தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
தனிமனித கோபங்களை தவிர்த்து செயல்பட வேண்டிய பேரிடர் காலம்: கமல்ஹாசன் உருக்கம் நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், இந்த நேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட வேண்டிய நேரம், மதங்கள் தனிமனிதக் கோபங்களையும் தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர் காலம் என்று உருக்கமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சற்று நாட்களுக்கு முன் வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி அல்ல. மின் அ…
-
- 0 replies
- 684 views
-
-
மாண்புமிகு முதல்வர் 'அம்மா' வுக்கு ஒரு தமிழனின் பகிரங்க கடிதம்! மாண்புமிகு முதல்வர் 'அம்மா' புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு வணக்கம்! இந்தக் கடிதத்தின் வார்த்தைகளை நீங்கள் கருத்தில்கொள்ளாமல், அது எந்த உணர்வில், எந்த மனநிலையில் எழுதப்பட்டதோ, அதை மட்டுமே நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் அம்மா. ஆம்... ’அம்மா’தான். வெறும் உதட்டசைவில் மட்டுமல்ல; மனதின் அடியாழத்திலிருந்தே சொல்கிறேன். நீங்கள் எனக்கு அம்மாதான்... உங்களது மந்திரிகள், கட்சிக்காரர்களைப் போல் உங்களிடமிருந்து எனக்கு எந்த தேவையும் இல்லை. இருந்தாலும் நீங்கள் எனக்கு அம்மாதான். முதலில் உங்களுக்கு என் இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் நெடுநாள் வ…
-
- 0 replies
- 1.4k views
-
-
விஜயகாந்திடம் ரூ.500 கோடி கருணாநிதி பேரம் பேசியது உண்மை: அடித்து சொல்லும் வைகோ! மதுரை: தே.மு.தி.க.வை தனது கூட்டணிக்கு இழுப்பதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி 500 கோடி ரூபாய் பேரம் பேசியது உண்மை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டி உள்ளார். இது குறித்து மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், ம.ந.கூ. ஒருங்கிணைப்பாளருமான வைகோ செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தேமுதிகவிடம், திமுக பேரம் பேசியது உண்மை. தே.மு.தி.க.வுக்கு 80 தொகுதிகளும் 500 கோடி ரூபாயும் தி.மு.க. தருவதற்கு முன்வந்தது என்ற செய்தி ஒரு நாளிழில் வெளிவந்துள்ளது. அது உண்மையுமாகும். நான் கேள்விபட்டது, தி.மு.க. சார்பாக 500 கோடி ரூபாயும், 80 சீட்டும் தருவதாக கலைஞர் ஒரு துண்டு சீட்ட…
-
- 0 replies
- 510 views
-
-
சென்னை: கோடை வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. இன்னும் இந்த வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் துவங்கிய நாள் முதல் காலையிலேய அதிக வெப்பத்தை உணர முடிகிறது. இந்த ஆண்டு வெப்பம் அதிகம் இருக்கும் என வானிலை மையம் அறிவித்தது போல் பல நகரங்களில் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இன்று நண்பகல் 12 மணி நேர நிலவரப்படி சென்னையில் 40 டிகிரி செல்சியஸ், அதாவது 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதிகப்பட்சமாக இன்று திருத்தணியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தது. மேற்கில் இருந்து வறண்ட காற்று வீசுவதால் , வடக்கு மாவட்டங்களில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் வெப்பம் 2 முதல் 4 டிகிரி அதிகரிக்க வாய்ப்ப…
-
- 0 replies
- 417 views
-
-
ஈழத்தமிழ் அகதிகளின் கண்ணீர்க் கதை ஒரே மொழி, ஒரே இனம், இலங்கையில் இருந்து தமிழகத்தில் தஞ்சமடைந்ததால் அவர்கள் அகதிகள். இலங்கையில் யுத்தம் ஓய்ந்து விட்டது. காற்றில் கலந்த கந்தக வாசனை இப்போது இல்லை. முள்வேலிகள் இன்னும் திறக்கப்படவில்லை. சொந்த நாட்டில் சிறைப் பிடிக்கப்பட்ட கைதிகளைப் போல் ஒரு பரிதாப வாழ்க்கை. தமிழகத்திற்கு புலம் பெயர்ந்தவர்கள், உளவுப் பிரிவின் கண்காணிப்பு, கியூ பிராஞ்சின் கிடுக்குப் பிடி, ஈழத்தமிழர் முகாமை விட்டு வெளியே போகவர என எந்த நடமாட்டமும் பதிவேடுகளில் பதிவு, இரை தேடிப்போன பறவை கூட்டிற்கு வருவதுபோல சாயங்காலம் ஆறு மணிக்குள் கூட்டிற்கு திரும்பவேண்டிய இக்கட்டான ஒரு வாழ்க்கை. எந்த ஒரு தேவைக்கும் மற்றவர்களின் கையை எதிர்பார்த்து நிற்கும் நிலை…
-
- 0 replies
- 872 views
-
-
மிஸ்டர் கழுகு : காவிரி... ஜெயலலிதா... கள்ள மெளனம்! கழுகார் அனுப்பிய தலைப்பு வாசகங்கள் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தன. லே அவுட்டுக்குத் தலைப்பை அனுப்பிவிட்டு கழுகாருக்காகக் காத்திருந்தோம். 2011, 2015-ம் ஆண்டுகளுக்கான டைரிகளைக் கையோடு கொண்டுவந்த கழுகார் அதனைப் புரட்டிவிட்டு பேச ஆரம்பித்தார். ‘‘சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, முதல்வராக பன்னீர்செல்வம் இருந்தபோதுதான் மேக்கேதாட்டூவில் கர்நாடகம் அணை கட்ட களமிறங்கியது. இதை எதிர்த்து அப்போது விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட ‘பந்த்’தில் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றாகக் கைகோர்த்தன. பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வும் அந்த பந்தில் பங்கேற்கவில்லை. ‘பந்த்’தில் பங்கெடுக்காமல் போனால் தங்க…
-
- 0 replies
- 737 views
-
-
அம்மாவின் அதிரடி ஆட்டம் பலிக்குமா? சந்திர. பிரவீண்குமார் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூடுவது வழக்கம். இந்தக் கூட்டத்தில் கட்சிப் பிரமுகர்களை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேரடியாகச் சந்தித்து "ஆலோசனை" செய்வதால் பொதுக்குழுவை கட்சிப் பிரமுகர்களும் தொண்டர்களும் ஆவலுடன் எதிர்நோக்குவது வழக்கம். அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெயலலிதா இந்த கூட்டத்தில் அதிரடியான அறிவிப்புகளை வெளியிடுவதால் பரபரப்புக்குப் பஞ்சமே இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னால் நடந்த பொதுக்குழுவிலும் அறிவிப்பு அமர்க்களப்படுத்தியது. இந்தக் கூட்டத்தில்தான், 'வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க உட்பட யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாது.…
-
- 0 replies
- 850 views
-
-
ஜெயலலிதா சமாதியில் 68 கிலோ ஜெ. உருவ இட்லி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் 68 கிலோ எடையில் ஜெ. உருவ இட்லி அமைக்கப்பட்டுள்ளது. ஆர்.கே. நகர் தொகுதி சமையல் தொழிலாளர்கள் இதை உருவாக்கியுள்ளனர். ஜெயலலிதா உருவ இட்லியை அனைவரும் காணும் வகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்துச் செல்லும் மக்கள் பூக்கள் தூவி, வணங்கிச் செல்கின்றனர். http://tamil.thehindu.com/tamilnadu/ஜெயலலிதா-சமாதியில்-68-கிலோ-ஜெ-உருவ-இட்லி/article9435546.ece
-
- 0 replies
- 494 views
-
-
`வேளாண் சட்டங்களை எதிர்ப்பதே சட்டவிரோதமா?' - எடப்பாடிக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள் கு. ராமகிருஷ்ணன்ம.அரவிந்த் விவசாயிகள் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதகங்கள் குறித்து பொதுக்கூட்டங்கள் நடத்தக்கூட அனுமதி மறுக்கப்படுவதாக விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள். மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக்கோரி, நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இக்கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த பல வாரங்களாக நடத்தி வரும் தொடர் போராட்டம், உலக அளவில் கவனம் ஈர…
-
- 0 replies
- 743 views
-
-
சசி ‘ஸ்டைல்’! - சசி... அன்று முதல் இன்று வரை... அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் உடைகளில் தங்களுக்கென ஒரு பாணி வைத்துக்கொள்வது பொதுவான வழக்கம். கருணாநிதிக்கு மஞ்சள் துண்டு, ஜெயலலிதாவுக்கு பச்சைப் புடவை, எம்.ஜி.ஆருக்கு தொப்பி... தற்போது, அரசியலில் அடியெடுத்துவைக்கும் சசிகலாவும் அப்படி ஓர் அடையாளத்தோடு வந்திருக்கிறார். அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அதில், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சான்றிதழை சசிகலாவிடம் கொடுப்பதற்காக போயஸ் தோட்டம் சென்றார், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அப்போதுதான் சசிகலாவின் உடையில் அந்த மாற்றங்…
-
- 0 replies
- 1.1k views
-
-
எம்.எல்.ஏ.,க்களை மீட்க கவர்னரிடம் ஸ்டாலின் மனு சென்னை:'சிறை வைக்கப்பட்டுள்ள, எம்.எல்.ஏ.,க்களை மீட்க வேண்டும்' என, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். சென்னை, ராஜ்பவனில், நேற்று இரவு, கவர்னரை ஸ்டாலின் சந்தித்தார். தமிழக அரசு நிர்வாத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினார்.பின், ஸ்டாலின் அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தலை நடத்த, தமிழக அரசுக்கு விருப்பமில்லை என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகத்தில், ஒன்பது மாதங்களாக, அரசு பணிகள் முடங்கியுள்ளன. தேர்தல் முடிந்து, இதுவரை எந்தப் பணிகளும் நடக்கவில்லை. …
-
- 0 replies
- 349 views
-
-
தன்னை தன் காதலனிடம் இருந்து பிரிக்கவும், காதலனை கொலை செய்யவும் தனது தந்தை முயற்சி செய்வதாக இயக்குனர் சேரனின் மகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பதில் வல்லவர் சேரன். அவரது மனைவி செல்வராணி. அவர்களுக்கு நிவேதா மற்றும் தாமினி(20) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சேரன் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சேரனின் 2வது மகள் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மீடியா 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் இன்று காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். தனது தந்தை தன்னையும், தனது காதலன் சந்துருவையும் பிரிக்க முயற்சிப்பதாக புகார் அளித்தார். அதன் பிறகு அவர் …
-
- 0 replies
- 376 views
-
-
சசிகலா கொடுத்த சீக்ரெட் பிளான்! - தினகரனின் அதிரடி பின்னணி #VikatanExclusive சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு சென்னை வந்த தினகரன், அதிரடியாக அ.தி.மு.க நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அடுத்து, கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற, தினகரன் காய் நகர்த்திவருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். சிறையிலிருக்கும் சசிகலாவை சில நாள்களுக்கு முன் தினகரன் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு சென்னை வந்த அவர், தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். 'ஆகஸ்ட் புரட்சி' என்ற பெயரில், கட்சியில் அதிரடிகளைத் தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக, தன்னுடைய ஆதரவாளர்களுக்குக் கட்சியில் பொறுப்புகளைக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இது…
-
- 0 replies
- 424 views
-
-
இலங்கை கடற்படைக்கு பயிற்சி கொடுப்பதை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று சென்னையில் உள்ள இந்திய கப்பற்படை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது பேசிய அவர், இலங்கையில் நடந்த போரின்போது இந்திய அரசு 2009ம் ஆண்டு இலங்கைக்கு ஆயுத உதவிகளை செய்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது. இதனை ராஜபக்ஷவே வெளிப்படையாக 'விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு இந்தியா உதவி செய்யவில்லை. போரை நடத்தியதே இந்திய அரசுதான்' என்று கூறினார். நேரு காலத்தில் இருந்தே தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம்தான் இழைத்து வருகிறது. இதில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்…
-
- 0 replies
- 440 views
-
-
தமிழர் விரோத போக்கு... உங்க ஓனரே வந்தாலும் பேட்டி தர முடியாது: "டைம்ஸ் நவ்"க்கு வைகோ பதிலடி!! விருதுநகர்: தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிடுவதால் டைம்ஸ் நவ் ஆங்கில சேனலுக்கு பேட்டியளிக்க முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைகோவின் ஃபேஸ்புக் பக்கத்தில் மதிமுக ஆதரவாளர் ஒருவர் பதிவு செய்துள்ள தகவல்: வைகோ நேற்று விருதுநகரில் இருந்து சூரன்பட்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இடையில் வழிமறித்த டைம்ஸ் நவ், பத்திரிகை பெண் நிருபர் வைகோவிடம் பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் பேட்டியளிக்க வைகோ மறுப்பு தெரிவித்துவிட்டார். தொலைக்காட்சி உரிமையாளரே வைகோவிடம் பேட்டியெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள…
-
- 0 replies
- 873 views
-
-
வயது மூப்பு காணரமாக தி.மு.க.வின் தலைவர் கலைஞர் ஒய்வில் அமர்ந்து விட்ட நிலையில், தி.மு.க.வின் செயல் தலைவராக தி.மு.க.வை வழி நடத்தி வருகிறார் ஸ்டாலின். முதுமையான நிலையில் கலைஞரைச் சந்தித்த ம.தி.மு.க. செயலாளர் வைகோ நெகிழ்ச்சியானார். இனிவரும் காலங்களில் ம.தி.மு.க., தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றும் இது தேர்தலானாலும் சரி, எந்த ஒரு களமானாலும், மக்கள் பணியின் பொருட்டு தி.மு.க. செயல்படும் வழியில், இணைந்து போராடும் என வைகோ அறிவித்தது. ம.தி.மு.க.வின் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அந்தக் கூட்டணியைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள் ம.தி.மு.க. தொண்டர்கள். குறிப்பாக நெல்லை மாவட்ட ம.தி.மு.க.வின் தொண்டர்கள் பல ஸ்டெப்கள் முன்னேறி வாழ்த்தியதோடு, கற்பனையையும் தாண்டிய வரிகளோ…
-
- 0 replies
- 503 views
-
-
அவர் எப்படி உலகத் தமிழர்களிடம் நிதி வசூல் செய்தாரோ அப்படித்தான் நானும் அவர்களிடம் வசூலித்து வருகிறேன் காவிரி, ஸ்டெர்லைட் நியூட்ரினோ என போராட்டங்களால் தமிழகமே கொந்தளித்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டங்களில் பங்ெகடுத்து கொண்டே தனிக்களத்தில் மோதி கொண்டிருக்கிறார்கள் சீமானும் வைகோவும். பிரபாகரனோடு சீமான் இருக்கும் புகைப்படம் கிராபிக்ஸ். அதை பயன்படுத்தி சீமான் உலக நாடுகள் முழுவதிலும் புலிகளின் பிரதிநிதி என்று கூறி பணம் வசூலிக்கிறார். புலிகளோடு வேட்டைக்கு போனதாகவும், ஆமைக்கறி தின்றதாகவும் பொய் சொல்லி வருகிறார் என சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் …
-
- 0 replies
- 938 views
-
-
அப்பீலை அச்சிடவே 3 மாதங்கள் ஆகும்னு 'அம்மா'வின் சட்டக்குழுவுக்கு தெரியாதா? Thursday, October 9, 2014, 15:16 பெங்களூர்: மேல்முறையீடு என்பது சினிமா நோட்டீஸ் அல்ல உடனே அச்சிடுவதற்கு. பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அச்சிட்டு, சரிபார்த்து, எண்ணிக்கை அளிக்க வேண்டும். மேல்முறையீடுகளை தயாரிக்கவே உயர் நீதிமன்றத்திற்கு 3 மாதங்கள் ஆகும் என மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 27ம் தேதியில் இருந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அப்பீலை அச்சிடவே 3 மாதங்கள் ஆகும்னு 'அம்மா'வின் ச…
-
- 0 replies
- 595 views
-
-
அதிவிரைவு தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தான் ! - உலக சாதனை நிகழ்த்திய சென்னை மாணவி By DIGITAL DESK 5 23 JAN, 2023 | 02:43 PM அதிவேக தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தானில். சென்னையைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா, குறைவான கால அவகாசத்தில் ஓடி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இவரது சாதனையை ’இந்தியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ (INDIAN BOOK OF WORDL RECORD) அங்கீகரித்து, அவருக்கு உலக சாதனை பட்டத்தை வழங்கி கெளரவித்துள்ளது. இன்றைய சூழலில் உலகளவில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு, அவை உலக சாதனைக்கான புத்தகத்தில் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் ஸ்கேட்டிங் எனப்படும் காலில் சக்கரங்களைக் கட்டிக்கொண்ட…
-
- 0 replies
- 344 views
- 1 follower
-
-
கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிக் சூடு – தமிழ்நாட்டு மீனவர் உயிரிழப்பு Published By: RAJEEBAN 17 FEB, 2023 | 03:31 PM கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மேட்டூரை அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தருமபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி ஆகிய மூன்று பேரும் கடந்த செவ்வாய் அன்று காவிரி ஆற்றை பரிசல் மூலம் கடந்து மறு கரையில் உள்ள கர்நாடக வனப்பகுதியில் மான் வேட்டைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.வனப்பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த கர்நாடக வனத்துறையினர். வேட்டை கும்பலை சரணடைய செய்ய வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்ச…
-
- 0 replies
- 647 views
- 1 follower
-
-
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுவிலக்கு மராத்தான் போட்டி இன்று காலை 6.30 மணிக்கு சென்னை, அண்ணா சாலை. சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகே சிவானந்தா சாலையில் இருந்து தொடங்கியது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கொடி அசைத்து துவக்கி வைத்தார். மெரினா கடற்கரை வழியாக கலங்கரை விளக்கம் (லைட் ஹவுஸ்) அருகே நிறைவு பெறுகிறது. இந்தப் போட்டியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும் மற்றும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ மாணவியர் ஏழு பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர். இப் மதுவிலக்கு மராத்தான் போட்டியில் ஆயிரக்கனக்கானவர்கள் கலந்து கொண்டனர். சென்னையில் மதுவிலக்கு மராத்தான் போட்டி பற்றிய செய்தித் தொகுப்பு மதுப்பழக்கத்தை அறவே ஒழிக…
-
- 0 replies
- 1.4k views
-
-
Published By: DIGITAL DESK 3 27 JUN, 2024 | 05:43 PM தமிழகத்தில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகில் 18 வயதுக்குட்பட்ட 8 சிறார்கள் தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, படகு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், இந்திய அரசாங்கத்தினால் மானியமாக வழங்கப்படும் டீசல் மற்றும் மீன்பிடி அனுமதிச்சீட்டு இரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்து, மீன்பிடியில் ஈடுபடும் விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடிக்கும்போது சிறார்களும் கைது செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள்…
-
- 0 replies
- 372 views
- 1 follower
-
-
இலங்கை கடலில் மிதப்பது இந்தியர்களின் சடலங்களா? இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் சில சடலங்கள் மிதந்து கொண்டிருப்பதாக கிடைத்துள்ள தகவல்களையடுத்து அந்நாட்டு கடற்படை அப்பகுதியில் திங்கட்கிழமை இரண்டாவது நாளாகவும் தேடுதலில் ஈடுபட்டுள்ளது. இந்த சடலங்கள் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ள இராமேஸ்வரம் மீனவர்களுடைய சடலங்களாக இருக்கலாம் அல்லது தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுடைய சடலங்களாக இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளபோதிலும், அதனை உறுதிப்படுத்தும் வகையிலான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. திருகோணமலை கடலில் 10 மைல்களுக்கு அப்பால் சில சடலங்கள் மிதந்து கொண்டிருப்பதாக உள்ளுர் மீனவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸார…
-
- 0 replies
- 534 views
-
-
இதுவரை நீங்கள் தென்மாவட்டங்களில் தேர்தல் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எட்டிப்பார்த்ததுண்டா?' என்று கேள்வி எழுப்பி, அன்புமணியை கதிகலங்க வைத்தார் இளைஞர் ஒருவர்.மதுரை தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் நடைபெற்ற 'உங்கள் ஊர் உங்கள் அன்புமணி' என்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி, "இந்த அரசாங்கம் மக்களுக்காக செயல்படவில்லை. இது மக்களுக்கான அரசு இல்லை. இது ஜெயலலிதாவிற்கான அரசாங்கமாகதான் செயல்படுகிறது. மதுபானக்கடைகளின் மூலம் லாபம் சம்பாதிக்கும் நோக்கம் மட்டுமே இந்த அரசின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. திமுகவும், அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையே. இவர்களை மக்கள் ஒதுக்க வேண்டும். பாமகவை வெற்றி பெற வைப்பதன் மூலமே தமிழகத்திற்கு நல்லதொரு மோட்சம் கிடைக்…
-
- 0 replies
- 358 views
-
-
இலங்கை கடத்தவிருந்த போதைப் பொருள், வயகரா மாத்திரைகள் மீட்பு ; மூவர் கைது (ராமநாதபுரத்திலிருந்து ஆர் .பிரபுராவ்) மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ள பொலிஸார், முக்கிய கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் அருகே கடல்வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக பொலிஸாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் சிறப்புபிரிவினர் ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரையிலான கடலோரப்பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மண்டபம் …
-
- 0 replies
- 1.2k views
-