Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவு March 15, 2019 போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் 2009ஆம் ஆண்டு என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் போலி என்கவுன்டரில் தன் கணவரைக் கொன்றதாக சுந்தரமூர்த்தியின் மனைவி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையகத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அத்துடன் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஆணையக நீதிபதி கொல்லப்பட்டவரின் உடலை பரிசோத…

  2. போலி கடவுச்சீட்டுகள் தயாரித்த இலங்கைப் பெண் உட்பட மூவர் சென்னையில் கைது இலங்கையர்களை இந்தியர் போன்று போலி கடவுச்சீட்டுகள் தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைகத்த சந்தேக நபர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . 38 வயதான பெண் ஒருவர் உட்பட இலங்கையர் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த போலிக்கடவுச்சீட்டு தயாரிப்பதற்காக 10 லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை பெண் சுற்றுலா வீசா மூலம் இந்தியா சென்று விசா முடிந்த பின்னரும் அங்கிருந்தநிலையில்; போலி கடவுச்சீட்டை பெறுவதற்காக முகவர் ஒருவரின் உதவியை பெற்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்…

  3. சென்னையில் போலியாக கால் சென்டர் நிறுவனம் நடத்தி, குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாக, லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த 12 பேரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை சித்தாலபாக்கத்தில், ஃபீனிக்ஸ் கால் சென்டர் என்ற நிறுவனம் ஆறு மாத காலமாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த கால்சென்டர் மூலம், பொதுமக்களின் செல்போன்களுக்கு அழைத்து குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். வங்கிக்கு நேரடியாக சென்றாலும் கிடைக்காத வட்டி விகிதத்தில் தங்கள் நிறுவனத்தால் கடன் பெற்று தர முடியும் என ஆசையைத் தூண்டியுள்ளனர். பணத் தேவை உள்ள பலரும் அவர்களை நம்பி, மோசடி கும்பல் கேட்ட ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி விவரம் உள்ளிட்ட தகவல்களை கொடுத்…

    • 0 replies
    • 443 views
  4. கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு செல்போன்களும் ஒரு காரணமாககூறப்படும் நிலையில், ஒரே விலாசத்தில் ஏராளமான சிம் கார்டுகளை விற்பனை செய்துள்ளதாக கோவையில், சிம் கார்டு விநியோகிப்பாளர் கிருஷ்ணன் என்பவர், துணிச்சலாக போலீசுக்குப் போய் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புகாரைக் கொடுத்தார். "தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் கூட்டத்தை விரிவுபடுத்தி, விற்பனை இலக்கை எட்ட ஒருவருடைய இருப்பிட சான்றிதழை மட்டுமே பயன்படுத்தி கணக்கிலடங்கா சிம்கார்டுகளை புழக்கத்தில் விடுகின்றன... ஒரே காலனியில் மட்டும் 584 போலி சிம் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன " என்று குமுறலுடன் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் நிலை இதுவரை என்னவாயிற்று என்றே தெரியவில்லை. கோவை செல்வபுரம் பகுதிவாசி, நாகநந்தினி, "என…

  5. போலீசாரின் வி.வி.ஐ.பி மரியாதையுடன் சிறையில் இருந்து விமான நிலையம் சென்ற ஜெயலலிதா பெங்களூர்: சிறையில் இருந்து பெங்களூர் எச்.ஏ.எல் விமான நிலையம் வரையிலும் ஜெயலலிதா வாகனம் செல்வதற்காக அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. வி.வி.ஐ.பி அந்தஸ்துடனும், பாதுகாப்புடனும் அவர் ஏர்போர்ட் சென்றார். சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அனுமதி வழங்கிய நிலையில், அந்த உத்தரவு பெங்களூர் மத்திய சிறைச்சாலை அதிகாரிகளிடம் கிடைத்த பிறகு நடைமுறைகளை முடித்துக்கொண்டு ஜெயலலிதா ரிலீஸ் செய்யப்பட்டார். இதன்பிறகு, சிறை வளாகத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, எச்.ஏ.எல் விமான நிலையத்துக்கு கார் மூலமாக ஜெயலலிதா பயணித்தார். போலீசாரின் வி.வி.ஐ.பி மரியாதையுடன் சிறையில் இருந்து விமான நிலையம் சென்ற ஜெய…

  6. போலீசையும், நீதிமன்றத்தையும் மிக கேவலமாக பேசிய ஹெச்.ராஜா - வைரல் காணொளி.! பாஜக தேசிய செயலாளரான ஹெச்.ராஜா அவ்வப்போது பகீர் கருத்துக்கள் பலவற்றை தெரிவித்துவிட்டு அது சர்ச்சையான பின்பு குறிப்பிட்ட கருத்தினை நான் தெரிவிக்கவில்லை என பின்வாங்குவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், போலீஸ் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. அது மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அழைக்கப்பட்டிருந்தார்.…

  7. போலீஸார் விரட்டியடித்த பின்னரும் மெரினாவில் உறுதியுடன் இருக்கும் இளைஞர்கள் சொல்வது என்ன? மெரினா கடற்கரை விவேகானந்தர் நினைவு இல்லம் அருகில் 7 நாட்களாக, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வந்த இளைஞர்களை 23 -ம் தேதியான நேற்று, காலை 7.30 மணிக்கு போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதில் வெளியேற்றும்போது, போலீஸாரின் சமரசத்தை ஏற்க மறுத்த இளைஞர்கள் சுமார் ஆயிரம் பேர் கடற்கரையில் தங்கியிருந்து போராடி வருகின்றனர். அவர்களை இரவு நேரத்தில் சந்தித்தோம். கடற்கரையில் போராடிக்கொண்டிருக்கும் வேலூர் கணேஷ் பேசும்போது, ‘அமைதியாக சென்று கொண்டிருந்த மெரினா போராட்டத்தைப் போலீஸார் திசைதிருப்பி விட்டு விட்டனர். கலைந்துபோக...சிறிது நேரம் கேட்டோம். அதற்குள் இளைஞர்களை…

  8. போலீஸ் எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ஆடு திருடும் கும்பல் காரணமா? 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, பூமிநாதன் திருச்சி அருகே, ஆடு திருடும் கும்பல் என்று சந்தேகிக்கப்படுவோரை துரத்திச் சென்றபோது சிறப்பு போலீஸ் எஸ்.ஐ. பூமிநாதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்கிறது போலீஸ். திருச்சி மாவட்டம், நவல்பட்டு சோழமாநகர் பகுதியில் வசித்து வந்தவர் பூமிநாதன். இவருக்கு கவிதா என்ற மனைவியும், குகன் என்ற மகனும் உள்ளனர். பூமிநாதன் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். பூமிநாதன் நேற்று சனிக்கிழமை இரவு ரோந்து பணியில்…

  9. போலீஸ் காவலில் இளைஞர் விக்னேஷ் மரணம்: பதறவைக்கும் வாக்குமூலங்கள் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 30 ஏப்ரல் 2022 படக்குறிப்பு, விக்னேஷ் சென்னையில் போலீஸ் காவலில் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ், மத்தியக் குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையை நடத்த வேண்டுமென்றும் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டுமென்றும் மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன. இந்த சம்பவத்தில் காவல்துறை நடந்துகொண்ட விதம் குறித்த பதற வைக்கும் வாக்குமூலங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 18ஆம் தேதியன்று, சென்னை புரசைவ…

  10. போலீஸ் காவலில் இளைஞர் விக்னேஷ் மரணம்: மேலும் 4 பேர் கைது 4 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் போலீஸ் காவலில் உயிரிழந்த விவகாரத்தில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு போலீஸ் காவலிலேயே சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துபோன சம்பவம் தொடர்பாக மேலும் நான்கு பேரை சிபிசிஐடி கைதுசெய்துள்ளது. ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக், தலைமைக் காவலர் குமார், ஆயுதக் காவல்படையைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் என நான்கு பேர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளன…

  11. படக்குறிப்பு, உயிரிழந்த காவலாளி அஜித் குமார் கட்டுரை தகவல் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 30 ஜூன் 2025, 04:32 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். சனிக்கிழமை இரவு அஜித்குமார் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் கடுமையாக தாக்கியதே அஜித்குமார் உயிரிழக்கக் காரணம் என்று குற்றம்சாட்டி அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மடப்புரம் கிராம மக்கள் காவல் நிலைய முற்றுகையிலும் ஈடுபட்டனர். இது தொடர்பாக 6 தனிப்படை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்க…

  12. போலீஸ் கைது: இந்த விதிகளை பின்பற்றுவது கட்டாயம் தெரியுமா? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் திருட்டு குற்றச்சாட்டில் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்கள் நடத்தப்பட்டவிதம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. ஒருவர் கைது செய்யப்படும்போது எப்படி நடத்தப்பட வேண்டும்? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் தில்லை நகரில் வசிக்கும் குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, அதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்று பேரும் ஞாய…

  13. மதுரை: பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், ஒளிந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் மதுரை புதூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர் திருமங்கலம் அருகே பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி சென்ற வழியில், ஆலம்பட்டி பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு மற்றும் பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்டவற்றில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த வழக்குகளில், மதுரையைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், மேலப்பாளையம் பன்னா இஸ்மாயில் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுரை புதூர் பகுதியில், போலீஸ் பக்ருதீன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஒர…

  14. போலீஸ் மூலம் சசி குடும்பம் அச்சுறுத்துகிறது ஜெ., அண்ணன் மகள் தீபா குற்றச்சாட்டு ''சசிகலா குடும்பத்தினர், காவல் துறை மூலம், என்னை அச்சுறுத்த பார்க்கின்றனர்,'' என, ஜெ., அண்ணன் மகள் தீபா குற்றம் சாட்டினார். சென்னையில், நேற்று அண்ணாதுரை நினை விடத்தில், அஞ்சலி செலுத்த, தீபா சென்றார். அவரது காரை, வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழி யில் அனுமதிக்க, போலீசார் மறுத்தனர். தீபா ஆதரவாளர்கள், அவர்களுடன், கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின், அவரை அனுமதித் தனர்.இதேபோல், சென்னை, ஆர்.கே.நகரில், தீபா கலந்து கொண்ட நிகழ்ச்சிகளுக்கும், இடையூறு ஏற்படுத்தினர். இது குறித்து, தீபா …

  15. சென்னை: மேல்நிலைப் பள்ளிகளில் செவிலியர் பயிற்சிப் பிரிவில் பயின்ற மாணவிகளுக்கும் சமவாய்ப்பு வழங்கி, அரசு செவிலியர் கல்லூரிகளில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "2013-2014 ஆம் கல்வி ஆண்டிற்கான செவிலியர் பட்டயப் படிப்பில் ஏற்பட்ட குளறுபடிகளால் 10,000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவில் பயின்ற மாணவர்கள் மட்டுமே செவிலியர் பட்டயப் படிப்பில் சேர முடியும் என்ற நிலையை மாற்றி, கடந்த ஆட்சிக் காலத்தில் மேல்நிலையில் எந்தப் பிரிவில் பயின்றவர்களும் சேரலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்தக் கல்வி ஆ…

  16. ம. நடராசனின் பெசன்ட் நகர் வீட்டில் என்ன நடக்கிறது? #OpsVsSasikala #VikatanExclusive தமிழகம், எப்போதையும்விட அதிகமாகவே சத்தமாக இருக்கிறது. பிப்ரவரி 7 - ம் நாள் முன்னிரவு மெல்லிய குரலில் பன்னீர்செல்வம் பேசியது இப்போது எங்கும் எதிலும் எதிரொலித்து பெருஞ்சத்தமாக மாறி இருக்கிறது. கட்சி அரசியலை விரும்பாத, எப்போதும் இந்தக் களேபரங்களிலிருந்து விலகி நிற்க விரும்புபவர்கள்கூட இந்தச் சத்தத்திலிருந்து தப்பவில்லை. ஒன்று இந்தச் சத்தத்தின் குரலாக இருக்கிறார்கள்... இல்லையென்றால், செவியாக இருக்கிறார்கள். சரி... இவ்வளவு சத்தத்துக்கு நெருக்கமானவர், இந்தச் சத்தம் ஜனிக்கும் மூலத்தின் ஒருவர்... இப்போது எப்படி இருக்கிறார்... என்ன செய்துகொண்டிருக்கிறார்...? கால்நூற்றாண்…

  17. ம.தி.மு.க மாநாட்டில் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்! இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு, இந்திய மத்திய அரசாங்கம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு திருச்சியில் நேற்று நடைபெற்ற ம.தி.மு.க மாநாட்டில் 12 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இராமேஸ்வரம் அருகே, பாம்பனிலிருந்து விசைப்படகில், கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 10 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த, செப்டம்பர் மா…

  18. சென்னை: ம.தி.மு.க. 20ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை கட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. தி.மு.க.வில் இருந்து விலகிய வைகோ, ம.தி.மு.க. என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கி இன்றுடன் 20 ஆண்டு ஆகிறது. இந்த நிலையில், 20 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் வைகோ தாயகத்தில் கழகக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி, பொதுமக்கள் முன்னிலையில் சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி முன்னோடிகளும், தோழர்களும், முன்னணியினரும் கலந்து கொண்டனர் http://news.vikatan.com/article.php?module=news&aid=14564

  19. சென்னை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ம.ந.கூ., ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியதாவது: தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் மக்களுக்கு பணம் வழங்கின. ம.ந.கூ., மட்டுமே வாக்காளர்களுக்கு பணம் அளிக்காமல் தேர்தலை சந்தித்தது. ஊழலில் இருந்து தமிழகத்தை மீட்க ம.ந.கூ., தொடர்ந்து போராடும். http://election.dinamalar.com/detail.php?id=11674

    • 0 replies
    • 480 views
  20. ம.ந.கூட்டணியில் வைகோ, ஜி.ஆர். தேர்தல் போட்டியில் இல்லை! - யாருக்கு எத்தனை இடங்கள்? தேமுதிகவுக்கு 124 தொகுதிகள் போக, 110 தொகுதிகள் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கிய மதிமுக, சி.பி.எம், சி.பி.ஐ, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய ஐந்து கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. தேமுதிக தவிர மற்ற நால்வருக்கும் சம உரிமை என்றளவில் 110 தொகுதிகளை கணக்கிட்டு பிரித்துக் கொடுத்தால், மூன்று கட்சிக்கு தலா 27 தொகுதிகளும், ஏதாவது ஒரு கட்சிக்கு 29 தொகுதிகளும் கொடுக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) கட்சியைப் பொறுத்தவரையில் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வென்றால் கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தேர்தலில் போட்டி…

  21. "நாம் தமிழர் கட்சி என்பது தி.மு.க-வுக்கு எதிரான ஒரு கட்சி. அதை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர, அதுதான் அவர்களின் உண்மையான நோக்கம்." தி.மு.கவும், நாம் தமிழர் கட்சியும் இணையான கட்சிகள் இல்லை என்றாலும் இணையத்தில் நடக்கும் மோதலில் உக்கிரம் உச்சமாகத்தான் இருக்கும். சீமான் கட்சியினர் மற்றும் தி.மு.கவினர் இடையே இலைமறைகாயாக இருந்த மோதல், இப்போது `முரசொலி' தலையங்கம் மூலமாக முச்சந்திக்கு வந்துள்ளது. தி.மு.க-வின் `முரசொலி’ ஏட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, அவருடைய பெயரைக் குறிப்பிடாமலேயே கடுமையாக விமர்சித்து கடந்த வாரம் தலையங்கம் வெளியானது. ``நாம் தமிழர் என்பதற்காக உலக உரிமையைப் பெற்றுள்ளதாகக் கருதிக்கொண்டு கர்ஜனை என்று …

  22. மகஇகவில் இருந்து மருதையன் விலகல்! மின்னம்பலம் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், புதிய கலாச்சாரம் இதழின் ஆசிரியராகவும் இருந்த மருதையன் இயக்கம் சம்பந்தப்பட்ட தனது அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக இன்று (பிப்ரவரி 24) அறிவித்திருக்கிறார். கடந்த 35 ஆண்டுகளாக ம.க.இ.க வின் செயலராக தமிழகத்தின் அரசியல் சக்திகள், வாசகர்கள், ஊடகத்தினர் மற்றும் மக்களிடையே அறிமுகமாகியிருக்கின்ற மருதையனுடன், மாநில செயற்குழு உறுப்பினரான நாதனும் தனது விலகலை அறிவித்துள்ளார். 24.2.2020 தேதியன்று கூட்டப்பட்ட ம.க.இ.க. மாநில செயற்குழுவின் அவசரக்கூட்டத்தில் மருதையனும், நாதனும் தமது விலகலை முன் வைத்தார்கள். ஆனால்,மாநில செயற்குழு தோழர்கள் அதனை ஒருமனதாக நிர…

  23. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேள்வி - பதில் வடிவில் வெள்ளிக்கிழமை கருணாநிதி அறிக்கையாக வெளியாகியுள்ளது.. கேள்வி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக தாங்கள் எதுவுமே கூறவில்லையே பதில்: இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு. நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஒரு பத்திரிகை தலையங்கம் எழுதியுள்ளது. கே: முக்கியமான வழக்குகளை மாநிலம் விட்டு வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவம் உண்டா ப: உச்சநீதிமன்றம் பல வழக்குகளை வேறு மாநில நீதிமன…

  24. மகனுக்குத் திருமணம் – ரொபர்ட் பயஸ் பரோல் மனு தாக்கல் September 26, 2019 இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரொபர்ட் பயஸ், தன் மகன் தமிழ்கோ-வின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்தற்காக 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இலங்கை அகதியான தான், ராஜிவ் கொலை வழக்கில் 1991ல் முதல் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும், கைதுக்கு பின், தன் மனைவியும், மகனும் இலங்கை சென்று விட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் தற்போது நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன் திருமண வயதை எட்டி விட்டதால், தந்தை என்ற முறையில் அவருக்கு திருமண ஏற்பாடு செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சிறைத்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.