தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
திமுக-வில் காலில் விழும் கலாசாரம் வளர்கிறதா? தலைவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள்? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KALAIGNAR SEITHIGAL சமீபத்தில் திமுகவின் சில மூத்த நிர்வாகிகள் திமுக தலைவர் ஸ்டாலின், அவர் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோரின் திருமண நாளின்போது, அவர்களின் காலில் விழுந்து மரியாதை செலுத்திய காட்சிகள் வெளியாகின. முன்னதாக, திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் காலில், தஞ்சாவூர் மேயர் இராமநாதன், மேயர் அங்கி உடையில் இருந்தபோது, விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. இந்த இரண்டு காணொளிகளை தாண்டி சில நிகழ்வுகளில் திமுக த…
-
- 0 replies
- 495 views
- 1 follower
-
-
மிஸ்டர் கழுகு: பன்னீரை மாட்டி விட்ட சசிகலா! ‘‘உமது நிருபருக்கு நான் சபாஷ் சொன்னதாகச் சொல்லும்” என்றபடியே கழுகார் உள்ளே நுழைந்தார். ‘‘ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைப் படலத்தில் நடக்கும் விஷயங்களை எழுதியதற் காகவா?’’ என்று கேட்டோம். ‘ஆமாம்’ எனத் தலையாட்டிய கழுகார், ‘‘அந்த விவகாரம்தான் இப்போது ஆளும்கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது’’ என்றபடி, செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார். ‘‘ஜெ. உடல்நிலை, சிகிச்சை, மரணம் குறித்து சசிகலா தரப்பில் சொல்லியிருக்கும் தகவல்கள் அனைத்தையும் கடந்த இதழில் உமது நிருபர் எழுதியிருந்தார். விசாரணை கமிஷனில் சசிகலா சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 55 பக்க பிரமா…
-
- 0 replies
- 1.5k views
-
-
திமுக அரசு மதவாதத்திற்கு தான் எதிரானது, மதத்திற்கு அல்ல – மு.க.ஸ்டாலின் திமுக அரசு மதவாதத்திற்கு தான் எதிரானது, மதத்திற்கு அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வில்லிவாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 2 ஆயிரத்து 500 கோயில்களின் திருப்பணிகளுக்கு தலா 2 இலட்சம் வீதம் 50 கோடி ரூபாய் நிதி வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்றார். இதன்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நமது கலாச்சார சின்னமாகவும், சிற்ப திறமைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கும் கோயில்களை பேணிப் பாதுகாப்பது அரசின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1318998
-
- 0 replies
- 268 views
-
-
கோவை: கோவையில், விபத்தில் சிக்கிய காரில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கொட்டியது. அதை பொதுமக்கள் போட்டிப்போட்டு அள்ளிச்சென்றனர். ரூ.2.45 கோடி மீட்கப்பட்டது. கோவை மதுக்கரை மார்க்கெட்டில் இருந்து அரிசிபாளையம் நோக்கி நேற்று காலை 8.40 மணிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. போடிபாளையம் அருகே சென்றபோது அவ்வழியாக வந்த சொகுசு கார் மீது பஸ் மோதியது. இதில் காரை ஓட்டிய டிரைவர், கேரள மாநிலம் கோழிக்கோடுவை சேர்ந்த யாசர் அராபத் (26), முன் பக்க சீட்டில் உட்கார்ந்திருந்த ஜாபர் (35) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காரின் பின் பக்க சீட்டில் இருந்த ஜலீல் (41) என்பவருக்கு விரலில் காயம் ஏற்பட்டது. விபத்தின்போது காரில் கதவில் இருந்தும், டேஷ் போர்டில் இருந்தும் பணக்கட்டுகள் கொட்டியது. மேலும், பெரிய மூட்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அதை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த குற்றச்சாட்டின் பேரில், நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவருக்கு தற்போது நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை என்ன நடந்திருக்கிறது? கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சுஜி என்ற காசி. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக பல்வேறு பெண்களிடம் பழகி வந்த காசி, அவர்களிடம் பாலியல் ரீதியாகவும் நெருக்கமாக இருந்துள்ளார். மேலும் இதனை வீடியோ மற்றும் புகைப்படமாகவும் பதிவு செய்து வந்துள்ளார். இவர…
-
- 0 replies
- 327 views
- 1 follower
-
-
பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவார்: ரஜினிகாந்த் நம்பிக்கை! ஜம்மு-காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவதில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியதுடன், மோடியின் தலைமையின் மீதும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மும்பையில் இன்று (01) ஆரம்பமாகியுள்ள வேவ்ஸ் எனப்படும் 2025 உலக ஆடியோ விஷூவல் பொழுது போக்கு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது 74 வயதான நடிகர் ரஜினிகாந்த், மோடியை ஒரு ‘போராளி’ என்று அழைத்தார். மேலும் தற்போதைய சூழ்நிலையை ‘கருணையுடன்’ கையாள பிரதமரை நம்புவதாகவும் பகிர்ந்து கொண்டார். “நமஸ்கார், மரியாதைக்குரிய பிரதமரே, மகாராஷ்டிராவின் முதலமைச்சர் அவர்களே. பஹல்காமில் நடந்த காட்டு…
-
- 0 replies
- 280 views
-
-
திருச்சி நகரத்தில் சாலையோரம் வசித்துவந்த பெண் ஒருவரை லாரி ஓட்டுநர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட் பகுதியில் சாலையோரம் பிச்சையெடுத்து வந்த பெண் ஒருவர் உணவு மற்றும் பணஉதவியை எதிர்பார்த்து பலரிடம் உதவி கேட்டுள்ளார். அவருக்கு உதவி செய்வதாகக் கூறி லாரி ஓட்டுநர் சதீஸ்குமார் கடந்த புதன் கிழமையன்று (ஜனவரி 15) அவரை மறைவான இடத்திற்குக் கூட்டிச்சென்று அவரை பாலியல் வன்…
-
- 0 replies
- 872 views
-
-
கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருவாரூரில் அரசு தொடக்கப் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட நிகழ்வு தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஜூன் 13ஆம் தேதியன்று இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் கீரியை சமைத்துச் சாப்பிட்ட சிலர், குடிநீர்த் தொட்டியை அசுத்தம் செய்துவிட்டதாக பள்ளி நிர்வாகிகள் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? மாவட்ட ஆட்சியர் கூறியது என்ன? திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் தப்பளாம்புலியூர் ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள காரியாங்குடி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 30க்…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் சிங்கள அரசின் துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்! இலங்கைத் தீவில் யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் - நினைவு முற்றத்தை இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு சிங்கள அரசின் ஏவுதலின் பேரில் இராணுவத்தினர் இடித்துத் தகர்த்துள்ளனர். இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து இனப்படுகொலை செய்த சிங்கள அரசு, படுகொலையின் அடையாளங்கள் கூட இருக்கக்கூடாது என்பதற்காக மாவீரர் துயிலகங்களை இடித்தது. இப்போது யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்துள்ளது. இது கொடுமையிலும் கொடுமை ஆகும். ஈழத் தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி, சிங்கள இராணுவ…
-
- 0 replies
- 696 views
-
-
இலங்கை கடற்படை அத்துமீறல் - மாநிலங்களவையில் கண்டனம் மாநிலங்களவையில் இன்று திமுக மற்றும் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் மீனவர்கள் பிரச்சனையை எழுப்பினர். தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கொன்றுவிட்டதாக திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா குற்றம்சாட்டினார். இலங்கை கடற்படையால் அடிக்கடி பாதிக்கப்படுவதால் தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழிலை கைவிடுவது பற்றி யோசிப்பதாகவும் அவர் கூறினார். இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்தம்பிதுரையும் கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழக பாராளுமன்ற உறுப்…
-
- 0 replies
- 382 views
-
-
FILE குட்கா பான்மசாலாவை தடை செய்த அரசு டாஸ்மாக்கை ஏன் தடை செய்யவில்லை என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கருணாநிதியின் பெருந்தன்மை முதல்வருக்கு வர வேண்டும் என்றும் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது, வரும் 2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக மண்ணைக் கவ்வும். என் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை. வரவுள்ள மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என இதுவரை முடிவு செய்யவில்லை. திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, திமுக மற்றும் கருணாநிதி குடும்பத்தைப் பற்றி அவதூறாகப் பேசினார். ஆனால் கருணாநிதி அந்த விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார். கருணாநிதியின் பெருந்தன்மை முதல்வருக்கு வர வேண்டும். அவையில் இ…
-
- 0 replies
- 806 views
-
-
திருவொற்றியூரில் நின்று சண்டை செய்ய வந்திருக்கிறேன்; கமல் பறப்பதற்கு பிக் பாஸில் வந்த பணமே போதும்: சீமான் பேட்டி சீமான்: கோப்புப்படம் திருவொற்றியூர் மக்களிடம் ஓட்டுகளைக் கேட்பதை விட என் நாட்டைக் காப்பதுதான் எனக்குப் பெரிது என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (மார்ச் 15) அத்தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "நாங்கள் சிறந்த தொடக்கத்தை முன்வைப்போம். நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம். நாங்கள் ஆகச்சிறந்த தொடக்கத்தைச் செய்து கொண்…
-
- 0 replies
- 452 views
-
-
ஆளும் அ.தி.மு.க.,வில் பிளவு நீடிப்பு ஜனாதிபதி ஆட்சிக்கு வாய்ப்பு அதிகரிப்பு அ.தி.மு.க.,வில் பிளவு நீடிப்பதால், தமிழகத் தில், ஜனாதிபதி ஆட்சி வருவதற்கான சூழல் அதிகரித்து உள்ளது. அ.தி.மு.க.,வினர், முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா ஆதரவாளர்கள் தனியாகவும் உள்ளனர். இதில், பன்னீர்செல்வத்திற்கு, ஒன்பது, எம்.எல்.ஏ.,க் கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.ஆனாலும், 'சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார்' என, கவர்னரை சந்தித்து, பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். அதே நேரம், சசிகலா சிறைக்கு போய் விட்ட தால், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சட்டசபை கட்சி தலைவராக, சசி…
-
- 0 replies
- 638 views
-
-
தப்புவாரா? சிக்குவாரா? - தினகரனை திணறடிக்கும் வழக்குகள்! ஓவியம்: கார்த்திகேயன் மேடி எம். ஜி.ஆருக்குப் பிறகு அ.தி.மு.க-வில் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர்களுக்கும் ஊழல் வழக்குகளுக்கும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வின் புதுத் தலைமையான சசிகலாவும் இதில் தப்பவில்லை. அவர், தண்டனைபெற்று சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைபட்டுக் கிடக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இருந்து கட்சியை நடத்திக்கொண்டிருக்கும் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் ஊழல் வழக்கில் இருந்து தப்பவில்லை. சசிகலா, சிறையில் இருக்கக் காரணமான சொத்துக் குவிப்பு வழக்குடன் தொடர்புடைய லண்டன் ஹோட்டல் வழக்கும், காஃபிபோச…
-
- 0 replies
- 910 views
-
-
“தீபா கேட்டதும்... பன்னீர்செல்வம் மறுத்ததும்!” - முன்னாள் நிர்வாகி சொல்லும் தகவல் தெளிவற்ற அரசியல் நிலைப்பாடுகளால் தீபா அணியின் ஆதரவுக்கூட்டம் கரைய ஆரம்பித்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் ஒற்றை பதிலுக்காக பதைபதைப்போடு காத்திருக்கும் ஓ.பி.எஸ் அணிக்கு இப்போது சற்று ஆறுதலாக இருப்பது தீபா அணியிலிருந்து இங்குவந்துசேரும் ஆதரவாளர்கள்தான். ஜெயலலிதா மறைவுக்குப்பின் அவரது அண்ணன் மகளான தீபா, சசிகலாவுடனான கடந்த கால கசப்புகளை மனதில் கொண்டு அதிரடியாக சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். ஓ.பி.எஸ் சசிகலாவுடன் சுமூகமாக இருந்த இந்த நாட்களில் , சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் இருந்த தொண்டர்கள் சாரி சாரியாக திரண்டுவந்து தீபாவுக்கு ஆதர…
-
- 0 replies
- 391 views
-
-
கொடநாடு காவலாளி கொலை வழக்கு: ரூ.200 கோடியை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது அம்பலம் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கொடநாடு எஸ்டேட்டுக்குள் ரூ.200 கோடி ரொக்கமாக இருப்பதாகவும், அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டப்பட்டதாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் கோவை: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 24-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதும், அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்…
-
- 0 replies
- 427 views
-
-
``தமிழக முதலமைச்சர் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்காதது கண்டனத்துக்குரியது. இதை நவீன தீண்டாமையாக பார்க்கிறேன்" என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராமேஸ்வரம் நிகழ்ச்சி இந்தியாவிலிள்ள 12 ஜோதிர்லிங்க ஆலயங்களில் பாஜக நிர்வாகிகளால் உலக மக்கள் ஒற்றுமைக்காக இன்று சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. அதற்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெறும் பூஜையிலும், கேதர்நாத் ஆலயத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் சிறப்பு பூஜையின் காணொளி ஒளிபரப்பும் நிகழ்ச்சியிலும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். சிறப்பு பூஜை நிகழ்ச்சிகள் …
-
- 0 replies
- 493 views
-
-
நதி நீர் இணைப்பு சாத்தியமா? நதிகள் இணைப்பு சரியா ? தப்பா?
-
- 0 replies
- 1.3k views
-
-
திருச்சி முகாமில் இலங்கை தமிழர்கள் தொடர் போராட்டம் - பின்னணி என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,FERNANDO தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர், தங்களை விடுதலை செய்யக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அடிக்கடி போராட்டம் நடப்பது ஏன்? இது குறித்து அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்? தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். இதன்படி, இலங்கைத் தமிழர்கள் 104 …
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
`ஆதாரங்களைக் கொடுத்தால் அப்போலோவுக்குதான் ஆபத்து!' - எம்பாமிங்கால் வெளியில் வந்த ஜெ. மரண நிமிடங்கள் #VikatanExclusive Chennai: மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம். `ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சுதா சேஷய்யன் கூறிய தகவல்கள், அப்போலோ நிர்வாகத்துக்குக் கூடுதல் அதிர்ச்சியை அளித்துள்ளன. இதுதொடர்பான ஆதாரங்களையும் விசாரணை ஆணையத்தின்முன் சமர்ப்பித்திருக்கிறார் சுதா சேஷய்யன்" என்கின்றனர் அரசு மருத்துவர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகிறார் முன்னாள் நீதியரசர் ஆறுமுகசாமி. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், முன்னாள் தலைமைச…
-
- 0 replies
- 458 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திமுகவின் அரசியலில் ஒரு மாத இடைவெளியில் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்க முடிகிறது. தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை அணி திரட்டப் போவதாக சூளுரைத்த அந்தக்கட்சி, இப்போது சொந்த மாநிலத்தில் கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பதில் பிசியாகியுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் அமைச்சர் பதவியில் நீடிப்பாரா? மாட்டாரா? என்று சந்தேகம் எழும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. அப்படி இந்த ஒரு மாத இடைவெளியில் என்ன நடந்தது? தேசிய அளவில் செயல்படப் புறப்பட்ட திமுக மீண்டும் சொந்த மாநிலமான தமிழ்நாட்டு அரசியலிலேயே ஒட்டுமொத்த கவ…
-
- 0 replies
- 630 views
- 1 follower
-
-
வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடும் காவிரிக் கரையோர மக்கள் 28 மார்ச் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil …
-
- 0 replies
- 475 views
- 1 follower
-
-
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள மின்சாரப் பேருந்துகள் தொடர்பான 10 தகவல்கள் இதோ... 1. தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னையில் சோதனை அடிப்படையில் மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவை இன்று துவங்கப்பட்டுள்ளது. 2. FAME INDIA - 2 திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 65 நகரங்களில் 5595 மின்சாரப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் 595 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன. …
-
- 0 replies
- 526 views
-
-
புதுடெல்லி பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை நவம்பர் 5-ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்த வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இவர்களுக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் பேட்டரி வாங்கிக்கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டன…
-
- 0 replies
- 346 views
-
-
தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தக்கூடாது – தி.மு.க. மனு தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தக்கூடாது என்று தி.மு.க புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் இந்தப் பணிகளை நிறைவு செய்யாமல் தமிழகத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே தொ…
-
- 0 replies
- 518 views
-