தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
6 நிபந்தனைகளுடன் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கியது உயர் நீதிமன்றம்! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் பரோல் வழங்கி உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் உள்ள ரவிச்சந்திரன், ஒரு மாதம் பரோல் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ``26 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே சாதாரண விடுப்பில் சென்று உள்ளேன். எனக்கு பரோலில் செல்ல உரிமை உண்டு எனத் தமிழக முதன்மைச் செயலர் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த 2012-ல் பரோலில் வந்த நிலையில் 2014-க்குப் பிறகு, ப…
-
- 0 replies
- 403 views
-
-
இரு கால்களும் இல்லை; தன்னம்பிக்கையுடன் பாரா தடகள வீராங்கனையாகும் முயற்சியில் தமிழ் பெண் Play video, "இரு கால்களும் இல்லை; தன்னம்பிக்கையுடன் பாரா தடகள வீராங்கனையாகும் முயற்சியில் தமிழ் பெண்", கால அளவு 3,53 03:53 காணொளிக் குறிப்பு, இரு கால்களும் இல்லை; தன்னம்பிக்கையுடன் பாரா தடகள வீராங்கனையாகும் முயற்சியில் தமிழ் பெண் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுபஜா என்ற மாற்றுத்திறனாளி ஒரு விபத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்தார். தற்போது வாழ்வாதாரத்திற்காக சிவகங்கை மாவட்ட தாலுகா அலுவலகத்துக்கு வெளியே அரசு நலத்திட்ட விண்ணப்பங்கள், கோரிக்கை மனு, கடிதங்கள் உள்ளி…
-
- 0 replies
- 332 views
- 1 follower
-
-
மிஸ்டர் கழுகு: பதவி பறிக்கும் குட்கா? ‘சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கிறேன். மதியத்துக்குள் வந்துவிடுவேன்’ என மெசேஜ் அனுப்பியிருந்தார் கழுகார். மதிய வெயிலில் வியர்வையோடு வந்த அவரிடம், ‘‘காவிரிப் பிரச்னை, கவர்னர் விவகாரத்தால் பின்னுக்குப் போனது. கவர்னர் விவகாரம், தினகரன்-திவாகரன் மோதலில் அடிபட்டுப் போனது. இப்போது குட்கா விவகாரம் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டதே’’ என்றோம். ‘‘தினகரனுக்கும் பி.ஜே.பி-க்கும் இடையில் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. மோடியின் ஆலோசகராக உள்ள அதிகாரி ஒருவர் தினகரனை சென்னையில் வந்து சந்தித்துவிட்டுப் போனார் என பல வாரங்களுக்கு முன்பே நமது நிருபர் எழுதியிருந்தார். அதற்கும், நீர் மேலே சொல்லி இருக்கிற எல்லா வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
நம்மாழ்வார் நினைவு தினம்: “ ரசாயனம் கலக்காம இருக்குறது மட்டுமல்ல இயற்கை விவசாயம்” மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ் 30 டிசம்பர் 2018 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,M NIYAS AHMED குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அந்த பெருங்கிழவன் நம்மாழ்வார் மீது கவனம் குவிந்தது சுனாமிக்கு பின்புதான். சுனாமியினால் கடற்கரை அருகே உள்ள கிராமங்களில் கடல் தண்ணீர் புகுந்து நிலத்தடி நீர் பாழடைந்தது. ஏற்கெனவே கடன், லாபமின்மை, ஆட் பற்றாகுறையால் விவசாயிகள் தவித்து கொண்டிருந்தனர். நம்பிக்கை கீற்று மெல்ல நினைவுகளை திரட்டி அசைப்போட்டோமானால் டெல்டாவ…
-
- 0 replies
- 633 views
- 1 follower
-
-
ஜெயலலிதாவைத் தவறாக வழிநடத்திவிட்டார்கள்! - பி.வி. ஆச்சார்யா சிறப்புப் பேட்டி பி.வி. ஆச்சார்யா. நாட்டின் மூத்த, முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவர். 80 வருஷ வாழ்க்கையில், 60 வருஷங்களைச் சட்டப் புத்தகங்களோடு கழித்திருப்பவர். ஐந்து முறை அட்வகேட் ஜெனரல், பார் கவுன்சில் தலைவர், இந்திய சட்ட ஆணைய உறுப்பினர் உள்பட பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னதாக அரசுத் தரப்பில் வாதாடி, தொடர் நெருக்கடிகள் காரணமாக விலகியவர். ஓர் இளம்காலைப் பொழுதில் ஆச்சார்யாவைச் சந்தித்தேன். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தவர் நீங்கள். இப்போது அன்றைய ‘மெட்ராஸ் நாட்கள்’ நினைவுக்கு வருவது உண்டா? என்னுடைய சொந்த ஊர் உடுப்பி பக்கம், ஒரு அழகான கிராம…
-
- 0 replies
- 364 views
-
-
ரயில்வே தேர்வில் 'அம்மா' பற்றிய கேள்வி: ராஜ்யசபாவில் அதிமுகவினர் அமளி டெல்லி: ரயில்வே துறை தேர்வில் ஜெயலலிதா பற்றிய கேள்வி இருந்ததற்கு ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர். ரயில்வே துறையில் ஜூனியர் என்ஜினியர் பதவிக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. 21 மண்டலத்தில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் சென்னை மண்டலத்தில் நடந்த தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி அதிமுகவினரை கோபம் அடையச் செய்துள்ளது. சொத்து குவிப்பு- முதல்வர் பதவியை முதலில் இழந்தவர் யார்?- ரயில்வே தேர்வில் கேள்வி: ராஜ்யசபாவில் அதிம அந்த கேள்வி இது தான், இந்தியாவில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முதல்வர் பதவியை முதலில் இழந்தவர் யார்? அ. லாலு பிரசாத் யாத…
-
- 0 replies
- 840 views
-
-
படக்குறிப்பு, கடந்த மே - ஜூன் மாதத்தில் 1,200 ஏக்கர் அளவுக்கான நிலத்தை எடுப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 23 நவம்பர் 2023, 03:10 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற் பேட்டைக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை அங்குள்ள விவசாயிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். எதிர்த்த விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது, அப்பகுதியினரிடம் கூடுதலான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. "எனக்கு 55 வயதாகிறது. எனது மகன் மாற்றுத் திறனாளி. என்னிடம் இருக்கு…
-
- 0 replies
- 356 views
- 1 follower
-
-
துரைமுருகனை தனிப்பட்ட காரணங்களுக்காகதான் சந்தித்தோம் என்று தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேமுதிகவின் நிர்வாகிகளான அனகை முருகேசன் மற்றும் இளங்கோவன் இருவரும் திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்திற்கு சென்று தனிப்பட்ட காரணங்களுக்காக சந்தித்தனர் என்றார் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ். ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக சென்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. "தற்போது நாங்கள் தெளிவாக கூறுவது என்னவென்றால், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை முடிவாகிவிட்டது. தொகுதி பங்க…
-
- 0 replies
- 607 views
-
-
வெளியானது அதிமுக - திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்..! முழுவிபரம் உள்ளே..! மக்களவை தேர்தலில் அதிமுக- திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விபரம் வெளியாகி உள்ளது. மக்களவை தேர்தலில் திமுக 8 கட்சிகளுடனும் அதிமுக 7 கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. தொகுதி பங்கீடு முடிந்து எந்தெந்த தொகுதிகள் கூட்டணிக்கட்சிகளுக்கு இரு கூட்டணிகளும் ஒதுக்கியுள்ளன என்கிற விபரம் வெளியாகி இருக்கிறது அதன் படி திமுக 1- தென்சென்னை 2- வடசென்னை 3- மத்திய சென்னை 4- காஞ்சிபுரம் 5- தென்காசி 6. ஶ்ரீபெரம்பத்தூர் 7. அரக்கோணம் 8- வேலூர் 9- ஆரணி 10- தருமபுரி 11- திருவண்ணாமலை 12- கடலூர் 13- கள்ளக்குறிச்சி 14- நீலகிரி 15…
-
- 0 replies
- 614 views
-
-
விஜயகாந்த் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் காலமானார்! சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர் இப்ராஹிம் ராவுத்தர். திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் ராவுத்தர் இருந்தார். கடைசியாக இவர், "புரியாத ஆனந்தம் புதிதாய் ஆரம்பம்" என்ற படத்தை தயாரித்தார். அண்மையில் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இப்ராஹிம் ராவுத்தர் அனுமதிக்கப்பட்டிருந்தார். கோமா நிலையில் இருந்த அவரை நண்பர் விஜயகாந்த் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். "நண்பா நீ எழுந்து வருவாய்" என்று உருக்கமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.…
-
- 0 replies
- 806 views
-
-
கிழக்கு கடற்கரை பகுதிகளில் இன்றுமுதல் மீன்பிடி தடைக்காலம் ஆரம்பம் April 15, 2019 கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழகத்தில் 15 ஆயிரம் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது மீன்களின் இனவிருத்திக்காக மத்திய-மாநில அரசுகள் மீன்பிடி தடைகாலம் ஒன்றை நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்தி வருகின்ற நிலையில் கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் ஆரம்பமாகின்றது கிழக்கு கடற்கரை பகுதிகளில் தடைகாலம் முடிந்த 15 நாட்களில் மேற்கு கடற்கரை பகுதிகளான கேரளா, கர்நாடகம், கோவா, மராட்டியம்…
-
- 0 replies
- 353 views
-
-
சென்னையில் புறக்கும் ரயில் தடம் புரண்டு விபத்து: பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்! (படங்கள்) சென்னை: சென்னையில் புறக்கும் ரயில் கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கும், வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கும் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒருமுறை பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் காலை, மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில், வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு இன்று நண்பகல் 12.45 மணிக்கு பறக்கும் ரயில் புறப்பட்டு சென்றது. கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு விபத…
-
- 0 replies
- 443 views
-
-
பாம்பன் பாலத்தின் திறப்பு விழா குறித்து வெளியான தகவல். ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரத்தின் முக்கிய அடையாளமாக விளங்கும் பாம்பன் பாலம் பழுதடைந்த நிலையில் அதன் அருகிலேயே புதிய பாம்பன் கட்டப்பட்டுள்ளது. 545 கோடி ரூபாவில் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய அமைப்புடன், பழைய பாம்பன் பாலத்தின் சிறப்புகளோடே புதிய பாலமும் கட்டப்பட்டுள்ளது. முன்னதாக புதிய பாலத்தின் மீது ரயில் என்ஞின்களை விட்டு சோதனை நடத்தப்பட்ட நிலையில், இன்று கடலோர காவல்படையின் கப்பல் ஒன்றை பாம்பன் பாலத்தின் குறுக்கே விட்டு அதன் திறந்து மூடும் அமைப்பை சோதனை செய்ய உள்ளனர். ப…
-
- 0 replies
- 257 views
-
-
மாநிலங்களவை செல்லும் பெண் கவிஞர் : யார் இந்த சல்மா? 30 May 2025, 7:00 AM திமுக சார்பில் மாநிலங்களவைக்குச் செல்லவிருப்பவர்கள் பட்டியலில் ரொக்கையா மாலிக் என்கிற சல்மா என்னும் பெயரைப் பார்த்ததும் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். இவர் கவிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி. ஆனால் ஆரவாரமான அரசியலுக்கோ பரபரப்பான எழுத்துக்கோ இவரிடம் இடம் இல்லை. அதனாலேயே பலருக்கும் இவரைத் தெரியாது. ஆனால், இவரைத் தெரிந்தவர்களுக்கு இவர் மீது மரியாதை அதிகம். காரணம், அவருடைய நேர்மை, உழைப்பு, அன்பு, எழுத்துத் திறமை. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இலக்கிய உலகில் அழுத்தமான தடம் பதித்துவருபவர் சல்மா. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த இவர் தொண்ணூறுகளின் மத்தியில் எழுதத் தொடங்கின…
-
- 0 replies
- 310 views
-
-
சமூகவலைதளங்களில் கருத்துக்களை வெளியிட கருணாநிதிக்கு தடை சென்னை: தி.மு.க தலைவர் கருணாநிதி சமூகவலைதளங்களில் கருத்துகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி வாக்காளர்களை கவரும் வகையில் சில பதிவுகளை மேற்கொண்டதாகவும் அதற்காக கருணாநிதி சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.ஏற்கனவே அ.தி.மு.க., இது குறித்து புகார் அளித்திருந்தது. திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் விதிமுறைகளை மீறி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு வெளியிடுவதாக அதிமுக ஐ.டி. பிரிவு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. அதன் புகாரை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து பே…
-
- 0 replies
- 334 views
-
-
சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆவது சாத்தியமா?! - கொடநாட்டில் அ.தி.மு.க. பொதுக்குழு!? #VikatanExclusive அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் வி.கே.சசிகலா. 'எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிகளின்படி பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்றால், இப்போதைக்கு அது சாத்தியமில்லை. அ.தி.மு.க நிர்வாகிகள் பொதுக்குழுவைக் கூட்டினால், சட்டரீதியாக போராட்டங்களைத் தொடங்கும் முடிவில் கட்சியின் முன்னாள் சீனியர்கள் உள்ளனர்" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 'தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தையடுத்து, அ.தி.மு.கவில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை சின்னம்மாவால் மட்டுமே நிரப்ப முடியும்' என்று கூறி, அ.தி.மு.கவின் சீனியர்கள் செங்கோட்டையன், மதுசூ…
-
- 0 replies
- 495 views
-
-
நிலஅபகரிப்பு தொடர்பாக, திருத்தணி தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க, விஜயகாந்த், நேற்று காலை, 11:30 மணிக்கு, சிறைக்கு வந்தார். அவரது கார், சிறை வளாகத்திற்குள் செல்ல, சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால், தே.மு.தி.க., வினர், சிறைக்காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனுமதி கிடைக்காததால், விஜயகாந்த் சிறைக்கு, நடந்து சென்றார். அவருடன், திருக்கோவிலூர் எம்.எல்.ஏ., வெங்கடேசன், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., சேகர் ஆகியோர் மட்டும், அனுமதிக்கப்பட்டனர். வெயிலை சமாளிக்கும் வகையில், தர்பூசணி, வெள்ளரி, வாழைப்பழம் ஆகியவற்றை, சிறையில் இருக்கும் அருண் சுப்ரமணியத்துக்கு, எம்.எல்.ஏ.,க்கள் எடுத்து செ…
-
- 0 replies
- 452 views
-
-
234-ல் 117 தொகுதிகள் பெண்களுக்கு... சீமானின் `சீர்திருத்தம்’ எடுபடுமா?#TNElection2021 இரா.செந்தில் கரிகாலன் நாம் தமிழர் கட்சி சரிபாதி பெண் வேட்பாளர்களை நிறுத்தும் சீமானின் இந்த முடிவு, தொடர்ச்சியாக கமல்ஹாசனின் கருத்து ஒருபுறம் வரவேற்பைப் பெற்றாலும் பெரிய கட்சிகளை இவர்களுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்வது சரியல்ல என்கிற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. கடந்த 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளில், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தினார் சீமான். ஒரு தொகுதியில் மட்டும் வேட்புமனு நிராகரிக்கப்பட, 19 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வட சென்னை தொகுதியில் போட்டியிட்ட காளி…
-
- 0 replies
- 749 views
-
-
அ.தி.மு.க.,வில் கும்மாங்குத்து: வளர்மதி - நிர்மலா லடாய் அ.தி.மு.க., சசிகலா அணியில் இருந்த பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, நேற்று பன்னீர் அணிக்கு மாறினார். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நட்சத்திர பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்குவதற்கு முன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, நடிகை சி.ஆர். சரஸ்வதி, நிர்மலா பெரியசாமி ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, நிர்மலா, 'பன்னீர்செல்வம், நமக்கு எதிரி அல்ல; அவரை நம்மோடு சேர்த்தால், நன்றாக இருக்கும்; பிரச்னை தீர்ந்து விடும்' எனக் கூறி உள்ளார். அதை கேட்ட சி.ஆர்.சரஸ்வதி, 'பன்னீர்செல்வத்தை எதிரி இல்லை என்று, எப்படி கூறலாம…
-
- 0 replies
- 571 views
-
-
ஆர்.கே நகரில் ‘சாமி கும்பிட்டாச்சா’னு கேட்டா என்ன அர்த்தம் தெரியுமா? ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வரும் 12-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக டி.டி.வி. தினகரன், மருது கணேஷ், மதுசூதனன் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தினகரன் தரப்பு பணத்தை வாரி இறைத்துள்ளது. ஆர். கே. நகருக்கு விசிட் செய்த போது, 'ஓட்டுப் போடுறதுக்கு காசு வாங்குறாங்களே' என புலம்பும் மக்களை பார்க்க முடிந்தது. 'சிலர் பணத்தை வாங்கினாலும் என் விருப்பப்படியே வாக்களிப்பேன் ' என்கின்றனர். 'கிடைக்கும் பணத்தை ஏன் விடணும்' என்பது பலரது கருத்து. புதிதாக யார் தலை தெறிந்தாலும்... …
-
- 0 replies
- 397 views
-
-
ரூ.89 கோடி எப்படி வந்தது? - ஐ.டி ரெய்டுக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டவர்கள்! ஜூவி லென்ஸ் ‘ஆபரேஷன் வி.’ இதுதான் அமைச்சர் விஜயபாஸ்கரை குறிவைத்து நடந்த ரெய்டுகளுக்கான சங்கேத வார்த்தை. சேகர் ரெட்டி குரூப் இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடவடிக்கை எடுப்பதற்கு முன் ரகசியமாகத் தயாரிக்கப்பட்ட லிஸ்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர், ஓ.பன்னீர்செல்வம் குடும்பப் பிரமுகர்... இப்படி சிலரின் பெயர்கள் இருந்தன. கடைசி நிமிடத்தில் டெல்லி ரெட் சிக்னல் காட்டியதால், விஜயபாஸ்கர் தப்பித்தார். ஆனாலும், அவர் மீது எப்போதும் கண்காணிப்பு இருந்தது. ‘கூவத்தூர் சொகுசு விடுதியில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது ஒவ்வொருவருக்கும் சுமார் மூன்று கோடி ரூபாய் பணம், ஒர…
-
- 0 replies
- 933 views
-
-
கட்சி, ஆட்சியை விட்டு... சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறோம்.. அதிமுக (அம்மா) திடீர் அறிவிப்பு! அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பு அளித்து சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனான ஆலோசனைக்குப் பிறகு இதனை அவர் அறிவித்தார். ஒரு குடும்பம் கட்சியிலும் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தொண்டர்களின் விருப்பத்தையும், தமிழக மக்களின் ஒட்டு மொத்த விருப்பத்தையும் நிறைவேற்ற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுமென்றால் டி.டி.வி. தினகரன் குடும்பத்தைச் ஒதுக்கி வை…
-
- 0 replies
- 250 views
-
-
நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிட்டதற்காக, ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது டிவி சேனல் ஒழுங்கு முறை அமைப்பு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நித்யானந்தா-ரஞ்சிதா தனியறையில் இருப்பதுபோன்ற ஆபாச வீடியோ ஒன்றை தனியார் சேனல் ஒன்று ஒளிபரப்பி மக்களுக்கு அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அந்த படுக்கையறைக் காட்சிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என மாறி மாறி ஒளிபரப்பியது அந்த சேனல். கடந்தாண்டு மார்ச் 21ஆம் தேதி இதே காட்சிகளை ஸ்டார் விஜய் டிவி, தனது நடந்தது என்ன - குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது.இதையடுத்து இந்த வீடியோ காட்சிகளை வெள…
-
- 0 replies
- 1.8k views
-
-
செப்.21, 2016: ஜெயலலிதா பொதுவாழ்வின் கடைசி நாள் இன்று செப்டம்பர் 21, 2016 அன்று தலைமைச் செயலகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 200 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜெயலலிதா மறைந்து 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இன்றைய நாள் அவருக்கு மிக முக்கியமான நாளாகும். ஜெயலலிதா முதல்வராக தான் மறைவதற்கு முன் கடைசியாக கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி நடந்தது கடந்த ஆண்டு இதே நாளில்தான். செப் 21, 2016-ம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா கோட்டையில் போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதற்கு பல மாதங்கள் முன்பே தனது உடல் நிலை காரணமாக செயல்…
-
- 0 replies
- 292 views
-
-
தமிழகம் வரும் இலங்கை அகதிகளுக்கு உதவ தீர்மானம்! இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமிழகத்துக்கு அகதிகளாக வருபவா்களுக்கு உதவ தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக மண்டபம் முகாமில் உள்ள 147 குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. மன்னாா், வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 16 போ் கடந்த 22 ஆம் திகதி அகதிகளாக தனுஷ்கோடி சென்றனா். அவா்கள் மண்டபம் முகாமில் உள்ள தனிமைப்படுத்தப்படும் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மேலும் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழா்கள், தமிழகம் வரத் தயாராக உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்திருந்தனா். …
-
- 0 replies
- 422 views
-