் தேதி, பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்றபோது மட்டும், கருப்பு துண்டை தோளில் இருந்து கழற்றி உள்ளார்.பய பக்தியுடன் அவர் அந்த கோவிலை அரை மணி நேரம் வலம் வந்ததுடன், துர்க்கையை வழிபட்டார். பின்னர், அவருக்கு அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். வைகோவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், அவரது கட்சியினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்து மதத்திற்கு எதிரானவர் என்ற தோற்றத்தை அவர் களைய விரும்பியதன் அடையாளம் தான், இந்த வழிபாட…

  2. "வானளாவிய" விஸ்வரூபம் எடுத்த பி.எச்.பாண்டியன்.. அஞ்சாமல் சிறை சென்ற பாலசுப்ரமணியன்... ! சென்னை: பத்திரிகை உலகம் எத்தனையோ சவால்களைச் சந்தித்துள்ளது. அதில் மறக்க முடியாத ஒன்று, "பாஸ்" எஸ்.பாலசுப்ரமணியன் சிறையில் அடைக்கப்பட்ட கருப்பு தினம் எம்.ஜி.ஆர். காலத்தில் நடந்தது அது. எம்.ஜி.ஆர் கண் முன்பாகவே நடந்தது. யார் பெரியவர் சட்டசபையா, நீதிமன்றமா என்ற பெரும் சட்டப் போர் வெடித்துக் கிளம்பிய பரபரப்பு நாட்கள் அவை. 1987ம் ஆண்டு ஆனந்த விகடன் அட்டையில் ஒரு அட்டைப் பட கார்ட்டூன் இடம் பெற்றிருந்தது. அது அப்போதைய ஆட்சியாளர்களைக் கோபப்படுத்தி விட்டது. சட்டசபையை விமர்சிக்கும் வகையிலான கார்ட்டூன் அது. இதையடுத்து அப்போது சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன், பாலசுப்ரமணியனுக்கு சம்மன் அ…

  3. பாகிஸ்தானின் பெஷாவர் ராணுவப் பள்ளியில் நடந்த கொடூரமான தாக்குதலில் உயிரிழந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்களின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் வியாழக்கிழமை சென்னை முகப்பேறு வேலம்மாள் பள்ளியில் கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் தங்கள் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்தனர். மாணவர்களாகிய நாங்கள் எந்த நிலையிலும், எக்காலத்திலும் தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடுவோம். தீவிரவாதம் எந்த ரூபத்தில் எந்த மொழியில், எந்த இனத்தில் வந்தாலும் அதனை நாங்கள் முழு தைரியத்துடன் ஒன்றாக இணைந்து எதிர்ப்போம். போராடுவோம். மக்களையும் பொருட்களையும் அழிக்கின்ற தீவிரவாதம் இவ்வுலகில் எந்த மூலையுல…

  4. ஜெ., சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கை விசாரிக்க ஜாமின் உத்தரவும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு ! புதுடில்லி : தமிழக முன்னாள் முதல்வர் ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் பெற்றுள்ள ஜாமின் வரும் 4 மாதங்களுக்கு நீட்டித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே சொன்னது போல் கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் வழக்கை நாள் தவறாமல் நடத்தி குறிப்பிட்ட 3 மாத காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என தலைமை நீதிபதி தத்து தலைமையிலான நீதிபதிகள் பெஞ்ச் இன்று ஆணை பிறப்பித்தது. கடந்த, 1991-96ல் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துகள் சேர்த்ததாக பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிந்து கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி ஜெ., …

  5. தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தில் நேற்று 11 வயது மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அந்தச் சிறுமியின் ஊரைச் சேர்ந்த, 15 வயது சிறுவனைக் காவல்துறை கைதுசெய்துள்ளது. வேலூர் குடியாத்தத்திற்கு அருகில் உள்ள கல்யாண பெருங்குப்பத்தைச் சேர்ந்த 11 வயது பள்ளி மாணவி ஒருவரது சடலம் நேற்று அந்தப் பகுதியில் உள்ள முட்புதரில் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவி படித்த மச்சனூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர் ஒருவரை காவல்துறையினர் தேடிவந்தனர். இந்த நிலையில் அந்த 15 வயதுச் சிறுவனை காவல்துறையினர் இன்று ஒசூரில் கைதுசெய்ததாக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். பலாத்கார முயற்சியில் அந்த ம…

  6. சென்னை: தமிழ்த் திரைப்படங்கள் தயாரிப்பிற்குப் பிறகு சென்னையில் மருத்துவப் பரிசோதனை மையம் தொடங்கவுள்ளது சர்ச்சைக்குரிய பிரிட்டனைச் சேர்ந்த -லைக்கா- மொபைல் நிறுவனம். இந்த மையம் சென்னையின் மத்தியப் பகுதியில் மிகப் பெரிய அளவில் அமையவுள்ளது. இது தொடர்பாக சென்னையில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் துணைத் தூதர் பரத் ஜோஷி சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது: பிரிட்டனைச் சேர்ந்த பிரபல -லைகா- மொபைல் நிறுவனம் அண்மையில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஒன்றில் ரூ. 100 கோடி அளவுக்கு முதலீடு செய்தது. இந்த நிறுவனம் இப்போது மத்தியச் சென்னைப் பகுதியில் மிகப் பெரிய மருத்துவப் பரிசோதனை மையத்தை அமைக்க உள்ளது. தமிழகத்திலுள்ள பிரபல மருத்துவமனைகளுடன் இந்த மருத்துவ ஆய்வகம்…

  7. சென்னை: அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தி உயிரை எடுக்கிற விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் தான், நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுபவர்கள் என்று சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு கருத்து கூறியிருந்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை குஷ்பு வீட்டை முற்றுகையிடப்போவதாக தமிழர் முன்னேற்றப்படை அறிவித்துள்ளது. இந்த கருத்தை தமிழகத்தில் யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒருசில நாட்களில் மறந்துவிட்டனர். ஆனால் வெளிநாட்டு தமிழர்கள் மறக்க தயாராக இல்லையாம். அவர்கள் குஷ்புவுக்கு எதிராக ரகசியமாக அதிரடி வேலை ஒன்றை செய்து வருகின்றனராம். குஷ்புவின் கணவர் சுந்தர் சி இயக்கி வரும் 'ஆம்பள' படத்தை தமிழர்கள் வாழும் எந்த நாட்டிலும் ரிலீஸ் செய்ய விடக்…

  8. விருத்தாசலம், விருத்தாசலம் அருகே, சென்னையைச் சேர்ந்த வங்கி காவலாளி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் பாகங்கள் 3 சூட்கேஸ் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டு கிடந்தது. சூட்கேஸ் பெட்டிகள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது பாசிக்குளம் கிராமம். இந்த கிராமத்தில் வெள்ளை பாறை என்றழைக்கப்படும் ஒரு ஓடை உள்ளது. இங¢கு நேற்று மதியம் வழக்கம் போல் அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள பாறையின் மீது செல்போன் ஒன்று கிடந்ததை பார்த்தனர். அந்த செல்போனை அவர்கள் ஆவலுடன் எடுக்க சென்ற போது, அங்கு 3 சூட்கேஸ் பெட்டிகள் கேட்பாரற்று கிடந்தன. அவற்றின் அருகில் சென்று பார்த்த அவர்களுக்கு அந்த சூட்கேசுகளில் ஏதேனும் வெடிக…

  9. ரயில்வே தேர்வில் 'அம்மா' பற்றிய கேள்வி: ராஜ்யசபாவில் அதிமுகவினர் அமளி டெல்லி: ரயில்வே துறை தேர்வில் ஜெயலலிதா பற்றிய கேள்வி இருந்ததற்கு ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர். ரயில்வே துறையில் ஜூனியர் என்ஜினியர் பதவிக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. 21 மண்டலத்தில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் சென்னை மண்டலத்தில் நடந்த தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி அதிமுகவினரை கோபம் அடையச் செய்துள்ளது. சொத்து குவிப்பு- முதல்வர் பதவியை முதலில் இழந்தவர் யார்?- ரயில்வே தேர்வில் கேள்வி: ராஜ்யசபாவில் அதிம அந்த கேள்வி இது தான், இந்தியாவில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முதல்வர் பதவியை முதலில் இழந்தவர் யார்? அ. லாலு பிரசாத் யாத…

  10. ஜெ., வழக்கில் அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக தடை கேட்ட மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி! டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு வக்கீலாக பவானி சிங் ஆஜராவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் முதலில் அரசு வக்கீலாக ஆஜரானவர் ஆச்சாரியா. பிறகு பவானிசிங் அந்த பதவிக்கு வந்தார். இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த செப்டம்பர் 27ம்தேதி, தீர்ப்பளித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். ஜெ., வழக்கில் அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக தடை கேட்ட மனு சுப்ர…

  11. தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்குகிறது. மக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து அதிகரிக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகரித்தபடி உள்ளன. இந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி போக்குவரத்துத்துறை பதிவேடு களின்படி, தமிழகத்தில் ஒரு கோடியே 97 லட்சத்து 72 ஆயிரத்து 131 வாகனங்கள் பதிவு செய் யப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக் குள் அது இரண்டு கோடியை எட்டும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதியன்று, மாநிலத்தில் ஒரு கோடியே 80 லட்சத்து 64 ஆயிரத்து 787 வாகனங்கள் ஓடிக் கொண்டிருந்தன. இதன்படி ஓராண்டு காலத்துக்குள், 17 லட்சத்து 7 ஆயிரத்து 344 வாகனங் கள் புதிதாக பதிவு செய்யப்பட்டி…

  12. சென்னை! இந்த பெயரைக் கேட்டதுமே சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா.. இவற்றுக்கு முன்பாக எல்லோருக்கும் 'கூவம்'தான் ஞாபகம் வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பிறந்து, சென்னை மாநகரின் பிரதான பகுதிகளைக் கடந்து வங்கக் கடலில் சங்கமமாகும் இந்த கூவம் ஒரு பக்கம் என்றால், அதற்குப் போட்டியாக நகரில் திரும்பிய பக்கமெல்லாம் மினி கூவங்கள். அனிச்சையாகக்கூட மூக்கை மூடாத அளவுக்கு பழகிவிட்டது சென்னைவாசிகளுக்கு. 1978-ல் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் உருவாக்கப்பட்டபோது, சென்னையின் கழிவுநீர் மேலாண்மைக்கான திட்டக் கொள்கை (மாஸ்டர் பிளான்) வகுக்கப்பட்டது. அடுத்த 30 ஆண்டுகள் அதாவது 2008-ல் சென்னையின் மக்கள்தொகை என்னவாக இருக்கும் என கணக்…

  13. தீய நோக்கோடு உள்ளவன், ஒற்றுமையாய், திட்டமிட்டு, தான் பலமுறை தோற்றாலும் முட்டி மோதுகிறான், "ஏன் ஈழத்தமிழர்களில் தங்கள் இலக்கை அடைவதில் சோர்வுற வேண்டும்?" என்ற நினைவே இன்று இச்செய்தியை படிக்கையில் மனதில் தோன்றியது. முல்லைப் பெரியாறு: புதிய அணை ஆய்வுக்கு அனுமதி: மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம். முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த, கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழக அரசு, இது நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை எழுதிய கடித விவரம்: முல்லைப் பெரியாறு பகுதியில…

  14. நாமக்கல் மாவட்டத்தில் இளவயதுத் திருமணம்! - கைக்குழந்தையுடன் சிறுமி மீட்பு [saturday 2014-12-13 09:00] நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகிலுள்ள செங்கோடம் பாளையத்தை சேர்ந்த வாசுகி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 16,வயது சிறுமிக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அச்சிறுமிக்குப் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தை திருமணம் குறித்து தகவல் நாமக்கல் சைல்டு லைனுக்கு வியாழக்கிழமை கிடைத்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை சிறுமியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்திய வருவாய்த் துறையினர், சைல்டு லைன் குழுவினர் மற்றும் காவல் துறையினர் அடங்கிய குழுவினர் சிறுமிக்கு திருமணத்தின்போது 16 வயது மட்டுமே நிறைவடைந்திருந்ததை …

  15. சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் 79 பேரின் கணக்கில் ரூ.4 ஆயிரத்து 479 கோடி கருப்பு பணம்! [saturday 2014-12-13 09:00] சுவிஸ் வங்கி கருப்பு பண விசாரணையில், இந்தியர்கள் 79 பேரின் கணக்கில் ரூ.4 ஆயிரத்து 479 கோடி பணம் உள்ளது சிறப்பு புலனாய்வு குழுவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வருமான வரித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுவிட்சர்லாந்தின் எச்.எஸ்.பி.சி வங்கியில் கணக்கு வைத்துள்ள 628 பேரின் பட்டியலை சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் (எஸ்.ஐ.டி), மத்திய அரசு ஒப்படைத்தது. இவர்கள் தாக்கல் செய்த முதல் அறிக்கையில், 289 பேரின் கணக்கில் பணம் எதுவும் இல்லை எனவும், பலரது பெயர்கள் இரண்டு முறை பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ட…

  16. காங்கிரசை பந்தையக் குதிரையாக மாற்றுவோம் என்று விழா ஒன்றில் காங்கிரசில் இணைந்த குஷ்பு சூளுரைத்துள்ளார். இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குஷ்புவை உயர்த்திப் பாராட்டியுள்ளார். விருதுநகரில் காங்கிரஸ் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வேலாயுதம் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் எம்.பி., மாணிக்கம் தாகூர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வசந்தகுமார், செல்லக்குமார், விருதுநகர் காங்., கமிட்டி நிர்வாகி சக்திவேல், முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன், மாணவர் காங்., தலைவர் நவீன், ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் தி.மு.க. விலிருந்து காங்கிரஸுக்கு மாறிய குஷ்பு இவ்விழாவில் முதல் முற…

  17. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்துகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியபோது, ‘’கர்நாடக அரசு காவிரி ஆற்றில் அணைகளை கட்டி மின்சாரம் தயாரிக்க போவதாக கூறுவது அப்பட்டமான பொய். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கர்நாடகத்தில் இருந்து வரும் காவிரி நீர் கர்நாடகத்துக்கு சொந்தம் என்றால், தமிழகத்தின் நெய்வேலியில் எடுக்கப்படும் பழுப்பு நிலக்கிரி, அதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தும் தமிழனுக்கே சொந்தம். வருகிற 2016–ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில…

  18. சென்னை, சென்னை மெரினா கடற்கரையில் பாஸ்போர்ட்டுகளை தொலைத்து விட்டு, வெளிநாட்டினர் 14 பேர் தவித்த நிலையில் உள்ளனர். திருமண நிகழ்ச்சி சென்னை மதுரவாயலில் கடந்த 7–ந் தேதி அன்று இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் குடும்ப திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் இலங்கை, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் இருந்து ஏராளமான பேர் வந்து கலந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்தவர்கள், சென்னையில் தங்கி இருந்து பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். நேற்று முன்தினம் இந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மெரினா கடற்கரையை சுற்றி பார்த்தனர். பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில், மெரினா கடற்கரை புல் தரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் புறப்பட்டுச் சென்று விட்டனர். …

  19. சொத்து குவிப்பு: முன்கூட்டியே மேல்முறையீட்டு விசாரணை- ஜெ. கோரிக்கை- சுப்ரீம் கோர்ட்டில் மறுப்பு! டெல்லி: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை முன் கூட்டியே நடத்தக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது. உச்சநீதிமன்றத்தில் வரும் 18-ந் தேதி நடைபெறும் விசாரணையின் போது மேல்முறையீட்டு மனு மீது உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் செப்டம்பர் 27ம் தேதியன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன் ஜெயலலிதாவுக்கு ரூ100…

  20. சொத்துக்குவிப்பு வழக்கு: தனி நீதிபதியை நியமித்து வழக்கை விரைந்து முடிக்க வாய்ப்பு! சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், தனி நீதிபதியை நியமித்து விசாரணைக்கு உத்தரவிடுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 18 வருடங்களாக நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த வழக்கில், ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்தது. சொத்துக்குவிப்பு வழக்கு: தனி நீதிபதியை நியமித்து வழக்கை விரைந்து முடிக்க வாய்ப்பு! இவர்கள் 4 பேரும் தங்களை ஜாமீனில் விடக்கோரி கர்நாடக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட…

  21. ஜெ.,வுக்கு ஏன் ஜாமின் தரப்பட்டது? மறுபரிசீலனை செய்ய கோரிக்கை சொத்துக்குவிப்பு வழக்கில், தண்டனை பெற்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சுப்ரீம் கோர்ட் வழங்கிய ஜாமினை, மறுபரிசீலனை செய்திடக் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த, சொத்துக்குவிப்பு வழக்கின் முடிவில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும், சிறை தண்டனை வழங்கப்பட்டது. தங்களை, ஜாமினில் விடக்கோரி, நான்கு பேரும் தாக்கல் செய்த மனுவை, கர்நாடகா ஐகோர்ட் நிராகரித்து விட்டது. பின்னர், சுப்ரீம் கோர்ட்டில், நான்கு பேருக்கும் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்து, நீதிபதி லோக்கூர், சிக்ரி ஆகியோர், கட…

  22. சென்னை: மதிமுகவைத் தொடர்ந்து பா.ம.க வும் பாஜக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதி உள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று அறிவித்தார். இதையடுத்து பா.ம.க வும் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர். தலித் மக்களின் விரோதி. எனவே அவர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக வேண்டும்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். http://news.vikatan.com/article.php?module=news&aid=359…

  23. திருப்பூர்: ரஜினி படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தாமல் புதிய கட்சியைத் தொடங்குகின்றனர் அவரது ரசிகர்கள். திருப்பூர் மற்றும் 14 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் சிலர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கட்சிக்கு கொடி மற்றும் பெயரையும் தேர்வு செய்துள்ளனர். திருப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எஸ்எஸ் முருகேஷ் என்பவர்தான் இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறார். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், தமிழக முதல்வராக வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் 25 ஆண்டு கால கோரிக்கை. சில முறை ரசிகர்களே ரஜினிக்காக கட்சி ஆரம்பித்ததும், அவர்களை ரஜினி விலக்கி வைத்ததும் நடந்திருக்கிறது. இந்த முறை ரஜினி அரசியலுக்கு வந்தே…

  24. ரசிகர்களின் ஆதரவு இருப்பதால், அவர்களின் விருப்பப்படி புத்தாண்டில் புதுக்கட்சி துவக்கி, தீவிர அரசியலில் இறங்க திட்டமிட்ட நடிகர் விஜய், 50 வயதில் அரசியலுக்கு வந்தால் போதும் என்ற, தன் தந்தையான இயக்குனர் சந்திரசேகரின் தடையால் தவிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்க்கு, தமிழகம் முழுவதும் 3,500 ரசிகர் மன்றங்கள் உள்ளன. அதில், 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது நடிகர் விஜயின் நீண்ட நாள் ஆசை. அதனால் தான், சில ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை சந்தித்தார். தி.மு.க., தரப்புடனும் இணக்கமாக இருந்தார். பின், படம் வெளியிடுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால், நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் மனக்கசப்பு ஏற்பட்டதால், …

  25. ராஜபக்சே திருப்பதி வருகையை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவையில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்பாட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் அங்கு வந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதேபோல் ராஜபாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டட ஆதி தமிழர் விடுதலை இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். தேனியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். http://www.pathivu.com/news/35938/57/12/d,article_full.aspx

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.