Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய கட்சியோடு கூட்டணி வைத்து தமிழகஅரசியல் களத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி மிகப்பெரிய அங்கீகாரம் பெறும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்தார்.சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறுவனர் தி.வேல்முருகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:தமிழக வாழ்வுரிமை கட்சி தமிழகத்தில் மாபெரும் அரசியல் சக்தியாக வளர்ந்து வருவதை ஆண்ட கட்சி, ஆளும் கட்சி தெரிந்து கொள்ள கிராமங்களிலும், வீடுகள் தோறும் கொடிகள் ஏற்றி சுறு, சுறுப்பாக உழைக்க வேண்டும். த.வா.கவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. தமிழக வாழ்வுரிமை கட்சி மக்கள் சக்தியாக திகழும். …

  2. 6 ஜனவரி 2014 நடராஜர் கோயிலை தமிழகஅரசு நிர்வகிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் மேலவீதி பெரியார்சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனித உரிமை பாதுகாப்பு மையம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகளை சேர்ந்த 58 பேரை நகர போலீஸார் கைது செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழகஅரசு நிர்வகிக்க முடியாது. தீட்சிதர்கள்தான் நிர்வகிக்க வேண்டும் என் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் மேலரதவீதியில் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சி.செந்தில் தலைமையில் மனித உரிமை பாதுகாப்பு மையம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகளை சேர்ந்த 58 பேரை டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமைய…

  3. காரைக்காலில் நிகழ்ந்த பெண்ணின் மீதான வக்கிரம் நிறைந்த பாலியல் வன்முறை, சிறுமி புனிதா மீதான ஈவுஇரக்கமற்ற பாலியல் வன்முறை- கொலையும் மேலும் திருச்சியில் சிறுமி சுல்தானா மீதான கொடூரமான பாலியல்வன்முறை மற்றும் கொலை என தொடரும் நிகழ்வுகளுக்கு நமது எதிர்ப்பினை பதிவு செய்வோம்.... பெண்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து நமது குரல் ஒலிக்கப்பட வேண்டும்.. பெண்களை பாதுகாப்பதற்கான சட்டவிதிகளும், அதற்கு முக்கியத்துவம் அளிக்காத அரசினையும் கேள்விக்குள்ளாக்குவதும் அவசியம். இதற்கான சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதும் காலத்தின் கட்டாயம். தொடர் விவாதங்களும், போராட்டங்களும் பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யவைப்பதற்கான வழியாக அமையும். இதற்கான பணியை நாம் அனைவரும் தொடர்ந்து எட…

  4. பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று திருமூர்த்தி அணையை இன்று (செவ்வாய்கிழமை) திறக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் பிரதான கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் மற்றும் உயர்மட்டக் கால்வாய் வாயிலாக முதலாம் மண்டல பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள பரம்பிக்குளம் பிரதான கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் மற்றும் உயர்மட்டக…

  5. டோன்ட் வொர்ரி...: அடுத்த பரபரப்பை கிளப்பும் அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர். சென்னை: மதுரை மாநகர் மாவட்ட திமுக அமைப்பே கலைக்கப்பட்ட நிலையிலும் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் அசராமல் திமுக தலைமையுடன் அடுத்த போஸ்டர் யுத்தத்தை தொடங்கி இருக்கின்றனர். திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரியின் பிறந்த நாள் ஜனவரி 30-ந் தேதி வருகிறது. அதனை சிறப்பாகக் கொண்டாட அவரது ஆதரவாளர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஜனவரி 30-ந் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அழகிரி ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டினர். இது திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்கள் மன்னிப்பு கேட்க வே…

  6. 05.01.2014 விழுப்புரம் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்று திண்டிவனத்தில் நடந்த மகளிர் சங்க அரசியல் எழுச்சி மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் பேசினார். அரசியல் எழுச்சி மாநாடு திண்டிவனம் சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் சங்க அரசியல் எழுச்சி மாநாடு திண்டிவனம் வ.உ.சி. திடலில் நேற்று மாலை மாநில இளம்பெண்கள் அணி துணை செயலாளர் பொன்.மகேஸ்வரி தலைமையில் நடந்தது. மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா வரவேற்றார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:– இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இளம்பெண்கள் அதிக விதவைகளாக உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் மதுதான். மதுவை குடிக்க சொல்கிற கட்சிகளை அப்புறப்படுத்த…

  7. 05.01.2014 நீலகிரி தமிழக மக்களுக்கான பணிகளை மேலும் நிறைவு செய்ய மக்கள் உறுதுணையோடு இந்திய அளவில் மாற்றம் ஏற்படும் என்று குன்னூரில் நடந்த விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார். குன்னூரில் பொங்கல் பரிசு திட்டம், நலத்திட்ட உதவிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– மக்கள் என் பக்கம் தமிழகத்தின் நிதி நிலைமையையும் பொருட்படுத்தாமல் 281 கோடி ரூபாய் செலவில் இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை நான் வழங்கி உள்ளேன். ஏனெனில், பொங்கல் திருநாளை தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பது எனது அவா. என்னைப் பொறுத்தவரை, நேரம் பார்த்து தேவை அறிந்து முழுமையான உதவி செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். இது போன்ற உதவ…

  8. 06.01.2014 சென்னை பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியா?, தனித்து போட்டியா? என்பது குறித்து உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் தே.மு.தி.க. மாநில மாநாட்டில் முடிவு அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசினார். சென்னையை அடுத்த பொன்னேரியில் நடந்த தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:– மக்களை ஏமாற்ற சதி தற்போது, தமிழகத்தில் ஆண்டு கொண்டிருக்கும் கட்சி நாட்டை இருட்டாக்கிவிட்டுவிட்டு, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறிவருகிறது. மக்களை ஏமாற்ற சதி வேலை செய்கிறது. என் மேல் எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் பயப்பட மாட்டேன். என்றைக்கும் நான் அனாவசியமாக பேச மாட்டேன். எப்போதும் உண்மையைத்…

  9. சீர்காழி, மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்தை தனிமைப்படுத்துகிறது என்று சீர்காழியில் சரத்குமார் எம்.எல்.ஏ. கூறினார். ஆலோசனைக்கூட்டம் நாகை மாவட்டம் சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டு அருகில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நாகை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கராத்தே.ஏபி.ராஜா தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி செயலாளர் ஐஸ்ஹவுஸ்தியாகு, கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், பொதுச்செயலாளர் கருநாகராஜன், துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– வெற்றி வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளி…

  10. சென்னை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நல்லாட்சி புரிந்து வருவதாகவும், தனிக் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறினார். ரூ.51.60 கோடி மதிப்பில்... சென்னை எண்ணூர் துறைமுகத்தில் ரூ.51.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ரெயில் இருப்பு பாதையை மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே.வாசன் நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் எண்ணூர் துறைமுக நிறுவனத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.பாஸ்கராச்சார் வரவேற்புரையாற்றினார். இதில் இந்திய கடல் சார் பல்கலைக்கழக துணைவேந்தர் அசோக்வர்தன் ஷெட்டி, சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவர் அதுல்ய மிஸ்ரா, எண்ணூர் துறைமுக நிறுவனத்தின் தலைவர் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.பாஸ்கராச்சார், தென்னக ரெயில்வே…

  11. சென்னை சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும் கட்சியின் மாநில மாநாட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார். சென்னை அலுவலகம் திறப்பு டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் ‘ஆம் ஆத்மி’ கட்சி தடம் பதிக்க தொடங்கியுள்ளது. ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட இந்த கட்சியில் சேருவதற்காக பலரும் ஆர்வம் காட்டி வரும் வேளையில், சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் ஆத் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. கட்சியில் புதிய உறுப்பினராக ஆர்வம் காட்டுபவர்களுக்கு வசதியாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கணினி மூலம் உறுப்பினர் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. நேற்று ஏராளமானோர் வந்திருந்து ‘ஆம் ஆத்மி’ கட்சியில் பு…

  12. இடம்: சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் காலம் 7.01.2014 செவ்வாய் காலை 10. மணி தலைமை: திரு. பழ.நெடுமாறன் அவர்கள், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு. இந்தியக் குடியரசுத் தலைவர் திரு பிரணாப் முகர்சி அவர்கள் 20.12.2013 அன்று சென்னை இலயோலாக் கல்லூரியில் உரையாற்ற வருகிறார் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் சென்னை மாநகரக் காவல் துறை யினர் ஈழ ஆதரவுத் தமிழின உணர்வாளர்களை கைது செய்யும் வேலையில் இறங்கினர். 20.12.2013 நள்ளிரளிவு 2.00 மணிக்கு திரைப்பட இயக்குநர் வ. கவுதமன் அவர்களை அவரது இல்லத்தில் கைது செய்து, எங்கே கொண்டு போகிறோம் என்று அவருடைய குடும்பத்தினருக்குச் சொல்லாமல் அழைத்துச் சென்றுவிட்டனர். கைது செய்த உடனே திரு கவுதமன் அவர்களின் கைப்பேசியைக் கா…

  13. அவசர வேண்டுகோள் :: நாளை காலையில் தோழர். தமிழ் மகா பிரபாகரன் கைது தொடர்பாகவும், அவரது பாதுகாப்பு, விடுதலை , தாயகம் அழைத்தல் தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளரை சந்தித்து பேச அனைத்து இயக்க-கட்சி தோழர்களையும், பத்திரிக்கையாளர் , வழக்கறிஞர் நண்பர்களையும் அழைக்கிறோம். இரவு நெடுநேரம் ஆகிய காரணத்தினால் பலரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள இயலவில்லை… தலைவர்களையும், இதர தோழர்களையும் காலையில் தான் தொடர்பு கொள்ளமுடியும் என நினைக்கிறோம்..இத்தகவல் தெரிந்த தோழர்கள் தங்களது சக அமைப்புகளுடனோ, தலைவர்களுடனோ பேசி ஒரு குழுவாக சென்று சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். நாங்களும் இதே முயற்சியை மேற்கொள்ள முயலுகிறோம். நாம் அனைவரும் இணைந்து இயக்க-கட்சி வேறுபாடு மறந்து ஒன்றாக தோழர். …

  14. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரிக்கு கடந்த சில நாட்களாக கட்சியில் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் மதுரை மாவட்ட தி.மு.க. அமைப்பு ஒட்டுமொத்தமாகக் கலைக்கப்பட்டது. புதிய பொறுப்புக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. நீக்கப்பட்டவர்கள் அழகிரி ஆதரவாளர்கள் என்பதும், புதிய பொறுப்புக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் மு.க. ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழ்நிலையில், மு.க.அழகிரி இன்று காலை ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விஜயகாந்த் தற்போது எல்லா கட்சிகளுடனும் பேரம் பேசி வருகிறார். விஜயகாந்தை ஒரு அரசியல் தலைவராக நான் மதிக்கவில்லை. அவரிடம் அரச…

  15. தே.மு.தி.க. காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தால் அதை வரவேற்போம் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். எண்ணூர் துறைமுகத்தில் புதிய ரயில் பாதையை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது, மத்திய அரசு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தே.மு.தி.க. போன்ற மத சார்பற்ற கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தால் அதை வரவேற்போம். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் முன்பைவிட அதிக இடங்களை வென்று காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்றார். காங்கிரஸ் தலைமையின் மீது அதிருப்தியில் இருக்கும் ஜி.கே. வாசன், புதிய கட்சி ஒன்றை துவங்கப் போவதாக சில மாதங்களாக வதந்தி உருவாகி வருகிறது…

  16. திருச்சி: ஊழலற்ற அரசியலை வென்றெடுக்க மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும். ம.தி.மு.க மாணவர் அணி சார்பில் ‘நாடாளுமன்றத்தில் வைகோ' என்ற தலைப்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. முதல் கட்டமாக மாவட்ட அளவிலும் அதனை தொடர்ந்து மண்டல அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் இறுதி போட்டி நடந்தது. போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் மாநில அளவில் முதல் 4 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிறன்று திருச்சி தேவர் மன்றத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ம.தி.மு.க மாணவர் அணி மாநில செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் முதல் 4 இடங்களை பெற்ற மாணவர்கள்…

  17. பிரணாப் முகர்ஜி கடந்த 20 ஆம்நாள் சென்னைலயோலா கல்லூரிக்கு வந்தபோது திரைப்பட இயக்குனர் கவுதமன், உள்ளிட்ட மாணவர்களை கைதுசெய்து தாக்கியுள்ளார்கள் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 20–ந்தேதி சென்னை லயோலா கல்லூரிக்கு வந்தபோது முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் திரைப்பட இயக்குனர் கவுதமன், மாணவர்கள் பார்வை தாசன், கவுதம், ரேமன், கோவண சந்திரன், ஜோதிலிங்கம் மற்றும் தமிழ்இனியன் ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் அழைத்து சென்று தாக்கினர். பின்னர் ஒரு தனியார் விடுதியில் அடைத்து வைத் திருந்தனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலை தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி சென்னையில் இருந்து சென்றபிறகே அனைவரும் விடுவிக்கப்பட்டனர். வன்முறை தாக்குதல் நடத்த…

  18. வேஷ்டி தினம்: ஜனவரி 6ல் அரசு ஊழியர்கள் வேஷ்டி அணிய உத்தரவு. நெல்லை: பாரம்பரிய மரபை பறைசாற்றும் வகையில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒருநாள் வேட்டி அணிந்து வேஷ்டி தினம் கொண்டாடுமாறு கோஆப் டெக்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனையடுத்து ஜனவரி 6ம் தேதி நெல்லை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேஷ்டி அணிந்து பணிக்கு வர மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, நெசவு தொழில் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஜனவரி 6 ம் தேதி வேஷ்டி தினம் கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து , நெல்லை ஆட்சியர் கருணாகரன் வேஷ்டி விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கருணாகரன், ஜனவரி 6 ம் தேதி…

  19. தமிழகத்தில் ஒரு மாற்று அணி உருவாகுமா? கடந்த பல மாதங்களாக தமிழகத்தின் தேர்தல் களத்தில் ஒரு மாற்று அணி உருவாகவேண்டுமென்று முயன்ற பலரில் நாங்களும் ஒருவர். ஆனால் இன்று அந்த கனவு கனவாகவே போய்விடுமோ என்கிற நிலைதான் இருக்கிறது. தேசிய கட்சிகள் காங்கிரஸ்-பாஜக-மார்க்சிஸ்ட் போன்றவை, மற்றும் மாநில அளவில் தமிழர்கள் நலனை பின்னுக்குத் தள்ளி மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சனைகளில் கூட நேர்மையான நிலைப்பாட்டினை எடுக்காத அதிமுக , திமுக, தேமுதிக போன்றவைகள் அல்லாத ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்துதல் அவசியம் என்று பலரும் விரும்பினோம். தேர்தல் பாதை திருடர் பாதை என்று ஒதுக்குவதை காட்டிலும், அதில் செயல்படும் கட்சிகள் மூலமாக தமிழர்களின் வாழ்வுரிமை, சமூக கோரிக்கைகளை பிற தளத்தில் பிரதிபலிப்பது அவசியம…

    • 4 replies
    • 571 views
  20. சென்னை: இதோ ஜனவரி பிறந்து விட்டது; அடுத்த வாரம் பொங்கல்; பின்னர் பிப்ரவரி திங்கள் முதல் வாரத்தில் நம் அண்ணனின் நினைவு நாள்; இப்படியே நாட்கள் ஓடி விடும். பயணம் புறப்படு; பத்திரமாக வந்திடு; உன் வரவுக்காக என் விழிகள் காத்திருக்கும் என்று திருச்சி மாநில மாநாட்டுக்கு திமுக தொண்டர்களை அழைத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. -thatstamil

    • 0 replies
    • 493 views
  21. டெல்லி: இலங்கைத் தமிழர்களுக்கு அந் நாட்டு அரசும் ராணுவமும் இழைத்துள்ள கொடுமைகளுக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். "சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு' (எச்.ஆர்.டி.ஐ.) அமைப்பின் இரண்டு நாள் சர்வதேச மாநாடு டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. "புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் மனித உரிமை நிலைமை' எனும் தலைப்பில் இந்திய சட்டக் கல்வி நிறுவன மாநாட்டுக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் வைகோ பேசியதாவது: இலங்கைப் போரின்போது அந் நாட்டு ராணுவம் மேற்கொண்ட இன அழிப்பு நடவடிக்கையால் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்கள் இந்த பூமிப் பந்தின் பழமையான குடிகள் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் துறையினர், மானுடவியல…

  22. திமுகவில் ஒடுக்கப்படும் அழகிரி- ஓரங்கட்டப்படும் கனிமொழி- ஓங்கும் ஸ்டாலின் கை!! சென்னை: திமுகவில் மீண்டும் கலகக் குரல் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி, கனிமொழி முகாம்களில் இருந்து எழும்பும் குரல்கள் ஆரம்பத்திலேயே ஒடுக்கப்படுவதால் மு.க. ஸ்டாலினின் கை ஓங்கியே இருக்கிறது. மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறியது முதல் மு.க. அழகிரி அமைதியானார். அவர் மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்துகூட தாமதமாகவே ராஜினாமா செய்தார். ஆனால் அப்போது இருந்தே காங்கிரஸுடன் கூட்டணி கிடையவே கிடையாது என்பதை மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக வலியுறுத்தி வந்தார். திமுகவின் பொதுக்குழுவில் யாரும் எதிர்பாராதபடி, காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் …

  23. "கலகக் குரல்" எதிரொலி- மதுரை மாநகர் தி.மு.க. கூண்டோடு கலைப்பு! தற்காலிக பொறுப்புக் குழு அறிவிப்பு!! சென்னை: திமுக தலைமையை விமர்சிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டியதால் ஒட்டுமொத்த மதுரை மாநகர மாவட்ட தி.மு.க. அமைப்புக்கள் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்டத்துக்கு தற்காலிக பொறுப்புக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அண்மையில் "இனியொரு விதிசெய்வோம்' என்ற தலைப்பில் ஜனவரி 30-ந் தேதி திமுக பொதுக்குழு சென்னையில் நடைபெறும் என்று மதுரை திமுக நிர்வாகிகள் இருவர் ஒட்டிய போஸ்டர் அக்கட்சியில் பெரும் புயலை கிளப்பியது. இதைத் தொடர்ந்து திமுக மேலிடம் கடும் எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் கட்டுப்படாத மதுரை மாவட்ட திமுகவினர், மு.க…

  24. இந்தியாவின் செங்கற்சூளை தொழிற்துறையில் நிலவும் மனித அவலத்தை ஒழிக்க நிறையச் செய்ய வேண்டியுள்ளதாக செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் எழுச்சி கண்டுவருகின்ற நிர்மாணத்துறைக்கு கற்களை விநியோகிக்கின்ற இந்த தொழிற்துறையை பிரிட்டன் மற்றும் ஏனைய பல்தேசியக் கம்பனிகளும் பயன்படுத்துகின்றன. வேகமாக வளருகின்ற இந்தியப் பொருளாதாரத்தின் மிகவும் முக்கிய பகுதியாகவும் இந்தத் தொழிற்துறை திகழ்கிறது. இந்தியாவில் கற்சூளைகளில் 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். பல சூளைகள் கொத்தடிமைத் தொழிலாளர்களை, கிட்டத்தட்ட அடிமைகள் போல பயன்படுத்துகின்றன. தினமும் 12 மணித்தியாலங்கள் பணியாற்றும் இவர்களது ஒரு நாள் கூலி தோராயமாக 150 இந்திய ரூபாய்கள் மாத்திரமே. கடுமையான வேலைநிலைமை …

  25. சாத்தியமே இல்லாதது தமிழீழம்: என்.ராம் சிறப்புப் பேட்டி:- 01 ஜனவரி 2014 உங்கள் மீதான விமர்சனங்களுக்கு வருவோம். தமிழ் மக்கள் பிரச்சினைகளில் நீங்களும் சரி ‘தி இந்து’வும் சரி… தமிழ் விரோத அணுகுமுறையோடே செயல்படுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? இந்தியாவின் முக்கியமான, மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர், அரசியல் விமர்சகர் – பத்தியாளர். ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர். எல்லாவற்றுக்கும் மேல் கடந்த 45 ஆண்டு கால ஆட்சியாளர்களையும் அதிகாரவர்க்கத்தையும் அருகில் இருந்து பார்த்தவர். என். ராமுடன் பேச விஷயங்களா இல்லை? அவருடைய பத்திரிகைத் துறை வருகையில் தொடங்கி தமிழில் 2013-ல் நடந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ‘தி இந்து’வின் தமிழ் வருகை வரை எல்லாம் பேசினோம்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.