தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
சென்னை: ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை ஏற்படுத்தி கொடுக்க அனைவரும் இணைந்து போராட முன்வரவேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் டெசோ இயக்கத்தினர் இலங்கை தமிழர் பிரச்னையில் 4 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத்தருவதோடு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் ராஜபக்சே பங்கேற்க அனுமதி தரக் கூடாது எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. குழு இந்தியாவில் விசாரணை நடத்த அனுமதித்து விசா வழங்க வேண்டும். ஈழத் தமிழர்க…
-
- 2 replies
- 741 views
-
-
புதைந்துபோன வரலாறு https://www.facebook.com/video/video.php?v=721854244552491 மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. குஷ்பு யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார…
-
- 0 replies
- 2.5k views
-
-
சென்னை: தமிழர் பிரச்சனையில் திமிர் பிடித்து கருத்து கூறும் சுப்பிரமணியன் சுவாமி தமிழ்நாட்டுக்குள் நுழைந்தால் கடுமையான போராட்டத்தை நடத்துவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்ட அறிக்கை: ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு எப்படி நடந்துகொள்ளும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்து விளக்கியதும், சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கும், அவர்களின் படகுகளை திருப்பித் தராமல் இலங்கை அரசு பிடித்து வைத்திருப்பதற்கும் தான் கூறிய யோசனைகளே காரணம் என்றும் சுப்ரமணியன் சுவாமி பேசியிருப்பது தமிழர்களிடையே, குறிப்பாக அன்றாடம் பாதிப்பிற்குள்ளாகும் தமிழக மீனவர்களிடையே கடும் கோவத்தையும், கொந்தள…
-
- 0 replies
- 649 views
-
-
தமிழர்களின் படகுகளை நான்தான் பிடித்துவைக்க சொன்னேன்.!! மாண்புமிகு "Dr.சுப்ரமணிய சாமி" , தந்தி டிவிக்கு பகீர் பேட்டி..!! https://www.facebook.com/video/video.php?v=618585048257812
-
- 5 replies
- 1k views
-
-
மத்திய அரசு ஆசிரியர் தின பெயர் மாற்றத்தை திரும்ப பெற வேண்டும்-வைகோ வலியுறுத்தல்! ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, தனது கடும் உழைப்பாலும், முயற்சியாலும் கல்லூரி பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் திகழ்ந்து, தந்துவ மேதையாக உயர்ந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆவார். அவர் நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று அப்பதவிக்குப் பெருமை சேர்த்தார். செப்டம்பர் 5 ஆம் நாள் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. எதிர்கால இளம் தலைமுறையை பிஞ்சு பருவத்திலிருந்தே ஆற்றுப்படுத்தி, சமூகத்தில் உயர்ந்தவர்களாக ஏற்றம் பெற கல்விச் செல்வத்தை வாரி…
-
- 0 replies
- 421 views
-
-
குறைவான சம்பளம், கடுமையான வேலை நேரங்கள், ஓய்வெடுக்க முடியாத சூழல், பாலியல் சீண்டல்கள்… “குவைத் தெருக்கள்ல கார்ல வெச்சு என்னை ரெண்டு லட்ச ரூபாய்க்குக் கூவிக் கூவி வித்தாங்க மேடம். என்னால மறக்க முடியல… ஏதாவது பண்ணணும் மேடம்” - இறுகப் பற்றியிருந்தபோதும் கைகளின் நடுக்கம் குறையவில்லை நதியாவுக்கு. “நீங்கதான் தப்பிச்சு வந்துட்டீங்களே…” கேள்வியை மிக அவசரமாக இடைமறிக்கிறார் நதியா. “ஆமா! ஆனா, அங்க இன்னும் நிறையப் பேர் இருக்காங்க. எல்லாரும் தப்பிக்கணும் இல்ல?” வெளிநாடுகளில் வீட்டு வேலை பார்க்கும் பெண்களின் பிரச்சினைகள்பற்றிய அந்தக் கருத்தரங்கில் நதியா போலப் பல கண்ணீர்க் குரல்களைக் கேட்க முடிந்தது. மிக மோச மான சூழலிலிருந்து தப்பித்து வந்து ஒரு மாதமே ஆன நிலையில், இப்போதும் பானுமதிய…
-
- 0 replies
- 529 views
-
-
எம்.ஏ.எம். ராமசாமி பதினெட்டு வருடங்களுக்கு முன்பு செட்டிநாடே திருவிழாக் கோலம் காண நடந்தது அந்த வைபவம். ஊருக்கெல்லாம் விருந்து வைத்து, ஒக்கூர் சேக்கப்பச் செட்டியார் மகன் ஐயப்பனை முத்தையாவாக்கி சுவீகாரம் எடுத்துக்கொண்டார் தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார். அப்படி சுவீகாரம் கொண்ட மகனே இப்போது வளர்ப்புத் தந்தைக்கு எதிராக வரிந்து கட்டுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. எம்.ஏ.எம்.ராமசாமியின் கொள்ளுத் தாத்தா முத்தையா செட்டியார் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் தனக்கென ஒரு செல்வாக்கை தக்க வைத்திருந்தார். தங்களுக்கு அனுசரணையாக நடந்துகொண்ட அவருக்கு ‘ராஜா சர்’ பட்டத்தை வழங்கியது பிரிட்டிஷ் அரசு. அதுமுதல் அந்தக் குடும்பத்தை ‘ராஜா வீடு’ என்று அழைத்தே பழகிப்போனது செட்டிநாட்டுச் சீமை. செட்…
-
- 0 replies
- 2.9k views
-
-
அண்ணா பிறந்த நாளை ஒட்டி, அடுத்த மாதம், 15ம் தேதி, திருவள்ளூரில் ம.தி.மு.க.,வின் மாநில மாநாடு நடக்கிறது. ம.தி.மு.க.,வினரைப் பொறுத்த வரையில், இந்த மாநாட்டு முடிவுகளை ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். ஏனென்றால், இம்மாநாட்டில் தான், 2016 சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து, வைகோ அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிரான முழக்கம் : தமிழகத்தில், பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, ம.தி.மு.க., தடம் மாறுகிறதோ என்ற சந்தேகத்தை, அக்கட்சித் தலைவர் வைகோவின் தொடர் அறிக்கைகள் ஏற்படுத்துகின்றன. பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா அன்று துவங்கிய, மத்திய அரசுக்கு எதிரான அவரது முழக்கம், தொடர்ந்து கொண்டே போகிறது. இதுகுறித்து, ம.தி.மு.க., வட்டாரம் மேலும் கூறியதாவது: இந்தி மொழிக்கு மு…
-
- 0 replies
- 560 views
-
-
நீங்கள் செய்த கர்மம் சீக்கிரம் திரும்பி வந்துவிட்டது: சன் டிவியை சாடிய ஹைகோர்ட் நீதிபதி! சென்னை: கேபிள் டிவி தொழிலில் ஏகாதிபத்தியமாக செயல்பட்டு மற்றவர்களை பாதிப்படைய செய்தீர்கள்...அந்த கர்மம் சீக்கிரம் திரும்பி வந்துவிட்டது என்று சன் டிவி குழுமத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் சாடியுள்ளார். சன் குழுமத்திற்கு சொந்தமான கல் கேபிள்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் உரிமம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விட்டல் சம்பத் குமரன் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். அப்போது அவர், கல் கேபிள்ஸ் ந…
-
- 2 replies
- 737 views
-
-
தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் இந்தியாவின் முன்னாள் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது மூத்த சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் மலேசிய நிறுவனம் மேக்ஸிஸுக்கு விற்கப்பட்டது தொடர்பில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை விசாரித்த பின்னரே சிபிஐயின் இந்த நடவடிக்கை வந்துள்ளது. இவர்களில் ஜே.எஸ்.ஷர்மா உயிரிழந்து விட்டாலும் அவரது பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.இந்தக் குற்றப்பத்திரிக்கையில், மாறன் சகோதரர்களைத் தவிர மலேசியத் தொழிலதிபர் டி.அனந்த கிருஷ்ணன், மேக்சிஸ் நிறுவனத்தின் உயரதிகாரியான அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் மற்றும் முன்…
-
- 0 replies
- 485 views
-
-
புதுடெல்லி: ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் தொடர்பான ஆபாச இணையதளங்களை முடக்க கோரி கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது பதில் அளித்துள்ள மத்திய அரசு, இது போன்ற ஆபாச இணையதளங்களின் சர்வர்கள் வெளிநாடுகளில் உள்ளது. இதனால் கட்டுப்படுத்துவதில் சில பிரச்னைகள் உள்ளன. இத்தகைய பிரச்னைகளை தீர்க்க கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. இதனையடுத்து, பிரச்னை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் அறிக்கையை 6 வார காலங்களில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. http:…
-
- 0 replies
- 398 views
-
-
2 லட்சம் அப்பாவி தமிழர்களின் இரத்தம் குடித்த கொடூரன் ராஜபக்சேயின் LYCA திரைப்பட நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படத்தை தடை செய் என இனம் காக்கும் வீரத்தமிழர்கள் , அண்ணன் பிரபாகரன் தம்பிகள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/33488/57//d,article_full.aspx
-
- 0 replies
- 472 views
-
-
அடுத்தடுத்த அடிகள்... சரியக் காத்திருக்கிறது சன் டிவி சாம்ராஜ்யம்!! சென்னை: தென்னிந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமானது அடுத்தடுத்த நெருக்கடிகளால் மிகப் பெரியவை சரிவை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருப்பதாகவே கூறப்படுகிறது. திமுக ஆதரவுடன் தொடங்கப்பட்ட சன் டிவி. அதன் பின்னர் அத்தனை அதிகார பலத்தையும் பயன்படுத்தி வலுவான அஸ்திவாரம் போட்டு பிரம்மாண்ட சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டது. இந்த சன் டிவி சாம்ராஜ்யத்தை மக்கள் அதிகம்பேர் விரும்புகிறார்கள் என்ற கட்டமைப்பை உருவாக்க கேபிள் தொழிலிலும் குதித்தது. எஸ்.சி.வி. என்றாலே இதர கேபிள் ஆபரேட்டர்கள் நடுநடுங்கும் வைக்கும் அளவுக்கு ஏகபோகம் கொண்டதாக இருந்தது எஸ்.சி.வி. ஊடக நிறுவனங்கள் நடுக்கம்.. கேபிள் டிவி ஆபரேட்டர்க…
-
- 3 replies
- 3.3k views
-
-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலை வராக முன்னாள் மத்திய நிதியமைச் சர் ப.சிதம்பரத்தை நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமிப்பது குறித்து காங்கிரஸ் தலைமை தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. தலைவர் பதவியை பிடிப்பதற்காக ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், திரு நாவுக்கரசர் ஆகியோர் களத்தில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் வட்டாரத்திலிருந்து ‘தி இந்து’விடம் பேசியவர்கள் கூறியதாவது: தலைவர் பதவிக்காக பலபேர் களத்தில் இறங்கியுள்ள நிலையில் ப.சிதம்பரம், வாசன், சுதர்சன நாச்சி யப்பன் இந்த மூவருக்கும் இடையில் தான் கடும்போட்டி நிலவுக…
-
- 1 reply
- 459 views
-
-
தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) அவசரக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெறவுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் சுபவீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய நிலையில், டெசோ கூட்டம் அவசரமாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=134343365125334559#sthash.CeLtkxI5.dpuf
-
- 0 replies
- 539 views
-
-
திருவனந்தபுரம்: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மங்களம் என்ற மலையாள நாளேட்டுக்கு ருக்ஷனா என்ற பெண் அளித்த ஆடியோ பேட்டியில் கூறியுள்ளதாவது: முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தாமஸ்தான் ப.சிதம்பரத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பின்னர் சிதம்பரமே டெல்லியில் இருந்து என்னை அழைக்கத் தொடங்கினார். கே.வி.தாமஸ், ப.சிதம்பரம், நடிகர் கலாபவன் மணி உள்ளிட்ட பலரும் என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர். சென்னையைச் சேர்ந்த ரீனா என்ற பெண்தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இவ்வாறு ருக்ஷனா தனது ஆடியோ பேட்டியில் கூறியுள்ளார். Topics: kerala, sex scandal, chidambaram, கேரளா, ப சிதம்பரம் …
-
- 6 replies
- 1.2k views
-
-
பதினான்கு வயதே நிரம்பிய விசாலினி, தன் வயதுக்கே உரிய உற்சாகத்துடன் தோழிகளோடு தெருவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறார். தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்ட் எனச் சொல்லப்படும் பாளையங்கோட்டையில் உள்ள சங்கர் நகரில் இருக்கிறது விசாலினியின் வீடு. இந்தச் சிறுமியின் சாதனைகளை அறிந்தால் ஆச்சரியத்தில் வாய்பிளந்து நிற்பீர்கள். இவர் ஐந்து சாதனைகள் செய்திருக்கிறார். அதில் ஒன்று உலக சாதனை. அதென்ன? ஐ.க்யூ எனும் (IQ- Intelligent Quotient) நுண்ணறிவுத் திறன் சோதனையில் உலகிலேயே அதிக ஐ.க்யூ அளவாக 225 புள்ளிகள் பெற்று விசாலினி சாதித்துக் காட்டியிருக்கிறார். உலக அளவிலான ஐ.க்யூ வில் கின்னஸ் சாதனை படைத்திருப்பவர் கிம் யுங் யோங் (Kim Ung-Yong) என்ற சீனர். இவரது ஐ.க்யூ அளவு 210. அதைக் கடந்த ஆண்டு, ஐ.க்ய…
-
- 6 replies
- 659 views
-
-
இப்படிதான் இருந்தது ஐஸ் அவுஸ் சென்னை நகரம் பிறந்த நாள் கொண்டாடப்போகிறது. சென்னை நகரத்தின் நிறுவன நாள் ஆகஸ்டு 22 , 1639 என கருதப் படுகிறது. -தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள சிறிய நிலப்பகுதி அன்று தான் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கை மாறியது. பிரான்சிஸ் டே, அவருடைய துபாஷி (இரு மொழி பேசுபவர்) மற்றும் அவர்களுடைய மேலதிகாரி அண்ட்ரூ கோகன் விஜய நகர நாயக்கர்களுடன் இந்தப் பரிமாற்றத்தை நடத்தினர். பிறகு, கோட்டையைச் சுற்றி குடியிருப்புகள் உருவாகத் தொடங்கின. அருகருகே இருந்த கிராமப் பகுதிகள் இணைக்கப் பட்டன. பழைய, புதிய சிறு நகரங்கள் இணைந்து சென்னை மாநகரமாக உருவாகியது. இன்று சென்னை மாநகரம் கல்வி,மருத்துவம், ஆட்சித்துறை, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு எனப் பல துறை…
-
- 10 replies
- 5.9k views
-
-
தோழர் செங்கொடி நினைவாக இன்று காலை 10 மணியளவில் அங்காள பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் ரத்ததான முகாம் நடை பெற்றது இதில் பேரறிவாளன் தயார் அற்ப்புதம்மா மற்றும் மாணவர்கள் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். www.pathivu.com/news/33385/57//d,article_full.aspx
-
- 0 replies
- 458 views
-
-
பாராளுமன்ற தேர்தலை ஒட்டி நடந்த நாம் தமிழர் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய சீமான், தேர்தலுக்கு பிறகு புலிபாய்ச்சல் என்ற வேலைத் திட்டத்தை வைத்து சீறிப்பாயப் போவதாக அறிவித்திருந்தார். புலிக்குட்டி எதுவும் சீறிப்பாய்வது போல தெரியவில்லை. ஆனால், சீமானை பற்றி பல பூனைக்குட்டிகள் தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புலிப்பார்வை என்ற திரைப்பட வெளியீட்டு விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பச்சமுத்துவுடன் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசிய சீமான், ‘பெருமகனார் – பெருந்தமிழர்’ பச்சமுத்துவின் வள்ளல் தன்மையை விதந்தோதி புகழ்ந்துள்ளார். பச்சமுத்து ஏழை மாணவர்களை படிக்க வைக்கிறாராம். உலகமே காறி துப்பும் ஒரு கல்விக் கொள்ளையனான பச்சமுத்துவை பற்றி எஸ்.ஆர்.எம் மாணவர்களிடமோ இல்லை பணம் கட்டிய…
-
- 0 replies
- 674 views
-
-
சென்னை: நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்க முழு ஒத்துழைப்பு வழங்கிடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், "ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், அந்த நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழித்தாலே முன்னேறிவிடும். அதனால்தான், தே.மு.தி.க.வை, நான் துவக்கியபோதே லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்போம், அதன் மூலம் வறுமையை ஒழிப்போம் என்ற கொள்கை முழக்கத்தை வெளியிட்டு அந்த கொள்கையில் இன்றுவரை உறுதியாக இருக்கின்றோம். பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா மாநிலத்தில் பேசிய போது, ஊழல் அபாயகரமானது, புற்றுநோயை விட ஊழல் மிக வேகமாக பரவி வருகிறது. ஊழல் நாட்டை அழித்துக்கொண்டு வருகிறது. அ…
-
- 1 reply
- 469 views
-
-
கடந்த 2 வருடமாக இழந்த மருத்துவப் படிப்பை மீண்டும் பெறுவதற்காக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தற்கொலைப் போராட்டாத்தில் நேற்று இறங்கி மாணவர்கள் போராடி உள்ளனர் . டிடி மருத்துவ கல்லூரி மாணவர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை முன் சுமார் 75 மாணவிகள் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றனர். அங்குவந்த காவல் துறையினர் வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக அம் மாணவிகளை பேருந்தில் ஏற்றிச் சென்று மின்ட்யில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் அடைத்து வைத்து மாணவிகளை துன்புறுத்தியதாக தெரிவித்தள்ளனர். இந்த செயலுக்கு காவல்துறையை கண்டித்து மாணவர்களின் நூதன போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர். இதன் போது தமிழக அரசுக்கு ஒரு சிறிய விண்ணப்பம் ஒன்றும் கொடுத்துள்ளனர்:- எங்களின் மருத்துவப் படிப்பு தொடர வழிவக…
-
- 0 replies
- 358 views
-
-
இந்த வயசுல இனிமே நான் என்னத்தைப் படிச்சு பரீட்சை எழுதுவது? எனச் சிலர் சலித்துக் கொள்வார்கள். அவர்கள் 100 வயதை அடைந்த முதியவர் ஒருவர் முனைவர் பட்டம் பெறுவதற்காகப் பல்கலைக்கழகம் செல்கிறார். படிப்பதற்கு வயது ஒரு எல்லை கிடையாது என அவர் கூறுகிறார் என்று கேள்விப்பட்டால் என்ன செய்வார்கள்?. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த போலோராம் தாசு என்பவர் தனது 100-வது பிறந்தநாளை கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததன் மூலம் கடந்த ஆண்டு கொண்டாடினார் அவர்தான் இந்தியாவின் மிக வயதான மாணவர். “என் மகன் 55 வயதில் முனைவர் பட்டம் பெற்றார், என்னால் ஏன் முடியாது?” என திரு தாஸ் வினவினார். 1930 -ம் ஆண்டில் தனது 19 -வது வயதில் இவர் ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடிச் சிறை சென்றவர். பின்னர் ஆசிரியராக, …
-
- 4 replies
- 591 views
-
-
அண்மையில் பாலச்சந்திரன் உள்ளிட்ட சிறுவர்களை போராளிகளாக சித்தரிக்கும் தமிழக திரைப்படமான “ புலிப்பார்வை” யின் வெளியீட்டிற்கு நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் சென்று ஆசிர்வாதம் வழங்கியிருந்ததது மட்டுமல்லாமல் சிறுவர்களை போராளிகளாக புலிகள் வைத்திருந்தார்கள் என தவறாக சித்தரிக்கும் திரைப்படத்தை தடை செய்யச் சொல்லி கோசம் எழுப்பிய மாணவர்களும் மிருகத்தனமாக தாக்கபட்டிருந்தார்கள். “புலிப்பார்வை”யின் சில காட்சிகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கபட்டு சிங்களவர்கள் மத்தியில் பரப்புரை வெகு விமர்சையாக ஆரம்பிக்கபட்டுவிட்டது. பாலச்சந்திரன் ஒரு போராளி என்றும் அவன் சண்டையில் கொல்லபடப்டதாகவும் சிங்களவர்கள் மத்தியில் பரப்புரை செய்யபட்டுவருகிறது. பாலச்சந்திரன் ஒரு போராளி என்பதை தமிழ்நாடே ஏற்றுக்கொண்டுள…
-
- 0 replies
- 721 views
-
-
சில ஊர்களின் முழுமையான & மிக பழைய பெயர்கள் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்காக.. சில ஊர்களின் முழுமையான & மிக பழைய பெயர்கள் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்காக. தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது வென்கல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது எருமையூர் என்ற தமிழ் பெயர் தான் இன்று மைசூர் என்று அழைக்கப்படுகிறது ,எருமை என்பதை வடமொழியில் மகிசம் என்று சொல்வார்கள்.எனவே தமிழ் பெயரை எடுத்துவிட்டு மகிசூர் என்று மாற்றி பின்னது அது மைசூர் என்றானது குவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்பட…
-
- 0 replies
- 2k views
-