தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
புதுடெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அளித்த பிரிவு உபசார விருந்தில் விருந்தில் ராகுல் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து, அவரை அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. மேலும் ஒருவேளை காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்று ஆட்சியமைத்தாலும், மன்மோகன் சிங் மீண்டும் பிரதமர் ஆகப்போவதில்லை. அவர் வருகிற 17 ஆம் தேதியுடன் பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதனால் மன்மோகன் சிங் நேற்று தமது அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் மற்று…
-
- 1 reply
- 515 views
-
-
கூடங்குளம் அணு உலையில் விபத்து: 6 பேர் காயம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 6 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுஉலை 1ல் இருக்கும் டர்பைன் கட்டிடத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, அங்கிருந்த வால்வில் ஏற்பட்ட கசிவால், சுடு நீர் 6 பணியாளர்கள் மீது பட்டது. இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. இவர்கள் அனைவரும் முதலில் கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு உலை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த ஆறு பேரில் ராஜன், பவுல் ராஜ், செந்த…
-
- 1 reply
- 428 views
-
-
யாரோ உங்களிடம் கொடுத்த 1,000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகமா? உற்றுப்பார்த்தும் தடவிப் பார்த்தும் திருப்பிப் பார்த்தும் அது நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று கண்டுபிடித்து விடலாம். அருகில் உள்ள 1,000 ரூபாய் நோட்டு படத்தை உற்று நோக்குங்கள். வழிகாட்டும் ஒளி ரூபாய் நோட்டின் முன்பக்கத் தில் இடதுபுறம் உள்ள பூ வேலைப் பாடு ஒளியைப் பாய்ச்சுவதன் மூலம் ஊடுருவிப் பார்க்கக் கூடியது. நோட்டின்மீது வெளிச்சம் படும்படியாக வைத்துக்கொண் டால், நல்ல நோட்டாக இருந்தால் அதில் அந்த ரூபாய் நோட்டுக் கான எண் தெரியும். பூ வேலைப் பாடுக்கு அருகில் உள்ள வெள்ளை வெற்றிடத்தில் மகாத்மா காந்தியின் உருவமும், நோட்டின் எண்ணும் நீரோட்ட வடிவில் தெரியும். வெளிச்சத்துக்கு எதிராக இதை நன்கு பார்க்…
-
- 0 replies
- 1.9k views
-
-
தன்னை உயிருக்குயிராக காதலிப்பதாக கூறிய காதலி, திடீரென பெற்றோர் சொல்படி திருமணம் செய்துகொண்டதால், ஆத்திரமடைந்த காதலன், காதலிக்கும் போது தான் செய்த செலவை திருப்பித் தரவேண்டும் என போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. ஹைதராபாத் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அந்த இருவரும் முதலில் நண்பர்களாக பழகினர். பின்னர் நட்பு காதலாக மாறியது. இருவரும் சுமார் 2 ஆண்டுகளாக பூங்கா, திரையரங்கம், ஷாப்பிங் மால்கள், கோயில், குளங்கள் என சந்தோஷமாக சுற்றினர். காதலன் தன் அன்பின் அடையாளமாக காதலிக்கு பல்வேறு பரிசுப் பொருட்களையும் வழங்கினாராம். இந்நிலையில் அப்பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை…
-
- 7 replies
- 861 views
-
-
சென்னை: மத்தியில் நரேந்திர மோடி ஆட்சியமைக்க ஆதரவளிப்பது குறித்து தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே முடிவு செய்யப்படும் என்று கொடநாட்டில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சுமார் ஒன்றரை மாத காலம் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா, கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி நடந்த தேர்தலில் வாக்களித்த பின்னர், 27ஆம் தேதி சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாட்டிற்கு சென்றார். அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை ஜெயலலிதா கவனித்து வந்தார். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை மறுதினம் (16ஆம் தேதி) வெளிவர உள்ள நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா, இன்று கொடநாட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பகல் 2.38 மணிக்கு கோவை விமான நிலையம்…
-
- 1 reply
- 482 views
-
-
நெல்லை: காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை! எக்ஸிட்போல் முடிவால் வேதனை!! நெல்லை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால், மனமுடைந்த நெல்லை காங்கிரஸ் பிரமுகர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நெல்லை அடுத்த பேட்டையை சேர்ந்தவர் அருணாசலம் வயது 40. இவருக்கு ஆறுமுக செல்வி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அருணாசலம், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தின் பொறுப்பாளராக உள்ளார். நேற்று இரவு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை அருணாசலம் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது, காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றும், ராகுல்காந்தியின் வெற்றி வாய…
-
- 7 replies
- 755 views
-
-
(கோப்புப் படம்) முதல்வர் சித்தராமையா தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று கன்னடர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில் பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சித்தராமையா பேசியதாவது: கன்னடர்கள் தங்கள் தாய் மொழியை மிகவும் அலட்சியமாக அணுகுகிறார்கள். ஆங்கிலத்தை மதிக்கும் அளவுக்கு கன்னடத்தை மதிப்பதில்லை. தாய்மொழி மீது இயல்பாக வரவேண்டிய பற்றை, அரசு கட்டாயப்படுத்தி புகட்ட வேண்டியுள்ளது. தமிழர்களிடம் இருந்து தாய்மொழிப் பற்றை கன்னடர் கள் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் தங்கள் தாய் மொழியை உயிரைவிட உயர் வாக நினைக்கிறார்கள். அவர் களைப் பார்த்து கன்னடர்கள் தங்கள் தாய்மொழியை எப்படி பெருமைப் படுத்…
-
- 4 replies
- 616 views
-
-
இலங்கையில் உள்ள செல்போன் கோபுரங்களின் சிக்னல் தனுஷ்கோடி வரை எட்டுவதால் கடத்தல் கும்பல்களுக்கு கடற்படையினரிடமிருந்து தப்புவதற்கு வசதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1978 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்திலும், தலைமன்னாரிலும் 100 மீட்டர் உயரத்தில் டிரான்ஸ்மிஷன் கோபுரம் அமைக்கப்பட்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொலைபேசி சேவை அளிக்கப்பட்டது. 1983-ல் இலங்கையில் உள்நாட்டு போர் தீவிரமடைந்தபோது இந்த கோபுரங்கள் மூலம் தொலைபேசி சேவையை வழங்குவது தடைபட்டது. பின்னர் 1988-ல் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு சென்றபோது மீண்டும் அந்த கோபுரங்கள் செயல்படத் தொடங்கின. இந்த நிலையில், 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் தொலைதொடர்பு துறை தனியார் மயமாக்கப்பட்ட பின்னர், பிரபல இந்திய தனியார் செல்ப…
-
- 1 reply
- 541 views
-
-
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன், அ.தி.மு.க.,- - தி.மு.க.,விடம், தே.மு.தி.க., வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பேரம் நடத்தி வருவதாக பரவியிருக்கும் செய்தி, அக்கட்சி தலைமையை, கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தே.மு.தி.க., தலைமையால் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது முதலே, சில தொகுதிகளில் பிரச்னை எழுந்தது. நாமக்கல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் மாநில மாணவரணி செயலர் மகேஸ்வரன், போட்டியில் இருந்து விலகி, பின், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.கடலூர் தொகுதிக்கு பேராசிரியர் ராமானுஜம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் செலவுக்கு நிதி ஆதாரம் இல்லாததால், அவரை மாற்றி விட்டு ஜெயசங்கரை வேட்பாளராக விஜயகாந்த் அறிவித்தார். திருநெல்வேலி தொகுதிக்கு தமிழகத்தில் ஆள் கிடைக்காதத…
-
- 0 replies
- 600 views
-
-
மிஸ் கூவாகம் 2014: விஜயவாடா சாதனா தேர்வு – ராதிகா சரத்குமார் கிரீடம் சூட்டினர். விழுப்புரம்: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் விஜயவாடாவை சேர்ந்த சாதனா ''மிஸ் கூவாகம் 2014" பட்டத்தை வென்றார். விழாவில் நடிகர் சரத்குமார், ராதிகா ஆகியோர் பங்கேற்று கூவாகம் அழகிக்கு கிரீடம் சூட்டி பாராட்டினர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் திருநங்கைகள் வழிபடும் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. சித்திரை திருவிழா. உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவிற்காக ஆண்டுதோறும் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் கூடுவது வழக்கம். 18 நாட்கள் திருவிழா. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்த…
-
- 0 replies
- 5k views
-
-
நெல்லை: பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் வாலிபால் போட்டியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ இறங்கி விளையாடிய கலிங்கப்பட்டி வையாபுரியார் அணி வெற்றி பெற்றது. கலிங்கப்பட்டி வையாபுரியார் நினைவு கைப்பந்தாட்டக் கழகம் சார்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இடையிலான வாலிபால் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 2 ஆவது நாளாக நேற்று நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் 10 அணிகளும், லீக் முறையில் நடைபெற்ற போட்டியில் 4 அணிகளும் பங்கேற்றன. இப்போட்டியினை மதிமுக பொதுச்செயலரும், வையாபுரியார் நினைவு கைப்பந்துக் கழகத் தலைவருமான வைகோ தொடங்கி வைத்தார். முதல் சுற்றில் ஏர்வாடி எல்.வி. விளையாட்டுக் கழக அணியும், தச்சை ராயல் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில் ஏர்வாடி எல்.வி. அணி வெற்றி பெற…
-
- 0 replies
- 1k views
-
-
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் வரும் 14ம் தேதி சித்ரா பவுர்ணமியையொட்டி, கடலில் ஒரே நேரத்தில் சூரியன் அஸ்தமனம், சந்திரன் உதயம் ஆவதை காணலாம். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் வரும் 14ம் தேதி (புதன்கிழமை) சித்ரா பவுர்ணமி அன்று மாலை சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும் அபூர்வம் நிகழ்கிறது. இந்த காட்சியை பார்ப்பதற்கு தமிழகம் மற்றும் பலவேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து குவிவார்கள். இந்த அபூர்வ காட்சி இந்தியாவில் கன்னியாகுமரியில் மட்டுமே பார்க்க முடியும். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் காலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை, 10 மணிக்கு சிறப்பு அப…
-
- 0 replies
- 701 views
-
-
புதுடெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. ஜல்லிகட்டு போட்டிகளுக்கு தடைவிதிக்கக்கோரி விலங்குகள் நலவாரியத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள், ஜல்லிக்கட்டு பேரவை, விலங்குகள் நல வாரியம் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்றும், காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்றும் தமிழக அரசு சார்பில் வாதம் செய்யப்பட்டது. அதேபோல், விதிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகின்றன என்ற வாதமும் முன் வைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்கவும் காளைகள் துன்புறுத்தப்படுகின்றதா? என்பதை உறுதிப்படுத்தவும் விலங்குகள் ந…
-
- 21 replies
- 2.1k views
-
-
மாற்றம்காணுமா இந்தியாவின் அணுகுமுறை? "...........இலங்கை அரசாங்கம் ஒரு அதிகாரப்பகிர்வு திட்டத்துக்கு இணங்காமல் இந்தியாவினால் எதையும் செய்யமுடியாது. எனவே கொழும்பை இணங்க வைத்தல் என்பதே இந்தியாவினது வெளிவிவகாரக் கொள்கையின் முக்கியமான சவாலாக இருக்கும். அரசியல் தீர்வு ஒன்றுக்கு, அதிகாரப்பகிர்வு ஒன்றுக்கு கொழும்பு இணங்கி விட்டால், அடுத்து இந்தியாவினது வெளிவிவகாரக் கொள்கைகளை சுலபமாகவே கையாண்டு விடலாம். அத்தகைய நிலை ஏற்பட்டால், அடுத்தகட்டத்தில் சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் செல்வாக்கிழந்து விடக்கூடும். எனவே இந்தியாவினது வெளிவிவகாரக் கொள்கை என்பது, இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை அடிப்படையாக கொண்டதாகவே அமைய முடியும். அதனை விலத்தியதான ஒரு கொள்கையை இந்தியா வகுக்…
-
- 1 reply
- 441 views
-
-
பாறையில் கண்டறியப்பட்ட ஓவியங்களை ஆய்வு செய்யும் ஆய்வாளர். விழுப்புரத்தை அடுத்த சிறுவாலை என்ற கிராமத்தில் 5000 ஆண்டு களுக்கு முந்தைய தொல் பழங்கால ஓவியங்கள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன. உலகெங்கிலும் வரலாற்றுக்கு முந்திய கால மனிதர்களின் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கற்கால மனிதர்களின் கலை உணர்வையும் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் வாழ்க்கை முறையையும் சித்தரிக்கும் இம்மாதிரியான தொல்பழங்கால ஓவியங்கள் தமிழகம் முழுதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலை, செத்தவரை போன்ற இடங்களில் கிடைத்த ஓவியங்கள் தனிச் சிறப்புக்குரியவை. அவற்றின் காலம் கி.மு 3000 முதல் கி.மு 7000 வரை என அறிஞர்கள் கருது கின்றனர். அதைப்போன்ற த…
-
- 0 replies
- 546 views
-
-
வெளி மாநில இளம்பெண்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து, அவர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களிடம் அனுப்பி பாலியல் தொழில் செய்து வந்த 5 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ஆன்லைன் மூலம் சில புரோக்கர்கள் பாலியல் தொழில் செய்து வருவதாகவும், இதற்காக வெளி மாநில இளம்பெண்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து பெரும் பணம் சம்பாதிப்பதாகவும் காவல்துறைக்கு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் மேற்பார்வையில் பாலியல் தடுப்பு பிரிவு காவல்துறை விசாரணையில் இறங்கினர். நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி…
-
- 0 replies
- 900 views
-
-
சென்னை: பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் கைது வழக்கில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 2 பேரது பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் கடந்த 30ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டான். இதைத் தொடர்ந்து அவனை 3 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், தீவிரவாத அமைப்புகளுடன் தமக்கு உள்ள தொடர்புகளை ஜாகீர் உசேன் ஒப்புக் கொண்டான். மேலும், சென்னை உயர் நீதிமன்றம், டிவி ஒளிபரப்பு கோபுரம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அமெரிக்க துணை தூதரகம் ஆகியவற்றை தகர்க்க திட்டமிட்டிருந்தாகவும், பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ அமைப்பின…
-
- 0 replies
- 362 views
-
-
சென்னை: பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் கைது வழக்கில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 2 பேரது பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் கடந்த 30ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டான். இதைத் தொடர்ந்து அவனை 3 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், தீவிரவாத அமைப்புகளுடன் தமக்கு உள்ள தொடர்புகளை ஜாகீர் உசேன் ஒப்புக் கொண்டான். மேலும், சென்னை உயர் நீதிமன்றம், டிவி ஒளிபரப்பு கோபுரம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அமெரிக்க துணை தூதரகம் ஆகியவற்றை தகர்க்க திட்டமிட்டிருந்தாகவும், பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ அமைப்பின…
-
- 0 replies
- 194 views
-
-
து. மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்து கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம், 15 வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில், "கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும் அணுமின் நிலையத்தில் பின்பற்றப்படவில்லை" எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, கூடங்குளம் அணு உலையில் தரமற்ற உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதாடினார். மேலும், கூடங்குளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அணு சக்தி ஒழுங்குமுறை ஆணைய …
-
- 0 replies
- 283 views
-
-
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பில் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை, உளவு பார்க்க மட்டுமே என்னை அனுப்பி வைத்தனர் என்று ஜாகீர்உசேன் கூறியுள்ளார். சென்னையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐ உளவாளியான ஜாகீர் உசேனிடம் காவலில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக ஜாகீர் உசேனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்களை ஜாகீர்உசேன் தெரிவித்துள்ளார். குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பில் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறியுள்ள ஜாகீர்உசேன், உளவு பார்க்க மட்டுமே என்னை அனுப்பி வைத்தனர் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வாக்குமூலம் ஒன்றையும் அளித்துள்ளார். அதில், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் தான் என்னை மூளைச் சலவை செய்து இதற…
-
- 1 reply
- 638 views
-
-
புதுடெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்து கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம், 15 வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைத்தில் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் அணுமின் நிலையத்தில் பின்பற்றவில்லை எனவும் மனுதாரர் சார்பில் குற்றச்சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே முடிந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நா…
-
- 0 replies
- 315 views
-
-
சென்னை: சென்னையில் மேம்பால சுவற்றில் மாநகர பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் பயணிகள் 15 பேர் படுகாயம் அடைந்தனர். ஐயப்பன்தாங்கலில் இருந்து வள்ளலார்நகருக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு 37ஜி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தேவராஜன் என்பவர் ஓட்டி வந்தார். கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மேம்பாலத்தில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றி்ல் மோதியது. இதில், பயணிகள் 15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து மோதிய வேகத்தில் பயணி ஒருவரின் கால் முறிந்தது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநர் செல்…
-
- 0 replies
- 559 views
-
-
சென்னை: சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் 2 நபர்கள் நடமாடுவதாக மர்ம நபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த 1ஆம் தேதி காலை சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சுவாதி என்ற ஆந்திர இளம்பெண் பலியானதோடு, 14 பேர் படுகாயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து மறுநாள் (2ஆம் தேதி) ஆவடி ரயில் நிலையத்திற்கும், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவன்யூ வணிக வளாகம் உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (6ஆம் தேதி) சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் 2 நபர்கள் நடமாடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்ட்ரல் ரயில் நிலைய உதவி மையத்துக்கு ஒரு தொலை…
-
- 0 replies
- 269 views
-
-
புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. முல்லை பெரியாறு அணை மிகவும் பலவீனமாக உள்ளது. எனவே, அதன் நீர்மட்டத்தை உயர்த்தக்கூடாது என கேரள அரசு தடை விதித்தது. இந்நிலையில் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்த உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதை தவிர்க்க அணை பாதுகாப்பு சட்டத்தை கேரள அரசு கொண்டு வந்தது. மேலும், முல்லை பெரியாறு அணை கேரளாவுக்கு சொந்தம் எனவும் கூறியது. இதையடுத்து, கேரள அரசை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் தமிழகத்துக்கும் சொந்தமான இடங்களில் உள்ளது. எனவே, கேரளா மட்டும் அணைக்கு சொ…
-
- 0 replies
- 254 views
-
-
வேலூர்: ஈழத்தமிழர் செந்தூரனுக்கு வேலூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து செங்கல்பட்டு முகாமில் உள்ள தனது குடும்பத்தினரை பார்க்க சென்றார். கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட ஈழத்தமிழர் செந்தூரன், தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தார். தொடர்ந்து 22 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த செந்தூரனுக்கு கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால், செந்தூரனை சிறைத்துறை அதிகாரிகள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பார்க்க வந்த அவரது மனைவி மங்கையர்க்கரசியை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. அதையடுத்து மங்கையர்கரசி தனது கணவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்…
-
- 3 replies
- 649 views
-